புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
21 Posts - 70%
heezulia
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
1 Post - 3%
viyasan
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
213 Posts - 42%
heezulia
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
21 Posts - 4%
prajai
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேலை Poll_c10வேலை Poll_m10வேலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 9:20 am

காலைநேர ஜிலுஜிலுப்பிற்கிடையே ஒரு பரபரப்பும் சூழ்ந்திருந்தது அந்த வீட்டில்!

தன்னை அவசர அவசரமாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தான் ஆதவன். அள்ளி முடித்த ஈரக்கூந்தலோடு மங்கலம் துலங்க சாமி படத்திற்கு முன் பயபக்தியோடு நின்று வணங்கி தனது கோரிக்கைகளுக்கு வலுவேற்றிக் கொண்டிருந்தாள், அவன் மனைவி மல்லிகா. பள்ளிக்குச் செல்ல தயார் நிலையில் அவர்களது பிள்ளைகள் இருவரும் வாகனத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பெரிய கம்பெனியிலிருந்து ஆதவனுக்கு இண்டர்விï அழைப்பு வந்திருந்தது. இன்று அவன் அதற்கு ஆஜராக வேண்டும். பல கிளைகளோடு பெரிய அளவில் வளர்ந்திருக்கிற நிறுவனம் அது. அதில் வேலை கிடைத்து விட்டால் அவனது வாழ்க்கை பெரும் உயரத்தைத் தொடும்! ஆகவேதான், கணவன், மனைவி, பிள்ளைகள் வரை பெரும் எதிர்பார்ப்பும், ஆவலுமாய் காணப்பட்டார் கள்.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் மல்லிகா. கணவன் கிளம்பத் தயாராகி விட்டதை உணர்ந்தாள். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட வேண்டும் என்று அவள் உள் மனதிற்குள் சிறு குரல் ஒன்று இடித்துக் கொண்டிருந்தது. அவன் முன்வந்து நின்றாள். நிமிர்ந்து பார்த்தான் அவன். அவள் முகத்தில் கலக்கம் தெரிந்தது. துணுக்குற்ற அவன், "என்னாச்சி உனக்கு?'' என்று ஆறுதலாகக் கேட்டான்.

"இன்னைக்கி எப்படியும் ஜெயிச்சிட்டு வரணும் நீங்க...''

"ஏன் இதிலே உனக்கு சந்தேகம்?'' அவன் நிதானமாகக் கேட்டான்.

"உங்க மேலேயோ உங்க திறமை மேலேயோ எனக்கு எந்த சந்தேகமும் இல்லீங்க. ஆனா, இந்க ஆறு வருஷத்திலே நீங்க கலந்துக்கிட்ட இண்டர்விï சரியா பதினேழு. அதிலே யார் மேலேயாவது இரக்கப்பட்டு விட்டுக் கொடுத்துட்டு வந்தது மட்டும் பத்துக்கு மேலே.''

"இதெல்லாம் அப்போதைய சூழ்நிலை...''

"இருக்கலாம்! ஆனா அதைவிட மேலே நிக்கிறது உங்களுடைய இரக்க குணம்.''

"அது தப்புங்கிறியா?''

"அது தப்பா சரியான்னு நான் விவாதம் பண்ண வரலே. இப்ப நமக்கு நிரந்தரமான ஒரு வேலை வேணும். ஏன்னா...., நம்ம பிள்ளைங்க வளர்ந்து ஆளாகி பெரிய படிப்புக்கெல்லாம் போகும்போது, இன்னைக்கி போதுமானதா இருக்கிற வருமானம், அன்னக்கி நிச்சயமா போதாது. அப்ப நாம கையை பிசைஞ்சிகிட்டு நிப்போம். கடன் வாங்க ஆளைத்தேடி அலைவோம். அதுவும் தவிர உங்களுடைய உயர்ந்த படிப்பறிவு, திறமை, சாமர்த்தியம் இதெல்லாம் இருட்டறைக்குள்ளே மண்ணுக்குள் புதைஞ்சி கிடக்கிற இரும்பு மாதிரி துருப்பிடிச்சி எதுக்கும் உதவாம போகும். அதனாலே...!''

முன்னெச்சரிக்கை இழையோடிய அவள் பேச்சைக்கேட்டு வியந்த ஆதவன் "ம்...'' என்று ஆமோதித்து அவள் மேலே பேச ஊக்குவித்தான்.

"அதனாலே... உங்க செண்டிமெண்ட் குணத்தை கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு இந்த இண்டர்விïலே கண்டிப்பா பாஸாகி வரணும்!'' என்று கெஞ்சுதலாக சொல்லி கைகூப்பினாள்!

ஆதவன் நெகிழ்ந்து போனான்! அவள் கைகளைப்பற்றியபடி, "கவலைப்படாதே உன் விருப்பப்படி நடக்கும்'' என்று ஆறுதல் சொன்னான்.

செழிப்பையும் செல்வாக்கையும் செருக்கோடு அறிவிக்கும் விதத்தில், நான்கு மாடிகளாக அந்த கம்பெனி மாளிகை கம்பீரமாக எழுந்து நிற்கிறது. விறுவிறு என்று படிகளைக் கடந்து மூன்றாவது மாடியை அடைந்தவன், இண்டர்விï ஹால் என்று பொன்னிற எழுத்துக்களால் எழுதப்பட்ட சிறிய போர்டு கதவைத்தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். பளிச்சென்று வெளிச்சத்துடன், அழகு மிகுந்த இருக்கைகளுடன் பிரமிக்க வைத்தது அந்த அறை. ஏசி குளிரிலும் அவனுக்கு வியர்த்தது.

விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை நுணுக்கமாக பரிசீலித்து முழுத்தகுதி வாய்ந்தவர்களை மட்டும் நேர்காணலுக்கு அழைப்பது அந்தக் கம்பெனியின் வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஆதலால் கூட்டம் அதிகமில்லை. எண்ணி ஆறு `தலை' தெரிகிறது. ஆதவனையும் சேர்த்தால் ஏழு பேர் தான். அவர்கள் முகங்களைப் பார்த்தபோது யார் முகத்திலும் கலக்கமோ, பரபரப்போ தென்படவில்லை. மாறாக செழிப்பும், செருக்குமாகவே காட்சியளிக்கிறார்கள்.

வாழ்வதற்காக வேலை தேடுவது ஆதவன் ரகம்! கவுரவத்திற்காக வேலை தேடுவது இங்கே வந்து அமர்ந்திருப்பவர்கள் ரகம்! ஆகவே இரக்கம் என்ற வரத்தை இவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்... தரவும் மாட்டார்கள். அதனாலே மல்லிகாவின் கோரிக்கைக்கு ஒரு வெற்றி. இதில் சின்ன மகிழ்ச்சி.

அடுத்து இண்டர்விï ஆரம்பமானது. ஒவ்வொருவராக உள்ளே போய் கால் மணி நேரத்தில் திரும்புகிறார்கள். எஞ்சியிருப்பவர்கள் ஆதவனும், இன்னொருவரும் தான். வேலை வாய்ப்பும் இந்த இருவரில் ஒருவருக்குத்தான் என்பது ஓரளவு உறுதிப்படுகிறது. அந்த அதிர்ஷ்டசாலி யார்? அது நிச்சயிக்கமுடியாத மதில் மேல் பூனை.

தனது போட்டியாளனின் முகத்தை முதன்முதலாகப் பார்க்கிறான் ஆதவன். அவன் ஒரு இளைஞன், இளம் கனவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் அந்த முகம். படிப்பு முடிந்த சூட்டோடு வேலை வாய்ப்பை நாடி வந்திருக்கிறான். இந்த வேலை அவனுக்குக் கிடைத்தால் ஒரு சாதனையாளனாக உயர வாய்ப்பிருக்கிறது. துள்ளலும் துடிப்புமான அவனது தோற்றம் இதைச் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரம் இந்த வேலையெல்லாம் உனக்கெதற்கப்பா... இப்போதைக்கு நான் ஜெயிக்க வேண்டியது மட்டுமே முக்கியம். மற்றபடி இந்த ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லாதது என்று அவனது உள்மனம் எச்சரிக்கிறது, அடங்குகிறான்.

அப்போது...

உள்ளிருந்து ஒருவர் வந்து, `மிஸ்டர் ஆதவன், மிஸ்டர் வீரகுமார்... நீங்க கொஞ்ச நேரம் காத்திருக்கணும். இப்ப சின்ன இடைவேளை நேரம்'' என்று அறிவித்து விட்டு, அதற்கான சிறிய வருத்தமும் தெரிவித்து விட்டு திரும்பியவர், அந்த இளைஞனைப் பார்த்து மெலிதான புன்னகையுடன் மறைமுகமாக கட்டை விரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்டிவிட்டுப் போகிறார்.

ஆதவன் இதைக் கவனித்தான். அதற்கு அர்த்தம் அவனுக்கே வேலை என்பதுதான். அதையும் உணர்ந்தான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் திடமாக இருப்பது அவனது வாடிக்கை. இருப்பினும், இது மல்லிகாவின் பிரச்சினை. அவள் தாங்க மாட்டாள். அவளது கண்ணீர் தோய்ந்தமுகம் அவன் மனக்கண்முன் வந்து நிற்கிறது. `அருமை மல்லிகா... இதில் என் தவறு எதுவும் இல்லை. ஆனாலும் மன்னித்துவிடு' என்று கெஞ்சுகிறான்.

`சார்' என்ற குரல் கேட்டு சிந்தனை கலைந்து திரும்புகிறான். பக்கத்திலேயே அந்த இளைஞன் வந்து அமர்ந்திருக்கிறான். "சார் உங்க பெயர் ஆதவனா...?'' என்று கேட்கிறான்.

"ஆமாம்''

இந்த பதிலை கேட்டு துள்ளி இருக்கை நுனிக்கு வந்தான்.

"ஆறு வருஷத்துக்கு முந்தி, சைதாப்பேட்டை ஸ்டேஷன் ரோடு, ஒரு பழைய கட்டிடம் அதிலே இரண்டாவது மாடியிலே குடியிருந்தார். அவர் பெயரும் ஆதவன்தான்.''

"ஆமாம்... அந்த ஆதவன் நான்தான். இதெல்லாம் எப்படித் தெரியும்...?''

"எங்க அண்ணன் சொன்னார்!'' என்று சொல்லிவிட்டு, சரேலென்று எழுந்து விறுவிறு என்று நடந்து இண்டர்விï அறைக்குள் நுழைந்து

விட்டான்.ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

பெயர் கேட்டான், பழைய முகவரியை சரியாகச் சொன்னான், பட்டென்று உள்ளே நுழைந்து விட்டான். அங்கே போய் என்ன செய்யப் போகிறான்? எதுவும் ஆப்பு வைக்கப் போகிறானா? வேலையே இல்லை என்றாகிவிட்ட பிறகு இவன்போய் எதையும் செய்வதற்கு தன்னிடம் எந்தத் தவறும் இல்லை. முதலாவதாக ஆஜரான இண்டர்விïலேயே, ஒருவர் அவன் காலடியில் அமர்ந்து, `படிக்கிற தம்பி, திருமண வயதில் தங்கை, நோய்வாய்ப்பட்ட பெற்றோர்... இந்த வேலையில்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விடும்' என்று கண்ணீர் வடித்தார்.

அன்று தன்னால் ஒரு குடும்பம் அழிவதை விரும்பாமல் இந்த வேலையை அவருக்கே கொடுத்து விடுங்கள் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறினான். இப்பொழுதும் கூட அவன்மனதில் `இந்த இளைஞனே ஜெயிக்கட்டும்' என்ற எண்ணம் மல்லிகாவின் வேண்டுகோளையும் மீறி எட்டிப் பார்த்தது.` வேலை வாய்ப்பு கதவுகள் என்றும் திறந்தே இருக்கும், அதிலிருந்து வரும் அற்புத வாய்ப்பு ஒன்று என்றாவது ஒருநாள் தன்னை அணைத்துக் கொள்ளும். அப்படியே இல்லையென்றாலும், தனது திறமையினால் சுயமுயற்சியில் இறங்கி, பெரும் வெற்றியை அடைவேன் இது நிச்சயம்!'

-மனதில் இப்படி ஒரு திடம் ஏற்பட்டவுடன் சரேலென்று எழுந்து வேகமாக நடந்து அங்கிருந்து வெளியேற கதவருகே வந்தான்.

அப்போது...

சார்... கொஞ்சம் நில்லுங்கள் என்ற குரல் கேட்டுத் திரும்புகிறான். அங்கே அதிகாரிகள் அனைவரும், ஆபீஸ் ஸ்டாப்புகள் சிலரும் என்று ஏராளமானோர் நிற்கிறார்கள். அவர்களுக்கிடையே அந்த இளைஞன் வீரகுமாரும் நிற்கிறான்.

"மிஸ்டர் ஆதவன்... உங்களுடைய தியாக நடவடிக்கைகளை ரொம்ப விளக்கமாக, மிஸ்டர் வீரகுமார் சொன்னார். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட மனிதரா? என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

உங்களைப் போன்ற மனிதநேயமும், தியாக சிந்தனையும் உள்ள ஒரு மாமனிதர் இங்கே வேலையில் அமர்வதை, இந்தக் கம்பெனியும், நாங்களும் பெரும் பாக்கியமாக நினைக்கிறோம்.''

தலைமை அதிகாரி இதைக்கூற, கூடி நின்ற அனைவரும் கைதட்டி வரவேற்கிறார்கள்.

"இதோ உங்கள் அப்பாயின்மெண்ட் ஆர்டர்'' என்று கவரை அவன் முன் நீட்டுகிறார்.

திக்கற்றவர்களுக்குச் செய்கிற உதவி - தெய்வத்திற்கு செய்கிற உதவியாகும். ஒரு கையால் செய்த உதவிக்கு தெய்வம் இரு கையாலும் வாரி வழங்கும் என்கிற தெய்வீக தத்துவம் இங்கு நிஜமாகிறதோ என்று மனதிற்குள் சிலாகித்த ஆதவன், இரு கைகளாலும் மகிழ்ச்சியோடு அந்த ஆர்டர் கவரைப் பெற்றுக் கொண்டான்.

- ஏ.பி.சதாசிவம்



வேலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 05, 2011 10:28 am

அட போங்கப்பா இது கதைல படிக்கிறதுக்கு வேணுமின்னா நல்லா இருக்கும்.ஆனா நடைமுறைக்கு ஒத்து வராது.
இருந்தாலும் கற்பனைக்காவது இந்த கதை நல்ல கதை



வேலை Uவேலை Dவேலை Aவேலை Yவேலை Aவேலை Sவேலை Uவேலை Dவேலை Hவேலை A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக