புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ நரகாசுரா... Poll_c10ஹலோ நரகாசுரா... Poll_m10ஹலோ நரகாசுரா... Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஹலோ நரகாசுரா... Poll_c10ஹலோ நரகாசுரா... Poll_m10ஹலோ நரகாசுரா... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஹலோ நரகாசுரா... Poll_c10ஹலோ நரகாசுரா... Poll_m10ஹலோ நரகாசுரா... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ நரகாசுரா...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 24, 2011 12:36 pm

"மிஸ்டர் சதுரம்! கண்ணைத் திறந்து பாருங்க!"

எதிரே வெள்ளை வெள்ளையாக ஓரிரு உருவங்கள் தெரியவும், ஏதோ கனவுக்காட்சி போலிருந்தது.

"யாரு? அனுஷ்காவா?"

"டேய் உருப்படாதவனே!" என்று கேட்ட குரல் பாலாவுடையது. "இது ஆஸ்பத்திரிடா! காலையிலே தீபாவளி லேகியம் சாப்பிட்டதும் நீ மயக்கம் போட்டு விழுந்திட்டே! அடிச்சுப்புடிச்சு ஆம்புலன்ஸ்லே போட்டுத் தூக்கிட்டு வந்தா, நர்ஸைப் பார்த்து அனுஷ்காவான்னு கேட்குறியேடா?"

"அடப்பாவீங்களா! லேகியமாடா அது? ரோட்டுக்குப் போடுற தாரை உருட்டி ஒரு உருண்டை கொடுத்து, ஆஸ்பத்திரிக்கு வரவைச்சிட்டீங்களே? உருப்படுவீங்களாடா?"

"மிஸ்டர் சதுரம்! இது ஆஸ்பத்திரி; இப்படியெல்லாம் சத்தம் போடக்கூடாது!" என்று கிட்டத்தட்ட டாக்டர் மாதிரியே, வெள்ளைக்கோட்டும் ஸ்டெதாஸ்கோப்புமாக இருந்த ஒருவர் கடிந்து கொண்டார். "நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க? உங்க வயித்தைப் பார்த்து டிராபிக் போலீஸோன்னு சந்தேகப்பட்டுட்டேன்."

"டாக்டர், இவன் என்ன சாப்பிடலேன்னு கேளுங்க!" இது வெங்கட்டின் குரல். "ஒரு அடையாறு ஆனந்த பவனையே முழுங்கியிருக்கான். ஓஸியிலே கிடைச்சாலும் சாப்பிட ஒரு அளவு வேண்டாமா?"

"கவலைப்படாதீங்க, ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்திரலாம்!" என்றார் டாக்டர்.

"என்னது, ஸ்கேனா? நான் என்ன கர்ப்பமாவா இருக்கேன்?"

"மிஸ்டர் சதுரம், உங்களுக்கு வயிறு எவ்வளவு வீங்கியிருக்கோ, அதே மாதிரி வாயும் பெரிசாயிருக்கு! நர்ஸ், இந்த ஆளுக்கு ஒரு ஊசிபோட்டுத் தூங்க வையுங்க! எல்லா நரம்பும் க்ளியராத் தெரியுது பாருங்க! வெயினிலேயே போட்டுருங்க!"

"ஊசியா? ஐயையோ....!"

என் பேச்சை அலட்சியம் செய்தபடி, ஒரு ஜாடையில் ஹன்ஸிகா மாதிரியிருந்த அந்த நர்ஸ், எருமைக்கு ஜூரம் வந்தால் போடுகிற மாதிரி ஒரு பெரிய ஊசியை எனது மணிக்கட்டருகே போட, எனது கண்கள் மெல்ல மெல்ல சொருகிக்கொள்ள, மயக்கமாக வந்தது.

"பாவி நரகாசுரா....!" நான் அரைமயக்கத்தில் முணுமுணுத்தேன்.

"சதுரம்!" என்று யாரோ இருட்டிலிருந்து அழைப்பது போலிருந்தது.

"யாருய்யா அது? நானே மயக்கத்திலிருக்கேன்!"

"நான் தான் நரகாசுரன்! நீ கூப்பிட்டே, நான் வந்திட்டேன்! சொல்லு சதுரம், எதுக்காக என்னைத் திட்டுனே?"

"திட்டாமக் கொஞ்சுவாங்களா? இதுவரைக்கும் எத்தனை அசுரர்கள் இருந்திருக்காங்க, செத்திருக்காங்க! நீ ஒருத்தன்தான்யா இந்த மாதிரி பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு வரம் வாங்கி எங்க உசிர வாங்கியிருக்கே! அதுலேயும் தீபாவளிக்குன்னு ஸ்பெஷல் லேகியம் வேற! அதைப் பார்த்ததுமே எனக்கு செத்துப்போன எங்க பாட்டி, தாத்தாவெல்லாம் ஞாபகத்துக்கு வந்திட்டாங்க தெரியுமா?"

"சதுரம், அனாவசியமா என் மேலே பழியைப் போடாதே! பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு சொன்னது என்னவோ வாஸ்தவம் தான்! அதுக்காக ஊருப்பட்ட பலகாரத்தைப் பண்ணி, மூக்கு முட்டத் தின்னுங்கன்னா சொன்னேன்? அந்தக் காலத்துலே ஆஸ்பத்திரி, டாக்டர், நர்ஸெல்லாம் கிடையாதுன்னுதான் அஜீரணம் வராம இருக்க, லேகியம் பண்ணிச் சாப்பிட்டாங்க!"

"இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! கோயம்பேட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் போக ஆம்னி பஸ்ஸிலே ஆயிரம் ரூபாய் வாங்குறான்! ஆடித் தள்ளுபடியிலே அம்பது ரூபாய்க்கு வித்த டி-ஷர்ட்டை ரங்கநாதன் தெருவிலே ஐந்நூறு ரூபாய்க்கு விக்குறாங்க, அதையும் ஜனம் முண்டியடிச்சுக்கிட்டுப் போய் வாங்குது! பாழாப்போன குருவி வெடிக்கு வந்த வாழ்வைப் பாருய்யா, ஒரு பாக்கெட் நூறு ரூபாய்! அவனவன் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி தீபாவளி கொண்டாடுறான்! எல்லாத்துக்கும் நீ தான் காரணம்!"

நரகாசுரன் சிரித்தான்.

"ஏன்யா இப்படி சிரிக்கிறே? நீயும் தப்பி தவறி வெடி படம் பார்த்துட்டியா?"

"சதுரம், உங்க தாத்தா, பாட்டியெல்லாம் கடன் வாங்கியா பண்டிகை கொண்டாடுனாங்க? பண்டிகைன்னா ஆடம்பரத்தைக் காட்டுறதுக்கில்லே கண்ணா! சொந்தமும் பந்தமும் ஒண்ணா உட்கார்ந்து சந்தோஷமாப் பேசி, இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிட்டுக்கிட்டு, வருசத்துலே ஒரு நாளாவது முடிஞ்சவரைக்கும் பாசாங்கில்லாம இருக்கிறது தான். ஆனா, நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? பண்டிகைன்னாலே பாசாங்குன்னு ஆக்கிட்டீங்க! பக்கத்து வூட்டுக்காரன் ஆயிர ரூபாய்க்குப் பட்டாசு வாங்குனா, நீங்க ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பட்டாசு வாங்குகுறீங்க! எதிர்வூட்டுலே காஞ்சீபுரம் பட்டு வாங்குனா, உங்க வூட்டுலே பெனாரஸ் பட்டு வாங்குறீங்க! வூட்டுலெ பலகாரம் பண்ண சோம்பல் பட்டுக்கிட்டு, கடையிலே போய் கண்டதையும் அவன் சொல்லுற விலைக்கு வாங்கித் தின்னறீங்க! அப்புறம் பத்துநாளைக்கு அஜீரணத்துக்கு மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு அவஸ்தைப்படுறீங்க! பண்ணுறதெல்லாம் நீங்க; பழி என் மேலயா?"

"யோவ் நரகாசுரா! இந்த தீபாவளியையெல்லாம் தமிழன் கொண்டாடவே கூடாதுன்னு நிறைய பேரு சொல்லிட்டிருக்காங்க தெரியுமா?"

"ஆமாய்யா, உங்க வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்க பொறந்த நாளுக்கு சந்து,பொந்தெல்லாம் கட்-அவுட் வைக்கிறீங்க! லவுட்-ஸ்பீக்கர் போட்டு இருக்கிறவன் காதையெல்லாம் செவுடாக்கறீங்க! சினிமாக்காரனுக்குப் பொறந்தநாளுன்னு பேப்பர்லே முழுப்பக்கம் விளம்பரம் போடுறீங்க! அதையெல்லாம் தமிழன் பண்ணினாத் தப்புல்லே! வழிவழியா கொண்டாடுற தீபாவளியைக் கொண்டாடிட்டா, உங்க பண்பாடு, கலாச்சாரமெல்லாம் அப்பீட்டு ஆயிருமா?"

"மிஸ்டர் நரகாசுரன், ’சம்சாரம் அது மின்சாரம் படத்துலே விசு சொல்லுறா மாதிரி உன்னை சம்ஹாரம் பண்ணின அன்னிக்கு திவசம் மாதிரி கொண்டாடி எள்ளுருண்டை புடிக்கணுமய்யா! இப்போ பாரு, உன்னாலே நான் தீபாவளி ரிலீஸ் படம் ஒண்ணு கூட பார்க்க முடியாம, ஆஸ்பத்திரியிலே படுத்துக் கெடக்கேன்."

"சதுரம், பார்த்தியா? என் பேரைச் சொல்லி எத்தனை படம் ரிலீஸ் ஆவுது? இந்த தீபாவளிக்குக் கூட டிவியிலே புதுப்புதுப்படமா போடுறாங்க...? உனக்குப் புரியுறா மாதிரியே சொல்லுறேன்... கேட்டுக்கோ....! இந்த தீபாவளிக்கு ஒரே நாளிலே ரெண்டு அனுஷ்கா படம்...!"

"என்னது? மெய்யாலுமா....?"

"ஆமா சதுரம்! ஒண்ணு வேட்டைக்காரன்! அப்புறம் சிங்கம்... ரெண்டு அனுஷ்கா படம் போடுறாங்களே! நரகாசுரனைத் திட்டுனியே! நான் இல்லாட்டா ஒரே நாளிலே ரெண்டு அனுஷ்கா படம் பார்த்திருக்க முடியுமா?"

"ஐயையோ, ரெண்டு அனுஷ்கா படமா? இது தெரியாம கண்டதையும் தின்னுட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்திட்டிருக்கேனே? யோவ் நரகாசுரா, என்னை டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லுய்யா! அடேய்... நண்பர்களா... வெங்கட், பாலா! யோவ் டாக்டரு! அம்மா தாயே, நர்ஸு....! ரெண்டு அனுஷ்கா படம் பார்க்கணும்...டிஸ்சார்ஜ் பண்ணுங்கப்பா...." ஏலேய் பெருமாளு... இதுக்கெல்லாம் ஒரு பொதுமடல் எழுதமாட்டியே... டிஸ்சார்ஜ் பண்ண சொல்லுப்பா...

டொட்டோடைங்க்...

"பை பை சதுரம்!" என்று சிரித்தபடியே நரகாசுரன் மறைந்தான்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 24, 2011 12:44 pm

நல்ல நகைச்சுவையான பதிவு.....ஹலோ நரகாசுரா... Vil-lolஹலோ நரகாசுரா... Vil-applause2
அப்புறம் இன்னொரு விஷ்யம் பாலா அண்ணாவும் , வெங்கட் அண்ணாவும் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண வர மாட்டாங்க அவங்க இப்போவே அனுஷ்கா படம் பாக்க டிவி முன்னாடி ரெடியா உக்காந்துகிட்டு இருக்காங்க....நீங்கள் இன்னும் 3மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரேடிய பொங்கலுக்கு வீட்டுக்கு வந்தா போதுமுனு உங்கள் வீட்டுல சொல்லி அனுபிட்டாங்க.... ஹலோ நரகாசுரா... 68516 ஹலோ நரகாசுரா... 68516



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 24, 2011 12:50 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 24, 2011 12:55 pm

இந்த அனுஷ்கா மேட்டர் வீட்ல தெரிஞ்சா - சதுரம் செவ்வகமாவோ முக்கோனமாவோ போவப் போவுது.
போற உசிர நரகாசுரன் கிட்டயே குடுத்திருக்கலாம் - இப்ப கேப்பாரில்லாமா அடி வாங்கிப் போவப் போவுது.
பாலா சார் வாங்க நாம ரெண்டு பேரும் - சுதாவோட பிக்கல் பிடுங்கல் இல்லாம அனுஷ்காவ பாப்போம்.

இந்த ஊசிப் பட்டாசு பெருமாள சுதாவ கவனிச்சிக்க இங்கயே விட்டுடலாம்.

அருமை லேகிய சுதா...



நட்புடன் - வெங்கட்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 12:57 pm

சிப்பு வருது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 1:02 pm

dsudhanandan wrote:
"ஐயையோ, ரெண்டு அனுஷ்கா படமா? இது தெரியாம கண்டதையும் தின்னுட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்திட்டிருக்கேனே? யோவ் நரகாசுரா, என்னை டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லுய்யா! அடேய்... நண்பர்களா... வெங்கட், பாலா! யோவ் டாக்டரு! அம்மா தாயே, நர்ஸு....! ரெண்டு அனுஷ்கா படம் பார்க்கணும்...டிஸ்சார்ஜ் பண்ணுங்கப்பா...." ஏலேய் பெருமாளு... இதுக்கெல்லாம் ஒரு பொதுமடல் எழுதமாட்டியே... டிஸ்சார்ஜ் பண்ண சொல்லுப்பா...டொட்டோடைங்க்...
"பை பை சதுரம்!" என்று சிரித்தபடியே நரகாசுரன் மறைந்தான்.

அன்புள்ள மருத்துவமனை நிர்வாகமே !

வணக்கம் ! தங்களின் தொண்டுள்ளம் என்றும் போற்றதக்கது ! சாலையில் சாதாரன மயக்கத்தில் விழுந்து கிடந்த ஒருவரை ,,, மருத்துவமனை மின்சார கட்டணத்திற்காகவாவது தேறுமே என்று எண்ணி , உங்கள் மருத்துவமனையில் படுக்க வைத்திருப்பதாக அறிகிறேன்.

அவர் சாதாரன மனிதர் இல்லை. ஈகரையின் தங்க புதையல். அவரை சிறிதுசிறிதாக உரசி உரசி ,,, இதுவரையில் 3000 மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க மூடைகளை சேர்த்துவைத்திருக்கிறோம். இது நமக்குள்ளே இருக்கட்டும். வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம். மேலும் அவரது வயிற்றுக்குள் வைர சுரங்கம் இருபப்தாக கணிக்கிறோம். தப்பி தவறி அறுவை சிகிச்சை செய்து அதை திருட முயற்ச்சித்தால் ,,, எச்சரிக்கை ! அவரை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.

நன்றி !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



ஹலோ நரகாசுரா... Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 24, 2011 1:22 pm

ரேவதி wrote:நல்ல நகைச்சுவையான பதிவு.....

அப்புறம் இன்னொரு விஷ்யம் பாலா அண்ணாவும் , வெங்கட் அண்ணாவும் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண வர மாட்டாங்க அவங்க இப்போவே அனுஷ்கா படம் பாக்க டிவி முன்னாடி ரெடியா உக்காந்துகிட்டு இருக்காங்க....நீங்கள் இன்னும் 3மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரேடிய பொங்கலுக்கு வீட்டுக்கு வந்தா போதுமுனு உங்கள் வீட்டுல சொல்லி அனுபிட்டாங்க....

பாராட்டுக்கு நன்றி....

நீங்கெல்லாம் பாசமலர்களே இல்ல... அனுஷ்கா படம் பாக்க வழிபண்ணுக பிளீஸ்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 24, 2011 1:23 pm

பூஜிதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் அனுஷ்காவை பாக்க முடியாம கவலையா இருக்கேன்... நீங்க சிரிக்கறீங்க...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 24, 2011 1:25 pm

நட்புடன் wrote:இந்த அனுஷ்கா மேட்டர் வீட்ல தெரிஞ்சா - சதுரம் செவ்வகமாவோ முக்கோனமாவோ போவப் போவுது.
போற உசிர நரகாசுரன் கிட்டயே குடுத்திருக்கலாம் - இப்ப கேப்பாரில்லாமா அடி வாங்கிப் போவப் போவுது.
பாலா சார் வாங்க நாம ரெண்டு பேரும் - சுதாவோட பிக்கல் பிடுங்கல் இல்லாம அனுஷ்காவ பாப்போம்.

இந்த ஊசிப் பட்டாசு பெருமாள சுதாவ கவனிச்சிக்க இங்கயே விட்டுடலாம்.

அருமை லேகிய சுதா...

நீங்கெல்லாம் ஏதோ திட்டமிட்டு சதி பண்ணிட்டு... போங்கப்பா போங்க.... அனுஷ்கா படம்போடும்போது உங்க வீட்டிலே கரண்ட் இருக்காது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 24, 2011 1:29 pm

dsudhanandan wrote:
பூஜிதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் அனுஷ்காவை பாக்க முடியாம கவலையா இருக்கேன்... நீங்க சிரிக்கறீங்க...
உங்க வீட்ல எல்லோருடன் சேந்து அனுஷ்கா படம் பார்க்கணும் சொல்லுங்க ஏதோ எங்களாள முடிஞ்ச உதவி செய்ரோம்,



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக