ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...

3 posters

Go down

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்... Empty மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...

Post by முஹைதீன் Sun Oct 16, 2011 12:49 pm

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இந்த பதிவு தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை. வோட்டு பட்டையும் தூக்கப்பட்டுள்ளது. தமிழ்மண நிர்வாகி ஒருவரின் கருத்து இஸ்லாமிய முகமனை கேலிச் செய்வதாக இருப்பதால் அது குறித்து முஸ்லிம்கள் சார்பாக தமிழ்மணத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தமிழ்மண நிர்வாகிகளின் விளக்கம் வரும்வரை இந்த பதிவு தமிழ்மணத்தில் சேர்க்கப்படாது. யாரும் சேர்த்துவிடவும் வேண்டாம்.

----------------
தமிழினம் மீதான இலங்கை இராணுவத்தின் போர்க்கொடுமைகளை வெளிக்கொண்டு வந்த பிரபல ஊடகமான சேனல் 4, தன்னுடைய ஆவணப்படம் ஒன்றிற்கு வைத்த தலைப்பு தான் நீங்கள் மேலே காணுவது.
---------------

1904-ஆம் ஆண்டு. உலகின் மிகப்பெரிய கண்காட்சி ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரம். இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சி, இன்டர்நெட் வாயிலாக நாம் கண்டுவிடுகின்றோம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாத போது, இம்மாதிரியான கண்காட்சிகள் தான் உலக நடப்புகளை அறிந்துக்கொள்ளும் இடங்களாக அமைந்தன.

உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகள், விவசாய யுக்திகள் என்று அனைத்தையும் ஒருசேர கண்டுகளிக்கும் இடங்களான திகழ்ந்தன இந்த கண்காட்சிகள். இதுப் போன்ற ஒரு பிரமாண்டமான கண்காட்சிக்கு தான் தயாராகிக் கொண்டிருந்தது செயின்ட் லூயிஸ் நகரம்.

அதெல்லாம் சரி.........விலங்குகளை, கண்டுபிடிப்புகளை, யுக்திகளை காட்சிக்கு வைக்கின்றார்கள்...ஓகே....

மனிதர்களை காட்சிக்கு வைத்தால்?????

வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற பரிணாமக் கருத்தை நிரூபிக்க உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு இனத்தவரை அழைத்து வந்து காட்சிக்கு வைத்து, தாங்களே சிறந்தவர்கள் என்று நிரூபிக்க முற்பட்டால்??

ஆம். கேட்கவே கொடூரமாக இருக்கும் இதுப்போன்ற செயல்களை தான் அரங்கேற்றி காட்டியது அந்த கண்காட்சி. ஐரோப்பாவின் பெரிய நகரங்களில் இதுப்போன்ற கண்காட்சிகள் ஏற்கனவே நடைப்பெற்றிருக்கின்றன என்றாலும், பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் மனித இனத்தவரை அதிகமாக காட்சிக்கு வைத்தது இந்த கண்காட்சியில் தான்.

மனிதனின் உடல், உள்ளம் மற்றும் கலாச்சாரம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்யும் துறைக்கு மானிடவியல் (Anthropology) என்று பெயர். இந்த துறையைச் சார்ந்தவர்களை மானிடவியலாளர் என்பார்கள்.

செயின்ட் லூயிஸ் கண்காட்சியின் மானிடவியல் துறையின் தலைவராக இருந்தவர் ஜான் மெக்கீ (John Mcgee) என்ற பிரபல மானிடவியலாளர். இவர் அமெரிக்க மானிடவியல் சங்கத்திற்கும் அப்போது தலைவராக இருந்தார்.

இவர் தான் நாம் மேலே பார்த்த கொடுமைகளுக்கு பின்னணியில் செயல்பட்டவர். வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வினின் கருத்தை இந்த கண்காட்சி வாயிலாக நிரூபித்துவிட வேண்டும் என்பதே இந்த விஞ்ஞானியின் நோக்கம். அதற்கு அவர் செய்த ஏற்பாடு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் இனத்தவரை இந்த கண்காட்சிக்கு அழைத்துவருவது, அவர்களது நடவடிக்கைகளை செயல்முறையாக காட்டி, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வீனிய கோட்பாட்டை நிரூபிப்பது.

தன்னுடைய இந்த எண்ணத்தை நிறைவேற்ற செயல்முறையில் இறங்கினார் மெக்கீ. தென் அமெரிக்க பழங்குடியினத்தவர், வட அமெரிக்காவின் பூர்வகுடிமக்கள், எஸ்கிமோக்கள் என்று பல இனத்தவர் இவருடைய லிஸ்ட்டில் இருந்தார்கள். அவர்களை அழைத்துவர குழுக்களை அனுப்பினார் மெக்கீ.

நீங்கள் மேலே பார்த்த இனத்தவரையெல்லாம் விட, மெக்கீ ஆர்வமுடன் எதிர்பார்த்த ஒரு இனம், மத்திய ஆப்பிரிக்காவின் பிக்மீக்கள் (Pygmy).

பிக்மீக்கள் - இவர்கள் சராசரி மனிதர்களை விட உயரம் குறைந்தவர்கள். சுருட்டலான முடியும், மிக கருமையான நிறமும் கொண்டவர்கள். மத்திய ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர்.

இவர்களை கண்காட்சியில் வைக்க ஏன் அவ்வளவு ஆர்வப்பட்டார் மெக்கீ என்பதை இந்நேரம் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். பிக்மீக்களை கொண்டு வரும் பொறுப்பை, பயண ஆராய்ச்சிகளில் (Explorer) சிறந்தவராக கருதப்பட்ட சாமுவேல் வெர்னெரிடம் (Samuel Verner) ஒப்படைத்தார் மெக்கீ.

மத்திய ஆப்பிரிக்கா நோக்கிய தன்னுடைய கடல்வழி பயணத்தை தொடங்கினார் வெர்னெர்.

--------------------------

ஓடா பெங்கா:

அதே காலக்கட்டம். மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாடு.

அப்போது பெல்ஜியம் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது காங்கோ. இந்நாட்டின் காங்கோ ஆற்றையொட்டிய காட்டுப்பகுதிகளில் அதிகளவில் வசித்து வந்தனர் பிக்மீக்கள். திடீரென இவர்கள் மீது படையெடுத்தனர் பெல்ஜியம் மன்னரின் படைகள். இதற்கு காரணம், பிக்மீக்கள் இருந்த பகுதியில் உள்ள ரப்பர் மரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெல்ஜியம் மன்னர் எண்ணியதே ஆகும்.

பிக்மீக்கள் துடைத்தெரியப்பட்டனர்.

வேட்டைக்கு சென்று விட்டு தன் இருப்பிடத்துக்கு திரும்பிய ஓடா பெங்கா (Ota Benga) என்ற பெயருடைய பிக்மீக்கு மிகுந்த அதிர்ச்சி. தன்னுடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் இந்த அசம்பாவிதத்தில் இழந்திருந்தார் பெங்கா. தன்னுடைய இனம் துடைத்தெரியப்பட்டிருப்பதை முழுவதுமாக அறிந்துக் கொள்வதற்குள் மற்றொரு பழங்குடியினத்தவரிடம் சிக்கிக்கொண்டார்.

அவர்கள் பென்காவை கூண்டில் அடைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகினர்.

---------------------------

பிக்மீக்களை தேடி காங்கோ ஆற்றில் வந்துக்கொண்டிருந்தார் வெர்னெர். ஆற்றின் ஒரு பகுதியில் வெர்னெரின் நீராவிப் படகு பழுதடைந்தது. உதிரிப்பாகங்கள் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேலாகுமென சொல்லப்பட, அந்த இடத்திலிருந்து இறங்கி ஆற்றையொட்டிய காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார் வெர்னெர்.

ஆஹா...அவர் எதிர்ப்பார்த்து வந்த விசயம் கிடைத்துவிட்டது. ஆம், கூண்டில் அடைக்கப்படிருந்த பெங்காவை பார்த்தார் வெர்னெர். பரவசமடைந்தார்.

பெங்காவை கூண்டில் அடைத்தவர்களிடம் பேசி, பணய பொருட்களை கொடுத்து பெங்காவை விடுதலை செய்தார். பிக்மீக்கள் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால், அவர்களுடைய மொழியையும் அறிந்திருந்தார் வெர்னெர். தன்னுடன் வரவேண்டுமென்று பெங்காவிடம் அவர் சொல்ல, இங்கே இந்த பழங்குடியினருடன் இருந்து வேதனைகளை அனுபவிப்பதைவிட வெர்னருடன் செல்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார் ஓடா பெங்கா.

தன்னுடைய இந்த முடிவு, உலகின் கோரமான ஒரு நிகழ்வுக்கு காரணமாக இருக்கப்போகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை அந்த அப்பாவி.

பின்பு, வேறு இடங்களில் இருந்த சில பிக்மீக்களை பெங்காவின் உதவிக்கொண்டு சம்மதிக்க வைத்து அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு பயணத்தை தொடங்கினார் வெர்னெர்.

செயின்ட் லூயிஸ் உலக கண்காட்சி:

வெர்னரின் நீராவிப் படகு பிக்மீக்களுக்கு முதல் ஆச்சர்யத்தை தந்தது. நீராவிப் படகு எப்படி வேலை செய்கின்றது என்று அவர்களுக்கு விளக்கினார் வெர்னெர். அமெரிக்காவை அடைந்தவுடன், உயர உயரமான கட்டிடங்களும் தொழில்நுட்ப விசயங்களும் பிக்மீக்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றன.

தான் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவை அடைந்தவுடன், பிக்மீக்களை ரயிலில் ஏற்றி செயின்ட் லூயிஸ் நகருக்கு அனுப்பிவைத்து விட்டார் வெர்னெர்.

கண்காட்சியில் இவர்கள் காட்சிக்காக வைக்கப்பட, மானிடவியல் ஆய்வாளரான மெக்கீ, தன்னுடைய எண்ணம் நிறைவேறியதை எண்ணி ஆனந்தப்பட்டார். கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் பிக்மீக்கள். அதிலும் குறிப்பாக ஓடா பெங்காவின் மீது பலரின் பார்வையும் விழுந்தது. அதற்கு காரணம் அவரது பற்கள் தான். தன்னுடைய கலாச்சாரத்தின்படி சிறு வயதிலேயே தன்னுடைய பற்களை கூர்திட்டி இருந்தார் பெங்கா.

கண்காட்சியின் நாட்கள் செல்ல செல்ல, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்று இவர்களை காட்டி தன்னுடைய பரிணாம எண்ணங்களை மக்களுக்குள் வலுவாக விதைத்தார் மெக்கீ. அறிவியல்ரீதியாக வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக மகிழ்ந்துக்கொண்டார்.

ஏழு மாத காலம் நடந்த இந்த கண்காட்சியை, சுமார் இரண்டு கோடி மக்கள் வரை பார்த்ததாக குறிப்பிடும் சேனல் 4, அவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை அறிவியல்ரீதியாக இந்த கண்காட்சி நிரூபித்து காட்டிவிட்டதாக எண்ணினர் என்றும் கூறுகின்றது.

பிக்மீக்கள் அறிவில் குறைந்தவர்கள் என்ற வாதம் முட்டாள்தனமானது. ஏனென்றால், அவர்கள் இருந்த சூழ்நிலைகேற்ப அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவர்களுடன் அதிக காலம் கழித்த வெர்னெர், இவர்கள் மனிதர்களை காட்டிலும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கண்காட்சியில் இவர்களின் சில நடவடிக்கைகளை விரும்பவில்லை மெக்கீ. ஏனென்றால் அவை புத்திசாலித்தனமாக, வெள்ளையர்களின் நடவடிக்கைகளுக்கு நிகராக இருந்தது. ஆக, பிக்மீக்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிவியல் அடிப்படையில் இனவெறியை நியாயப்படுத்த திட்டமிடப்பட்ட சதியே அன்றி வேறேதும் இல்லை.

மலேரியாவில் இருந்து விடுபட்டு செயின்ட் லூயிஸ் நகருக்கு வந்த வெர்னெர், தான் அழைத்து வந்த பிக்மீக்கள் சிறைவாசிகள் போல நடத்தப்படுவதை உணர்ந்துக்கொண்டார்.

கண்காட்சி முடிந்தது. தன்னுடைய வாக்குறுதிக்கேற்ப பிக்மீக்களை மறுபடியும் ஆப்பிரிக்காவில் சென்று விட்டு விட்டார் வெர்னெர்.

தன்னுடைய இனம் அரசப்படையால் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதை கண்டார் ஓடா பெங்கா. பிறகு, வேறொரு இனத்திலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து கொண்டார். அந்த பெண் பாம்பு கடித்து இறக்க, பெங்கா மீது பேய் இருப்பதாக கூறி அவரை நிராகரித்த்தனர் அந்த இனத்தினர். தன்னை அனைவரும் ஒதுக்குகின்றனர் என்று வேதனை அடைந்த பெங்கா, தன்னை மறுபடியும் அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல சொல்லி வெர்னரிடம் கேட்டுக்கொண்டார்.

முதலில் மறுத்த வெர்னர், பின்னர் ஒப்புக்கொண்டார். மறுபடியும் அமெரிக்காவிற்கு பயணமாகினர். இந்த முறை அமெரிக்காவின் நியூயார்க்.

தான் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்திருந்த கைவினை பொருட்களை நியூயார்க் அருங்காட்சியகத்தில் விற்க முயன்றார் வெர்னெர். ஆனால், அவருடைய பொருட்களை வாங்க மறுத்துவிட்டது அருங்காட்சியகம். இதனால் விரக்தியடைந்த வெர்னெர், ஓடா பெங்காவை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, பொருளாதார உதவி நாடி தன் குடும்பத்தினரை சந்திக்க சென்று விட்டார்.

மிக மிக கேவலமான, கேட்பவர் உள்ளங்களை கொதிப்படைய செய்யும் நிகழ்வுகள் நடந்தேற ஆரம்பித்தன.

பரிணாமக் கோட்பாடு மறுபடியும் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்தது.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலை:

அருங்காட்சிகத்தில் ஓடா பெங்கா இருக்கும் செய்தி, நியூயார்கின் ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலையின் (Bronx Zoo) டைரக்டரான வில்லியம் ஹார்னடேவிற்கு (William Hornaday) எட்டியது.

ஹார்னடேவும், அமெரிக்க உயிரியல் கழகத்தின் செயலாளருமான மாடிசன் கிரான்ட்டும் (Madison Grant) சேர்ந்து ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டினார்கள். அதாவது, டார்வினின் பரிணாம கோட்பாட்டை நிரூபிக்கும் ஆதாரமாக பெங்காவை காட்ட தீர்மானித்தார்கள்.

டார்வினின் கூற்றுப்படி, குரங்(கு போன்ற ஒன்றிலிருந்து)கிலிருந்து வந்தவன் மனிதன். அதாவது, குரங்கு போன்ற உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக மாறி பின்னர் மனிதன் வந்தான் என்பது டார்வினின் கருத்து.

டார்வினின் இந்த கூற்றை தான் நிரூபிக்க முயன்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும். குரங்கிற்கும், மனிதனிற்கும் இடைப்பட்ட இனமாக (Missing link) பெங்காவை காட்ட தீர்மானித்தனர்.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலைக்கு பெங்காவை அழைத்து சென்றனர். Zoo-வில் உள்ள யானைகளை நிர்வகிக்க தான் (யானைகளை அடக்குவதில் கில்லாடிகள் பிக்மீக்கள்) தன்னை அழைத்து செல்கின்றார்கள் என்று நினைத்தார் பெங்கா. ஆனால், ஒரு ஆதாரமற்ற கோட்பாட்டை நிரூபிப்பதற்காக அவருடைய இனத்தை கேவலப்படுத்த போகின்றனர் என்பது தெரியவில்லை அவருக்கு.

1908-ஆம் ஆண்டு, செப்டெம்பர் 8-ஆம் தேதி அந்த கொடூரமான சம்பவம் நடந்தது. மிருகக்காட்சி சாலையின் குரங்குகள் கூண்டில், குரங்குகளுடன் அடைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டார் பெங்கா. அந்த கூண்டிற்கு மேலே இருந்த விளம்பரப் பலகை இவரை "Missing Link" என்று சொல்லியது.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு குறிப்பு எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டுவார்களே, அதுபோல பெங்காவை பற்றி எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டியிருந்தார்கள். ஒவ்வொரு நாளின் மதியமும் பெங்காவை பார்க்கலாமென்றும் அந்த பலகையில் எழுதியிருந்தது.

என்ன கொடுமை இது?...ஒரு மனிதனை இன்னொரு சக மனிதன் இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது. இனவெறியின் உச்சக்கட்டம். பின்னணியில் பரிணாமக் கோட்பாடு. தடுப்பதற்கு யாரும் இல்லை. ஏனென்றால், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அறிவியலே சொல்லிவிட்டதல்லாவா??

பார்க்கவரும் மக்களை நோக்கி தன்னுடைய வில் அம்பை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டார் பெங்கா. தன்னுடைய ஊஞ்சற் படுக்கையை அந்த கூண்டிலேயே பயன்படுத்த உற்சாகப்படுத்தப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்துக்கொண்டு உலாவ ஊக்குவிக்கப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்தவாறு இவர் நிற்கும் காட்சி பார்ப்பவர் உள்ளங்களை துளைப்பதாக உள்ளது.


மக்கள் மத்தியில் மிக பிரபலமானது இந்த நிகழ்வு. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் போது (Sep 16, 1908), சுமார் 40,000 மக்கள் பெங்காவை பார்த்து சென்றிருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பார்க்கவரும் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கின்றார் பெங்கா. சமயங்களில் ஆத்திரத்துடன் மக்களை நோக்கி தன் அம்பை எறிவாராம்.

இந்த நிகழ்ச்சி அமெரிக்க கறுப்பின மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது. கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். தாங்கள் ஏற்கனவே சமூகத்தால் கீழ்த்தரமாக நடத்தப்படும்போது, குரங்குகளுடன் தங்கள் இனத்தவரை அடைத்து வைத்து மேலும் கேவலப்படுத்த வேண்டுமா என்று கொந்தளித்தனர். ஆனால் இவர்களின் நியாயக்குரலை காதுக் கொடுத்து கேட்க (ஆரம்பத்தில்) முன்வரவில்லை நியூயார்க் நகரின் மேயர். ஏனென்றால், அறிவியலை தானே நிரூபிக்க முயல்கின்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும்?

பெங்காவின் இறுதி நாட்கள்:

மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு மிருகக்காட்சி சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார் பெங்கா. இரண்டு வார zoo வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் அனாதைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு கல்வி கொடுக்கப்பட்டார்.

ஆங்கிலம் பேசுவதற்கும், படிப்பதற்கும் கற்றுக்கொண்டார். மிருகக்காட்சி சாலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறக்க முடியாமல் தவித்தார். "நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம் பெங்கா.

ஆப்பிரிக்கா திரும்ப திட்டமிட்டார். அதற்காக வெற்றிலை தொழிற்சாலையில் வேலை செய்து பணம் சேர்த்தார். ஆனால், முதல் உலகப்போர் தொடங்கிவிட, அவரால் ஆப்பிரிக்காவிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் மன உளைச்சலடைந்த பெங்கா, 1916-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இனவெறியை நியாயப்படுத்தி மற்றொரு உயிரை பலிவாங்கிவிட்டது பரிணாமக் கோட்பாடு.

உலகம் மறந்து போயிருந்த இந்த அசிங்கமான இரகசியத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு (1992) வெளிக்கொண்டு வந்தார் வெர்னரின் பேரன். சில ஆண்டுகளுக்கு முன்பு (2009) இதுக்குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது சேனல் 4.

பெங்காவின் சோக வரலாற்றை கேட்கும் போது, இயல்பாகவே நம்முள் எழும் கேள்வி...இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா?

முடிவாக:

விடைபெறும் முன் இந்த செய்திகளையும் அறிந்துக்கொண்டு செல்லுங்கள்....

1. பெங்காவை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து வந்தாரே கிரான்ட்...அவருக்கும் ஹிட்லருக்கும் ஒரு இணைப்பு உண்டு.

கிரான்ட்டின் "The Passing Of The Great Race" என்ற புத்தகம் மிகப் பிரபலமான ஒன்று. இதில், வெள்ளையர்களை இயற்கை உயர்ந்த இனத்தவராக உருவாக்கியிருப்பதால் அவர்கள் தாழ்ந்த நிலை மனிதர்களோடு சேர்ந்து தங்களின் தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது என்று வாதாடினார் கிரான்ட். இந்த புத்தகம் ஜெர்மன் மொழியில் 1930-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட போது, இந்த புத்தகத்தை பாராட்டி கிராண்டிற்கு ஒரு கடிதம் வந்தது. எழுதியவர் வேறு யாருமல்ல, அடால்ப் ஹிட்லர். இந்த புத்தகத்தை தன்னுடைய பைபிள் என்று குறிப்பிட்டிருந்தார் ஹிட்லர்.

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் தானே ஹிட்லர்?? உயர்ந்த தன்னுடைய இனம், தாழ்ந்த இனத்தோடு சேர்ந்தால், இயற்கையின் ஆயிரமாயிர ஆண்டு கால உழைப்பு வீணாகிவிடும் என்று சொன்னவர் தானே அவர்?

2. இவ்வாண்டின் துவக்கத்தில் (Feb, 2011), Current Anthropology ஆய்விதழில் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை, ஆரம்ப கால மனிதர்களுக்கும் இக்கால மனிதர்களுக்கும் அதிக அளவில் வேறுபாடுகள் இல்லை என்று கூறியது. அதாவது, கற்கால மனிதர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்றும், பின்னர் வந்தவர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா, அது தவறென்று கூறியது அந்த ஆய்வுக்கட்டுரை. மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றானாம்.

3. இம்மாத துவக்கத்தில் (6th Oct 2011), Nature ஆய்விதழில் வெளிவந்த ஒரு புத்தக விமர்சனத்தில், Nature ஆய்விதழின் சீனியர் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாம படத்தை முட்டாள்தனமானது (tosh) என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, குரங்கிலிருந்து சிறுகச் சிறுக மனிதன் வருவதாக படம் பார்த்திருப்போமே, அந்த படத்தை தான் முட்டாள்தனமானது என்று குறிப்பிடுகின்றார் ஹென்றி ஜீ.



பரிணாம கோட்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், கூடிய விரைவில் முழுவதுமாக அது ஒழிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

My Sincere thanks to:
1. Channel 4.
2. Mail Online.
3. Phillips V. Bradford

References:
1. Caged in the human zoo: The shocking story of the young pygmy warrior put on show in a monkey house - and how he fuelled Hitler's twisted beliefs - Mail Online, 31st October 2009. link
2. The Human Zoo: Science's Dirty Secret - Channel 4 documentary. link.
3. The Human Zoo: Science's Dirty Secret (p1) - Youtube. link
4. Ota Benga (ca. 1883–1916) - Encyclopedia Virginia. link
5. Ota Benga: The Pygmy Who Was Caged in the Bronx Zoo's Monkey House - Environmental graffiti. link
6. The Scandal at the Zoo - The New York Times, 6th August 2006. link
7. Ota Benga’s Life in Africa, Capture, and Journey to America - Phillips V. Bradford. link
8. The Pygmy in the Zoo - concentric.net. link
9. Ota Benga - Wikipedia. link
10. Are Pygmies really human? - The Straight Dope, 20th Feb 2004. link
11. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 - Adolf Hitler
12. The Human Zoo:Science’s Dirty Secret - Channel 4 Pdf documents. link
13. Human Zoo, Pygmy peoples, Madisan Grant, William Temple Hornaday, Louisiana Purchase Exposition, John McGee, Bronx Zoo - Wikipedia.
14. Earliest humans not so different from us, research suggests - 14th Feb 2011, Physorg.com. link
15. Palaeoanthropology: Craniums with clout - Nature 478, 34 (06 October 2011) doi:10.1038/478034a. link
16. Henry Gee in Nature: “We know that, as a depiction of evolution, this line-up is tosh. Yet we cling to it.” - Uncommon Descent, 6th December 2011. link
17. Prejudices in ideas about human evolution - arn.org, 10th Oct, 2011. link


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்... Empty Re: மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...

Post by aathma Sun Oct 16, 2011 3:37 pm

மனதை ரணமாக்கும் ஒரு சரித்திர நிகழ்வை பற்றி அறியதந்தமைக்கு மிக்க நன்றிகள் நண்பரே நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்... Empty Re: மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...

Post by vasanthe2590 Sun Oct 16, 2011 8:22 pm

இன்று வரை இது தான் உண்மை என்று நம்பிய ஒரு உண்மையை தவறு என்று உணர்த்தி விட்டீர்ர்கள்.....


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்... Empty Re: மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum