புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
79 Posts - 68%
heezulia
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
3 Posts - 3%
Barushree
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
2 Posts - 2%
nahoor
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
133 Posts - 75%
heezulia
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
7 Posts - 4%
prajai
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
3 Posts - 2%
Barushree
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
1 Post - 1%
nahoor
அது வேறு உலகம்! Poll_c10அது வேறு உலகம்! Poll_m10அது வேறு உலகம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது வேறு உலகம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 14, 2011 2:04 am

பாட்டிக்கிட்டே தலை வாரிக்கோ! இன்னிக்கு அம்மா ஆபீஸுக்கு சீக்கிரமா கிளம்பணும்! மருமகள் ஸ்வேதாவின் குரல் ஓங்கி ஒலித்தது. பேத்தி ஸ்ரேயா, சீப்பும் கையுமாக பாட்டியிடம் ஓடி வந்தாள். "பாட்டி.. அம்மா உங்கிட்ட சாப்பிடச் சொன்னார்!' - தட்டில் இட்லியுடன் அலமேலுவின் பக்கத்தில் வந்தமர்ந்தான் பேரன் அனிருத்.

தினமும் இதே கதைதான். அலமேலு பேத்திக்கு அவசரமாகத் தலைவாரி, பேரனுக்கு அவன் ஓடும் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து, கதை சொல்லி இட்லியை ஊட்டி முடித்தபோது, பள்ளி வேன் வாசலில் வந்து நின்றது...

"பை பாட்டி... பை தாத்தா' என டாட்டா காட்டி பேரனும் பேத்தியும் கிளம்பக் காத்திருந்தவள் போல், "அம்மா! ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்' என மருமகளின் குரல் ஒலித்தது.

பார்த்துக் கொண்டிருந்த அலமேலுவின் கணவர் சுந்தரத்திற்குப் பொறுக்கவில்லை. அலமேலுவும் காலை எழுந்ததில் இருந்து பம்பரமாகத்தான் சுற்றுகிறாள். அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவள். ஓய்வுபெற்ற ஐந்து வருடங்களான பின்பும் அவளுக்க ஓய்வு கிடைத்தபாடில்லை.

கல்யாணம் ஆன நாளிலிருந்து சுந்தரத்தின் பெரிய குடும்பத்துக்கு அலுக்காமல், போட்டி போடாமல் ஆசையாக எல்லாம் செய்திருக்கிறாள். சுந்தரத்தின் தங்கைகள் எல்லாம் திருமணமாகி, அப்பாடா என்று ஓய்வதற்குள் அவளது மகனும், மகளும் வளர்ந்து விட்டிருந்தனர். அவர்களுக்கும் திருமணம் முடித்து, சற்று நிதானித்தபோது அலமேலுவும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாள்.

பேரனுக்கும், பேத்திக்கும் எல்லாவற்றிற்கும் பாட்டி வேண்டும். குளிப்பாட்டுவது, லஞ்ச் ரெடி செய்வது, யூனிஃபார்ம் போட்டு விடுவது, சாயங்காலத்தில் டிபன் தந்த ஹோம் வொர்க் செய்ய வைப்பது, பரீட்சைக்குத் தயார் செய்வது, டியூஷனுக்கு கொண்டு விடுவது, சாதம் ஊட்டுவது என சகலமும் அவளேதான். சுந்தரம் ஏதாவது வேலையைப் பகிர்ந்துகொள்ள வந்தால்கூட அலமேலுவும் அதை அனுமதிக்காமல் பேப்பரைக் கையில் கொடுத்து உட்கார வைத்து விடுவாள். மகனும், மருமகளும் வெளியில் போனால் கூட குழந்தைகள் அலமேலுவிடம் தான் இருப்பார்கள்.

கொஞ்ச நாளாகவே மனதைக் குடைந்து கொண்டிருந்தது சுந்தரத்திற்கு. அலமேலு இப்படி ஓய்வில்லாமல் இன்னும் உழைத்துக் கொண்டிருந்தால் அவள் உடல்நலம் என்னவாகும் என மிகவும் கவலைப்படத் தொடங்கினார் சுந்தரம். "இதுபற்றி இன்றிரவு மகனிடம் பேசவிட வேண்டியதுதான்' என தீர்மானித்துக் கொண்டார். மருமகள் ஸ்வேதா, குழந்தைகளின் வேலை அனைத்தையும் அலமேலு தலையில் கட்டுவது கொஞ்சம் கூட சரியில்லை எனச் சொல்லி விட வேண்டும். சமயம் கிடைத்தால் ஸ்வேதாவிடமே நாசூக்காகச் சொல்லிவிட வேண்டும் எனவும், நினைத்தார்.

"நமஸ்காரம்! நல்லா இருக்கீங்களா?' மருமகளின் தங்கை கீதா வந்தாள். ஆமாம்! சென்னையில் ஒரு திருமணத்திற்காக வரப்போவதாக கோயமுத்தூரில் இருந்து கீதா கணவன் போன வாரம் ஃபோன் செய்ததாக மகன் சொன்னானே! அலமேலுவிடம் சொல்ல மறந்து விட்டோமே என நினைத்தபடி, "நல்லா இருக்கேனம்மா உன் கணவர், குழந்தைகள் எப்படி இருக்காங்க?' என விசாரித்தார். அலமேலு, ஸ்வேதாவின் பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பன், கீதா திருமணத்திற்குக் கிளம்பினாள். அன்று சாயந்திரம் முழுவதும் கீதா கூடவே இருந்ததால், சுந்தரத்திற்கு மகன் மற்றும் மருமகளுடன் பேசவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

மறுநாள் கீதா ஊருக்கு கிளம்பினாள். குழந்தைகளுக்கும் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அவர்களையும் தன்னுடன் கோயமுத்தூர் அழைத்துப் போவதாகவும், பத்து நாட்கள் கழித்து சுந்தரம் போய் அவர்களை அழைத்து வருவதாகவும் ஏற்பாடு ஆனது.

வீட்டில் குழந்தைகள் இல்லாதது சுந்தரத்திற்கு வெறிச்சென்றிருந்தாலும், ஒருவிதத்தில் "அப்பாடா' என்றிருந்தது. குழந்தைகள் வரும்வரை அலமேலுவுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். முடிந்தால் அருகிலுள்ள கோயில்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் அழைத்துப் போய் வரலாம் என நினைத்தார்.

காலையில் சுந்தரம் கண்விழித்த போது அதிசயமாய் அலமேலு படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தாள். "என்னம்மா' என்றதற்கு, "இலேசாகத் தலைவலிக்கிறது. வேறொன்றுமில்லை' என்றவள், அன்று முழுவதுமே மிகுந்த சோர்வுடன் இருந்தாள்.

தொடர்ந்து வந்த நாட்களிலும், "சாப்பாடு பிடிக்கவில்லை, சாப்பிட்டது ஜீரணமாகவில்லை' என ஏகப்பட்ட கோளாறுகளை அலமேலு அடுக்கிக் கொண்டேயிருந்தாள். வயிற்றுவலி, தலைவலி, கால்வலி என வேளைக்கு ஒரு வலியுடன் சதா படுத்தே கிடந்தாள். சுந்தரத்தின் மனம் கவலையில் தத்தளித்தது. "அலமேலு, என்னம்மா ஆச்சு, வா டாக்டரிடம் போகலாம்' என அழைத்துப் போனார்.

எல்லா செக்-அப்பும் எடுத்த பின் டாக்டர் "ஜெனரல் வீக்னெஸ்' தான் என்றார். டானிக், மருந்து, மாத்திரை என எல்லாவற்றையும் சுந்தரமே பார்த்துப் பார்த்து வேளை தவறாது கொடுத்தார். ஆனாலும், ஊஹும்! ஒரு வாரத்தில் உடல் இளைத்து, கண்ணின் கீழ் கருவளையம் விழுந்து, அலமேலு நடையிலும் ஒரு தள்ளாட்டம். மகனும், மகளும் பயந்தே போனார்கள்.

அன்றைக்கு சுந்தரத்துடன் பணிபுரிந்த, குடும்ப நண்பரான சந்தானம், வெகு நாளாயிற்றே என்று சுந்தரத்தை பார்க்க வந்திருந்தார். வந்தவரிடம், சுந்தரம், அலமேலுவின் உடல்நிலைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டார்.

அக்கறையோடு கேட்ட சந்தானம், "சுந்தரம், நான் சொல்வதை கேள். உடனே உன் பேரப் பிள்ளைகளை வரவழைத்து விடு. உன் மனைவியின் உடல் சரியாகி விடும்' என்றார்.

அதிர்ந்து போன சுந்தரம், "என்னப்பா நீ விளையாடறியா? அலமேலு ஏற்கெனவே உடம்புக்கு முடியாம படுத்துக் கிடக்கிறா! நல்லவேளை, இந்தச் சமயம் பேரப்பிள்ளைங்க ஊருக்குப் போயிருக்காங்க. இல்லாட்டி அவங்க வேற அவளைப் பாட்டி... பாட்டின்னு பாடாய்ப்படுத்திடுவாங்க. அவங்களுக்கு வேலை செஞ்சே இவள் உடம்பு இப்படி ஆயிடுச்சு. இந்த நேரத்துல பேரக் குழந்தைகளும் இங்க வந்தா அலமேலு உடம்பு இன்னும் மோசமாகிவிடும். கொஞ்ச நாளா... நானே இவளை அழைத்துக் கொண்டு தனி வீடு பார்த்துக் கொண்டு போய் விடலாமா என யோசிக்கிறேன்' என்றார்.

சந்தானம் ஏதோ நகைச்சுவையைக் கேட்டுவிட்டதைப் போல் பெரிதாகச் சிரித்தார்!

"சுந்தரம் உனக்கு வயசாச்சே தவிர பெண்கள் மனம் புரியவில்லை. எத்தனை வயதானாலும் பெண்களுக்கு வீட்டு வேலை என்பது சுகமான சுமைதானப்பா! தன்னை நம்பி, தன் கையை எதிர்பார்த்து எல்லா வயதிலும் யாராவது இருக்கிறார்கள் என்ற அவர்களின் அடிமனத்தில் அன்பின் காரணமாக தழைத்தோங்கி இருக்கும் பிரத்யேகமான எண்ணம்தான் அவர்களைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. பிரதிபலன் பாராத இந்த உணர்வுதான் பெண்மையின் தத்துவம்.'

"பெற்ற குழந்கைள் பெரியவர்களாகி அவரவர் காரியங்களை அவர்களே கவனித்துக் கொள்ளும்போது "தன்னால் யாருக்கும் பிரயோஜனம் இல்லையோ?' என்ற எண்ணம் எழுந்தால் பெண்கள் ஏங்கத் தொடங்கி விடுவார்கள். உடனே அடுத்த தலைமுறையை நோக்கி அவர்கள் மனம் சென்றுவிடும். "பேரனும் பேத்தியும் தன்னை நம்பித்தான் இபுருக்கிறார்கள்' என்ற நினைப்பே அவர்களுக்குத் தெம்பைத் தரும். நீ கொடுக்கும் டானிக்கை விட இதுதாம்பா பெரிய டானிக்! என்ன.. நான் சொல்வது சரியா?' எனச் சிரித்தார். ஃரிட்ஜைத் திறந்து தண்ணீர்க் குடித்து, "நான் சொல்வதை யோசி' எனச் சொல்லிப் புறப்பட்டார்.

சுந்தரம் யோசித்தார். சந்தானம் சொல்வது உண்மைதான். இல்லாவிட்டால் பேரன் பேத்திக்கு ஓடி ஓடி அத்தனை வேலைகளைச் சந்தோஷமாக செய்தவள் இன்று உலகமே அஸ்தமித்துப் போனதுபோல் இருப்பானேன்? சுந்தரத்திற்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது. கீதாவின் கணவனுக்கு நிலைமையை ஃபோனில் விளக்கி, அவரைக் குழந்தைகளை இங்கு கொண்டு வந்து விட கேட்டுக் கொண்டார்.

"ஹை பாட்டி... ஹவ் ஆர் யூ?' என்று தொப்பென்று ஓடிவந்து அவள் மேல் விழுந்த பேரக் குழந்தைகளை அலமேலு வாரி அணைத்து உச்சிமுகர்ந்தாள்.

அலமேலுவின் உடல் உபாதை அனைத்தும் சரியாகி விட்டதைப்போல் தோன்றியது. முகம் கொள்ளாத பூரிப்புடன் குழந்தைகள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லியபடி தட்டிலிருந்த சாதத்தை இருவருக்கும் ஊட்டியபடி அலமேலு தனி உலகத்தில் இருந்தாள்.

- ராதா வாசுதேவன்



அது வேறு உலகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 14, 2011 2:08 am

அருமையான கதை பகிர்ந்தமைக்கு நன்றி தல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அது வேறு உலகம்! Ila
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Nov 14, 2011 12:00 pm

"பெற்ற குழந்கைள் பெரியவர்களாகி அவரவர் காரியங்களை அவர்களே கவனித்துக் கொள்ளும்போது "தன்னால் யாருக்கும் பிரயோஜனம் இல்லையோ?' என்ற எண்ணம் எழுந்தால் பெண்கள் ஏங்கத் தொடங்கி விடுவார்கள். உடனே அடுத்த தலைமுறையை நோக்கி அவர்கள் மனம் சென்றுவிடும். "பேரனும் பேத்தியும் தன்னை நம்பித்தான் இபுருக்கிறார்கள்' என்ற நினைப்பே அவர்களுக்குத் தெம்பைத் தரும். நீ கொடுக்கும் டானிக்கை விட இதுதாம்பா பெரிய டானிக்! என்ன.. நான் சொல்வது சரியா?' எனச் சிரித்தார். ஃரிட்ஜைத் திறந்து தண்ணீர்க் குடித்து, "நான் சொல்வதை யோசி' எனச் சொல்லிப் புறப்பட்டார்.

மெய்யாலுமே சூப்பர் தல, ரொம்ப நாள் கழிச்சி ஒரு சூப்பர் கத படிச்சிருக்கேன்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அது வேறு உலகம்! Mgr
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக