புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
366 Posts - 49%
heezulia
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
25 Posts - 3%
prajai
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_m10எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா?


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 30, 2011 4:31 pm

'இக்கரைக்கு அக்கரை பச்சை’ கதைதான் சொந்த வீடும், வாடகை வீடும்! வாடகை வீட்டில்
இருப்பவர்கள், 'பேசாமல் கடனை வாங்கிச் சொந்தமாக வீடு கட்டிவிட்டால் எந்தத்
தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாமே’ என்று நினைக்கிறார்கள். அதுவே,
சொந்த வீட்டில் குடியிருப்பவராக இருந்தால், 'வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி
மாளவில்லையே; பேசாமல் வாடகை வீட்டிலேயே இருந்திருக்கலாம்’ என்று
நினைக்கிறார்கள்!
வங்கிக் கடனில் வீடு வாங்கி, மாதா மாதம் இ.எம்.ஐ. கட்டுவது லாபமா? அல்லது வாடகை
வீட்டிலேயே கடைசி வரைக்கும் இருப்பது லாபமா? இந்த இரண்டில் 'எது பெஸ்ட்?’
என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த இரண்டில் எது சரி?
முதலில் வாடகை வீடு அல்லது கடனில் சொந்த வீடு இவற்றில் உள்ள சாதக, பாதக
அம்சங்களைப் பார்ப்போம்...
சொந்த வீடு சாதகங்கள்!
சொந்த வீட்டுக்காரன் என்கிற அந்தஸ்தும் கௌரவமும் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு
ஈடு-இணை எதுவுமில்லை. கூடவே நிரந்தர முகவரி; பல தகவல் பரிமாற்றங்களுக்கு
அவசியமான ஒன்றாக இது இருக்கிறது.
அடிக்கடி வீட்டைக் காலி செய்யும் சிக்கல் இல்லை. கூடவே, வீட்டு உரிமையாளர்
தொல்லைகள் இல்லை.
கடனில் வீடு வாங்கும்போது, மொத்த காலம் முழுக்க ஒரே அளவிலான தவணை கட்டி
வந்தால் (நிலையான வட்டி விகிதமாக இருக்கும் பட்சத்தில்) கடன் அடைந்துவிடும்.
வட்டி அதிகரித்தாலும் உங்களின் சம்பளம் அதிகரித்திருக்கும் பட்சத்தில் மாதத்
தவணையை சுலமாக முடித்துவிட முடியும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலே, வருமான வரியில் லட்சக்கணக்கில் சலுகைகள்
இருக்கின்றன. இந்தச் சலுகைகளைப் பொறுத்தவரை குடியிருக்க வீடு வாங்கும்போது,
திரும்பக் கட்டும் அசலில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் (80சி நிபந்தனைக்கு
உட்பட்டு), ஆண்டுக்கு வட்டியில் ஒன்றரை லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை
இருக்கிறது.
மின்சார கட்டணத்தைப் பொறுத்தவரை அரசு நிர்ணயித்ததைக் கட்டினால் போதும். இதன்
மூலமாகவே சாதாரண குடும்பம் ஒன்று குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு 300 முதல் 500
ரூபாய் வரை மிச்சம் பிடித்துவிடலாம்.
சொந்த வீடு பாதகங்கள்!
வேறு ஊருக்கு பணி மாற்றம் வந்துவிட்டால் அவ்வளவுதான்! சொந்த வீட்டை
விட்டுவிட்டுப் போவதா என்ற பெரும் குழப்பம் வந்துவிடும். போய்த்தான் ஆகவேண்டும்
எனும்பட்சத்தில், வீட்டை நல்ல நபராகப் பார்த்து வாடகைக்கு விட வேண்டிய கட்டாயம்
ஏற்படும்.
மாதத் தவணை போக, தண்ணீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வரி, சொத்து வரி, வீடு
பராமரிப்பு, வெள்ளை அடித்தல் என பல செலவுகள் மாற்றி மாற்றி வந்து கொண்டே
இருக்கும்.
ஃபிளாட் என்றால், குடும்பம் பெரிதாகும்போது போதுமானதாக இருக்காது. பெரிய வீடு
தேவைப்படும். இருக்கும் வீட்டுக்கே இ.எம்.ஐ. கட்டமுடியாமல் கண்விழி பிதுங்கும்
நிலையில் வேறு பெரிய வீடு வாங்குவது குறித்து யோசிக்கவே முடியாது.
வாடகை வீடு சாதகங்கள்:
'இருக்கிறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு ஊரே வீடு!’ என்பார்கள். அந்த
வகையில் நம் வசதிக்கு ஏற்ப விருப்பப்பட்ட இடத்துக்கு வீட்டை மாற்றிக் கொண்டு
போகலாம்.
பிள்ளைகளின் பள்ளி, கல்லூரிகளின் அருகிலேயேகூட வீட்டை எடுத்துக் கொள்ள
முடியும்.
வீட்டு வாடகைக்கு வரிச் சலுகை (நிபந்தனைக்கு உட்பட்டு) பெற முடியும்.
வாடகை வீடு பாதகங்கள்:
வீட்டு உரிமையாளர் காலி செய்யச் சொன்னால் உடனே அடுத்த வீடு தேடி அலைய
வேண்டும். மேலும், நீங்கள் கொஞ்சம் வசதியாக இருப்பதுபோல் தெரிந்தாலே வீட்டு
உரிமையாளர்கள் வாடகையை கூட்டிவிடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. அடுத்து,
ஆண்டுக்கு ஆண்டு விலைவாசியைவிட வீட்டு வாடகை வேகமாக உயர்ந்து வருகிறது.
மின்சார கட்டணம் பெரும்பாலும், அரசு நிர்ணயித்ததைவிட யூனிட்டுக்கு கிட்டத்தட்ட
இரு மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டும். மேலும், வீட்டு உரிமையாளர் கட்டும்
சொத்து வரி, தண்ணீர் வரியை கிட்டத்தட்ட குடித்தனக்காரர் களிடமிருந்தே, ஏதாவது
ஒருவகையில் வசூலித்து விடுகிறார்கள்.
அட்வான்ஸ் என்பது இன்றைக்கு லட்சங்களில் இருக்கிறது. வீட்டு வாடகை 10,000
என்றால், சென்னை போன்ற நகரங்களில் ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் ரூபாய் அட்வான்ஸ்
கொடு என்று கேட்கிறார்கள்.
மிக முக்கியமாக, அடிக்கடி முகவரி மாறுவதால் ரேஷன் கார்டு தொடங்கி பல
ஆவணங்களில் முகவரி மாற்ற வேண்டியிருக்கும். இதற்காக நிறைய அலைய
வேண்டியிருக்கும்; பணம் செலவாகும், வர வேண்டிய தகவல்கள் கிடைக்காமல் போக
வாய்ப்பிருக்கிறது. இப்படி பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பணிக் காலத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டு வாடகைப்படி கிடைத்துக்
கொண்டிருக்கும். ஆனால், பணி ஓய்வுபெறும்போது மொத்த வாடகையையும் கையிலிருந்து
கொடுப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருக்கும்.
இவையெல்லாம் நடைமுறை யில் உள்ள லாப - நஷ்டங்கள். ஆனால், ஃபைனான்ஷியலாக எது
உகந்தது என்பதை அறிய உலக வங்கியின் ஆலோசகர் ஆர்.எஸ்.நம்பியிடம் கேட்டோம்.
''நம்மில் பலருக்கும் வாடகை வீட்டிலேயே காலம் கழிந்துவிடுகிறது. வாடகை வீட்டில்
எத்தனை வசதிகள் இருந்தாலும் அது அடுத்தவர் வீடுதானே! வாடகையில் காலத்தைக்
கழிப்பதைவிட, கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்கிவிடுவது உத்தமம். ஆனால், அந்தக்
கடன் உங்கள் கழுத்தை நெரிப்பது போல இருக்கக்கூடாது. பிடித்தம் போக கையில்
கிடைக்கும் மாத வருமானத்தில் வீட்டுச் செலவு மற்றும் சேமிப்பு போக
40 சதவிகிதத்தை வீட்டு கடனாகச் செலுத்தலாம். மற்ற கடன்கள் எதுவும்
இல்லாதபட்சத்தில், வட்டி உயர்வு போன்றவற்றை சமாளிக்க ஆரம்பத்திலேயே சம்பளத்தில்
40% என்ற அளவுக்கு வீட்டுக் கடனை வைத்துக் கொள்ளலாம்.
உச்சத்தில் இருக்கும் சொத்து விலை மற்றும் இரட்டை இலக்கத்திலிருக்கும் வீட்டுக்
கடன் வட்டி ஆகியவற்றைக் காரணம் காட்டி சொந்த வீடு லாபமே இல்லை என்கிறார்கள்.
ஆனால், வீட்டு வாடகை மட்டும் உயராமலா இருக்கிறது? வாடகை வீடு, அல்லது கடனில்
வீடு எது பெஸ்ட் என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் தெளிவுபடுத்திக்
கொள்ளலாம்...
மாதம் 40,000 ரூபாய் சம்பளம் வாங்கும் 30 வயதான ஒருவர் புறநகர் ஒன்றில் 25 லட்ச
ரூபாய் மதிப்புள்ள வீட்டை கடனில் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவருக்கு 21.25 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் கிடைக்கும். கடனை 11% வட்டியில் 20
வருடங்களில் திரும்பக் கட்டுகிறார் என்றால், மாதத் தவணை 21,934 ரூபாய்.
வருங்காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு இருப்பதால் இருபது
ஆண்டு காலத்துக்கு சராசரியாக 11 சதவிகிதமாக வட்டியை கணக்கில் எடுத்துக்
கொள்வோம்.
இந்த 25 லட்ச ரூபாய் வீடு வாங்கும் ஏரியாவில், அதுபோன்ற ஒரு வீட்டில்
குடியிருந்தால் மாத வாடகை 10,000 ரூபாய் என்று இருக்கும். இந்த வாடகை ஆண்டுக்கு
5% அதிகரிப்பதாக கணக்கு எடுத்துக் கொள்வோம். பல இடங்களில் 8-10% கூட
அதிகரித்துவிடுகிறார்கள்.
5% வாடகை அதிகரித்தாலே வாடகை 10,000 ரூபாய் என்பது 18-வது ஆண்டிலேயே 22,800
ரூபாயாக அதிகரித்துவிடும். அதாவது, இ.எம்.ஐ. தொகையை விட வாடகை தாண்டிவிடுகிறது,
அதுவும் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே!
20 வருட காலத்தில் கடனில் வீடு வாங்கியவர் மொத்தம் 52,75,900 ரூபாய் கட்டி
இருப்பார். இதுவே, வாடகை வீட்டில் இருப்பவர் 39,67,900 ரூபாய் வாடகையாகக்
கொடுத்திருப்பார். சொந்த வீட்டுக்காரருக்கு வாடகை வீட்டுக்காரரைவிட சுமார் 13
லட்ச ரூபாய் அதிகம் செலவாகி இருக்கும். இருப்பினும் இந்த 13 லட்ச ரூபாயில்
சுமார் 4 லட்ச ரூபாய்க்குச் சொந்த வீட்டுக்காரருக்கு வரிச் சலுகை
கிடைத்திருக்கும். இதை வைத்துப் பார்த்தால் சொந்த வீட்டுக்காரர் கூடுதலாக
சுமார் 9 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். வாடகை வீட்டில் இருப்பவர், சொந்த
வீட்டில் இருப்பவர் கட்டும் மாதத் தவணையை விட குறைவான வாடகையைத்தான் கட்டி
வருவார். உதாரணத்துக்கு, முதல் ஆண்டில் இ.எம்.ஐ.யை விட 11,943 ரூபாயை வாடகை
வீட்டில் இருப்பவர் செலவழித்து இருப்பார். இந்தத் தொகையை அவர் வங்கி ஃபிக்ஸட்
டெபாசிட்டாக ஆண்டுக்கு ஒரு முறை போட்டு வருவதாக வைத்துக் கொள்வோம். இந்த
மிச்சமாகும் தொகை அடுத்து வரும் ஆண்டுகளில் குறைந்துக் கொண்டே வந்து 17-வது
ஆண்டில் மாதம் சுமார் 350 ரூபாயாகி விடும். இந்த மிச்சமாகும் தொகையை வாடகை
வீட்டில் குடியிருப்பவர் முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் 54.43 லட்ச ரூபாய்
மொத்தமாகச் சேர்ந்திருக்கும். வீட்டின் மதிப்பு 20 வருடத்தில் எவ்வளவாக
உயர்ந்திருக்கும்.? சொத்தின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 15 சதவிகிதம்
அதிகரித்தது (கடந்த காலங்களில் இதை விட அதிகமாகவே அதிகரித்திருக் கிறது) என்று
வைத்துக் கொண்டால், வீட்டின் மதிப்பு சுமார் 75 லட்ச ரூபாயாக உயர்ந்திருக்கும்!
இதில் எக்ஸ்ட்ராவாகக் கட்டிய 9 லட்ச ரூபாயை கழித்தால் 66 லட்ச ரூபாய் லாபம்!
வாடகை வீட்டில் இருப்பவருக்கு சேர்ந்திருக்கும் தொகை 54.43 லட்சத்தைக்
கழித்தால் 11.5 லட்ச ரூபாய் லாபம். மேலும், வட்டி மற்றும் அசலுக்கு
கிடைத்திருக்கும் வரிச் சலுகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த லாபம்
இன்னும் பல மடங்குதான். அந்த வகையில் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணை கட்டும்
தகுதி இருக்கும் பட்சத்தில் சொந்த வீடுதான் பெஸ்ட். எனவே, இப்போது வாடகை
வீட்டில் இருப்பவர்கள், மாதத் தவணைக்கான தகுதியை அதிகரித்துக் கொண்டு சொந்த
வீடு வாங்குவதே நல்லது.'' என்றார்.
ஆக, வாடகை வீட்டில் இருப்பதால் வீடு குறித்த பெரிய பொறுப்புகள் எதுவும் இன்றி
இருக்கலாம் என்றாலும், பணி ஓய்வுபெறும் போது சொந்த வீடு என்பது மிகப் பெரும்
பாதுகாப்பு. அந்த சமயத்தில் வருமானம் நின்றுபோனாலும்கூட வீட்டை 'ரிவர்ஸ்
மார்ட்கேஜ்’ முறையில் வங்கியில் அடமானம் வைத்து, கணவன் மனைவி இருவரும்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடர்ந்து கழிக்க முடியும். அதனால், அகலக் கால்
வைக்காமல் நமது விரலுக்கு ஏற்ற வீக்கம் கொண்ட வீட்டை சொந்தமாக்கிக் கொண்டால்
அதுவே பெஸ்ட்!
Thanks: www.vikatan.com



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 4:43 pm

சொந்த வீடு தான் எப்போதுமே சிறந்தது ஆனாலும் இவை காலத்தின் கட்டாயம் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Ila
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Oct 30, 2011 4:46 pm

வாரிசு இல்லாத பாட்டி வீடு ரொம்ப பெஸ்ட்..!



எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? 0018-2எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? 0001-3எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? 0010-3எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? 0001-3
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 30, 2011 5:17 pm

அருமையான கட்டுரை,
ஆனால் உண்மை நிலை வேறு, இந்தியாவில் அடுத்த 20 வருடம் படிப்படியாக உயர வேண்டிய வீட்டு மனை விலை, ஒரு சில வருடங்களில் உயர்ந்து விட்டது. வீட்டின் விலை உயர்வு இது போல் இருக்குமா என்பது சந்தேகம்,

இன்று மேற்கு நாடுகளில் ஒரு சிறந்த பணியாளர் வாங்கும் சம்பளம் 10000-15000 அமரிக்கா டாலர், இது சுமார் 4,50,000 -6,00,000. இவர்கள் சம்பளம் ராக்கெட் உயரத்தில் உயரவில்லை. இவர்களை விட அதிகம் சம்பளம் கேட்டால் இவர்கள் இந்தியாவுக்கு வேலை கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள். இன்று இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் அனைவரும் அயல்நாட்டு வியாபாரத்தை (எம்‌என்‌சி) நம்பித்தான் உள்ளனர்.

நம் அப்பா காலத்தில் 500 ரூபாய் மாதம் சம்பளம் வாங்கினார்கள் , இன்று 50000 ரூபாய், இந்த விகிதத்தை எடுத்து கொண்டால் அடுத்த 20 வருடங்களில் நமது மாதம் சம்பளம் 50,00,000 ஐம்பது லட்சம் ஆக இருக்க வேண்டும். இது சாத்தியா......கண்டிப்பாக சாத்தியமில்லை. 20 வருடம் கழித்து ஒரு பிளாட் 2 கோடி விற்றால் அதை யார் வாங்குவார்கள். வீட்டின் விலை ஒருவரின் வாங்கும் திறனை பொறுத்து தான் அமையும்.

வீட்டின் விலை குதிரைக்கொம்பாகி விட்டதால் பலர் வீடு வாங்க யோசிக்கின்றனர். சென்னையில் 40 லட்சம் கொடுத்து வாங்குவதை விட, uk, usa, சிங்கப்பூர், மலேஷியா வாங்குவது மலிவாக இருக்கிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் வங்கியின் வட்டி விகிதம் உயர்கிறது. ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஊக்குவிக்க அனைத்து பத்திரிக்கைகளும் இதை ஆமோதித்து எழுதுகின்றது. ஆனால் உண்மை நிலை வேறு. நிலத்தின் மதிப்பு உயர்வது குறைந்து விட்டது என்பதால் வங்கிகள் இதில் முதலீடு செய்வதை நிறுத்தி விட்டது. இருந்தாலும் மக்களை கடன்காரன் ஆக்குவதில் மும்முரமாக இருக்கிறது.

நாம் தான் சற்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

மேலும் இப்போது உள்ள இளைஞசர்கள் அமரிக்கா இளைஞசர்கள் போல் வாங்கும் சம்பளம் முழுவதையும் மாத இறுதியில் செலவு செய்து விடுகின்றனர். பெரிய கடன்காரன் ஆவதை அவர்கள் விரும்புவதில்லை.




சதாசிவம்
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 30, 2011 5:32 pm

உண்மையே.ஆனாலும் நான் இந்த தடவை நாட்டுக்கு வந்தப்பா நிறைய பேர் நான் அங்க வீடு கட்டிட்டு இருக்கேன், இங்க வீடு கட்டிட்டு இருக்கேன் என்று சொன்னப்பா எனக்கு பொறாமையா கூட இருந்துச்சு.என்ன்டா நாம வெளி நாட்டுல இருக்கோம் ஆனா இன்னும் வீடு கட்ட ஆரம்பிக்களையே என்று.ஆனா அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது எல்லாருமே லோன் வாங்கி வீடு கட்டுராங்க என்று.அதுவும் 20 வருஷம் வரை தவனைகள் என்றதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.ஆனாலும் வீடு கட்டுரவங்க கட்டிட்டுதான் இருக்காங்க. காரணம் ஒரு சொந்த வீடு இருந்துட்டா நமக்கு சமுகத்துல இருக்கும் மதிப்பு சற்று அதிகம்தான். இன்னிக்கு யாருமே ஒருத்தருடைய திறமையா பார்த்தோ, குணங்களை பார்த்தோ மதிப்பிடுவது இல்லை.அவர் சொந்த வீடு வச்சு இருக்காரா? எவ்வளவு பணம் வச்சு இருக்கார் என்பது பொறுத்தே நம்மை பற்றி மதிப்பீடு நடக்கிறது.



எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Uஎது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Dஎது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Aஎது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Yஎது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Aஎது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Sஎது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Uஎது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Dஎது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? Hஎது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா? A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 30, 2011 6:39 pm

வாடகை வீட்டில் இருந்து அவஸ்தை பட்டால்தான் தெரியும் சொந்த வீட்டின் அருமை ! மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாடகை உயர்த்துதல் ! இதை செய்யாதே அதை செய்யாதே என்று ஆயிரம் நிபந்தனை வைத்து சுதந்திரம் பறித்தல் !....இப்படி பல்....சொல்லிமாளது

கடன் பெறும்போது வருமான வரி யில் விலக்கு! சொந்த வீடு என்ற சுதந்திரம் !ஏறும் விலைவாசியில் வீட்டின் மதிப்பும் , இடத்தின் மதிப்பும் ..உயர்ந்து கொண்டிருக்கிறது !....வாய்ப்பு உள்ளவர்கள் கடன் பட்டாவது சொந்த வீடு அமைத்துக்கொள்வது நல்லது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 30, 2011 7:00 pm

சொந்த வீடா இருந்தாலும் , வாடகை வீடா இருந்தாலும்
பெரிய வீடா இருக்கணும்
சின்ன வீடா இருக்கக் கூடாது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 30, 2011 8:00 pm

aathma wrote:சொந்த வீடா இருந்தாலும் , வாடகை வீடா இருந்தாலும்
பெரிய வீடா இருக்கணும்
சின்ன வீடா இருக்கக் கூடாது

சில மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட எங்கள் வீடு ! உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 30, 2011 8:03 pm

கே. பாலா wrote:
சில மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட எங்கள் வீடு ! உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

சூப்பருங்க சூப்பருங்க ரொம்ப நல்லா இருக்கு வீடு

வீட்டிற்கு பக்கத்திலேயே வயல்வெளி எல்லாம் இருக்கே புன்னகை

அப்போ நல்ல காற்றை நீங்கள் சுவாசிக்கலாம் புன்னகை

நீங்கள் கொடுத்துவைத்தவர்தான் அண்ணா புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 30, 2011 8:09 pm

aathma wrote:
வீட்டிற்கு பக்கத்திலேயே வயல்வெளி எல்லாம் இருக்கே புன்னகை
அப்போ நல்ல காற்றை நீங்கள் சுவாசிக்கலாம் புன்னகை
ஆமாம் ஆத்மா ! அவைகளும் விரைவில் வீடுகளாக மாறுமே புன்னகை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக