புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
85 Posts - 79%
heezulia
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
250 Posts - 77%
heezulia
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதலும் காமமும்.. - Page 4 Poll_c10காதலும் காமமும்.. - Page 4 Poll_m10காதலும் காமமும்.. - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும்..

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 11:09 pm

First topic message reminder :

காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".

பி.அமல்ராஜ் - இலங்கை.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 02, 2011 4:22 pm

பொதுவாய் உளவியல் என்பது மன பகுப்பை அடிப்படையாக கொண்டுதான் காரண காரியங்களை ஆராய்கிறது. ஆனால் இந்த உள பகுப்பியலும் சரி , உள தொகுப்பியலும் சரி முழுமையானதில்லை. பெரும்பாலும் அறிஞரின் ஒரு குறிப்பிட்ட கண்ணூட்டத்துடந்தான் ஆராய படுகிறது.

உண்மை, இந்தியர்கள் பொறுமை மிக்கவர்கள் என்றும், பூரணத்துவத்தை தேடுபவர்கள் என்றும் அல்லது உறவுகளுக்குடைய மலருவது அன்பு மட்டுமே என்று கூறுவதும் ஒரு சிலரின் கருத்து தான். ஒட்டுமொத்த கருத்தும் அதுவல்ல. 100 கோடி மக்களில் இமயமலையைத் தேடுபவர்கள் 10000 பேர் கூட இல்லை என்பது தான் உண்மை.

தாயோ , சகோதரியோ , தோழியோ , தங்கையோ , ஒரு ஆண் , பெண் மீது அல்லது ஒரு பெண் ஆண் மீது வைக்கும் விருப்பத்தின் அடிப்படை காமம் தான் என்கிற பிரய்டின் கூற்று அவர்கள் நாட்டிற்கு சரி என்று படலாம், நமக்கும் அதுதான் சரி என்று கூறுவது சாத்தியமில்லை. ஏனென்றால் மனதின் எண்ணங்கள் மரபு சார்ந்தது. மேற்க்கத்திய மரபும் . கீழை நாட்டினர் மரபும் ஒன்றாய் இருப்பதில்லை. ஓஷோ அவர்களின் கூற்றுப்படி இந்தியர்களின் மனம் மிகுந்த பொறுமையுடையது. ஆணவம் , அகங்காரம் தவறு ஏன்றுஏற்றுக்கொண்டது. ஆனால் மேற்கத்திய மனங்கள் அப்படி இல்லை. இதற்கு முற்றிலும் மாறானது.

ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தன்மை உண்டு ஆனால் ஒரு நாட்டின் கருத்து அடுத்த நாட்டுக்கு பொருந்தாது என்பது தவறு. அடுத்த நாட்டில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறலாம். இந்த தியரியை நம்ம சென்னையில் இருக்கும் உளவியல் டாக்டர் ருத்திரனும் ஏற்கிறார் (அவருடைய உறவுகள் என்ற புத்தகம் வாசியுங்கள் ). சென்னையில் இருக்கும் பாலியல் மருத்துவர் அனைவரும் இந்த கருத்தை ஏற்பர்.

அடுத்ததா லாரன்ஸ் ப்ளேர் ஏற்படுதைய ஒரு உளவியல் கொள்கை, 100 குரங்குகள் தியரி. இதில் ஒரு விஷயமா, தகவலோ, கோபமோ ஒரு சில மனிதரிடம் ஒரு நேரத்தில் வரும் போது அது பரவலாக பரவும் என்பது. உதாரணதீர்க்கு ஒரு கலவரம் ஒரு சில மனிதரிடம் ஆரம்பித்து பலருக்கு பரவுகிறது. இது பொறுமைக்கு பேர் போன இந்தியர்களுக்கும் பொருந்தும். சுதந்திரம் போது எழுந்த இந்து முஸ்லிம் கலவரம் முதல் சமீபத்தில் நடந்த பரமக்குடி சம்பவம் வரை இந்த தியரி பொருந்தும். சிறு வயதில் ஒரு கதை படித்திருப்பீர்கள், ஒரு குரங்கு தொப்பி தூக்கி போட அனைத்து குரங்குகளும் தொப்பியை தூக்கி போடும். இந்த தியாரியை கண்டு பிடித்தவர் மேலை நாட்டினர், அங்கு எடுத்த சாம்பில் மூலமே இதை நிர்ணயம் செய்தார். பொறுமைக்கு பேர் (போன) இந்தியர்களுக்கு இது பொருந்துமா ? பொருந்தாதா ? பொருந்தும் என்பது தான் நாம் ஒவ்வொரு கலவரதிலும் காணும் கண் கண்ட உண்மை. இது பொருந்துமா என்று கேட்டால் அனைவரும் ஒத்துக்கொள்வோம். இது மட்டுமல்ல இது போல் மேலை நாடுகளில் கண்டுபிடித்த பல உளவியல் கொள்கைகள் இந்தியர்களுக்கு பொருந்தும். கலாசாரதிற்கு ஒத்து வந்தால் சரி என்றும், ஒத்து வரவில்லை என்றாள் தவறு என்று கூறுவது முறையல்ல. அது போல் பிர்யாடு தியரி இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது பொருந்தும் (நாம் மனதுக்கு சட்டை போடுபவர்கள் என்பதால் ) ஆனால் பிராய்டு தியரி இந்தியாவுக்கு பொருந்தாது என்று கூறுவது சரியான வாதம் அல்ல.

ஆனால் நம் நாட்டின் , நம் பரம்பரியத்தின் அடிப்படை என்பது வேறு. இங்கே பெண் என்பவளை ,,தாயாகவோ , தங்கையாகவோ , தோழியாகவோ தனக்கு அருகில் அல்லது அவளுக்கு அருகில் இருக்க ஒரு ஆண் அசைபடுகிறான். இந்த ஆசை காமம் அல்ல பரிபூரணத்தை நோக்கிய பயணம்.

இது சரி என்றால், மேலை நாட்டை விட பெண்களுக்கு எதிரான வன்முறை இங்கு ஏன் நடக்கிறது. இது ஆணாதிக்க சமூகம் என்று எதற்கு கூறப்படுகிறது. இங்கு தான் பெரிய ஞானிகள் பெண்கள் அழுக்குகள், நம்பிக்கை
உரியவர்கள் இல்லை என்றும், பெண்களே துன்பத்திற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள்.
இங்கே பூரணத்துவத்தை தேடும் ஆண்கள் எத்தனை? ஒரு பெண் ஆணிடம் அறிமுகம் ஆகும் போது அண்ணா என்று கூறுவது பாசத்திலா பாதுகாப்பு கருதியா? ஏன் இந்தியா பெண்களுக்கு தோழமையில் இந்த பாதுகாப்பு தேவை ? ஃப்ரெண்ட் என்ற வார்த்தையை விட அண்ணா என்பது safe என்பது தான் உண்மை. ஒரு வயசுக்கு பிறகு அண்ணனும் தம்பியும் ஒரே கட்டிலில் தூங்க விடும் பெற்றோர் அண்ணனும் தங்கையையும் ஒரே கட்டிலில் தூங்க விடுவதில்லைதையே. இது ஏன் ?. மரபு, பண்பாடு ஆகியவருக்கு பேரு போன நாம் இதை ஏன் அனுமதிக்க கூடாது. அண்ணணும் தங்கையானாலும் அன்பு நிறைந்து இருந்தாலும் அடிப்படையில் ஆண் பெண் என்ற காரணத்தால் தான் இது தடுக்கப்படுகிறது. இது தவறு அண்ணனுக்கும் தங்கைக்கும் காமம் வராது, ஒன்றாக படுத்து தூங்கலாம் என்று கூற எத்தனை பேருக்கு தைரியம் இருக்கிறது. இது போல் தியரிகள் பேசுவதற்கு முன்னரே நம் சமூகம் இதை கடைப்பிடிப்பது ஏன்???? கண்டுபிடித்தது ஏன்????

ஆண் பெண் உறவுகளுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு பூரணத்துவம் தான் (தன்னில் இல்லாத பெண்ணையோ , ஆணையோ தேடுதல்). இந்த பூரணத்துவத்தின் ஒரு தேவை தான் காமம் என்று தான் உளவியல் கூறுகிறது. அன்பு பாசம் எல்லாம் இருந்தாலும் காமமும் இதில் கலந்து இருக்கிறது என்பது தான் உளவியல் கூற்று.
நான் முன்பே கூறியது போல் இதை ஏற்பது சட்டை போடும் நமக்கு கடினம். ஆனால் இது பொய்யல்ல.

வேறு ஒரு கருத்தை விவாதிக்கும் போதும், மதத்தை பற்றி பேசும் போதும் இரண்டு தரப்பிலும் வரிந்து கட்டி கொண்டு வரும் நம் ஈகரை உறவுகள், இது போன்ற கட்டுரைக்கு பின்னூட்டம் இட யோசிப்பதும் சட்டை போடும் குணம் தான் காரணம். இந்த மனது தான் இந்தியாவிற்கு பாலியில் கல்வியை தடுக்கிறது, பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் காமத்துபாலை சொல்லிக் கொடுக்க தயங்குவதும் இதனால் தான்.

எனக்கு இருமல் வரவில்லை.

சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 03, 2011 11:15 am

சதாசிவம் wrote:
வேறு ஒரு கருத்தை விவாதிக்கும் போதும், மதத்தை பற்றி பேசும் போதும் இரண்டு தரப்பிலும் வரிந்து கட்டி கொண்டு வரும் நம் ஈகரை உறவுகள், இது போன்ற கட்டுரைக்கு பின்னூட்டம் இட யோசிப்பது
எனக்கு இருமல் வரவில்லை

நாம் இருவரும் தொடர்ந்தால் பிரச்சனை என்பது இல்லாமலேயே இன்னும் பல நாட்கள் விவாதிக்கலாம். ஆனால் மேற்கூறிய காரணத்திற்காக நான் இந்த விவாதத்தை கைவிடுகிறேன்,

நன்றி சதாசிவம் !

காதலும் காமமும்.. - Page 4 Thank-you015
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 03, 2011 3:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
சதாசிவம் wrote:
வேறு ஒரு கருத்தை விவாதிக்கும் போதும், மதத்தை பற்றி பேசும் போதும் இரண்டு தரப்பிலும் வரிந்து கட்டி கொண்டு வரும் நம் ஈகரை உறவுகள், இது போன்ற கட்டுரைக்கு பின்னூட்டம் இட யோசிப்பது
எனக்கு இருமல் வரவில்லை

நாம் இருவரும் தொடர்ந்தால் பிரச்சனை என்பது இல்லாமலேயே இன்னும் பல நாட்கள் விவாதிக்கலாம். ஆனால் மேற்கூறிய காரணத்திற்காக நான் இந்த விவாதத்தை கைவிடுகிறேன்,

நன்றி சதாசிவம் !

கட்டுரையை பலப்படுத்தியதற்கு நன்றி பெருமாள். சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அன்றில் இருந்து இன்று வரை இந்தியாவில் பெரும்பாலான மக்கள் குறுகிய வட்டத்தில் தான் வாழ்ந்தும் சிந்தித்தும் வருகின்றனர். உலகளாவிய கருத்துகளை ஏற்க மறுக்கின்றனர். உண்மையை சொல்லப் போனால், இந்தியா ஒன்ற ஒரு பெரிய நாட்டுக்கு வரைபடம், எல்லைகளை நிர்ணயம் செய்தது நம்மை ஆண்ட ஆங்கிலேயன் தான். வியாபாரம் செய்ய வந்து இவர்கள் முட்டாள்கள், ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுபவர்கள், அன்பு, பண்பு, ஆன்மிகம் என்று ஆயிரம் பேசினாலும் சுய சிந்தனை குறைந்தவர்கள் என்ற காரணத்தால் தான் அவனால் 50 வருடங்களுக்குள் இந்தியாவை அவன் கைக்குள் வைத்து, 300 வருடம் ஆட்சி செய்ய முடிந்தது. குறிப்பிடத்தக்க முதல் சுதந்திர போராட்டம் என்று கருத்தப்படும் சிப்பாய் கலகம் கூட மதம் அடிப்படையில் எழுந்து, பின்பு தான் ஆங்கிலேயரை எதிர்க்கச்செய்தது, நாட்டுப்பற்றினால் அல்ல.

நான் இந்தியன், தமிழன் என்ற காரணத்தால் நம்மில் இருக்கும் குறையை சரிகட்டுவதோ, நம் முழுமையை உணராமல் இருப்பதோ சரியில்லை. இதை உணரச் சொல்லி காலம் காலமாக நம் பெரியவர்கள் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். குற்றம் அதிகம் நடக்கும் இடத்தில் தான் போலீஸ் அதிகம் தேவை, கடைநிலை மாணவருக்குத் தான் ஆசிரியரின் அக்கறை அதிகம் தேவை, ஒழுங்கற்ற, தன்னை உணராத மக்களுக்கு தான் அதிக மகான்கள் தேவை. இந்தியா ஞான பூமி, இங்கு ஞானிகள் நிறைந்த பூமி என்று கூறுவது, மக்கள் இன்றும் பண்படவில்லை என்பதைத் தான் குறிக்கிறது. இந்த சுயசிந்தை இல்லாத நிலையைத் தான் ஆங்கிலேயன் முதல் இன்றைய அரசியல்வாதிகள் வரை பயன்படுத்துகிறார்கள்.

நாடு வளர நல்ல தலைவன் தேவையில்லை, சுயமாக சிந்திக்க தெரிந்த மனிதன் இருந்தால் போதும். தலைவர்கள் தானாக திருந்தி விடுவார்கள்.

இந்த கட்டுரைப் படித்த அனைவருக்கும் நன்றி.
நன்றி நன்றி நன்றி

சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 03, 2011 3:21 pm

இந்தியனுக்கே இருக்கும் ! தாழ்வுமனப்பான்மையும் , வெளிநாட்டுக்காரன் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற... என்ற மனோபாவமுமே ......இந்தியாவை பற்றி விமர்சிக்க பலருக்கும்காரணமாக இருக்கிறது !

நீதி நூல்கள் தமிழில்தான் அதிகம் என்றால் தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்ற அர்த்தமா ?

இந்தியாவை ஆன்மிக பூமி என்பதில் என்ன தவறு இருக்க முடியும் ....
வெறும் உடல் சார்ந்த வாழ்வை கொண்டாடும் ..சிலரால்
மனம் சார்ந்த ..யோக வாழ்வை கொண்டாடாமல் போனாலும் ...குறை சொல்லக்கூடாது !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 03, 2011 3:53 pm

கே. பாலா wrote:இந்தியனுக்கே இருக்கும் ! தாழ்வுமனப்பான்மையும் , வெளிநாட்டுக்காரன் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற... என்ற மனோபாவமுமே ......இந்தியாவை பற்றி விமர்சிக்க பலருக்கும்காரணமாக இருக்கிறது !

நீதி நூல்கள் தமிழில்தான் அதிகம் என்றால் தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்ற அர்த்தமா ?

இந்தியாவை ஆன்மிக பூமி என்பதில் என்ன தவறு இருக்க முடியும் ....
வெறும் உடல் சார்ந்த வாழ்வை கொண்டாடும் ..சிலரால்
மனம் சார்ந்த ..யோக வாழ்வை கொண்டாடாமல் போனாலும் ...குறை சொல்லக்கூடாது !

குறையை உணரும் போது தான், நிறையை நிறைக்க முடியும்.

வெளிநாட்டுக்காரன் தத்துவம் மட்டும் அல்ல, நம் ஊரு தேவாரம், பிரபந்தம், திருமறைகள், நீதி நூல்கள், தமிழ் இலக்கியங்களை கூட நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்பதை யாரிடம் சொல்வது?

இத்தனை வளம் இருந்தும், வேதம் இருந்தும் இந்தியனுக்கு எதற்கு தாழ்வு மனப்பான்மை வர வேண்டும்?

சமணர்கள் ஆட்சியை செய்ய ஆரம்பிக்கும் வரை, நம் மக்கள் தேவாரமோ, பிரபந்தமோ இயற்றாதது எதனால் ?

இந்தியா ஞான பூமி, இங்கு மனம் சார்ந்த யோகம் இருக்கிறது, ஆனால் இந்த யோகத்திலும் தெளிவு இல்லை, பக்தியுலும் தெளிவு இல்லை என்பதை எங்கு சொல்வது ?

உயிரை வளர்க்க உடம்பு தேவை, எங்கே உடலும் உள்ளமும் வேறு வேறு ?

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

எதற்காக இத்தனை நீதி நூல்கள் தேவை ?

மாணவர்கள் அனைவரும் படித்து பட்டம் வாங்கியவர்கள் என்றால் பாடப்புத்தகம் எதற்கு ?

சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 03, 2011 4:12 pm

இங்கு காட்டுமிராண்டிகள் அதிகம் இல்லை, ஒரு விஷயத்தை சொன்னால் அதை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் அதிகம் இருந்தனர், இருக்கிறார்கள், நம் குறையை உணர்ந்து நிறை செய்யாவிட்டால் இனிவரும் காலங்களிலும் இருப்பார்கள்.

சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 03, 2011 5:49 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
சதாசிவம் wrote:
வேறு ஒரு கருத்தை விவாதிக்கும் போதும், மதத்தை பற்றி பேசும் போதும் இரண்டு தரப்பிலும் வரிந்து கட்டி கொண்டு வரும் நம் ஈகரை உறவுகள், இது போன்ற கட்டுரைக்கு பின்னூட்டம் இட யோசிப்பது
எனக்கு இருமல் வரவில்லை

நாம் இருவரும் தொடர்ந்தால் பிரச்சனை என்பது இல்லாமலேயே இன்னும் பல நாட்கள் விவாதிக்கலாம். ஆனால் மேற்கூறிய காரணத்திற்காக நான் இந்த விவாதத்தை கைவிடுகிறேன்,
ஈகரையில் பின்னோட்டம் இடுவதும் ! இடாததும் அவர் அவர்கள் தனிப்பட்ட விருப்பம் ! இதில் " வரிந்து கட்டிக்கொண்டு " என்றெல்லாம் கேலிசெய்ய வேண்டய அவசியம் இல்லை !...நீங்கள் காமத்தை பற்றி அலசுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை !,,,,பொதுத் தளத்தில் மற்ற பதிவுகளில் பின்னூட்டம் இடுவதை குறை சொல்லவேண்டாம் . சிலருக்கு என்று சில வரையறைகள் உண்டு.....ஒரே நாளை மீறிவிட வேண்டும் என்று ..நினைக்க கூடாது !...

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 03, 2011 6:10 pm

சதாசிவம் wrote:இங்கு காட்டுமிராண்டிகள் அதிகம் இல்லை, ஒரு விஷயத்தை சொன்னால் அதை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் அதிகம் இருந்தனர், இருக்கிறார்கள், நம் குறையை உணர்ந்து நிறை செய்யாவிட்டால் இனிவரும் காலங்களிலும் இருப்பார்கள்.

//இந்தியா ஞான பூமி, இங்கு ஞானிகள் நிறைந்த பூமி என்று கூறுவது, மக்கள் இன்றும் பண்படவில்லை என்பதைத் தான் குறிக்கிறது. //
இந்த வார்த்தை பயன்படுத்தி சொல்வதுதான் சரியாக சொல்வதா?...விவேகானந்தர் அமெரிகாவில் இதைதான் ...சொன்னார் ! இந்தியா ஞானபூமி என்று !

"உலகம் அமரநிலை எய்தும் நிலையை இந்தியா உலகுக்கு அளிக்கும் !" என்று !பாரதி சொன்னார் !
புதுவைக்கு அரவிந்தரை தேடி உலகம் வருகிறது ! இந்தியா
ஆன்மிக பூமி என்பதில் என்ன சந்தேகம் ..என்ன தவறு .. ரமணமகரிஷியை தேடி உலகம் வரவில்லையா....இந்தியா ஞான பூமியா இல்லையா என்பதை "யோகியின் சுயசரிதை படித்து தெரிந்து கொள்ளலாம் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 03, 2011 7:12 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
சதாசிவம் wrote:
வேறு ஒரு கருத்தை விவாதிக்கும் போதும், மதத்தை பற்றி பேசும் போதும் இரண்டு தரப்பிலும் வரிந்து கட்டி கொண்டு வரும் நம் ஈகரை உறவுகள், இது போன்ற கட்டுரைக்கு பின்னூட்டம் இட யோசிப்பது
எனக்கு இருமல் வரவில்லை

நாம் இருவரும் தொடர்ந்தால் பிரச்சனை என்பது இல்லாமலேயே இன்னும் பல நாட்கள் விவாதிக்கலாம். ஆனால் மேற்கூறிய காரணத்திற்காக நான் இந்த விவாதத்தை கைவிடுகிறேன்,
ஈகரையில் பின்னோட்டம் இடுவதும் ! இடாததும் அவர் அவர்கள் தனிப்பட்ட விருப்பம் ! இதில் " வரிந்து கட்டிக்கொண்டு " என்றெல்லாம் கேலிசெய்ய வேண்டய அவசியம் இல்லை !...நீங்கள் காமத்தை பற்றி அலசுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை !,,,,பொதுத் தளத்தில் மற்ற பதிவுகளில் பின்னூட்டம் இடுவதை குறை சொல்லவேண்டாம் . சிலருக்கு என்று சில வரையறைகள் உண்டு.....ஒரே நாளை மீறிவிட வேண்டும் என்று ..நினைக்க கூடாது !...

தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன். ஈகரை உறவுகளை குறை சொல்வது என் நோக்கமல்ல, இந்தியாவில் மற்ற விஷயங்களை விவாதிக்கும் நாம், இது போன்ற விஷயங்களை விவாதிக்க தயங்குகின்றனர், என்ற விஷயத்தை சொல்ல வந்தேன். ஈகரை உறுப்பினர்கள் இந்தியாவின் பிரதிபலிப்பு என்பது என் கருத்து. இது தவறு என்று புரிய வைத்தமைக்கு நன்றி.

சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 03, 2011 7:45 pm

கே. பாலா wrote:
சதாசிவம் wrote:இங்கு காட்டுமிராண்டிகள் அதிகம் இல்லை, ஒரு விஷயத்தை சொன்னால் அதை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் அதிகம் இருந்தனர், இருக்கிறார்கள், நம் குறையை உணர்ந்து நிறை செய்யாவிட்டால் இனிவரும் காலங்களிலும் இருப்பார்கள்.

//இந்தியா ஞான பூமி, இங்கு ஞானிகள் நிறைந்த பூமி என்று கூறுவது, மக்கள் இன்றும் பண்படவில்லை என்பதைத் தான் குறிக்கிறது. //
இந்த வார்த்தை பயன்படுத்தி சொல்வதுதான் சரியாக சொல்வதா?...விவேகானந்தர் அமெரிகாவில் இதைதான் ...சொன்னார் ! இந்தியா ஞானபூமி என்று !

"உலகம் அமரநிலை எய்தும் நிலையை இந்தியா உலகுக்கு அளிக்கும் !" என்று !பாரதி சொன்னார் !
புதுவைக்கு அரவிந்தரை தேடி உலகம் வருகிறது ! இந்தியா
ஆன்மிக பூமி என்பதில் என்ன சந்தேகம் ..எண்ண தவறு .. ரமணமகரிஷியை தேடி உலகம் வரவில்லையா....இந்தியா ஞான பூமியா இல்லையா என்பதை "யோகியின் சுயசரிதை படித்து தெரிந்து கொள்ளலாம் !

இந்தியா ஞான பூமி என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. இது ஞானிகள் தோன்றிய நாடு. ரமனரையும், அரவிந்தையும் நேசிப்பவன் நான். பிரபந்தத்தையும், திருமுறைகளையும் வாசிப்பவன் நான். காமத்தை அலசுவது ஏன் நோக்கமல்ல? இந்தியாவில் ஒரு கருத்தை கூறும் போது அது சரியா தப்பா உண்மையா பொய்யா என்று ஆராய்யாமல் இது சரி, இது தவறு என்று மேலோட்டமாக முடிவு செய்கிறோம், அதிலும் பெரும்பாலும் அடுத்தவர் எடுக்கும் முடிவை ஆமோதிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம்.

இங்கு நான் கேட்டது இந்தியாவில் இருக்கும் நாம் அனைவரும் ஞானிகளா ? இத்தனை கருத்து கூறியும் நமக்கு இது விளங்காமல் இருப்பது ஏன் ? இதற்கு ஏன் பதில் வரவில்லை?

இந்தியா சிறந்தது, இந்தியா ஞானிகள் நிறைந்தது என்று கூறி நம்மில் இருக்கும் தவறுகளை உணராமல்
போர்வை போர்த்துவது எதனால் ?

ஞானம் நிறைந்த நன்னாடு என்று கூறிய பாரதி,

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்"
"நல்லதோர் வீணை செய்தே அதை நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ"

என்றும் தானே கூறி புலம்பி இருக்கிறார். இது பாரதி உணர்ந்து தானே பாடி இருக்கிறார். இது ஏன் நம் மனதில் ஏறுவதில்லை. அத்தனை ஞானிகள் கூறிய வரிகளையும் புழுதியில் தானே போட்டு இருக்கிறோம்.

இந்தியாவில் பெரும்பான்மையினர் இன்னும் அறியாமையில் தான் இருக்கின்றனர். அனைத்து மனிதர்களும் ஒன்று ஒன்று கூறிய ராமானுஜருக்கு பூஜை செய்யும் போதும், ஒரு சில சமூகம் மட்டுமே உள்ளே செல்ல திரை இடப்பட்டு தானே நடக்கிறது. இதை ஒத்து கொள்ள நாம் ஏன் மறுக்கிறோம் ?

இந்த தலைவன் சரியில்லை, அந்த கட்சி சரியில்லை என்று கூறும் நாம், மக்களும் சரியில்லை, மக்களில் ஒன்றாக இருக்கும் நாமும் சரியில்லை என்று எப்போது கூறுவது ?

இது மாற நாம் என்ன செய்ய வேண்டும். ?

ஒரு இந்தியனாக, மதத்தை நேசிப்பவனாக, மொழியை நேசிப்பவனாக பாரதி புலம்பிய புலம்பல் தானே இது.

சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக