புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
3 Posts - 9%
heezulia
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
8 Posts - 2%
prajai
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_m10மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:00 am

நாம் வாழும் பூமி செழிக்க இயற்கை தரும் வரம் தான் மழை.
வானம் பொய்த்து விட்டால் நம் வாழ்க்கை பரிதாபமாகிவிடும்.

- அதனால்தான் திருவள்ளுவர் ``வான் சிறப்பு'' என்று ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார்.

இவ்வளவு சிறப்புமிக்க மழை தொடர்ச்சியாகப் பெய்யும் மழைக்காலத்தில், நமக்கு தொல்லைகளும் இல்லாமல் இல்லை.

மழையில் நனைவதாலோ அல்லது தலைமுடியில் நீர் கோர்த்து இருப்பதாலோ, தலைமுடியின் வேர்களின் சின்ன சின்ன கொப்பளங்கள் வரக்கூடும்.

மழைக்காலங்களில் அவ்வளவாக யாரும் தலைக்கு குளிக்க மாட்டார்கள். இதனால் உருவாகும் அழுக்கும், வியர்வையும், தலையில் தடவிக் கொள்ளும் எண்ணெய்யும் சேர்ந்து தேமல், படை போன்றவைகளை தலையில் உருவாக்கலாம். சில சமயங்களில் Fungus அதாவது பூஞ்சைக்காளான் பாதிப்பும் தோன்றும். தலையில் ஈரமும், காற்றில் உள்ள அதிக ஈரப்பதத்தாலும், நம்மை சுற்றியுள்ள நுண் கிருமிகளாலும் தலையிலுள்ள சைனஸ் `Sinus' வீங்கிக் கொள்ளும். அதனுள் நீர் கோத்துக் கொள்வதால் Sinusitis தலைகனம், ஒற்றைத்தலைவலி போன்றவை வர வாய்ப்புள்ளது.

மழைக்காலத்தில் சூரியனின் வெப்பம், மிகமிக குறைவாக இருப்பதால் காற்றில் பல நுண்கிருமிகள் பரவி இருக்கும். இவற்றை சுவாசிப்பதால் தொண்டை கரகரப்பு, இருமல், சளி, நிமோனியா போன்ற வியாதிகள் வரலாம். நுண்கிருமிகளின் தாக்குதலால் விஷக்காய்ச்சலும் தோன்றலாம்.

மழைநீர் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால் கொசு உற்பத்தி அதிகமாகும். இதனால் கொசுவினால் வரும் வியாதிகளான மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிக அளவில் தாக்கக்கூடும்.

பல இடங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டு கழிவுநீரும், குடிநீரும் ஒன்றாக கலந்து விடுவதால் வாந்தி, பேதி, காலரா போன்ற வியாதிகள் மழைக்காலத்தில் அதிகம் ஏற்படும்.

மழைக்காலத்தில் திறந்த நிலையில் இருக்கும் தின்பண்டங்களை உண்ணக்கூடாது. குறிப்பாக கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பாதாம், சர்க்கரையில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளில் காற்றில் உள்ள பூஞ்சைக்காளான் படிவதற்கு வாய்ப்புள்ளது. இதை கவனிக்காது சுகாதாரமற்ற இனிப்புகளை சாப்பிட்டால் மயக்கம், வாந்தி, பேதி போன்ற கோளாறுகள் ஏற்படும்.

ஈரத்துணிகளையோ, சரியாக உலராத உள்ளாடைகளையோ அணியக்கூடாது. அணிந்தால், உடலில் பல இடங்களில் தேமல், பூஞ்சைத் தொற்று Fungal infection வர வாய்ப்புள்ளது.

மழைக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருக்கும். இதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். வீடுகளில் கொசுவின் தொல்லைக்கு பயந்து, கொசு விரட்டிகளை அதாவது கொசுவர்த்தி சுருள், அல்லது திரவங்கள், மேட் போன்றவற்றை உபயோகிப்பார்கள். இதனால் ஒவ்வாமை, ஆஸ்துமா தொந்தரவு போன்றவை தோன்றக்கூடும். இந்த பாதிப்பு ஏற்கனவே இருந்தால், அதிகரிக்கலாம்.

மழைக்காலத்தில் நம் உடலில் இயற்கையாகவே ஜீரண சக்தி மிகக் குறைவாக இருக்கும். ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் காரமான உணவு, அதிக அளவில் எண்ணெய் கலந்த உணவு, அதிக மசாலா கலந்த உணவை சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு ஏற்படும். நெஞ்செரிச்சல், வாயு தொந்தரவு, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

சுற்றுப் புறங்களில் பல இடங்களில் எலிவளைகள் உள்ளன. அதற்குள் புகும் மழை நீர், குடிநீரோடு கலந்து அதை பருகிவிட்டால் எலி ஜுரம் (Leptos pirosis) தோன்றும். மழைக்காலத்தில் ஏற்படும் சுகாதாரசீர்கேட்டால் விஷக்கிருமிகளும், நுண்கிருமிகளும், தண்ணீரில் கலக்கும். அதனால் மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

தேங்கியுள்ள மழை நீரில் குழந்தைகள் விளையாடுவார்கள். பெரியவர்கள் அதில் நடந்து செல்வார்கள். அவர்கள் கால்களை கிருமி நாசினி சோப்பு அல்லது திரவத்தை உபயோகித்து சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் கால் விரல்களுக்கு இடையில் புண் ஏற்படும். இதனை ``சேற்றுப்புண்'' என்போம். தண்ணீரில் அதிகம் புழங்கினால் சிலருக்கு கால் அல்லது கைகளில் உள்ள நகங்கள் பாதிக்கப்பட்டு அழுகவும் செய்யும்.

மழைக்காலத்தில் குளிர் அதிகம் இருப்பதால் கம்பளி, ஸ்கார்ப் போன்ற வெதுவெதுப்பான உடைகளை அணிவார்கள். ஒரு சிலருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும்.

பொதுவாக பல வீடுகளில் மழைக்காலத்தில் ஒரே அறையில் எல்லோரும் ஒன்றாக தூங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தலையில் பேன் பெருகும். சிரங்கு, இருமலினால் ஏற்படக்கூடிய `Droplet Infection' போன்றவை பரவ அதிக வாய்ப்புள்ளது.

உடல் கதகதப்பிற்காக மழைக்காலங்களில் புகைபிடிப்போர் அதிகமான எண்ணிக்கையில் சிகரெட், பீடி போன்றவற்றை உபயோகிக்கக் கூடும். இதனால் மார்புச்சளி, இருமல், கபம் போன்ற வியாதிகள் பெருகும். புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்தான நோய்களும் தாக்கக்கூடும்.

மழைக்காலத்தில் டீ, காபி போன்றவைகளை உடல் கதகதப்பிற்காக அதிகம் பருகக்கூடாது. பருகினால் குடல்புண், பித்த வாந்தி போன்ற உடற் கோளாறுகள் ஏற்படும்.

மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:00 am

மழைக்கால நோய்கள் வராமல் தடுப்பது எப்படி?

* மறக்காமல், தயங்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள். மழையில் நனைவதை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள்.

* ஈரமான ஆடைகளை உடனே களைந்து விட்டு உலர்ந்த, சுத்தமான ஆடைகளை அணியுங்கள்.

* வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காத அளவிற்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

* கழிவு நீர் பாதைகளில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* மிதமான, எளிதாக ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ணுங்கள்.

* காய்ச்சிய நீரை பருகுங்கள்.

* கூடியவரையில் வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்த்து விடுங்கள். அப்படி சாப்பிட்டே ஆகவேண்டுமென்றால் சூடாக இருக்கும், எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணுங்கள்.

* டின்னில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, கெட்டிய காகிதத்தில், பாக்கெட்டில் சுற்றி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உண்ணாதீர்கள்.

* எந்த நோயாக இருந்தாலும் நோயின் அறிகுறி தெரிந்த உடனே மருத்துவரை அணுகுங்கள். எந்தக்காரணத்தைக் கொண்டும் மருத்துவர் ஆலோசனையின்றி நீங்களாகவே கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடாதீர்கள். அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிவிடும்.

தன்னுடைய சுகாதாரம், தன்னைச்சுற்றியுள்ள சுற்றுப்புற சூழலின் சுகாதாரம், பொது நலத்தில் அக்கறை, விழிப்புணர்ச்சி இவை இருந்தால் மழைக்கால நோய்கள் உங்களை தாக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

இன்னும் அதிக மழை பெய்யட்டும். நீர்நிலைகள் உயரட்டும்.

விளக்கம்: டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்

மழைக்காலத்தில் மக்களைத் தாக்கும் நோய்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக