ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10 
ayyasamy ram
எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10 
mohamed nizamudeen
எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10 
VENKUSADAS
எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10 

Top posting users this month
heezulia
எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10 
ayyasamy ram
எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10 
mohamed nizamudeen
எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10 
VENKUSADAS
எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சை வாங்கலாமா?

+8
மாணிக்கம் நடேசன்
ரேவதி
உதயசுதா
பிரசன்னா
பாலாஜி
உமா
பூஜிதா
dsudhanandan
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty எலுமிச்சை வாங்கலாமா?

Post by dsudhanandan Thu Nov 17, 2011 3:43 pm

சமீபத்தில் "Benefits of lemon" என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வாசிக்க நேர்ந்தது. ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஒரு தேசீய நாளேட்டில், எலுமிச்சையின் பயன்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்ததும், உள்கட்சி ஜனநாயகம் இல்லையென்று உறுப்பினர் பதவியை உதறிய எதிர்க்கட்சிப் பிரமுகரைப் போல எனது உள்ளம் கொதித்தது. உடனே எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய பதிவு இது.


எலுமிச்சையின் பெருமைகளைப் பாரீர்!


முக்கிய பிரமுகர்களைப் பார்க்கப் போகும்போது பலர் கையில் எலுமிச்சம்பழத்துடன் போவதுண்டு. அதற்கு முக்கிய காரணம், எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா). இந்த எலுமிச்சம்பழம் இந்தியாவில் தான் முதலில் விளைவிக்கப்பட்டது என்பதிலிருந்தே புரிந்திருக்குமே?

1875-ல் ஃப்ளினின் என்ற மருத்துவர் உடம்பிலிருக்கும் அசுத்தமான ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு போல எதுவுமில்லை என்று கண்டுபிடித்ததை இன்றளவும் டாஸ்மாக் பக்தகோடிகள் அவ்வப்போது பின்பற்றுகிறார்கள் அல்லவா? இதிலிருந்தே எலுமிச்சையின் மப்பு நீக்கும் மருத்துவ குணத்தை அறியலாம். ஆனால், அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து குடிப்பது என்ன கொடுமை! அதனினும் கொடிது, மப்பு குப்பென்று ஏற எலுமிச்சங்காய் ஊறுகாயை சைட்-டிஷ்ஷாய் உபயோகிப்பது!

வெளிநாடுகளில் எலுமிச்சம்பழத்தின் சாறு, விதை, தோல் எல்லாவற்றையும் மருந்துகள் மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்களாம். ஆனால், எதிலும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனுள்ள நாம் அதை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் புல்லரிக்கும். ( எலுமிச்சைச் சாற்றைத் தடவினால் அரிப்பும் நிற்கும் என அறிக!)


(கீழே Spoiler பகுதியில் உள்ளதை விருப்பமுள்ளவர்கள் படிக்க)

Spoiler:

இது தவிர, எலுமிச்சை பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகும். அவையாவன:

வயிற்றுப் பொருமல்

எலுமிச்சையின் சாறு வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு லாரி நிறைய எலுமிச்சம்பழம் வாங்கி, உள்ளாட்சித் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களுக்கு, வெந்நீரில் எலுமிச்சம் சாறு கலந்து வழங்கியதாக, சத்தியமூர்த்தி பவன் வாசலில் குவிந்து கிடக்கும் காயாத தோல்களும் காய்ந்து கிடக்கும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர்.

கொசுக்கடி

தமிழகமெங்கும் மழை கொட்டிக் கொண்டிருப்பதால், தமிழகத்தில் மட்டும் கொசுத்தொகை 700 கோடியை எட்டுமென்றும், 700 கோடியாவது கொசு எழும்பூர் ரயில் நிலைய வாசலில் பிறக்கும் என்றும் உலக கொசு வளர்ச்சிக் கழகம் அறிவித்திருக்கிறது. ஆகவே, கொசுக் கடித்த இடத்தில் (எழும்பூர் ரயில் நிலையத்தில் அல்ல; உங்கள் உடம்பில்) எலுமிச்சை சாற்றைப் பூசினால் கொசுவின் உற்றார் உறவினர் உங்கள் பக்கத்தில் வராமல் பம்மி விடுவார்கள்.

உறக்கமின்மை

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்கிற விலையைக் கேட்டு, நாளைக்கு சாம்பாரா, ரசமா என்று யோசித்து உறக்கம் வராதவர்கள், எலுமிச்சம் பழரசம் அருந்தினால், பிரணாப் முகர்ஜீ பணவீக்கம் குறித்து மீண்டுமொரு முறை கவலை தெரிவிக்கிற வரைக்கும் சுமாராக உறங்க வாய்ப்புகள் சுமாராக இருக்கின்றன.

விஷக்கடி

எலுமிச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால் வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.

காய்ச்சல்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 782 பேர்கள் ஏறத்தாழ 4000 கோடி கறுப்புப்பணத்தைப் பதுக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்தியை வாசித்தால், உடனே எலுமிச்சம் பழச்சாற்றை உண்டால், காய்ச்சல் கிறுகிறுப்பு போன்றவை அறவே ஏற்படாது.

வாந்தி

எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி வராது. ஆகவே, கையில் ஒரு எலுமிச்சம் பழமிருந்தால் துணிந்து மழைக் காலத்திலும் மாம்பலம், அசோக் நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அருவருப்பின்றி நடமாடலாம்.

அஜீரணம்

கொஞ்சம் தேன்கலந்து எலுமிச்சைச் சாறு உண்டால் கல்லீரல் பலப்படும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உத்தரவு போட்டு விட்டு, நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு போட்டதும், இதைச் சாப்பிட்டால் அஜீரணம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

தலைவலி

சூடான பானங்களில் அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால் தலைவலி குணமாகும். குறிப்பாக பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தினமும் மூன்று வேளை இந்தப் பானத்தையே அருந்தினால், அடுத்த தேர்தலில் இலவசமாக திருவோடு கேட்கிற அவசியம் ஏற்படாது.

பித்தம்

இது அண்மைக்காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிற கோளாறு. இதனால், இம் என்றால் உண்ணாவிரதம், ஏன் என்றால் மவுன விரதம் இருப்பதோடு, அவை முடிந்ததும் இடைவிடாமல் புலம்பித் தீர்ப்பதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எலுமிச்சைச் சாற்றில் சீரகமும், மிளகும் கலந்து கொடுத்தால் பித்தம் தலைக்கேறாமல் இருக்கும்.

இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள் உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு நிறைவு செய்கிறேன். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம் வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம் குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து (அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.


Last edited by dsudhanandan on Wed Nov 23, 2011 10:55 am; edited 5 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by பூஜிதா Thu Nov 17, 2011 3:59 pm

எலுமிச்சை வாங்கலாமா? 677196 எலுமிச்சை வாங்கலாமா? 677196எலுமிச்சை பழத்தின் நன்மையை நகைச்சுவையோடு சொல்லி இருக்கீங்க எலுமிச்சை வாங்கலாமா? 224747944


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by உமா Thu Nov 17, 2011 4:03 pm

எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு
கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி
உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது.
(எலுமிச்சம் பழத்துக்கு).

எலுமிச்சை வாங்கலாமா? 403484 எலுமிச்சை வாங்கலாமா? 403484 எலுமிச்சை வாங்கலாமா? 403484 எலுமிச்சை வாங்கலாமா? 403484 எலுமிச்சை வாங்கலாமா? 403484 எலுமிச்சை வாங்கலாமா? 403484

உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு
வாசலில் ஒரு எலுமிச்சம் பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால்
போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு
போய்விடுவார்கள்.
கண்டிப்பா உங்க வீட்டு வாசலில் போடுவேன்.
எலுமிச்சை வாங்கலாமா? 745155 எலுமிச்சை வாங்கலாமா? 745155 எலுமிச்சை வாங்கலாமா? 745155 எலுமிச்சை வாங்கலாமா? 745155 எலுமிச்சை வாங்கலாமா? 745155 எலுமிச்சை வாங்கலாமா? 745155 எலுமிச்சை வாங்கலாமா? 745155 எலுமிச்சை வாங்கலாமா? 745155 எலுமிச்சை வாங்கலாமா? 745155 எலுமிச்சை வாங்கலாமா? 745155


எலுமிச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால்
வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம்
வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை
ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.

யோசிக்க வேண்டிய விஷயம்.எனக்கு உதவும் எலுமிச்சை வாங்கலாமா? 300136


சுதன் செம சிரிப்பு போங்க. பாதி படித்ததும் இங்கே தானே சிரித்து கொண்டே இருந்தேன். மீதம் படிக்கையில் ஐயோ என்னால முடியல பா.

இதில் நகைச்சுவையுடன் கூடிய நிறைய உண்மைகளும் உள்ளது சுதன்...

செம கட்டுரை தான் போங்க.
எலுமிச்சை வாங்கலாமா? 168300 எலுமிச்சை வாங்கலாமா? 168300 எலுமிச்சை வாங்கலாமா? 168300 எலுமிச்சை வாங்கலாமா? 403484
நீங்க ச.செ என்பதை மறக்கவில்லை எலுமிச்சை வாங்கலாமா? 938222 எலுமிச்சை வாங்கலாமா? 453187



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by பாலாஜி Thu Nov 17, 2011 4:13 pm

அவர் நிர்வாக குழுவில் இருந்தாலும் , பதிவுகளில் அவர் சதுர செயலாளர் ஆக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய , அனைவருடைய விருப்பமும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by பிரசன்னா Thu Nov 17, 2011 4:18 pm

எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய பதிவு இது.

உங்களின் இந்த விழிப்புணர்வு பகிர்வு... ரொம்பவே சிரிக்க வைததது...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by உதயசுதா Thu Nov 17, 2011 4:27 pm

அடடா சுதா ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து இத்தனை அருமையா ஒரு பதிவு எழுதி இருக்கரிங்க. எலுமிச்சை பழங்களின் பயன்களை விட நீங்க போட்டு இருக்கற நகைசுவை பதிவு எல்லார் மனதையும் கொள்ளை கொள்ளும்


எலுமிச்சை வாங்கலாமா? Uஎலுமிச்சை வாங்கலாமா? Dஎலுமிச்சை வாங்கலாமா? Aஎலுமிச்சை வாங்கலாமா? Yஎலுமிச்சை வாங்கலாமா? Aஎலுமிச்சை வாங்கலாமா? Sஎலுமிச்சை வாங்கலாமா? Uஎலுமிச்சை வாங்கலாமா? Dஎலுமிச்சை வாங்கலாமா? Hஎலுமிச்சை வாங்கலாமா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by ரேவதி Thu Nov 17, 2011 4:36 pm

dsudhanandan wrote:உள்கட்சி ஜனநாயகம் இல்லையென்று உறுப்பினர் பதவியை உதறிய எதிர்க்கட்சிப் பிரமுகரைப் போல எனது உள்ளம் கொதித்தது. உடனே எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய பதிவு இது.



எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம் பழத்துக்கு).

ஆயுத பூஜையன்று உங்கள் வாகனச் சக்கரங்களில் தலா ஒரு எலுமிச்சம்பழம் வீதம் வைத்து நசுக்கினால், நீங்கள் போகிற வழியில் யாரும் செல்போன் பேசியபடி குறுக்கே வர மாட்டார்கள் என்பதுடன், சுத்துப்பட்ட பதினெட்டுப் பட்டியில் வாகனம் ஓட்டுகிறவர்களும் கவனமாக ஓட்டுவார்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சம் பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால் போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு போய்விடுவார்கள்.


எலுமிச்சை வாங்கலாமா? 224747944 எலுமிச்சை வாங்கலாமா? 224747944 எலுமிச்சை வாங்கலாமா? 224747944 எலுமிச்சை வாங்கலாமா? 224747944 எலுமிச்சை வாங்கலாமா? 224747944 எலுமிச்சை வாங்கலாமா? 224747944 எலுமிச்சை வாங்கலாமா? 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by மாணிக்கம் நடேசன் Thu Nov 17, 2011 6:52 pm

இப்படியெல்லாம் எங்களை குழுப்ப எங்கிருந்து படிச்சிகிடுட வர்ரீங்க. நல்ல படிச்சேன், சூப்பரா ரசிச்சேன்.

வாழ்க எலுமிச்சை
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by dsudhanandan Fri Nov 18, 2011 8:00 am

பூஜிதா wrote:எலுமிச்சை பழத்தின் நன்மையை நகைச்சுவையோடு சொல்லி இருக்கீங்க

மிக்க நன்றி பூஜிதா நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by dsudhanandan Fri Nov 18, 2011 8:10 am

உமா wrote:எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு
கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி
உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது.
(எலுமிச்சம் பழத்துக்கு).

-- விவேக் ஒரு திரைப்படத்தில் கூறிய கருத்துதான்... ரசித்தமைக்கு நன்றி

உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு
வாசலில் ஒரு எலுமிச்சம் பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால்
போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு
போய்விடுவார்கள்.
கண்டிப்பா உங்க வீட்டு வாசலில் போடுவேன்.

-- நான் ஏற்கனவே மாற்று பரிகாரம் செய்து வீட்டு வாசலில் வைத்துள்ளேன்... அதனால் கவலைப்படமாட்டேன் புன்னகை

எலுமிச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால்
வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம்
வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை
ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.

யோசிக்க வேண்டிய விஷயம்.எனக்கு உதவும் எலுமிச்சை வாங்கலாமா? 300136

-- நிறைய பேருக்கு உதவும்

சுதன் செம சிரிப்பு போங்க. பாதி படித்ததும் இங்கே தானே சிரித்து கொண்டே இருந்தேன். மீதம் படிக்கையில் ஐயோ என்னால முடியல பா.

இதில் நகைச்சுவையுடன் கூடிய நிறைய உண்மைகளும் உள்ளது சுதன்...

செம கட்டுரை தான் போங்க.

நீங்க ச.செ என்பதை மறக்கவில்லை

-- பாராட்டுக்கு நன்றி... கடந்து வந்த பாதையை எப்போதும் மறக்க மாட்டேன் புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எலுமிச்சை வாங்கலாமா? Empty Re: எலுமிச்சை வாங்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum