ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

+7
உதயசுதா
இளமாறன்
சிவா
ராஜா
kirikasan
அகிலன்
கேசவன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by கேசவன் Tue Nov 08, 2011 8:05 pm

ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியாவையே ‘சீனா’ என்ற கேடயத்தை வைத்துக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது குட்டி இலங்கை. தும்பை விட்டு வாலைப்
பிடித்த கதையாக அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து
கொண்டு கவலையோடு நிற்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் இலங்கையின் வடபகுதியில் முள்ளிவாய்க்காலில் உலகத் தமிழர்களையெல்லாம் கலங்கடிக்கும் சோகம் நிகழ்ந்தது.

அப்போது
கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காகவும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்காகவும் ஒட்டு மொத்த
உலகத் தமிழர்களும் கலங்கி நின்ற போதும் இந்தியா ராஜதந்திர ரீதியாகதான்
வென்று விட்டதாக பெருமை கொண்டது.

இலங்கைக்கு ரேடார் உள்ளிட்ட பல
ஆயுதங்களையும் மிலிட்டரி இன்ஜினீயரிங் சர்வீஸின் தொழில்நுட்ப
வல்லுநர்களையும் கொடுத்து உதவியபோது தமிழகத் தலைவர்கள் கண்டித்தனர்.


‘இலங்கைக்கு இந்த சமயத்தில் இந்தியா உதவி செய்யாவிட்டால் நமது எதிரி
நாடான சீனா அங்கே உதவிக்குப் போய் நிற்கும். குறைந்தபட்சம் அங்கே தனது
படைகளை நிறுவவும், ராணுவ தளத்தை அமைக்கவும் உதவி செய்தாலே இந்தியாவுக்கு
அது பெரும் பிரச்னையாகப் போய்விடும். எனவே, தமிழர்களின் நலனை பிறகு
பார்த்துக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில்
இப்படித்தான் முடிவு எடுக்க முடியும்’’ என்று அதிகாரிகள் தரப்பில் பதில்
கொடுத்தனர்.

விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக நாம்
நின்றால், அங்கே நமது பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகளுக்கு அவர்கள் உதவியாக
இருப்பார்கள் என்று தமிழர் தலைவர்கள் தெரிவித்த யோசனையை இந்திய
அதிகாரிகள் ஏற்கவில்லை.

போர் முடிந்து அமைதி நிலை திரும்பியதும்
இந்தியாவைக் கண்டுகொள்ளாமல் சீனாவிடம் நெருங்கியது இலங்கை. வடபகுதியில்
கட்டுமானப் பணிகள், சீர்திருத்தப் பணிகளில் இந்தியாவை விடாமல் சீனாவையே
முன்னிறுத்தியது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. அடுத்து என்ன
செய்யலாம் என்ற யோசனையில் இந்தியாவின் ‘ரா’ அதிகாரிகள் விசாரணையில்
இறங்கினர்.

சீனாவுடன் நட்பு பாராட்டி இந்தியாவைப் புறக்கணித்தால்
அடுத்து இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கும் என்பதையும் பழைய
நண்பனான இலங்கை கணித்திருந்தது.

விடுதலைப் புலிகளில் இன்னும்
யாரேனும் எஞ்சியிருக்கிறார்களா? அப்படி எஞ்சியிருக்கும் நபர்களுடன் அல்லது
குழுக்களுடன் மற்றும் ‘ரா’ அதிகாரிகள் வடகிழக்கு இலங்கைப் பகுதியில்
ஏதேனும் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை அறிந்துகொள்ள இலங்கை
ஒரு உபாயம் செய்தது.

அதன்படி பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை,
திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வீட்டுக்குள் நுழையும் மர்ம
மனிதர்கள் அங்கிருக்கும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள். உடல்
முழுக்க கிரீஸ் தடவிக் கொண்டு கையில் கூர்மையான ஆயுதங்களுடன் ஓட்டைப்
பிரித்து உள்ளே நுழையும் அவர்கள், பெண்களைக் கட்டிப்பிடிப்பது, அவர்களைக்
கீறி லேசான ரத்தக் காயங்கள் ஏற்படுத்தி பயமுறுத்துவது உள்ளிட்ட
நடவடிக்கைகளில் இறங்கினர்.

சில இடங்களில் பிடிபட்டவர்களை போலீஸ்
ஸ்டேஷனில் கொண்டுபோய் ஒப்படைத்த போது அடுத்த நாள் அந்த மர்ம நபர்கள்
அனுப்பிவைக்கப் பட்டிருந்தார்கள். இது தமிழர்களிடம் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியதுடன், அரசே இந்த மாதிரியான நடவடிக்கைகளைத் தூண்டிவிடுகிறதோ
என்று பலத்த சந்தேகத்தையும் தோற்றுவித்தது.

இந்நிலையில்,
இந்தியாவை ஏமாற்றிய இலங்கையின் கபட நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஒருவேளை தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்படும்போது வடஇலங்கையில் உள்ள ஆயுதக்
குழுக்கள் வெகுண்டு வெளியே வருவார்கள் என்ற திட்டத்தில்தான் இப்படி ஒரு
நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது இலங்கை அரசு.

ஆனால், அப்படி எந்த
பதிலடித் தாக்குதலும் நடக்கவில்லை என்பதையும், இந்தியாவும் இலங்கைக்கு
எதிரான ரகசிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்று தி ருப்தியடைந்து
கொண்டது இலங்கை அரசு.

இப்போது பல்வேறு சீனக் கம்பெனிகள் மத்திய
இலங்கையிலும், வடகிழக்குப் பகுதியிலும் இடங்களை வாங்கிப் போட்டு
தொழில்களைத் தொடங்கி வருகின்றன. சுற்றுலாத் தொழிலை தனது பொருளாதாரத்தின்
முதுகெலும்பாக நம்பியிருக்கும் இலங்கையின் மத்திய பகுதியில் பல இடங்களை பல
லட்சங்கள் கொடுத்து வாங்கி வருகின்றனர் சீனர்கள்.

இப்படி வரும்
சீனர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவர்கள் தொழில்
தொடங்குவதற்கு எல்லாவிதமான ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறது இலங்கை
அரசு.

அதேசமயம் வடகிழக்குப் பகுதியில் துறைமுகங்கள் அமைக்கும்
பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளதை கவலையோடு பார்க்கிறார்கள் இந்திய ராணுவ
அதிகாரிகள். இந் தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட குறுகிய கடல்
பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வளத்தை இலங்கையிலிருந்தே சுரண்டும் பணியிலும்
ஈடுபட்டுள்ளன சீன நிறுவனங்கள்.

ராஜபக்ஷே அரசோ என்ன நடந்தாலும் சரி
தனது ஆட்சிக்குப் பங்கம் வராமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் ‘என்ன
வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கதவுகளை திறந்துவிட்டு
விட்டது.

தற்போது இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடிக்கும்
மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதன் பின்னணியில் சீனாவும் இருக்கலாம் என்ற
சந்தேகத்தைக் கிளப்பியி ருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

வடக்கில்
அருணாசலப் பிரதேசத்தைத் தனது நாடு என்று சொல்லிக் கொண்டு அங்கே பிரச்னை
செய்து கொண்டிருக்கும் சீனா, தெற்கிலும் தனது கால்களை அழுத் தமாகப்
பதிப்பதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அரசின்
ராஜதந்திரிகள்.

‘இனி என்ன நடவடிக்கை எடுத்தாலும் கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம் செய்த கதையாகிவிடும்’ என்கிறார் ஓய்வு பெற்ற இந்திய
வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர். அவரது கருத்தில் அர்த்தம் இருப்பதாகவே
தெரிகிறது என்கிறார்கள் தமிழகத் தலைவர்கள்.








இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  1357389கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  59010615கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Images3ijfகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by அகிலன் Wed Nov 09, 2011 4:38 am

இலங்கைக்குள் சீன ஆதிக்கத்தை தடுப்பதற்கு இந்தியா மீண்டும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கையில் எடுக்கலாம் என்று தோன்றுகிறது, இதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கேசவன்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by kirikasan Wed Nov 09, 2011 6:24 am

akilan7 wrote:இலங்கைக்குள் சீன ஆதிக்கத்தை தடுப்பதற்கு இந்தியா மீண்டும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கையில் எடுக்கலாம் என்று தோன்றுகிறது, இதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கேசவன்.

இந்தியா கையிலெடுக்கலாம் ஆனால் இலங்கை கையில் எடுத்தால்தானே! ஏற்கனவே வடகிழக்கு ஒன்றாக இருக்கவெண்டுமென்ற ஒப்பந்தத்ததை இந்தியாவின் கண் முன்னே கிழிது வீசும்போது
இந்தியா என்ன செய்தது? இதன் பின்னணியில் இந்தியாவின் ஆமோதிப்பு இருந்திருகலாம்.ஆனால்
இந்தியாவின் பிடியிலிருந்து நழுவி விட்டது இலங்கை. இப்போது கிரீஸ் பூசிய கருப்பு மனிதன் இலங்கை.! பிடித்தால் வழுக்கும்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by கேசவன் Wed Nov 09, 2011 10:17 am

akilan7 wrote:இலங்கைக்குள் சீன ஆதிக்கத்தை தடுப்பதற்கு இந்தியா மீண்டும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கையில் எடுக்கலாம் என்று தோன்றுகிறது, இதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கேசவன்.
இனிமேல் இலங்கை இந்தியாவை மதிக்காது அதனால் எதை கையில் எடுத்தாலும் ஒன்றும் வேலைக்கு ஆகாது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  1357389கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  59010615கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Images3ijfகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by Guest Wed Nov 09, 2011 11:08 am

என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...
avatar
Guest
Guest


Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by ராஜா Wed Nov 09, 2011 11:28 am

இலங்கைக்கு உதவிய இந்திய ராஜதந்திரிகள்!! கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  56667, இவர்கள் தான் தமிழர்களை அழிக்க என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று கூறியவர்களாச்சே. இன்று தமிழீழம் இருந்திருந்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவசமாக இருந்துருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by சிவா Wed Nov 09, 2011 11:31 am

புரட்சி wrote:என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...

இதுவரை ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதைக் கூறினால் நன்றாக இருக்கும். ஈகரையில் சினிமா செய்திகள் வெளிவந்தால் அதைத் தாக்குவீர்கள். நகைச்சுவைப் பதிவுகள் வந்தால் ஈழம் இருக்கும் நிலையில் இந்தப் பதிவு தேவையா என்பீர்கள். இதைத் தவிர ஈழத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்.


கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by இளமாறன் Wed Nov 09, 2011 11:41 am

அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by உதயசுதா Wed Nov 09, 2011 11:48 am

சிவா wrote:
புரட்சி wrote:என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...

இதுவரை ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதைக் கூறினால் நன்றாக இருக்கும். ஈகரையில் சினிமா செய்திகள் வெளிவந்தால் அதைத் தாக்குவீர்கள். நகைச்சுவைப் பதிவுகள் வந்தால் ஈழம் இருக்கும் நிலையில் இந்தப் பதிவு தேவையா என்பீர்கள். இதைத் தவிர ஈழத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்.
இதே தான் நான் இன்னோர் பதிவுல கேட்டு இருந்தேன். அதுக்கு அவர் நான் என்ன உதவி செய்தேன் என்று சொல்ல விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார். சோகம் சோகம் சோகம்


கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Uகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Dகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Aகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Yகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Aகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Sகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Uகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Dகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Hகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by கேசவன் Wed Nov 09, 2011 1:03 pm

இன்று தமிழீழம் இருந்திருந்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவசமாக இருந்துருக்கும்
ஆம் சரியாக சொன்னீர்கள் .ஆனால் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 5000 கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்ததே தவிர இலங்கை தமிழர்களுக்கு ஒரு உதவி கூட செய்யவில்லை .


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  1357389கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  59010615கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Images3ijfகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  Empty Re: கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum