புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
366 Posts - 49%
heezulia
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
25 Posts - 3%
prajai
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நதியின் பிழையன்று! Poll_c10நதியின் பிழையன்று! Poll_m10நதியின் பிழையன்று! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதியின் பிழையன்று!


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 7:24 pm

இந்தியாவுக்கே சிவா வரப் போகிறான் என்ற செய்தி, நீலாவுக்கு தேனாக இனித்தது; அதுவும் அவனுக்கு சென்னையிலேயே ஒரு கம்பெனியில் வேலை என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.




ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்ற அருமை மகன் திரும்பி தாய்நாட்டுக்கே வந்துவிட்டதில் நீலாவின் பெற்ற மனம் குளிர்ந்தது. நான்காண்டுகளுக்கு முன் திருமணத்திற்காக பத்து நாள் விடுமுறையில் வந்து போனதோடு சரி.




அடுத்த ஆண்டில் பேத்தி நீரஜா பிறக்கும் போது கூட சம்மந்தி அம்மா தான் உதவிக்கு அமெரிக்கா சென்று வந்தார். பேத்தியை இன்னும் பார்க்காத ஏக்கம் தினம், தினம் வாட்டி எடுக்கும்.




மகள் கமலியும் இரண்டாண்டு களுக்கு முன் திருமணமாகி கணவருடன் ஆஸ்திரேலியா சென்றுவிட, நீலாவும், அவள் கணவர் நாகராஜும் தனிக்குடித்தனம் தான். மகள் கல்யாணத்திற்குகூட தன் மகனால் வரமுடியவில்லை என்ற போது, உடைந்து தான் போனாள் நீலா. ஆனால், இதெல்லாம் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து மனதைத் தேற்றிக் கொண்டாள்.




பேத்தி நீரஜா வளர, வளர, நீலாவுக்கு உள்ளூர பயம். எங்கே அமெரிக்க கலாசாரம் அந்தப் பெண் குழந்தையை பாதிக்குமோ என்று தினமும் அச்சப்பட்டாள்.




மகனுடன் போனில் பேசும் போதெல்லாம் அதை நாசூக்காகக் கூறியும் வந்தாள். அதன் எதிரொலி தானோ, என்னவோ, இப்போது இந்தியாவுக்கே வரப் போகிறான் சிவா.




மகன், மருமகள் ரம்யா, பேத்தி நீரஜாவுடன் சேர்ந்து இருக்கப் போவதை எண்ணி குதூகலித்து, அவன் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந் தாள்; அந்த நாளும் வந்தது.




விமான நிலையத்தில் அவர் கள் மூவரையும் கணவருடன் சென்று வரவேற்ற நீலா, சொர்க் கத்தை பூமியிலேயே கண்டாள். செக்கச் செவேல் என்று சுருட்டை முடியுடன், குறும்புப் பார்வை கொண்ட பேத்தியைக் கண்டதும் பெருமை பிடிபடவில்லை.




அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் வெறிச்சோடிக் கிடந்த வீட்டிற்கே தனிக் களை வந்தது.




""என்னம்மா, உனக்கு இப்ப சந்தோஷம் தானே! எங்கே, உன் பேத்தி அமெரிக்க கலாசாரத்திலே கெட்டுப் போயிடுவாளோன்னு ராவும், பகலும் பயந்துண்டு இருந்தியே... அதனாலே தான் நல்ல வேலையைக் கூட உதறித் தள்ளிட்டு இங்கே வந்துட் டேன்,'' என்று சிவா சொல்ல, உச்சி குளிர்ந்தாள் நீலா.




சிவா வந்து இருபது நாள் ஓடிப் போனதே தெரியவில்லை. அன்று சனிக்கிழமை; சிவாவுக்கு விடுமுறை. சாப் பாட்டிற்குப் பின் அனைவரும் கூடத்திலே அமர்ந்திருந்தனர். அடுப்படியில் ஏதோ வேலையாய் இருந்தாள் ரம்யா. தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள் நீருகுட்டி. சாய்வு நாற்காலியில் அமர்ந்து சற்றே கண்ணயர்ந் திருந்தார் நாகராஜன். சோபாவில் அமர்ந்திருந்த நீலாவிற்கருகில் வந்தமர்ந்தான் சிவா.




""அம்மா, சாயங்காலம் நானும், ரம்யாவும், குழந்தையோட சீனு மாமா ஆத்துக்குப் போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம்.''




""அங்கெல்லாம் நீ ஒண்ணும் போக வேண்டாம்,'' வெடுக் கெனக் கூறிய நீலாவைக் குழப்பமாகப் பார்த்தான் சிவா.




""சீனு, எனக்கு சித்தப்பா பிள்ளை தான்; ஒண்ணு விட்ட தம்பி தான். ஆனா, அப்படியா நான் நினைச்சேன். கூடப் பிறந்த தம்பியை விட ஒரு மடங்கு அதிகமான பாசத்தோட நடந் துட்டேன். அவனுடைய மகளுக்கு கல்யாணம்ன்னு வந்தப்ப அத்தைங்கிற முறையிலே வெள் ளிக்குத்து விளக்கு, தங்க மோதிரம்ன்னு எல்லாம் செஞ்சேன்.




""ஆனா, கமலி கல்யாணத் துக்கு அவன் மட்டும் வந்து, "ஆம்படையாளுக்கு உடம்பு சரியில்லை!'ன்னு சொல்லி, ஒரு ஓரமா நின்னு, வந்தேன்னு பேர் பண்ணிட்டுப் போனான். எல் லாம் வயித்தெரிச்சல் தான்.




""நீ அமெரிக்காவிலே இருக்கே; கமலிக்கும் நல்ல இடம். அதான், பொறுக்கலே. அதுக்கப்புறம் நானும் அவனைப் பார்க்கப் போகலை; அவனும் இங்கே வர்றது கிடையாது. இப்ப நீ ஒண்ணும் போய் உறவைப் புதுப்பிக்க வேண்டாம்.''




கடுமையாகப் பேசிய நீலாவின் முன், வாயடைத்துப் போனான் சிவா.




நாட்கள் வாரங்களாகி, வாரங் கள் மாதங்களாகின. இயந்திரத் தனமாக வாழ்க்கைப் போய் கொண்டிருந்தது. வார இறுதியில் அனைவரும் சேர்ந்து அருகிலுள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கோ, சுற்றுலாத்தலத்திற்கோ சென்று வருவதோடு சரி. குழந்தை நீரஜாவோடு விளையாடவே நீலாவுக்கும், நாகராஜனுக்கும் நேரம் போதவில்லை.




ஒரு சனிக்கிழமை, காலையில் சிற்றுண்டி முடிந்ததும் சிவாவும், ரம்யாவும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, கையில் ஒரு பெட்டியுடன் நீலா முன் வந்து நிற்க, கேள்விக்குறியோடு அவர் களைப் பார்த்தாள் நீலா.




""உள்ளூர்லே இருக்கிற சீனு மாமா வீட்டுக்கு தான் போக முடியாம போச்சு; மதுரையில் இருக்கிற பாலு பெரியப்பா வீட்டுக்காவது போயிட்டு வரலாம்ன்னு கிளம்பினோம்.




""இந்தியாவுக்கு வந்து வேற சொந்தம் யாரையுமே இன்னும் பார்க்கலே. ரம்யாவுக்கும் நம்ம வீட்டு சொந்தக்காரர் யாரையும் அவ்வளவா தெரியாது. அதான், மதுரைக்கு போயிட்டு வரலாம்ன்னு...'' என்று சிவா சொன்னதும் தான் தாமதம்... நீலாவுக்கு வந்ததே ஆவேசம்.




""போயிட்டு வாடாப்பா. மகராஜனா போயிட்டு வா. என் பக்க சொந்தம் தான் ஒண்ணுமில்லைன்னு ஆயிடுத்து; அப்பா பக்க சொந்தமாவது நிலைக்கட்டும். ஏன்னா, அவங் கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பெரியப்பாவைப் போய் பார். கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ. எனக்கு எந்த வருத்தமுமில்லை,'' பொரிந்து தள்ளிய நீலாவின் செய்கை புரியாமல், தந்தையைப் பார்த்தான்.




அவர் ஜாடை செய்து, அடுத்த அறைக்கு அவனை அழைத்துச் சென்று, தனக்கும், தமையனுக் கும் சொத்து தகராறில் பேச்சு வார்த்தையற்றுப் போனதை பக்குவமாய் எடுத்துரைத்தார்.




அதற்குப் பின் சொந்தங்கள் பற்றித் தாயிடம் பேச்சுக் கொடுக்கவே இல்லை சிவா. தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்தான். கோவில், திரைப் படம், வெளியூர் என்று விடுமுறையை கழிக்கலானான்.




வருடம் ஒன்று உருண்டோடியிருந்தது. வந்த புதிதில் சிவாவிடம் காணப்பட்ட மகிழ்ச்சியும், குதூகலமும் தொலைந்து போயிருப்பதை கவனிக்கத் தவற வில்லை நீலா. அடிக்கடி சிந்தனை வயப்பட்டவனாய் காணப்பட்டான்.




ரம்யாவைப் பொறுத்தவரை எந்தவொரு மாற்றமும் அவளிடம் இல்லை. தொலைக்காட் சித் தொடர்களையும், தமிழ் திரைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மாமியாருக்கு அடுப்படியில் உதவிகள் செய்து, குழந்தையின் தேவைகளையும், கணவனின் தேவைகளையும் பூர்த்தி செய்து, அவள் மகிழ்ச்சியாகத் தான் இருந்தாள்.




குழந்தை நீரஜாவும் பாட்டி, தாத்தா அன்பு மழையில் நனைந்து சந்தோஷமாய் வளைய வந்தாள்; ஆனால், சிவா மட்டும் மனதில் ஒரு வாட்டத்துடன் இருந்து வந் தான்.




ஒரு நாள் மாலை, வேலையிலிருந்து திரும்பிய சிவா, கூடத்து சோபாவில் அமர்ந்திருந்த நீலாவிடம் நேராக வந்து, ""அம்மா, நான் அடுத்த வாரம் திரும்ப அமெரிக்காவிற்கே போகப் போகிறேன். அங்கே வேலை கிடைச்சாச்சு,'' என்று சொல்ல, அதிர்ந்தாள் நீலா.




ஏன்னு கேட்கக் கூட நாவெழாமல் கேள்விக்குறியோடு அவனைப் பார்த்தாள். ஒரு வருடம் கூடியிருந்து குளிர்ந்த சந்தோஷம் தொலையப் போவதை எண்ணி மனதில் வேதனை அடைந்தாள்.




""அமெரிக்க கலாசாரத்தின் பாதிப்பு குழந்தைக்கு வந்துவிடக் கூடாது என்ற உன்னோட ஆதங்கம் நீ ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும் எனக்கு நல்லா புரிஞ்சது. அதெல்லாம் மனசிலே வெச்சுண்டு தான், கோடிக்கணக்குலே வர்ற சம் பளத்தை உதறித் தள்ளிட்டு, நிம்மதி, சந்தோஷம், சொந்தங் களோட சேர்ந்திருக்கறது, இதெல் லாம் வேணும்ன்னு தான் வந் தேன்.




""அங்கே அமெரிக்காவிலே, சொந்தம்ன்னு யாருமேயில்லை. குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி டாலர் சம்பாதிக்கறதே தான் குறி. மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா, அக்கா, தங்கை... இப்படி அழகான குடும்பத்தை இந்தியாவிலே மட்டும் தான் பார்க்கலாம்.




""பதினெட்டு வயசானா மகனை தனியாக அனுப்பிவிடுவதும், வயதான பெற்றோரை பிள்ளைகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தான் அமெரிக் கத்தனம். சொந்தங்களுக்கு அங்கே மரியாதை கிடையாது. ஆனா, அந்த கலாசாரம் இன்னிக்கு இங்கே இந்தியாவிலேயும் வந்தாச்சே.




""எந்த சொந்தங்களையும் பார்க்க முடியாமல் ஏக்கத்துடன் இந்தியாவிற்கு வந்தால், "மாமா சரியில்லை, அத்தை சரியில்லை; இங்கே போகாதே, அங்கே போகாதே!'ன்னு, "தடா' போடுறீங்க. "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!' என்பர். ஆனால், குற்றங்களை மட்டுமே பார்த்து சொந்தங்களை கழட்டி விட்டு விட்டீர்கள். என் குழந்தை இங்கேயே இருந்தால் அவளுக்கும் இந்த காழ்ப் புணர்ச்சி தானே வரும்.




""பகவத் கீதையையும், ராமாயணத்தையும் தந்தது நம்ம தேசம் தான்; கலாசாரம்ன்னா என்னன்னு உலகத்துக்கே கத்துக் கொடுத்ததும் நம்ம பூமி தான். ஆனா, கலாசாரத்தை எந்தளவுக்கு காப்பாத்தறாங்கறதை கண் கூடா, "டிவி'யிலேயும், பத்திரிகை களிலேயும் பார்க்கிறேனே...




""தலையை விரிச்சு போட் டுண்டு, அரைகுறை ஆடையுடன், அந்நிய புருஷனோட அர்த்த ராத்திரி புதுவருட கொண்டாட்டம்னுட்டு கூத் தடிக்கிற இந்த பெண்களா நம்ம கலாசாரத்தை காப்பாத்தப் போறா? நான் எல்லாரையும் ஒட்டு மொத்தமா சொல்லலை.




""பாவ, புண்ணியம் பார்க் காத பணக்காரர்களும், பதவி மோகம் பிடித்த அரசியல்வாதிகளும், வன்முறை, கற் பழிப்புன்னு அலையற சமூக விரோதிகளும், ஓட்டுப் போடக்கூட சோம்பல்பட்டு, "ராமன் ஆண்டா என்ன, ராவணன் ஆண்டா என்ன...'ன்னு வெந்ததைத் தின்னு விதி வந்தா சாகும் ஊமைச் ஜனங்களுமா பாரம்பரியமிக்க நம்ம கலாசாரத்தைத் தூக்கி நிறுத்தப் போறாங்க?




""தேசம் சரியில்லைன்னு ஒவ்வொருவரும் சொல்லிட்டு இருக்கிறதிலே புண்ணியமில்லை. தேசம்ங்கிறது என்ன? நாம தான். நாம ஒவ்வொருத் தரும் சரியா நடந்துண்டா போதும், தேசம் உருப்படும்.




""நதியிலே ஜலம் இல் லைன்னு சொன்னா, அது நதியோட குத்தமில்லை. அது மாதிரி தேசம் சரியில்லைன்னு சொன்னா, அது தேசத்தோட குத்தம் இல்லை; நம்ம எல்லாருடைய குத்தமும் தான்.




""அமெரிக்காவுக்குப் போனா கெட்டுப் போயிடுவா, இந்தியாவிலேயே இருந்தா பண்போட இருப்பான்னு சொல்ல முடியாது. அங்கேயும் கிருஷ்ணா, ராமா, கோவிந்தான்னு ஆன்மிக பலத்தோட இருக்கிறவங்க இருக்காங்க. எங்கே இருந்தா என்ன? நம்ம மனசு சுத்தமா இருக்கணும்; அவ்வளவு தான்.''




பேசி முடித்த சிவா, அருகில் சொம்பிலிருந்த நீரை எடுத்து மடமடவென்று குடித்துவிட்டு, தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான்!





----------------------------------------------* *-------------------------------------------------



மீனாட்சி பட்டாபிராமன்



கல்வித் தகுதி: எம்.ஏ., ஆங்கில இலக்கியம், எம்.பில்., பி.எச்.டி., மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.




பணி: ஆங்கிலத்துறை பேராசிரியை. மற்ற சிறப்புகள்: பட்டிமன்ற பேச்சாளர். இலக்கிய மற்றும் ஆன்மிகப் பேருரை பல நிகழ்த்தியுள்ளேன். அகில இந்திய வானொலியில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பேருரைகள் நிகழ்த்தியுள்ளேன். கருத்தரங்கம் மற்றும் கவியரங்குகளில் பங்கேற்பு. பல போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். பல பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதை, துணுக்கு ஆகியவை வெளிவந்துள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக