ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:

5 posters

Go down

மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Empty மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:

Post by முஹைதீன் Sun Oct 30, 2011 1:47 pm

மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: கண்ணீருடன் பெற்றோர் வழியனுப்பினர்


பட்டுச்சேலை - கழுத்து நிறைய நகைகளுடன் பெற்ற மகளை பார்க்கும்போது பெற்றோருக்கு ஏற்படும் சந்தோஷம் அலாதியானது. முத்தமழை பொழிந்து புதுவாழ்க்கையை தொடங்க அனுப்பி வைப்பார்கள்.



ஆனால் மணப்பெண் கோலத்தில் இருக்கும் அன்பு மகள் இன்னும் சற்று நேரத்தில் இதையெல்லாம் துறந்து விட்டு எந்த தொடர்பும் இல்லாமல் நம்மை விட்டு எங்கோ செல்லப்போகிறாள் என்றால் அவளை பார்க்கும் போது பெற்றோரின் மனது எப்படி பரிதவிக்கும்.

நாளை துறவியாக மாறப்போகும் கல்லூரி மாணவிகள் பாயல் சாதியா, பூர்விசில்பட், ஜெயஸ்ரீ, மாணவர்கள் ஹர்சித்சிப்பட், சுபாஹிதுகட், ககன்துகட் ஆகிய 6 பேரும் 6 குதிரை வண்டிகளில் மணக்கோலத்தில் ஊர்வலமாக சவுகார் பேட்டையில் இருந்து அழைத்து வரப்பட்டனர். மகளுக்கு திருமணம் நடந்திருந்தால் எவ்வளவு நகைகள், பொருட்கள் அன்பளிப்பாக கொடுப்பார்களோ அத்தனையும் கொடுத்தனர்.

மணப்பெண் அலங்காரத்தில் குதிரை வண்டியில் பெண்கள் வலம் வர, உற்றார்- உறவினர்கள், நண்பர்கள், ஊரார் ஆடிப்பாடி கொண்டாடினார்கள். மகளைப் பற்றிய எத்தனையோ கனவுகளை சுமந்து வளர்த்த பெற்றோர்களும் அவர்களுடன் வந்தனர்.
கடைசியாக மகளை மணக்கோலத்தில் பார்க்கிறோம் என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மகளை இழக்க போகிறோம் என்ற பரிதவிப்பில் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

அதே நேரத்தில் இவர்களின் வைராக்கியத்தை பாராட்டி ஜெயின் சமூகமே கொண்டாடியது. நூற்றுக்கணக்கானவர்கள் பக்தி பாடல்களை மனம் உருக பாடியபடி வந்தார்கள். பெற்றோர்கள், உறவினர்களின் கடைசி ஆசைக்காக துறவியாக மாறுவதற்கு முன்பு அந்த பெண்களும் அவர்களுடன் ஆடிப்பாடி உற்சாகப்படுத்தினார்கள். கையில் இருந்த ஏராளமான பணம், பரிசு பொருட்களை உடன் வந்தவர்கள் மத்தியில் வாரி வழங்கினார்கள். அவர்களிடம் இருந்து பெறும் பரிசை பலர் பொக்கிஷமாக கருதி வாங்கி சென்றார்கள்.

ஊர்வலம் வேப்பேரி ரோட்டில் உள்ள திடலை வந்தடைந்தது. அதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தாங்கள் துறவறம் மேற்கொண்டது ஏன் என்பது பற்றி அவர்கள் பேசினார்கள்.

நாளை காலை 7 மணிக்கு அலங்காரங்களை களைந்து நீராடுவார்கள். அதன் பிறகு தறவிகளுக்கான வெள்ளைச் சேலை வழங்கப்படும். அதன் பிறகு கையில் எந்தவிதமான ஆடம்பர பொருளையும் தொடமாட்டார்கள். பணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நாடு முழுவதும் கால்நடையாக காலில் செருப்புகூட அணியாமல் செல்வார்கள். வழியில் ஏதாவது வீடுகளில் பிச்சை கேட்டு உணவு வாங்கி சாப்பிடுவார்கள்.

ஆன்மீக கருத்துக்களை பேசுவது, பஜனை பாடுவது என்று அவர்களின் கடைசி காலம் கழியும்.
இந்த மாணவ - மாணவிகள் தீட்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாதுமார்கி ஜெயின் சங்க தலைவர் உக்கம்சந்த், ரத்தன்லால் ரங்கா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

http://viyapu.com/news_detail.php?cid=4489


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Empty Re: மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:

Post by இளமாறன் Sun Oct 30, 2011 1:51 pm

இறைவனுக்கு சேவை தொடங்கும் பெண்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Empty Re: மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:

Post by ராஜா Sun Oct 30, 2011 1:53 pm

பகிர்வுக்கு நன்றி , மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Empty Re: மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:

Post by Aathira Sun Oct 30, 2011 1:55 pm

அத்தனை ஆறு பேரும் இளைஞி, இளைஞர்கள். படித்தவர்கள்.ஒரு பெண் பி. ஈ.
அவர்களின் தொண்டும் துறவும் தூயமையாக அமைய வாழ்த்துகள்.


மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Aமணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Aமணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Tமணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Hமணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Iமணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Rமணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Aமணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Empty Re: மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:

Post by ARR Sun Oct 30, 2011 2:17 pm

பெற்றோர் மனம் பதைக்க, மேற்கொள்ளும் துறவின் மூலம் இவர்கள் சாதிக்கப்போவது என்ன..?


மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: 0018-2மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: 0001-3மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: 0010-3மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Empty Re: மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:

Post by இளமாறன் Sun Oct 30, 2011 2:19 pm

சென்னை, அக். 29-

ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா...” என்று என்னதான் தத்துவம் பேசினாலும் கொஞ்சமா ஆட்டம் போடுகிறோம்? பணம், ஆடம்பர வாழ்க்கை, சுக போகங்களை அனுபவித்தல்... இதில்தான் மனம் அதிக அளவில் லயித்து போகிறது. அதிலும் கல்லூரி வாழ்க்கை என்றால் சும்மாவா? மனம் அலைபாயும் வயசு.

எதையும் அனுபவிக்க துடிக்கும் இளமை. இவற்றையெல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு கட்டிய துணியோடு, வீடு வீடாய் கிடைத்ததை சாப்பிட்டு பக்தி மார்க்கத்தை பரப்பும் துணிவு எல்லோருக்கும் எளிதில் வராது. ஆனால் ஜெயின் சமூகத்தில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களும், இளைஞர்களும் துறவிகளாக மாறி வருகிறார்கள்.

சுக போகங்களுக்கு அடிமையாகும் இளம் வயதில் இவர்கள் துறவிகளாக மாறுவது ஆச்சரியமான விஷயம். படிப்பு, வேலை, குடும்பம், குழந்தைகளை பெற்றெடுத்தல், வயது முதிர்ந்து சாதல் இந்த வட்டத்தோடு வாழ்க்கை முடிந்து விடுகிறது. இந்த வட்டத்தை தாண்டி வாழ வேண்டும் என்பதுதான் இவர்களின் சித்தாந்தம். இளைஞர்கள், இளம் பெண்களை துறவியாக தீட்சை கொடுக்கும் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் நாளை மறுநாள் (31-ந்தேதி) நடக்கிறது.

இதற்காக பிரபல ஆன்மீக குரு ஆச்சார்ய ராம்லால்ஜி சென்னை வந்துள்ளார். இவரிடம் மட்டும் 341 துறவிகள் உள்ளனர். அவர்களில் 16 பேர் குழுவும் சென்னை வந்துள்ளது. நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ பாரக் (25), பூர்விசித்பட் (23), பாயல்காடியா (26) ஆகிய 3 கல்லூரி மாணவிகள் ஹர்ஜித்சித்பட், சுயாஹி துகட், சுகன் துகட் ஆகிய 3 இளைஞர்கள் துறவிகளாக மாறுகிறார்கள். செல்வ செழிப்பில் வாழ்ந்த இவர்கள் எல்லாவற்றையும் துறந்து துறவியானது சுவாரஸ்யமானது.

ஜெயஸ்ரீபாரக் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.ஏ. 2-ம் ஆண்டு படித்த போது ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். பணம், ஆடம்பரம் எதிலுமே அவரது மனம் ஈடுபடவில்லை. துறவியாக மாற வீட்டை துறந்து வெளியேறி 9 ஆண்டுகள் ஆகி விட்டது. 800 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடுமையான தவம் இருந்து இப்போதுதான் துறவிக்கான முழு பக்குவத்தை அடைந்துள்ளார்.

பாயல்காடியா ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவரும் பி.சி.ஏ. படிப்புக்கு பாதியிலேயே முழுக்கு போட்டு விட்டு ஆன்மீக பாதையை தேர்வு செய்தார். கடந்த 5 ஆண்டுகளாக நாடு முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரம் நடந்து சுற்றி வந்து இப்போதுதான் ஆன்மீக பலம் பெற்றுள்ளார். பூர்விசித்பட் பி.இ. படித்து கொண்டிருந்தபோது ஆன்மீகம் அவரை கவர்ந்தது. இவர் வீட்டை துறந்து 2 ஆண்டிலேயே துறவிக்கான முழு தகுதியும் பெற்று விட்டார்.

இதேபோல் இளைஞர்கள் மூவரும் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள். அவர்களும் 2 முதல் 5 ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பிறகு துறவி தகுதிக்கு வந்துள்ளார்கள். இவர்களுடன் மைலாப்பூரைச் சேர்ந்த பிரபல டாக்டர் அரக்சந்த் என்பவரும் துறவியாக மாறுகிறார். துறவியாக மாறும் இந்த இளம்பெண்கள் கூறியதாவது:-

உலக வாழ்க்கை துன்ப மயமானது. ஆன்மீக வழியில் தான் உண்மையான சந்தோசம் கிடைக்கிறது. நாங்கள் இப்போது சந்தோசமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளோம். பந்த பாசங்களில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம். இது வேண்டும், அது வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு கிடையாது. அதனால் ஏற்படும் கஷ்டங்களும் வராது என்றனர்.

துறவிகள் தீட்சை பெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாதுமார்கி ஜெயின் சங்க தலைவரும் விழாக்குழு தலைவருமான முன்னாள் எம்.எல்.ஏ. உக்கம்சந்த் செய்து வருகிறார். பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சென்னையில் திரண்டுள்ளனர்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்: Empty Re: மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum