புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காதலும் காமமும்.. - Page 6 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 6 I_voting_barகாதலும் காமமும்.. - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும்..


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 11:09 pm

First topic message reminder :

காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".



பி.அமல்ராஜ் - இலங்கை.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 04, 2011 12:10 pm

நல்ல காதல் வாழ்க்கைக்கு இனியது

நல்ல சீரிய ஒழுக்கமான காமம் மருந்துக்கு சமம்

உங்கள் விவாதங்கள் தொடரட்டும் சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலும் காமமும்.. - Page 6 Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 04, 2011 12:13 pm

இளமாறன் wrote:நல்ல காதல் வாழ்க்கைக்கு இனியது
நல்ல சீரிய ஒழுக்கமான காமம் மருந்துக்கு சமம்
உங்கள் விவாதங்கள் தொடரட்டும் சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி இளா !

காமம் மருந்து மட்டுமல்ல , இறை உணர்வோடு தொடர்புடையது. அதை எந்த விதத்தில் பர்க்கோறோம் என்பதை பொறுத்துதான் பயன் அளிக்கும் .



காதலும் காமமும்.. - Page 6 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 04, 2011 1:34 pm

பி.அமல்ராஜ் wrote:
"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".

முதலில் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட முதல் கருத்திற்கு வருவோம். பிரய்டின் இந்த கூற்றிற்கு எது அடிப்படையாய் அமைந்தது என்று பார்ப்போம். ஏனென்றால்

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்க்த்திய மனிதர்கள் , உடலை , அறிவியலை , உடல் சார்ந்த இன்பங்களை , செயல் முறை நிலை கூற்றினை உண்மை என்று , பெரிது என்று வாழ்ந்துவருகிற மரபிற்கு சொந்தக்காரர்கள்.
முக்கியமாய் உணர்வுகளையோ , ஆத்ம ஞானம் , ஆன்மா பற்றிய
எண்ணங்களையோ அவர்கள் நம்புவதில்லை. அவர்கள் அறிந்ததெலாம் அறிவியல், காரண கரிய தொடர்பு , தர்க்கம் , இவைகள்தான்.

ஆனால் நாம் அப்படி யல்ல. நாம் எல்லோரும் ஆத்ம ஞானம் அடந்தவர்கள் இல்லை. ஆனால் ஆன்மா பற்றிய நம்பிக்கை உடையவர்கள். ஆகவே நாம் எப்போதும் உணர்வு ரீதியாலான கருத்தோட்டம் உடையவர்கள்.


பெண்களின் படிநிலைகள் , அதாவது மகள் ,தங்கை , தோழி , தாய் போன்ற நிலையில் தந்தையாகவோ , அண்ணனாகவோ , தோழனாகவோ , மகனாகவோ ஆண்கள் கொள்கிற பாசம் காமத்தை அடிப்படையாய் வைத்துதான் என்று பிராய்டு கூறுவதற்கான காரணம் என்ன ?

உலகிலேயே மிகவும் தொன்மைவாய்ந்த பாரம்பரிய பண்பாடுகளி உடைய கீழைநாடுகளில் , அதிலும் குறிப்பாக இந்தியாவில் ,, பெண் என்பவள் எப்படி கருத பட்டாள் ?

இந்திய பூர்வ குடியின் தொல் மரபில் , பெண் என்பவள் வழிபாட்டிற்குரிய ஒன்றாய் தான் கருதபட்டாள். அதன்காரணம் பெண்களின் மீதான மரியாதை அல்ல. பெண்களின் மீதானா புரிதலும் அவர்களின் மீதான பயமும்தான்.
பெண் என்பவள் தான் சக்தி மிகுந்தவளாக விளங்கினால். வருணன் , சூரியன் , இந்திரன் , சிவன் , வெங்காயம் , விளக்கமாறு போன்ற தெய்வ உருவங்கள் ஆரிய கலப்பினால் வந்தது ,அதற்கு முன்பு வழிபாட்டிற்குரிய பொருளாய் இருந்தது பெண் தான் , சக்தி , கொற்றவை , அணங்கு , என்கிற பெயர்களில் இருந்தது.

இங்கே , ஏன் பெண்ணை மட்டும் இறைவனாய் வணங்க வேண்டிய நிலை இருந்தது. இயற்கையின் படைப்பிலேயே பெண் என்பவள் தான் முழுமையான படைப்பு, சக்தி வாய்ந்த படைப்பும் கூட. ஆனால் ஆண் அப்படியல்ல. பெண்களின் சக்தியை கண்டு அஞ்சினான். அன்று அவளோடு சுமூகமான உறவை
வளர்த்துக்கொள்ள அவளை வழிபட்டு , பலி கொடுத்து திருப்தி படுத்துவதாய் கருதி கொண்டான். அவர்கள் இந்த ஆண்களை புரிந்து கொண்டு , சரி போயிதொலைகிறான் என்று தன் சக்திகளை மென்மையாய் பிரயோகிக்க ஆரமித்தார்கள். அவ்வளவுதான் இன்று வரை அப்படித்தான் இருக்கிறார்கள்.

மேலும் சில காலத்திற்கு பின்பு , பெண் என்பவள் முதலில் அன்பிற்கு அடிமையாக்க பட்டாள். பின்பு போக பொருளாய் மற்ற பட்டாள். இதற்கு சில இனங்களின் படை எடுப்பும் முக்கிய காரணம். ஆனாலும் சிவன் , விஷ்ணு , வருணன் , நெருப்பு போன்ற உருவ வழிபாடுகள் வந்த பின்பும் தன் மண்ணினுடைய பூர்வீக சக்தி வழிபாட்டை மறக்கமுடியவில்லை. அங்கே பெண்ணிய வழிபாட்டின் மீது , பெண்ணிய கண்ணோட்டத்தின் மீது இரு படித்தான நிலை விழுக ஆரமித்துவிட்டது. ஒன்று பெண் வழிபாட்டிற்குரிய தெய்வம் , இரண்டு பெண் போக பொருள் . இந்த இரண்டு கண்ணோட்டமும் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த இரண்டையும் தோன்று தொட்டு செய்துவருகிற மக்கள் இந்திய மக்கள்.





காதலும் காமமும்.. - Page 6 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 04, 2011 1:45 pm

மேலும் புத்தர் முழுமையான மெய்யானம் , ஆத்ம ஞானம் அடைந்த அன்று அவரது முகம் பெண்ணியம் அடைந்ததாய் நிரூபிக்க பட்டுள்ளது. புத்தர் பெண்களுக்கு சந்நியாசம் மறுத்தார். யசோதாரா ,,,புத்தர் அனுபவித்த அதே துன்பத்தை , நெறிமுறியை தானும் அனுபவித்து சந்நியாசம் பெற வந்தார் . ஆனால் புத்தர் யசோதாரா விற்கு சந்நியாசம் தரவில்லை. இதை பெண்ணிய அடிமைத்தனம் வளர்ப்பது என்பார்கள். ஆனால் உண்மை அது அல்ல. புத்தர் ஆத்ம ஞானம் அடைந்தது அவரது சீரிய துன்பத்திற்கு பிறகு . ஆனால் யசோதரவிற்கு அது ஒரு சிறிய புரிதலில் ஏற்பட்டுவிட்டது.

மேலும் இந்து வழிபாடு முறையில் இறைவனை ,
தந்தையாக , தாயாக , காதலனாக ( அதாவது ஆணாக ) , குழந்தையாக , தோழனாக வழிபடும் பழக்கம் உண்டு. இதில் இறைவனை ஆணாகவும், மனிதர்களை பெண்ணாகவும் கருதி காதல் செலுத்துகிற பக்திதான் உயர்ந்தது. ஆண்டாள் அவன் மீது காதல் கொண்டது .. பாலினம் காரணம் என்று கூறாலாம்.

கொங்கை கிளர்ந்து குமைத்து குதூகலித்து
ஆவியை யாகுலஞ்ச் செய்யும்
ஆண்டாள்
விரகதாப பக்தி என்று விமர்சிக்க பட்டது.ஆண்டாள் பெண் என்பதால் ஆனால் .....

இருமலை போலெதிர்ந்த மல்ல
திருவரங்க மேரி செய்தான் உன்
திருமலிந்து திகழு மார்பு தேக்க வந்தென்........
.............வாயில் மடுத்தொரு ..... நெருடி கொண்டு
........... முறைமுறையா ஏங்கிஏங்கி இருந்தனையே ..

இந்த பாடலை எழுதியது பெரியாழ்வார். அவர் உடலில் ஆண் ஆனால் அவருக்கு மார்பங்கள் இருப்பதாக பாடியிருக்கிறார். இது சாத்தியமா ? சுத்தமாக இல்லை உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேற்கத்தியர்கள் பார்வையில் .

ஆனால் இங்கு சாத்தியம் ஏனென்றால் இங்கே ஆண் என்பவன் பெண்ணாய் பாலின மாற்றம் அடைந்தால் தான் இறைவனை அடைய முடியும் என்று உறுதிபட நிரூபித்திருக்கிறார்கள்.


இயற்கை , பண்பாட்டு வகையிலும் , ஆணை விட பெண் உயர்ந்தவள். இதனை உணர்ந்ததால் தான் ஒரு ஆண் , தாயோ , மகளோ , தோழியோ சகோதரியோ ஏதேனும் ஒரு நிலையில் அன்பு செலுத்த விழைகிறான். அதாவது குறையுடைய தன்னை பரிபூரண படுத்துவதற்காக பெண்ணிய தொடர்பை மனதளவில் நிலைபெற செய்கிறான். அவன் மனைவியின் மீது கொள்கிற பாசம் கூட காமத்தை அடிப்படையாய் வைத்தது அல்ல என்பது எனது பார்வை. ஏனென்றால் ஒரு ஆண் தன் மனைவியை பெண் என்பதால் நேசிக்க வேண்டும். அவளை மனைவி என்பதால் நேசித்தாள் அது அங்கீகரிக்க பட்ட விபச்சாரம். இந்த புரிதல் இல்லாததால் தான் இன்று விவகாரத்தும் , குடும்ப பாலியல் வன்முறைகளும் அதிக அளவில் நடக்கிறது .

ஆனால் மேற்க்கத்திய அறிஞர்களுக்கு இதில் சந்தேகம் . ஒரு ஆண் தன்னை பரிபூரண படுத்துவதற்காக பெண்ணை நேசிக்கிறான் . ஆனால் ஒரு ஆணை பெண் எதற்காக நேசிக்க வேண்டும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை . நம்மை புரிந்துகொநேசிப்பதால் அது காமத்தின் அடிப்படையில் எழுந்த ஹார்மோனின் செயல் என்று கூறிவிட்டார்கள் . ஆனால் உண்மை என்ன தெரியுமா. பெண் ஆணை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை . ஆனால் பெண் தன்மை என்பது பிரபஞ்சம் போல ,, நிறைந்தும் , ஒன்றுமே இல்லாத வெறுமை என்றும் உலகை வியாபித்திருப்பது. அந்த தன்மையின் அடிப்படையிலேயே பெண்ணும் ஆண் இனத்தை நேசிப்பது விரும்ப படுகிறது.

ஆக ஆண் பெண் உறவில் உணர்வுகள் கலந்து இருப்பது ...
ஆண் பெண் உறவில் உணர்வுகளை கடந்தும் இருப்பது
,, இதுதான் இந்தியா வின் நடைமுறை.

ஆண் பெண் உறவுகள் இனிப்பதற்கு முக்கிய காரணம் காமம் அல்ல அதில் பிரபஞ்ச தொடர்பும் ... இயற்கையின் பரிணாமமும் அடங்கியிருக்கிறது.

நம்மில் பெரும்பாலானோர் இன்று நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமை என்பதால் , மேற்க்த்திய மனோ பாவத்தையே சரி என்கிறோம்.
ஆனால் அது உண்மை அல்ல . ஐரோப்பிய , அமெரிக்க நாடுகளுக்கு அது பொருந்தும் . அவர்களின் அடிவழியாய் இருப்பவர்களுக்கு அது பொருந்தும்,. நமக்கு பொருந்தாது.



காதலும் காமமும்.. - Page 6 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 04, 2011 2:05 pm


[quote]ஞான பூமி, ஞானிகள் நிறைந்த பூமி என்று கூறி எத்தனை காலம் நம்மை நாமே ஏமாற்றி கொள்வது. 100 கோடி மக்களில் 10000 ஞானிகள் கூட இந்தியாவில் இல்லை /quote]

இந்தியா ஞான பூமிதான். இந்திய பண்பாட்டு கலாச்சார கூறுகளை மட்டுமே உள்வாங்கி பின் பற்றுகிறவர்கள் நிச்சயமாய் ஞானிகளாய் தான் இருப்பார்கள். நாம் தான் அடிமையாய் இருப்பதற்கு விருப்பாப்பட்டு எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்.


பெண்கள் மதிக்கும் நாடு, பெண்கள் தெய்வங்கள் என்று கூறி எத்தனை காலம் பெண்களை கொடுமை படுத்துவது ? எத்தனை காலம் நம்மை நாமே ஏமாற்றி கொள்வது. இப்படி எதையுமே பேசாத மேலை நாடுகளில் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம், உரிமை, சட்டப் பாதுகாப்பு, சமூக பாகுகாப்பு இங்கு ஏன் இல்லை?

மேலைநாடுகளில் இன்னமும் பெண்களின் அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கபடவில்லை. பலதரப்பட்ட களப்பினால் எங்கும் கலப்பு கலாச்சாரம் என்கிற நிலைக்கு தள்ளப்பாட்டிருக்கிறது உலகம். மேலை நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைந்து சொர்க்க பூமியாய் விலங்கிவிடவில்லை. எங்கும் இருக்கிற பிரச்சனை அங்கும் , இங்கும் உண்டு. பெண்களை மேலைநாடுகளில் , வண்டியில் பூட்டுவார்கள் ( மாடுகளை போல ) . நம் பெண்கள் உழுவார்கள்.ஆனால் மாடுபோல வண்டியில் பூட்டப்பட்டதில்லை.

இன்றும் மேலை நாடுகள் செய்கிற குற்றத்திற்கு இணையாக வென்று எந்த பூமியிலும் பெண்களை கொடுமைபடுத்துவதில்லை. ஒட்டுமொத்தமாய் எல்லா இடங்களிலும் பெண்ணிய வன்முறைகள் ஒன்று போல் தான் இருக்கிறது.










காதலும் காமமும்.. - Page 6 Thank-you015
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Nov 04, 2011 3:16 pm

அண்ணனும் தங்கையும் ஒரே இடத்தில் தூங்கக்கூடாது என்று கூறும் நம் கலாசாரத்தின் அடிப்படையும், பின்னணியும் கூறினால், ஒட்டு மொத்தமாக பதில் எழுத எனக்கு வசதியாய் இருக்கும்.



சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 05, 2011 9:34 am

எண் பொருள வாகச் செலச் சொல்லித் தான் பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

அருமையான கருத்துகளை எடுத்துக்கொடுத்த அய்யம்பெருமாளுக்கு முதற்கண் நன்றி.

முதல் முறையாக சிரித்து கொள்கிறேன், சிரிப்பது என் வழக்கமல்ல, மேலும் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று விம்முகிறேன்.

நுகர்வு கலாச்சாரம் என்பது எங்கே இருந்து வந்தது. இன்றைய அமரிக்காவுக்கு 300 வருடம் வரலாறு, ஐரோப்பியாவில் உள்ள பெரும் நகரங்களுக்கும் கிட்டத்தட்ட இதே வரலாறு. பண்டைய கால ரோமாபுரி, எகிப்தில் பெண்கள் எந்த நிலையில் இருந்தனர் என்பதை அய்யம்பெருமாள் அய்யாவுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

2௦௦௦ வருடப் பாரம்பரியம், பெண்களை தெய்வமாக போற்றும் நாடு என்று பெருமை பேசும், நம்ம ஊரில் பெண்கள் நுகர் பொருளாகத் தான் இருந்தனர் என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு சங்கப் பாடல்களும், திருக்குறளும் சாட்சி.

‘ஐம்புலனுக்குமான இன்பம் பெண்ணிடமே உண்டு’ என்பதில் மையமாக நிற்கும் ‘ஆண்’ பாலின்பம், பாலியல் என்பதில் மட்டுமின்றி ‘உலகம்’ என்பதிலும் மையமாக வைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் பாலியல் ஏற்போ, பாலியல் மறுப்போ இரண்டிலுமே ‘ஆண்’ முன்னிற்க முடிகிறது. பெண் பாலியலை ஏற்பதோ துறப்பதோ இங்கு முதன்மைக் கேள்வியாக மட்டுமல்ல, கேள்வியாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை.

அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாடு (குறள்)

என்பதில் அறியும் தன்னிலையாக ஆண் உறுதிப்படுத்தப்படுவதின் காரணமும் இதுவே. ‘பெண்’ இவ்விட்த்தில் ஆணால் அறிந்து தெளியப்படவேண்டிய ஒரு பொருளாக வைக்கப்படுவதன் மூலம்; பாலியல் ஒருவகையில் ஆணின் செயல்பாடாக, ஆணியத் தொழில் நுட்பமாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த ஆண்மையத் தன்மைதான் தமிழக, இந்தியப் பாலியல் ஒழுக்கவிதிகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருந்து வருகிறது –என்னும் இதே வேளையில் பாலியல் விதிமீறல்கள், பாலியல் பிறழ்வுகளுக்கும் கூட இதுவே அடிப்படையாக இருக்கிறது.

இந்த நுகர்வு கலாச்சாரம் கீழையில் இருந்து மேற்கு சென்றதா அல்லது மேற்கிலிருந்து கீழ் வந்ததா ?

பரத்தமை, கணிகையர் வாழ்வு என்பதை தனது பண்பாட்டின் ஒரு பகுதியாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் ஓயாமல் கற்பு, தெய்வக் கற்பு என்பதைக் கொண்டாடி மகிழ்வதில் உள்ள சமூக உளவியல் மிகவும் கவனத்திற்கு உரியது. தலைமை, அரசநிலை, அதிகார மையம், பேராண்மை என்ற வடிவங்களில் இயங்கும் ‘ஆண்மைய’ அடையாளங்களுக்கும் அதிக அளவிளான பெண்ணுடல்களை துய்த்தல், உரிமை கொள்ளல் என்பதற்கும் உள்ள உறவு புராதனத் தன்மை உடையது. இந்த உரிமையே அதிகாரத்தின் கேள்விக்கு உட்படாத உடல்களின் மீதான ஆதிக்கதிற்கு அடிப்படையானது. இந்த ஆதிக்க உரிமை இன்றுவரை கொண்டாடப்படுவதின் அடையாளமே ஆணுக்கு வழங்கப்பட்ட பெண்ணுடல்களின் மீதான ஆக்கிரமிப்பு உரிமை.




சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 05, 2011 9:45 am

அமரிக்காரன் நாங்கள் 400 வருடம் முன் காட்டுவாசிகளாத் தான் இருந்தோம் என்று ஒத்துக்கொள்கிறான்.

ஆனால் நாமோ, போரும், வீரமும், கள் குடித்து ஆடும் கொற்றவை நடனமும், பெண்களை துய்க்கும் ஆண் மனப்பான்மையும், பரத்தையர் வீட்டில் குடி இருந்ததையும் வார்த்தை வருணனைகளை போர்த்தி பாதுகாக்கிறோம்,

பண்பாடு, கலாச்சாரம் என்று பேசும் நம்மை கேள்வி கேட்டால், அடுத்தவரின் அடிவருடி என்று அழகாக கூறுகிறோம். உண்மையை உணராமல் அறியாமை சேற்றில் புரளுவதை விட , அடுத்தவர் என்ன சொல்கிறார் என்பதை உணராமல் நாம் எந்த பக்கம் இருக்கிறோம் என்பதை உணராமல் ஒத்து ஊதும் யதார்த்தவாதிகளாக இருப்பதை விட அடிவருடி நன்றாக இருக்கிறது. அறியாமையை அடியோடு வருடும் அடிவருடியாக இருப்பது நல்லது தானே. இதைத்தானே பாரதியும், பாரதிதாசனும் செய்தான்.


பெண்களை அமரிக்காரன் சொல்லி நாம் அவர்களை வீட்டில் பூட்டி வைக்கவில்லையே, சதி என்ற பெயரில் தீயில் இடவில்லையே. உலகம் முழக்க இருப்பது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை மட்டும் தான். ஆனால் பெண்களுக்கு எதிராக சமுகக்கொடுமைகள் இந்த பெண்ணை கொண்டாடும் நாட்டில் தானே இருக்கிறது. இதை எந்த நுகர்வு கலாச்சாரம் சொல்லிக் கொடுத்தது? எந்த அடிவருடிகள் இதை நமக்கு சொல்லிக் கொடுத்தனர். சதி, பெண் சிசுக்கொலை, விதவை, வாழாவெட்டி, கைம்பெண், தாசி, தேவர் அடியாள் இதை யார் சொல்லிக் கொடுத்தனர். அடுத்த நாட்டு படையெடுப்பு திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்திற்கு எப்போது எங்கே வந்தது ? இவை எல்லாம் நம் நாட்டின் சிறப்புகள் அல்லவா? இப்படி சொல்லி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் /ஏமாறுவார் இந்த நாட்டிலே?

அழகான பாசுரம், தமிழ் பண்பாட்டை பேசும் நாம் ஆண்டாள் ஒரு பெண், இப்படி பாடுவது முறையோ என்று எதற்கு கூப்பாடு போடவில்லையே,

ஆண்டாள் தமிழ் மரபை மீறி விட்டாரா ? பாட்டுடைத் தலைவனை காதலனாக கருதி ஒரு ஆண் தன்னை பெண்ணாக பாடுவது நம் தமிழ் இலக்கிய மரபு, உலா , பிள்ளைத்தமிழ், பெரிய மடல், சிறிய மடல் போன்ற தமிழ் சிற்றிலக்கியங்களுக்கு புதிதில்லையே. குஷ்புவுக்கு குரல் கொடுத்தவர் இதை ஏன் செய்யவில்லை.

ஆண்டாள் அப்பா பெரியாழ்வார், பெருமாளுக்கு பல்லாண்டு வாழ்த்து கூறும் பெரியவர், உறவில் மாமனார், இவர் தன்னை பெண்ணாக பாவித்து பாடினால், இந்த உறவுமுறை பிராய்டு கொள்கையைவிட மோசமாகத் தானே இருக்கிறது.

உண்மையில் அவர் தன்னை பெண்ணாக பாவித்து பாடவில்லை, பெண்ணில் பாவத்தில் இருந்து பாடினார். இதற்கு தான் எதையும் முழுமையாக கற்க வேண்டும்,

சேக்பியரும் தன் நாடகத்தில் பெண்ணில் பாவத்தில் வசனம் எழுதி உள்ளாரே, அவர் எந்த பூரணத்துவத்தை தேடினார். இன்றைய கவிதை எழுதுபவர்களும் பெண் பார்வையில் எழுதுவது அவர்கள் பெண்களாக எழுதுகிறார்கள் என்றா பொருள் கொள்வது.

நட்பு பகைக்கு கடிதம் எழுதினால் அதை எழுதியவர் பகை உணர்ச்சியோடு எழுதினார் என்றா கூறுவது?

சரி ஆண்டாள் கதைக்கு வருவோம்.
தலைவியை அடையும்பொருட்டுத் தலைவன் மடலேறினான் என்று கலித்தொகைப் பாடல்கள் பாடுகின்றன. மகளிர் மடலேறுதல் இல்லை என்பதனைக்,

”கடலன்ன காம முழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்”எனும் குறள் சுட்டுகிறது.

தலைவியை அடைதற் பொருட்டுத் தலைவன் மடலேறலாம் என்ற பழம்மரபுக்கு மாறாகத் திருமால் மீது மையல் கொண்ட தலைவி, அவனை அடையமுடியாத நிலையில் மடேலறத் துணிந்ததாக இரு மடல்களிலும் திருமங்கையாழ்வார் கூறுகிறார். தலைவி கூற்றாக,

”அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டறிவதுண்டு,
அதனை யாம் தெளியோம்”

என்று பெரிய திருமடல் பாடுகிறது.

பன்னிரு பாட்டியல் இலக்கண நூலும்:-

மடன்மாப் பெண்டிர் ஏறார்; ஏறுவர்
கடவுளர் தலைவராய் வருங்காலே”
என்று இலக்கணம் கூறுகிறது.


தமிழ் கலாசாரப்படி, தமிழ் இலக்கணப்படி ஆண்டாள் பாடியதில் தவறில்லை. ஆண்டவனைப் பாடுவதில் தவறில்லை என்று தானே இலக்கணம் கூறுகிறது.



சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 05, 2011 9:50 am

அடுத்த பெண் வழி சமுகம் பற்றிய பார்வை

மானுடவியல் இந்த மனித இனம் பெண்வழி சமுகமாக இருந்து தான், பின்பு ஆண் கைக்கு மாறியது. இதை நான் ஒப்புக்கொள்கிறேன். காட்டில் வேட்டை ஆடச் சென்ற ஆண்கள் திரும்பி வருவது அரிதான காலத்தில், குடும்பத்தில் மூத்த குடிகளாக பெண்கள் தான் இருந்தனர். இப்படி இருந்த பெண்களுக்கும் அங்கு இருந்த ஆண்களுக்கு உறவு முறை இல்லை. ஆண் பெண் என்ற பாலியல் சேர்கை இருந்தது. இந்த காலத்தில் தான் பெண்களை மையமாக வைத்து குடும்பம் நகர்ந்தது.

தமிழக வழிபாட்டு முறையை இருந்தது சிவனும், முருகனும் என்று தானே மொழி வல்லுனர்களின் கூற்று, கொற்றவை, காளி போன்றவை திணை நிலத்து தெய்வங்கள் என்று தானே இலக்கணம் கூறுகிறது. சிவன் ஆரியத்தில் இருந்து வந்தார் என்றால், சக்தி என்ன பாரினில் இருந்து வந்தாரா ?

இந்து முறையில் ஆறு வகை வழிபாடுகள் உள்ளது. இதை அய்யம்பெருமாள் அறியாதில்லை. இதில் ஒவ்வொரு பிரிவும் தன் பிரிவு தான் முதலில் என்று கூறுகிறார்கள்.

அதில் சாக்தம், ஸ்ரீவித்யா தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் சக்தியை முதலாக கொண்டாடுகிறார்கள். பெண் தான் முழுமை என்பது இவர்களின் வாதம். ஆயிரம் ஆயிரம் இந்திரன் வந்து போனான், நூறு நூறு திருமால் வந்து போனார், சிவன் ஒருவர் தான் இருக்கிறார் என்பது சைவம் கூறும் உண்மை. பெண் முழுமை என்னும் போது, பெண் கடவுளைத் தேடி தானே ஆண் ஓட வேண்டும், அதைவிட்டு விட்டு ஆண் கடவுளைத் தேடி பெண் ஓடுவது எதனால் ? மாணிக்க வாசகரின் திருக்கோவையிலும் இது தானே இருக்கிறது. இறைவன் ஆணும் அல்ல, பெண்ணும் மல்ல , அலியுமல்ல, இது அரிதாரம், ஹார்மோன் பூசும் அடிவருடியின் வார்த்தை அல்ல, நம்ம ஊரு நம்மாழ்வார் வரிகள் தான்.

பாட்டுடைத் தலைவனை தலைவியின் கூற்றில் பாடுவது தமிழ் இலக்கண மரபு, இதற்கு சாக்தம் சட்டை போட்டு, பாடுபவர் தன்னையே பெண்ணாக நினைத்து பாடுகிறார் என்று பொழிப்புரை கோட்டுப் போட்டு, பெண்ணை தேடும் ஆண் முழுமையை அடைய விரும்புகிறான் என்ற அழகான டை கட்டுவது படிப்பதற்கு அழகாக இருக்கும். உருப்படியாக படித்தவருக்கு நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடல் வரி தான் நினைவுக்கு வரும்.


நான் வெறும் சட்டை போடும் குணம் மட்டும்தான் உள்ளது என்று நினைத்தேன், ஆனால் சட்டை, கோட்டுப் போட்டு, டை கட்டி, இது தான் நாங்கள் பெண்களை வணங்கும் நாட்டின் பெருமை என்று கூறி சம்பந்தம் இல்லா தலையை மறைக்கும் தலைப்பாகையையும் அணிவார்கள் என்று ஆழ்வார்களின் பாடல் பொருள் விளக்கத்தில் அறிகிறேன்.

அறிவித்தமைக்கு நன்றி



சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 05, 2011 10:02 am

ஸ்ரீவித்யா தர்மத்தை நிலை நிறுத்திய ஆதிசங்கரர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம், வடநாட்டில் ஒரு பண்டிதரை தர்கத்தில் வெல்லும் பொருட்டு இல்லற உணர்வை பெறுவதற்காக கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு ஆடவனின் உடலில் ஒரு நாள் இருந்து உணர்ந்து, மறுநாள் வாதத்தில் வெல்லுகிறார் என்பது தானே சாக்தத்தை ஒழுங்காக படித்தவர் கூறும் உண்மை.

உயிருக்கு பாலினம் இல்லை என்றால், பெண் முழுமை என்றால் ஒரு பெண்ணின் உடலில் தானே நுழைந்திருக்க வேண்டும். ஸ்ரீவித்யா தர்மத்தை அறிந்த அவர் இதை ஏன் செய்யவில்லை.

அடுத்து ராமானுஜர் கதை, திருக்கச்சி நம்பி வரதராஜனிடம் புலம்புகிறார். பெருமாளே, இங்கே அனைத்தையும் பொய்யாக பொழிப்புரை செய்கிறார்கள், வேதத்தை தவறாக உரை சொல்கிறார்கள் என்ன செய்ய ? பெருமாள் சொல்கிறார், உனக்கு தான் அனைத்தும் தெரியுமே இதை ஏன் உலகுக்கு தெரிவிக்கக் கூடாது. நான் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவன், நான் கூறினால் ஒப்புக்கொள்வார்களா ? சரி பெருமாள் ஆதிசேசனை கூப்பிட்டு பூமியில் போய், இதை சரிசெய் என்று அனுப்புகிறார். அப்படி பிறந்தவர் தான் ராமானுஜர். 120 வருடம் வாழ்ந்து பாஷாயக்காரர் என்று பட்டம் பெற்றும் மக்கள் இன்னும் திருந்தவில்லை, இங்கு தவறாக பொருள் சொல்லும் யாதவப்பிரகாசர்கள் தானே நிறைந்து உள்ளனர் என்று அடுத்ததாக மணவாள மாமுனிகள் ஆக பிறந்து மீண்டும் 80 வருடம் தொடர்ந்தார்.

2௦௦ வருடம் வாழ்ந்தும் ஆயிரம் நாக்கு உடைய ஆதிசேசன் கூறியும் மாறாத நம் பண்பாடைப் பாடிப் பாடி தவறாகப் பொருள் கூறி, இன்னும் அறியாமையில் வாழும் யதார்தவாதியான நம் பழம்பெரும் மக்கள் என் பாட்டையா காதில் போடுவார்கள்.

கடைசியாக ஆத்ம ஞானம், ஆத்ம ஞானிகள் உலகம் மாயை என்றும், உறவுகள் மாயை என்றும் தானே கூறுகின்றனர். பெண்கள் மாயை, பெண்ணின்பம் சிற்றின்பம் என்று தானே கூறுகிறது. இதில் அம்மா, அக்கா, தோழி, ஆண், பெண் என்று எங்கே வருகிறது. அன்னை எத்தனை எத்தனயோ? அப்பன் எத்தனை எத்தனையோ என்று தானே கூறுகிறது. ஆத்ம ஞானத்தை ஏற்க வேண்டுமானால் உறவுகளை துறக்க வேண்டும்.

உறவுகளை துறக்க வேண்டுமானால் அதில் என்ன இணைப்பு இருந்தால் என்ன ?



சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக