ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து

Go down

கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Empty கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து

Post by ஜாஹீதாபானு Fri Oct 28, 2011 5:58 pm

கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Kpk02

சிறிது நேரம் அமைதி; நான் ஏதும் பேசவில்லை. கொள்ளிவாய்ப் பேய் என்னை உற்றுப் பார்த்தவண்ணம் உட்கார்ந்திருந்தது.

“தன் இனத்தின் குறைபாடுகளைச் சொல்லவேண்டுமாயின் சற்று மென்மையான சொற்களால் சொல்லவேண்டும்; கடுஞ்சொற்களைத் தவிர்க்கவேண்டும். எழுதுபவனின் பண்பாட்டுக் குறைவைத்தான் அந்தக் கடுஞ்சொற்கள் எடுத்துக்காட்டும். நீ சொன்ன இந்தப் பாட்டு என் பண்பாட்டுக் குறைவுக்கு ஓர் எடுத்துக்காட்டு! கனி இருக்கக் காய் எதற்கு? இனிய சொல் இருக்க இன்னாத சொல் எதற்கு? பேராசானின் கட்டளையை மீறினால் இழுக்குத்தான் விளையும்!” என்று சொல்லி அமைதியைக் கலைத்தேன்.

“திருவள்ளுவரின் கட்டளையைச் சொல்கிறீர்! சரி, `மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’ என்றும் அவர் சொல்லி இருக்கிறாரே? `இடித்தல்’ என்றால் என்ன? கடிந்துரைத்தல்தானே? கடிந்துரைக்கும்போது சில கடுஞ்சொற்களும் கலந்து வருவது இயல்புதான். என்ன சொல்கிறீர்?” என்று கேட்டது கொள்ளிவாய்ப் பேய்.

“தனிமனிதர்கள் சிலரோ சிறு குழுவினரோ சில வேளைகளில் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பது உண்டு. அவ்வாறு நிகழும்போது சமுதாய நலன்கருதி அவர்களைக் கண்டித்துத்தான் ஆகவேண்டும். அவர்களும் சமுதாயத்தின் உறுப்பினர்கள் ஆதலால் அவர்களை உரிமையோடு கடிந்துரைக்கவேண்டும். தனிமனிதர்களைவிட இனமே முதன்மையானது. எனவே அவர்களைக் கண்டிக்கும்போது சில கடுஞ்சொற்களைப் பயன்படுத்துதல் ஏற்புடையது என்று கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இனத்தையே திட்டித் தீர்ப்பது கூடாது.”

“புலம்பாதீர்! உம்முடைய கழிவிரக்கம் எனக்கு நகைப்பைத்தான் உண்டாக்குகிறது. சரி, இந்தப் பாட்டில் கடுஞ்சொற்கள் என்று நீர் சொல்லும் சொற்கள் ஒருபுறம் இருக்கட்டும். உம் இனத்தவரிடையே உள்ள சில குறைகளைச் சுட்டிக்காட்டி உள்ளீரே, அவை மாறிவிட்டனவா?”

“மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்படும்; இனவளர்ச்சி என்பது படிப்படியாகத்தான் விளையும்.” “மெதுவாகவா? தமிழர்கள் இந்த நாட்டுக்கு வந்து ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் ஆகின்றன. பிற இனங்களுக்கு நிகராகத் தமிழினம் வளர்ச்சி பெறுவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டும் என்கிறீர்?”

“இதோ பார், உனக்கென்று சில கருத்துகளை உருவாக்கி வைத்திருக்கிறாய். அந்தக் கருத்துகள் உனக்குள் அப்படியே உறைந்துபோய் இருக்கின்றன. அதனால் அவை உனக்குச் சரியாகவே தெரிகின்றன. உன் சிந்தனை இப்படி இருப்பதனால் உன் கருத்துகளிலிருந்து சற்று விலகிச் சொல்லப்படும் கருத்துகளைக் கேட்டுச் சிந்திக்கவும் நீ மறுக்கிறாய்! உன்னோடு வழக்காட என்னால் இயலாது!”

மீண்டும் அமைதி; கொள்ளிவாய்ப் பேய் இருமத் தொடங்கியது.

“நீ இங்கு வந்து எண்பது ஆண்டுகள் ஆயின என்று சொன்னாய். மீண்டும் தாயகத்துக்குத் திரும்பும் எண்ணம் இல்லையா?” என்று கேட்டேன்.

“திரும்பித்தான் ஆகவேண்டும். உமக்கும் எனக்கும் வேறுபாடு உண்டு. நீங்கள் அனைவரும் இந்த நாட்டுக் குடிமக்கள்; இது உங்கள் நாடு; நீங்கள் என்றென்றும் இங்கு நிலையாக வாழ்வீர்கள். எனக்குக் குடியுரிமை இல்லை. பேய்களுக்கு எந்த நாடும் குடியுரிமை வழங்குவது இல்லை. திரும்பிச் சென்றுதான் ஆகவேண்டும். ஆனால் இப்போது அங்குச் செல்லும் எண்ணம் இல்லை!”

“ஏன்?”

“இப்போதும் என் தமிழ்நாட்டில் அயலினத்தவரின் ஆட்சிதான் நடைபெறுகிறது!”

கொள்ளிவாய்ப் பேய் என்ன சொல்ல வருகிறது என்பது எனக்கு விளங்கிவிட்டது. ஏதும் பேசாமல் இருந்தேன்.

“கேளும்! `எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே’ என்றார் பாவேந்தர். பாவேந்தருக்குப் புகழ்மாலை சூடுபவர்கள் பலருக்கு அவரின் இந்தக் கொள்கை மறந்துபோயிற்று. தமிழகத்தில் பிறந்திருந்தாலும் வேற்றினத்தவர்கள் வேற்றினத்தவர்கள்தாம்! பகலவன் மேற்கே எழுந்தாலும் எழக்கூடும்; அயலவர்கள் ஒருகாலும் தமிழர்களாக ஆகவே முடியாது. இலங்கையில் பிறந்த அயலினத்தவர் ஒருவரின் ஆட்சிதான் இப்போது தமிழகத்தில் நடைபெறுகிறது! தமிழ்நாட்டு மக்கள் நாருக்காக மலரை இழந்துவிட்டார்கள்; வெறும் நடிப்புக்காக மண்ணை இழந்துவிட்டார்கள்!”

கொள்ளிவாய்ப் பேயிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.

"மீண்டும் பாவேந்தரின் பாட்டுக்குச் செல்லவேண்டி உள்ளது. `தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சாய் வருதல் வேண்டும்’ என்னும் பாட்டு நினைவிருக்கிறதா? எப்போது தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆகிறாரோ அப்போதே நான் தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் சென்று விடுவேன். அவர் தமிழாய்ந்த தமிழராக இருக்கவேண்டும் என்பதுகூட கட்டாயம் அன்று; தமிழராக இருந்தால் போதும்!”

“சரி, உன் விருப்பம் விரைவிலேயே நிறைவேறட்டும். நேரம் ஆகிவிட்டது; விடுதிக்குச் செல்லவேண்டும்; வரட்டுமா?” என்று சொன்னபடி எழுந்துகொண்டேன்; கொள்ளிவாய்ப் பேயும் உடன் எழுந்தது.

“சென்று வாரும்; அதற்கு முன் ஒன்று; உம்மிடம் என்ன என்னவோ பேசிவிட்டேன். என்பால் சினமோ வெறுப்போ இல்லையே?” என்று தணிந்த குரலில் கேட்டது.

“அப்படி ஏதும் இல்லை. உன்னைச் சந்தித்ததில் உண்மையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி; உன் பேச்சு என்னை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. உனக்கு என் நன்றியறிதலைச் சொல்லிக்கொள்கிறேன். வருகிறேன்!” என்றபடி அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன்.

கிளைப்பாதைக்கு வந்ததும் திரும்பிப் பார்த்தேன். கடற்கரையில் நின்றபடி என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது அந்தக் கொள்ளிவாய்ப் பேய். `சட்’டென்று உள்ளத்தை ஒரு துயரம் அழுத்தியது; நெருங்கிய நண்பனைப் பிரிவதுபோல் உணர்ந்தேன். அதை நோக்கிக் கைகூப்பினேன். பேயும் கைகூப்பியது.

விடுதியை நோக்கி விரைந்து நடந்தேன்.

எதிரே கைவிளக்குகளின் ஒளி தெரிந்தது; விடுதி ஊழியர்கள் இருவருடன் உசேன் வந்துகொண்டிருந்தார்.

“என்ன தம்பி, இவ்வளவு நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?நான் மிகவும் கலங்கிப்போனேன்!” என்றபடி என் கைகளைப் பற்றிக்கொண்டார் உசேன்.

“நீங்கள் கலங்குவதற்கு ஒன்றுமில்லை உசேன்! இரவில் கடற்கரை மிக அழகாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை!” என்றேன்.

அறைக்குச் சென்று குளித்துவிட்டுப் படுத்தேன். உறக்கம் வரவில்லை. நேரம் ஓடிக்கொண்டு இருந்தது.

திடீரென்று யாரோ மெல்ல இருமும் ஓசை கேட்டது; திடுக்கிட்டு இருளில் உற்றுப் பார்க்க முயன்றேன். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

“இன்னுமா நீர் உறங்கவில்லை? விடிந்ததும் உமக்கு வேலை இருக்கிறது என்று சொன்னீரே?படுக்கையில் புரண்டது போதும்; உறங்கும்!” என்றது ஒரு குரல்.
(நிறைவு)


(குறிப்பு: நீங்கள் படித்தது கதை அன்று; கட்டுரை அன்று; கற்பனையும் அன்று. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி; அவ்வளவுதான்.)

- அ. நம்பி நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum