புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
7 Posts - 3%
prajai
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
18 Posts - 4%
prajai
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_m10இன்றைய அரசியல் சதுரங்கம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய அரசியல் சதுரங்கம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 4:53 pm

மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!

அருண் நேரு
First Published : 29 Oct 2011 01:47:10 AM IST


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 5-0 என்கிற கணக்கில் இந்திய அணி வென்றிருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே இந்தப் போட்டித் தொடர் ஒரு சார்பாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்திவிட்டன.

பல போட்டிகளின்போது மைதானங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. பண்டிகைக் காலம் என்பதாலும் கிரிக்கெட்டில் மக்களுக்கு ஆர்வம் குறைந்திருந்தது. பொருள்களை வாங்குவதிலும் நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பதற்குமே பலரும் முக்கியத்துவம் அளித்திருப்பார்கள்.

கிரிக்கெட்டுக்குப் போட்டியாக இப்போது ஃபார்முலா - 1 கார் பந்தயமும் இந்தியாவுக்கு வந்துவிட்டது. கிரிக்கெட் மட்டுமே இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் நிலையை மாற்றுவதற்கு இது உதவக்கூடும்.

பல்வேறு பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்த, 2ஜி வழக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட எல்லோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. அடுத்த 11-ம் தேதி முதல் முறையான விசாரணை தொடங்க இருக்கிறது.

நாள்தோறும் விசாரணை நடக்கப் போகிறது என்றாலும், வழக்கின் ஆழத்தைப் பார்க்கும்போது குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள்வரை விசாரணை நடக்கும் என்றே தோன்றுகிறது. விசாரணை நீதிமன்றத்துக்குப் பிறகு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு மேல்நோக்கிப் பயணிக்கும். அதனால் ஒரு இறுதித் தீர்ப்பு வருவதற்கு சிலகாலம் ஆகத்தான் செய்யும்.

இந்த வழக்கில் சிபிஐ, மத்திய அரசு, அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஒவ்வொரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் ஒட்டுமொத்த இந்தியாவே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்பதால், குற்றம் புரிந்த யாரும் அவ்வளவு எளிதாகத் தப்பித்துவிட முடியாது.

இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் மீது இன்னும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இவர்களைத் தவிர இன்னும் பலர் விசாரணை வளையத்துக்குள் வரக்கூடும்.

2ஜி விவகாரத்தால் சட்டப் பேரவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த திமுக, இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வியடைந்திருக்கிறது. தனித்தே நின்ற அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வென்றிருக்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டபோதும், அதைப் பொருள்படுத்தாத தமிழக வாக்காளர்கள் அவரது கட்சிக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த அலையில் காங்கிரஸ் கட்சி காணாமல் போயிருக்கிறது. இந்த நிலை நீடித்தால், அடுத்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தின் காங்கிரஸ் விஐபி-க்கள் பலரும் தங்களது தொகுதியிலேயே வெற்றி பெற முடியாது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இயலாமல் போனது அவர்களது துரதிருஷ்டம்.

ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், நவீன் பட்நாயக் போன்றோரெல்லாம் தத்தமது மாநிலங்களில் தங்களது சொந்த பலத்திலேயே வென்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது. மத்தியில் கூட்டணி அரசே தொடர்ந்து ஆட்சியமைத்து வருவதால், இவர்களைப் போன்ற பிராந்தியத் தலைவர்களின் செல்வாக்கு பெருகுவதைத் தடுக்க முடியாது.

அண்ணா ஹசாரே குழுவினர் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள். தங்களுக்கே குழிபறித்துக் கொள்கிறார்கள். லோக்பால் மசோதாவுக்காகப் போராடுகிறார்கள் என்பதற்காகத்தான் மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள். அதற்காக, தங்களது தவறுகளை மறைப்பதற்கும் அந்த ஆதரவைக் ஹசாரே குழுவினர் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. தவறு செய்துவிட்டு லோக்பால் மசோதாவுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை ஏற்க முடியாது. ஹசாரே தனது வலைப்பக்கத்தில் கடுமையாக எழுதுகிறார். அவர் பயன்படுத்தும் சுடுசொற்கள் அவர் மீதான நம்பிக்கையைத் தகர்க்கின்றன. ஏமாற்றமாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் எதிராகச் செயல்பட்டதுதான் ஹசாரே குழுவினர் செய்த மாபெரும் தவறு. அதனால்தான் அவர்கள் மீது அரசியல் சாயம் பூசுவதற்கு ஏதுவாகியிருக்கிறது. காங்கிரஸ் இப்போது அவர்களைத் திருப்பித் தாக்குகிறது. தங்களது அரசியல் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இதைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர்களால் நியாயம் கற்பிக்க முடிகிறது.

இன்னும் சில மாதங்களில் உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தல் நடக்கப் போகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ், சமாஜவாதி, பாஜக ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி இருக்கும்.

இப்போதைக்கு முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிதான் போட்டியில் முன்னிலையில் இருக்கிறது. அந்தக் கட்சிக்கு காங்கிரஸ் மட்டுமே ஓரளவுக்கு ஈடு கொடுக்கும். மற்றபடி சமாஜவாதி, பாஜக போன்ற கட்சிகள் மூன்றாவது நான்காவது இடங்களுக்கு வேண்டுமானால் சண்டையிட்டுக் கொள்ளலாம்.

பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கும் தேர்தல் நடக்கப் போகிறது. காங்கிரஸýக்கும், அகாலிதளம் - பாஜக கூட்டணிக்கும் நேரடிப் போட்டி. பந்தயத்தில் காங்கிரஸ் கொஞ்சம் முந்துவது போலத் தெரிந்தாலும், அமோக வெற்றியைப் பெற்றுவிடும் என்று கூறுவதற்கில்லை. காங்கிரஸால் 60 முதல் 65 இடங்களைக் கைப்பற்ற முடிகிறதென்றால், அகாலி - பாஜக கூட்டணி 50 முதல் 55 இடங்களைப் பிடிக்கும். கொஞ்சம் திருப்பம் ஏற்பட்டாலும் முடிவுகள் மாறிப்போகும். எங்கும் இருப்பதைப் போலவே இங்கும் பல கோஷ்டிகளைச் சமாளிக்க வேண்டியிருப்பது காங்கிரஸýக்கு கூடுதல் தலைவலி.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்போது எல்லா கோஷ்டியையும் திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. பிரசாரத்தின்போதும், வாக்குப் பதிவின்போதும் பகை புகைந்து கொண்டேயிருக்கும்.

இதற்கெல்லாம் இப்போதே தீர்வு காண முடிந்தால்தான் வெற்றியைப்பற்றி காங்கிரஸ் நினைத்துப் பார்க்க முடியும். அப்படியில்லாமல் தேர்தல் வரை கோஷ்டிக் குழப்பத்தை நீடிக்கவிட்டால் பெரும் விலை கொடுக்க நேரிடும்.

உத்தரகண்டில் ஊழல் விவகாரங்களால் பாஜகவின் பெயர் கெட்டுப் போயிருக்கிறது. இது வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸýக்குச் சாதகமாக அமையும். இங்கு பாபா ராம்தேவின் அரசியல் பிரவேசம் நடக்கும் எனத் தெரிகிறது. தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைச் சோதிப்பதற்கு இதுவே சரியான இடம் என்று அவர் நினைக்கிறார்.

தனிக்கட்சியாகவோ அல்லது பாஜகவுக்கு ஆதரவாகவோ அவர் களமிறங்கினால் தேர்தல் பிரசாரம் களைகட்டும். ராம்தேவுக்கு மக்கள் மத்தியில் உண்மையிலேயே செல்வாக்கு இருக்கிறதா, இல்லை எல்லாம் வெறும் மாயைதானா என்பதும் தெரிந்துவிடும். இவை தவிர, மணிப்பூர், குஜராத், கோவா போன்ற மாநிலங்களும் அடுத்த ஆண்டில் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன.

அதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கப் போகிறது. லோக்பால் மசோதா தொடர்பான விவாதம் மீண்டும் பரபரப்பாகும். சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அண்ணா ஹசாரே குழுவினர் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடி தரக்கூடும். அவர்களுக்குப் பின்னால் மக்கள் திரண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மத்திய கிழக்கில் ஒருவிதக் குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கிறது. நம்நாட்டிலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதால் துனீஷியா, எகிப்து, யேமன், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் நமது கவனத்தை அவ்வளவாகக் கவரவில்லை. ஆனாலும் மம்மர் கடாஃபியின் மரணம் நமது ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

லிபியாவை 40 ஆண்டு காலம் தனது இரும்புப் பிடியில் வைத்திருந்த மம்மர் கடாஃபியின் சர்வாதிகார ஆட்சி, அரண்மனையில் தொடங்கி ஒரு கழிவுநீர்க் குழாயில் முடிந்திருக்கிறது. சொந்த நாட்டு மக்களே அவரைத் துன்புறுத்திக் கொன்றனர். கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பலருக்கு ஏற்பட்ட முடிவுதான் கடாஃபிக்கும் நேர்ந்திருக்கிறது.

பாகிஸ்தானுடன் நீண்டகாலமாக நெருக்கம் காட்டி வந்த அமெரிக்கா இப்போது கடுமையாக நடந்து கொள்கிறது. இந்தியா இதில் மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம். ஆனாலும் மிகக் கவனமாகவே நடந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் நடவடிக்கையால் நமது எல்லைப் புறங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டியதும் அவசியம்.

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பாக தேவையற்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கிக் கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல.

தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் பிடிபி கட்சிக்கும் இந்த விவகாரம் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான களம் மட்டுமே. எப்படியாவது தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது எண்ணம். இந்த அரசியல் விளையாட்டுக்கு தேசப் பாதுகாப்பை பலியாகவிடக்கூடாது. இங்கும் கூட்டணி நிர்பந்தம் என்று பேசிக் கொண்டிருந்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய அரசியல் சதுரங்கம்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக