புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
336 Posts - 79%
heezulia
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
8 Posts - 2%
prajai
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திவ்யா... Poll_c10திவ்யா... Poll_m10திவ்யா... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திவ்யா...


   
   

Page 1 of 2 1, 2  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Oct 31, 2011 6:40 pm


அன்பு உறவுகளே...

ஓராண்டுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு... உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்...
காலை மணி 11.30... சென்னையில் இருந்து கோவை வழி செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் இரயிலில் ஆட்டு மந்தை போல் அடைந்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் எப்படியோ இடம் கிடைத்த சந்தோசத்தில் நான் வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தேன்...
எதிரில் ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண். எதிரில் இருந்த பெண் மணி உட்பட என்னை சுற்றி இருந்த கூட்டத்தில் முக்கால்வாசி ஆசிரியர்கள்தான். எதோ ஆசிரியர்கள் மாநாட்டிற்காக வந்ததாக பேசி கொண்டார்கள். இரயில் பெட்டி முழுவதும் கச கச என்று ஒரே கூச்சல், சண்டை, சச்சரவு.
இரயில் கிளம்பும் நேரத்தில்தான் அவள் வந்தால், அவளது பெயர் திவ்யா, முழுப்பெயர் திவ்ய தர்ஷினி... நல்ல அழகு, குட்டி உடை... அவளும் குட்டிப் பெண்தான்... ஆமாம் அவளுக்கு ஒரு வயதுதான் இருக்கும். அவளது தாத்தா அவளை தூக்கி கொண்டு கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்.
அந்த ஆசிரியர் பெண்மணி அவருக்கு கொஞ்சம் இடம் கொடுத்து அமரச் சொன்னார். கூட்டத்தை கண்டதும் அந்த குழந்தை திவ்யாவிற்கு அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை... நிறுத்தாமல் வெகு நேரம் அழுதால்...
நான் அவரிடம் குழந்தையை கேட்டு பெற்றேன்...
அவளை சமாதானம் செய்து வேடிக்கை காட்டி கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்தினேன்...
கொஞ்ச நேரத்தில் என்னுடன் நன்றாக பழகிவிட்டால்... பொம்மை போல் இருந்தால், எடையே இல்லை, பஞ்சு போல் இருந்தது அவளது பிஞ்சு உடல். அவள் செய்த குறும்பு இருக்கிறதே ஒரு வருடம் ஆகியும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது... அவளது தாத்தா சொல்வதை எல்லாம் செய்து காட்டினால்.
சிறிது தூரம் கடந்ததும் குழந்தை பசியால் அழத் துவங்கினாள்.
நான் பையில் வைத்திருந்த ரொட்டியை எடுத்து ஊட்டினேன். பிறகு அவள் தாத்தாவிடம் இருந்து பால் புட்டி வாங்கி ஊட்டிவிட்டேன்.
மீண்டும் குறும்பு விளையாட்டினை துவங்கினாள் அந்த குறும்பி...
என்னை சுற்றி நிறைய இளைஞர்கள்... அவளை என் குழந்தை என்றே பலர் நினைத்து கொண்டனர்.
கால் வைக்க கூட இடமில்லா அந்த கூட்டத்தில் அத்தனை பேரையும் சிரிக்க வைத்த சின்ன தேவதை அந்த திவ்யா குட்டிதான். ஒவ்வொருவரும் குழந்தையை தூக்கி கொஞ்ச துவங்கினர்.
கையில் வைத்திருந்த மிட்டாய், சாப்பிடும் பொருள் ஒவ்வொன்றையும் அவளுக்கு ஊட்டி விட்டனர்.
வழக்கம் போல் உளவியல் ரீதியாய் என் மனம் செல்லலாயிற்று...
கூட்ட நெரிசலில் மனித தன்மை மறந்து மிருகம் போல் செயல்பட்ட, பேசிய ஒவ்வொரு நபரையும் இந்த சுட்டி குழந்தை மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்து சென்றுவிட்டாளே !!!
நிற்க வழியில்லாத அந்த நெரிசலில் ஒவ்வொருவர் முகத்திலும் சிரிப்பை வரவழைக்க ஒரு குழந்தை போதுமாய் உள்ளதே...!!! என்ற வியப்பும் அதற்கான காரணத்தை நோக்கியும் என் மனம் அலைய துவங்கியது...

நேரம் கடந்தது, குழந்தை பல இளைஞர்களிடம் சென்று கடைசியாய் என்னிடமே வந்தது... குழந்தையை விட்டு விட்டு அந்த இளைஞர்கள் செல்லும் முன் என்னிடம் ஒரு மிட்டாயை ஒரு இளைஞர் கொடுத்தார். அப்போது அவர் சொன்னார் "குழந்தைக்கு மிட்டாயை உடைத்து ஊட்டுங்கள் அப்படியே ஊட்டிவிடாதீர்கள்" என்று... அருகில் இருந்த அவரது நண்பர் "டேய் குழந்தையோட அப்பாவுக்கு தெரியாதாடா ? நீ அவருக்கு சொல்லிதர்ரியா?, லூசு, வா போகலாம்"
எனக்கு சிரிப்புதான் வந்தது... இது பல முறை என் வாழ்வில் நடந்த ஒன்றுதான்...

என் மடியில் அமர்ந்தபடி பயணித்த அவள் சிறிது நேரத்தில் என் மடியிலேயே தூங்கினால்... எனக்கு ஒரு மென்மையான உணர்வு, அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை, நீங்கள் உண்டு என்று சொல்லும் கடவுளை நான் மடியில் ஏந்துவது போன்ற உணர்வு, மனதின் வேதனைகள் யாவையும் மடியில் புதைந்து போனதாய் உணர்த்தியது அந்த உணர்வு, ஒரு வித பெருமிததோடு வந்த கர்வ உணர்வு அது...

இதுதான் தாய்மையோ...?

ஆம் தாய்மைதான், கர்பம் இன்றி தாய்மை அடைந்த கர்வ உணர்வுதான் அது...ஒரு ஆணை தாயாய் மாற்றும் கலை ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு, ஒவ்வொரு குழந்தை உள்ளம் கொண்டோருக்கும் உண்டு..அதில் முதன்மை பங்கு தங்கைக்குதான்...நமது சிறுவயதிலேயே நம்மை தாய் ஆக்குவது நமது தங்கைதான்..

உறக்கம் கலைந்த திவ்யா மீண்டும் விளையாட்டில் இறங்கினால், எல்லோரிடமும் சென்றாள் என்னிடம் இம்முறை வரவே இல்லை... நான் அதை நினைந்து வருந்தவும் இல்லை, என்னை விட்டு விலகி விலகி சென்றாள், ஏன் என்று தெரியவில்லை. கோவையை நெருங்கும் நேரம், அவளது தாத்தா அவளை அதட்டி விட்டார். அழ ஆரம்பித்தவள் நிறுத்தவே இல்லை, எல்லோரும் சமாதானம் செய்தார்கள் ஆனால் ஒருவரிடமும் செல்லவில்லை அவள்.

அவள் தாத்தாவே சமாதானம் செய்து தூக்கி பார்த்தார். அவரிடமும் செல்லாமல் பிடிவாதமாய் விலகி அழுதுகொண்டே அங்கும் இங்கும் அலைந்தால். என்னதான் ஒரு ஆண் ஒரு குழந்தை மீது அன்பு காட்டினாலும் அந்த குழந்தை அழும்போது தேடுவது தன் தாயைதான்..

அவளும் தாயைதான் தேடுகிறாள் என்பது எனக்கு புரிந்தது. நான் அவளை அழைக்கவே இல்லை நடப்பவற்றை பார்த்துக் கொண்டு மட்டும் அமர்ந்து இருந்தேன்.
அங்கும் இங்கும் அலைந்த அவள் என்னை பார்த்ததும் திடீர் என்று ஓடி வந்து என் கழுத்தை கட்டிக்கொண்டு இறுக என்னை அணைத்து கொண்டால்... நானும்தான்...

அங்கு இருந்தோர் அனைவரும் என்னை ஆச்சர்யமாய் பார்த்தனர். அவள் தாத்தாவும் தான். அவர் சொன்னார் அவள் அழும் பொது அவள் அம்மாவை தவிர வேறு யாரிடமும் செல்லமாட்டாள், யாராலும் அவள் அழுகையை நிறுத்தவும் முடியாது, உங்களிடம் இப்படி ஒட்டிக்கொள்வாள் என்று நான் நினைக்கவே இல்லை... என்று கூறினார்.
எனக்கு ஒரே பெருமிதம்தான். முகம் முழுவதும் எனது பெருமிதம் பெருக்கெடுத்து பிரகாசித்தது...

இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல, ஆனால் இந்த பெருமிதம் எனக்குள் இருந்த என் தாய்மை உணர்வை தூண்டிய அந்த குட்டி குழந்தை மீதானது...

அவள் கண்ணீரை துடைத்துவிட்டு "அழாதடா தங்கம்" என்று சொல்லிக்கொண்டு அவளை தூக்கி சென்றேன், கதவின் அருகே அவளை தூக்கி பிடித்து வேகமான தென்றலோடு என் அன்பினை கலந்து அவளுக்கு ஊட்ட எனக்கு தனிமையோடு சில நிமிடங்கள் கிடைத்தன.

நான் இறங்கும் இடம் நெருங்க நெருங்க என் தாய்மை உணர்வை இழக்க சில நிமிடங்கள் மட்டுமே இருப்பதை எண்ணி ஒரு வருத்தம் தொற்றியது, அவளை தோளில் வைத்து ஆட்டிக்கொண்டே இருந்தேன். என் தோளிலேயே தூங்கிவிட்டால் அந்த தேவதை...

நாங்கள் இறங்கும் இடம் வந்தது, நானும் அவளது தாத்தாவும் சேர்ந்தே இறங்கினோம், குழந்தை இப்போதும் என் தோளில்தான் தூங்கிக்கொண்டிருந்தால். குழந்தையின் அப்பா அவளுக்காக ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தார்.
கையில் ஒரு கூடை, அதில் குழந்தைக்கு தேவையான பொருட்கள் இருந்தன. சிறிதுநேரம் அவரிடம் பேசிவிட்டு, பிரிய மனமின்றி குழந்தையை என் தோளில் இருந்து விடுவித்து அவரிடம் கொடுத்தேன், பிரியும் வேளையில் ஒரு அன்பு முத்தத்தை அவள் கன்னத்தில் பதித்து விட்டு அவள் தந்தையிடம் "திவ்யா சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆச்சு, முழிச்சவுடன் அழுவாள், பால் புட்டி அவுங்க தாத்தாட்ட இருக்கு மறக்காமல் பால் குடுத்துருங்க, பசியோட அப்டியே தூங்கிற போறா, பாத்துக்குங்க" என்று சொல்லிவிட்டு நான் செல்கையில் திவ்யாவின் தந்தை ஒரு புன்சிரிப்போடு என்னை வழி அனுப்பினார்.

சிறிது நேரம் கழித்து அவர் சிரித்ததை பற்றி யோசித்து பார்த்ததும் என் மனசாட்சி கூறியது "டேய் குழந்தையோட அப்பாவுக்கு தெரியாதாடா ? நீ அவருக்கு சொல்லிதர்ரியா?, லூசு, வா போகலாம்" என்று...

இந்த பதிவு பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம், ஏனென்றால் இதில் நான் எந்த ஒரு கருத்தையும், அழுத்தத்தையும் பதியவில்லை, என்னை போன்று அந்த இரயிலில் பயணம் செய்த பல இளைஞர்களின் தாய்மை குணத்தை எங்களுக்கு அன்று உணர்த்திய அந்த குட்டி செல்லத்திற்கு இந்த பதிவினை சமர்பிக்கிறேன், அவ்வளவுதான்...

இதோ அந்த தேவதையின் சில புகை படங்கள்...

திவ்யா... Photo00362

திவ்யா... Photo00522

திவ்யா... Photo00392l

திவ்யா... Photo0040hk

திவ்யா... Photo00412c

திவ்யா... Photo00422

திவ்யா... Photo00432

திவ்யா... Photo00442

திவ்யா... Photo00482

திவ்யா... Photo00492

திவ்யா... Photo00532

திவ்யா... Photo00512




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... Hதிவ்யா... Aதிவ்யா... Sதிவ்யா... Aதிவ்யா... N
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 6:57 pm

உண்மை தான்,, இந்த மாதிரி நிகழ்வுகள் ரயில் பயணங்களில் அதிகம் நடக்கும்.. எனக்கும் நடந்திருக்கிறது.. குழந்தை அழுதுச்சுன்னு சொன்னீங்க ஆனா எல்லா படத்துலயும் சிரிச்சு கிட்டு இருக்கே ஜாலி




திவ்யா... Power-Star-Srinivasan
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Oct 31, 2011 7:00 pm

பிளேடு பக்கிரி wrote:உண்மை தான்,, இந்த மாதிரி நிகழ்வுகள் ரயில் பயணங்களில் அதிகம் நடக்கும்.. எனக்கும் நடந்திருக்கிறது.. குழந்தை அழுதுச்சுன்னு சொன்னீங்க ஆனா எல்லா படத்துலயும் சிரிச்சு கிட்டு இருக்கே ஜாலி

அழும்போது எப்படி படம் எடுக்குறது? அவ சிரிக்கும்போதுதான் படம் எடுத்தேன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... Hதிவ்யா... Aதிவ்யா... Sதிவ்யா... Aதிவ்யா... N
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 31, 2011 7:10 pm

உங்களுக்கு குழந்தை மனசு ஹாசன்..! மகிழ்ச்சி ரயில் பயணங்கள் சுகமானன நிகழ்வுகள்..! மகிழ்ச்சி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Oct 31, 2011 7:15 pm

நிற்க வழியில்லாத அந்த நெரிசலில் ஒவ்வொருவர் முகத்திலும் சிரிப்பை வரவழைக்க ஒரு குழந்தை போதுமாய் உள்ளதே...!!!

சூப்பருங்க அருமையிருக்கு ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 01, 2011 4:29 pm

உங்களுக்கும் குழந்தை மனசுதான் அண்ணா..
அந்த பாப்பா ரொம்ப கியூட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 01, 2011 4:39 pm

உங்களின் மன உணர்வு புரியுது வழக்கமான காமெடி இல்லாம நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 01, 2011 7:55 pm

எனக்கு குழந்தை மனசா அதிர்ச்சி
கொலைகாரணவிட கொடிய மனசு எனக்கு... எதிர்ப்பு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... Hதிவ்யா... Aதிவ்யா... Sதிவ்யா... Aதிவ்யா... N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 9:17 am

ranhasan wrote:எனக்கு குழந்தை மனசா அதிர்ச்சி
கொலைகாரணவிட கொடிய மனசு எனக்கு... எதிர்ப்பு
அது என்னமோ உண்மைதான் சிரி



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 02, 2011 3:04 pm

ரேவதி wrote:
ranhasan wrote:எனக்கு குழந்தை மனசா அதிர்ச்சி
கொலைகாரணவிட கொடிய மனசு எனக்கு... எதிர்ப்பு
அது என்னமோ உண்மைதான் சிரி

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... Hதிவ்யா... Aதிவ்யா... Sதிவ்யா... Aதிவ்யா... N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக