ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பெற்றோருக்கான வழிகாட்டி கட்டுரை...1- டீ வி  - சரஸ்வதியின் சண்டாளன்....  Poll_c10பெற்றோருக்கான வழிகாட்டி கட்டுரை...1- டீ வி  - சரஸ்வதியின் சண்டாளன்....  Poll_m10பெற்றோருக்கான வழிகாட்டி கட்டுரை...1- டீ வி  - சரஸ்வதியின் சண்டாளன்....  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோருக்கான வழிகாட்டி கட்டுரை...1- டீ வி - சரஸ்வதியின் சண்டாளன்....

2 posters

Go down

பெற்றோருக்கான வழிகாட்டி கட்டுரை...1- டீ வி  - சரஸ்வதியின் சண்டாளன்....  Empty பெற்றோருக்கான வழிகாட்டி கட்டுரை...1- டீ வி - சரஸ்வதியின் சண்டாளன்....

Post by ஒட்டக்கூத்தன் Sat Oct 15, 2011 4:19 pm

இனியவர்களே! வணக்கம்.
வெற்றி என்பது வெளியில் மட்டும் தான் தேவையா?
சிறப்பாக பணியாற்றி அலுவலகத்தில் வெற்றி பெறுவது போல, நல்ல மனிதர் என்று நண்பர்களிடத்தில், சமுதாயத்தில் வெற்றி பெறுவது போல சிறந்த பெற்றோர்கள் என்ற வெற்றியும் நாம் பெறவேண்டியிருக்கிறது. இதுவே வீட்டிற்குள் நாம் பெறவேண்டிய வெற்றி.
சிறந்த பெற்றோர்கள் என்ற பட்டத்தை எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் பெறமுடியாது. அதை நம் குழந்தைகளிடம்தான் பெறமுடியும். அந்தப் பட்டத்தினைப் பெற நாம் படிக்க வேண்டிய சில விசயங்களை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்...
நம் குழந்தைகள் மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். தவிர, நாம் பாராட்ட வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் குழந்தைகளும் நம்மை பாராட்டுவதில்லை.
பாராட்டும்படி குழந்தைகளுக்காக பலவற்றை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பாராட்டு பெறாததற்கு காரணம், செய்யும் விதம்.
குழந்தைகளை வழி நடத்துகிறேன் பேர்வழி என்று பல நேரங்களில் நாம் உளியாக மாறி கொத்திவிடுகிறோம். தேவையில்லை. நாம் ஒளியாக மாறினால் போதும். வெளிச்சம் இருக்கிற இடத்தில் வழி நடத்த தேவையில்லை. சரி இப்போது முக்கியமான ஒரு விஷயத்தை நாம் அலச போகிறோம்.....அது என்ன தெரியுமா...? ஏதாவது ஒரு நாள் லீவு கிடைத்தாலே..நாம் குழந்தைகள் எங்கே போகிறார்கள்...? என்ன செய்கிறார்கள்..? விடுமுறையை கொண்டாடுவதற்கென்று தனித்தீவை அவர்களே கண்டுபிடித்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அதில் காணாமலும் போய், அவர்களே தனித்தீவு ஆகிவிடுகிறார்கள். தீவு என்றதும் ஏதோ ஓர் இடம் என நினைத்துவிடாதீர்கள். அது உங்கள் வீட்டில்தான் இருக்கிறது. அதற்கு பெயர் டி.வி.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கட்டுப்பாடுகளிலிருந்தும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. இனி நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டியதில்லை. எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம், சாப்பிடலாம், முக்கியமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் டி.வி. பார்க்கலாம் என்று டி.வி.க்குள் ஐக்கியமாகிவிடுகிறார்கள். ஐக்கியமாகிவிடுவார்கள் என்றால் கூப்பிடுவது கூட காதில் விழாது என்கிற அளவிற்கு.
மற்ற நாட்கள் என்றால், புத்தகத்தை எடுத்துப்படி என்று கூறி டி.வி.யை அணைத்து வைக்கலாம். ஆனால் இது விடுமுறை காலம் என்பதால் அந்த பிரம்மாஸ்திரம் எடுபடாது. வெற்றிக்கான வேலைகள் எவ்வளவோ இருக்கிறது. என்பதை உணர்த்த அவர்களை டி.வி.யில் இருந்து மீட்டெடுப்பதுதான் வீட்டிற்குள் நாம் பெறப்போகிற முதல் வெற்றி.
டெலிவிஷமா? டெலிவரமா?
டி.வி. அதிகம் பார்ப்பது சரியா? தவறா? என்று முதலில் பார்ப்போம். அப்போதுதான் குழந்தைகளுக்கு அதைப் பற்றி புரிய வைக்க முடியும்.
டெலி வரம்:
டி.வி. மட்டும் இல்லை என்றால் ஒரு தமிழன் ஆஸ்கார் பெறுகிற அதே தருணத்தில் அதைப் பார்த்து சிலிர்த்திருக்க முடியாது. உலகத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாது. பல துறைகளை பற்றியும் அதன் வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்திருக்க முடியாது. முக்கியமாக உலகத்தை நம் வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்திருக்க முடியாது.
டெலி விஷம்:
நம் மூளையை மழுங்கடிக்கும் ஒரு விஷயத்தை விஷமென்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு மிகச்சரியான உதாரணம் டி.வி.
டி.வி., மூளையின் செயல்திறனை குறைக்கிறது என்பதை கொஞ்சம் யோசித்தால் நீங்களே கூட புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் புத்தகம் படிக்கும்போது – அதில் உள்ள காட்சிகளை உங்கள் மனம் கற்பனை செய்யும். அதைப்பற்றி சிந்திக்கும். எனவே மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் டி.வி. பார்க்கும்போது நீங்கள் எதையும் கற்பனை செய்ய முடியாது. திரையில் வரும் காட்சிகளை அப்படியே பார்த்துக் கொண்டு இருப்பீர்கள். டி.வி. பார்த்து முடிக்கும்வரை உங்கள் மனம் மரத்து போயிருக்கும். அதனால்தான் இந்நிலை மனதின் பக்கவாதம் என்கிறார்கள்.
விளம்பர வலை:
கருத்துக் கணிப்பு ஒன்றின்படி ஆண்டொன்றிற்குள் 20,000 விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கிறார்கள். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம், கிட்டத்தட்ட விளம்பரத்தில் வரும் அனைத்தையுமே வாங்க ஆசைப் படுகிறார்கள்.
ஆசைக்கும் தேவைக்குமான இடைவெளி குறைந்து, காணும் அனைத்தையும் வாங்கத் துடிக்கும் மன அவசரத்தை டி.வி. ஏற்படுத்தி விடுகிறது. இதனால் குழந்தைகளின் மனமும் பெற்றோர்களின் பர்ஸும் காலியாகிவிடுகிறது.
டி.வி.யினால் ஏற்படும் பாதிப்புகள்:
மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். அதிக நேரம் டி.வி. பார்க்கும்போது எதையாவது கொறிக்கத் தோன்றுகிறது. என்ன சாப்பிடுகிறோம்? எவ்வளவு சாப்பிடுகிறோம்? என்கிற உணர்வே இல்லாமல் கொழுப்பு நிறைந்த தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் குண்டாகிறார்கள்.
டி.வி. பார்க்காத குழந்தைகளைவிட டி.வி. பார்க்கும் குழந்தைகளுக்கு பாடி மாஸ் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது என கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது உயரத்திற்கு ஏற்ற எடையை விட அதிகமாக இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
தேவைக்கு முன்பாகவே செக்ஸ் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்திவிடுவதால் உண்டாகும் மனப்பாதிப்புகள், அதிகநேரம் டி.வி. பார்ப்பதால் கண்ணெரிச்சல், உடல் சூடு அதிகரிப்பது என சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். டி.வி. டெலிவிஷமா? டெலிவரமா?
பாதிப்புகளை தெரிந்துகொள்வது மட்டுமே அதைவிட்டுவிட போதுமானதல்ல. சிகரெட் குடிக்கிற எல்லோருக்கும் அதன் தீமை தெரியும். பிறகேன் விடமுடியவில்லை? தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிற மன உறுதி இல்லை. அந்த மன உறுதியை குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் வளர்க்க இதை கூட்டு முயற்சியாக்குங்கள்.
கூட்டு முயற்சி:
நீங்கள் குழந்தைகளை கட்டுப்படுத்தி அப்போதுதான் டி.வி.யை அணைத்திருப்பீர்கள். வீட்டில் இருப்பவர்கள் வேறு யாராவது வந்து டி.வி.யில் உட்காருவார்கள். குழந்தைகள் மறுபடியும் டி.வி.க்கு வந்துவிடும்.
எனவே டி.வி.யை எப்படி பயன் படுத்துவது? என்பதை விவாதமாக்குங்கள்.
எல்லோரும் விவாதத்தில் ஆர்வமாக பங்கேற்க, யார் எல்லோரும் ஏற்றுக்கொள்கிற மாதிரி அதிகமான கருத்துக்கள் சொல்கிறார்களோ, அவர்களுக்கு பரிசு என்று முதலிலேயே அறிவித்துவிடுங்கள்.
விவாதத்தில் மேற்கண்ட கருத்துக்களையும், சேர்த்துக்கொள்ளுங்கள். முடிவுகள் கீழ்க்கண்டவாறு அமையும்:
எடுக்க வேண்டிய முடிவுகள்:
ஒரு நாளைக்கு டி.வி. பார்க்க வேண்டிய நேரம், தவிர்க்க வேண்டிய நேரம் எது எது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
போட்ட படத்தையே போட்டுக் கொண்டிருப்பார்கள். நாமும் அவர்களை திட்டிக் கொண்டே பார்த்த படத்தை பார்த்துக் கொண்டிருப்போம். இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இரண்டாவது முறையாக எந்த நிகழ்ச்சியையும் பார்ப்பதில்லை என்று முடிவெடுங்கள்.
ஏதாவது ஒரு இட்ஹய்ய்ங்ப் பார்ப்பது என்று முடிவு எடுங்கள். எந்த நிகழ்ச்சிக்காக டி.வி.யை ர்ய் செய்தீர்களோ அது முடிந்தவுடன் அணைத்து விடவேண்டும்.
விளம்பர இடைவேளைகளில் சேனல் மாற்றி வேறு நிகழ்ச்சிகளை தேடக்கூடாது. இதனால் இந்த சேனல்லில் விளம்பரம் போடும்போது அந்த சேனல் , அந்த சேனல் லில் விளம்பரம் போடும்போது இந்த இசேனல் என ஏக காலத்தில் 2 சேனல் பார்க்கும் தலைவலி கூடும்.
வாரத்தில் சில நாட்களுக்கு நான் வெஜ் க்கு அனுமதி கிடையாது என்பது போல வாரத்தில் சில நாட்கள் டி.வி. பார்க்க யாருக்கும் அனுமதியில்லை.
(அந்த நாட்கள் சுவாரஸ்யமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் எடுத்த முடிவு இருக்குமிடம் தெரியாமல் போய்விடும். எனவே எச்சரிக்கை)
புத்தகம் படிக்கும் ஆரோக்கியமான பழக்கத்தை ஏற்படுத்த யாராக இருந்தாலும் ஒரு நாளுக்கு 30 பக்கம் படித்தால்தான் டி.வி. பார்க்க அனுமதி என்று முடிவு செய்யுங்கள்.
படுக்கப் போவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே டி.வியை அணைத்து விடுங்கள். காரணம் டி.வி. பார்த்துவிட்டு அப்படியே தூங்கப் போனால் பார்த்த காட்சிகள் மனதில் பதிந்து கனவுகளாக தூக்கத்தை தொந்தரவு செய்யும்.
டி.வி. பார்ப்பது ஒரு நாளின் கடைசி நிகழ்வாக இருக்கக்கூடாது. உணவுக்குப் பின் சிறிது நேரம் நடந்துவிட்டு வருவது என்பதும், அதன் பின் டி.வி. பார்ப்பதில்லை என்றுகூட முடிவு செய்து கொள்ளலாம்.
கட்டாயம் பார்க்க வேண்டியவைகள் என்று தரமான நிகழ்ச்சிகளை பட்டியலிடுங்கள். அந்த நேரத்தில் யார் டி.வி.யை போட்டாலும் அதைத்தான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுங்கள். மிகுந்த நன்மையை தரும் இந்த முடிவை அவசியம் எடுத்துவிடுங்கள்.
முடிவெடுப்பதில் அல்ல, அதை நிறைவேற்றுவதில் தான் வெற்றி இருக்கிறது.
அதை டி.வி.க்கு பக்கத்தில் மாட்டிவிடுங்கள்.
முடிவுகளை நடைமுறைப்படுத்த:
டி.வி.யை விட சுவாரஸ்யமானது வாழ்க்கை. அதை முதலில் புரிய வையுங்கள். அதற்கு டி.வி. பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்த நாளில் வீட்டின் உள் அலங்காரத்தை புதுமையாக மாற்றும்படி போட்டி வைத்து எல்லோரையும் அதில் ஈடுபடுத்துங்கள்.
டி.வி. பார்க்கும்போது எந்த வகை நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள் என்று கவனித்து, அத்துறை குறித்த புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். இதனால் டி.வி. பார்ப்பதற்கும் புத்தகம் படிப்பதற்கும் இடையே உள்ள சுவை வேறுபாட்டை அறிந்து கொள்வார்கள். மேலும் புத்தகங்கள் காந்தங்கள். தன்னை நோக்கி ஈர்க்கிற வேலையை அதுவே செய்யும்.
ஹாலில் வந்து உட்கார்ந்தாலே டி.வி. முன்னால்தான் உட்கார வேண்டும் என்பது போலில்லாமல் டி.வி இருக்கும் இடத்தை மாற்றி அமையுங்கள். டி.வி. பார்க்க வேண்டும் என்றால் திரும்பித்தான் பார்க்க வேண்டும் என்றிருக்கட்டும். இதன் மூலம் ஹாலில் உட்கார்ந்தாலே டி.வி. பார்க்க வேண்டும் என்ற எண்ணம் குறையும்.
அவர்கள் வாழ்க்கைக்கு எதெல்லாம் முக்கியம் என அவர்களை விட்டே ஒரு பட்டியல் தயாரிக்கச் சொல்லுங்கள். எந்த படிப்பில் சேர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? எந்த வேலைக்கு செல்ல வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஓர் அட்டவணை தயாரிக்கச் சொல்லுங்கள். இதன் மூலம் டி.வி.க்கு தன் வாழ்வில் எந்த இடம் தரவேண்டும் என்பது அவர்களுக்கே புரியும்.
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009

http://otakoothan.blogspot.com

Back to top Go down

பெற்றோருக்கான வழிகாட்டி கட்டுரை...1- டீ வி  - சரஸ்வதியின் சண்டாளன்....  Empty Re: பெற்றோருக்கான வழிகாட்டி கட்டுரை...1- டீ வி - சரஸ்வதியின் சண்டாளன்....

Post by sshanthi Sat Oct 15, 2011 4:25 pm

அருமையான அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய கட்டுரை சண்டாளன் என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் அதற்கு பதில் எதிரி என்று குறுப்பிட்டு இருக்கலாம்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum