புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
58 Posts - 62%
heezulia
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
20 Posts - 22%
mohamed nizamudeen
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
53 Posts - 62%
heezulia
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
18 Posts - 21%
mohamed nizamudeen
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
சட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_lcapசட்னிப் பிரவேசம் - Page 4 I_voting_barசட்னிப் பிரவேசம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்னிப் பிரவேசம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 2:10 pm

First topic message reminder :

சட்னிப் பிரவேசம் - Page 4 Idlichutney2


"என்னங்க, ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"என்ன?"

"இன்னிக்கு டிபன் இட்லி பண்ணியிருக்கேனுங்க!"

"இதுக்கெல்லாம் நான் கோவிச்சுக்குவேனா? நியாயமாப் பார்த்தா இட்லி தான் கோவிச்சுக்கணும்!"

"அதில்லீங்க! தொட்டுக்க தக்காளிச் சட்டினி தானிருக்கு! பரவாயில்லையா?"

"நல்லதாப் போச்சு! ஒரு தட்டுலே நாலு இட்டிலியைப் போட்டு, அது மேலே தக்காளிச் சட்டினியை ஊத்தி வையி! இன்னிக்கு சனிக்கிழமை, எண்ணை தேய்ச்சுக் குளிச்சிட்டு அரை மணி நேரத்திலே வந்திடறேன். அதுக்குள்ளே இட்லியும் ஊறிப்போய் சுமாரா கடிச்சாவது சாப்பிடுறா மாதிரியிருக்கும். சரியா?"

கோலம்மாளுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம் என்பதால் கோவிந்தசாமி சொன்னது போலவே இட்டிலியை தக்காளிச் சட்டினியில் ஊறவைத்து விட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று இன்னும் உடையாமலிருந்த ஒரே ஒரு சுத்தியலையும் டைனிங் டேபிளின் மீது வைத்தாள். ஆத்திர அவசரத்துக்கு ஓடவா முடியும்?

கோவிந்தசாமி குளித்து விட்டு, பக்தி சிரத்தையாக சுவற்றில் மாட்டியிருந்த பெருமாளை வேண்டிக்கொண்டு, சற்றே ஆன்மபலம் அதிகரித்தவராக இட்லியைச் சாப்பிட்டு முடித்தார். அப்பாடா! சென்ற வாரம் ஆந்திரா ஸ்டைலில் தேங்காய்ச் சட்டினி அரைக்கிறேன் என்று மிக்ஸியில் புளிய மரத்தின் ஒரு பாதிமரத்தையே போட்டு அரைத்திருந்தாள் கோலம்மாள். அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு அவரது வயிற்றுக்குள்ளே காக்காய், குருவியெல்லாம் கூடுகட்டிக் குஞ்சு பொரித்தது போலவும், இரவு நேரத்தில் அவரது குடலுக்குள்ளே வௌவால்கள் தொங்கிக்கொண்டிருப்பது போலவும் பயங்கரமான கனவுகள் வரத் தொடங்கியிருந்தன. ஆகையினால், அனாவசியமான விஷப்பரீட்சை எதுவும் செய்யாமல், எந்த வில்லங்கமும் இல்லாத தக்காளிச் சட்டினியை அரைத்த மனைவி மீது அவருக்கு அளவற்ற பரிவே ஏற்பட்டு விட்டது. காலை எட்டுமணிக்குச் சாப்பிட்ட இட்லி மதிய உணவு இடைவேளை வரையிலும் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போலக் கரையாமலிருந்தபோதும், தேங்காய் சட்னி குறித்து அவர் மறந்தே போயிருந்தார். ஆனால், மதிய உணவின் போது, சக ஊழியர் மதுசூதனன் வெங்காய தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர் ஒன்றைக் கவனித்தார்.

"என்ன மதுசூதனா, வழக்கமா கான்க்ரீட் மாதிரி கெட்டியா தேங்காய்ச் சட்னி தானே கொண்டுவருவே? இதென்ன, மறந்து போய் மருதாணியை வைச்சு அனுப்பிட்டாங்களா?"

"யோவ் கோவிந்தசாமி! உன் கண்ணுலே இந்தப் புதீனா சட்னியைத் தான் வைக்கணும். இதப்பார்த்தா மருதாணி மாதிரியா இருக்கு?"

"ஓ புதீனா சட்னியா?"

"அவரு புதீனா சட்னி! நான் பொட்டுக்கடலைச் சட்னி!," என்று சொல்லியபடி பி.ஆர்.ஓ. கிருஷ்ணவேணி வந்து அமர்ந்தாள்.

"என்னாச்சு? தேங்காய் விலை அவ்வளவு ஏறிடுச்சா?" கோவிந்தசாமி குழம்பியபடி கேட்டார். "எல்லாரும் அவங்கவங்க டிரெஸுக்கு மேட்சிங்கா கலர் கலரா சட்னி கொண்டு வந்திருக்கீங்க?"

"ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை மேட்டர் முத்திப்போயி கேரளாவிலேருந்து தேங்காய் வரதே நின்னிருக்குமோ?" என்று மதுசூதனன் புதிராகக் கேட்டார்.

"சாப்பிடுற நேரத்துலே ஏன் சார் தேங்காய்ச் சட்னின்னு அபசகுனமாப் பேசறீங்க?" என்று எரிந்து விழுந்த கிருஷ்ணவேணி தனது மாங்கல்யத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். "வீட்டுக்குப்போனதும் மாவிளக்கு ஏத்தணும்! நாளையிலேருந்து வெவஸ்தை கெட்டவங்களோட சாப்பிடக்கூடாது!" என்று கூறியபடி எழுந்து போனாள்.

"யோவ் மதுசூதனன், தேங்காய்ச் சட்னின்னு சொன்னதுக்குப் போயி ஏன் இவ்வளவு கோவிச்சுக்கிறாங்க?"

"ஒருவேளை இப்போ ஆம்பிளைங்களுக்கெல்லாம் நேரம் சரியில்லே, பொம்பிளைங்க தேங்காய்ச் சட்னி பண்ணக் கூடாதுன்னு புதுசா ஏதாவது ஐதீகத்தைக் கிளப்பி விட்டுட்டாங்களோ?"

"அட போய்யா, அவங்க இட்லி தோசையைத் தின்னுட்டே இன்னும் உசிரோட இருக்கோம். சட்னியாலயா பிரச்சினை வரப்போவுது?"

"அப்படி என்னதான் பிரச்சினை இந்தச் சட்டினியிலே? வீட்டுக்குப் போகும்போது ஆளுக்கு ஒரு தேங்காய் மறக்காம வாங்கிட்டுப்போயி, சட்னி அரைச்சே ஆகணுமுன்னு சொல்லிர வேண்டியது தான்!"

"மதுசூதனன், உங்களை மாதிரி ஆணாதிக்கத் திமிரோட என்னாலே பேச முடியாது. வேணுமுன்னா நானே சட்னி அரைக்கிறேன். என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாமே?"

அதே போல அன்று அலுவலகம் முடிந்ததும் கோவிந்தசாமியும், மதுசூதனனும் கோவிலருகேயிருந்த தேங்காய்க் கடைக்குப் போனார்கள்.

"தேங்காய் என்ன விலைம்மா?"

"தேங்காய் சாமிக்கா? சட்னி அரைக்கவா?"

"ஏம்மா, எதுக்காயிருந்தா என்னம்மா? காசு கொடுக்கிறோம், தேங்காயைக் கொடு! நாங்க சாமிக்குப் போடுறோம் இல்லாட்டி சட்னி அரைக்கிறோம். உனக்கென்ன?"

"போங்கய்யா... சட்னியரைக்கிறதுக்கெல்லாம் தேங்காய் தர முடியாது."

கோவிந்தசாமியும், மதுசூதனனும் அதிர்ச்சியில் ஃபிரிட்ஜில் வைத்த தேங்காய்ச் சட்னிபோல உறைந்து போனார்கள்.

"யோவ், இந்த சட்னி மேட்டர் ஏதோ சீரியஸ் மேட்டர் போலிருக்குதே! என்னான்னு கண்டுபிடிச்சே ஆகணும்! போற வழியிலே உடுப்பி கிருஷ்ணபவனுக்குப் போயி விசாரிப்போம்," என்று கோவிந்தசாமி சொல்லவும், மதுசூதனனும் ஓசியில் கீரைவடை சாப்பிடுகிற நப்பாசையோடு பின்தொடர்ந்தார்.

ஹோட்டலை அடைந்து, காலியாயிருந்த டேபிளைக் கண்டுபிடித்து இருவரும் அமர்ந்து கொண்டனர். இவர்களை அஞ்சியஞ்சிப் பார்த்தபடியே அங்கிருந்த சர்வர் பம்மியபடி இருவரையும் அணுகினான்.

"சூடா என்ன இருக்கு?"

"இட்லி, வடை, போண்டா, பஜ்ஜி, ரோஸ்ட்..."

"சட்னி இருக்கா?"

"அது சூடா இல்லை சார்!"

"என்ன நக்கலா? சட்னி இருக்கா இல்லியா?"

"இருக்கு சார், கொத்துமல்லிச் சட்னி, புதீனா சட்னி, கொத்துக்கடலைச் சட்னி..."

"தேங்காய்ச் சட்னி இருக்கா?"

"இருங்க சார், ஓனரை அனுப்பறேன்!" என்று கூறியபடி அந்த சர்வர் அங்கிருந்து நகர்ந்தான்.

"என்னய்யா, தேங்காய்ச் சட்னி இருக்கான்னு கேட்டா, ஓனரைக் கூப்பிட்டு வரப் போயிருக்கான்! டிபன் சாப்பிட வந்தவங்களை டின்னு கட்டி அனுப்பிருவாங்க போலிருக்கே!"

"வணக்கம் சார்!" பல்லெல்லாம் வாயாக ஓனர் வந்தார். "உங்களுக்கு என்ன சார் பிரச்சினை?"

"எனக்கொரு பிரச்சினையும் இல்லை, தேங்காய்ச் சட்னி இருக்கா இல்லையா?"

"இருக்கு சார்! அதுக்கு முன்னாலே இந்த பாரத்துலே கையெழுத்துப் போட்டுக் கொடுங்க சார்!"

"யோவ், நாங்க பஜ்ஜி சாப்பிட வந்தோமா, பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிக்க வந்தோமா?"

"பார்த்தீங்களா பார்த்தீங்களா, சட்னீன்னு சொன்னதும் கோபப்படுறீங்க பாருங்க! அதனாலே தான் யோசிக்க வேண்டியிருக்கு!" என்று மிகவும் பயந்து நயந்து சொன்னார் ஹோட்டல் ஒனர்.

"எதுக்குய்யா பயம்? இதுக்கு முன்னாடி நீ சட்னி போட்டதில்லையா, நான் சாப்பிட்டதில்லையா?" கோவிந்தசாமியின் குரல் திடீரென்று கோபத்தில் உரக்கவே, கூட்டம் கூடியது.

"அதானே?" என்று கோவிந்தசாமிக்கு ஒத்து ஊதினார் மதுசூதனன்.

"இப்போ மரியாதையா தேங்காய்ச் சட்னி போடுறியா இல்லே மினிஸ்டருக்கு போன் பண்ணட்டுமா? ஐ வில் டேக் திஸ் மேட்டர் வித் தி கம்பீட்டன்ட் அதாரிட்டீஸ்!"

"சார், சத்தம் போடாதீங்க சார்! பப்ளிக் எல்லாரும் பார்க்கிறாங்க சார்! இதோ பாருங்க சார், பச்சைச் சட்னி, சிகப்புச் சட்டினி, மஞ்சள் சட்னி... இன்னிக்குப் புதுசா மிஞ்சிப்போன பீட்ரூட் பொறியலை அரைச்சு மரூன் கலருலே கூட சட்னி வச்சிருக்கோம் சார்!" என்று கையதுகொண்டு மெய்யது பொத்திக் கதறத்தொடங்கினார் ஹோட்டல் ஓனர்.

"கோவிந்தசாமி, இவரு என்ன பிளாட்பாரத்துலே பிளாஸ்டிக் சாமான் விக்குறவரு மாதிரி சொல்லுறாரு?" என்று உசுப்பேத்தினார் மதுசூதனன்.

"என்னய்யா ஆச்சு இன்னிக்கு? வீட்டுலேயும் தேங்காய் சட்னி இல்லை, வெளியிலேயும் தேங்காய் சட்னி இல்லேன்னா எப்புடி? இதுக்காக சபரிமலைக்குப் போறா மாதிரி கேரளாவுக்கா போக முடியும்? என்னய்யா பிரச்சினை? சொல்லித் தொலைங்கய்யா!"

"யோவ்!" சாதுமிரண்டது போல திடீரென்று குரலை உயர்த்தியபடி, இடுப்பிலிருந்து பிச்சுவாக்கத்தியை வெளியே எடுத்தார் ஓனர். "நானும் போனாப் போகுதுன்னு சும்மாயிருந்தா, மேலே மேலே பேசிட்டே போறியா? இப்போ மரியாதையா எந்திரிச்சு வெளியே போறியா இல்லாட்டி ஒரே சொருவா சொருவிடுவேன்!"

"ஐயோ! எனக்கு தேங்காய் சட்னி வேண்டாம்! என்னைக் குத்திடாதீங்க!" என்று அலறினார் கோவிந்தசாமி.

"என்னங்க... என்னாச்சு? ஏன் தூக்கத்துலே கத்தறீங்க?" என்று கோலம்மாள் கணவனை உலுக்கவும், கோவிந்தசாமியின் கனவு கலைந்தது.

"இது... கனவா...?"

"என்னாச்சுங்க? ஏன் இப்படிக் கத்தினீங்க? யாரு குத்த வந்தாங்க?"

"கோலம்மா!" கோவிந்தசாமி கூச்சத்தோடு பேசினார்... "இன்னிக்கு நான் ஒரு நியூஸ் படிச்சேன். தாராபுரத்துலே ஒரு கல்யாணத்துலே வேண்டாம் வேண்டாமுன்னு சொல்லியும் கேட்காம இட்லிக்கு தேங்காய் சட்னி போட்டவனோட மண்டையை உடைச்சிட்டாங்களாம். அதைப் பத்தியே யோசிச்சிட்டே தூங்கினேனா, கனவுலேயும் தேங்காய்ச் சட்னி வந்துருச்சு!"

"இவ்வளவு தானா? நான் வேண்ணா உங்க பயம் தெளியுற வரைக்கும் இனிமே சட்னியே அரைக்க மாட்டேன்," என்று ஆறுதலாகக் கூறினாள் கோலம்மாள்.

"நீ ஒண்ணும் கவலைப்படாதே!" என்று மனைவியை ஆசுவாசப்படுத்தினார் கோவிந்தசாமி. "நீ அரைக்கிறதெல்லாம் சட்னி கணக்குலே சேராது!"




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 19, 2011 1:34 pm

ஜாஹீதாபானு wrote:ஹோட்டலில் தேங்காய் சட்னி கேட்டதும் எனக்கு நாம சாப்பிட்ட சரவண பவன் தான் நினைவு வந்தது ...........சுதன் நீங்க அங்க தேங்காய் சட்னி கேட்பது போல கற்பனை பண்ணிக் கொண்டே படித்தேன்

எப்படியோ... என்ன முடிக்கறதிலே உறுதியா இருக்கீங்க.. புன்னகை புன்னகை புன்னகை

நான் எஸ்கேப்பு அய்யோ, நான் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 1:39 pm

அண்ணா அடுத்த முறை நூடுல்ஸ் பற்றிய பதிவு தாங்க



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 19, 2011 1:41 pm

dsudhanandan Today at 3:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏதோ சூப்பர் சட்னி செய்யும் முறைய சொல்லி இருக்கீங்கன்னு பாத்தா, சும்மா சப்பன்னு ஒரு கதய சொல்லிட்டு போய்டீங்களே.
வித வித மா எப்படி சட்னி செய்ரத பத்தி கொஞ்சம் சொல்லித்தாங்களேன். வார இறுதியால சட்னி செஞ்சி இட்லிய ஒரு பிடி பிடிக்கத்தான்.
எங்க அக்கா சூப்ரா சட்னி வகைகள் செய்வாங்க, இப்ப கொஞ்ச நாளா அவுங்களையும் காணோம். இந்த தம்பி மேல அக்காவுக்கு ரொம்ப கோபம்னு நினைக்கிறேன்.

மிக்க மிக மி நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 19, 2011 1:41 pm

dsudhanandan wrote:
ஜாஹீதாபானு wrote:ஹோட்டலில் தேங்காய் சட்னி கேட்டதும் எனக்கு நாம சாப்பிட்ட சரவண பவன் தான் நினைவு வந்தது ...........சுதன் நீங்க அங்க தேங்காய் சட்னி கேட்பது போல கற்பனை பண்ணிக் கொண்டே படித்தேன்

எப்படியோ... என்ன முடிக்கறதிலே உறுதியா இருக்கீங்க.. புன்னகை புன்னகை புன்னகை

நான் எஸ்கேப்பு அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 19, 2011 1:43 pm

ரேவதி wrote:அண்ணா அடுத்த முறை நூடுல்ஸ் பற்றிய பதிவு தாங்க
ரே சரவண பவன்ல நிறைய சாப்பிட்டு இருக்கார் .......... சோகம் இனி ஒவ்வொன்னா சொல்லுவார் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 19, 2011 1:43 pm

ரேவதி wrote:அண்ணா அடுத்த முறை நூடுல்ஸ் பற்றிய பதிவு தாங்க

கண்டீப்பா... நீங்க சரவண பவனில் சாபிட்டதை வைத்து எழுதவா? நக்கல் நாயகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 1:46 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:அண்ணா அடுத்த முறை நூடுல்ஸ் பற்றிய பதிவு தாங்க

கண்டீப்பா... நீங்க சரவண பவனில் சாபிட்டதை வைத்து எழுதவா? நக்கல் நாயகம்
நகைச்சுவையா எழுதி அதை நாலு பேரு படிச்சி சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும் ......பட் நான் நூடுல்ஸ் சாப்பிடவே இல்லையே



Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக