ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது

2 posters

Go down

நீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது Empty நீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது

Post by இளமாறன் Thu Oct 20, 2011 11:36 pm

பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில், ஐந்தரை மணி நேரத்துக்கும் மேலாக கேள்விகள் கேட்டும் முடிவடையாதததால், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டுள்ளார்.

1991-96ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில், குற்ற விசாரணை முறை சட்டம் 313வது பிரிவின் கீழ், சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், நீதிபதி கேள்வி கேட்டு, பதிலை பதிவு செய்யும் நடைமுறைக்காக அக்., 20ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை எதிரிலுள்ள புதிய சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பெங்களூரு ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தை வந்தடைந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தார்.
பரப்பன அக்ரஹாரா பகுதியில் தமிழகம், கர்நாடகாவை சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலையிலிருந்தே அப்பகுதியில், போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர். நீதிமன்றம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்த ஜெயலலிதா, காலை 11 மணி வரை தனது காரில் அமர்ந்திருந்தார். 11 மணிக்கு நீதிமன்ற விசாரணை துவங்கியது
நீதிமன்றத்தில், நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, தனது இருக்கையில் அமர்ந்ததும், ஜெயலலிதாவிற்காக போடப்பட்டிருந்த சாதாரண "ஒயர் சேசரில்' அமருமாறு கூறினார். ஜெயலலிதா தனது இருக்கையில் அமர்ந்தார்.
அரசு தரப்பில் ஆச்சார்யலு, உதவி வக்கீல்கள் சவுட்டா உட்பட மூவரும், ஜெ., தரப்பில் குமார், கந்தசசாமி, அசோகன், செந்தில் குமார், சரவண குமார், வெங்கடேஸ்வரலு, சந்தான கோபால், பாரதி ஆகியோரும் ஆஜராயினர்.
குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோரும் நீதிமன்றத்தில் அமர்ந்தனர்.
அரசு தரப்பில் ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்கும் பணி துவங்கியது. கேள்விகளுக்கு ஜெயலலிதா அமர்ந்தவாறே பதிலளித்தார். காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும், மதியம் 2.45 மணியிலிருந்து 5.15 மணி வரையிலும் ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
மாலை 5.15 மணியளவில், நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் கார் மூலம் ஹெச்.ஏ.எல்., விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.
இன்று நடந்த விசாரணை குறித்து அரசு வக்கீல் ஆச்சசார்யலு கூறுகையில், "இன்று காலை 11 மணியிலிருந்து 2 மணி வரை 243 கேள்விகளும், மதியம் 2.45 மணியிலிருந்து 5.15 மணி வரை 136 கேள்விகளும் என மொத்தம் 379 கேள்விகள் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டன. கேட்ட கேள்விகளை பொருத்து, அவர் பதிலளித்தார். வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நீதிமன்றம் கூடும்,'' என்றார்.
ஜெ., வக்கீல் குமார் கூறுகையில், "சுமார் 380 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு திடமாகவும், உறுதியாகவும், தீர்க்கமாகவும், தெளிவாகவும் அவர் பதிலளித்தார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேவையற்றது என்பதை நீதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்தார். சாட்சிகள் கூறிய வாக்குமூலத்தின் சாராம்ச அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி, வெள்ளிக்கிழமையுடன் கேள்வி கேட்டு, பதிலை பெற்றுக் கொள்ள வேண்டும். நாளை மறு நாள் தொடருமா என்பதை என்னால் கூற இயலாது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஜெயலலிதா ஆஜராவார்,'' என்றார்.

ஜெயலலிதாவிடம் ஆயிரத்து 384 கேள்விகள் கேட்கப்படும் என்று ஜெயலலிதாவின் மற்றொரு வக்கீல் தெரிவி்த்தார்.

முன்னதாக ஜெயலலிதா இன்று காலை 8.30. மணியளவில் போயஸ்கார்டன் வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார். தனி விமானம் மூலம் புறப்பட்டு இவர் 10 மணியளவில் பெங்களூரூ வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் கர்நாடக போலீஸ் பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹார கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். தமிழக- கர்நாடக எல்லையில் அ.தி.மு.க,வினர் குவிந்தனர். கோர்ட் வளாகத்தில் கன்னட தலித் அமைப்பினர் கறுப்பக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ‌நேற்று கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஜெ., சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது. "இன்று ஆஜராக வேண்டும்' எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

பாதுகாப்பு வளையத்தில் கோர்ட் :முதல்வர் ஜெ., பெங்களூரூ கோர்ட்டுக்கு செல்லும் போது பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என அவர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பாதுகாப்பு விரிவாக செய்துள்ளோம் இதில் எவ்வித பிரச்னையும் எழாது என உறுதியளித்தார். இதன்படி ஜெ., வருகையையொட்டி பரப்பன அக்ரஹார கோர்ட்டை சுற்றிலும் ஏறத்தாழ ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோர்ட்டில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சசிகலா -இளவரசியுடன் ஜெ., : இன்று கோர்ட்டில் ஆஜராக பல கார்கள் புடைசூழ பலத்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வந்த ஜெ., காரில் அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

கர்நாடகாவில் நுழைய அ.தி.மு.க.,வினர் முயற்சி : எல்லையில் பதட்டம் : கர்நாடக கோர்ட்டிற்கு ஜெ., வருவதையொட்டி சேலம், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் கர்நாடக எல்லை பகுதியான ஓசூர் அருகே அத்திப்பள்ளி, சர்ஜாபுரம், ஆனைக்கல் பகுதி வழியாக கர்நாடகா செல்ல கார் மற்றும் டிரக்கர் லாரி மூலம் வந்தனர். இதனால் கர்நாடக எல்லையில் இருந்த அம்மாநில போலீசார் வாகனங்களை வழிமறித்து திருப்பி அனுப்பினர். சிலர் திரும்பி செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து உள்ளூர் அ.தி.மு.க.,வினர் தயவில் மாற்று வழியில் கர்நாடகாவுக்குள் சில வாகனங்கள் சென்றன. சில அமைச்சர்களும் காரில் வந்து திரும்பி சென்றனர். எல்லை பகுதியில் நடந்த தமிழக- கர்நாடக போலீசார் நடத்திய சோதனை காரணமாக ஓசூர்- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இதனால் சாதாரண மக்களும், சரக்கு லாரி டிரைவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாயினர்.


கறுப்புக்கொடியுடன் போராட்டம்: கோர்ட் அருகே கன்னட தலித் அமைப்புகள் கறுப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். பரமக்குடியில் நடந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்வர் ஜெ., ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அ.தி.மு.க.,வினர் அங்கு கூடியதால் பதட்டம் ஏற்பட்டது. இருவரும் எதிர் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் பதட்டத்தை தணிக்க கன்னட அமைப்பினர் 50 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.

எத்தனை அமைச்சர்கள் வந்தனர் ? : ஜெ,கோர்ட்டில் ஆஜராகிறார் என அவருக்கு துணையாக இருப்பதை காட்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் பலர் பெங்களூரூவுக்கு வந்தனர். பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கோகுலஇந்திரா, நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் தம்பித்துரை எம்.பி.,, முன்னாள் சபாநாயகர் பி,எச்.,பாண்டியன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.


நட்சத்திர ஓட்டலில் இருந்து வந்தது சான்ட்விச்: காலையில் வந்த ஜெ., மதியம் வரை கோர்ட்டில் இருக்க வேண்டியது வந்ததால் இவருக்கு மதியம் சான்ட்விச் கொண்டு வரப்பட்டது. இதற்கென நட்சத்திர ஒட்டலுக்கு சென்று அ.தி.மு.க., நிர்வாகிகள் வாங்கி வந்தனர்.சாண்ட்விச்சை, ஜெயலலிதா, மதிய உணவு இடைவேளையின் போது, தனது காரில் இருந்தவாறே சாப்பிட்டார்.




தகுந்த பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தினார். இதையடுத்து, ஜெயலலிதா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை, கோர்ட் நிராகரித்தது. சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதாவுக்கு, "அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். "இசட்' பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, இன்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறை எதிரிலுள்ள கோர்ட்டில் நடத்துமாறு, பெங்களூரு சிறப்புக் கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு போதிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு தவறிவிட்டது. அதனால், பெங்களூரு கோர்ட்டில் ஆஜராவதை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, முதல்வர் ஜெயலலிதா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக கர்நாடக மாநில தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி.,யின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், "ஜெயலலிதா "இசட்' பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் அவர் ஆஜராகும் போது, அவருக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைகளைப் பரிசீலித்த நீதிபதிகள், "வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு, பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில், இன்று முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும். ஏற்கனவே நிர்ணயித்தபடி, அவர் கோர்ட் விசாரணையில் பங்கேற்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.மேலும், வழக்கு விசாரணை நடைபெறும் இடத்தை பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே மாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். "ஜெயலலிதா ஆஜராவதற்காக ஹெலிபேடு கூட தயார் நிலையில் உள்ளது. அதனால், அவர் கோர்ட்டில் ஆஜராகி, வழக்கு விசாரணையில் பங்கேற்ற பின் மீண்டும் திரும்பிச் செல்லலாம்' என்றும் கூறினர்.

முன்னதாக ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோதகி, "ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெறும் சிறப்புக் கோர்ட், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 65 கி.மீ., தொலைவில் உள்ளது. இதனால், அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால், குறைந்தபட்சம் சில நாட்களுக்காவது வழக்கு விசாரணையை, அவர் ஆஜராவதை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது:ஜெயலலிதாவின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். கர்நாடக அரசின் வழக்கறிஞர் அனிதா ஷெனாயும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்கோத்ராவும், ஜெயலலிதாவை பாதுகாக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதனால், எந்த அச்சமும் தேவையில்லை.ஜெயலலிதா பெங்களூரு வருவது முதல் அவர் விசாரணை முடிந்து, நகரை விட்டு வெளியேறும் வரை முறையான பாதுகாப்பு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை, கர்நாடக மாநில அரசு எடுத்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதில் கர்நாடக மாநில அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனெனில், கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் செய்யும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பரப்பன அக்ரஹாரம் சிறப்புக் கோர்ட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களும் சோதனை மேற்கொண்டது. கோர்ட் வளாகம் முழுவதும் புதிய வர்ணம் பூசப்பட்டு, உட்கட்டமைப்பு வசதிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வருவதால், அப்பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரம் சிறப்புக் கோர்ட்டில் ஆஜராக வரும்போது, அவருக்குத் தேவையான பாதுகாப்பை கண்டிப்பாக வழங்குவோம்,'' என்றார். சென்னையிலிருந்து ஜெயலலிதா விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், இன்போசிஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி, கார் மூலம் கோர்ட்டிற்கு செல்லலாம் அல்லது ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்தால், அங்கிருந்து கார் மூலம் கோர்ட்டிற்கு வரலாம் என போலீசார் தெரிவித்தனர்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது Empty Re: நீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது

Post by கேசவன் Fri Oct 21, 2011 9:35 am

நீதிமன்றம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது 1357389நீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது 59010615நீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது Images3ijfநீதிபதியின் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ஜெயலலிதா : விசாரணை நாளையும் தொடர்கிறது Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
» ஜெயலலிதா மரணம் சி.பி.ஐ.,விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» அழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை!
» ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum