ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லாமலே

+10
dsudhanandan
பூஜிதா
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ayyamperumal
பிஜிராமன்
dhilipdsp
இளமாறன்
கேசவன்
ரேவதி
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சொல்லாமலே  - Page 2 Empty சொல்லாமலே

Post by ரேவதி Fri Oct 14, 2011 10:21 am

First topic message reminder :

"வணக்கம் சார்! டாங்க் ஃபில் பண்ணணுமா சார்..?"

"இரண்டு ஆயில் ஒரு லிட்டர்"

"ஓ.கே. சார்! ரவுண்டா 90 ரூபாய்க்குப் போட்டுடட்டுமா சார்"

வண்டியோடு நின்றவன் தலையாட்ட,

"மீட்டரப் பாருங்க சார்.."

தமிழ்ச்செல்வி பட்டனைத் தட்டிவிட்டு டேங்க்கில் பெட்ரோலை கொட்டத் தொடங்கினாள்.

அடுத்து வந்த நான்கு பேருக்கும் பெட்ரோல் போட்டதும், ஐந்தாவதாய் சுரேஷ்.

"வணக்கம் சார்"

"வித் அவுட் ஆயில் இரண்டு லிட்டர்"

"ஓகே சார்! வண்டிய விட்டு இறங்கி நில்லுங்க சார்"

"ஏன் உட்கார்ந்திருந்தா போடமாட்டீங்களோ..?"

"சார் ப்ளீஸ்.. வண்டிய ஸ்டேண்ட் போட்டாத்தான் பெட்ரோல் போடணும்னு எங்க கம்பெனி ஆர்டர் சார். தயவுசெய்து இறங்கி நில்லுங்க..."

"என்ன பெரிய தொல்லையாப் போச்சு.. என்ன இது அதிகாரம்..? மத்த பங்க்ல இந்த மாதிரி இல்லையே?"

"இங்க இப்படித்தான் சார்.. நீங்க இறங்காட்டி எங்களுக்குக்கு திட்டு விழும் சார்"

இவள் சொல்லி நாம் இறங்குவதா என்ற கோபத்துடனும் சலிப்புடனும் வேண்டா வெறுப்பாக சுரேஷ் வண்டியைவிட்டு இறங்கினான். இடுப்பில் இருந்த செல்போன் கிச்சுக்கிச்சு மூட்டியது. அதை எடுத்துப்பேசப் போனவனைத் தடுத்து,

"சார்.. இங்க செல்போன்ல பேசக்கூடாது சார்.."

"அப்புறம் எங்க வெச்சு பேசுறதாம்.? ரிங்க் அடிக்கும்போது எடுக்காம வீட்டுல போயா எடுப்பாங்க.."

"இது பெட்ரோல் பங்க் சார்.. இங்க செல் உபயோகிக்கக்கூடாது"

"என்ன பிரச்னை உங்களுக்கு.. இதுக்கு பேசாம பெட்ரோல் போட வராதீங்கன்னு சொல்லிட வேண்டியதுதானே?"

மீதி சில்லைரையை வாங்கியவன், கோபத்தை கிக்கரில் காட்டினான்.

***

மாலைப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு என்ற செய்தி தூக்கில் தொங்குவது போல தொங்கிக்கொண்டிருந்தது!

பக்கத்தில் டீக்கடை. ஆபிஸ் நண்பர்களோடு சுரேஷ் வந்திருந்தான்.

"மாஸ்டர்.. நாலு டீ.. கப்ல! ஒண்ணு வித் அவுட் சுகர்! "

கொடுமை! முப்பது வயசுக்குள்ளேயே சக்கரை இல்லாமல் டீ.. ஹூம்ம்.

சுரேஷ் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். டீயை எடுத்துக்கொண்டு, "ஏம்ப்பா இது வித் அவுட் இல்லையே.. மாத்திடாதீங்க.."

இது சக்கரை வியாதி எனக்கில்லை என்று சொல்லாமல் சொல்வது!

"என்ன மச்சி இது.. ராக்கொள்ளைக்காரன் மாதிரி மறுபடியும் பெட்ரோல் விலைய உயர்த்திருக்கான் பாரு.."

"இப்படியே போனா.. வண்டிய உருட்டிக்கிட்டுத்தான் வரணும்"

"டேய் நீ வண்டியில வரப்போயிதாண்டா ஒண்ணு ரெண்டு ஃபிகருங்களாவது உன்னப் பாக்குது. அதுக்காகவாச்சும் வண்டிய தள்ளிக்கிட்டு வா.."

"டேய் இந்தத் தொல்லத் தாங்கமுடியலைன்னா.. பெட்ரோல் பங்க்ல வேற விதமான கொடுமைடா. வண்டியவிட்டு இறங்குன்னு சொல்றான். ஸ்டாண்ட் போடுங்கறான்.. என்னா அதிகாரம்ப்பா! விட்டா அட்டென்ஷன்ல நின்னா தான் பெட்ரோல் போடுவோம்னு ஆர்டர் போடுவாங்க போல" சுரேஷ் ஆதங்கப்பட,

"ஆமாடா மச்சான்.. சில பெட்ரோல் பங்க்ல இப்படி படுத்தி எடுக்கிறாங்க.."

சிகரெட்டின் நெருப்பு உதட்டை முத்தமிட நெருங்க, கீழே போட்டு நசுக்கியவன் அலுவலகம் நோக்கி அவர்களோடு நடக்கத் தொடங்கினான்.

***

இரவு எட்டு மணியான பின்னரும் ரோட்டில் கொஞ்சம் கூட கூட்டம் குறைந்தபாடில்லை. உண்மையாகவே வண்டியை உருட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சிக்கனலாய் கடந்து எப்போது வீடு போய்சேருவது? கிடைத்த கேப்பில் வண்டியை விரட்டியபோது செல் போனின் ரிங்க்டோன் காதுக்குள் வண்டாய் குடைந்தது.

"ஹலோ.."

"டேய்.. கார்த்திக் பேசுரேன்டா.."அவன் குரலில் பதட்டம்.

"மச்சான் சொல்லுடா.."

"நான் இப்போ SRK ஆஸ்பத்திரியில இருக்கேன்டா.."

சுரேஷ் கொஞ்சம் தள்ளிப்போய் வண்டியை ஓரங்கட்டினான்.

"என்னாச்சுடா..? லீவுலதான இருக்கே? என்ன செய்யுது.?"

"எனக்கில்லடா.. எங்க அண்ணா பொண்ணுக்கு.. ஆக்சிடென்ட்"

"அப்படியா? சாரிடா..ரொம்ப பெரிசா அடி ஏதும் படலையே.."

"இல்ல சுரேஷ்.. ரோட் ஆக்சிடெண்ட் இல்ல.. முடிஞ்சா நேர்ல வா சொல்றேன்.. உங்க அக்கா இந்த ஆஸ்பிடல்ல தானே வேலை பாக்குறாங்க..?"

"ஆமா.. சரிடா.. நான் இப்பவே அங்க வர்றேன்"

***

பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

கார்த்திக்கின் குடும்பமே அங்கே திரண்டிருந்தது. எல்லோர் கண்களிலும் கண்ணீரும் கவலையும்.

"ஆண்டவா காப்பாத்து.. பொம்பள பிள்ளையாச்சம்மா.. அதுதான் ரொம்ப கவலையா இருக்கு. ஒண்ணு கிடக்க ஒண்ணி ஆயிடுச்சின்னா? முருகா.. நினக்கவே கொல நடுங்குதே.." பாட்டியம்மா அரற்றிக் கொண்டிருந்தாள்.

சுரேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டி, "என்னடா ஆச்சு.. இவங்க நிக்கறதைப் பாத்தா ரொம்ப சீரியசான விஷயமாத் தெரியுதே.. யாரு அந்த சுட்டிப் பொண்ணா..?"

"ஆமாடா. அத ஏன் கேக்குறே.. மத்தியானம் வண்டிய எடுத்துட்டு வெளியே போனேன். அவ நானும் வர்றேன் சித்தப்பான்னா.. எப்பவும் போல சரின்னு சொல்லிட்டு கூட்டிட்டுப் போனேன்.. கடைக்குப் போய் ஐஸ் க்ரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்திட்டு வரும்போது பெட்ரோல் போடப்போனேன்டா.. அங்க தான் வினையே.. அவ வண்டில முன்னாடி உட்கார்ந்து இருந்தா.. பெட்ரோல் போட சொன்னேன்.. போட்டுகிட்டிருந்தான். காசெடுக்க பர்சை எடுக்க திரும்பறேன்.. என்னாச்சுன்னு தெரியல குழந்தை அலற ஆரம்ப்பிச்சிட்டா.. முகம் பூரா பெட்ரோல்.. பெட்ரோல் போடுறவன் சொல்றான் குழந்தை தட்டிட்டான்னு.. கொஞ்சமாத்தான் முகத்துல தெரிச்சிருக்கு, ஆனா கண்ணுல நிறைய விழுந்துடுச்சு போல.. வீட்டுக்கு வந்து தண்ணிய விட்டுக் கழுவியும் போகல.. வலியில துடிக்க ஆரம்பிச்சுட்டா.. என்ன செய்யுறதுன்னே தெரியல.. எல்லோரும் என்னையே திட்டுறாங்க. வந்து பாத்த டாக்டர் கூட என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு.."

" மடையா.. ஏண்டா குழந்தைய முன்னால உட்காரவச்ச.. பெட்ரோல் போட்டவன் இறங்க சொல்லலையா..?"

"இல்லடா சுரேஷ்.. எப்பவும் அங்கேதான் பெட்ரோல் போடுவேன். எத்தனையோ தடவ இவ எங்கூட வந்திருக்கா. இப்படி ஆகும்னு நினைக்கலையே.."

"சரிடா.. ஒண்ணும் ஆகாது.. கவலைப்படாதே. எங்க அக்கா இருக்கா.. நல்ல கவனிச்சுக்குவா.."

ஆறுதல் சொல்லிவிட்டு வெளியேறினான்.

***

டி.வி.யில் செய்திகளை சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை அக்காவின் பேச்சு திரும்பிப் பார்க்க வைத்தது. வந்தவள் களைப்புடன் சோபாவில் சாய்ந்தாள்.

"அக்கா.. கார்த்திக்கோட அண்ணன் பொண்ணு எப்படி இருக்கா..?"

"கொஞ்சமாச்சும் அறிவிருந்தா அப்படிச்செய்வானா..? முட்டாள். பெட்ரோல் பங்க்குக்கு சின்னக்குழந்தைய ஏன் கூட்டிட்டுப் போணும்..? சரி போனது தான் போனே.. பெட்ரோல் போடும்போதாவது முன்னாடி இருந்த பொண்ணை இறக்கி விட்டிருக்கக்கூடாதா..? அறிவுகெட்டப்பய.. என்ன படிச்சி என்ன..?"

"ஏன் என்னாச்சு..?"

"இனியும் என்ன ஆகணும்..? சின்னக்குழந்தடா.. பர்ஸ்ட் எய்ட் கொடுத்து ஸ்பெஷல் டாக்டர் பாக்கட்டும்னு கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கோம்.. இனி அங்க தான் தெரியும்.. கண்ணுக்கு ஏதும் ஆச்சா ஆகலையான்னு.. இந்த மாதிரி சில கேஸ்ல கண்ணு தெரியாம போகக்கூட வாய்ப்பிருக்கு. ஆண்டவன் புண்ணியத்துல அப்படி ஏதும் நடக்காம இருக்கணும்."

சுரேஷ்க்கு மனசே சரியில்லை. சின்னக்குழந்தை..கண்ணுக்கு ஏதும் ஆச்சுன்னா..? நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை.. "ஆண்டவா குழந்தை கண்ணுக்கு ஏதும் ஆகக்கூடாது !"

***

தெருவில் போய்க்கொண்டிருந்தவன் ஞாபகம் வந்தவனாக வண்டியை பெட்ரோல் பங்க்கை நோக்கித் திருப்பினான். கூட்டம் கொஞ்சம் அதிகம் இருந்தது.

இவனுக்கு முன்னே நான்கு பேர் இருந்தனர்.

"வணக்கம் சார்.."

"நூறு ரூபாய்க்குப் போடும்மா.."

"சார் வண்டிய விட்டு இறங்கி நில்லுங்க சார்"

"எதுக்கும்மா.. பரவாயில்ல போடு.."

"இல்ல சார்.. இறங்குங்க.."

"நான் உட்காந்தா என்ன.. நின்னா உனக்கென்ன.. பெட்ரோல் போடவேண்டியதுதானே.. இது என்ன அதிகப்பிரசங்கித்தனம்.."
அவர் வாக்குவாதம் செய்ய, தமிழ்செல்வி "இல்லை சார்.. ப்ளீஸ்.. இறங்கிடுங்க.. " என்று சொல்லிக் கொண்டிருக்க, சுரேஷ்
வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவர் அருகே போனான்.

" ஹலோ.. அதான் சொல்றாங்க இல்ல... இறங்கி நில்லுங்க சார்.. அவங்க சில ரூல்ஸ் வச்சிருப்பாங்க. அதுக்கு ஏதாச்சும் அர்த்தமிருக்கும்.. உங்களை நிக்க வெக்கணும்னு அவங்களுக்கு என்ன வேண்டுதலையா.. இறங்குங்க சார்" என்ற சுரேஷை, வரும்போதெல்லாம் சண்டை போடும் சுரேஷை, தான் எதுவும் சொல்லாமலேயே வண்டியை விட்டு இறங்கி நிற்கும் சுரேஷை ஆச்சர்யத்தில் பார்த்தாள் தமிழ்செல்வி.

நன்றி - டி. எம். ஃப்ராங்க்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by dhilipdsp Sat Oct 15, 2011 7:53 pm

சொல்லாமலே செய்ய வேண்டியதை
சொல்லி கட்டியதற்க்கு நன்றி. கூடாது
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by dsudhanandan Sat Oct 15, 2011 8:06 pm

நல்லா கதை விட்டுருக்கீங்க... சாரி நல்ல கதை பதிஞ்சிருக்கீங்க... வாழ்த்தும் நன்றியும் அருமையிருக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by கே. பாலா Sat Oct 15, 2011 8:09 pm

ரேவதி wrote:
நன்றி......
இன்று ஒரு பேய் கதை பதிய உள்ளேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
தன்னை முன் நிறுத்தும் பதிவுகள் பதிய கூடாது கூடாது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by ரேவதி Mon Oct 17, 2011 10:35 am

கே. பாலா wrote:
ரேவதி wrote:
நன்றி......
இன்று ஒரு பேய் கதை பதிய உள்ளேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
தன்னை முன் நிறுத்தும் பதிவுகள் பதிய கூடாது கூடாது
என்ன சொன்னிங்க உடுட்டுக்கட்டை அடி வ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by Manik Mon Oct 17, 2011 10:42 am

ஏன் ரேவா நீ பெட்ரோல் போட போகும் போது இப்படித்தான் வண்டியை விட்டு இறங்க சொன்னாங்களா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

செரி செரி விடு முறைக்காத சிப்பு வருது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by கோவிந்தராஜ் Mon Oct 17, 2011 10:50 am

அருமை அக்கா சூப்பருங்க


சொல்லாமலே  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சொல்லாமலே  - Page 2 599303
சொல்லாமலே  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சொல்லாமலே  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by உதயசுதா Mon Oct 17, 2011 1:51 pm

அடடா எப்ப இருந்து இந்த சேவை ரேவதி.
நீ பகிர்ந்த கதை ரொம்ப நல்லா இருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


சொல்லாமலே  - Page 2 Uசொல்லாமலே  - Page 2 Dசொல்லாமலே  - Page 2 Aசொல்லாமலே  - Page 2 Yசொல்லாமலே  - Page 2 Aசொல்லாமலே  - Page 2 Sசொல்லாமலே  - Page 2 Uசொல்லாமலே  - Page 2 Dசொல்லாமலே  - Page 2 Hசொல்லாமலே  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by Manik Mon Oct 17, 2011 2:08 pm

உதயசுதா wrote:அடடா எப்ப இருந்து இந்த சேவை ரேவதி.
நீ பகிர்ந்த கதை ரொம்ப நல்லா இருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ரேவா பைக்ல இருந்து கீழ இறங்கியதிலிருந்து சிரி சிரி சிரி சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by ரேவதி Mon Oct 17, 2011 4:05 pm

Manik wrote:
உதயசுதா wrote:அடடா எப்ப இருந்து இந்த சேவை ரேவதி.
நீ பகிர்ந்த கதை ரொம்ப நல்லா இருக்கு சொல்லாமலே  - Page 2 2825183110 சொல்லாமலே  - Page 2 2825183110 சொல்லாமலே  - Page 2 2825183110

ரேவா பைக்ல இருந்து கீழ இறங்கியதிலிருந்து சிரி சிரி சிரி சிரி
சொல்லாமலே  - Page 2 816814


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by ayyamperumal Mon Oct 17, 2011 5:55 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:
நன்றி......
இன்று ஒரு பேய் கதை பதிய உள்ளேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
தன்னை முன் நிறுத்தும் பதிவுகள் பதிய கூடாது கூடாது

அவர் இன்னும் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ,, தங்களின் அயராத உழைப்பிற்கு அளித்த பட்டத்தை மறக்கவில்லை என நினைக்கிறேன். சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


சொல்லாமலே  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொல்லாமலே  - Page 2 Empty Re: சொல்லாமலே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum