புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் அறிவு - விமர்சனம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 11:03 am

First topic message reminder :




தமிழ் திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம். ஏகப்பட்ட ஹைப்புகளுடன் வியாபாரம் செய்யப்பட்டப் படம். சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ருதி, ஹாரிஸ் ஜெயராஜ், உதயநிதி ஸ்டாலின், ரவி கே. சந்திரன் என்று பெரிய படையே இதன் பின்னணியில். ரிலிஸுக்கு முன்னமே சுமார் 80 கோடி வியாபாரம் முடிந்திருக்கிற படம். இப்படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளருக்கு ரிலிஸின் முன்னமே பெரும் லாபத்தை கொடுத்தப் படம். அநியாயமாய் 200ரும் முன்னூறும் கொடுத்த பார்த்த ரசிகர்களுக்கு ஜீரணிக்குமா? என்பதை பார்ப்போம்.


ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன் போதிதர்மன் எனும் பல்லவ இளவரசர் வாழ்ந்து வந்தார். அவர் சண்டைப் பயிற்சி, மருத்துவம், என்று பல கலைகளில் சிறந்து விளங்கினார். ஆய கலைகள் அனைத்திலும் சிறந்த விளங்கிய அவர் தன் தாய் தந்தையின் ஆசைப்படி சீனாவுக்கு தரை மார்கமாகவே மூன்று வருட பயணம் மேற்கொண்டார். சீனாவில் ஒரு சிறிய கிராமத்தை அடைந்தார். இவரை கெட்டவராக பார்த்த மக்களுக்கு ஒரு முறை பெயர் தெரியாத வியாதி ஒன்று வர, அதை தன்னுடய மருத்துவ முறையால் தீர்த்து வைத்தார். அதன் பிறகு அந்த வைத்திய முறையை அங்குள்ள மருத்துவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அங்குள்ள மக்களுக்கு தீயவரகளால் பங்கம் வரும் போது தன் களறி பயிற்று மூலம் குங்பூ எனும் கலையை காட்டி, நோக்கு வர்மம் எனும் கலையை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார். இவ்வளவு செய்த மக்கள் அவர் தங்கள் ஊரில் இற்ந்து புதைத்தால் தங்கள் நாட்டிற்கு ஏதுவும் வராது என்று தவறாக நினைத்து சாப்பாட்டில் விஷம் வைக்கிறார். அதை தெரிந்து கொண்ட போதிதர்மர் அவர்களுக்காக உண்டு சாகிறார். அங்கேயே புதைக்கப் படுகிறார்.
கடவுளாய் வழிபடப்படுகிறார். இதுதான் போதிதர்மனின் வாழ்க்கை வரலாறு. என்னடா ஏதோ வரலாற்று பாடத்தை மக்கப் செய்வது போல இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? படம் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

நிகழ்காலத்தில் சூர்யா ஒரு சர்க்கஸ் கலைஞன். ஸ்ருதி ஒரு டி.என்.ஏ பற்றிய ரிசர்ச் மாண்வி. சூர்யாவுக்கும் அவருக்கும் காதல். அப்படியென்று சூர்யா நினைத்துக் கொள்ள, இல்லை என்று தெரிந்து சோக கீதமெல்லாம் பாடி, பின்பு தெரிந்து கொள்கிறார் தான் போதிதர்மரின் வாரிசு என்றும். அவரது டி.என்.ஏவும் தன் டி.என்.ஏவும் எண்பது சதவிகிதம் சூட் ஆகிறது என்றும். அவரின் டி.என்.ஏவில் உள்ள திறமைகளை தூண்டிவிட்டால் இவரும் ஒரு போதி தர்மர் ஆகிவிடலாம் என்று சுருதி மூலமாய் தெரிந்து கொள்கிறார். சீனாவிலிருந்து டோன்லி எனும் ஒரு சைனாக்காரன் இந்தியாவில் நாய் மூலமாய் போதிதர்மர் மருந்தளித்து குணப்படுத்திய வியாதியை பரப்பி, அதற்கான மருந்தை சீனா விற்று, இந்தியாவை தன் இஷ்டப்படி ஆட்டலாம் என்று அவர் ஒருவரை மட்டும் அனுப்புகிறது. அவனுக்கு இட்ட இன்னொரு கட்டளை போதிதர்மனின் டி.என்.ஏவை பற்றி ஆராய்ச்சி செய்யும் சுருதியை கொல்வதும் ஒரு காண்ட்ராக்ட். அவன் இந்தியாவில் அந்த நோயை பரப்பினானா? ஸ்ருதியை கொன்றானா? போதிதர்மனின் டி.என்.ஏவை செலுத்தி அதன் மூலம் முழு போதிதர்மன் ஆனாரா சூர்யா? என்பது போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் பதிலளித்துள்ளார்கள்.


பெரிதாய் பில்டப் செய்யப்பட்ட போதிதர்மர் கேரக்டரில் சூர்யா நன்றாக இருக்கிறார் பார்க்க. நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்பவர்களுக்கு நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. போதி தர்மர் எபிசோட் டெப்த் இல்லாமல் வெறும் ஆர்ப்பாட்டமாகவே இருக்கிறது. சிக்ஸ் பேக்கில் கட்டுமஸ்தாய் குங்பூ கலைஞர என்பதை நம்ப வைக்கிறார். அவ்வளவுதான். அவரை பற்றி பெரிய டீடெயில் இல்லை. நிகழ்காலத்தில் சர்கஸ் கலைஞராய் வரும் சூர்யா ஆடுகிறார், பாடுகிறார். அருமையாய் சண்டை போடுகிறார். ஆங்காங்கே ஸ்ருதியை காதலிக்கிறேன் என்று காமெடி செய்கிறார். பெரும்பாலும் தன் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை சரியானபடி உபயோகித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

பாடல் காட்சிகளில் ஸ்ருதிக்கும், சூர்யாவுக்கும் எந்த வித “கெமிஸ்ட்ரி”யும் வரவில்லை. பாவம் மனுஷன் கமல் பொண்ணு என்ற எண்ணத்திலேயே நடித்திருக்கிறார் போலும்.ஸ்ருதி அழகாக இருக்கிறார். ஸ்பஷ்டமாய் அழுத்தம் திருத்தமாய் டாமினண்ட் வாய்ஸில் பேசுகிறார். பாடல் காட்சிகளில் ராவிஷிங் பியூட்டியாக இருக்கிறார். சில பல காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்.

அதே போல படு பயங்கர வில்லனாய் வரும் ஜான். மனுஷன் பேசாமலேயே நிறைய விஷயங்களை செய்கிறார். ஆனாலும் படம் நெடுக டெர்மினேட்டர் டூவை ஞாபகப்படுத்துகிறார். தக்குணூண்டு கண்ணை வைத்துக் கொண்டு ஊரிலுள்ள் எல்லாரையும் சடுதியில் நோக்கு வர்மம் செய்து தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறார். க்ளைமாக்ஸ் பைட்டில் புழுதி பறக்க சண்டை போடுகிறார்கள் கிராபிக்ஸில்.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. பெரிய லெட்டவுன். பின்னணியிசை அதை விட கொடுமை. க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் செய்திருக்கும் பின்னணியிசை படு இம்சை. ஓகே என்ற “யம்மா..யம்மா’ பாடலும் அபத்த தருணத்தில் வருவதால் உட்கார முடியவில்லை.

ஆண்டணியின் எடிட்டிங் ஓகே. ரவி.கே.சந்திரன் வெகு நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரின் இந்தி படங்களைப் பாருங்கள். அப்படி கண்ணில் ஒற்றிக் கொள்ளூமாறு இருக்கும் ஒவ்வொரு ஷாட்களும். இதில் எல்லாமே மிஸ்ஸிங் அவசர அடியாய் அடித்த எபெக்ட் மட்டுமே தெரிகிறது. அதிலும் வில்லன் நோக்கு வர்மத்தில் மாறி மாறி ஆட்களை வசீகரித்து சூர்யா, ஸ்ருதியை கொல்ல செய்யு முயற்சி சீனில் க்ராபிக்ஸ் படு சொதப்பல். பாடல் காட்சிகளில் ஓரளவுக்கு பரவாயில்லை.


எழுதி இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். வழக்கமாய் முருகதாஸ் படங்களில் ஒரு டஃப் மேட்டரை சொல்வதற்கு பக்கா மசாலாவான ஒரு பில்டப் செய்து திரைக்கதையமைப்பார். உதாரணம் கஜினி. மொமண்டோவிலிருந்து அந்த கேரக்டரின் ப்ரச்சனையை எடுத்தாலும் அதை திரைக்கதை அமைத்தவிதத்தில் மிரட்டியிருப்பார்.க்ளைமாக்ஸை தவிர.

அதே போலத்தான் ரமணா போன்ற படங்களிலும். அதைப் போல இதிலும் ஒரு வியாதியை பரப்பி அதனை குணமாக்க மருந்து கண்டுபிடிக்கும் வேலையை செய்யும் வில்லனுக்கும் அதை தடுக்க நினைக்கும் ஹீரோவுக்குமான கன்பர்ன்டேஷன் தான் என்றாலும் அதற்கு டி.என்.ஏ, போதி தர்மர், தமிழ், தமிழர், என்று உணர்வுப் பூர்வமாய் உசுப்பேத்திவிட்டு ரணகளப் படுத்து முயன்று அரைகுறையாய் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. போதி தர்மர் எதற்காக சைனா போனார்? அவரை சைனாவுக்கு அனுப்பி வைத்ததற்கான காரணம் என்ன? அவர் தரையில் புழுதியை கிளப்பி அதை காற்று பந்தாக்கி எதிரியின் மேல் அனுப்புவது குங்பூவில் இருக்கிறதா? ஏதோ சித்து விளையாட்டு என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளாம். அப்புறம் சூர்யாவை மட்டுமே நம்பி ஒரு சர்க்கஸ் கம்பெனி நடக்கிறது. அவரே மக்கள் கூட்டத்தை கூட்ட, நடு ரோடில் ரிங்கா ரிங்கா என்று பாடுகிறார்.

சர்க்கஸில் பார் விளையாடுகிறார். யானைக்கு உடம்பு சரியில்லை என்றால் அழைத்துப் போகிறார். அப்புறம் பாதி படத்திற்கு மேல் ஸ்ருதியுடன் சுற்றுகிறார். போதி தர்மரின் டி.என்.ஏ சேம்பிள்கள் சைனாவில் தான் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டி.என்.ஏ சேம்பிள்கள் எப்படி ஸ்ருதிக்கு கிடைத்தது? இடைவேளைக்கு பிறகு அடுத்து என்ன காட்சி வரும் என்பதையும். க்ளைமாக்ஸில் சூர்யா, ஜான் சண்டைக் காட்சியின் முடிவில் என்ன ஆகும் என்பது பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். அவ்வளவு டெம்ப்ளேட். உதாரணமாய் லிப்டிற்கு சுர்யாவும், ஸ்ருதியும் காத்திருப்பது, லிப்ட் வர நேரமாகும் போது கிளம்ப அந்த லிப்ட்டில் வில்லன் வருவது. போன்ற பல காட்சிகள். ஒரு செகண்ட் பார்த்தாலே ஹிப்னடைஸ் செய்ய முடியுமா? இப்படி தொடர்ந்து பல கேள்விகள் ஓட்டை மேல் ஓட்டையாய் வந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியவில்லை.

முதல் பாதியில் போதியும், பாடல்கள், ரம்பராய் இழுக்க, இரண்டாவது பாதிதான் படு சூடான சேஸிங். ஆரம்பிச்ச போது பர்ப்ரவென போகும் படம். பின்னர் நான் யோசிக்கும் அத்தனை காட்சிகளும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க, பெரிய த்ரில் ஏதுமில்லாமல் பொசுக்கென முடிந்து போகிறது.
நல்ல விஷயங்கள் என்றால் இம்மாதிரியான சாதாரண கதைகளுக்கு வேறு ஒர் கலர் கொடுக்க முயன்ற முயற்சி. போதி தர்மர் பற்றிய பில்டப்புகள். நம் நாட்டில் இல்லாத விஷயங்களா? அதுவும் தமிழன் வரலாற்றில் அவன் செய்யாதது எதுவுமே இல்லை என்று இடைவேளைக்கு பிறகு தமிழ் உணர்வை தூண்டிவிட்டு செய்யப்பட்ட திரைக்கதை. (இப்படம் தெலுங்கில் டப்பாகி பேசும் போது “மன தெலுகு தேசமுலு” என்று வரும்) நம் வரலாற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளாதது. மஞ்சளே விவசாயம் செய்யாதவன் அதற்கு பேட்டண்ட் வாங்கிய கொடுமை.

உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை அழிக்க நினைப்பது, டி.என்.ஏ சமாச்சாரங்கள் போன்ற பல நல்ல விஷயங்களை உறுத்தாமல் ஒரு கமர்ஷியல் படத்திற்குள் வைத்தது. அந்த அடையாறு யானை சவாரிக் காட்சி, வில்லன் நோக்கு வர்மத்தில் ஒவ்வொரு ஆளாய் ஏவி ஸ்ருதியையும், சூர்யாவையும் கொல்ல முயலும் காட்சி, சென்னைக்குள் இருக்கும் காடு என்கிற மேட்டர். சென்னை வாசிகளுக்கு கூட அவ்வளவாய் தெரியாது. இருந்து இரண்டாவது பாதியில் கொடுத்த பரபரப்பான மசாலா திரைக்கதையினால் படம் தப்பிக்கிறது.

மொத்தத்தில் தமிழ் நாட்டில் தமிழனை தூண்டிவிட்டால் ஜெயிக்கலாம் என்ற உண்மையை இப்படத்தின் மூலம் நிறுபித்திருப்பது.

நன்றி :கேபிள் சங்கர் :http://www.cablesankar.blogspot.com/



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Thu Oct 27, 2011 8:18 am

ரிசர்வேசன், ஊழல் இதனால்தான் தகுதியுள்ளவங்க மேல வரமுடியலையாம் - ஸ்ருதிஹாசன்(ஏழாம் அறிவு).
---------------------------------------------------------------------------
ரிசர்வேசனே இல்லாம மொத்தமா அனைத்து வசதிகளையும் அனுபவிச்சு எம் மக்களை அடிமைப்படுத்தி இன்றளவும் சுரண்டும் கோஷ்டிகளால தகுதியிருந்தும் எந்த வசதியும் அனுபவிக்க முடியாம இருந்தாங்களே...அதை எந்த படத்துலதான் பேசலாம்னு திட்டம்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 27, 2011 8:44 am

அருண் wrote:
"ரா.ரமேஷ்குமார்"
நான் இப்பொழுது தான் படம் பார்த்து விட்டு வந்தேன் இன்னும் இந்த விமர்சனத்தை படிக்கவில்லை இன்னும் சிறிது நேரத்தில் பதிவிடுகிறேன்... புன்னகை
அருமையான படம்... ஜாலி
தம்பி உன்கிட்ட இருந்து எதிர் பார்த்திருந்த பதில் தான்..! சிரி
அண்ணா அப்படினா உங்களுக்குள் மற்றவர்களின் எண்ணத்தை கண்டறியும் திறமை வந்து விட்டது... ஜாலி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 27, 2011 11:03 am

கதை சுருக்கம் நல்லா சொல்லிறுக்கிங்க ரமேஷ்குமார் , பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 27, 2011 1:51 pm

பூஜிதா wrote:கதை சுருக்கம் நல்லா சொல்லிறுக்கிங்க ரமேஷ்குமார் , பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி
புன்னகை மகிழ்ச்சி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 27, 2011 2:00 pm

நீங்கள் எழுதியது நல்ல இருக்கு ரமேஷ்..! ஆனால் நீங்கள் நடுநிலையாக எழுதவில்லை.. சிரி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 27, 2011 2:04 pm

அருண் wrote:நீங்கள் எழுதியது நல்ல இருக்கு ரமேஷ்..! ஆனால் நீங்கள் நடுநிலையாக எழுதவில்லை.. சிரி
நான் எனக்கு தெரிந்ததை எழுதினேன் அண்ணா சூர்யாவை பிடிக்கும் என்பதால் என்னை அறியாமல் படத்தை பற்றி புகழ்ந்து இருக்கலாம்... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 27, 2011 2:08 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
நான் எனக்கு தெரிந்ததை எழுதினேன் அண்ணா சூர்யாவை பிடிக்கும் என்பதால் என்னை அறியாமல் படத்தை பற்றி புகழ்ந்து இருக்கலாம்... புன்னகை

அதான் நல்லாவே தெரியுது ரமேஷ்! பெரும்பாலும் காலேஜ் மாணவர்கள் சூர்யா பான்ஸ் இருக்கிறார்கள்..! சூப்பருங்க

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 27, 2011 3:28 pm

அருண் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
நான் எனக்கு தெரிந்ததை எழுதினேன் அண்ணா சூர்யாவை பிடிக்கும் என்பதால் என்னை அறியாமல் படத்தை பற்றி புகழ்ந்து இருக்கலாம்... புன்னகை

அதான் நல்லாவே தெரியுது ரமேஷ்! பெரும்பாலும் காலேஜ் மாணவர்கள் சூர்யா பான்ஸ் இருக்கிறார்கள்..! சூப்பருங்க

ஒரு நல்ல நடிகர், சமூக சேவை உள்ளம் கொண்டவர் என்பதால் நிறைய ரசிகர்களை கொண்டுள்ளார் சூர்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Oct 27, 2011 3:48 pm

ஆறாம் அறிவை ஒதுக்கி வச்சுட்டுப் போனா ஏழாம் அறிவை ரசிக்கலாம் போல..!



ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 0018-2ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 0001-3ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 0010-3ஏழாம் அறிவு - விமர்சனம்  - Page 2 0001-3
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 27, 2011 3:53 pm

இப்பதான் இந்த படத்தை பார்த்து முடித்தேன்.......

கதை வெறும் கட்டுக்கதை என்பது போல் சில காட்சிகளும் அமைகிறது. அந்த கதையில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ அதேபோல் அனைத்து காட்சிகளும் உண்மையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இந்த படம்................

உண்மை என்னவென்றால் இந்தியர்கள் தான் பல நாடுகளின் முன்னேற்றத்திற்கு காரணமாயிருந்திருக்கிறார்கள் (இந்தியா இன்னும் முன்னேறலையே )என்பதற்கு இந்த படம் மூலம் ஒரு செய்தியை நாமும் அறிந்து கொள்ளலாம்........

மத்தபடி படம் பார்க்கலாம்...................




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக