புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் பார்க்கின்.... Poll_c10குற்றம் பார்க்கின்.... Poll_m10குற்றம் பார்க்கின்.... Poll_c10 
62 Posts - 57%
heezulia
குற்றம் பார்க்கின்.... Poll_c10குற்றம் பார்க்கின்.... Poll_m10குற்றம் பார்க்கின்.... Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
குற்றம் பார்க்கின்.... Poll_c10குற்றம் பார்க்கின்.... Poll_m10குற்றம் பார்க்கின்.... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
குற்றம் பார்க்கின்.... Poll_c10குற்றம் பார்க்கின்.... Poll_m10குற்றம் பார்க்கின்.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் பார்க்கின்.... Poll_c10குற்றம் பார்க்கின்.... Poll_m10குற்றம் பார்க்கின்.... Poll_c10 
104 Posts - 59%
heezulia
குற்றம் பார்க்கின்.... Poll_c10குற்றம் பார்க்கின்.... Poll_m10குற்றம் பார்க்கின்.... Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
குற்றம் பார்க்கின்.... Poll_c10குற்றம் பார்க்கின்.... Poll_m10குற்றம் பார்க்கின்.... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குற்றம் பார்க்கின்.... Poll_c10குற்றம் பார்க்கின்.... Poll_m10குற்றம் பார்க்கின்.... Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் பார்க்கின்....


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 14, 2011 2:06 am

எட்டு மணி அடித்து ஓய்ந்தது.

"அம்மா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் வெச்சுருக்கேன்' என்றபடி நுழைந்தாள் சக்தி.

"என்ன சக்தி? சொல்லேன். ஏதாவது பிரமோஷனா'

"இன்னிக்கு கல்பனாவை, அதுதான் உன்னோட அக்கா பெண்ணை எங்க கம்பெனி வளாகத்திலே யதேச்சையாய்ப் பார்த்தேன். ஆச்சரியப்பட்டு ஓடிப் போய் அவகிட்டே பேசினேன்.'

"அப்படியா?'

ஆமாம்மா. சந்தோஷத்திலே கல்பனாவும், திகைச்சுப் போயிட்டா. அப்புறம் இரண்டு பேருமா ஃபுட் கோர்ட்டுக்குப் போய் லஞ்ச் சாப்பிட்டோம்.

அவ எப்படி சக்தி அங்க வந்தா? இங்கே என்ன பண்றாளாம்?

அம்மா, கல்பனா ஹைதராபாத்திலே சாஃப்ட்வேர் கம்பெனியிலே வேலை செஞ்சுக்கிட்டிருந்தா இல்லையா? அதே கம்பெனியிலே ஏதோ ப்ராஜெக்ட் சம்பந்தமா இங்கே பெங்களூருக்கு இரண்டு மாசம் டிரெயினிங் அனுப்பிச்சு இருக்காங்களாம். அவ தன்னோட சிநேகிதிகளோட இந்திரா நகரில் தங்கியிருக்காளாம்.

இரண்டு வருஷம் முன்னாடி ஒரு கல்யாணத்தில் பத்து நிமிஷம் நாம அவளைப் பார்த்ததுதான். அது சரி சக்தி. அக்கா, அத்திம்பேர் எல்லோரும் எப்படியிருக்காங்களாம்?

ம். பெரியம்மாவுக்கு போன மாதம் தான் யூட்ரஸ் ஆபரேஷன் நடந்ததாம். கல்பனா நம்ம எல்லோரையும் பற்றி ரொம்ப விசாரிச்சாம்மா. நாம் இனிமே அடிக்கடி சந்திச்சுக்கலாம்னு சொன்னா.

சக்தி, உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீ ரொம்ப வெகுளி. பார்த்துப் பழகும்மா.

மாலதி கொஞ்சம் கவலையுடன் பேசினாள்.

சரிம்மா. நீ கிச்சனை க்ளீன் பண்ணிட்டு வா. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. சக்தி பேசியபடியே நகர்ந்தாள்.

மாலதியின் அக்கா லக்ஷ்மியின் முதல் பெண் கல்பனா. இரண்டாவது பையன் நிர்மல் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறான். மாலதியின் அண்ணன் சேகர் சென்னையில் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டுமே பையன்கள்.

கும்பகோணத்தில் பிறந்து, அருமை, பெருமையாய் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு, பின்னர் கிளை, கிளையாய்ப் பிரிந்து போய்... அம்மா கல்சட்டியில் தயிர் சாதம் பிசைந்து சுற்றிலும் உட்கார வைத்து, கவளம் கவளமாய் எடுத்துப் போடுவாள். பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் திருட்டு மாங்காய்ப் பறித்துச் சாப்பிட்டு, ஓடும் காவிரி நீரில் கல்லெறிந்து அமர்க்களப்படுத்தி சத்தமும், சலசலப்புமாய் வாழ்ந்தவர்கள்தான். அக்கா லக்ஷ்மி இவளை உட்கார வைத்து பொறுமையாகக் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.

அண்ணா சேகர், இவளுக்குப் பிடிக்குமே என்று உருகும் பால் ஐஸைக் கையில் பிடித்தபடி வேகு, வேகென்று தெருவில் ஓடி வருவான். எல்லாமே மிக அழகாகத்தான் போய் கொண்டிருந்தது.

அப்பா போன பிறகு வருஷா வருஷம் திவசத்திற்காக மூவரும் அங்கே கூடி விடுவார்கள். அரட்டையும், கும்மாளமுமாய் பொழுதுகள் நகர்ந்து போகும்.

நண்டும், சிண்டுமாய் அரை டஜன் குழந்தைகள் குறுக்கும், நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருக்கும்.

அம்மாவிற்கு ஒத்தாசையாய் எல்லா வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டு, மறுநாள் மாலை காலாற நடந்து போய் கும்பேஸ்வரர் கோயிலுக்குச் சென்று எல்லோரும் அம்மனைத் தரிசிப்பார்கள்.

முராரி ஸ்வீட் ஸ்டாலுக்குச் சென்று சோன்பப்டியும், மூத்பேடாவும் வாங்கிக் கொள்வார்கள். எத்தனை வருடங்கள் கடந்தாலும் மூட வைத்த மல்லிகையாய் மணக்குள், புத்தம் புதிய அற்புதமான நினைவுகள்.

"ஏம்மா, என்னவோ போல் இருக்கே?' சக்தி அருகில் வந்து தோளை தொட்டுக் கேட்டாள்.

மாலதி கண்களில் ஈரம் மின்னப் பேசினாள். "மனுஷங்க வளர, வளர, கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயத் திரை எல்லோரையும் பிரிச்சுப் போட்டுடறது சக்தி.'

"என்னம்மா சொல்றே?'

"ஆமாம் சக்தி.'

"வருஷா வருஷம் திவசத்தின் பொழுது எல்லோரும் கும்பகோணம் சென்று, சேர்ந்து நான்கைந்து நாட்கள் இருப்போம். நீங்களும் விகல்பமில்லாமப் பழகி, அந்த நாட்களை மனசிலே பொக்கிஷமா சேகரிச்சு வச்சு, அடுத்த வருஷத்துக்காக காத்துக்கிட்டிருப்பீங்க. ஆனால், கொஞ்சம், கொஞ்சமா திவசத்திற்குப் போறது குறைய ஆரம்பிச்சு, பின்பு ஒரேடியாக நின்னுடுச்சு.'

"ஏம்மா! ஏன் அப்படி ஆச்சு?'

"அக்காதான் சக்தி முதலில் ஆரம்பித்து வைத்தவள். என் பிள்ளைக்கு அரை ஆண்டுத் தேர்வு நெருங்கிண்டிருக்கு. நான் இந்த வருடம் வர முடியாது'ன்னு தொலைபேசியில் மன்னியிடம் சொல்லி இருக்கிறாள். அண்ணா கோபம் வந்து சத்தம் போட்டிருக்கிறான்.

"லக்ஷ்மியோட பையன் எட்டாவது படிக்கிறான். இந்தப் படிப்புக்கே அவ இந்த அலட்டு அலட்டிக்கிறா. என் பையன் பத்தாவதிலே இருக்கான். அடுத்த தடவை நான் வருவதும் சந்தேகம்தான்' என்று விமரிசையாகப் பேசியிருக்கிறான்.

இந்த விஷயம் அம்மாவிடம் சென்றடைய, அம்மா யார் பக்கமும் பேச முடியாமல் பொதுப்படையாய் உபதேசித்து விட்டுப் போயிருக்கிறாள்.

உறவுகளில் நடந்த ஒரு திருமணத்தின் பொழுது அண்ணாவும், அக்காவும் சந்தித்துக் கொள்ள, கூட வந்திருந்த மன்னி ஜாடை, மாடையாய் ஏதோ சொல்ல, அக்காவும் தன் பங்கிற்கு குறை வைக்காமல் பதில் பேசியிருக்கிறாள்.

"சரிம்மா. உனக்கும், பெரியம்மாவுக்கும் என்னம்மா பிரச்னை? நீயும், மாமாவும் கூட அத்தனை பேசிக்கிறதில்லையே?'

"பெரிசா எதுவும் இல்லை. கல்பனா பெரியவளான பொழுது அக்கா ஒரு ஃபோன் கூட பண்ணி எனக்கு விஷயத்தைச் சொல்லலை. அடுத்த மாதம் நம்ம கம்பெனியில் நடந்த ஒரு ஃபங்ஷனுக்காக நான் ஹைதராபாத்திற்குப் போயிருந்தேன். உண்மையிலேயே எனக்கு நேரமும் இல்லை. ஹைதராபாத்தில் இருந்த அக்கா வீட்டுக்குப் போகாம திரும்ப வந்துட்டேன்.'

"இந்த விஷயத்தை அக்கா, மன்னியிடம் சொல்ல, நானும் தாங்க முடியாமல் கோபமாய் லக்ஷ்மியிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டேன்.'

"சின்னச் சின்ன தாய் உரசல்கள் வந்து அது பெரிய விரிசலாயிடுச்சு சக்தி.'

"ஆமாம்மா. மாமா பசங்களை நான் பார்த்து நாலு வருஷத்திற்கும் மேலே ஆகுது!'

"இப்பல்லாம் ஏதோ ஒரு உறவுக் கலயாணத்திலே அரை மணி பார்த்துண்டு அப்படியே பிரிஞ்சு போயிடறோம். வீட்டிற்கு வந்தவுடன் நாள் முழுவதும் அந்த நினைவுகள் சிக்கலெடுக்க முடியாத நூலாக சுற்றிச் சுற்றி வந்துக்கிட்டேதான் இருக்கு.'

"அண்ணாவோட பையனுக்கு கோயம்புத்தூரில் அரசாங்கக் கல்லூரியில் என்ஜீனியரிங் சீட் கிடைச்சுது. அக்கா பசங்களுக்குப் படிப்பில் அத்தனை சூட்சுமம் கிடையாதுதான். அதிலேயும் தாழ்வு மனப்பான்மை வந்து குறுக்கே நிற்க, மனசளவிலே இடற ஆரம்பிச்சுடுச்சு.'

"இத்தனை தானாம்மா'

"ஏன்? நம்மளையே எடுத்துக்கோயேன். உன் அப்பா பெரிய கம்பெனியோட எம்.டி. இதனாலே எனக்கு எந்த கர்வமும் இருந்ததில்லை. ஆனால் சாதாரண நிகழ்வுகளைக் கூட பணத்தோட சம்பந்தப்படுத்திப் பேசி, மனசைக் காயப்படுத்திடறாங்க.'

மாலதி வருத்தத்துடன் பேசினாள்.

"அம்மா சக்கரமாய்ச் சுழன்று கொண்டு கொஞ்ச காலம் எல்லோரையும் இழுத்துப் பிடித்து, சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாள். அச்சாணி முறிந்து, அம்மா காற்றோடு, காற்றாய்க் கலந்து இல்லாமல் போய்விட, பிறகு இங்கு எல்லோருமே தனித்தீவுகளாக ஆக்கப்பட்டோம் சக்தி.'

"அம்மா! மனசைப் போட்டு அலட்டிக்காதே. போய்ப் படுத்துத் தூங்கு. குட்நைட்!'

மாலதிக்கு உறக்கம் வரவில்லை. திறந்திருந்த பால்கனியின் வழியே வானம் மேகங்களால் சூழப்பட்டு கருமையாய் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

"குற்றம்பார்க்கின் சுற்றம் இல்லை'

இந்தப் பழமொழியை அம்மா எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பாள்.

"கறுப்புக் கண்ணாடியை கண்ணுலே போட்டுக்கிட்டுப் பார்த்தா எப்பவும் எல்லாமே கறுப்பாகத்தான் தெரியும். கழற்றி வச்சுட்டுப் பாருங்களேன். எல்லாமே தெளிவாய்த் தெரியும்.'

"இதையும் அவ்வப்பொழுது சொல்வாள். எல்லோருமே கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வலம்வந்திருக்கிறோம் என்று' புரிந்து போனது.

பெரிதாக எதையோ இழந்து விட்டோம் என்று புரிந்து போனாலும் இழந்ததை எப்படி மீட்கப் போகிறோம் என்ற வினாவிற்குத்தான் பதிலே இல்லை.

மாலதி புரண்டு, புரண்டு படுத்து விடியற்காலையில் உறங்கிப் போனாள்.

பதினைந்து நாட்கள் ஓடி விட்டன.

மாலதியே வலிய போய் ஒரு நாள் கேட்டாள்.

"ஏன் சக்தி அப்புறம் நீ கல்பனாவை சந்திக்கவே இல்லையா?'

"ஆமாம்மா. டைமே கிடைக்கலை.'

எங்கேயோ பார்த்தபடி சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

சக்தி, தன்னுடைய பழைய கல்லூரித் தோழிகள் அனைவரையும் மதியம் சாப்பாட்டுக்கு அழைத்திருப்பதாகச் சொல்லியிருந்தாள்.

மாலதி சாம்பார் சாதமும், அவியலும், சர்க்கரைப் பொங்கலுமாய், விதவிதமாய் சமைத்திருந்தாள்.

சக்தி அம்மாவிற்கு உதவியாக டைனிங் டேபிளில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

டாக்ஸி வந்து நிற்கும் சப்தம் கேட்க, சக்தி அவசரமாக வாசலுக்குப் போனாள்.

மாலதியும் வெளியே வந்தாள்.

ஒவ்வொருவராய் இறங்கி உள்ளே நுழைய, மாலதி கண்களை இமைக்க மறந்து அப்படியே நின்று விட்டாள்.

அக்கா லக்ஷ்மி, கல்பனா, நிர்மல், கோபால், மன்னி, குழந்தைகள், எல்லோரும் கொஞ்சம் கூச்சத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

"வாங்க, வாங்க எல்லோரும்.'

மாலதி பேச முடியாமல் தடுமாறினாள்.

"சக்தி, நீ என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலியே?'

"ஸாரிம்மா. கல்பனா யதேச்சையா மாமா பையன் அரவிந்தை மைசூரிலே பிக்னிக் போயிருந்தபோது பார்த்திருக்கா. நாங்க எல்லோருமா சேர்ந்துதான் இத்தனை ஏற்பாடுகளையம் செஞ்சோம்.'

"ஹாய், ஹலோ' - பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டார்கள்.

"சக்தி எத்தனை வளர்ந்திட்டா?'

கோபால் ஆச்சரியத்துடன், பேச, எல்லோரும் எல்லாப் பிள்ளைகளையும் புதிதாய்ப் பார்த்தார்கள். ஜட்டி போட்டபடி இவர்களைச் சுற்றி வந்த பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து, எந்தக் குழப்பமும் இல்லாமல், மிகவும் தெளிவாக, இவர்களைச் சேர்த்து வைக்க வந்திருக்கும் ஆசானாய்... மிகவும் பெருமையாக இருந்தது.

சக்தி எல்லோருடைய தட்டிலும் கேசரியையும், பூரியையும் வைத்துக் கொடுக்க, மாலதி எல்லோருக்கும் கொடுத்தாள்.

"நாங்க எல்லோரும் மாடிக்குப் போறோம்' என்றபடி கலகலப்புடன் பறந்து போனார்கள்.

அண்ணா கோபாலின் முகத்தில் முதிர்ச்சி தெரிந்தது.

லக்ஷ்மியின் முன்னுச்சி முழுவதுமாய் நரைத்துப் போயிருந்தது. மன்னி கொஞ்சம் தளர்ந்து போய் கண்ணாடிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

மாலதியின் கண்களில் இவளுக்காக வேகுவேகென்று ஐஸ்கிரீமைத் தூக்கிக் கொண்டு ஓடி வரும் அண்ணாவும், அன்புடன் இவளுக்கு இரட்டை ஜடை போட்டுவிடும் அக்காவும், உட்கார வைத்து சூடாகச் சாப்பாடு போடும் மன்னியும்தான் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

கோபால் ஏதோ பேச ஆரம்பிக்க, மன்னியும், லக்ஷ்மியும் இவளது அருகே வந்து கண்கள் கலங்கிப் போய்ப் பேச முடியாமல் தவிக்க, எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ள வைப்பது போல ஒருசேர அவர்களை அணைத்துக் கொண்டாள் மாலதி.

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' அம்மாவின் குரல் வெகு அருகில் ஒலிப்பது போல் இருந்தது மாலதிக்கு.

உமா ஜானகிராமன்



குற்றம் பார்க்கின்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 14, 2011 2:13 am

கறுப்புக் கண்ணாடியை கண்ணுலே போட்டுக்கிட்டுப் பார்த்தா எப்பவும் எல்லாமே கறுப்பாகத்தான் தெரியும். கழற்றி வச்சுட்டுப் பாருங்களேன். எல்லாமே தெளிவாய்த் தெரியும்

உறவுகள் சிதற இதுவும் ஒரு காரணம்

நன்றி சிவா அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குற்றம் பார்க்கின்.... Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக