புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
87 Posts - 64%
heezulia
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
423 Posts - 76%
heezulia
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
8 Posts - 1%
prajai
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
3 Posts - 1%
sram_1977
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வியப்பான தகவல்கள்  Poll_c10வியப்பான தகவல்கள்  Poll_m10வியப்பான தகவல்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியப்பான தகவல்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Oct 22, 2011 1:28 pm

சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவை (Stanford University School of Medicine) சார்ந்த ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை தெளிவாக ஆராய உபயோகப்படும் ஒரு யுக்தியை பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த யுக்தியின் மூலம் தெரியவரும் தகவல்கள் படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன.

பதிவிற்குள் செல்லும் முன் மூளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகின்றேன்.

ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் சுமார் 200 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நரம்பணுக்கள் (Nerve Cells or Neurons) உள்ளன. நம் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களை (cell) போன்றவை தான் நரம்பணுக்கள் என்றாலும், இவைகளை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இவைகளின் மின்வேதியியல் (Electrochemical aspect) தன்மை தான்.





ஒரு இயந்திரத்தில் உள்ள ஒயர்களை (wire) போல நரம்பணுக்களும் மின் சைகைகளை (Electrical signal) சுமந்து செல்கின்றன. (இதனை செய்வது நரம்பணுக்களில் உள்ள AXON என்ற கேபிள் போன்ற பகுதி)

எப்படி ஒரு ஒயர் மற்றொரு ஓயருக்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றதோ அதுபோலவே ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றது.

ஆனால், ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை நேரடியாக அனுப்புவதில்லை. அவற்றை சினாப்ஸ் (Synapse) எனப்படும் சின்னஞ்சிறு இடைமுகம் (Interface) மூலம் அனுப்புகின்றன. ஆக, இரண்டு நரம்பணுக்களுக்கு மத்தியில் சினாப்ஸ் மூலமாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது.



சரி இப்போது பதிவிற்கு வருவோம்.

ஸ்டான்போர்ட் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை ஆய்வு செய்ய "Array Tomography" என்னும் "மீள் ஒலி வழி இயல் நிலை வரைவி" யுக்தியை (Imaging Technique) உருவாக்கியிருக்கின்றார்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த யுக்தியின் மூலம் மூளையின் இணைப்புகளை தெளிவாக ஆராய முடிவதாக குறிப்பிட்டுள்ளனர் இப்பள்ளியின் ஆய்வாளர்கள். இந்த யுக்தியை சோதிக்க சுண்டெலியின் "Bio-Engineering" செய்யப்பட்ட மூளை திசுக்களை (A slab of tissue — from a mouse’s cerebral cortex — was carefully sliced into sections only 70 nanometers thick.) உபயோகப்படுத்தியிருக்கின்றனர். .



இந்த யுக்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்மித் அவர்களது கருத்துப்படி, சுமார் இருநூறு பில்லியன் நரம்பணுக்களை கொண்ட மனித மூளையில், இந்த நரம்பணுக்களை இணைக்க ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 100,000 கோடி) கணக்கில் சினாப்சஸ்கள் செயல்படுகின்றனவாம். ஒரு நரம்பணு மற்ற நரம்பணுக்களை தொடர்பு கொள்ள ஆயிரக்கணக்கான சினாப்சஸ்களை உபயோகப்படுத்துகின்றதாம்.

மிக நுண்ணிய அளவுள்ள சினாப்சஸ்கள் (less than a thousandth of a millimeter in diameter) ஒரு நரம்பணுவிலிருந்து வரக்கூடிய மின் சைகைகளை மற்றொன்றிற்கு கடத்துகின்றன. மொத்தம் பனிரெண்டு வகை சினாப்சஸ்கள் உள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.



மனித மூளையின் "Cerebral Cortex" (sheet of neural tissue that is outermost to the cerebrum of the mammalian brain) திசுவில் மட்டும் 125 ட்ரில்லியனுக்கும் மேலான சினாப்சஸ்கள் உள்ளன. இது, 1500 பால்வீதிக்களில் (Milkyway Galaxy) இருக்கக்கூடிய மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு (தோராயமாக) ஒப்பானது.

ஒவ்வொரு சினாப்ஸ்சும் ஒரு நுண்செயலியை (Microprocessor) போல செயல்படுகின்றது, தகவல்களை சேமிப்பதிலிருந்து அவற்றை செயல்படுத்துவது வரை. (ஆக, நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் ட்ரில்லியன் கணக்கான நுண்செயலிகள் உள்ளன!!!!!!!!!)

ஒரு சினாப்ஸ்சில், சுமார் ஆயிரம் "Molecular-Scale" நிலைமாற்றிகள் (Switches) இருப்பதாக கணக்கிடலாம்.

ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம்.

A single human brain has more switches than all the computers and routers and Internet connections on Earth --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.


என்ன? கேட்பதற்கு வியப்பாக உள்ளதா? அதனால் தான் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள், மூளையின் இத்தகைய சிக்கலான வடிவமைப்பை பற்றி கூறும் போது "கிட்டத்தட்ட நம்பவே முடியாத அளவு" இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Observed in this manner, the brain’s overall complexity is almost beyond belief --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.


ஆம், இந்த தகவல்கள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.

இந்த தகவல்களே உங்களை திணறடிக்க செய்திருந்தால், ஒரு நரம்பணு எப்படி மின் தகவல்களை அடுத்த நரம்பணுவிற்கு சினாப்சஸ்கள் வழியாக செலுத்துகின்றது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் உங்களை "இப்படியெல்லாம் மூளைக்குள் நடக்கின்றதா?" என்று மிரட்சி கொள்ளவே செய்யும்.

இந்த புதிய யுக்தி, மூளை சம்பந்தமான நோய்களை/பிரச்சனைகளை பற்றி தெளிவாக அறிய உதவும் என்று ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய யுக்தி குறித்த இந்த ஆய்வறிக்கையை 18ஆம் தேதியிட்ட இம்மாத நுயூரான் (Neuron) ஆய்விதழில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இனி, இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கருத்தில் உள்ள சில சகோதரர்களுக்கு சில கேள்விகள்...

1. ஒரு மிகச் சாதாரண, சுமார் இரண்டாயிரம் டிரான்சிஸ்டர்களை கொண்ட, ஒரு ஆரம்ப நிலை நுண்செயலி கூட தற்செயலாக உருவாகி இருக்கும் என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

2. ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றால், பிறகு எப்படி, நம்பவே முடியாத அளவு சிக்கலான வடிவமைப்பை கொண்ட மூளை போன்ற ஒரு உடல் பகுதி தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்புகின்றீர்கள்?

3. ட்ரில்லியன் கணக்கான சினாப்சஸ்கள், பில்லியன் கணக்கான நரம்பணுக்கள் மற்றும் அவற்றை சார்ந்தவைகள் மிக கனகட்சிதமாக செயல்பட்டு நம்மை மற்றும் மற்ற உயிரினங்களை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. இப்படியொரு சிஸ்டம் தற்செயலாக உருவாக வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்தால் அது எத்தனை சதவீதம்?

4. மற்ற உயிரினங்களின் மூளையை விட தனித்தன்மை வாய்ந்தது மனித மூளை. பேச, யோசிக்க, திட்டமிட என்று மற்ற உயிரினங்களை விட மேம்பட்டது நம் மூளை. தகவல்களை கணக்கிட்டு அற்புதமாக செயலாக்கம் செய்யும் நம் மூளை தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதை மூட நம்பிக்கையாக எடுத்து கொள்ளலாமா?

5. பரிணாமத்தில் இதற்கு என்ன விளக்கம் இருக்கின்றது? மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று தங்கள் கற்பனையில் தோன்றியதையெல்லாம் விளக்கமாக கூறாமல், மூளை போன்ற மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட உடல் பாகங்கள் எப்படி தற்செயலாக வந்திருக்குமென்று விளக்குமுறைகளுடன் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஏதாவது இருக்கின்றதா?

6. மேலே கேட்ட கேள்வியை வேறு விதமாக கேட்க வேண்டுமென்றால், சில உயிரணுக்களாவது தற்செயலாக உருவாகி, ஒன்று சேர்ந்து ஒரு செயலை செய்வதாக ஆய்வுக்கூடத்திலாவது நிரூபித்து காட்டியிருக்கின்றார்களா?

எல்லாம் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்பும் அந்த சில சகோதரர்கள் இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும். அவர்கள் சொல்லும் பதிலை பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் முன்வைக்கின்றேன்.

பரிணாமத்திற்கு எதிராக செயல்படும் "Uncommon Descent" இணைய தளத்தின், இது பற்றிய பதிவின் பின்னூட்ட பகுதியில் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து என்னை கவனிக்க வைத்தது,

What is perhaps more amazing than the human brain itself is the fact that it has grown from just a fertilized egg. Pretty astonishing.

மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது.


சிந்திக்க வைக்கும் கருத்து....

பரிணாம சவப்பெட்டியில் மற்றொரு ஆணி அழுத்தமாக இறங்கி இருக்கின்றது......

நம் அனைவரையும் மூடநம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் காப்பானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...


Pictures taken from:
1 & 2: How stuff works.
3. mult-sclerosis.org.
4. ihcworld.com.
5. Science daily website.
6. Neuron Magazine.

One can download the Array Tomography report from:
1. Single-Synapse Analysis of a Diverse Synapse Population: Proteomic Imaging Methods and Markers --- Neuron, dated 18th Nov 2010. link

References:
1. New imaging method developed at Stanford reveals stunning details of brain connections --- Bruce Goldman, dated 17th Nov 2010, Stanford medical school website. link
2. How your brain works --- Craig Freudenrich, howstuffworks. link
3. Human brain has more switches than all computers on Earth --- Elizabeth Armstrong Moore, dated 17th Nov 2010, CNET News. link.
4. More Switches than a computer --- Uncommon Descent, Cornelius Hunter, dated 17th Nov 2010. link.
5. Ethics and the Evolution of the Synapse --- darwins-god blog, Cornelius Hunter, dated 21st Nov, 2010. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ


http://www.ethirkkural.com/2010/11/ii.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 22, 2011 1:39 pm

முஹைதீன் wrote:மனித மூளையின் "Cerebral Cortex" (sheet of neural tissue that is outermost to the cerebrum of the mammalian brain) திசுவில் மட்டும் 125 ட்ரில்லியனுக்கும் மேலான சினாப்சஸ்கள் உள்ளன. இது, 1500 பால்வீதிக்களில் (Milkyway Galaxy) இருக்கக்கூடிய மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு (தோராயமாக) ஒப்பானது.
நான் கடவுள் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக