புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
102 Posts - 74%
heezulia
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
267 Posts - 76%
heezulia
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_m10இந்து ஓடிப்போயிட்டா...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து ஓடிப்போயிட்டா...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 09, 2011 11:37 am

தலையில் போட்ட துண்டை எடுக்காமலே வீட்டுக்குள் நுழைந்தார் பரமசிவம்.

அவர் மனைவி செல்லம்மாள் துயரத்தோடு வந்து அவர் முன்னால் வந்து நின்றாள். ``இப்ப என்னங்க பண்றது..'' கண்கள் பனிக்க செல்லம்மாள் கேட்டாள்.

``என்ன பண்ணுறது உன் மவ பண்ணின காரியத்துக்கு, நாம ரெண்டு பேரும் தூக்குப்போட்டு சாக வேண்டியது தான்...'' வேதனையோடு கூறினார் பரமசிவம்.

அதற்கு பதிலொன்றும் சொல்லாமல் மவுனமாக செல்லம்மாள் நின்றாள். மிகுந்த மன வருத்தத்திலும் மானம் மரியாதை போய் விட்டதே, என்ற கோபத்திலும் அவர் இருக்கிறார் என்பது செல்லம்மாளுக்கு புரிந்தது.

``சாமான் தட்டு முட்டையெல்லாம் மூட்டைகட்டி வை. வேன் வரும். எல்லாத்தையும் ஏத்திக் கிட்டு நம்ம கிராமத்துக்கு போய் விடுவோம்'' பரமசிவம் சோகமாக சொல்ல, பதிலேதும் சொல்லாமல் நகர்ந்தாள்.

இந்து இப்படிச் செய்வாள் என்று அவர்கள் நினைக்கவே இல்லை. ஒரே பெண். செல்லமாக வளர்த்தார்கள். நிறைய சுதந்திரமும் கொடுத்தார்கள் அதன் விளைவு...? அவளே இரண்டு வரியில் ஒரு துண்டு தாளில் `நான் வாழ வேண்டிய இடத்துக்கு போகிறேன். என்னைத் தேட வேண்டாம்'என்று எழுதி வைத்து விட்டு போய் விட்டாள். மாற்றிக்கொள்ள இரண்டு, மூன்று துணியை மட்டும் எடுத்து சென்றிருக்கிறாள் அவளுக்குரிய நகைகள் எதுவும் எடுக்கவில்லை. மாப்பிள்ளை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது இப்படி பண்ணி விட்டாள்.

மாப்பிள்ளை வீட்டார் இரண்டு நாளில் பெண் பார்க்க வருவதாக வேறு சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது...? எப்படி அவர்களை சமாளிப்பது..? பரமசிவம் குழம்பிப் போய் விட்டார்.

செல்லம்மாள் மெதுவாக அவர் பக்கத்தில் வந்து நின்று கொண்டு, ``ஆத்திரப்பட்டு என்ன ஆகப்போகிறது...

பேசாமல் தலை முழுகிட்டு. நம்ம கிராமத்துக்கே போயிடுவோம்...'' என்றாள்.

பேசாதே... எல்லாம் நீ அவளுக்கு கொடுத்த செல்லம். ``வயசுப் பெண்ணை கண்காணிச்சு கண்டிச்சு வளக்காம, இஷ்டத்துக்கு விடப் போய் நம்மை கொல்லாம கொன்னுட்டு போயிட்டா. நம்மை விட எவனோ ஒருத்தன் அவளுக்கு பெருசா தெரிஞ்சு நம்மை கேவலபடுத்தி தலை குனிய வைத்த அவ.. அவனோடு வாழவா போறா...'' பரமசிவம் புலம்பினார்.

``எதுக்கு இப்படி திட்டி சாபம் விடுறீங்க..? ஊர் உலகத்தில நடக்காததா.. ஏன்? நாமும் அப்படி வந்தவங்க தானே... நாமளும் பெத்தவங்க சம்மதத்தோடவா கல்யாணம் பண்ணிக் கிட்டோம்..? நம்மப் போல இப்ப நம்ம பிள்ளையும் பண்ணிட்டா...''

செல்லம்மாள் குத்தி காட்டி சொல்ல...

பரமசிவம் ``பளார்..'' என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

நிலைகுலைந்து போன செல்லம்மாள், ஊமையாய் கண்ணீர் விட்டபடி நகர்ந்தாள். ஐம்பத்திரண்டு வருடம் இல்லாத வாழ்க்கையில் இன்று தான் முதல் முதலாய் அவர் கையால் அறை பட்டிருக்கிறாள் அவருடைய பரிவும் பாசமும் அவளுக்குத் தெரியும். ஒரு சின்ன தலைவலி என்றால் கூட துடித்துப் போவார். செல்லம்மாளை செல்லமாகவே வைத்திருந்தார். இன்று இந்துவால் அவருடைய ஆத்திரத்துக்கு ஆளாகி விட்டாள். மகளால் ஏற்பட்ட விபரீதத்தை நினைத்து விம்மினாள்.

இரவு ஒன்பது மணி அளவில் வேன் வந்தது. வேனில் வந்த இரண்டு பேர் சாமான்களை ஏற்றினார்கள். இரவோடு இரவாக வீட்டை காலி பண்ணி விட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு, அக்கம்பக்கம் யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் பரமசிவம் செல்லம்மாளோடு கிராமத்துக்கு கிளம்பினார்.

முன் கூட்டியே கிராமத்திலிருக்கும் தன் வீட்டை தன் உறவுக்கார மாடசாமிக்கு தகவல் சொல்லி சுத்தப்படுத்தி வைக்கும்படி கேட்டிருந்தார் பரமசிவம்.

அதிகாலையில் வேன் கிராமத்திற்குள் நுழைந்தது. மாடசாமி அவர்களை எதிர் பார்த்து, மின் விளக்கை போட்டுக் கொண்டு ``வாங்க சித்தப்பா... வாங்க சித்தி...'' என்று வரவேற்றான்.

ஆமாப்பா... நீ நல்லா இருக்கியா..? என்று சோர்வுடன் கேட்டவர், திண்ணையில் அமர்ந்து கொண்டு ``மாடசாமி... கூடமாட அந்த சாமான்களை இறக்கி வீட்டுக்குள் வை..'' கூற, மாடசாமி சுறுசுறுப்பானான்.

வாடகையை கொடுத்து வேனை அனுப்பி விட்டு பரமசிவம் சிந்தனையில் மூழ்கினார்.

விடிந்ததும் நாம் இருபது ஆண்டுக்கு பின் ஊருக்கு வந்த விஷயம் தெரியப்போகிறது. ஆளாளுக்கு வந்து விசாரிப்பார்கள். அவர்களுக்கு இந்து பற்றிய விஷயம் தெரியாமல் இருக்க என்ன சொல்வது... ம் ஏதாவது சொல்லி மழுப்ப வேண்டியதுதான்..... பெருமூச்சுடன் எழுந்து வீட்டுக்குள் சென்றார்.

செல்லம்மாள் சாமான்களை எடுத்து ஆங்காங்கே வைத்துக் கொண்டிருந்தாள்.

எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்து விட்டு வந்த மாடசாமி... ``சித்தப்பா ஒண்ணே ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன்..'' என்று இழுத்தான்.எங்கே இந்துவை பற்றி கேட்டு விடுவானோ' என்று பதறியவர். ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார். ``இந்தா இதை காப்பி செலவுக்கு வச்சிக்கோ!

``வேண்டாம் சித்தப்பா என்றவன்'' ஏன் சித்தப்பா இந்துவை முன் கூட்டியே இங்கே அனுப்பி வச்சீங்க.. அது பாட்டுக்கு வயக்காடெல்லாம் சுத்திக்கிட்டே இருக்கு சொன்னா கேட்க மாட்டேங்குது..! என்று கூறி விட்டு சிரித்தான்.

``என்னடா சொல்லுற... பரமசிவம் திடுக்கிட்டு பதட்டத்துடன் கேட்டார். செல்லம்மாளும் அதை கேட்டு திகைப்புடன் ``என்னப்பா சொல்றே? என் மகள் இங்கேயா இருக்கிறாள்?''

``ஆமா... தாத்தா வீட்டிலேதான் இருக்கிறா. தெரியாதா..'' வெகுளித்தனமாய் மாடசாமி கூற, பரமசிவமும், செல்லம்மாளும் ஒருரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். `எப்படி அவள் இங்கே வந்தாள்..? தனியாகவா..? அல்லது அவள் விரும்பிய பையனோடு வந்திருப்பாளோ... தெரிஞ்சாகணுமே. யாரிடம் கேட்பது...' பரமசிவம் தவித்தார் ``என்னன்னு நான் போய் பார்த்துட்டு வர்றேன்..'' செல்லம்மாள் அவசரப்பட்டாள். "நில்லு.. நானும் வருகிறேன்.. எவனையோ கூட்டிக்கிட்டு ஓடி வந்தவளை வீட்டுக்குள்ளே கூட்டி வச்சிருக்காங்களே உன் அப்பாவும், அம்மாவும்.. அவங்களை என்ன பண்ணுறேன் பாரு...'' கோபத்தோடு எழுந்தார் பரமசிவம்.

``ஒண்ணும் பண்ண முடியாது மாப்பிள்ளே..'' கனத்த குரல் ஒன்று வாசலில் கேட்க... பரமசிவம் திரும்பி பார்த்தார்.

முற்றத்தில் செல்லம்மாளின் அப்பா முத்துசாமி நின்று கொண்டிருந்தார். அவரோடு செல்லம்மாளின் அம்மாவும் வந்திருந்தாள்.

``ஏய்யா.. அந்த காலத்தில உம்ம மகளை நான் கூட்டிக்கிட்டு ஓடி விட்டதை மனசில் வச்சிக்கிட்டு, இப்போ என் மகளை வச்சு பழி வாங்குகிறீராக்கும்...?'' பரமசிவம் ஆவேசமாக கேட்க..

``பொறுங்க மாப்பிள்ளே. என்றைக்கு என் பேத்தி இந்து பிறந்தாளோ அன்றே அதை மறந்து விட்டேன். இந்துவுக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து இன்றுவரை நாங்கள் அவளை சந்தித்து, உங்களுக்கு தெரியாமல் பார்த்து வருகிறோம். ஒரு வீம்புக்காக உங்களையும் செல்லம்மாளையும் பார்த்து பேசல. சந்திக்கல. ஏன்னா உங்களால் ஏற்பட்ட அவமானம் இன்னும் தீரல. இருந்தாலும் எங்கபேத்தியை வச்சு சமாதானம் அடைகிறோம்... முத்துசாமி நிறுத்தினார்.

பரமசிவம் தலை குனிந்தார். செல்லம்மாளும் தாய், தந்தையை பார்த்து கண் கலங்கினாள்.

இந்த சமயத்தை எதிர்பார்த்து இந்து ஓடிவந்தாள். "அப்பா, அம்மா... என்னை மன்னிச்சிடுங்க. நான் நீங்க நினைக்கிற மாதிரி யாரோடும் ஓடி வரல. தாத்தாவோடு தான் வந்தேன். முத்துசாமி பேத்தி, அந்த மாதிரி பெற்றோர்களை அவமானப்படுத்தும் காரியத்தை ஒருபோதும் செய்ய மாட்டாள். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஆசீர்வாதத்தோடு தான் என் கல்யாணம் நடக்கும்.. நடக்கணும் சரியா? பிரிஞ்சிருந்த உங்களை ஒன்று சேர்க்கத்தான் இப்படி ஒரு நாடகம் நடத்தினேன். தப்புன்னா என்னை மன்னிச்சிருங்க...''

"சேச்சே...25 வருஷமா பிரிஞ்சிருந்த எங்க குடும்பத்தை ஒண்ணு சேர்த்த பேத்தி நீ செஞ்சது எப்படிம்மா தப்பாகும்?'' தாத்தா முத்துசாமி சொல்ல... அந்த நிமிடத்தில் பிரிந்து போன உறவுகள் இணைந்த சந்தோஷம் தெரிந்தது.

- ஸ்டீபன் துரைராஜ்



இந்து ஓடிப்போயிட்டா...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக