புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_c10அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_m10அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_c10 
42 Posts - 63%
heezulia
அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_c10அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_m10அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_c10அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_m10அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_c10அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_m10அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது ! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது !


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 03, 2011 12:16 pm

அன்புள்ள உறவே ! வணக்கம் .

இந்த மனிதர்கள் உன்னையும் , என்னையும் எதிரி என்று கூறுகிறார்கள். உன்னை உயர்த்தி பேசி பேசியே என்னை வெறுக்கும் படி செய்கிறார்கள்.நான் இல்லாவிட்டால் உறவாகிய உனக்கு என்ன பெருமை இருக்க போகிறது.இதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஆதியில் பகையாகிய நான் இல்லை என்றால் இவர்கள் வேட்டையாடும் செயலை செய்திருப்பார்களா ? இவர்களின் பசிதான் தீர்ந்திருக்குமா? விலங்குகள் இவர்கள் மீது பகை கொள்ளாதிருந்தால் இவர்கள் குகைகளில் வாழ்ந்திருப்பார்களா. ஆக இன்றய சொகுசு வாழ்க்கைக்கு நான் தானே ஆதாரம்.

ஏதோ ஒரு கால மாற்றத்தின் காரணமாக ஆற்றங்கரை அருகினில் வாழ ஆரமித்தார்கள். அங்கு அன்பின் மற்றொரு பரிணாமத்தை அடைந்து உறவு என்கிற உன்னை கண்டுகொண்டார்கள். உறவாகிய நீ பெருமை கொள்ள வேண்டுமானால் பகையாயாகிய நான் எனது பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

உனக்கும் , எனக்கும் இடையே நடக்கிற பனிபோரை மனிதர்களின் சுபாவம் தான் நடத்தி செல்கிறது. சில வேளைகளில் அவர்களின் சுபாவ குறைகளை வைத்தே ஒவ்வொருவரையும் பிரித்து தனிமை படுத்தி வெற்றிக்கொள்கிறேன். இந்த சுபாவத்திற்கு எல்லோரும் அடிமை. புரிதலின்மை , எல்லை மீறுதல், ஏமாற்றம் எல்லாமே ஒரு மூல புள்ளியிலிருந்துதான் எழுகிறது. இதற்கு தெய்வ பிறவிகள் கூட விதிவிலக்கில்லை. கானகத்தில் சீதா தேவி , இலக்குவனை பொய்யாய் சந்தேகித்து , திட்டினால் . அவள் போய் கூறுகிறார்கள். ஏதோ ஒரு கோபத்தினால் தான் அப்படி கூறுகிறார் என்று இலக்குவனும் புரிந்துகொள்ள வில்லை. உடனே கோட்டை கிழித்து உள்ளேயே இருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
ஆனால் சீதையும் கோட்டிற்குள் நிற்கவே இல்லை.

கொடுபோட்டு நிற்க சொன்னான்
சீதை நிற்க வில்லையே !
சீதை அன்று நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே (வாலி ) ஆக சீதை தவறாக பேசியதும் , லக்குவன் அதை புரிந்து கொள்ளாததும் நன்மைக்குதான் என்கிறார்கள். இதே போல தான் இன்றும் எனக்கு மனித சுபாவங்கள் நன்மை புரிகிறது.அதே சமயத்தில் காலம் தோறும் என் கோணம் மாறிக்கொண்டே வருகிறது.

சில காலங்களுக்கு முன்பு ரத்த பந்தங்கள் மற்றும் தான் உறவுகள் என்கிற நிலை இருந்தது. இப்போதய கால கட்டத்தில் இவர்களை பிரித்து வைப்பது எனக்கு எளிமையாய் இருந்தது. பின்னர் ரத்த சம்பந்தம் இல்லாத நட்பு கூட உறவுதான் என்று ஏற்றுக்கொண்டார்கள். இதை முன்னோர்களும் உறுதி படுத்துகிறார்கள்.
நம் உடலிலேயே தோன்றுகிற கிருமிகள் தான் நமக்கு நோயை தந்து துன்புறுத்துகிறது. ஆனால் எங்கோ ஒரு மலையில் பிறந்த மூலிகைகள் தான் அதை குணபடுத்துகிறது. அது போல உடன் பிறந்தவர்கள் சில வேளைகளில் நமக்கு துன்பம் தரலாம். உடன் பிறக்காத அயலக உறவுகள் நமக்கு நன்மை தருவதும் உண்டு என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு .


இதன்பின் இவர்கள் நட்பு என்கிற உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இங்கேயும் நான் நுழைவதுண்டு. வழக்கம் போல மனித சுபவங்கள் தான் என்னுடைய ஆயுதம். நெருங்கியவர்களை பிரிப்பேன்.

ஆனாலும் எனக்கொரு பயம் உண்டு. ஏனென்றால்
மனிதர்கள் சகிப்புதன்மையை யும் , கீழ் உள்ள செய்யுளின் பொருளையும் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்றால் என் ஆயுள் ஒரு நிமிடம் கூட நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.

கல்லானது பிளவுபடின் திரும்ப ஒன்றாய் சேராது. பொன்னானது பிளவுபடின் மீண்டும் உருக்கி ஒன்றாய் சேர்த்து கொள்ளலாம். ஒரு சிறிய வில்லினையோ , குச்சியையோ எடுத்து நீரில் பிளவினை ஏற்படுத்தினால் அடுத்த நொடியிலேயே அது கூடிவிடும். இதைதான் ஒளவையார் ...

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல் மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்!


கீழான குணம் உள்ளவர்களின் நட்பில் பகை வந்தால் திரும்ப சேராது. இடைப்பட்ட குணம் உள்ளவர்களின் நட்பில் பிரிவு வந்தால் , பிறர் கூட்ட கூடும். ஆனால் உயர்ந்த குணம் உடையவர்கள் நட்பில் பிரிவு வந்தால் , அவர்கள் உடனே கூடிவிடுவார்கள். இதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வரைதான் என் வாழ்வு நிலைக்கும். இதை புரிந்துகொண்டிராவிடில் நான் எல்லோரையும் ஆட்சி செய்வேன். ஆக ஒரு மனிதன் கொண்டுள்ள நட்பு உயர்ந்ததா , தாழ்ந்ததா, பகையாகிய நான் தரும் பிரிவின் பின்தான் தெரியும். அதுவே எனக்கு பெருமை தருகிற விஷயம் தான். கடிதம் கண்டவுடன் பதில் கடிதம் போடு. கடிதம் கிடைக்க வில்லை என்றாலும் ,, கடிதம் கிடைக்கவில்லை என்று கூறு , மீண்டும் கடிதம் எழுதுகிறேன். வணக்கம் !
இப்படிக்கு
உறவாகிய உன்னை பெருமை படுத்துகிற
பகையாகிய நான் !




[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 03, 2011 12:42 pm

அன்புள்ள பகைக்கு..!!

நற்பண்புள்ள, பொறுமையுள்ள நல்ல மனிதன்கூட உன்னிடதில் தோற்று விடுகிறான் காரணம் நட்பில் புரிதலுக்கு இருக்கும் வலிமையை விட பகைக்கு வலிமை ஒருபடி மேலே இருக்கிறது...
ஒருவன் நல்ல நண்பனாக இருக்கும்போது அவனுடைய செயலை நாம் பாராட்டுகிறோம் அதே நண்பன் எதிரியாக மாறும்போது அவனுடைய நற்செயலும் கூட தவறுதான் இது மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்..
என்னதான் "அன்பு" அனைத்து உறவிலும் இருந்தாலும் அதை முழுமையாக அறியும் வாய்ப்பை நீ தருவதால் உன்னுடைய செயலுக்கு நான் தலைவணங்குகிறேன்.. நட்பில் விரிசல் வரும்போதுதான் அந்த நண்பனின்/ தோழியின் குணத்தை முழுமையாக அறிய முடிகிறது..
கெட்டதிலும் ஒரு நன்மை உண்டு அதுபோல்தான் உன்னுடைய செயலிலும் ஒரு நன்மை இருக்கிறது அதனால்தான் மனிதர்களின் குணத்தை அறிய முடிகிறது. இதற்கு வேட்டையாடுதல் என்ற எடுத்துக்காட்டு ரொம்ப தவறானது காரணம் விலங்குகள் பகை கொண்டு மனிதர்களை தாக்குவதில்லை அதன் நோக்கமும் கண்டிப்பாக அதுவாக இருக்க முடியாது..விலங்குகள் பகை கொண்டிருப்பின் அது மனிதர்களை வாழ விடாது.
இங்கே ஒரு தத்துவத்தை கூற ஆசைப்படுகிறேன்

நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....

இதில் எதிரியை பெறுவாய் என்ற வார்த்தை 100 சதவிகிதம் சரியே...
இதில் விவாதம் செய்ய வைப்பதே உன்னுடைய ஆசிதான்..

//கீழான குணம் உள்ளவர்களின் நட்பில் பகை வந்தால் திரும்ப சேராது. இடைப்பட்ட குணம் உள்ளவர்களின் நட்பில் பிரிவு வந்தால் , பிறர் கூட்ட கூடும். ஆனால் உயர்ந்த குணம் உடையவர்கள் நட்பில் பிரிவு வந்தால் , அவர்கள் உடனே கூடிவிடுவார்கள். இதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வரைதான் என் வாழ்வு நிலைக்கும்.
இதை புரிந்துகொண்டிராவிடில் நான் எல்லோரையும் ஆட்சி செய்வேன்//

இதில் சொல்லிஉள்ளது படி பார்த்தால் என்றுமே மனித வாழ்வில் உனக்கே வெற்றி..!!


நன்றி




[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 03, 2011 12:52 pm

ரேவதி wrote:இதற்கு வேட்டையாடுதல் என்ற எடுத்துக்காட்டு ரொம்ப தவறானது காரணம் விலங்குகள் பகை கொண்டு மனிதர்களை தாக்குவதில்லை அதன் நோக்கமும் கண்டிப்பாக அதுவாக இருக்க முடியாது..விலங்குகள் பகை கொண்டிருப்பின் அது மனிதர்களை வாழ விடாது.
இங்கே ஒரு தத்துவத்தை கூற ஆசைப்படுகிறேன்

நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....
இதில் எதிரியை பெறுவாய் என்ற வார்த்தை 100 சதவிகிதம் சரியே...
இதில் விவாதம் செய்ய வைப்பதே உன்னுடைய ஆசிதான்..
/நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி !


இதில் சொல்லிஉள்ளது படி பார்த்தால் என்றுமே மனித வாழ்வில் உனக்கே வெற்றி..!!
சோகம் சோகம்



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 03, 2011 1:25 pm

கடிதம் கண்டு மனம் வருந்துகிறேன் அண்ணா..! நீங்கலாக பகை என்று சொன்னால் என்ன அர்த்தம். காதலுக்காக உயிரதான் விடுவாங்க ஆனா நட்பு க்காக தன் இதயத்தை கொடுக்குராங்க.
நட்புக்குள் சண்டை என்பது புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி காலையில்
சண்டை போட்டால் மாலைக்குள் ஒன்றாக ஆகிடவேண்டும்,
உங்களை என்றும் பகையாளியாக பார்த்ததில்லை.எதையும் பெரிதாக பார்க்காமல் சிறியதாக பாருங்கள் என்றுமே வாழ்க்கையில் வெற்றி..
!


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 04, 2011 11:21 am

அருண் wrote:கடிதம் கண்டு மனம் வருந்துகிறேன் அண்ணா..!
[b]உங்களை என்றும் பகையாளியாக பார்த்ததில்லை.எதையும் பெரிதாக பார்க்காமல் சிறியதாக பாருங்கள் என்றுமே வாழ்க்கையில் வெற்றி.!

இந்த கடிதம் , உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும். உறவுக்குள் சிறிய பிரிவு வருவது இயல்பு , ஆனால் மீண்டும் சேர்வதுதான் நல்லது என்கிற ரீதியில் எழுத பட்டது.
தங்களின் புரிதல் கொஞ்சம் மறுபட்டிருக்கிறது அவ்வளவுதான் நன்றி தம்பி !



[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 04, 2011 12:05 pm

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 04, 2011 2:08 pm

dsudhanandan wrote:பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு


அவசியமான குறள் பதிவிற்கு நன்றி சுதனா !



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக