புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காதலும் காமமும்.. - Page 3 I_vote_lcapகாதலும் காமமும்.. - Page 3 I_voting_barகாதலும் காமமும்.. - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும்..


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 11:09 pm

First topic message reminder :

காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".



பி.அமல்ராஜ் - இலங்கை.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 8:14 pm

அருண் wrote:
காமத்தில் தொடங்கி காதலில் முடிவது தமிழ்க்காதல்.
காமத்தில் தொடங்கி காமத்திலேயே முடிந்து விடுவது அயல்க் காதல்.
என்பது பலரின் கருத்து. என்னதும்.

அருமையான விளக்கம் அக்கா! உண்மை தான்..! நன்றி
நன்றி அருண் அன்பு மலர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Nov 01, 2011 11:28 am

நன்றி ஆதிரா,

ஃப்ராய்டின் கருத்துகளை மட்டுமல்ல, பல உளவியல் அறிஞர்களின் கருத்துக்களை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. இது எதனால் என்று ஆராய்வோம்,

மனித மனது உளவியல் அடைப்படையில் (இதை நம் யோக சாஸ்திரமும் ஒத்துக்கொள்கிறது) பல அடுக்குகளை உடையது.

1. விழிப்பு நிலை (கான்ஷியஸ் மைண்ட்)
2. உறக்க நிலை
3. கனவு நிலை
4. ஆழ் நிலை (சப் கான்ஷியஸ் மைண்ட்).

நாம் சொல்லும் பல கருத்துக்களும் விழிப்பு நிலை மனதில் இருந்து தான் ஏற்படுகிறது. மாமியார் மருமகளை சமையலில் குறை சொல்வது வெளித்தோற்றமே, உள்ளே அவளை எப்படியாவது மட்டம் தட்டி தனக்கு கீழே வைக்க வேண்டும் என்பது தான் உள் மனது எண்ணும் எண்ணம். ஆனால் இதை எந்த மாமியாரும் ஒற்றுக் கொள்ள மாட்டார்.

உளவியல் கோட்பாடுகள் பெரும்பாலும் ஆழ்நிலை மனதில் மனிதன் என்னவாக இருக்கிறான் என்பதை பொறுத்து தான் அமைக்கப்படுகிறது. இதை நாம் மேல் நிலை மனதில் இருந்து பார்த்தால் இதில் உண்மை விளங்காது. இதை பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது காலம் காலமாக சமுதாயத்தில் உழன்று நம் மனது சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் விஷயத்தை தான் சரி என்று வெளிப்படையாக காட்டிக்கொள்கிறது. நிஜத்தில் நமக்கு உண்மையில் பிடித்த பல விஷயங்களை அடுத்தவர் கேலி செய்வார் என்ற காரணத்தில் அதை தவிர்க்கிறோம். இதனால் தான் உளவியல் சிகிட்சையின் போது ஒருவரை ஆழ்மனதில் ஆழ்த்தி கேள்வி கேட்கப்படுகிறது. அப்போது தான் நம் மனதில் ஒளிந்து இருக்கும் காமம், கோபம், தாபம், ஏமாற்றம், தாகம் அனைத்து வெளிப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால் மனிதனை விட விலங்குகள் ஒழுக்கம் நிறைந்ததாக இருக்கிறது. தன் இனவிருத்தி காலத்தில் தான் ஒன்று சேருகின்றன.

காமமும் காதலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் தான். இவை இரண்டுக்கும் உளவியல் ரீதியில் பெரிய வித்தியாசம் இல்லை.

இங்கு பல கணவன் மனைவி இணைந்து இருப்பது தமிழ் காதலில் இல்லை, பிரிந்தால் சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்து விடும், வேறு ஒரு பிரச்சனையில் நம்மை மாட்டிவிடும் என்ற பயத்தில் தான். இப்போது சமுதாயம் உடைந்து அடுத்தவர் மதிப்பிடுகளுக்கு நாம் மரியாதை கொடுப்பது குறைவதால் அதிக அளவில் பிரிவு ஏற்படுகிறது. யாரும் யாருக்கும் கட்டுப்படாத வாழ்க்கை என்று வந்துவிட்டது. இது மேலும் பல நாகரீக மாற்றத்தை தரும், அனைத்து நாகரீக மாற்றங்களும் முதலில் அநாகரீகம் என்று ஒதுக்கப்பட்டு பின்பு , ஒருசிலரால் ஏற்க்கப்பட்டு பின்பு பலரால் ஏற்கப்படுகிறது. இதற்கு ஒரு உதாரணம் இன்று தெய்வீக கலையாக கருத்தப்படும் பரதம் ஒரு காலத்தில் சதிராட்டம் என்ற பெயரில் பொதுமகளீறாள் ஆடப்பட்டது என்ற உண்மையை நாம் உணர வேண்டும்





சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 01, 2011 11:44 am

Aathira wrote:குட்டியூண்டு திரியைக் கொலுத்திப் போட்டு விட்டு போயிருக்கிறார். அது கொழுந்து விட்டு எரிகிறது. எதிர்ப்பு எதிர்ப்பு இதில் நட்போடு குளிர் மட்டுமே காயட்டும் விவாதிக்கும் உறவுகள். கை கால்களைச் சுட்டுக்கொள்ளாமல். ஆரோக்கியமான பல கருத்துகளை எதிர்நோக்கி.... சூப்பருங்க

உடனுக்குடனே பதில் கூறாமல் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு வாத விவாதங்களில் ஈடுபட்டால் நிறைய செய்திகள் கிடைக்கும் என கருதுகிறேன்.
விவாதத்தில் இருப்பது நானும் சதாசிவம் அவர்களும் என்பதால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பில்லை.

நன்றி அக்கா !



காதலும் காமமும்.. - Page 3 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Nov 01, 2011 11:50 am

//விவாதத்தில் இருப்பது நானும் சதாசிவம் அவர்களும் என்பதால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பில்லை.
//

அந்த ரகசியத்தை சொல்லிவிட்டால் .....பலருக்கும் பயனுடையதாக இருக்குமே



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 01, 2011 11:57 am

சதாசிவம் wrote:இன்று டிஸ்கோ, தண்ணி பார்ட்டி அநாகரிகம் என்று கூறும் நாம், ஒவ்வையாரும், அதியமான் கள்ளும் கறியும் உண்டு, புலவர்கள் பலரும் மகிழ்ச்சியாக இருந்தனர் என்ற உண்மையை சங்கப் பாடல் மூலம் உணர வேண்டும்.

ஔவையார் கள் உண்டார் என்று சங்க பாடலின் மூலம் அறியகிடைக்கிறது. இங்கே இன்னொன்றையும் கருத்திலெடுத்துக்கொள்ள வேண்டும்.

சங்கத்தில் நாற்றம் என்றால் அழகிய விரும்பத்தக்க மனம் என்றுதான் பொருள்.

தற்போது நாற்றம் என்றாலே துர்நாற்றம் என்றுதான் பொருள் படுத்துகிறோம். இதே போலத்தான் இன்று நாம் கள் என்று கருதுகிற கள்ளைத்தான் ,, அன்று ஔவையார் குடித்தாரா என்று ஆராய வேண்டும்.

அவர் குடித்த கள் கொண்டிருந்த தன்மையும் , இன்று இருக்கிற கள் கொண்டிருக்கிற தன்மையும் ஒன்றுதானா என்று முழுமையாய் கூறமுடியாது.

மேலும் , ஏதேனும் ஒரு சூழலில் ,, என் நண்பர்களிடம் கஞ்சா அடுச்சமாதிரி கும்முனு இருக்குடா நான் கூறியிருக்கிறேன். ஆனால் எனக்கு கஞ்சா பழக்கம் இல்லையே ? இதே போல ஏதேனும் ஒரு இலக்கிய வரியினை எடுத்துக்கொண்டு , அதையே சான்றாக்கி உண்மைஎன்று நம்ப முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

விவாதங்கள் தொடரும்.

தாங்கள் தமிழ் தவிர்த்து வாழ்வியல் கருத்துகளை எடுத்துரைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது . நன்றி




காதலும் காமமும்.. - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 01, 2011 11:58 am

கே. பாலா wrote://விவாதத்தில் இருப்பது நானும் சதாசிவம் அவர்களும் என்பதால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பில்லை.
//

அந்த ரகசியத்தை சொல்லிவிட்டால் .....பலருக்கும் பயனுடையதாக இருக்குமே

கருத்துக்களில் தான் முரண்பாடுகள்
மனங்களில் அல்ல என்று தாங்கள் அறியாததா பாலா சார் ?



காதலும் காமமும்.. - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 01, 2011 2:10 pm

Aathira wrote:

ஃப்ராய்டின் கருத்துகளை என்னாலும் சிலவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ள இயலும். பல மனிதர்களுக்குப் பொருந்தாதவை. ஆனால் பிறந்த குழந்தையை, இரண்டு, மூன்று வயது குழந்தைகளைக் காமக்கண்களோடு பார்க்கும், நடக்கும் இழிவான மனிதர்களுக்குப் பொருந்தும். இல்லை என்று கூற முடியாது. ஆனால் எல்லாவற்றையும் பொதுக்கண்ணோட்டத்துடன் எடுத்துக்கொள்ளவும் முடியாது. எங்கோ ஒரு சதம் இருப்பதைக் காட்டாகக் கொள்ளவும் கூடாது.
மேலும் ஃப்ராய்டு கூறுகையில் தந்தை மகன் விரிசலுக்குக் காரணமே அவன் தன் மனைவியை நேசிக்கிறான் என்பதாலே என்பார்.
நல்ல ஆரோக்கியமான விவாதங்கள். தொடரட்டும்.

உண்மைதான் அக்கா ! நன்றி !



காதலும் காமமும்.. - Page 3 Thank-you015
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Nov 01, 2011 3:57 pm

இது ஆரோக்கியமான விவாதம் என்ற காரணத்தால் தொடர்கிறேன்.

கள் என்ற தமிழ்ச் சொல்லுக்கு தேன், மது, மதுவை உண்டும் வண்டு என்று மூன்று பொருள் உண்டு. நான் கூறும் பாடல்

புறநானூறு - 235
சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே


இதற்கு பொருள் : கொஞ்சம் கள் கிடைத்தால் எங்களுக்கு கொடுக்கும் மன்னா, நிறைய கள் கிடைத்தால் எங்களுக்கு கொடுத்து நாங்கள் பாட எங்களுடன் மகிழ்ந்து உண்ணும் மன்னா" என்ற பொருள் தான் தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள், இந்த கள் தென்னங் கள்ளா, பனங் கள்ள, ஈச்சங் கள்ளா, ரெட் லேபிளா, புளு லேபிளா என்ற குறிப்பு பாடலில் இல்லை. ஆனால் இது போதை தரும் வஸ்த்து என்று தான் தமிழ் படித்தவர்கள் உணருகிறார்கள். இப்படி ஒன்றை குடித்து பாடி இருக்கிறார் (சொர்க்கம் மதுவிலே என்ற பாணியில் இருக்குமோ சிரி )

92 அதிகாரத்தில் வள்ளுவன் கூறுவதும் இந்த கள்ளை தான். இது மட்டுமா 1090 குறளில் உண்டால் மயக்கம் தருவது மது, ஆனால் பார்த்தாலே மயக்கம் அளிப்பது காமம் என்று கூறுகிறார். மது என்றால் தேன் என்று ஒரு பொருளும் உண்டு. ஆனால் வள்ளுவன் குறிப்பிடுவது போதை தரும் வஸ்த்து தான். இவர் பொய்யா மொழிப் புலவர் என்று நாம் கூறுகிறோம். அப்படி யானால் இவர் கூறுவது வைத்துப் பார்த்தால் கள்ளை விட மோசமானது காமம்.

ஒரு சிலர் தான் சமுதாயத்தில் தவறு என்று சொல்லப்படும் வன் கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் பலரும் மனதில் நினைத்து அதை செயல் படுத்தாமல் அல்லது இது தவறு என்று தங்களை கட்டுப்படுத்தி உள்ளனர். ஆனால் உளவியல் கூறுவது அனைவரின் மனதிலும் காமம் ஒளிந்து இருக்கிறது. போட்டி, பொறாமை, கோபம், விரக்தி, சோகம், ஒளிந்து இருக்கிறது என்று சொன்னால் ஒத்துக் கொள்கிறோம். காமம் ஒளிந்து இருக்கிறது என்று சொன்னால் பின் வாங்குகிறோம். ஏனென்றால் இது சமுதாயத்தால் அங்கீகரிக்கப் படாத ஒன்று என்ற காரணத்தால் தான்.

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்பவன் மனிதனடா
உள்ளத்தை காண்பவன் இறைவனடா.

இந்த இறைவன் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது, அனைவரும் விவேகானந்தர் ஆகவும், வாடிய பயிரை கண்டு வாடும் வள்ளலாறாகவோ வாழ முடியாது.







சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Nov 02, 2011 12:18 pm






ஆண் பெண் உறவிற்கு , அதாவது தாய் மகன் , தந்தை மகள் , ஆண் பெண் நட்பு , அண்ணன் தங்கை உறவு , இவைகள் அதிக சுவைமிகுந்ததாய் இருப்பதற்கு காரணம், அதாவது இதன் அடிப்படை காமம் தான் என்கிற மேற்கத்திய மனப்பான்மை உளவியல் கருத்தை மறுத்து கூறுகிற வாதம் கொஞ்சம் திசைமாறி காமம் அவசியமா , அவசியமற்றதா என்கிற பாதைக்கு போய்விட்டதோ என்று எண்ணுகிறேன், சரி இருக்கட்டும். முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

தர்மார்த்த காம மோட்சா என்பதுதான் நாம் வேதங்கள் நமக்கு கூறிவந்த போதனை. அறம் பொருள் இன்பம் வீடுபேறு அடைதல் ,,,இதில் வீடு பேரு அடைதலை பற்றி பின்னர் யாரும் கவலைகொண்டதாய் தெரியவில்லை. ஆகையால் தான் நம் இலக்கியங்கள் அறம் , பொருள் , இன்பம் என்று மூன்றிக்கும் முக்கியத்துவம் கொடுத்தது . ஆக அறத்திற்கும், பொருளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே முக்கியத்துவத்தை காமத்திற்கும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை விளக்கியிருக்கிறார்கள். மேலும் விளக்க வேண்டுமானால் , நந்திதேவர் , ஸ்வேதகேது, பின் வாத்சாயனர் வரைக்கும் போகவேண்டிவரும் . கொஞ்சம் இருமிக்கொண்டு என் வாதத்திற்கு வருகிறேன்.

பொதுவாய் உளவியல் என்பது மன பகுப்பை அடிப்படையாக கொண்டுதான் காரண காரியங்களை ஆராய்கிறது. ஆனால் இந்த உள பகுப்பியலும் சரி , உள தொகுப்பியலும் சரி முழுமையானதில்லை. பெரும்பாலும் அறிஞரின் ஒரு குறிப்பிட்ட கண்ணூட்டத்துடந்தான் ஆராய படுகிறது.

தாயோ , சகோதரியோ , தோழியோ , தங்கையோ , ஒரு ஆண் , பெண் மீது அல்லது ஒரு பெண் ஆண் மீது வைக்கும் விருப்பத்தின் அடிப்படை காமம் தான் என்கிற பிரய்டின் கூற்று அவர்கள் நாட்டிற்கு சரி என்று படலாம், நமக்கும் அதுதான் சரி என்று கூறுவது சாத்தியமில்லை. ஏனென்றால்

மனதின் எண்ணங்கள் மரபு சார்ந்தது. மேற்க்கத்திய மரபும் . கீழை நாட்டினர் மரபும் ஒன்றாய் இருப்பதில்லை. ஓஷோ அவர்களின் கூற்றுப்படி இந்தியர்களின் மனம் மிகுந்த பொறுமையுடையது. ஆணவம் , அகங்காரம் தவறு ஏன்றுஏற்றுக்கொண்டது. ஆனால் மேற்கத்திய மனங்கள் அப்படி இல்லை. இதற்கு முற்றிலும் மாறானது.

இந்தியர்களின் மனதிற்கும் , மேற்கத்தியர்களின் மனதிற்கும் உள்ள வேறுபாட்டினை ஒரு சிறிய செய்தியின் மூலம் நாமே அறியலாம்.
பக்தியை தேடியோ , அமைதியை தேடியோ , செழுமையை அல்லது செம்மையை தேடியோ மேற்கத்தியர்கள் இந்தியாவிற்கோ , கீழை நாட்டிற்கோ தான் வருகிறார்கள். ஆனால் நம் இத்தகைய தேடல்களை இமயமலை போன்ற இடங்களுக்கு சென்றுதான் தேடுகிறோம்.
அவர்கள் தனி மனிதனை அதாவது தன்னை வெறுத்து சமுதாயத்துடன் சேர்ந்து கற்றுக்கொள்ள இங்கு வருகிறார்கள். ஆனால் நாம் சமுதாயத்தை வெறுத்து அதே சமயத்தில் , தன்னை வெறுக்காமல் கற்றுக்கொள்ள தனிமையை தேடுகிறோம்.

இதுதான் அவர்கள் மனதிற்கும் , நம் மனதிற்கும் உள்ள பெரிய வித்தியாசம்.
தாய் - மகன் , தந்தை - மகள் , அண்ணன் - தங்கை , தோழன் - தோழி இந்த உறவுகள் அதிக சுவை மிகுந்ததாய் இருப்பதற்கு காமம் தான் காரணம் என்பது அவர்கள் நாட்டிற்கும் , அவர்கள் கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொருத்தமாய் இருக்கும்.

ஆனால் நம் நாட்டின் , நம் பரம்பரியத்தின் அடிப்படை என்பது வேறு. இங்கே பெண் என்பவளை ,,தாயாகவோ , தங்கையாகவோ , தோழியாகவோ தனக்கு அருகில் அல்லது அவளுக்கு அருகில் இருக்க ஒரு ஆண் அசைபடுகிறான். இந்த ஆசை காமம் அல்ல பரிபூரணத்தை நோக்கிய பயணம்.

ஒரு ஆண் தன்னை பரிபூரண படுத்திக்கொள்ள (Perfectionism) பெண்களின் உறவை நாடுகிறான். என்பதுதான் நம் மண்ணின் உண்மை.

சில நூறு வருடங்களாக மேலை நாட்டினரின் மன இயல்களுக்கு , நாம் அடிமைபடுத்த பட்ட காரணத்தால் தான் அவர்களின் மன இயல் கூற்று சரி என்று வாதாடுகிறோம்.



காதலும் காமமும்.. - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Nov 02, 2011 12:28 pm

சதாசிவம் wrote:
செவ்விலக்கியங்கள் காமத்தை மனித தேடுதலாகத் தான் பார்க்கிறது. இன்னொரு உளவியல் கூற்று
man gives love for sex
women gives sex for love"
இதை ஏற்பது கடினம், ஆனால் என்ன செய்ய இது தான் உளவியல் உண்மை

நம் செவ்வியல் இலக்கியங்கள் காமத்தை மனித தேடுதலாக பார்க்கிறது என்பது ஏற்புடையதாய் நான் கருதவில்லை.

மனிதனின் பலவகையான தேடுதலில் ஒரு தேடுதலாய் இருக்கிற காமத்தின் அழகியல் உணர்ச்சியை உணர்த்துவதாய் இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஒரு ஆண் பெண் மீது அன்பு செலுத்துவது கமத்திற்காக அல்ல தன்னை முழுமைபடுத்துதலுக்காக
ஒரு பெண் ஆணை முழுமை படுத்துவது அன்பிற்காக.




காதலும் காமமும்.. - Page 3 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக