புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
66 Posts - 76%
heezulia
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
230 Posts - 76%
heezulia
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
8 Posts - 3%
prajai
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
2 Posts - 1%
Barushree
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_m10பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 1:56 pm

பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Tamil_News_large_345125

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால், நேற்று பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 15 நாட்களாக பெய்து வரும் மழையில், நேற்று அதிகாலை 3 முதல், 6 மணி வரை மிக அதிகமாக மழை பதிவானது.நேற்று காலை 6.30 மணிக்கு, கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த, "எம்.பி.,' என்ற தனியார் பஸ், சாவடிப்பாளையம் அருகே வந்த போது, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. 60க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக இறங்கி, வெள்ளம் இல்லாத பகுதிக்கு வந்தனர். பின், பஸ் மெதுவாக நகர்த்தப்பட்டு, ஈரோடு சென்றது. காலை 8 மணி வரை கார், வேன், டூவீலர்கள் அவ்வழியே அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே நிரம்பியுள்ள கோபி, குண்டேரிப்பள்ளம் அணைக்கு, நேற்று காலை அதிகளவு நீர் வந்ததால், 3,000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேறியது. பவானியில், 60 ஏக்கர் பரப்பளவுள்ள காடையம்பட்டி ஏரி, நேற்று நிரம்பி வழிந்தது.

சாத்தனூர் அணை நிரம்பியது: கர்நாடக மாநிலம் நந்திதுர்கா மலைப்பகுதியில் உருவாகும் தென்பெண்ணையின் குறுக்கே, தமிழக எல்லையான கிருஷ்ணகிரியில் கே.ஆர்.பி., அணை உள்ளது. இது கடந்த மாதம் நிரம்பியதால், அங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் முழுவதும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள சாத்தனூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.மொத்தம் 118 அடி உயரமுள்ள அணையின் தற்போதைய நீர்மட்டம் 104.5 அடியாக உயர்ந்துள்ளது.

வீடுகள் இடிந்தன: கோவை, மேட்டுப்பாளையத்தில் கடந்த 15 நாட்களாக பெய்த கன மழையால், 14 வீடுகள் இடிந்தன; இடி தாக்கி ஒரு வீடு சேதமடைந்தது.சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 6 வீடுகளும், தேக்கம்பட்டியில் 5, காரமடை நகரில் 2, சிறுமுகையில் ஒரு வீடு என மொத்தம் 14 வீடுகள் சேதமடைந்தன. சூலூரில் 2 வீடுகள் இடிந்தன. அன்னூரில் 2 வீடுகள் இடிந்தன.

பள்ளி சிறுவன் சாவு:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை நொச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் அருண், 8; அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம், நொச்சிமேடு ஆற்றில் அருண் குளிக்கச் சென்றபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். இந்நிலையில் நேற்று காலை, நொச்சிமேடு அருகே சிறுவன் உடல் ஆற்றில் மிதந்தது. உடலை, போலீசார் மீட்டனர். திருவெண்ணெய்நல்லூரில் மூன்று வயது சிறுமி, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

கோவையிலும் வெள்ளம்: கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. பலத்த இடி, மின்னல், காற்றுடன் பெய்த பெருமழை, அதிகாலை 3 மணி வரை, இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. கோவை மாவட்ட மக்கள் பலர், இதற்கு முன் பார்த்திராத, கேட்டிராத வகையில் மழையின் வேகம் இருந்தது.சூலூர் அருகே பள்ளப்பாளையத்தில் கனமழை காரணமாக, 5 வீடுகள் இடிந்து விழுந்தன. சிங்காநல்லூர், சுங்கம், சோபா நகர், ராமநாதபுரம் நேதாஜி நகர், குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய், மேட்டுப்பாளையம் ரோடு சேர்மன் நகர், நஞ்சுண்டாபுரம் பார்சன் அபார்ட்மென்ட் உள்ளிட்ட குடியிருப்புகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உணவு, தங்கும் வசதிகளை, வருவாய்த்துறையினர் செய்திருந்தனர். அமைச்சர் வேலுமணி, கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் இணைந்து, நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

கோவை மாநகரில், அவினாசி ரோடு மேம்பாலம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழை நீர் காரணமாக, நேற்று பகல் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூரில் கன மழை: அருவிகளில் வெள்ளம் : குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்க்கும் மழைக்கு, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் உள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாளாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, விடிய, விடிய பெய்தது. குன்னூரில் 75.6 மி.மீ., பர்லியாரில் 67, கேத்தி 16, ஹில்குரோவ் பகுதியில் 95 மி.மீ., மழை பதிவானது. நகரின் மையத்தில் ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையின் இடையே உள்ள லாஸ் நீர்வீழ்ச்சி உட்பட ஆங்காங்கே தென்படும் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது.ஹில்குரோவ் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, ரயில் தண்டவாளத்தின் மீது மண், சேறு, சகதி குவிந்தது. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு குன்னூர் நோக்கி வந்த மலை ரயில் ஹில்குரோவ் பகுதியில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின், ரயில் குன்னூர் நோக்கி வந்தது.பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள ஆற்றின் ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன; ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதற்கான வாய்ப்புள்ளது.

வினாடிக்கு 4,000 கன அடி நீர்வரத்து:வைகையில் 3ம் வெள்ள எச்சரிக்கை: பாதுகாப்பு கருதி அணையில் நீர் திறப்பு வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.தொடர் மழையால் தேனி மாவட்டம், வைகை அணைக்கு போடி கொட்டக்குடி, தேனி முல்லை, வருஷநாடு ஆறுகளில் இருந்து, தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் நேற்று, 69 அடியானது. (மொத்த உயரம் 71 அடி). நீர்வரத்து வினாடிக்கு, 4,000 கன அடியாக இருந்தது.இதையடுத்து, பொதுப்பணித் துறை சார்பில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு, 3ம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு, 3,037 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு:

கலெக்டர் பழனிசாமி கூறியதாவது:
அணையில் இருந்து கூடுதலான நீர் திறக்கப்படலாம் என்பதால், கரைப் பகுதியில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுப்பணி, உள்ளாட்சி, வருவாய், போலீஸ் துறை இணைந்து கரையோரப் பகுதி மக்களுக்கு, வெள்ள பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

வைகை வெள்ளத்தில்தரைப்பாலங்கள் மூழ்கின : வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், மதுரையில் தரைப்பாலங்கள் மூழ்கின.வைகை அணையில் இருந்து 3,037 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை மதுரையில் தரைப்பாலங்கள் மூழ்கியதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அதிகாரி செழியன் தலைமையில் வீரர்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டனர். கரைகளில் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆற்றில் சிக்கிய மூன்று குதிரைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்வரத்து 5,882 கன அடி. அணை நீர்மட்டம் 69 அடி (மொத்த கொள்ளளவு 71 அடி).பெரியாறு அணை நீர்மட்டம் 131.20 அடி, நீர்வரத்து 2,606 கன அடி, நீர் வெளியேற்றம் 790 கன அடி.

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:""தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,'' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை, கடந்த மாதம் 24ம் தேதி துவங்கி, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களில் கொட்டியது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில நாட்கள் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், சாலைகள், தாழ்வான பகுதிகள் வெள்ளக் காடாகின. மழைவிட்டு இரண்டு நாட்களாகியும், சென்னை புறநகர் பகுதியில் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பருவமழை பெய்து வருகிறது. சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதிகபட்சமாக, கொள்ளிடம், பொள்ளாச்சியில், 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல இடங்களில் கனமழையும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி மேலும் கூறும்போது, "இந்த சீசனில் முதல் கட்டமாக, கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழையை விட, 29 சதவீதமும், சென்னை மண்டலத்தில் (நூறு கிலோ மீட்டர்)கிடைக்க வேண்டிய மழையை விட, 22 சதவீதமும் கூடுதலாக மழை பெய்துள்ளது' என்றார்.

தினமலர்



பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 1:57 pm

மரண பயத்தில் தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்கள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகளின் போது, தற்காலிக வீடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு, இதுவரை நிரந்தர வீடுகள் கிடைக்கவில்லை; தற்போது அந்த குடியிருப்புகளும் பழுதடைந்து இடியும் அபாயத்தில் உள்ளதால் மக்களிடையே "மரணபயம்' ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை பெய்த கனமழையால், 51 பேர் பலியாயினர்; லவ்டேல் சந்திப்பு, தலையாட்டுமந்து பகுதிகளில் 60 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. தவிர, 1,900 வீடுகள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் 50 தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டன. நீலகிரியில் வீடிழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்ட, 59 கோடி ரூபாய்க்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் மூலம் முன்மொழிவு அனுப்பப்பட்டது. மொத்தம் 1,968 வீடுகள், தலா 3 லட்சம் மதிப்பில் கட்டப்படும் எனவும் மாநில அரசு உறுதியளித்தது. பட்டியலும் தயார் செய்யப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்று நாளையுடன் (9ம் தேதி) 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஆனால், 6 மாதங்கள் வசிக்கும் தரத்துடன் மட்டுமே கட்டப்பட்ட, வீடுகளில் 2 ஆண்டுகள் வசித்த மக்களுக்கு மீண்டும்"மரண பீதி' ஏற்பட்டுள்ளது. ஊட்டி, கேத்தி, மந்தாடா, தலையாட்டி மந்து உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக நள்ளிரவில் கன மழை பெய்து வருவதால், அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் இரவில் உறங்காமல், பச்சிளம் குழந்தைகளுடன் அவதிப்பட்டு வருகின்றனர்.

10 அடிக்கு 10 அடி உள்ள ஒரே அறையில் 5க்கும் மேற்பட்டவர்கள் வசித்து, அனைத்து விதமான குடும்ப பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவலமும் தொடர்கிறது."நிரந்தர வீடு கட்டித்தருவதாக கூறி, தி.மு.க., அரசும், அரசு அதிகாரிகளும் தங்களை நிற்கதியாக விட்டு விட்டனர். அ.தி.மு.க., அரசாவது தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் குமுறலாக உள்ளது.அப்பகுதியில் வசிக்கும் ஜீனத், வேலன், ஜெயகுமார் ஆகியோர் கூறியதாவது: இரவில் பெய்யும் கனமழையின் போது, நாங்கள் வீட்டிற்குள் செல்வதில்லை. "ஹாலோ பிளாக்' கற்களில் கட்டப்பட்ட வீடு ஓழுகுவதால், மிகவும் பலவீனமாக உள்ளது. குழந்தைகளை வைத்து கொண்டு மிகவும் அவதிப்படுகிறோம். கழிப்பிடம், நடைபாதை போன்ற வசதிகளும் போதிய அளவில் இல்லை. எனவே, எங்கள் நிலையை மாநில அரசு உணர்ந்து வட கிழக்கு பருவமழை தீவிர மடையும் முன்பு எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.



பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 08, 2011 2:40 pm

வேதனையான செய்திகள்.இன்னும் மழை வந்தால் என்ன நிலையோ. பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு 440806 மக்கள் மிகவும் சிரமம் கொள்கின்றனர்.
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக