புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
31 Posts - 48%
heezulia
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
18 Posts - 28%
Dr.S.Soundarapandian
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
1 Post - 2%
Rutu
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
1 Post - 2%
prajai
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
1 Post - 2%
mruthun
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
219 Posts - 42%
heezulia
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
206 Posts - 40%
Dr.S.Soundarapandian
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
24 Posts - 5%
i6appar
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
13 Posts - 3%
prajai
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சட்னிப் பிரவேசம் Poll_c10சட்னிப் பிரவேசம் Poll_m10சட்னிப் பிரவேசம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்னிப் பிரவேசம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 2:10 pm

சட்னிப் பிரவேசம் Idlichutney2


"என்னங்க, ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"என்ன?"

"இன்னிக்கு டிபன் இட்லி பண்ணியிருக்கேனுங்க!"

"இதுக்கெல்லாம் நான் கோவிச்சுக்குவேனா? நியாயமாப் பார்த்தா இட்லி தான் கோவிச்சுக்கணும்!"

"அதில்லீங்க! தொட்டுக்க தக்காளிச் சட்டினி தானிருக்கு! பரவாயில்லையா?"

"நல்லதாப் போச்சு! ஒரு தட்டுலே நாலு இட்டிலியைப் போட்டு, அது மேலே தக்காளிச் சட்டினியை ஊத்தி வையி! இன்னிக்கு சனிக்கிழமை, எண்ணை தேய்ச்சுக் குளிச்சிட்டு அரை மணி நேரத்திலே வந்திடறேன். அதுக்குள்ளே இட்லியும் ஊறிப்போய் சுமாரா கடிச்சாவது சாப்பிடுறா மாதிரியிருக்கும். சரியா?"

கோலம்மாளுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம் என்பதால் கோவிந்தசாமி சொன்னது போலவே இட்டிலியை தக்காளிச் சட்டினியில் ஊறவைத்து விட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று இன்னும் உடையாமலிருந்த ஒரே ஒரு சுத்தியலையும் டைனிங் டேபிளின் மீது வைத்தாள். ஆத்திர அவசரத்துக்கு ஓடவா முடியும்?

கோவிந்தசாமி குளித்து விட்டு, பக்தி சிரத்தையாக சுவற்றில் மாட்டியிருந்த பெருமாளை வேண்டிக்கொண்டு, சற்றே ஆன்மபலம் அதிகரித்தவராக இட்லியைச் சாப்பிட்டு முடித்தார். அப்பாடா! சென்ற வாரம் ஆந்திரா ஸ்டைலில் தேங்காய்ச் சட்டினி அரைக்கிறேன் என்று மிக்ஸியில் புளிய மரத்தின் ஒரு பாதிமரத்தையே போட்டு அரைத்திருந்தாள் கோலம்மாள். அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு அவரது வயிற்றுக்குள்ளே காக்காய், குருவியெல்லாம் கூடுகட்டிக் குஞ்சு பொரித்தது போலவும், இரவு நேரத்தில் அவரது குடலுக்குள்ளே வௌவால்கள் தொங்கிக்கொண்டிருப்பது போலவும் பயங்கரமான கனவுகள் வரத் தொடங்கியிருந்தன. ஆகையினால், அனாவசியமான விஷப்பரீட்சை எதுவும் செய்யாமல், எந்த வில்லங்கமும் இல்லாத தக்காளிச் சட்டினியை அரைத்த மனைவி மீது அவருக்கு அளவற்ற பரிவே ஏற்பட்டு விட்டது. காலை எட்டுமணிக்குச் சாப்பிட்ட இட்லி மதிய உணவு இடைவேளை வரையிலும் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போலக் கரையாமலிருந்தபோதும், தேங்காய் சட்னி குறித்து அவர் மறந்தே போயிருந்தார். ஆனால், மதிய உணவின் போது, சக ஊழியர் மதுசூதனன் வெங்காய தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர் ஒன்றைக் கவனித்தார்.

"என்ன மதுசூதனா, வழக்கமா கான்க்ரீட் மாதிரி கெட்டியா தேங்காய்ச் சட்னி தானே கொண்டுவருவே? இதென்ன, மறந்து போய் மருதாணியை வைச்சு அனுப்பிட்டாங்களா?"

"யோவ் கோவிந்தசாமி! உன் கண்ணுலே இந்தப் புதீனா சட்னியைத் தான் வைக்கணும். இதப்பார்த்தா மருதாணி மாதிரியா இருக்கு?"

"ஓ புதீனா சட்னியா?"

"அவரு புதீனா சட்னி! நான் பொட்டுக்கடலைச் சட்னி!," என்று சொல்லியபடி பி.ஆர்.ஓ. கிருஷ்ணவேணி வந்து அமர்ந்தாள்.

"என்னாச்சு? தேங்காய் விலை அவ்வளவு ஏறிடுச்சா?" கோவிந்தசாமி குழம்பியபடி கேட்டார். "எல்லாரும் அவங்கவங்க டிரெஸுக்கு மேட்சிங்கா கலர் கலரா சட்னி கொண்டு வந்திருக்கீங்க?"

"ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை மேட்டர் முத்திப்போயி கேரளாவிலேருந்து தேங்காய் வரதே நின்னிருக்குமோ?" என்று மதுசூதனன் புதிராகக் கேட்டார்.

"சாப்பிடுற நேரத்துலே ஏன் சார் தேங்காய்ச் சட்னின்னு அபசகுனமாப் பேசறீங்க?" என்று எரிந்து விழுந்த கிருஷ்ணவேணி தனது மாங்கல்யத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். "வீட்டுக்குப்போனதும் மாவிளக்கு ஏத்தணும்! நாளையிலேருந்து வெவஸ்தை கெட்டவங்களோட சாப்பிடக்கூடாது!" என்று கூறியபடி எழுந்து போனாள்.

"யோவ் மதுசூதனன், தேங்காய்ச் சட்னின்னு சொன்னதுக்குப் போயி ஏன் இவ்வளவு கோவிச்சுக்கிறாங்க?"

"ஒருவேளை இப்போ ஆம்பிளைங்களுக்கெல்லாம் நேரம் சரியில்லே, பொம்பிளைங்க தேங்காய்ச் சட்னி பண்ணக் கூடாதுன்னு புதுசா ஏதாவது ஐதீகத்தைக் கிளப்பி விட்டுட்டாங்களோ?"

"அட போய்யா, அவங்க இட்லி தோசையைத் தின்னுட்டே இன்னும் உசிரோட இருக்கோம். சட்னியாலயா பிரச்சினை வரப்போவுது?"

"அப்படி என்னதான் பிரச்சினை இந்தச் சட்டினியிலே? வீட்டுக்குப் போகும்போது ஆளுக்கு ஒரு தேங்காய் மறக்காம வாங்கிட்டுப்போயி, சட்னி அரைச்சே ஆகணுமுன்னு சொல்லிர வேண்டியது தான்!"

"மதுசூதனன், உங்களை மாதிரி ஆணாதிக்கத் திமிரோட என்னாலே பேச முடியாது. வேணுமுன்னா நானே சட்னி அரைக்கிறேன். என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாமே?"

அதே போல அன்று அலுவலகம் முடிந்ததும் கோவிந்தசாமியும், மதுசூதனனும் கோவிலருகேயிருந்த தேங்காய்க் கடைக்குப் போனார்கள்.

"தேங்காய் என்ன விலைம்மா?"

"தேங்காய் சாமிக்கா? சட்னி அரைக்கவா?"

"ஏம்மா, எதுக்காயிருந்தா என்னம்மா? காசு கொடுக்கிறோம், தேங்காயைக் கொடு! நாங்க சாமிக்குப் போடுறோம் இல்லாட்டி சட்னி அரைக்கிறோம். உனக்கென்ன?"

"போங்கய்யா... சட்னியரைக்கிறதுக்கெல்லாம் தேங்காய் தர முடியாது."

கோவிந்தசாமியும், மதுசூதனனும் அதிர்ச்சியில் ஃபிரிட்ஜில் வைத்த தேங்காய்ச் சட்னிபோல உறைந்து போனார்கள்.

"யோவ், இந்த சட்னி மேட்டர் ஏதோ சீரியஸ் மேட்டர் போலிருக்குதே! என்னான்னு கண்டுபிடிச்சே ஆகணும்! போற வழியிலே உடுப்பி கிருஷ்ணபவனுக்குப் போயி விசாரிப்போம்," என்று கோவிந்தசாமி சொல்லவும், மதுசூதனனும் ஓசியில் கீரைவடை சாப்பிடுகிற நப்பாசையோடு பின்தொடர்ந்தார்.

ஹோட்டலை அடைந்து, காலியாயிருந்த டேபிளைக் கண்டுபிடித்து இருவரும் அமர்ந்து கொண்டனர். இவர்களை அஞ்சியஞ்சிப் பார்த்தபடியே அங்கிருந்த சர்வர் பம்மியபடி இருவரையும் அணுகினான்.

"சூடா என்ன இருக்கு?"

"இட்லி, வடை, போண்டா, பஜ்ஜி, ரோஸ்ட்..."

"சட்னி இருக்கா?"

"அது சூடா இல்லை சார்!"

"என்ன நக்கலா? சட்னி இருக்கா இல்லியா?"

"இருக்கு சார், கொத்துமல்லிச் சட்னி, புதீனா சட்னி, கொத்துக்கடலைச் சட்னி..."

"தேங்காய்ச் சட்னி இருக்கா?"

"இருங்க சார், ஓனரை அனுப்பறேன்!" என்று கூறியபடி அந்த சர்வர் அங்கிருந்து நகர்ந்தான்.

"என்னய்யா, தேங்காய்ச் சட்னி இருக்கான்னு கேட்டா, ஓனரைக் கூப்பிட்டு வரப் போயிருக்கான்! டிபன் சாப்பிட வந்தவங்களை டின்னு கட்டி அனுப்பிருவாங்க போலிருக்கே!"

"வணக்கம் சார்!" பல்லெல்லாம் வாயாக ஓனர் வந்தார். "உங்களுக்கு என்ன சார் பிரச்சினை?"

"எனக்கொரு பிரச்சினையும் இல்லை, தேங்காய்ச் சட்னி இருக்கா இல்லையா?"

"இருக்கு சார்! அதுக்கு முன்னாலே இந்த பாரத்துலே கையெழுத்துப் போட்டுக் கொடுங்க சார்!"

"யோவ், நாங்க பஜ்ஜி சாப்பிட வந்தோமா, பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிக்க வந்தோமா?"

"பார்த்தீங்களா பார்த்தீங்களா, சட்னீன்னு சொன்னதும் கோபப்படுறீங்க பாருங்க! அதனாலே தான் யோசிக்க வேண்டியிருக்கு!" என்று மிகவும் பயந்து நயந்து சொன்னார் ஹோட்டல் ஒனர்.

"எதுக்குய்யா பயம்? இதுக்கு முன்னாடி நீ சட்னி போட்டதில்லையா, நான் சாப்பிட்டதில்லையா?" கோவிந்தசாமியின் குரல் திடீரென்று கோபத்தில் உரக்கவே, கூட்டம் கூடியது.

"அதானே?" என்று கோவிந்தசாமிக்கு ஒத்து ஊதினார் மதுசூதனன்.

"இப்போ மரியாதையா தேங்காய்ச் சட்னி போடுறியா இல்லே மினிஸ்டருக்கு போன் பண்ணட்டுமா? ஐ வில் டேக் திஸ் மேட்டர் வித் தி கம்பீட்டன்ட் அதாரிட்டீஸ்!"

"சார், சத்தம் போடாதீங்க சார்! பப்ளிக் எல்லாரும் பார்க்கிறாங்க சார்! இதோ பாருங்க சார், பச்சைச் சட்னி, சிகப்புச் சட்டினி, மஞ்சள் சட்னி... இன்னிக்குப் புதுசா மிஞ்சிப்போன பீட்ரூட் பொறியலை அரைச்சு மரூன் கலருலே கூட சட்னி வச்சிருக்கோம் சார்!" என்று கையதுகொண்டு மெய்யது பொத்திக் கதறத்தொடங்கினார் ஹோட்டல் ஓனர்.

"கோவிந்தசாமி, இவரு என்ன பிளாட்பாரத்துலே பிளாஸ்டிக் சாமான் விக்குறவரு மாதிரி சொல்லுறாரு?" என்று உசுப்பேத்தினார் மதுசூதனன்.

"என்னய்யா ஆச்சு இன்னிக்கு? வீட்டுலேயும் தேங்காய் சட்னி இல்லை, வெளியிலேயும் தேங்காய் சட்னி இல்லேன்னா எப்புடி? இதுக்காக சபரிமலைக்குப் போறா மாதிரி கேரளாவுக்கா போக முடியும்? என்னய்யா பிரச்சினை? சொல்லித் தொலைங்கய்யா!"

"யோவ்!" சாதுமிரண்டது போல திடீரென்று குரலை உயர்த்தியபடி, இடுப்பிலிருந்து பிச்சுவாக்கத்தியை வெளியே எடுத்தார் ஓனர். "நானும் போனாப் போகுதுன்னு சும்மாயிருந்தா, மேலே மேலே பேசிட்டே போறியா? இப்போ மரியாதையா எந்திரிச்சு வெளியே போறியா இல்லாட்டி ஒரே சொருவா சொருவிடுவேன்!"

"ஐயோ! எனக்கு தேங்காய் சட்னி வேண்டாம்! என்னைக் குத்திடாதீங்க!" என்று அலறினார் கோவிந்தசாமி.

"என்னங்க... என்னாச்சு? ஏன் தூக்கத்துலே கத்தறீங்க?" என்று கோலம்மாள் கணவனை உலுக்கவும், கோவிந்தசாமியின் கனவு கலைந்தது.

"இது... கனவா...?"

"என்னாச்சுங்க? ஏன் இப்படிக் கத்தினீங்க? யாரு குத்த வந்தாங்க?"

"கோலம்மா!" கோவிந்தசாமி கூச்சத்தோடு பேசினார்... "இன்னிக்கு நான் ஒரு நியூஸ் படிச்சேன். தாராபுரத்துலே ஒரு கல்யாணத்துலே வேண்டாம் வேண்டாமுன்னு சொல்லியும் கேட்காம இட்லிக்கு தேங்காய் சட்னி போட்டவனோட மண்டையை உடைச்சிட்டாங்களாம். அதைப் பத்தியே யோசிச்சிட்டே தூங்கினேனா, கனவுலேயும் தேங்காய்ச் சட்னி வந்துருச்சு!"

"இவ்வளவு தானா? நான் வேண்ணா உங்க பயம் தெளியுற வரைக்கும் இனிமே சட்னியே அரைக்க மாட்டேன்," என்று ஆறுதலாகக் கூறினாள் கோலம்மாள்.

"நீ ஒண்ணும் கவலைப்படாதே!" என்று மனைவியை ஆசுவாசப்படுத்தினார் கோவிந்தசாமி. "நீ அரைக்கிறதெல்லாம் சட்னி கணக்குலே சேராது!"




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 17, 2011 2:17 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



சட்னிப் பிரவேசம் Uசட்னிப் பிரவேசம் Dசட்னிப் பிரவேசம் Aசட்னிப் பிரவேசம் Yசட்னிப் பிரவேசம் Aசட்னிப் பிரவேசம் Sசட்னிப் பிரவேசம் Uசட்னிப் பிரவேசம் Dசட்னிப் பிரவேசம் Hசட்னிப் பிரவேசம் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 17, 2011 2:18 pm

ஹாஹாஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தேங்காய் சட்னிக்கு இப்படி ஒரு கதையா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சூப்பர் அண்ணா ஆமோதித்தல்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 2:21 pm

தலைப்பை பார்த்ததும் தெரிந்துவிட்டது இது சதுர செயலாளர் அவர்களுடைய பதிவு என்று சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 3:15 pm

மிக்க நன்றி உதயசுதா, மாணிக், ரேவதி..



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 17, 2011 3:22 pm

நன்றிலாம் இருக்கட்டும்

தேங்காய்சட்னி வச்சு இட்லி சுட்டுத்தரேன் வாங்க அண்ணா வீட்டுக்கு சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 3:23 pm

Manik wrote:நன்றிலாம் இருக்கட்டும்

தேங்காய்சட்னி வச்சு இட்லி சுட்டுத்தரேன் வாங்க அண்ணா வீட்டுக்கு சிரி

இதுக்குதானே மண்டையில் அடி

நான் அய்யோ, நான் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 17, 2011 3:54 pm

தேங்காய் சட்னிண்ணா எனக்கும் பிடிக்கும் , நன்றி சதுரம் சட்னிப் பிரவேசம் 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 17, 2011 5:35 pm

அருமையாக இருக்கு , சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


கலக்குங்க ... அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 6:05 pm

நவரச சட்னி ஆவறதுக்கு இன்னும்
அஞ்சாறு சட்னி பேர் கொறையுதே?

தேங்காச் சட்னி கேட்டாலே மனுஷன்
சட்னியா பூடுவான் போல இருக்கே?

அடடா என்னமா சாப்பாட்டு விஷயத்துல ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க.

இட்லியும் சட்னியும் அபாரமா இல்லேன்னாலும்
அத வெச்சு அபாரமா கத பண்ணிட்டீங்க. அற்புதம்.



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக