புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !


   
   

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 6:08 pm

First topic message reminder :

தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது  ஒழுக்கம், வீரம், காதல்  ஆகிய மூன்றும்  தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம்  நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.

சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக  18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.

வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.

இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும்,  எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.

தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.  

ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.  

இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.

உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.

                 
அன்புடன்......



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 14, 2011 3:49 pm

பாடல் 5 ;எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(
இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

'
எச்சிலார், தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும்

திட்பத்தால் தீண்டாப் பொருள்.

பொருள் விளக்கம்:

பசு, பார்ப்பனன், நெருப்பு, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை ஒருவன் எச்சிலுடன் இருக்கும் போது தீண்டக்கூடாதவை ஆகும்.

பாடல் 6 எச்சிலுடன் காணக் கூடாதவை
(
இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

எச்சிலார், நோக்கார் - புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென
,
நன்கு அறிவார், நாளும், விரைந்து.


பொருள் விளக்கம்:

நன்கு விஷயம் அறிந்தவர்கள் ஒரு நாளும் எச்சிலுடன் இருக்கும் போது புலையன், நிலா, சூரியன், நாய், எரி நட்சத்திரம் ஆகியவற்றை பார்க்க மாட்டார்கள்.

பாடல் 7 எச்சில்கள்
(
இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-

விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு


பொருள் விளக்கம்:

எச்சில்கள் நான்கு வகைப்படும், அவை மலம், ஜலம் என்று உடலில் இருந்து வரும் கழிவுகளால் ஏற்படுபவை இரண்டு, உடலுறவால், வாயால் ஏற்படுபவை இரண்டு ஆக மொத்தம் நான்கு ஆகும்.


பாடல் 8 எச்சிலுடன் செய்யக் கூடாதவை
(
இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே, - எஞ் ஞான்றும்

மேதைகள் ஆகுறுவார்.

பொருள் விளக்கம்:

நான்கு வகை எச்சிலில் ஒருவகை இருப்பினும் நன்கு விஷயம் தெரிந்த மேதைகள் எப்போதும் எச்சிலை விலக்காமல் புத்தகம் படிக்கமாட்டார், யாருடம் பேச மாட்டார், தூங்க மாட்டார்.

பாடல் 9 காலையில் கடவுளை வணங்குக!
(
இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி.


பொருள் விளக்கம்:

காலையில் விழித்தவுடன், குச்சியால் பல் துலக்கி, கண் துடைத்து,குளித்து இறைவனை நின்று தொழுது எழுக, மாலையில் நின்று தொழுவது தவறு, அமர்ந்து இறைவனை வணங்குக.

பாடல் 10 : நீராட வேண்டிய சமயங்கள்
(
பஃறொடை வெண்பா)

தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது
,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்

மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்


பொருள் விளக்கம்:

இறைவனை வணங்கும் முன்னரும், கெட்ட கனவு கண்ட பிறகும், தூய்மை குன்றிய காலத்திலும், உண்ட உணவை வாந்தி எடுத்தாலும், முடி வெட்டிய பிறகும், உணவு உண்ணும் முன்னர், காலையில் எழுந்த பிறகும், உடலுறவுக்குப் பிறகும், கீழ் மக்களை தீண்டிய பிறகும், மல ஜலம் கழித்த பிறகும் ஆகிய பத்து விஷயங்களில் நாம் சந்தேகம் கொள்ளாமல் குளிக்க வேண்டும்.



தொடரும்.......




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 14, 2011 4:13 pm

ஐயா இந்த ஐந்து பாடல்களிலேயே பல தெரியாத விஷயங்களை கற்றுக் கொண்டேன்.....அப்படியென்றால் ஆசாரக் கோவை முழுவதும் எத்தனை விஷயங்கள் உள்ளது என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை........

மிக அருமை.........நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 14, 2011 4:17 pm

இத்தனை விஷயங்கள் உள்ளது ராமன், தொடர்ந்து வாசியுங்கள். என்னால் இயன்ற வரை முழுவதையும் பதிக்க முயல்கிறேன்.



1. ஆசார வித்து

2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்

3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்

4. முந்தையோர் கண்ட நெறி

5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை

6. எச்சிலுடன் காணக் கூடாதவை

7. எச்சில்கள்

8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை

9. காலையில் கடவுளை வணங்குக

10. நீராட வேண்டிய சமயங்கள்

11. பழைமையோர் கண்ட முறைமை

12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை

13. செய்யத் தகாதவை

14. நீராடும் முறை

15. உடலைப்போல் போற்றத் தக்கவை

16. யாவரும் கூறிய நெறி

17. நல்லறிவாளர் செயல்

18. உணவு உண்ணும் முறைமை

19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை

20. உண்ணும் விதம்

21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது

22. பிற திசையும் நல்ல

23. உண்ணக்கூடாத முறைகள்

24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை

25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை

26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை

27. உண்டபின் செய்ய வேண்டியவை

28. நீர் குடிக்கும் முறை

29. மாலையில் செய்யக் கூடியவை

30. உறங்கும் முறை

31. இடையில் செல்லாமை முதலியன

32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்

33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை

34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை

35. வாய் அலம்பாத இடங்கள்

36. ஒழுக்க மற்றவை

37. நரகத்துக்குச் செலுத்துவன

38. எண்ணக்கூடாதவை

39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க

40. சான்றோர் இயல்பு

41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்

42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்

43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்

44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை

45. பந்தலில் வைக்கத் தகாதவை

46. வீட்டைப் பேணும் முறைமை

47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்

48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்

49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்

50. கேள்வியுடையவர் செயல்

51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை

52. தளராத உள்ளத்தவர் செயல்

53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை

54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு

55. அறிஞர் விரும்பாத இடங்கள்

56. தவிர்வன சில

57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை

58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை

59. சில தீய ஒழுக்கங்கள்

60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை

61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு

62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்

63. கற்றவர் கண்ட நெறி

64, வாழக்கடவர் எனப்படுவர்

65. தனித்திருக்கக் கூடாதவர்

66. மன்னருடன் பழகும் முறை

67. குற்றம் ஆவன

68. நல்ல நெறி

69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன

70. மன்னன் முன் செய்யத் தகாதவை

71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை

72. வணங்கக்கூடாத இடங்கள்

73. மன்னர் முன் செய்யத் தகாதவை

74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை

75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை

76. சொல்லும் முறைமை

77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு

78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை

79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்

80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை

81. ஆன்றோர் செய்யாதவை

82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்

83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை

84. பழகியவை என இகழத் தகாதவை

85. செல்வம் கெடும் வழி

86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது

87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை

88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்

89. கிடைக்காதவற்றை விரும்பாமை

90. தலையில் சூடிய மோத்தல்

91. பழியாவன

92. அந்தணரின் சொல்லைக் கேட்க

93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை

94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை

95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை

96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்

97, சான்றோர் முன் சொல்லும் முறை

98. புகக் கூடாத இடங்கள்

99. அறிவினர் செய்யாதவை

100. ஒழுக்கத்தினின்று விலகியவர்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Nov 14, 2011 4:24 pm

இந்தக் கட்டுரை மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Nov 14, 2011 4:33 pm

இந்தக் கட்டுரை மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 14, 2011 4:44 pm

முத்தான நூறு........ மிக்க நன்றிகள் ஐயா..........ஒவ்வொன்றையும் அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன்........ [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 14, 2011 5:25 pm

நன்றி மகாபிரபு
நன்றி கிச்சா
நன்றி சாந்தி
நன்றி ராமன்
நன்றி நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 14, 2011 6:08 pm

பாடல் 11: பழைமையோர் கண்ட முறைமை
(இன்னிசை வெண்பா)


உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; - என்பதே
முந்தையோர் கண்ட முறை


பொருள் விளக்கம்


உடலில் ஒரு துணியும் இல்லாமல் நீராடக்கூடாது, இது தண்ணீரை (நதி தேவதையை) அவமதிக்கும் செயல் ஆகும். ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு அருந்தக்கூடாது. உடுத்த ஆடையை நீருக்குள் வைத்து பிழியக்கூடாது. நல்ல பண்பு உடையவர் ஒரே ஒரு உடை உடுத்து பல்லோர் இருக்கும் சபைக்கு செல்ல மாட்டார்கள். இவையே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.

பாடல் 12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து


பொருள் விளக்கம்


தலையில் தடவிய எண்ணையை எடுத்து உடலில் தடவக்கூடாது. பிறர் உடுத்திய உடையை உடுத்தக்கூடாது. அடுத்தவர் அணிந்த செருப்பு அணியக்கூடாது, பிறரிடம் இருந்து இரந்து எதையும் பெறக்கூடாது.

பாடல் 13 :செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)


நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை


பொருள் விளக்கம்


நீருள் மூழ்கி குளிக்கும் போது தன் நிழலை பார்க்கக்கூடாது, நிலத்தை காலால் கீறக்கூடாது, இரவில் எந்த மரத்தின் கீழும் தூங்கக்கூடாது, நோய்யால் துன்பப்பட்டாலும் தண்ணீரில் கை வைக்காமல் (தூய்மை செய்யாமல்) எண்ணையை தொடக் கூடாது. எண்ணையை தொட்டு தடவிய பிறகு குடிநீரை தொடக்கூடாது. புலையரைப் பார்க்கக்கூடாது. இவையே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.

பி . கு : இரவில் மரங்கள் சுவாசிக்கும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் எடுத்து கரிமல வாயுவை வெளியிடும். இது தூங்குபவரை மூச்சு முட்டச் செய்யும். இதை புரியாதவர்கள் பேய் அமுக்குகிறது என்று கூறுவார்கள். இதனால் தான் இரவில் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Nov 15, 2011 4:02 pm

பாடல் 14 : நீராடும் முறை
(
இன்னிசை வெண்பா)

நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,-
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்
;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே
,
ஆய்ந்த அறிவினவர்.


பொருள் விளக்கம்

புனித நதிகளில் நீராடும் போது, ஆய்ந்த அறிவுடைய நல்ல நெறியில் உள்ளவர்கள் ஒருநாளும் நீந்த மாட்டார்கள், , நீரை குடைந்து சேறாக்காமாட்டார்கள், அதில் விளையாட மாட்டார்கள். அதே போல் அந்த நீரில் எச்சில் உமிய மாட்டார்கள், தலையில் எண்ணை இல்லாமல் தலை காய்ந்து இருந்தாலும் தலை மூழ்காமல் உடல் மட்டும் நனையுமாறு குளிக்கமாட்டார்கள்.

பாடல் 15: உடலைப் போல் போற்றத் தக்கவை
(
இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு,
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்

ஐம் பூதம் அன்றே கெடும்.


பொருள் விளக்கம்

நிலம் , நெருப்பு, காற்று, ஆகாயம், நீர் ஆகிய ஐந்து பூதங்களையும், அந்தணனையும், பசு, நிலா, சூரியன் ஆகியவற்றையும் தன் உடம்பு போல் என்னாது இகழ்ந்திருந்தால், நம் உடம்பில் உள்ள பஞ்ச பூதங்களின் தெய்வங்கள் விலகி துன்பத்தை கொடுக்கும்.

பாடல் 16:யாவரும் கூறிய நெறி
(
சவலை வெண்பா)

'
அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்

தேவரைப் போலத் தொழுது எழுக!' என்பதே-
யாவரும் கண்ட நெறி.


பொருள் விளக்கம்

அரசன் , பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர், தாய், தந்தை, நமக்கு நிகரில்லாத நம்மை விட வயதில், திறமையில், குணத்தில் மூத்தவரை தெய்வம் போல் தொழுது எழுக. இதுவே சிறந்த நெறி என்று அனைவரும் உரைத்தனர்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 16, 2011 8:25 am

தலையில் தடவிய எண்ணையை எடுத்து உடலில் தடவக்கூடாது. பிறர் உடுத்திய உடையை
உடுத்தக்கூடாது. அடுத்தவர் அணிந்த செருப்பு அணியக்கூடாது, பிறரிடம் இருந்து
இரந்து எதையும் பெறக்கூடாது


நான் தலையில் என்னை தடவி கையில் எஞ்சிய எண்ணையை காலில் தடவிக் கொள்வேன்......இன்று தான் இது தவறு என்று ஆசாரக் கோவை மூலம் தெரிந்து கொண்டேன் ஐயா......மிக்க நன்றிகள் ஐயா....... [You must be registered and logged in to see this image.] யென் இந்த கட்டுப்பாடு என்று கூறுங்கள் ஐயா ..



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக