புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
10 Posts - 56%
heezulia
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
10 Posts - 56%
heezulia
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!


   
   
abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Tue Nov 15, 2011 1:33 am

http://abuwasmeeonline.blogspot.com

ஹஜ் செய்து விட்டு வருபவர்களிடம் காணப்படும் ஒரு நடைமுறை ஹாஜி அடைமொழி / பட்டம். அதுவரை சாதாரண அபூபக்கராக இருந்தவர், ஹஜ்ஜுக்குச் சென்று விட்டு வந்ததும் ஹாஜி அபூக்கராகி விடுவார். அதன்பிறகு இவர்களது பெயர் போடப்படும் இடங்களில் ஹாஜி என்ற அடைமொழி பயன்படுத்தப்படவில்லை என்றால் மிகுந்த கோபத்துக்குள்ளாகி விடுவார்கள். சிலர் கையெழுத்தில் கூட ஹாஜியைச் சேர்த்துப் போடுகின்றார்கள். ஒரு ஹஜ் செய்தால் ஹாஜி என்றும் இரண்டு ஹஜ் செய்தால் அல்ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வது தான் வேடிக்கையான விஷயம். நபி (ஸல்) அவர்கள், அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் மதீனாவிலிருந்து மக்கா வந்து ஹஜ் என்னும் கடமையை முடித்துவிட்டு மீண்டும் மதீனா திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களோ தங்களின் பெயர்களுக்கு முன்னாள் “ஹாஜி” என்றோ அல்லது “ஹாஜிமா” என்றோ அடைமொழி இட்டுக்கொள்ளவில்லை. நபி( ஸல்) அவர்கள் காலத்தில் ஹஜ் செய்த இலட்சக்கணக்கான நபித்தோழர்களில் எவரும் இவ்வாறு அழைக்கப்படவில்லை. இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் இமாம்கள் கூட தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி பெயரை சூட்டிக் கொள்ளவில்லை. ஹஜ் செய்தால் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.




ஆனால் சில அறிவீலிகள் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு அழகு பார்க்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் ஹாஜி என்று போட மறந்துவிட்டார்களா? அல்லது அல்லாஹ் இவர்களுக்கு மட்டும் தனியாக வஹீ அனுப்பி இவ்வாறு போட்டுக்கொளுமாறு கூறினானா? இவர்கள் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக்கொள்கிறார்கள் என்றால் தங்களது வணக்கத்தை விளம்பரமாக்கும் நோக்கமே மிகைத்து இருக்கின்றது நிச்சயமாக இவை நம் வணக்கத்தின் நன்மைகளை பாழ்படுத்திவிடும்.





அதுமட்டுமல்லாமல் சிலர் தாங்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு "ஹாஜி ஆன் சன்ஸ்" என்றும், "ஹாஜி மளிகைக்கடை" என்றும் பெயர் வைத்துக்கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம். அல்லாஹ் முஸ்லிம்களின் மீது விதித்த ஹஜ்ஜைத் தவிர மற்ற கடமைகளான ஈமான் கொள்வது, தொழுவது, ஜக்காத் கொடுப்பது, நோன்பு நோற்பது போன்ற கடமைகளை நிறைவேற்றும் எவரும் இதுபோன்று செய்வதில்லை.


ஈமானி – (ஈமான் கொண்டவர்) என்றும், முஸல்லி – (தொழுகையாளி) என்றும், ஸோம்வி – (நோன்பாளி) என்றும், ஜக்காத்தி – (ஜக்காத் கொடுப்பவர்) என்றும் தங்களின் பெயருக்கு முன் போடுவதில்லை. ஆனால் ஹஜ் செய்தவர் மட்டும் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு தங்களின் அமலை விளம்பரமாக்குகின்றனர்.

குறிப்பாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் இதுபோன்று தங்களின் பெயருக்கு முன் ஹாஜி என்று சூட்டிக் கொள்கின்றனர். இது முற்றிலும் விளம்பரத்தின் நோக்கமே!







விளம்பரத்தால் வீணாகும் வணக்கங்கள்:





இதுபோன்று வணக்கத்தை விளம்பரமாக்குபவர்களையும், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக அமல் செய்பவர்களையும் மார்க்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.










அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல்குர்ஆன் 4:38)










நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்­லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன்2:264)













அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் நாடியதை நாம் நாடியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவர்களுக்காக நரகத்தை ஏற்படுத்துவோம். இழிந்து, அருளுக்கு அப்பாற்பட்டு அதில் கருகுவார்கள். (அல்குர்ஆன் 17:18)












நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், ”யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப்படுத்துவான்என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 6499








அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர்தான் (ஷஹீத்) மறுமையில் முதன் முத­ல் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப் படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.










அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும், இந்த அருட்கொடைகளுக்கு பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப் படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.










அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப் பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­), நூல் : முஸ்­லிம் 3537









மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் முகஸ்துதிக்காக (விளம்பரத்திற்காக) ஒரு அமலைச் செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அதற்குக் கூ­லி நரகம் தான் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.










அல்லாஹ்வுக்காக செய்கின்ற வணக்கங்களில் மிக அதிகமாக முகஸ்துதிக்கு உள்ளாகும் வணக்கம் ஹஜ்தான். ஹஜ்ஜுக்குச் செல்லும் போது வீடுவீடாகச் சென்று, நான் ஹஜ் செய்யப் போகிறேன் துஆ செய்யுங்கள் என்று கூறுவது, விருந்து வைபவங்கள் நடத்தி ஹஜ்ஜை விளம்பரம் செய்வது, ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் கழுத்துகளில் மாலைகள், அது போல் வழியனுப்பு மற்றும் வரவேற்பு விழாக்கள், இதற்கென்று நியமிக்கப்படும் மேடைகளில் பொன்னாடைகள் போர்த்துதல். இவ்விழாக்களில் ஹாஜிகளின் புகழ்பாடுதல் போன்ற காரியங்கள் நிச்சயமாக ரியா (மறைமுக இணைவைப்பு) ஆகும்.










நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”ரியா (மறைமுக இணைவைப்பு)என்று பதிலளித்தார்கள். நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூ­லி கிடைக்குமா என்று பாருங்கள்என்று அடியார்களின் அமல்களுக்குக் கூ­லி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ர­லி), நூல்: அஹ்மத் 22528










நிச்சயமாக இவை நம் வணக்கத்தின் நன்மைகளைப் பாழ்ப்படுத்தி விடும். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

submit_url="http://abuwasmeeonline.blogspot.com/2011/11/blog-post_13.html"





submit_url ="http://abuwasmeeonline.blogspot.com/2011/11/blog-post_13.html"

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக