புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_m10ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 17, 2011 1:46 pm

ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2



ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மீது அணுகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பற்றிய கட்டுரை தொடரின் இரண்டாம் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இரண்டு நகரங்களிலும் இருந்த மக்கள் மீது ஏற்பட்ட பேரழிவு விளைவுகளை முதற் பகுதி விவரித்தது.

"அமெரிக்க உயிர்களை காப்பாற்றுதற்கு" ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பேரழிவு தேவைப்பட்டது என்று அமெரிக்க அரசாங்கத்தால் நீண்டகாலமாகவே நியாப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சான்றுகள் முற்றிலும் எதிரிடையாக கடந்த அறுபது ஆண்டுகளில் வெளிவந்துள்ளபோதிலும்கூட, இத்தகைய நியாயம் கற்பித்தல் இன்னும் அமெரிக்க அரசாங்க அதிகாரபூர்வமாய் அனுமதிக்கும் வரலாற்று உண்மையாக இருப்பதை முடிவுகட்டிவிடவில்லை.

உதாரணம் ஒன்றைக் கூறவேண்டும் என்றால், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஆகஸ்ட் 5, 2005 பதிப்பில் "ட்ரூமன் நிர்வாகம், ஜப்பானிய மண்ணில் படையெடுத்தால், 200,000-தில் இருந்து 1 மில்லியன் வரை அமெரிக்க படைவீரர்கள் உயிரிழக்க நேரிடலாம்" என்று எதிர்பார்த்ததால், அதைத் தவிர்ப்பதற்கு இந்த அணுகுண்டுவீச்சுக்கள் நிகழ்ந்தன என்று எழுதியுள்ளது. மேலும், ''ஜப்பானிய மண்ணில் படையெடுப்பு நிகழ்த்தியிருந்தால் மில்லியன் கணக்கான ஜப்பானியர்களும் இறந்திருக்கக் கூடும்'' என்றும் கூறியுள்ளது. இக்கணிப்பின்படி, பல நூறாயிரக்கணக்கான ஜப்பானிய குடிமக்கள், முக்கியமாக சாதாரண மக்கள், பல உயிர்களை முடிந்த அளவு காப்பாற்ற வேண்டும் என்ற நலன்களால் அணுகுண்டிற்கு உயிரை தியாகம் செய்யவும், அடக்கமுடியாத பெருந்துயரத்திற்கும் ஆளானார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த வாதத்தின் சர்ச்சைக்கான ஆதாரத்தை ஒருவர் சரி என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, சட்டபூர்வமாகவும் ஒழுக்கநெறி பார்வையிலும் இந்த நகரமையங்கள் அழிவிற்கு காரணமான அடிப்படை குற்றவியல் தன்மை ஒன்றையும் மட்டுப்படுத்திவிடவில்லை. ஆயினும், முன்பு கூறப்பட்டவை முற்றிலும் கற்பனையானவை. மதிப்பிடப்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமில்லாமல் , அமெரிக்க அரசாங்கம் குண்டுவீச்சு நடத்துவதற்கு எடுத்த முடிவிற்கான காரணங்களுக்கு ஜப்பான் மீது அமெரிக்கப் படையெடுப்பை தவிர்ப்பதுடன் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.

எந்த ஒரு பெரிய வரலாற்றுப் பிரச்சினையில் இருப்பதைப் போலவே, குண்டுவீச்சு நடத்துதல் என்ற முடிவை எடுக்கத் தூண்டியதற்கும் பல பல்வேறுபட்ட காரணிகள் இருந்தன; அவை அனைத்தையும் விரிவாகப் பரிசீலிக்க இயலாது. இங்கு நாம் சில அடிப்படை பிரச்சினைகள் மற்றும் ஆவணங்களை ஆராய்வதற்கு நம்மை வரையறை செய்துகொள்வோம்.
சில இராணுவ தலைமையிடங்கள் அல்லது இராணுவ தொடர்புடைய தொழிற்துறைகள் இருந்திருந்தபோதிலும் பொதுவாக சிவிலியன் தன்மை கொண்டிருந்த பெரும் பாதுகாப்பற்ற நகரங்களில் அணுகுண்டுவீசுதல் என்ற செயற்பாட்டில் பசிபிக் போரில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தபோது ஒரு தொடர்நிகழ்வாகத்தான் இருந்தது என்பது முதலில் கவனிக்கப்படுதல் இன்றியமையாததாகும்.

ஜப்பானிய ஆகாயவழியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவுடன், அமெரிக்க இராணுவம் பயங்கரவாதம் என்றுதான் விவரிக்கக் கூடிய வழிவகைகளுக்கு திரும்பியது----அதாவது பெரும் பயத்தையும், அச்சத்தையும் பரப்புவதற்காக, சாதாரண மக்களின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதற்கு திரும்பியது. ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு முன்பே இத்தகைய பேரழிவுத் தாக்குதல்களுக்கு உதாரணமாக இருந்தது மார்ச் 9, 1945 அன்று டோக்கியோவில் தீக்குண்டுகள் வீசப்பட்டதாகும்; இவற்றில் 87,000 மக்கள் கொல்லப்பட்டனர் . இது நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, பெப்ரவரி 13-14, 1945 அன்று ஜேர்மன் நகரமான டிரஸ்டெனில் மிக இழிபுகழ்பெற்ற தீக்குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது.

மனிதாபிமானம் என்றெல்லாம் போலியாக பேசிவந்தாலும், அமெரிக்க இராணுவம் இந்த நடவடிக்கைகள் மூலம் போர்நடவடிக்கைகளில் ஜேர்மனி அல்லது ஜப்பான் போலவே தானும் மிருகத்தனமாக நடந்து கொள்ள இயலும் என்பதைத்தான் நிரூபணம் செய்தது. ஜூன் 6ம் தேதி ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுக்கும் போர் மந்திரி ஹென்ரி ஸ்டிம்சனுக்கும் இடையிலான விவாதத்தின்போது ஒரு சுவையான கருத்துப்பரிமாறல் இருந்தது; இது எத்தகைய முறையில் அமெரிக்க அரசாங்கம் ஜப்பானிய குடிமக்களை பரந்தமுறையில் துடைத்தழித்தல் பிரச்சினையை எண்ணினார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.

ஸ்டிம்சன் ஒரு நினைவுகுறிப்பில் அமெரிக்க விமானப் படை ஜப்பானிய நகரங்களில் சில பகுதிகளில் அணுகுண்டுவீச்சு செயல்படுத்துவது பற்றி அவர் எழுப்பிய செயல்முறை கவலைகளை பதிவு செய்கிறார்: "போரின் இந்தக் கூறுபாடு பற்றி இரண்டு காரணங்களுக்காக நான் கவலைப்பட்டதை பற்றி அவரிடம் [ட்ரூமனிடம்] தெரிவித்தேன்: முதலில் அட்டூழியங்கள் செய்வதில் ஹிட்லரையும் மிஞ்சக்கூடிய வகையில் அமெரிக்கா உள்ளது என்ற பெயர் ஏற்பட்டுவிடுவதை நான் விரும்பவில்லை; இரண்டாவதாக அமெரிக்க விமானப் படை ஜப்பானிய நகரங்களை முற்றிலுமாக தகர்த்துவிட்டால், எமது புதிய ஆயுதத்தின் [அணுக்குண்டு] வலிமையை காட்ட நல்ல பின்புலம் கிடைக்காமற் போய்விடலாம் என்றும் நான் கருதினேன். அவர் சிரித்துவிட்டு புரிகிறது என்று கூறினார். ஜப்பானிய நகரங்களை வெறிபிடித்தது போல் அழித்துவிடுதல் என்பது அணுக்குண்டு வீச்சுத் திட்டத்தை தடைசெய்துவிடக்கூடும்; ஏனெனில் "சரியான பின்புலம்" பின் இருக்காது; அதாவது தக்க மக்கட்தொகுப்பு நிறைந்து, நகரத்தன்மை பொருந்திய தொடப்படாத இடம் இருக்காது என்று ஸ்டிம்சன் கவலைப்பட்டார். இக்காலக்கட்டத்தில் அமெரிக்கா ஜப்பானை இராணுவ அளவில் முழுக்

கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தது, அதன் நகரங்களை விரும்பினால் தரைமட்டமாக்கிவிடும் என்ற நிலை இருந்தது என்பதையும் இந்த உரையாடல் விளக்கிக்காட்டுகிறது.

ஒரு பயங்கரவாத ஆயுதம் போல் குண்டை பயன்படுத்துதல்---அதாவது, ஜப்பானிய மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பயன்படுத்துதல் என்பது மே 31, 1945 ல் நடைபெற்ற இடைக்கால குழுக்கூட்டம் ஒன்றில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. மான்ஹட்டன் திட்டம் என்பதில் நேரடியாக பங்கு கொண்டிருந்த ரொபேர்ட் ஓப்பன்ஹீமர் மற்றும் சில வீஞ்ஞானிகள், ட்ரூமன் நிர்வாகத்தில் உயரலுவலர்களான வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பைர்ன்ஸ் மற்றும் போர் செயலர் ஸ்டிம்சன் போன்றோர் இந்த குழுவில் இருந்தவர்கள் ஆவர்.

அந்தக்கூட்ட குறிப்பின்படி, "பலதரப்பட்ட இலக்குகள், அவற்றை தாக்குவதில் ஏற்படும் விளைவுகள் பற்றிய விவாதங்களுக்கு பின்னர் ஒரு பொது உடன்பாடு காணப்பட்டது; அதைப்பற்றி போர் மந்திரி ஸ்டிம்சன் முடிவாகக் கூறுகையில், ஜப்பானியர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்க வேண்டியதில்லை; சிவிலியப்குதியை தாக்க வேண்டிய தேவையில்லை; ஆனால் முடிந்த வரை அதிகமாகக் குடிமக்களிடையே ஆழ்ந்த பீதியுணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டாக்டர் (ஜேம்ஸ்) கோனன்ட் கருத்துரைப்படி, செயலர் மிக விரும்பத்தகுந்த முறையில் இருக்கும் இலக்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைசெய்யும் முக்கியமாக போர்த்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிற்சாலை இடமும், தொழிலாளர்கள் இல்லங்கள் சூழப்பட்டிருக்கும் இடமாகவும் அது இருக்கவேண்டும் என்பதில் உடன்பட்டார்

சாதாரண மக்கள் வாழும் பகுதியில் முழுக்கவனத்தையும் செலுத்தக் கூடாது என்று குறிப்பு இருப்பினும், இடைக்காலக் குழுவானது, குழுவில் பணிபுரிந்து வந்திருந்த சில விஞ்ஞானிகள் பரிந்துரைத்த கருத்தான, அணுகுண்டு முற்றிலும் இராணுவம் நிறைந்திருக்கும் பகுதி அல்லது மக்கள் இல்லாத பகுதியில் போடப்படவேண்டும் என்பதை மிகவெளிப்படையான முறையில் நிராகரித்தது.

மான்ஹட்டன் திட்டத்தில் பணிபுரிந்திருந்த அல்லது அதற்கு ஆதரவு கொடுத்திருந்த பல விஞ்ஞானிகளும் அதில் ஈடுபாட்டை தீவிரமாகக் கொண்டதற்கு காரணம் அவர்கள் ஹிட்லர் மீதும் நாஜி ஆட்சியின் மீதும் கொண்டிருந்த ஆழ்ந்த வெறுப்பே ஆகும். திட்டம் ஆரம்பத்தில் நியாயப்படுத்தப்பட்டதற்கு காரணமே, ஹிட்லர் இத்தகைய குண்டை முதலில் பெற்று விட்டால் அதன் விளைவுகள் முற்றிலும் பேரழிவை தரக்கூடியதாக இருக்கும் என்பதுதான்.

ஆனால் அந்த நேரத்தில் அமெரிக்கா இந்தக் குறிப்பிட்ட தொழில் நுட்பத்தில் முழுமை அடைந்த அளவில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆயினும்கூட, ட்ரூமன் நிர்வாகம் அணுகுண்டை பயன்படுத்துவது என்ற முடிவெடுத்ததோடு மட்டும் இல்லாமல், பெரும் எக்காளக்களிப்புடன் அப்படிச் செய்தது. தான் ஒன்றும் இந்த முடிவிற்காக ஓர் இரவுத் தூக்கத்தை கூட வீணடிக்கவில்லை என்றுதான் ட்ரூமன் அனைவரும் அறிய பெருமிதத்துடன் கூறிக் கொண்டார்.

ஒரு விவரப்படி, அட்லாண்டிக்கை கடந்து கொண்டிருக்கையில் ஹிரோஷிமாவை பற்றி கேள்விப்பட்டபோது, அவர் அறிவித்ததாவது: "வரலாற்றில் இது ஒரு மிகப் பெரிய விஷயம்" என்று அறிவித்தார், பின்னர் கப்பலில் பல இடங்களுக்கும் சென்று இச் செய்தியைப் பரப்பினார்; தான் இதுகாறும் இத்தகைய மகிழ்ச்சிகரமான அறிவிப்பை அளித்ததில்லை என்றும் வலியுறுத்தினார். 'நாம் ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டோம்'' என்று அவர் கரவொலி கொடுத்துக் கொண்டிருக்கும் கப்பல் குழுவினரிடம் கூறினார்."

இந்த நிகழ்வுப்போக்கை பற்றி கருத்துக் கூறுகையில், வரலாற்று ஆசிரியர் காப்ரியல் ஜாக்சன் குறிப்பிட்டார்: "ஆகஸ்ட் 1945-ல் குறிப்பிட்ட சூழ்நிலையில், அணுக்குண்டு பயன்படுத்தப்பட்டது உளவியியல் ரீதியாக சராசரி இயல்பு உடையவரும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகி, நாஜி ஜனாதிபதி பயன்படுத்தியது போலவே ஆயுதங்களை பயன்படுத்துகிறார் என்பதைக் காண்பார்கள். இவ்விதத்தில் பலவிதமான அரசாங்கமுறைகளில் உள்ள ஒழுக்கநெறி வேறுபாடுகளை பற்றி அக்கறை உள்ளவர்களுக்கு, பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அமெரிக்கா தெளிவற்றதாக்கியது."

அணுக்குண்டும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான உந்துதலும்

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு, எந்த நாகரிகமான சமுதாயத்திலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில்தான் அணுக்குண்டு போன்ற ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்து இருந்திருக்கும். ஒரு சாதாரண பொதுமக்களுக்கு எதிராக இத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற எண்ணமே ஒரு சமூகம் இழிந்த நிலையிலும் ஒழுக்கநெறியில் சரிந்த நிலையிலும் இல்லாவிடின் தோன்றியிருக்காது. ஆயினும்கூட அமெரிக்க நாடு ஒன்றுதான் உலகில் அணுக்குண்டை வீசிய ஒரே நாடு என்ற ஒற்றைத் தனிச்சிறப்பைக் கொண்டிருக்கிறது. மேலும், இது ஒரு இராணுவத் தேவையை ஒட்டி பயன்படுத்தப்படவில்லை; அரசியல் மற்றும் மூலோபாய காரணங்களுக்காகத்தான் போடப்பட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத் ஒன்றியத்துடனான மோதலில் ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என்பதற்காக போடப்பட்டது. இந்த பரந்த நலன்களின் தன்மையைப்பற்றி அறிவதற்கு ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945 நிகழ்வுகளை அவற்றின் வரலாற்று உள்ளடக்கத்தில் ஆராயவேண்டும்.

1939ல் ஆரம்பித்த போர், ஜேர்மனியின் இறுதிச் சரணாகதி மே மாதம் வரை வராவிட்டாலும்கூட, 1945ன் தொடக்கத்தில் ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. இப்போரின் திருப்புமுனையாக பெப்ரவரி 1943ல் ஸ்டாலின்கிராட் போரில் ஜேர்மனியர்கள் தோற்றமை இருந்தது; இதைத் தொடர்ந்து 1944 வசந்த காலத்தில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் ஐரோப்பாவின்மீது படையெடுத்தன.

சோவியத் ஒன்றியம் அமெரிக்காவுடனும் பிரிட்டனும் உடன்படிக்கை கொண்டிருந்தபோதிலும்கூட, நேச நாடுகள் முகாமுக்குள்ளே மிகப்பெரிய பிளவுகள் இருந்தன. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவு இருந்தபோதிலும்கூட, அதிகாரத்துவம் இன்னும் 1947 அக்போடபர் புரட்சியால் நிறுவப்பட்டிருந்த சொத்துரிமை உறவுகளின் அடிப்படையில்தான் இருந்தது. ஏகாதிபத்திய வல்லரசுகளோடு இணங்கிப்போக ஸ்ராலின் சிறப்பாக முயற்சித்தாலும், பிரிட்டனோ, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுகளோ அவற்றில் இருந்த சொத்து உறவுகளை ஏற்கத் தயாராக இல்லை.

அதே நேரத்தில், அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும், ஜேர்மனி, ஜப்பானுக்கு எதிரான போரில் சோவியத் ஒன்றியத்தின் உதவி தேவைப்பட்டது. ஜேர்மனியை தோற்கடிப்பதில் செம்படை கொண்டிருந்த முக்கிய பங்கு, மற்ற வல்லரசுகளிடம் இருந்து, குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் இருந்து, அதற்கு சலுகைகளை கட்டாயமாக கொடுக்க வைத்தது.

பெப்ரவரி 1945ல் நடைபெற்ற யால்டா மாநாட்டில் "மூன்று பெரிசுகள்", ஜேர்மனியின் மீதான கூட்டுக் கட்டுப்பாடு என்பது உட்பட, ஐரோப்பாவை தங்களிடையே பங்கு போட்டுக் கொள்ளவேண்டும் என்ற முக்கிய அம்சத்தில் உடன்பாட்டை கொண்டன. மேலும், அமெரிக்க ஜனாதிபதியான பிராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட்டின் நிர்வாகம், போரை விரைவில் முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால், ஜப்பானுக்கு எதிரான போரில் சோவியத் ஒன்றியம் பங்கு பெறுதல் முக்கியம் என்று கருதினார்.

1941ல் இருந்தே சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் "புதிரான நடுநிலையில்" இருந்தன; அந்த போரின் நேரத்தில் சோவியத் ஒன்றியம், ஜப்பானின் நேச நாடான ஜேர்மனியுடன் போரில் ஈடுபட்டிருந்தபோதும், ஜப்பான் சோவியத் ஒன்றியத்தின் நேச நாடான அமெரிக்காவுடன் போரில் ஈடுபட்டிருந்தபோதிலும் கூட, இரு நாடுகளுமே 1941ல் ஒரு நடுநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவை ஒன்றையொன்று எதிர்த்துப் போரிடாது என ஒப்புக் கொண்டிருந்தன.

ஜேர்மனி சரணடைந்து "இரண்டு அல்லது மூன்று மாதங்களில்" சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரில் பங்கு பெறும் என்று யால்டாவில் ஒப்பந்தம் ஆயிற்று; இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ரூஸ்வெல்ட்டும் சேர்ச்சிலும் சோவியத் நலன்களுக்கு முக்கியமானதாக தீர்மானிக்கப்பட்ட ஜப்பானுக்கு அருகில் உள்ள பல தீவுகள் துறைமுகங்கள் மற்றும் மங்கோலியாவின் பெருபகுதி சோவியத் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது உட்பட பல நிலப்பகுதி, வர்த்தக சலுகைகளை சோவியத்திற்கு கொடுப்பதை ஏற்றுக் கொண்டனர்.

ரூஸ்வெல்ட் ஏப்ரல் 12 அன்று இறந்துவிடவே, 1945 வசந்தகாலத்தில், ட்ரூமன் நிர்வாகமானது அணுகுண்டை வைத்திருப்பதை சமநிலையை மாற்றுவதற்கும் சக்திகளின் சமநிலைத்தன்மையை அமெரிக்காவின்பால் இடமாற்றுவதற்கும் ஒரு வழியாகப் பார்த்தது. தன்னுடைய நாட்குறிப்பில் 1945 மே 14 அன்று, போர் மந்திரி ஸ்டிம்ஸன் ஜனாதிபதியின் தலைமை அலுவலரிடம் நிகழ்த்திய உரையாடல் பற்றிக் குறித்து வைத்துள்ளார்; இதில் ஸ்டிம்சன் அணுக்குண்டு இருப்பு உறுதியாவதற்கு முன்னர் சோவியத் ஒன்றியத்துடன் எவ்விதமான மோதலும் கூடாது என்ற எச்சரிக்கையை விடுத்திருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. தான் மார்ஷலிடம் தெரிவித்தது என்ன என்பது பற்றி ஸ்டிம்சன் எழுதியதாவது:

"வார்த்தைகளுக்காக நம்முடைய செயல்கள் பேசவேண்டுமே ஒழிய, அதுவரை ரஷ்யாவை எப்படி, எவ்விதத்தில் நடத்துவது என்பது பற்றி வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய சொந்தக் கருத்து.... நாம் முந்தி இருப்பதில் மீண்டும் வலிமையைப்பெற்றுக் கொள்ளவேண்டும்; அதை முரட்டுத்தனமாகவும் யதார்த்தமான வழியிலும் செய்ய வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் அதை அவர்கள் நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டு விட்டார்கள் ஏனெனில் நாம் இதுகாறும் அதிகம் பேசிவிட்டோம், அவர்களுக்கு அதிக சலுகைகளும் கொடுத்துவிட்டோம். அனைத்து சீட்டுக்களையும் வைத்திருக்கும் இடம் இதுதான் என்று நான் அவருக்குக் கூறினேன். சீட்டாட்டத்தில் முழு வலிமையும் வந்திருக்கும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவேண்டுமே ஒழிய முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிடக் கூடாது. நம்முடைய உதவியில்லாமல் அவர்கள் தொழில் துறையில் வளர்ச்சி அடைய முடியாது; நம்மிடத்தில் வரவிருக்கும் ஆயுதமோ நமக்கு ஒரு பிரத்தியேகமான நன்மையை அளிக்கவுள்ளது."

இதற்கு அடுத்த நாள், ட்ரூமன், ஸ்ராலின் மற்றும் சேர்ச்சில் ஆகியோர் பொஸ்ட்டாமில் கூடி பேசுதல் முதல் அணுகுண்டுச் சோதனைக்கு முன்னரே வரும் என்ற கவலையை ஸ்டிம்சன் கொண்டிருந்தார். "ரஷ்யா எவ்வாறு மஞ்சூரியா மற்றும் போர்ட் ஆர்தர், வட சீனாவில் பல பகுதிகள் ஆகியவற்றில் பங்கு வகிக்க வேண்டும், சீனா நம்முடன் கொண்டுள்ள உறவு பற்றியது அதற்கு உணர்த்தப்பட வேண்டும் இவையெல்லாம் முக்கியமானவை ஆகும்.

இத்தகைய கடும்சிக்கல் வாய்ந்த பிரச்சனைகளின் அலைக்கிடையே S1 பற்றிய (அணுக்குண்டின் இரகசியப் பெயர்) இரகசியம் மேலோங்கிநிற்கும் மற்றும் அநேகமாய் அந்த நேரம் வரைக்கும், அந்தக்கூட்டம் முடியும் வரை, இந்த ஆயுதம் நம் கையில் இருக்கிறதா அல்லது இல்லையா தெரியாது. விரைவில் அது பின்னர் இருக்கும் என நினைக்கிறோம்;

உங்களது துருப்புச்சீட்டு உங்களது கையில் இல்லாமல் இராஜதந்திர முறையில் அத்தகைய இடருக்காளானநிலையில் சூதாடுவது பயங்கரமான ஒன்றாகத் தெரிகிறது."

இறுதியில் பொட்ஸ்டாம் மாநாடு சில வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டது; இது மான்ஹட்டன் செயல்திட்டத்திற்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் கொடுப்பதற்காக நடந்தது. மே 21 அன்று சோவியத் ஒன்றியத்தில் அமெரிக்காவின் முன்னாள் தூதராக இருந்த ஜோசப் டேவிஸ், ட்ரூமனுடன் ஓர் உரையாடலில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது ஜூலை வரை போட்ஸ்டாம் மாநாட்டை தான் விரும்பவில்லை என்று ட்ரூமன் கூறியிருந்தார். வரவுசெலவுத் திட்டப் பொறுப்பு தன்னிடம் அப்பொழுது இருந்ததாகவும் கூறினார். சோதனை ஜூன் மாதம் வருவதாக இருந்து பின்னர் ஜூலை வரை ஒத்திவைக்கப்பட்டது." இந்தப் பக்கத்தின் கடைசியில் டேவிஸ் பின்னர் தான் வரவுசெலவுத் திட்டம் என்றால் என்ன என்பது பற்றி விளக்கியிருந்தார். "அடிக்குறிப்பு (*) அணுக்குண்டு என்பதாகும். அப்பொழுது அவர் நெவடாவில் அணுகுண்டுச் சோதனை நடந்து வருவதாகக் கூறினார். பெரும் இரகசியமாக இது காப்பாற்றப்பட வேண்டும் என்றும் எனக்கு உத்தரவு இட்டார்."

ட்ரூமன் நிர்வாகத்தின் அதிகாரிகள் இவ்வாறு முழு உணர்வுடன் சோவியத் ஒன்றியத்துடனான விவகாரங்களில் அணுக்குண்டை ஒரு "பெரும் துருப்பாகத்தான்" கண்டனர். சோதனையின் வெற்றி பற்றி உறுதியில்லாமல் இருந்ததால், ட்ரூமன் தன்னுடைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பைர்ன்ஸுடன் பொட்ஸ்டாமிற்கு சென்று சோவியத் ஒன்றியத்திடம் இருந்து அது ஜப்பானுக்கு எதிராக போரில் இறங்கும் என்ற வாக்குறுதியை பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.

தன்னுடைய நாட்குறிப்பில் ட்ரூமன் எழுதினார்: "[அணுக்குண்டுச்] சோதனை தோல்வியுற்றால், நாம் ஜப்பானின் மீது படையெடுப்பது என்பதற்குப் பதிலாக, சோவியத் தலையிட்டீன் மூலம் ஜப்பானின் சரணாகதியை கொண்டுவரவேண்டும்."

பொட்ஸ்டாம் மாநாடு முறையாக ஆரம்பிப்பதற்கு சற்று முன் ஜூலை 16ம் தேதி வெற்றிகரமாக அணுக்குண்டுச் சோதனை நிகழ்ந்தது, "அந்தப் பையன்களை தட்டுவதற்கு ஒரு நல்ல சுத்தியலாக எனக்கு பயன்பட்டது" என்று ட்ரூமன் பின்னர் கூறினார். போட்ஸ்டாமில் அவர் நடந்து கொண்ட முறையே முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தது.

ஸ்ராலினுடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளின்போது ஆக்கிரோஷமாகவும், அடாவடித்தனமாகவும் நடந்து கொண்டார். போஸ்ட்டாம் மாநாட்டின் ஆரம்ப நாட்களில் சோவியத் ஒன்றியத்திடம் அது ஜப்பானுக்கு எதிராக போரில் சேரும் என்ற உறுதியமொழியைத்தான் ட்ரூமன் நாடியிருந்தார். ஆனால் அடுத்த சில வாரங்களில் சோவியத் படையெடுப்பு நிகழ்ந்து, ஜப்பான் தனியே ஸ்ராலினுடன் உடன்படிக்கை கொள்ளுவதற்கு முன்னரே அணுக்குண்டு பயன்பாடு போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவந்து விடும் என்று அமெரிக்க நிர்வாகிகள் தெளிவாகக் கருதினர்.

இத்தகைய உறுதிப்பாடு வெளியுறவுத்துறை அமைச்சர் பைர்ன்ஸிடம் நிச்சயமாகக் காணப்பட்டது. தன்னுடைய முக்கிய நோக்கம் போட்ஸ்டாமில் ரஷ்யாவை எப்படியும் போரில் ஈடுபடுத்துதல் என ட்ரூமன் கூறியதாக கடற்படைப் பிரிவு செயலர் ஜேம்ஸ் பார்டல் கொடுத்த அறிக்கைக்கு பைர்ன்ஸ் விடையிறுக்கையில், "ஜனாதிபதியின் கருத்துக்கள் மாறியிருக்கக் கூடும்; எப்படியும் அது என்னுடைய கருத்து அல்ல" என்றார்.

ஜப்பான் சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு கொண்டு, நடுநிலை சக்தியோ அல்லது அமெரிக்கா மூலமாக இல்லாமல், சோவியத் ஒன்றியத்தின் மூலம் சமாதானத்தை நாடக்கூடும் என்ற கவலை ட்ரூமனுக்கும் பைர்ன்ஸுக்கும் இருந்தது. அமெரிக்கர்களால் ஒற்றறியப்பட்ட ஜப்பானியர்களிடம் இருந்து வெளிவந்த தகவல்களில் இந்தக் கவலைகள்தான் கூடுதலாக இருந்தன. உதாராணமாக ஜப்பானிய தகவல் ஒன்று, அமெரிக்கரால் ஒற்றுமுறையில் அறியப்பட்டதை, தூதரகச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது: "ஜூலை 11 அன்று ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டோகோ சோவியத் ஒன்றியத்தின் தூதருக்கு "மிக அவசரம்" என்ற கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியுள்ளார். "உள்நாட்டிலும், வெளியிலும் ஜப்பான் எதிர்கொண்டுள்ள அழுத்தமான நிலைமையை ஒட்டி போரை நிறுத்திவிடலாமா என்ற கருத்தை இரகசியமாக ஆராய்ந்து வருகிறோம்.

எனவே நீங்கள் மோலட்டோவிடம் (சோவியத் வெளியுறவு அமைச்சர்) பேசும்போது ரஷ்யாவிற்கும் ஜப்பானுக்கும் உறவுகள் மறு சீரடையவேண்டும் என்று சொல்லுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டாம்; எந்த அளவிற்கு ரஷ்ய செல்வாக்கை பயன்படுத்தி போரை நிறுத்த முடியும் என்பது பற்றியும் நீங்கள் அவரிடம் விவாதிக்கவேண்டும்." இத்தகவலில், ரஷ்ய படையெடுப்பை தடுப்பதற்காக, ரஷ்யாவிற்கு நிறைய சலுகைகளை ஜப்பான் அளிக்கத் தயாராக இருந்தையும் குறிப்பிட்டது. இக்காலக்கட்டத்தில் சோவியத் படையெடுப்பை தவிர்க்க முடியும் என்று ஜப்பான் இன்னும் நம்பியிருந்தது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பைர்ன்ஸின் உதவியாளர் வால்டர் பிரெளன் தன்னுடைய ஜூலை 24 நாட்குறிப்பில் எழுதியது முக்கியத்துவம் வாய்ந்தது; இதில், "JFB (பைர்ன்ஸ்) இன்னும் சற்று கால அவகாசத்தை எதிர்பார்க்கிறார்; அணுகுண்டிற்கு பின்னர் ஜப்பான் சரணடையும் என்றும், ரஷ்யாவிற்கு இதில் அதிக பங்கு இருக்காது என்றும், அதையொட்டி சீனாவில் கூடுதலான நன்மைகளை அது கோரமுடியாமற் போகலாம்" என்று குறிப்படிப்பட்டுள்ளது. பின்பு ஆகஸ்ட் 3ம் தேதி, ஹிரோஷிமா தாக்குதலுக்கு மூன்று நாட்கள் முன்பு பிரெளன் எழுதுகிறார்: "கப்பலில் அகஸ்டா/ ஜனாதிபதி, லேய்தி, JFB (பைர்ன்ஸ்) இருவரும் ஜப்பான் சமாதனத்தை விழைகிறது என்பதில் உடன்பட்டனர் ...ஜனாதிபதி, ஸ்வீடன் போன்ற சில நாடு மூலம் இல்லாமல் ரஷ்யா மூலம் ஜப்பானியர்கள் அதை நாடுவரோ என அஞ்சினார்."

இத்தகைய மற்றும் இதுபோன்ற ஆவணங்கள் பலவும், அமெரிக்க தலைவர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு சாதகமான நிலையில் போர் முடியக் கூடாது என்ற கவலை கொண்டிருந்ததை தெளிவாக்குகின்றன;

மேலும் ஜப்பான் வெகு விரைவில் சமாதானத்தை நாட உள்ளது என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். The Decision to Use the Action Bomb என்ற தன்னுடைய நூலில் Gar Alperpvitz ஜப்பானிய சரணாகதியில் "இரு நிலை" வகையொன்றைத்தான் நம்பிக்கையுடன் பார்க்கிறார். அவருடைய கருத்தின்படி, இறுதியில் ஆகஸ்ட் 8 நடந்த சோவியத் படையெடுப்பு ஜப்பானிய பேரரசரின் நிலை அச்சுறுத்தலுக்காளாக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்துடன் இணைந்தது, இரண்டும் அமெரிக்கப்படையெடுப்போ அணுக்குண்டுப் பயன்பாடோ இன்றி போரை முடிவிற்குக் கொண்டு வந்திருக்கும்.

உண்மையில் ஒரு கூட்டு உளவுத் துறைக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 29, 1945ல் படைக் கூட்டுத் தலைவர்கள் குழுவிற்கு கொடுத்திருந்த அறிக்கையின் முடிவுரையும் இதேதான் ஆகாயவழி-கடல்வழி ஆகியவை முற்றுகைக்குட்பட்டதால் கூடுதலாகப் பெருகியுள்ள விளைவுகள், மூலோபாய குண்டுவீச்சினால் பெருகிய முறையில் குவிந்துவிட்ட பேரழிவு, ஜேர்மனியின் சரிவினால் (படைகளை செலுத்துவதில் ஏற்படும் உட்குறிப்புக்களின் விளைவு) அனைத்துமே இந்த ஆண்டிற்குள் முழுமையான தோல்வி ஏற்பட்டுவிடும் என்பதை தவிர்க்க முடியாததாக ஜப்பானுக்கு ஆக்கிவிட்டது. ...

சோவியத் ஒன்றியம் போரில் நுழைந்தது, மற்றும் மேற்கூறிய காரணங்களோடு சேர்ந்தது அனைத்துமே பெரும்பாலான ஜப்பானியர்களிடையே முழுமையான தோல்வியை தவிர்க்க இயலாது என்ற உறுதியை ஏற்படுத்திவிட்டது. ஜப்பானிய மக்களும், அவர்களின் தலைவர்களும் முழுமையான தோல்வி தவிர்க்க முடியாது, மற்றும் நிபந்தனையற்ற சரண் என்பது தேசத்தை அழித்துவிடும் என்று பொருள்கொள்ளாது (அதாவது பேரரசர் நீக்கப்படுவார் என்பதை), சரணாகதி அடைவது நம்பத்தக்க வகையில் விரைவில் தொடரும் என்று இணங்கத்தலைப்பட்டனர்."

பைர்ன்ஸின் கண்காணிப்பில், ஜப்பானுக்கு நிபந்தனையற்ற சரண் அடையுமாறு கொடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையான போட்ஸ்டாம் பிரகடனத்தில் பேரரசர் பற்றிய உறுதிமொழி கொடுக்கப்பட மாட்டாது என்ற வகையில் சொற்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் சோவியத் ஒன்றியத்தை பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு அழைக்கவில்லை.

ஒரு புறத்தில், அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களுடைய தனிப்பாதையையே ஒரு ஜப்பானிய சரணுக்காக கொண்டனர் என்பது தெளிவாக்கப்பட்டது. மறுபுறத்தில், சோவியத் படையெடுப்பு என்ற அச்சுறுத்தல் தெளிவற்ற முறையில் பயன்படுத்தவும் பட்டது; இது ஜப்பானிய நம்பிக்கையான சோவியத் மத்தியஸ்தத்திற்கும் இடமளித்தது. இது ஜப்பான் பிரகடனத்தை நிராகரிப்பதை உறுதியாக்கி, அணுகுண்டு வீச்சு பயன்பாட்டிற்கு வகை செய்துவிட்டது.

மேலும், ஜப்பான் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு என்பது நவம்பர் மாதம்தான் திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்க அரசாங்கம் ஆக்கிரமிப்பின் அவசியத்தை தவிர்ப்பதற்கு பிரதானமாக அணுகுண்டை பயன்படுத்தினால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னரே ஏன் ட்ரூமன் இன்னும் கூடுதலாக தாமதிக்கவில்லை என்பதை விளக்குவது கடினம்; அதிலும் அந்த நேரத்தில் ஜப்பானில் பெரும் ஆபத்திற்கு உட்பட்டிருந்த நிலை இருந்தது என்பதை நிறைய உளவுத் துறைகள் காட்டியிருந்தன.

அதாவது ஹிரோஷிமாவில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டு அதற்கு விடையிறுப்பதற்கு ஜப்பானியருக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுவதற்கு முன்னரே, ஏன் அவ்வளவு விரைவில், இரண்டாவது குண்டும் வீசப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது. மீண்டும் சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பு மைய பிரச்சினையாகும். நாகசாகியின்மீது நிகழ்ந்த குண்டுவீச்சு சோவியத் ஒன்றியம் படையெடுப்பை மேற்கொண்ட மறு நாள் நிகழ்ந்தது.

மேலும் Alperovitz குறிப்பிடுகிறார்: "ருமேனியா, பல்கேரியா மற்றும் ஹங்கரி ஆகியவை 'எந்த ஒரு வல்லரசின் செல்வாக்கு மண்டலமாக இருக்காது' என்று ஆகஸ்ட் 9 அன்று, அதாவது, நாகசாகியில் குண்டுவீசப்பட்ட அன்று ட்ரூமன் அறிவித்தார்."

சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு கிழக்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் குறைக்கப்படுவது அமெரிக்காவின் உடனடி அக்கறைகளுடன் இணைந்து, போர் முடிவிற்கு வந்த பின்னர் அமெரிக்காவில் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவது ட்ரூமன் நிர்வாகத்தின் பொது நோக்கமாக இருந்தது. வரலாற்று ஆசிரியர் தோமஸ் மக்கோர்மிக் இதைப் பற்றி எழுதும்பொழுது நன்கு தொகுத்துக் கூறுவதாவது: "கண்கூசவைக்கும் இரண்டு ஒளிவீச்சுக்களில், ஒரு கொடூரமான வகையில் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டிருந்த போர் கொடூரமான முறையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதும், அமெரிக்க மேலாதிக்கம் செலுத்துவதற்கு கதவு திறக்கும் சேர்க்கையை இறுதியில் அமெரிக்கா கண்டுகொண்டது."

இந்த மேலாதிக்க இலக்கை அடைவதற்கு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை தியாகம் செய்யவேண்டியது கட்டாயமாயிற்று. மக்கோர்மிக் குறிப்பிடுகிறார்: "சில விஞ்ஞானிகள் பரிந்துரைத்தபடி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, மக்கள் இல்லாத இடத்தில் இந்த வெடிப்பு இலக்கை கொண்டிருந்தால், இந்த விளைவு வந்திருக்காது. அது குண்டின் சக்தியை நிரூபித்திருக்குமே ஒழிய அந்தக் கொடும் சக்தியை அமெரிக்கா செலுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்காது. 1945 கோடைகால மத்தியில் ஜப்பானிய அமைதியை வேண்டுவோரை அமெரிக்கர் தொடர விரும்பாததின் காரணம் அணு குண்டை உபயோகிக்க ஒரு வாய்ப்பை பெறாமல் அது போரை நிறுத்த விரும்பவில்லை."

அமெரிக்க மக்களிடையே, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அப்பட்டமான இரக்கமற்ற தன்மை பற்றி குறிப்பாக இரண்டாம் உலகப் போர் தொடர்பானதில் ஒருவகையான அனுபவமின்மைதான் இருந்தது. அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் அரசியல் நிறுவனங்களால் இப்போர் ஜனநாயகத்திற்கான பெரும் போர், பாசிசம் மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான போர் என்று நீண்டகாலமாக வர்ணிக்கப்பட்டிருந்தன. உண்மையில் அமெரிக்கா போரில் இறங்கியதற்கு முக்கிய காரணம், போரை தொடர்ந்து நடத்துவதில் அதன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பின்னே கிடக்கும் உந்துதல், எவராலும் சவால்செய்ய முடியாத மற்றும் மேலாதிக்க உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும். இந்த இலக்கை அடைவதற்கு நூறாயிரக்கணக்கான ஜப்பானிய உயிர்கள் குறைவான முக்கியத்துவத்தைப் பெற்றன.

குறிப்புக்கள்
[1]. ஓர் அமெரிக்க படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருந்தால் எத்தனை அமெரிக்க துருப்புக்கள் உயிரிழந்திருப்பர் என்ற புள்ளிவிவரம், போர் முடிந்த பின் கொடுக்கப்பட்டது, முற்றிலும் கற்பனையானது; குண்டுவீச்சை நியாயப்படுத்துவதற்குப் பின்னால் பெரிதும் புனையப்பட்டது. இப்பிரச்சினை பற்றி இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்படமாட்டாது; ஆனால் இதைப் பற்றிய பகுப்பாய்வு பார்டன் பேர்ன்ஸ்டீனின் கட்டுரையான "A Postwar myth: 500,000 US lives saved in Hiroshima's Shadow" வில் காணலாம்; அது Kai Birdமற்றும் Lawrence Lifschultz ஆல் எழுதப்பட்டது, The Pamhleteer's Press, Stony Creeek, Connecticutnf 1998 ல் பதிப்பிக்கப்பட்டது.

[2] டோக்கியோவில் தீக்குண்டுவீச்சு பற்றி ஒரு வரலாற்றாசிரியர் எழுதியுள்ளதாவது: "ஜப்பானிய தலைநகரை முதலில் அடைந்த விமானங்கள் நெருப்புகளை மூட்டும் குண்டுகளை முதலில் தூவின; இவை பின்னர் வந்த விமானங்களுக்கு எவை இலக்குகள் என்பதை நன்கு தெளிவுறுத்தின. இந்த இலக்குப் பகுதியில் த



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக