ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

Top posting users this month
ayyasamy ram
குட்டித் தோழி .............. Poll_c10குட்டித் தோழி .............. Poll_m10குட்டித் தோழி .............. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டித் தோழி ..............

+4
அ.இராஜ்திலக்
ரேவதி
kitcha
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குட்டித் தோழி .............. Empty குட்டித் தோழி ..............

Post by ஜாஹீதாபானு Tue 18 Oct 2011 - 16:26

இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு வருகிறது? இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில் இருந்து பெங்களூர் செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் பிடிக்கும். எப்படி நேரத்தை செலவு செய்வது? புதிதாய் வாங்கிய புத்தகம் இரண்டையும் வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஹிக்கின்போத்தம்ஸ் கடை எதிர் பிளாட்பாரத்தில் தான் இருந்தது. அங்கு சென்றுவர சோம்பேறித்தனம்!

"டங் டங். பயணிகள் கவனத்திற்கு, சென்னையில் இருந்து பங்காருப்பேட்டை வழியாக பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்."

என்னுடைய சிறு வயதில், 'எப்படி இந்த அக்கா வார்த்தை தவறாமல், ஒரு தவறில்லாமல் அறிவிக்கிறாங்க'ன்னு அதிசயித்தது உண்டு.

வண்டி வந்தது. என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்காருவதற்குள் பெரும் சிரமமாகிவிட்டது. எதிரிலே மூன்று நாள் தாடியுடன் முப்பத்தைந்து வயதான கணவன், முப்பதை சற்றே கடந்திருக்கும் மனைவி மற்றும் எல்லாம் வாழ்ந்து முடிந்தது போன்ற தோற்றத்தில் ஒரு பெரியவர். இரயிலின் சத்தத்தைவிட அதிகமாக அருகே அழுகுரல். குழந்தைகளின் சண்டை. சண்டையிட்டது ஒரு ஆறு வயது பெண்குழந்தையும் நான்கு வயது சிறுவனும்.

"விடுடா விடு" ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக சண்டை. "மம்மி அந்தப் பையன் பீப்பீல எச்சி வெச்சிட்டான்". லேசான சிணுங்கல் அந்தப் பெண் குழந்தையிடம்.

"அமுதா.. இங்க வா. தம்பி தானே.. வா வந்து தாத்தாகிட்ட உட்கார்." அப்போது தான் தெரிந்தது அந்தக் குழந்தை எதிரே அமர்ந்திருந்த 35-30ன் குழந்தை என்று. "தா அதை முதலில்; பையில் வைக்கிறேன். அமைதியா எங்காச்சும் இருக்கியா நீ?" இது அமுதாவின் அப்பா.

ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. பயணம் முழுவதும் அமுதாவின் அட்டகாசங்களை மட்டுமே நோட்டமிட்டபடி நான். மடிக்கு மடி தாவினாள். தாத்தாவிடம் கொஞ்சினாள். அம்மாவிடம் அடாவடித்தாள். அந்தச் சிறுவனிடம் "உன் பேச்சு டூ" என்றாள். அப்பாவிடம் அடக்கமாக சில நிமிடம். என் மடிக்கும் வந்து சேர்ந்தாள்.

"பாப்பா பேரு என்ன?"

"பாப்பாவா? யாரு பாப்பா? I am a big girl"

"ஓ அப்படிங்களா மேடம்? சொல்லுங்க உங்க பேரு என்ன?

"அமுதா.. உங்க பேரு என்ன?" மழலைத் தமிழில் கேட்டாள்.

தமிழே அழகு! அதுவும் மழலைத்தமிழ் அழகோ அழகு..

"விழியன்"

"குட் நேம். ஹலோ விழியன். ஹவ் டு யு டு?" என் கையைக் குலுக்கினாள்.

அடடா எனக்கு இது தோன்றாமல் போச்சே. பக்கத்தில் கடன் வாங்கிய வார இதழை மூடி வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் படாதபாடு படுத்திவிட்டாள். கேள்வி மேல் கேள்வி. "நீங்க எங்க வேலை செய்யறீங்க. என்ன கேம்ஸ் விளையாடுவீங்க? ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க? எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" சலிக்காமல் பதில் தந்தேன்.

ஒரு கட்டத்தில் அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவளிடம் சின்ன விளையாட்டு விளையாடினேன்.

"அமுதா இது என்ன?"

"இது கூட எனக்குத் தெரியாதா? சர்க்கிள்"

"சரி. இந்த வட்டம் மாதிரி என்ன என்ன பொருள் உனக்குத் தெரியும்? சொல்லு பார்ப்போம்."

"இட்லி, தோசை, அம்மா வளையல், நிலா, சன், பாட்டி பொட்டு, ம்ம்ம் காயின், என் டாலர்... .." எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்தவள் கூட்ஸ் வண்டிபோல சொல்லிக்கொண்டே போனாள்.

அதன் பின்னர் பாட்டு ஒன்றை சொல்லித் தந்தேன். அவளும் ஆடிக்கொண்டே பாட்டு பாடி என்னையும் ஆட வைத்தாள். பேசிப் பேசி என் சக்தியே குறைந்துவிட்டது. ரயில்வே கேண்டீனில் இருந்து பஜ்ஜி போண்டா வந்தது. ஒரு ப்ளேட் கொடுக்கச் சொன்னேன். மூன்று போண்டா பதினாறு ரூபாய். ஒன்றை எடுத்து அமுதாவிடம் கொடுத்தேன். அவள் அம்மாவைப் பார்த்து சாப்பிடட்டுமா என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன்.

எதிர்பாராத பதில்!

"அங்கிள். இது பேட் ஆயில்ல (bad oil) செய்து இருப்பாங்க. ஸ்டொமக் ப்ராப்ளம் வரும். நீங்க இப்பவே குண்டா இருக்கீங்க. இன்னும் சாப்பிட்டா அவ்வளவு தான்"

சுரீர் என்று மண்டை மீது அடித்தது போல இருந்தது. கேண்டீன் சர்வர் வேகமாக நடையைக் கட்டினார். மிகவும் நெருடலாகிவிட்டது. வாயில் வைத்ததை உண்டுவிட்டு மீதி இருந்த இரண்டு போண்டாவை அந்த வழியே யாசகம் கேட்டு வந்த ஒரு வயதான பாட்டியிடம் கொடுத்தேன்.

அமுதா என்னைப் பார்த்து அநாயசமாக, "அவங்க ஒடம்பு கெட்டுப்போனா பரவாயில்லையா?" எனக் கேட்டுவிட்டு அவள் அம்மாவின் மடியினில் குடிபெயர்ந்தாள்.

என்ன செய்வதென தெரியாமல் கண்ணயர்ந்தேன். குப்பம் ரயில் நிலையத்தில் ஜன்னலோர சீட் காலியானது. அமுதா மீண்டும் வந்து மடி மீது உட்கார்ந்து கொண்டாள்.

அவள் வகுப்புக் கதைகளைக் கூற ஆரம்பித்தாள். தன் தோழி ஜெனி·பர் வைத்திருக்கும் பென்சில் பாக்ஸ் முதல் அவள் வகுப்பு ஆசிரியை வரை ஓயாமல் பேசினாள். எத்தனை உன்னிப்பான பார்வைகள், நினைவுகள், கவனிப்புகள். அவள் பேசி எனக்குத் தாகம் எடுத்தது.

"அமுதா காபி, டீ, பால் ஏதாச்சும் குடிக்கறியா, இல்ல இதுக்கும் ஏதாச்சும் வெச்சிருக்கியா?"

"நீங்க குடிங்க"

டீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ இருப்பது புரிந்தது.

"கீழே போடாதே" என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன்.

உடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5 கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு. எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள்.

அள்ளி அணைத்தபடி "யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது?" ஆனந்த ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து "எங்க புவனா மிஸ்" என்று ரகசியம் பேசினாள்.

இதன் நடுவே, காட்பாடியருகே ஒரு சிறுவனிடம் சண்டையிட்டாளே அந்தக் குடும்பம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியது. அமுதா ஓடிச்சென்று அந்தப் பீப்பீயை அவனுக்குப் பரிசளித்து வந்தாள்.

"உனக்கு இதே தொழிலாப் போச்சு". அமுதாவின் அப்பா தன் பணத்தை இப்படியே விரயப்படுத்துகிறாள் என்று வருத்தப்பட்டார்.

"அங்கிள், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா?" என்றாள்.

நான் "இப்போ ஐந்து கண்ணாடிப் பொருள்களை சொல்லு பார்ப்போம்" என்றேன்.

"உங்க மூக்குக் கண்ணாடி" விழுந்து விழுந்து சிரித்தாள் கள்ளமில்லாமல். "ஜன்னல் கண்ணாடி" "கிஸான் பாட்டில்" "அப்புறம்..ம் ம்.. அதோ லைட் மேல கண்ணாடி" "அங்ங். அப்பா குடிப்பாரே அந்த old monk பாட்டில்.. .." நிசப்தம். எங்கள் உரையாடலை சுற்றி இருந்த அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஆச்சர்யம்.

படால்..படால் என்று அமுதாவின் கன்னம் பதம் பார்க்கப்பட்டது. அவளைத் தன் பக்கம் இழுத்தார் அவள் அப்பா. "சார்.." என்று நான் தடுக்க..முறைத்தார்.

அமுதா அழுது அழுது தூங்கிவிட்டாள். கலகலவென இருந்த இடம் காலியானது போல இருந்தது.

கே.ஆர்.புரத்தில் வண்டி நின்றது. அந்தக் குடும்பம் இறங்கியது. இன்னமும் அம்மா தோள்மீது தூங்கியபடி அமுதா. பத்தடி நடந்த பின்னர், மெல்லக் கண்களைத் திறந்தவள் மெல்லிய சிரிப்பை என் மீது வீசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.
அந்தக் குட்டித் தோழியை இனி எப்போது காண்பேனோ என்ற ஏக்கம் மனதை நிறைத்தது

நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by kitcha Tue 18 Oct 2011 - 16:37

நல்ல கதை பாட்டி.இப்போது உள்ள குழந்தைகள் படு சுட்டி.புத்சிசாலிகள்.
அந்த அப்பாவைப் போல் உள்ள சிலர் அப்பாக்கள் இன்னிம் இருக்கிறார்கள் மரியாதை தெரியாதவர்கள், பிள்ளைகளிடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று

பகிர்விற்கு நன்றி பாட்டி மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குட்டித் தோழி .............. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by ரேவதி Tue 18 Oct 2011 - 16:55

சூப்பர் கதை பாட்டி அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by அ.இராஜ்திலக் Tue 18 Oct 2011 - 18:18

உணர்வு பூர்வமான நல்ல பதிவு பாராட்டுக்கள்


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by ஜாஹீதாபானு Tue 18 Oct 2011 - 18:21

நன்றி நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by sinthiyarasu Mon 5 Mar 2012 - 21:29

கதை ரொம்ப அருமையிருக்கு
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by ஜாஹீதாபானு Thu 22 Mar 2012 - 18:12

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by ரா.ரா3275 Thu 22 Mar 2012 - 19:15

///டீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ இருப்பது புரிந்தது.

"கீழே போடாதே" என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன்.

உடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5 கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு. எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள்.

அள்ளி அணைத்தபடி "யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது?" ஆனந்த ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து "எங்க புவனா மிஸ்" என்று ரகசியம் பேசினாள்.///

ஹாஹா...சூப்பர் சுட்டிக் குழந்தை அந்த அமுதா...
மிகவும் ரசித்தேன்...அதிலும் "எங்க புவனா மிஸ்"...சூப்பர்...
அவளை அடித்த அப்பாவை நாலு அப்பு அப்பா வேண்டும்போலத் தோன்றியது...

பகிர்விற்கு நன்றி ஜாகீதாபானு அவர்களே...


குட்டித் தோழி .............. 224747944

குட்டித் தோழி .............. Rகுட்டித் தோழி .............. Aகுட்டித் தோழி .............. Emptyகுட்டித் தோழி .............. Rகுட்டித் தோழி .............. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by யினியவன் Thu 22 Mar 2012 - 19:32

சூப்பர் கதை பானு.

இதில என்ன ஹைலைட்ன்னா அந்தக் குழந்தை நீங்கதான்னு கடைசி வரை சொல்லவே இல்லை - ரொம்ப ரொம்ப தன்னடக்கம் உங்களுக்கு - அமேசிங்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by ரா.ரா3275 Thu 22 Mar 2012 - 19:43

கொலவெறி wrote:சூப்பர் கதை பானு.

இதில என்ன ஹைலைட்ன்னா அந்தக் குழந்தை நீங்கதான்னு கடைசி வரை சொல்லவே இல்லை - ரொம்ப ரொம்ப தன்னடக்கம் உங்களுக்கு - அமேசிங்.

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நடனம் நடனம் நடனம் ஊத்திக்கிச்சு


குட்டித் தோழி .............. 224747944

குட்டித் தோழி .............. Rகுட்டித் தோழி .............. Aகுட்டித் தோழி .............. Emptyகுட்டித் தோழி .............. Rகுட்டித் தோழி .............. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குட்டித் தோழி .............. Empty Re: குட்டித் தோழி ..............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum