ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

+8
நட்புடன்
முஹைதீன்
kitcha
உதயசுதா
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
இளமாறன்
ayyamperumal
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by ayyamperumal Sat Oct 15, 2011 4:53 pm

முன்னுரை
நாம் ஈழத்தமிழர்களுக்காக வருந்துகிறோம்.ஆஸ்திரேலியாவில்
இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதற்காக பொங்குகிறோம் . அமெரிக்காவில் பிள்ளையார் உருவப்படம் அவமதிக்க பட்டதற்காக போராடுகிறோம். சீனாவில் வெளியிட்டுள்ள வரைபடத்தில் , இந்திய எல்லைகள் சுருக்கப்பட்டிருப்பதற்காக கவலை படுகிறோம். இவ்வளவு ஏன் ? பல யுகங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இராமாயண இதிகாசத்தை படித்துவிட்டு ராமன் 14 வருடங்கள் வனவாசம் போய்விட்டானே என இன்றும் கூறுகிறோம். சிட்டிசன் திரைப்படம் பார்த்துவிட்டு அத்திப்பட்டி கிராம மக்களுக்காக அழுகிறோம் . ஆனால் சற்றேறத்தாழ 20 வருடங்களாக வனவாசம் அனுபவித்த வாச்சாத்தி கிராம மக்களின் ஓலம் நாம் கவனத்திற்கு வராமல் போனது ஏன் ? இன்னும் எத்துனை ஓலங்கள் இது போன்று ஒடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது ? எத்தனை சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நமக்கு சாபம் விட காத்து கொண்டிருக்கிறது ?

வாச்சாத்தி கிராமம் !

தர்மபுரி பகுதியில் உள்ள சித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் தான்
இந்த கிராமம் அமைந்துள்ளது. உழைத்து வாழக்கூடிய மக்கள் அவர்கள். அவர்களை பழங்குடி மக்கள் என்று கூறுகிறார்கள். வர வர நாட்டில் யார் யாரை பழங்குடிகள் என்று கூறுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. primary data collection செய்யாமல் secondary data களை மட்டும் வைத்து ஒருமனிதர் வாழ 32 ரூபாய் போதுமென்று கூறிய திட்ட குழுவும் அதை அமைத்த அரசாங்கமும்தான் பழங்குடி அரசாங்கம். வச்சாத்தி மக்களின் முற்போக்கு சிந்தனைகள் வேறு எந்த ஊர் மக்களுக்கும் இல்லை எனலாம். அவர்கள் நவீனமான நாகரீகம் உடைய மக்கள் . பழங்குடி மக்கள் அல்ல.

வாச்சாத்தியில் என்ன பிரச்சனை ?

சித்தேரி மலைபகுதியில் சந்தன மரங்கள் அதிகம். அரூர் மற்றும்
பாப்பிரெட்டிபட்டி வன அலுவலர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுகொண்டு அதனை விற்று வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது சட்டவிரோதம் என அறிந்த மக்கள் அச்செயலை செய்யாமல் ஒதுங்கியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பிரச்சனை முற்றவே வனத்துறை , வருவாய் துறை , காவல் துறை என மூன்று கூட்டுபடையும் சேர்ந்து சந்தன மரங்களை கடத்தி விற்ற கிராம்அ மக்களை விசாரிக்கக் சென்றிருக்கிறார்கள். இளைஞர்களை முதலிலேயே கைது செய்துவிட்டார்கள். எஞ்சியுள்ள பெரியவர்களையும் , பெண்களையும் , இளம் பெண்களையும் துன்புருத்தியிருக்கிரர்கள். அதில் 18 பெண்களை தேர்வு செய்து அரூர் கடத்தி சென்றிருக்கிறார்கள். செய்யவேண்டிய அக்கிரமங்களை எல்லாம் அந்த ஊரிலேயே செய்த பின்னும் ஒரு வாரம் கடத்தி வைத்து துன்புருத்தியிருக்கிறார்கள்.

CPI என்ன சொல்கிறது ?

1992 இல் நடந்த இந்த அட்டுழியத்தை அறிந்த அந்த பகுதி சட்ட மன்ற
உறுப்பினர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த அண்ணாமலை அந்த மக்களின் சார்பாக அரூர் காவல் நிலையத்தில் புகர் செய்திருக்கிறார். MLA கொடுத்த புகரையே ஏற்றுகொள்ள வில்லையாம். பின்புதான் மாநில பழங்குடி ஆணையத்தின் நேரடி விசாரணையில் நீதிமன்றம் வரை சென்றது.

15 ஆண்கள் , 28 குழந்தைகள்; 90 பெண்கள் என 133 பேர்மீது
வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது. சந்தன மரகடத்தல் , கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது கொலை முயற்ச்சி இன்னும் பிற வகைகளில் பதிவு செய்திருந்தார்கள். CPI விசாரித்து உண்மையை கூறியது. அதிகாரிகளின் ஆதிக்க போட்டியில் இந்த மக்கள் பாதிக்க பட்டுவிட்டார்கள். இந்த மக்களில் ஒருசிலர் தான் பணத்திற்காக அந்த செயலை செய்திருக்கிறார்கள். மற்றபடி இந்த சந்தன மர கடத்தலுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியது. மேலும் அந்த ௧௮ இளம் பெண்கள் அடைந்த சித்ரவதை உண்மையென உறுதிசெய்தது.

தீர்ப்பு என்ன ?


தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு
அளித்திருக்கிறது. 1992 இல் நடந்த பிரச்னைக்கு 2011 இல் தீர்ப்பு .
வனத்துறை, வருவாய்துறை , காவல் துறை என 269 அதிகாரிகளில் 54 பேர் உயிரிழந்தது போக எஞ்சியுள்ள 215 பெரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறியுள்ளது. அதில் 12 பேருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ; 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ,2000 ரூபாய் அபராதமும் ,; 70 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது. இந்த அபராத தொகையை பாதிக்க பட்ட18 பெண்களுக்கும் பகிர்ந்து கொடுக்க கூறியிருக்கிறது. ( எந்த அறிவுஜீவி , நீதிமான் தீர்ப்பு கூறினார் என தெரியவில்லை. )

நியாயமான தீர்ப்பா ?

அந்த மக்கள் மீது குற்றம் இல்லை என்பதை ஒத்துகொண்டதை தவிர
வேறு எந்த நியாமமும் இந்த தீர்ப்பில் இருப்பதாக நான் கருதவில்லை. 19 வருடங்களாக மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு வாழ்ந்த 18 பெண்களுக்கும் , அவர்களின் வேதனைக்கு தருகிற இடையீட்டு அளவு தலா ஒவ்வொருவருக்கும் 8000 ரூபாய் வரும் . அவர்களை இதைவிட கொடுமைபடுத்த முடியாது . சரி போகட்டும் நீதி மன்றத்தில் ஒரு அளவிற்கு மீறி அபராதம் விதிக்க முடியாது . அரசாங்கமும் , அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு என்ன செய்தது ?

வாச்சாத்தியும் அரசியல் கட்சிகளும் :


கலைஞர் அவர்களும் , ஜெயா அவர்களும், ராமதாஸ் அவர்களும் ,
வைகோ அவர்களும், இதை கண்டுகொள்ளவே இல்லை போல. கோபால புற கோமகனையும் , தைலாபுர தோட்டத்து மாங்கவையும் விட்டுவிடுவதை போல சிறுதாவூர் சீமாட்டியை விட்டுவிடமுடியாது. ஏனென்றால் 1992 லும் சரி அதன் தீர்ப்பு வந்திருக்கிற 2011லும் சரி இவர் தான் முதல்வர்.ஒருவேளை அந்த பெண்கள் அனுபவித்த இன்னல்கள் இவருக்கு பெரிதாய் தெரியவில்லை போல. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் யை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இவர்களுக்கு குரல் கொடுக்க வில்லை.

சபாஸ் இளைஞர்களே :

உடலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை அந்த கிராம
இளைஞர்களே திருமணம் செய்துகொண்டுள்ளர்கள். மேலும் அவர்களின் கோபம் முறைப்படுத்த பட்டு சரியான பாதையில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

முடிவுரை :

எது எப்படியோ, புராண காலத்தில் , அஸ்வமேத யாகம்
செய்வதாகட்டும், பின்பு நடந்த அரசர்களின் போர்களாகட்டும், இனகலவரங்கள் ஆகட்டும் , அதிகாரிகளின் அத்துமீறல்கள் ஆகட்டும் , எதுவாய் இருந்தாலும் பாதிக்க படுவது பெண்கள் தான். என்று இந்த நிலை மாறும். இன்னும் எத்துனை ஓலங்கள் இது போன்று ஒடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது? எத்தனை சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நமக்கு சாபம் விட காத்து கொண்டிருக்கிறது ?


Last edited by அய்யம் பெருமாள் .நா on Sat Oct 15, 2011 5:16 pm; edited 1 time in total


ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by இளமாறன் Sat Oct 15, 2011 5:08 pm

நீதி தேவதையின் கண் கட்டபட்டே இருக்கிறது ... நல்ல தீர்ப்பு ஏழைகளுக்கு எட்டாத கனியாகவே இருந்து வருகிறது என்பது மிகவும் வருத்தம் தரும் செயல் தான்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by கே. பாலா Sat Oct 15, 2011 8:23 pm

நியாயமான தீர்ப்பா? என்ற கேள்வி க்கு ....நியாயம் இல்லை என்ற பதில்தான் என்றாலும் ..!
இத்தனை ஆண்டு கழித்து இப்படி ஒரு தீர்ப்பை பெற்று தர உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டையும் ,
வழக்கை நடத்திய சி‌பி‌ஐ யும் பாராட்டுக்க் கூறியவர்கள் !
எவ்வளவு படித்தவனாக இருந்தாலும் ..."கூட்டத்தோடு" சேர்ந்து எந்த பாவமும் செய்வான் என்பதற்க்கு குற்றம்சாட்ட பட்டு , தண்டிக்கப்பட ..200 மேற்பட்டவர்களே சாட்சி ..
அன்று குற்றத்தை மறைக்க பாடுபட்ட , அன்று அமைச்சராக இருந்த செல்வகணபதி ...போன்றோர் இன்றும் செல்வாக்குடன் இருக்கிறார்கள் என்பது வேதனையான முரண் !

எல்லோரும் ஓர் நிறை...எல்லோரும் ஓர் விலை என்பதை ..இந்த நாடு என்று அடையுமோ என்ற ஏக்கமே மிஞ்சுகிறது..... நல்ல கட்டுரை ..நன்றி அய்யம்பெருமாள்!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 16, 2011 7:49 am

அய்யம் பெருமாள் .நா wrote:
சபாஸ் இளைஞர்களே :
]உடலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை அந்த கிராமஇளைஞர்களே திருமணம் செய்துகொண்டுள்ளர்கள். மேலும் அவர்களின் கோபம் முறைப்படுத்த பட்டு சரியான பாதையில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.
மிகவும் நல்ல செய்தி....நன்றி அய்யம் பெருமாள் அவர்களே :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by உதயசுதா Sun Oct 16, 2011 12:08 pm

இது தீர்ப்பு இல்லை.
இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட மற்றுமோர் அவமானம்.நமது நாட்டு சட்டம் எந்த அளவு கேவலமாக உள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு வழக்கு 19 வருடமாக நடைபெற்று இப்படி ஒரு கேவலமான ஒரு தீர்ப்பை சந்தித்து இருக்கிறது.
து தெறி போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்.


ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Uஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Dஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Aஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Yஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Aஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Sஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Uஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Dஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Hஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by kitcha Sun Oct 16, 2011 12:20 pm

சபாஸ் இளைஞர்களே :


உடலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை அந்த கிராம
இளைஞர்களே திருமணம் செய்துகொண்டுள்ளர்கள். மேலும் அவர்களின் கோபம் முறைப்படுத்த பட்டு சரியான பாதையில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

அந்த இளைஞர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

ஆனால் ஒடுக்கப் பட்டவர்கள் என்றும் ஒடுக்கப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நீதி என்பது சங்க காலங்களில் இருந்ததை இன்றுவரை புத்தகங்களில் தான் படிக்கிறோம்.இன்றும் அது புத்தகங்களிலே இருக்கிறது.
வெறும் வேதனையை பகிரத் தான் முடிகிறது நம்மால்
அப்படி நீதி தேவதையை இந்த மக்(கு)கள் நம்பினால்,அந்த தேவதை இந்த நாட்டை நல்ல மனிதர்கள் கையில் கொடுக்கட்டும்.

நல்ல கட்டுரையை பதிவு செய்தமைக்கு நன்றி - பெருமாள்
ஒடுக்கப் பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இளஞ்சிங்கம்,இளைய மாகாத்மா,சிந்தனைச் சிற்பி, இன்றைய சமுதாயத்தை மலரச் செய்யும் நாளைய ...........................பெருமாள் அவர்களுக்கு எல்லோரும் ஓட்டு போடுங்க


Last edited by kitcha on Sun Oct 16, 2011 12:22 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by முஹைதீன் Sun Oct 16, 2011 12:21 pm

மிக கேவலமான தீர்ப்பு எதுக்கு இவர்கள் நீதிபதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை வழக்குகள் எஞ்சி இருக்கின்றனவோ
உன்மயானா ஜனநாயகம் என்று மலருமோ
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by நட்புடன் Sun Oct 16, 2011 1:10 pm

அலைகள் ஓய்வதில்லை
ஓலங்களும் ஓயப் போவதில்லை
கழகங்களும் கலங்கப் போவதில்லை
அப்பாவி மக்கள்தான் கலங்கி கசங்கிப் போவார்கள்
தனிமனிதனுக்குள் பண்பாடு எனும் விருக்க்ஷம் வளராதிருந்தால்
சட்டங்களும் புத்தகங்களாவே இருந்துவிடும் அவலங்கள் பட்டங்களாக பறந்துவிடும்
இந்நிலை மாறிட மனித மனம் கண்டுபிடிக்கப் படல் வேண்டும் பின்னர் மாறிட துணிந்திட வேண்டும்
துணியாத மனதினை வேரறுத்து வகை செய்திட வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்...

சிந்திக்கத் தூண்டும் பதிப்பு பெருமாள் - சரி இது எப்படி உங்களுக்கு தோன்றியது? அதுவே ஆச்சரியம் தான்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by ayyamperumal Sun Oct 16, 2011 2:42 pm

கே. பாலா wrote:
எவ்வளவு படித்தவனாக இருந்தாலும் ..."கூட்டத்தோடு" சேர்ந்து எந்த பாவமும் செய்வான் என்பதற்க்கு குற்றம்சாட்ட பட்டு , தண்டிக்கப்பட ..200 மேற்பட்டவர்களே சாட்சி ..
அன்று குற்றத்தை மறைக்க பாடுபட்ட , அன்று அமைச்சராக இருந்த செல்வகணபதி ...போன்றோர் இன்றும் செல்வாக்குடன் இருக்கிறார்கள் என்பது வேதனையான முரண் !
உண்மைதான் பாலா சார், குஜராத்தில் கலவரம் செய்த மோடி கூட இன்று கொஞ்சம் பக்குவபட்டுவிட்டார் என்று பேசுகிறார்கள். ஆனால் தமிழ அரசியல் வாதிகள் இன்னமும் மாறவில்லை என்பது உண்மைதான்.

நன்றி !


ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by ayyamperumal Sun Oct 16, 2011 3:19 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:

மிகவும் நல்ல செய்தி....நன்றி அய்யம் பெருமாள் அவர்களே :வணக்கம்:

நன்றி அய்யா ! அந்த இளைஞர்கள் கொண்டுள்ள மன பக்குவம் என்னை வியப்பில் ஆழ்த்தியது !


ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Empty Re: ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum