ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_m10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10 
heezulia
அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_m10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10 
mohamed nizamudeen
அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_m10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10 
VENKUSADAS
அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_m10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_m10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10 
heezulia
அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_m10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10 
mohamed nizamudeen
அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_m10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10 
VENKUSADAS
அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_m10அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள பாகிஸ்தானுக்கு !

3 posters

Go down

அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Empty அன்புள்ள பாகிஸ்தானுக்கு !

Post by ayyamperumal Mon Nov 07, 2011 2:46 pm

அன்புள்ள பாகிஸ்தானுக்கு !

வணக்கம் !
தவறான ,புரிதலின் காரணமாகவோ , சந்தர்ப்பம் தருகிற நிர்பந்தத்தாலோ எனக்கு எதிரிகள் என்று நான் கருதிக்கொண்ட மனிதர்களிடம் , அன்பினை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த வகையில் எனக்கு முதல் எதிரி என்று சுட்டிக்காட்ட பட்ட உன்னிடம் நான் பேச விரும்பியதன் விளைவுதான் இந்த கடிதம்.


தற்போதெல்லாம் உன் தேசத்தில் வீசுகின்ற தென்றல் கூட இந்தியா என்கிற பெயரை கேட்டவுடன் தீவிரவாதத்தை பரப்ப ஆரம்பித்து விடுகிறதாம். அதுமட்டுமின்றி உன்னுடைய மண்ணில் அடிதோறும் குருதி கறை படிந்துகிடக்கிறது. இதனால் நீ இயற்கை தரும் இன்பத்தையே நுகர தவறிவிட்டாய். இந்த நிலையில் வரலாறு எப்படி
உனக்கு நினைவில் இருக்கும். ஆகவே அதை கொஞ்சம் நினைவுபடுத்துகிறேன்.


கோபப்படாதே .இது அரசியல் வரலாறு அல்ல ..மறுக்க பட்ட
வாழ்வுரிமையின் வரலாறு. மறைக்க பட்ட மானுடத்தின் கதறல். புதைக்க பட்ட புனித உறவின் ஓலம் .அது வெளிப்படுத்திய மனிதம் பற்றிய புரிதலின் படிமம் .. எல்லாவற்றிற்கும் மேலாக
உன்னிலும் மானுடம் செழித்திருந்திருக்கிறது என்பதை உனக்கே உணர்த்தும் வரலாறு .

கொஞ்சம் பின்நோக்கி செல். 1947 பாகிஸ்தான் தான் வேண்டும் என்று அங்கே குடிபெயர நடந்துபோகிற மக்கள் கூட்டம் அலையலையாய் நடந்து செல்கிறது. இவை எவற்றையுமே கண்டுகொள்ளாமல் தான்
உண்டு என் வேலையுண்டு என்று நிலத்தை பண்படுத்தி கொண்டிருக்கிற ஒருமனிதன். அவன் பெயர் பூட்டா சிங் . அவனது வேலையின் ஈடுபாட்டையும் மீறி ,நிமிரச்செய்தது ஒரு குரல்.


நன்கு ஐந்து நாய்களால் குதறப்பட்ட ஒரு பூனைக்குட்டியை , இன்னொரு நாய் துரத்தி வந்தால் எப்படி இருக்கும் ? அதே
நிலைமைதான் அந்த இளம் பெண்ணுக்கும். 17,,,18 வயது இருக்கும் அவளை ஒரு சீக்கிய இளைஞன் துரத்தி வருகிறான் . நிமிர்ந்து பார்த்த பூட்டாசிங் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துவிட்டான். பொதுவாய் மண்வெட்டிபிடிப்பவர்களின் கரம் இரும்பு மாதிரி இருக்கும் . போதா குறைக்கு அவன்பர்மா ராணுவத்தில் பணிபுரிந்தவன். திறமை இருந்தும் அந்த இளைஞனோடு
சண்டையிடவில்லை. நேரடியாய் விசயத்திற்கு வந்தான். இறுதியில் தன்னுடையகுடிலுக்குள் நுழைந்து 1500 ரூபாய் கொடுத்து அந்த சீக்கிய இளைஞனைதிருப்பி அனுப்பினான். அந்த காலத்தில் 1500 என்பது மிகப்பெரிய தொகைதான்.


பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து போகிற எத்தனையோகுடும்பங்களில் அவளது குடும்பமும் ஒன்று . உறவினை தொலைத்துவிட்டதால்
அகதியாகி போனாள் . வழக்கம் போலவே உடலியல் வன்முறைகளுக்கு பின்னரும் துரத்த பட்டு , தற்போது பூட்டசிங்கிடம் அழுதுகொண்டு நிற்பவளின் பெயர் ஜெனீப்.


பின்னர் ஜெனீப் பூட்டா சிங்கின் வீட்டிலேயே தங்கினாள்.
அவன் சீக்கியன் அவள் இஸ்லாம். அதனால் என்ன . ஊரைவிட்டு தனியாக காட்டிற்குள் வாழ்ந்தவனுக்கு அன்பு கிடைக்கிறது. அவன் தந்தை போல பாசம் காட்டுகிறான் . தோழனை போல நேசம் காட்டுகிறான். சகோதரன் போல பாதுகப்புதருகிறான். கூடவே கணவனை போலவே காதலும் தருகிறான். சில நாட்களில்
இருவருக்கும் சீக்கிய முறைப்படி திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்த வேளையில் ஜெனீப்பின் வயது 17 , 18 இருக்கும். ஆனால் பூட்டசிங்கின் வயது 55
. ( அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த அதிர்ச்சியை அப்படியே வைத்து கொள் பாகிஸ்தான். இறுதியில் அதன் தன்மை மாறலாம் )

இந்த அதிர்ச்சி நமக்கு இருக்கிறது. ஆனால் அவளுக்கு இல்லை. அடிமையைபோல அடைக்கலம் ஆனவள் அன்னையாகி போனாள். தன்வீர் என்கிற பெண் குழந்தைவந்துவிட்டது . இரு வருடம் கழித்து , அரசாங்கத்தின் அறிவிப்பு ,,பிரிவினையின் போது தவறியவர்களை , அவர்களின் பெற்றோர்களிடத்தில்சேர்க்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்று கொண்டிருக்கிறது ...... பூட்டா சிங் செத்துதொலைந்தால் அவனது சொத்துக்கள் நமக்குத்தான் என்று எண்ணி கொண்டிருந்த
உறவுகள் அவனின் திடீர் திருமணத்தால் கோபம் கொண்டார்கள்.

அரசாங்கத்திடம்ஜெனீப்பை பற்றி கூறினார்கள். காவலர்கள் வந்தார்கள் ஜெனீப்பை மட்டும்இழுத்துக்கொண்டு போனார்கள். கையில்குழந்தையோடு பூட்டா சிங் துடிதுடித்தான்.இறுதியில் என் மனைவி ஜெனீப் பாகிஸ்தானில் இருக்கிறஇடத்திற்கு என்னையும் அழைத்து செல்லுங்கள் என்றான். முடியாது என்றார்கள்.
ஏன் என்றான். நீ முஸ்லீமா ? அவ்வளவுதானே ,,,,

மறுநாள் பூட்டாசிங் ஜமீல் அஹமது ஆனான். அப்போதும் அழைத்து செல்ல மறுக்க பட்டான். பொறுமை இழந்தபூட்டாசிங் / ஜமீல் அஹமது தன் மகள் தன்வீரை( இப்போது சுல்தானா )எடுத்து கொண்டு ஜெனீப்பின் கிராமத்தை அடைந்தான்.


என் மனைவியை என்னுடன் அனுப்பிவையுங்கள் என்றான்.
அப்போதுதான்அவனது இதயத்தில் இன்னொரு கத்தியை செருகினார்கள்.ஜெனீப் இப்போது இன்னொருவரின் மனைவி நீ ஒழுக்கமாய் திரும்பி செல்என்றார்கள். அதெலாம் முடியாது என்று அடம் பிடித்த அவனுக்கு அடிதான்கிடைத்தது. நிலைமை காவல் துறை வரைக்கும் சென்றது. அனுமதி இல்லாமல் எல்லை
கடந்ததால் சிறையில் அடைக்க பட்டான். அவனது கதையினை கேட்ட நீதிபதிஇறங்கினார். அவனின் வேண்டுகோள் போலவே ஜெனீப்பை நீதி மன்றத்தில் ஆஜரகஉத்தரவிட்டார்.


எடுத்த எடுப்பிலேயே அவனை பார்த்ததும் அழுதாள். இவர்
என் முதல் கணவர். அது என் குழந்தை என ஒத்து கொண்டாள். அவருடன் சென்றாள் என் அடிமைத்தனம் அழியும். அந்த குழந்தையையும் நேசிக்கலாம் என்று அவளுக்கும் ஆசைதான். அப்போது தன் சகோதரர்களின் முகத்தை பார்த்தால் ,,
அவளுக்கு நிலைமை புரிந்தது . நீதிபதி அனுமதித்தாலும் நம்மை உயிரோடு செல்லவிடமாட்டார்கள்.

அவராவது செல்லட்டும் என்று எண்ணி அவனுடன் செல்ல
மறுத்துவிட்டால். அங்கேயே கதறினான் . குழந்தையாவது ஏற்றுகொள் என்றான்.என்னுடன் இருந்தால் அவளும் அடிமையாகி போவாள். அந்த குழந்தை உங்களைபோன்றஅருமையான மனிதரிடம் வாழ்வதுதான் நல்லது என்று அதையும் ஏற்கமறுத்துவிட்டாள்.

அன்று இரவு ஒரு மசூதியில் படுத்திருந்தான். மறுநாள்குழந்தைக்கு ஒரு புது துணி அணிவித்தான். இனி நீ உன் அம்மாவை பார்க்கவே
முடியாது என்று கூறி ஒரு முத்தம் கொடுத்தான். அப்போது உள்ளே நுழைய ஆரமித்திருந்த ரயிலில் விழுந்தான் . தன்வீர் என்றால் கடவுளின் அற்புதம்என்று பொருள் . அந்த அற்புதம் உயிர் பிழைத்தது . ஆனால் பூட்ட சிங்இறந்துபோனான். அவனது சட்டையில் குருதி தோய்ந்த ஒரு கடிதம் ...

ஜெனீப் நீ குழப்பத்தின் குரலுக்கு செவி சாய்த்துவிட்டாய். அந்த
குரலில் கொஞ்சமும் நியாயம் இல்லை .இனியாவது என் விருப்பம் நிறைவேறட்டும்.என்னுடைய உடலை உன் கிராமத்திலேயே புதை. வருடத்தின் ஒருநாள் அங்கு நீ
வந்துவிட்டு போ . செத்து போன எனக்காக அல்ல உயிரோடிருக்கும் நம் காதலுக்காக .




மறுநாள் பத்திரிகையில் இவனதுகதைதான்பிரதானம். அதை படித்தவர்கள் எல்லோரும் அழுதார்கள். மக்கள்வெகுண்டார்கள். ஆயிரம் பேருடன் அவனது உடலை எடுத்துகொண்டு அந்த
கிராமத்திற்குள் நுழைந்தார்கள். ஜெனீப்பின் உறவினர்கள் உள்ளே வரவிடாமல்தடுத்தார்கள். பிரச்சனை எதற்கு என்று எண்ணிய அரசாங்கம் உடலை லாகூருக்கு கொண்டுவாருங்கள் இடம் தருகிறோம் என்று கூறியது .

மலைபோல் மாலைகள் குவிய அடக்கம் செய்யப்பட்டது. இவனுக்கு என்ன இவ்வளவு மரியாதை என்று நினைத்த ஜெனீப்பின் உறவினர்கள் அந்த கல்லரையை சேதபடுத்தினார்கள். ஆனால் மீண்டும் அதே மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இப்போது அந்த கல்லரைக்கு ஏதும் நிகழ்ந்துவிடாமல் இருக்கு சில இஸ்லாமிய இளைஞர்கள் காவல் காத்தார்கள். ஆம் எல்லா மதத்திலும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதை படித்தவுடன் உனது கண்களிலும் கண்ணீர் சுரந்திருக்கும். இப்போது உன் கண்ணீரை துடைத்துக்கொள். உன்னிலும் அன்பு நிறைந்துதான் இருக்கிறது.மதம் எதுவோ . ஆனால் அவனிடம் இருந்த அன்பிற்கு மரியாதை செய்த மனிதர்கள் உன்னிடமும் நிறைந்திருந்தார்கள் பாகிஸ்தான் ....

ஆனல் தற்போது நீ மாறிவிட்டாய். இந்தியாவை அழிப்பதற்காக தீவிர வாதத்தை வளர்க்கிராய். நீ வளர்க்கும் தீவிர வாதத்தால் இங்கு 25 பேர்
இறக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அதே தீவிர வாதம் தான் உன் தேசத்து மக்களையும் நிம்மதியையும் கெடுக்கிறது . இங்கு 25 பேர் உயிரை கொள்வதற்காக நீ அங்கு 75 பேரின் உயிரை காணிக்கையை தருகிறாய். எல்லாவற்றையும் விடு. இல்லை என்றால் நீயே விரைவில் தீவிர வாதத்திற்கு பலியாவாய்.


கார்கில் போரின் போது எங்கள் தேசத்திற்கு வந்த உங்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த இந்தியாவை நீ நேசி. அதே போல குஜராத் பூகம்பத்தின் போது எங்களுக்கு உதவ முன்வந்த பாகிஸ்தானை நாங்கள் நேசிக்கிறோம்.


இப்படிக்கு
உன்னை நேசிக்க விரும்பும் இந்தியன்.


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Empty Re: அன்புள்ள பாகிஸ்தானுக்கு !

Post by அ.இராஜ்திலக் Mon Nov 07, 2011 3:02 pm

சகோதரத்துவத்தை நினைவு படுத்தும் அருமையான பதிவு வாழ்த்துகள் !


அன்பான
[You must be registered and logged in to see this image.]

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Empty Re: அன்புள்ள பாகிஸ்தானுக்கு !

Post by பிஜிராமன் Mon Nov 07, 2011 3:11 pm

அருமையான பதிவு அண்ணா........

எல்லா நாடுகளிலும் மக்கள் மனம் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது, அவர்களுக்கும் குடும்பம் உள்ளது, பாசம், நேசம், சோகம், கண்ணீர் அனைத்தும் உள்ளது. காரணம் மனிதன் என்றால் அவனுக்கு இந்த குணங்கள் அனைத்தும் இயல்பான ஒன்றாக உள்ளன. இந்த குணங்கள் இல்லாத சிலர் பெருன்பான்மையாகத் தெரிவது தான் இங்கு பிரச்சினையே......

மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா நன்றிகள்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Empty Re: அன்புள்ள பாகிஸ்தானுக்கு !

Post by ayyamperumal Mon Nov 07, 2011 3:52 pm

அ.இராஜ்திலக் wrote:சகோதரத்துவத்தை நினைவு படுத்தும் அருமையான பதிவு வாழ்த்துகள் !

நன்றி ரஜ்திலக் ! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Empty Re: அன்புள்ள பாகிஸ்தானுக்கு !

Post by ayyamperumal Mon Nov 07, 2011 3:54 pm

பிஜிராமன் wrote:
எல்லா நாடுகளிலும் மக்கள் மனம் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது, அவர்களுக்கும் குடும்பம் உள்ளது, பாசம், நேசம், சோகம், கண்ணீர் அனைத்தும் உள்ளது. காரணம் மனிதன் என்றால் அவனுக்கு இந்த குணங்கள் அனைத்தும் இயல்பான ஒன்றாக உள்ளன. இந்த குணங்கள் இல்லாத சிலர் பெருன்பான்மையாகத் தெரிவது தான் இங்கு பிரச்சினையே......மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா நன்றிகள்......

உண்மைதான் தம்பி. நன்றி ! எல்லோரும் ஒரே நேரத்தில் மாறமுடியாது அல்லவா ? கொஞ்சம் கொஞ்சமமாய் மாறட்டும்

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள பாகிஸ்தானுக்கு ! Empty Re: அன்புள்ள பாகிஸ்தானுக்கு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum