புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
62 Posts - 39%
heezulia
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
10 Posts - 6%
prajai
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
4 Posts - 3%
mruthun
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
21 Posts - 5%
prajai
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
7 Posts - 2%
mruthun
ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10ரஞ்சன்குடி கோட்டை! Poll_m10ரஞ்சன்குடி கோட்டை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சன்குடி கோட்டை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 3:19 pm

வரலாற்றின் நினைவாய் வீட்டில் இருந்த ஓவியம் ஒன்று உருக்குலைந்து போனது போன்று இருக்கிறது ரஞ்சன்குடி கோட்டை. இந்த ஊரை "நஞ்சன்குடி' என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் (என்ஹெச்-45) அமைந்துள்ளது. பெரம்பலூரிலிருந்து 17 கி.மீ. வடக்காகவும், இராமநத்தத்திலிருந்து (தொழுதூர்) 8 கி.மீ. தெற்காகவும் உள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தாராக இருந்த ஒருவரால் கட்டப்பட்டது.

மிக அழகாக வெட்டப்பட்ட கற்களைக் கொண்டு இதன் சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன. இக்கோட்டையின் மதில் சுவர்கள் மூன்று அடுக்குகள் கொண்டவையாக வெவ்வேறு உயரத்தில் உள்ளன. மேலிருந்து பார்க்கும்போது இக்கோட்டை அரைக்கோள வடிவத்தில் இருக்கும். கோட்டை வெளிப்புறத்தில் மதில் சுவர்களை ஒட்டி அகழி இருக்கிறது. அகழிக்குத் தேவையான தண்ணீர் அருகில் உள்ள நீரோடையிலிருந்து கொண்டுவரப்படுகிறது. அகழி நிறைந்த பின்னர் நீர் வெளியேறி ஒரு சிறிய நீர்பிடிப்பு ஒன்றில் சேகரமாகிறது.

இவ்வகழியில் பாதுகாப்பு கருதி முன்னர் முதலைகள் விடப்பட்டிருக்க வேண்டும். இக்கோட்டையின் உள்ளே இரண்டு மசூதிகள் இருக்கின்றன. மேலே ஒன்றும், கீழே ஒன்றுமாக உள்ளன. இதில் கீழே உள்ள மசூதியில் இப்போதும் வழிபாடு நடந்து வருகிறது. ரஞ்சன்குடி கோட்டை கட்டடக் கலையில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றால் "பேட்டை' என்று குறிப்பிடப்படும் இடம் முன்பு போர்புரிந்த இடமாக இருக்க வேண்டும்.

1751-ல் நடைபெற்ற வாலிகண்டபுரம் போரில், இந்தக் கோட்டை ஒரு முதன்மையானப் பங்கு பெறுகின்றது. ஆங்கிலேயர்களுக்கும், பிரான்ஸ் நாட்டவர்களுக்கும் தொடர்ந்து நடைபெற்ற போரில் இக்கோட்டையைக் கைப்பற்றுவதுதான் வெற்றியைத் தீர்மானிக்கின்ற ஒன்றாக இருந்துள்ளது. ஆரம்பப்போரில் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும், பின்னர் ஆங்கிலேயர்களே வென்றனர்.

உச்சிமேல் இருக்கும் பகுதி "கோட்டை மேடு' என்று அழைக்கப்படுகிறது. தூரத்தில் இருந்து வரும் எதிரியைக் கவனிக்கவும், பீரங்கி போன்ற ஆயுதம் கொண்டு குறி பார்க்கவும் சுவர்களில் துளைகள் இடப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், சுவரின் துளைகள் வழியாக தம்மை குறிவைப்பது எதிரிக்குத் தெரியாது.

இதைவிட எல்லாவற்றிலும் சிறப்பு, உச்சியில் சிறிய குளம் உள்ளதுதான். இந்தக் குளத்து நீர், நவாபுகளுக்குக் குடிக்கவோ, குளிக்கவோ பயன்பட்டிருக்க வேண்டும். இக்கோட்டைக்குள் குடியிருப்பு மண்டபங்கள், போர்க்கருவிகள் சேமிக்கும் இடங்கள், குதிரை கொட்டடிகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

ஆண்களையும், பெண்களையும் இறக்கும் வரை சிறைவைக்கும் சிறைகள் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்வேறு சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன.

திருச்சிராப்பள்ளி அருகில் இருப்பதால், அதற்கு தேவையான படைக்கலன்கள் இங்கிருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்றும், இக்கோட்டை வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் ஓர் இடமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இப்போது கோட்டைக்கு அருகே மக்கள் குடியிருக்கும்

கிராமம் அமைந்துள்ளது. இக்கோட்டையைச் சுற்றி பசுமை போர்த்திய வயல்வெளிகள் காணப்படுகின்றன. இக்கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இருக்கும் நினைவுச் சின்னங்களில் இந்த நிறுவனத்தால் மிக மோசமாகப் பராமரிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இதுதான் இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த இடத்தைப் பற்றி சிறுகுறிப்புகூட இங்கே இல்லை. தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் பலகைகூட சேதமடைந்து போய் உள்ளது.

அண்மையில்தான் முன்னாள் முதல்வர் கதை வசனத்தில் உருவான "பொன்னர் சங்கர்' என்ற திரைப்படத்துக்கான அரங்க வேலைகள் அவரின் ஆலோசனைப்படி நடைபெற்றதாகச் சொல்லப்பட்டது. இது முடிந்த பின்னராவது இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்று இப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இதுவரை எதுவும் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மிக அருகில் உள்ளதால் தலைச்சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்க வாய்ப்புள்ளது. இது ஒரு வேலூர், திருமயம் கோட்டைகள் போன்று விளக்கம் பெற வேண்டிய ஒன்று. பெரம்பலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சிதிலம் அடைந்து வருவது வருந்தத்தக்க ஒன்று.

இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், சுற்றுலாக் கழகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் அந்தக் கிராம மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதே மக்களின் கோபமாகவும், குரலாகவும் உள்ளது. வேலூருக்கு ஒரு கோட்டை போன்றும், திருச்சிராப்பள்ளிக்கு ஒரு மலைக்கோட்டை போன்றும் பெரம்பலூருக்கு இந்த ரஞ்சன்குடி கோட்டை சிறப்பு சேர்க்கக் கூடிய ஒன்று.

நீதிசெங்கோட்டையன்



ரஞ்சன்குடி கோட்டை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Nov 11, 2011 4:47 pm

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக