புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 9 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Srinivasan23

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 9 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 6:08 pm

First topic message reminder :

தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது  ஒழுக்கம், வீரம், காதல்  ஆகிய மூன்றும்  தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம்  நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.

சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக  18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.

வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.

இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும்,  எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.

தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.  

ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.  

இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.

உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.

அன்புடன்......

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 15, 2012 1:45 pm

பாடல் 66 மன்னருடன் பழகும் முறை
(இன்னிசை வெண்பா)

கடை விலக்கின், காயார்; கழி கிழமை செய்யார்;
கொடை அளிக்கண் பொச்சாவார்; கோலம் நேர் செய்யார்;
இடை அறுத்துப் போகி, பிறன் ஒருவற் சேரார்; -
'கடைபோக வாழ்தும்!' என்பார்.

பொருள் விளக்கம்

மன்னர், மேலதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்களை சந்திக்கும் போது அவர்களின் வாயில் உள்ளே நம்மை செல்ல மறுத்தால் கோபம் கொள்ளக்கூடாது, மிகுந்த உரிமையை எடுத்துப் பேசக் கூடாது. அவருக்கு கொடுக்க எடுத்துச் சென்ற பொருளை கொடுக்காமல் மறைக்கக்கூடாது. அவர் போல் ஆடம்பரமாக உடை உடுத்தக்கூடாது. பெரிய சபையில் அவரைத் தவிர்த்து பிறருக்கு மரியாதை செய்யும் படி பிறர் உடன் செல்ல மாட்டார். வாழ்க்கையின் இறுதி வரை நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் இதை தவறாமல் செய்வார்கள்.

பாடல் 67 குற்றம் ஆவன
(இன்னிசை வெண்பா)

தமக்கு உற்ற கட்டுரையும், தம்மில் பெரியார்
உரைத்தற்கு உற்ற உரையும், அஃது அன்றிப்
பிறர்க்கு உற்ற கட்டுரையும், சொல்லற்க! சொல்லின்,
வடுக் குற்றம் ஆகிவிடும்.

பொருள் விளக்கம்

நமக்கு கொடுக்கும் உறுதி மொழியையும், உயர்பதவியில் இருப்பவர்களால் போற்றப்படும் நிலையில் இருக்கும் பெரியவர்கள் கூறும் உறுதி மொழியும், அது மட்டுமல்லாமல் நம் முன் ஒருவர் பிறருக்குச் சொல்லும் உறுதி மொழியும் வேறு ஒருவரிடம் சொல்லக்கூடாது. சொல்லுவதால் தேவையற்ற துன்பங்கள் விளையலாம்.

பாடல் 68 நல்ல நெறி
(இன்னிசை வெண்பா)

பெரியார் உவப்பன தாம் உவவார்; இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர்; அறிவு அறியாப்
பிள்ளையேயானும் இழித்து உரையார், தம்மோடு
அளவளாவு இல்லா இடத்து

பொருள் விளக்கம்

பெரியவர் உடன் செல்லும் போது அவர் விரும்புபவை எல்லாம் நமக்கு வேண்டும் என்று விரும்ப மாட்டார். நம்முடன் இணையாகாத சிற்றறிவு உடையவரை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வர மாட்டார். தம் பிள்ளைகளே ஆனாலும் அவர்கள் அறிவு இல்லா செயலைத் செய்தாலும் அவர்களை இகழ்ந்து பேச மாட்டார்கள். அதே போல் தம் கருத்துடன் ஒத்து வராத, நண்பர்கள் அல்லாத நபர்கள் ஆனாலும் அவர்களையும் இகழ்ந்து பேச மாட்டார்கள் நல்ல நெறியில் உள்ளவர்கள்.

பாடல் 69 மன்னர் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
(இன்னிசை வெண்பா)

முனியார்; துனியார்; முகத்து எதிர் நில்லார்;
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்;
'இனியவை யாம் அறிதும்!' என்னார்; கசிவு இன்று,
காக்கை வெள்ளென்னும் எனின்

பொருள் விளக்கம்

வாழத் தெரிந்தவர்கள் தம்முடைய உயர் அதிகாரி, மேல் நிலையில் இருப்பவர்கள், மன்னன் ஆகியோருடன் கோபப்பட மாட்டார், துணிந்து அவருக்கு எதிரான செயல்களைச் செய்ய மாட்டார், அவர் முகத்துக்கு எதிரே எதிர்த்து நிற்க் மாட்டார். அவர் தனிமையில் இருக்கும் போது தன் குறையை கூறார், எனக்கு இது, அது தெரியும் என்று பெருமையாகக் கூற மாட்டார்கள். காக்கா வெள்ளை என்று அதிகாரி சொன்னாலும் அன்பின்றி அவர் கோபப்படும்படி அதை மறுத்து பேசாமல் அமைதியாக இருப்பார்.

பாடல் 70 மன்னன் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உமிவும், உயர்ந்துழி ஏறலும், பாக்கும்,
வகைஇல் உரையும், வளர்ச்சியும், ஐந்தும்
புணரார் - பெரியாரகத்து

பொருள் விளக்கம்

நம்மை விட பெரியவர், உயர் அதிகாரி, மன்னன் ஆகியோர் முன் எச்சில் துப்புதல், அவரை விட உயர்வான ஆசனத்தில் அமருதல், வெற்றிலை பாக்கு போடுதல், தேவையற்ற தவறான வார்த்தை பேசுதல், தூங்குதல் ஆகியவை செய்யுதல் கூடாது.

தொடரும் .....

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 15, 2012 4:29 pm

காக்கா வெள்ளை என்று அதிகாரி சொன்னாலும் அன்பின்றி அவர் கோபப்படும்படி அதை மறுத்து பேசாமல் அமைதியாக இருப்பார்
நல்ல அறிவுரை !.இனி .நான் கடைபிடித்து ...பார்க்கிறேன் . மிக்க நன்றி நன்றி

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 16, 2012 10:28 am

கே. பாலா wrote:
காக்கா வெள்ளை என்று அதிகாரி சொன்னாலும் அன்பின்றி அவர் கோபப்படும்படி அதை மறுத்து பேசாமல் அமைதியாக இருப்பார்
நல்ல அறிவுரை !.இனி .நான் கடைபிடித்து ...பார்க்கிறேன் . மிக்க நன்றி நன்றி

இன்றைக்கும் பொருந்தும் அருமையான பாடல்கள் கொண்ட அறிய தொகுப்பு இந்த ஆசாரக் கோவை.

தொடர்ந்து ஊக்கம் அளித்தமைக்கு நன்றி,
நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jan 19, 2012 3:16 pm

பாடல் 71
தற்பெருமை கூடாது

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவர் முன், செல்வமும், கல்வியும், தேசும்,
குணனும், குலம் உடையார் கூறார்-பகைவர்போல்
பாரித்து, பல் கால் பயின்று

பொருள் விளக்கம்

நல்ல குடியில் பிறந்தவர்கள் மன்னனிடம் (தம்முடைய மேலதிகாரி /உயர் பதவியில் இருப்பவர்கள்) தம்முடைய கல்வி, செல்வம், புகழ் /பெருமை, குணநலம் ஆகியவற்றை விளக்கி கூறி, வெகு மேலாக பரப்பி தற்பெருமையாகக் கூறி மன்னனின் கோவத்துக்கு ஆளாகி தமக்கு தாமே பகையை தேட மாட்டார்கள்.

பாடல் 72
பெரியவர்களை வணங்கக் கூடாத இடங்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்,-
வணங்கார்-குரவரையும் கண்டால்; அணங்கொடு
நேர் பெரியார் செல்லும் இடத்து.

பொருள் விளக்கம்

அரசன் இருக்கும் அரண்மனையிலும் , இறைவன் வாழும் கோவிலிலும் பெரியவரை கண்டால் வணங்கக்கூடாது . அது போல் அவர்கள் வீதி உலா செல்லும் போது அவர்களைத் தவிர்த்து மற்றவர்களை வணங்கக்கூடாது.

பாடல் 73
பெரியவர் முன்பு செய்யக்கூடாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நகையொடு, கொட்டாவி, காறிப்பு, தும்மல்,
இவையும் பெரியார் முன் செய்யாரே; செய்யின்,
அசையாது, நிற்கும் பழி.

பொருள் விளக்கம்

கேலியாகச் சிரிப்பு , கொட்டாவி விடுதல் , எச்சில் உமிழ்தல் , பெரியவர் மீது படும் படி தும்மல் செய்தல் இவை யாவும் பெரியவர்கள் முன்பு செய்யக்கூடாது. செய்தால் தீராத பழி வந்து நிற்கும்.

தொடரும்...

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 19, 2012 3:18 pm

அனைவரும் கடைபிடிக்க வேண்டியது . நல்ல தமிழுக்கு நன்றி.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 3:59 pm

மிகவும் அருமையான ஆசாரங்கள் ஐயா.....

பொறுமை காத்தலுக்கும், கீழ்ப்படிந்து நடத்தலுக்கும். கூறிய விளக்கங்கள் அருமை ஐயா.

ஆனால், மேலதிகாரி, வெள்ளைக் காகம் என்று கூறியதற்கு நாம் ஆம் என்று தலை ஆட்டினால், அதிகாரிக்கு தலையாட்டும் பொம்மையாக தானே இருப்பார்கள். இதனாலேயே அதிகாரி, இவர்களைப் போன்ற தலையாட்டிகள் எதற்கு என்று நீக்க வாய்ப்புள்ளது.

ஆனால், இதற்கு உண்மையான பொருள் யாதென்று கூறுங்கள் ஐயா. நான் புரிந்த விதத்தை வைத்து இதைக் கூறினேன்.

மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jan 19, 2012 7:43 pm

நன்றி ராமன்
தலை ஆட்டவேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது. மேலதிகாரி கூறியவுடன் அதை எதிர்த்து இது தவறு, அது தான் சரி என்று வாதிடக் கூடாது, அமைதியாக இருக்க வேண்டும். ஒரு சில நாழிகை அல்லது நாள் கழித்து அவரே காக்கா கருப்பு என்றும் சொல்லலாம். அப்போதும் ஆமாம் நீங்கள் கூறுவது சரி என்று உடனடியாகத் தலை ஆட்டக்கூடாது.

ஒரு விஷயத்தை நாமே உணரும் முன் அடுத்தவர் சொல்வதை வைத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவரிடம் இருக்காது. குறிப்பாக தான் கீழ் உள்ளவன் கூறும் அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் மிகக் குறைவு. ஆதலால் இரண்டு சந்தர்ப்பத்திலும் அமைதியாக, சற்று இடைவெளியுடன் இருப்பது நல்லது என்று ஆசாரக்கோவை கூறுகிறது.

இதே பொருளில் நாலடியாரில் உள்ள ஒரு பாடலில் மன்னன் (இன்றைய தேதிக்கு மேலதிகாரி/ உயர் அதிகாரி) யானைப் போன்ற குணத்தில் இருக்கலாம் என்று கூறுகிறது. யானைப் பாகனை கொண்டாடி, தூக்கி தலையின் மேல் வைக்கும் அதே யானை, அதற்கு கோவம் வந்தால் நன்றி மறந்து பாகனை தூக்கி போட்டு மிதிக்கும். இன்றைய அரசியலில் இருக்கும் உடன் பிறப்புகளின் நிலைமை இப்படி தான் இருக்கிறது. ஆதலால் நெருங்காமல், சரி என்றும் தவறு என்றும் கூறாமல் அமைதியாக இருப்பது சாலச் சிறந்தது என்று நம் தமிழ் நூல்கள் கூறுகிறது.

உங்கள் விருப்ப வள்ளுவரும்

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் - குறள் 691

குளிர் காய்பவர் நெருப்பின் மிக அருகே செல்லக்கூடாது, தூரமாக இருக்கக்கூடாது. இவை இரண்டும் நமக்கு கேடு விளைவிக்கும். மன்னனுடன் பழகும் போதும் இந்த இடைவெளி வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

மேலும் விளக்கம் தேவையெனின் பதிலிடவும் ,,,,,,,,

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 7:52 pm

உங்கள் விருப்ப வள்ளுவரும்

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் - குறள் 691

குளிர் காய்பவர் நெருப்பின் மிக அருகே செல்லக்கூடாது, தூரமாக இருக்கக்கூடாது. இவை இரண்டும் நமக்கு கேடு விளைவிக்கும். மன்னனுடன் பழகும் போதும் இந்த இடைவெளி வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

மிகவும் அருமையான விளக்கம் ஐயா.

நான் இந்தியன் எதிக்ஸ் என்ற பாடத்தில், ஒரு மன்னனின்(முதலாளி) கீழ் வேலை செய்யும் ஒருவன், மன்னன் தனக்கு நெருக்கமாக இருந்தாலும், நாம் சற்று விலகி இருப்பது தான் சிறந்தது. அதிக உரிமையும் எடுத்துக் கொள்ளக் கூடாது, அதிகம் விலகியும் செல்லக் கூடாது. என்று கூறியது நியாபகதிற்கு வருகிறது.

ஆக, அந்த தருணத்தில் நாம் அமைதி காத்து நிற்பதே சிறந்தது. நன்றிகள் ஐயா. ஆயினும், ஒருவர் கூறும் பொழுது நாம் எந்த வித மறுமொழியும் இடாமல் இருப்பது. நன்றாக இருக்குமா ஐயா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Jan 19, 2012 7:53 pm

தோழமைக்கு,
வாழ்க தமிழுடன். தமிழ் மொழி போல் என்றும் நலமே பெருக .

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jan 19, 2012 8:10 pm

ஆக, அந்த தருணத்தில் நாம் அமைதி காத்து நிற்பதே சிறந்தது. நன்றிகள் ஐயா. ஆயினும், ஒருவர் கூறும் பொழுது நாம் எந்த வித மறுமொழியும் இடாமல் இருப்பது. நன்றாக இருக்குமா ஐயா......

இன்றைக்கு கூறும் பல கல்விப் பாடங்களின் மூலம் நம் இந்திய மரபில், அதிலும் தமிழில் மிகுந்து உள்ளது. பல உளவியல் கோட்பாடுகள் உட்பட.

மறுமொழி இடுவது நாம் பழகும் அதிகாரியின் தனித்தன்மைப் பொருத்தும், நம்முடைய பதவியைப் பொருத்தும் அமைய வேண்டும். குறிப்பாக ஒரு மேலதிகாரி தான் கீழ் உள்ளவன் சொல்வதை கேட்காமல் போகலாம், ஆனால் அவனுடைய காரியதரிசி கூறுவதன் படி செயல்படுகிறார். யூனியன் லீடர் சொல்லுக்கு தலைச் சாய்கிறார். மன்னுனும் தன் தவறுகளை இடிந்துரைக்கும் அமைச்சனின் சொல்லை கேட்க வேண்டும், கேட்கவில்லை என்றால் எதிரியே தேவையில்லை அவன் தானாகவே கெடுவான் என்று வள்ளுவன் கூறுகிறார்.

ஆதலால் உங்களின் பணி நிலையும், நீங்கள் பணி புரியும் அதிகாரியின் குணத்தையும் பொறுத்து அவர் சொல்லுக்கு மறுமொழி இடலாம். அவர் தன் தவறை உணராதவர் என்று உணர்ந்தால் அமைதியாக இருப்பது நமக்கு சிறந்தது என்றும், கடிந்துரைக்கும் நண்பர்களின் சொல் கேட்டு நடப்பது மன்னனுக்கு (அனைத்து அதிகாரிக்கும்) நல்லது என்றும் தமிழ் கூறுகிறது. உங்களின் கீழ் உள்ளவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்றும், மேல் உள்ளவர்களிடம் எப்படி நடப்பது சிறந்தது என்றும் தமிழ் கூறுகிறது.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக