ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

Top posting users this week
ayyasamy ram
ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_c10ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_m10ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_c10 
heezulia
ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_c10ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_m10ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_c10 
E KUMARAN
ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_c10ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_m10ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_c10 
mohamed nizamudeen
ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_c10ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_m10ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by சிவா Sun Nov 06, 2011 11:09 am

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0601

எஸ்.எஸ்.கெயர் சோப்பா. தற்போது உலகின் விழிகளை வியப்பில் திகைக்க வைத்திருக்கும் ஒரு பொக்கிஷ பெயர்; கடலில் மூழ்கி இருக்கும் புதையல்.

கடலுக்குள் கப்பல்கள் மூழ்கிப்போவது சாதாரண நிகழ்வு தான். ஆனால் அதையும் சரித்திரமாக மாற்றும் தன்மை சில கப்பல்கள் மூழ்கிப்போனதில் நடந்ததுண்டு. இதற்கு சரியான உதாரணம் டைட்டானிக்.

டைட்டானிக் மிகப் பிரமாண்டமான பயணிகள் கப்பல். எதனாலும் அதை மூழ்க வைக்க முடியாது என்ற இறுமாப்பு அதை வடிவமைத்த அனைவருக்கும் இருந்தது. அந்த இறுமாப்பை தகர்த்தது இயற்கை. தனது முதல் கன்னிப்பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி மூழ்கிப்போனது. சரித்திரம் படைத்தது.

ஆனால் கெயர் சோப்பா என்ற கப்பலின் கதையோ வேறு. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக கடலுக்குள் புதைந்திருந்த இந்த கப்பலுக்கு மூழ்கிய காலத்தை விட, கண்டுபிடிக்கப்பட்ட காலமே சரித்திர புகழைத் தேடித்தந்திருக்கிறது. அதற்கு காரணம் அந்த கப்பலில் மறைந்திருக்கும் ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்பு உள்ள வெள்ளிக் கட்டிகள்.

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0607


ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by சிவா Sun Nov 06, 2011 11:10 am

கெயர் சோப்பா ஒரு நீராவி சரக்கு கப்பல். பிரிட்டிஷ்- இந்திய ஸ்டீம் நேவிக்கேஷனுக்காக பால்மர்ஸ் ஷிப் பில்டிங் கம்பெனி 1919-ல் கட்டிக் கொடுத்தது. தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் உள்ள கிலோஸ்கோ துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா தூர கிழக்கு நாடுகளுக்கும் பயணம் செய்தது.

இந்த கப்பல் 412 அடி நீளம் கொண்டது. 3 ஆயிரத்து 227 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. கிட்டத்தட்ட 21 வருடங்களாக எவ்வித சிக்கலும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்த இதன் பயணம் 1940-ல் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் இருந்து அதன் இறுதிப்பயணம் தொடங்கியது. அப்போது இந்த கப்பலில் வெள்ளிக்கட்டிகளும், டீத்தூளும் ஏற்றப்பட்டன. 83 மாலுமிகளுடனும், 2 துப்பாக்கி ஏந்திய காவலர்களுடனும் கப்பல் புறப்பட்டது.

அப்போது இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். எதிரிநாட்டுக் கப்பல்களை நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தகர்த்தெறிவதில் ஜெர்மனி வல்லமை பெற்றிருந்தது. அதனால் ஆங்கிலேய அரசு தங்களின் கப்பல்கள் அனைத்தையும் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கெயர் சோப்பாவும் அதற்கு தப்பவில்லை. பாதுகாப்புக்கான ராணுவ துணைக்கப்பல்கள் புடைசூழ கம்பீரமாக கடலில் பயணித்தது.

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0608


ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by சிவா Sun Nov 06, 2011 11:11 am

கிட்டத்தட்ட 2 மாத பயணத்துக்கு பிறகு அட்லாண்டிக் கடல் மீது சென்று கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடல் முரட்டுத்தனமான கடல். அதனிடம் அமைதி இருப்பதில்லை. அன்றைக்கும் அப்படித் தான். பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. கடல் கொந்தளித்தது. மிக உயரமான அலைகள் வேறு பயமுறுத்தின. மணிக்கு 19 கி.மீ. என்ற வேகத்தில் சென்று கொண்டிருந்த கப்பலின் வேகத்தை மேலும் குறைத்தார், கப்பலின் கேப்டன். கடலின் சூழ்நிலை வேறு பயணத்துக்கு சாதகமாக இல்லை. போதாக்குறைக்கு எரிபொருள் இருப்பும் குறைவாக இருந்தது. இதைக் கொண்டு லிவர்பூல் வரை போக முடியாது என்ற முடிவுக்கு வந்த கப்பலின் கேப்டன் மேற்கு அயர்லாந்தில் உள்ள கால்வே துறைமுகத்துக்கு போக முடிவு எடுத்தார்.

பாதுகாப்பாக வந்து கொண்டிருந்த ராணுவ துணைக்கப்பல்கள் விலகிக் கொள்ள கெயர் சோப்பா தனியாக அயர்லாந்துக்கு பயணமானது. இதை நோட்டமிட்டது ஜெர்மன் போர் விமானம் ஒன்று. தனியாக வரும் இங்கிலாந்து கப்பல் பற்றிய தகவல் `யூ- போட்' என்ற நீர்மூழ்கிக் குண்டுகளை வீசும் படகுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்த படகின் கேப்டன் எர்னஸ்ட் மெங்கர்சன் தனது படகை கெயர் சோப்பா கப்பல் இருக்கும் இடம் நோக்கி செலுத்தினார். நன்றாக அழகுபடுத்தப்பட்டிருந்த அந்த படகு தாக்குதலுக்கு தான் வருகிறது என்ற சந்தேகம் யாருக்கும் உருவாகவில்லை.

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0603


ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by சிவா Sun Nov 06, 2011 11:12 am

கப்பலின் அருகில் வந்த `யூ-போட்' படகு சக்தி வாய்ந்த நீர்மூழ்கிக் குண்டு ஒன்றை அதன்மீது வீசியது. அது கப்பலின் முன் பகுதியை துளைத்து, உள் பகுதியை கிழித்துப் போட்டது. அப்போது தான் புதிய நாள் தொடங்கி 8 வினாடிகள் ஆகி இருந்தன. நேரம் 00.08. 1941 பிப்ரவரி 17.

கப்பல் தாக்கப்பட்டவுடன் ரேடியோ சிக்னல் தடைபட்டு, உலகின் தொடர்பில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. 20 நிமிடங்களில் கப்பல் முழுவதுமாக மூழ்கியது. தப்பிக்க வழி இல்லாமல் கப்பலுடன் சேர்ந்து மூழ்கினர், மாலுமிகள். கப்பலில் 3 உயிர் காக்கும் படகுகள் இருந்தன. அதில் ஒன்றில் கப்பலின் 2-வது உயர் அதிகாரி ரிச்சர்டு ஐரேஸ் என்பவர் 6 மாலுமிகளுடன் தப்பித்தார். 13 நாட்கள் கடலுக்குள் தத்தளித்து அவர் மட்டும் கரை சேர்ந்தார். அவருடன் வந்த 6 மாலுமிகளும் கடலில் மூழ்கி இறந்தனர்.

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0609


ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by சிவா Sun Nov 06, 2011 11:12 am

பொதுவாக கப்பல்கள் கடலில் மூழ்கி விட்டால் அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஏனென்றால் மூழ்கிய கப்பலின் மொத்த மதிப்பை விட வெளியே எடுக்கும் செலவு கூடுதலாக இருக்கும். ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்பம் இந்த செலவுகளை குறைத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் என்பது மனிதன் இல்லாமல் எந்திரங்களை கொண்டு செய்வது. ரோபோ, கேமிரா போன்றவற்றின் வரவால் இந்த வேலை எளிதானது. இவை மனிதன் நுழைய முடியாத ஆழ்கடலிலும் எளிதாக இறங்கி தகவலை கொண்டு வந்து சேர்த்து விடுகின்றன.

இந்த தொழில்நுட்ப வளர்ச்சி தான் இங்கிலாந்துக்கு கெயர் சோப்பாவை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலையும் ஆவலையும் கொடுத்தது. அதற்காக 1989-ல் ஒரு டெண்டர் விட்டது. அது `டீப் வாட்டர் ரெக்கவரி அன்ட் எக்ஸ்புளோரேஷன்' என்ற நிறுவனத்துக்கு கிடைத்தது. அந்த நிறுவனமும் கடலுக்குள் குதித்து தேடிப்பார்த்தது. எதுவும் அகப்படவில்லை. வெளியே வந்தது.

மீண்டும் 2010 ஜனவரியில் ஒரு டெண்டர் விடப்பட்டது. இந்தமுறை ஒடிசி மெரைன் எக்ஸ்புளோரேஷன் என்ற நிறுவனம் கடலுக்குள் இறங்கியது. அமெரிக்க நிறுவனமான இது ஏற்கனவே கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல விருதுகளை பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு மேலாக கடலை அலசி ஆராய்ந்ததில் இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி மூழ்கிய பொக்கிஷ கப்பலை கண்டுபிடித்தனர். இது மிகப்பெரிய சாதனை.

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0605


ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by சிவா Sun Nov 06, 2011 11:13 am

நடுக்கடலில், 4.7 கி.மீ. ஆழத்தில் அடர்ந்த இருளில் சகதிக்குள் புதைந்து போய் பாசி மூடியிருக்கும் ஒரு கப்பலை அடையாளம் காண்பது என்பது சாதாரண செயல் அல்ல. முதலில் மனிதர்கள் தான் கடலுக்குள் இறங்கினார்கள். 2.7 கி.மீ. ஆழம் வரை சென்றவர்களால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. இனி முடியாது என்று மேலே வந்து விட்டனர்.

அதன்பின் சக்தி வாய்ந்த விளக்குகள், கேமிரா சகிதமாக நவீன ரோபோவை கடலுக்குள் அனுப்பினர். 4.7 கி.மீ. ஆழம் சென்றவுடன் மூழ்கி இருந்த கப்பலை கண்டுபிடித்தது.

முதலில் ரோபோ கேமிராவில் நீர்மூழ்கிக் குண்டு ஏற்படுத்திய பெரிய ஓட்டை தான் பதிவானது. அதன் வழியாக உள்ளே நுழைந்து கப்பலின் உள் பகுதியை பார்த்த போது அந்த பகுதி பிரவுன் நிறத்தில் தொங்கும் பனிபோல் பளபளப்பாக தெரிந்தது. அதில் இடுப்பளவு உயரம் கொண்ட பித்தளையால் ஆன திசை காட்டும் கருவி ஜொலித்துக் கொண்டிருந்தது. இது லேசான நம்பிக்கையை தர கெயர் சோப்பா கப்பல் தானா என்பதை உறுதி செய்ய மேலும் ஆதாரத்தை தேட முயன்றனர்.

மிகச்சிறிய கேமிரா மூலம் 41/2 மணி நேரம் கப்பலை சோதனை செய்தனர். கப்பலின் உள்புறத்தில் இருக்கும் கருப்பு சிவப்பு வண்ணம் மேலும் கூடுதலான நம்பிக்கையை தந்தது. ஏனென்றால் பிரிட்டிஷ் இந்திய ஷிப்பிங் நேவிகேஷன் கப்பலின் உட்புறம் இதே வண்ணத்தில் தான் இருக்கும். அதன்பின் நங்கூரத்தின் வடிவம், கப்பலின் அடிப்பகுதியில் சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் எண் எல்லாமே கெயர் சோப்பாவுடன் ஒத்துப்போயின. கப்பலில் வெள்ளிக்கட்டிகள் இருக்கும் இடத்தை மட்டும் ரோபோவால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் டீத்தூள் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பெட்டியை ரோபோ படம் எடுத்த போது பெட்டியின் உள்பகுதியில் பளபளப்பான ஒருகோடு தெரிந்தது. அதுதான் வெள்ளிக்கட்டி என்று முடிவுக்கு வந்தனர்.

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0604


ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by சிவா Sun Nov 06, 2011 11:14 am

இதுபற்றி ஒடிசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரேக் ஸ்டெம் என்பவர் கூறும் போது, ``இங்கிலாந்து அரசு எங்களது கண்டுபிடிப்பை அங்கீகரித்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த கப்பலில் எவ்வளவு வெள்ளி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. யுத்த காலத்தில் கப்பலில் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் உண்மையான மதிப்பை தெரிவிக்க மாட்டார்கள். அதை ரகசிய குறிப்பாகவே வைத்துக் கொள்வார்கள். கப்பல்களில் மதிப்புமிக்க சரக்குகள் சென்றால் எதிரிகளின் தாக்குதலுக்குள்ளாக நேரிடும் என்பதால் தான் இந்த ஏற்பாடு. ஆனால் ஒடிசியின் வரலாற்று ஆராய்ச்சி மூலமும் கப்பலுக்காக செலுத்தப்பட்டிருந்த காப்பீட்டுத் தொகையின் மதிப்பு போன்றவற்றை வைத்தும் இந்த கப்பலில் 240 டன் அளவுக்கு வெள்ளி இருக்கும் என்று தெரியவந்தது. அவை கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ இருக்கலாம்'' என்றார்.

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0606

மூழ்கிக் கிடக்கும் வெள்ளியின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட 1,284 கோடி ரூபாய். அதிர்ஷ்டவசமாக இந்த கப்பல் மேல்நோக்கியபடியே மூழ்கி இருக்கிறது. அதாவது கடலுக்கு அடியில் தரை தட்டி நிற்பது போல்... அதனால் சுலபமாக இதன் மீது உள்ள பொருட்களை வெளியே எடுக்க முடியும். அதிலும் மேல் பக்கம் குண்டால் தகர்க்கப்பட்ட ஓட்டை இருப்பது இன்னும் வசதி.

ஒடிசி நிறுவனம் 2012-ல் கப்பலில் இருக்கும் பொருட்களை எடுக்கத் தொடங்கும் அதில் கிடைக்கும் பொருளின் மதிப்பில் 80 சதவீதம் ஒடிசி நிறுவனத்துக்கும் 20 சதவீதம் இங்கிலாந்து அரசுக்கும் போய்ச்சேரும்.நவீன தொழில்நுட்பம் ஆழ்கடல் தேடலில் மிகப்பெரிய கதவை திறந்து வைத்துள்ளது. அதன் முதல் முயற்சி தான் கெயர் சோப்பாவின் கண்டுபிடிப்பு. இன்னும் இதுபோன்ற ஏராளமான கப்பல்கள் கடலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. உலகப்போரில் தாக்கப்பட்டு கடலில் மூழ்கிய கப்பல்கள் ஏராளம். அவற்றினுள்ளும் ஏகப்பட்ட பொக்கிஷ செல்வங்கள் இருக்கும்.

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0611

இதுவரை அடர்ந்த இருளையும், திகில் நிறைந்த மர்மங்களையும் மட்டுமே உலகுக்கு சொல்லிக் கொண்டிருந்த ஆழ் கடல்கள் இனி புதையலையும் பொக்கிஷங்களையும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.


ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by சிவா Sun Nov 06, 2011 11:14 am

பெயர் வந்தது எப்படி?

முதலில் இந்த கப்பலுக்கு எஸ்.எஸ்.வார் ரோபக் என்று தான் பிரிட்டிஷ் ஷிப்பிங் கண்ட்ரோலர் பெயர் கொடுத்திருந்தார். ஆனால் கப்பல் முழுவதுமாக கட்டி முடிப்பதற்குள் கெயர் சோப்பா என்ற பெயரை மாற்றினார். கேயர் சோப்பா என்பவர் உத்தர (வடக்கு) கர்நாடகத்தை ஆட்சி செய்த மன்னர் விஜயநகரப் பேரரசுக்கு நெருங்கிய உறவினர். இவரது வழிவந்த மன்னர்கள் போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்தனர். அவர்களை கட்டுக்குள் வைத்திருந்தனர். இதுவே பின்னாளில் இந்த பகுதியில் ஆங்கிலேயர்கள் காலூன்ற காரணமாக அமைந்தது. அதனால் பிரிட்டிஷாருக்கு கேயர் சோப்பா வம்சத்தின் மீது எப்போதும் பாசம் இருந்தது. அதன் வெளிப்பாடாகவே கர்நாடகத்தில் இருக்கும் புகழ் பெற்ற ஜோக் பால்ஸுக்கு (அருவி) கேயர் சோப்பாவின் பெயரை வைத்தனர். பின்னர் வார் ரோபக் என்ற கப்பலுக்கும் அவர் பெயரையே வைத்தனர்.


ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by சிவா Sun Nov 06, 2011 11:15 am

மூழ்கிக் கிடக்கும் மேலும் ஒரு கப்பல்

வட அட்லாண்டிக் கடலில் ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல் குண்டுவீச்சில் 1917, பிப்ரவரி 9-ந் தேதி மூழ்கிய மற்றொரு கப்பலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... SPA0610

எஸ்.எஸ்.மன்டோலா என்ற அந்த கப்பலில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் பவுண்டு வெள்ளி உள்ளது. அதாவது 19 டன்னுக்கு சமம். இதன் இன்றைய இந்திய மதிப்பு 85 கோடியே 50 லட்சம் ரூபாய்.

கடலுக்குள் இன்னும் இதுபோன்று எத்தனை எத்தனை புதையல்கள் கிடைக்கப்போகிறதோ?

தினதந்தி


ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by கேசவன் Sun Nov 06, 2011 11:42 am

டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் இருந்து அதன் இறுதிப்பயணம் தொடங்கியது
எனவே இந்த கப்பலில் உள்ள வெள்ளி இந்தியாவிற்கே சொந்தம் .எனவே இந்தியாவும் இந்த கப்பலை வெளியே எடுக்க டெண்டர் விட்டு முயற்சிகள் மேற்கொள்ளலாமே


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... 1357389ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... 59010615ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Images3ijfரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்... Empty Re: ரூ.1,300 கோடி புதையலைத் தேடி கடலுக்குள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum