ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

2 posters

Go down

முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் Empty முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

Post by சிவா Mon Nov 07, 2011 8:34 am

முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் First

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவை கடந்த மே மாதம் 16-ந் தேதி பதவியேற்றது.

அதிரடி மாற்றம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இருந்தனர். உடல் நல குறைவு காரணமாக இலாகா இல்லாத மந்திரியாக இருந்து வந்த சொ.கருப்பசாமி (சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.) சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆனது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3-வது முறையாக தனது மந்திரிசபையை மாற்றி அமைத்தார். 6 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிதாக 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் 6 அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிதாக 6 அமைச்சர்களை நியமிக்க கவர்னர் கே.ரோசய்யா ஒப்புதல் வழங்கினார்.

6 பேர் நீக்கம்

அதன்படி, ஊரக தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், கால்நடைத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, தகவல், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் ஆகிய 6 பேர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.தாமோதரன் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.காமராஜ் உணவு அமைச்சராகவும், பரமக்குடி (தனி) தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் கைத்தறித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

பதவியேற்பு விழா

அதுபோல, திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எம்.பரஞ்சோதி இந்து சமய அறநிலையம் மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. வி.மூர்த்தி பால்வளத்துறை அமைச்சராகவும், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. கே.டி.ராஜேந்திர பாலாஜி தகவல் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. அங்குள்ள தர்பார் ஹாலுக்கு பிற்பகல் 2.55 மணிக்கு கவர்னர் ரோசய்யா வந்தார். கவர்னரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசு தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விழா மேடையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய அமைச்சர்களாக பதவியேற்பவர்களை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

`ஆண்டவன் மீது ஆணையிட்டு'...

அதையடுத்து தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்பவர்களின் பெயர்களை தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி அழைத்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அமைச்சர்கள் எஸ்.தாமோதரன், ஆர்.காமராஜ், வி.மூர்த்தி, மு.பரஞ்சோதி, எஸ்.சுந்தர்ராஜ், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகிய 6 பேருக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அனைத்து அமைச்சர்களும் `ஆண்டவன் மீது ஆணையிட்டு' உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அமைச்சர்கள் பதவியேற்று முடித்ததும் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு அவரவர் இருக்கையில் போய் அமர்ந்தனர். பதவியேற்பு நிகழ்ச்சி பிற்பகல் 3 மணியில் இருந்து 3.10 மணி வரை நடைபெற்றது. தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது. அதையடுத்து கவர்னர் ரோசய்யா மற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் அனைத்து அமைச்சர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், புதிய அமைச்சர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

3-வது முறையாக மாற்றியமைப்பு

இப்போது 3-வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஜுன் மாதம் 27-ந் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த ஜுலை மாதம் 3-ந் தேதி, தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கப்பட்டார். புதிதாக கடையநல்லூர் எம்.எல்.ஏ., செந்தூர்பாண்டியன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கதர் கிராம தொழில்கள் துறை ஒதுக்கப்பட்டது.

முதல்-அமைச்சருடன் புதிய அமைச்சர்களையும் சேர்த்தால் தமிழக அமைச்சரவையில் தற்போது 33 அமைச்சர்கள் உள்ளனர்.

தினதந்தி


முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் Empty Re: முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

Post by கேசவன் Mon Nov 07, 2011 2:00 pm

அடுத்த பதவிஏற்புவிழா எப்பொழுதோ


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் 1357389முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் 59010615முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் Images3ijfமுதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum