ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க அப்பா ரொம்ப அழகு.....

+16
ராஜா
Manik
உதயசுதா
அருண்
aathma
கே. பாலா
vasanthe2590
அப்துல்லாஹ்
ஜாஹீதாபானு
kitcha
ரேவதி
உமா
இளமாறன்
dsudhanandan
நட்புடன்
Aathira
20 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by Aathira Thu Oct 13, 2011 8:33 pm

First topic message reminder :

எங்க அப்பா ரொம்ப அழகு.....


அப்பாவின் உடலை ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு ஆம்புலன்ஸில் எடுத்து வந்த நேரம், அனைவருக்கும் ஃபோன் பண்ணி இறப்புச் செய்தியைச் சொன்ன நேரம் தொட்டுத் தொட்டு அழுதுட்டு இருந்த அம்மாவை விலக்கிட்டு அப்பாவைப் ப்ரீஸர் பாக்ஸில் படுக்க வைத்த நேரம், உறவுக்காரங்க எல்லாரும் ஒவ்வொருவரா வந்து பிலாக்கணம் பாடி அழுது கதறின நேரம், இப்படி எந்த நேரத்திலும் இல்லாத் ஒரு பரபரப்பு இப்போது. எல்லார் முகத்திலும் கவலை ரேகை கட்டை விரல் அகலத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் குரல் வளத்தில் ஆனால் கம்மிய குரலில் சோகப் பாவனையில் ”கிடைக்கலப்பா” என்று வருத்தத்தோடு சொன்னார்கள்.. அங்கே கேட்டுப் பாரேன். இங்கே கேட்டுப் பாரேன் என்று அவரவர் அவரவருக்குத் தெரிந்த இடத்தைச் சொன்னார்கள்.

”இதுவே கிராமமா இருந்தா உடனே கிடைச்சுடும்” என்று ஒர்வர்.

“ஒரு வார்த்தைச் சொல்லி இருக்க கூடாதா? நான் பையில தூக்கிப் போட்டுட்டு வந்திருப்பேனே. எங்க வீட்ல எவ்வளவு கிடக்குது.” இது அப்பாவின் ஒத்தை ஆண் உடன் பிறப்பு. எங்க சித்தப்பா.

”மெட்ராஸ்ல எல்லாம் ஒருத்தரும் இருந்தாக் கூட குடுத்து உதவிக்கிட மாட்டாங்க” அப்பாவின் இறுதிச்சடங்குக்காக பூர்வீக கிராமத்தில் இருந்து வந்திருந்த அப்பாவோட ஆத்மார்த்த நண்பர். கிராமத்துக்காரர்.

”.எங்க ஊருல கோயில் கடையில கிடைக்காத பொருளே இல்ல” இது அப்பாவோட ஒன்னுவிட்ட ஸ்ரீரங்கத்துச். சகோதரி.

”நாங்கல்லாம் பணம் கொடுத்து வாங்க மாட்டோம். ஒரே ஓட்டமா காட்டுப்பக்கம் ஓடிப் போய் பொறுக்கிட்டு வந்துருவோம்” இது சேலத்துக்காரர்.. என்னோட ஓரகத்தி.

”கெடச்சா பாருடா.. இல்லாட்டா பரவாயில்லை, அப்பா இதுக்கெல்லாம் வருத்தப் படமாட்டார். இருக்கும் போது அவர நல்லா வச்சிருந்துட்டோம். அவர் திருப்தியா போயிருக்காரு. பரவால்லடா விடுடா.” இது அப்பாவைக் கண்ணும் கருத்துமா இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த, அப்பாவுக்குக் கொள்ளி வைக்கப் போகிற அந்த குடும்பத்தின் மூத்த மகன்.. எங்க அண்ணன்..

எங்க வீட்ல இருக்கு நான் போயி கொண்டு வந்துரட்டா இது வர்ணனையாகப் பேசத்தெரியாத, வேலை மட்டுமே செய்யத் தெரிந்த என் தங்கச்சி..

”அதெல்லாம் வீட்டுல இருந்து எடுத்துட்டு வரக்கூடாதும்மா” இது கடிகாரத்தையே அடிக்கடி பார்த்தபடி சட்டு புட்டுனு சடங்கை நடத்திட்டு கிளம்பறதிலேயே குறியாக அடிக்கடி கருத்த அந்தக் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்த அப்பாவின் இறுதிச் சடங்கை நடத்தி வைக்க வந்திருந்த தொப்பைச் சாஸ்திரி.

இத்தனைக்கும் நடுவுல எல்லா வேலையும் சரியா நடக்கனும் ஆனா எனக்கொன்னும் தெரியாது. நான் வெளிநாட்டுக்காரன். என்ற தோரனையில் இதுகூடவா வாங்க முடியாது? இவ்வளவு பெரிய சிட்டீல” என்று எங்கள் வீட்டின் ஆறரை அடி உயரக் கடைக்குட்டி கடோத்கஜன்... என் தம்பி. குட்டி என்றவுடன் ஏதோ சின்னபையன் என்று எண்ணக்கூடாது. அவனுக்கு இரண்டு சின்னக் குட்டிங்க இருக்கு.....

அப்பா இப்ப ஃப்ரீஸர் பாக்ஸை ஒடச்சிட்டு எழுந்து வந்து ”நாகப்பா அதைப்போய் வாங்கிட்டு வாப்பா” என்று வாச்மேனை கூப்ட்டுச் சொல்லப்போறாரு. இல்லாட்டி அவரே எழுந்து போயி தேவர் கடைக்குப் ஃபோன் பண்ணி தேவர்! அதைக் கொஞ்சம் உடனடியா அனுப்புப்பான்னு சொல்லப் போறாரு” .இது சிரித்துக் கொண்டே அக்கா. அப்பாவின் ஒரே செல்ல மூத்த மகள். எப்போதும் காமெடியும் கையுமாகவே அலைபவள்.

“என்னடா இது கிலேசம்....கன்றாவி.....சாஸ்திரம் கீஸ்திரம்னு எதையாவது சொல்லிகிட்டே அலையரதே பொழப்பா போச்சுடா... யாருடா சொன்னாங்க உங்களுக்கு? திருந்தவே மாட்டீங்களாடா? சகிக்கலடா......நீங்க பன்றது...போங்கடா.... போங்கடா போயி வேலையைப் பாருங்கடா.... இருக்கும்போது ஒழுங்கா வச்சுக்கங்கடா அப்பா அம்மாவ...” அப்படின்னு எழுந்து வந்து மூக்கை வெடக்கப்போறாரு மாமா” இது அப்பாவின் அக்கா மகன். மூடப்பழக்கத்தை வெறுக்கும் அப்பாவை அவ்வப்போதுத் தூண்டி, எப்போதும் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதில் சந்தோஷம் காண்பவன்.

அப்பா இறந்ததில் பெரிதாக ஒருவருக்கும் வருத்தம் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் அவர் பட்ட துன்பம் அவ்வளவு கடந்த ஐந்து ஆண்டுகளாக. அவர் இடத்தில் இன்னொருவர் இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியாது. கேன்சர் மட்டும் இல்லை. கால் வீக்கம். உடம்பு எரிச்சல்..என்று பல...படாத பாடு. அவரை சீக்கிரம் அனுப்பி வைத்ததில் பெரும்பங்கு என்னுடையதே. எனலாம். கடைசி கடைசியாக அவரைத் கஞ்சி குடிப்பா, குடித்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஊற்றி, கஞ்சியெல்லாம் நெஞ்சில் அப்படியே சேர்ந்து, அதனைச் சிரஞ்சினால் உறிஞ்சி எடுத்து நினைக்கும் போதே கண்களைக் கரைக்கிறது அவர் இருந்த நிலை. அப்போதும் என்னப்பா செய்யுது? என்றால் ஒன்றும் இல்லை. என்று அவர் தலையாட்டியது, பார்த்துக்கொண்டிருக்கும் போதே மெல்ல மெல்ல உயிர் பிரிந்தது...

என்னதான் மற்றவர்களுக்கு வருத்தம் அத்துனை இல்லை என்றாலும் அம்மாவுக்கு அப்படி இருக்குமா?. அறுபது வருடம் அவருடன் வாழ்ந்தவளாயிற்றே. அப்பா இறந்த துக்கத்துடன், நோயிலும் பாயிலும் இருந்தாலும் கடைசி வரையிலும் தன் அதிகாரத்தையும் சிம்மக் குரலையும் விடாது வாழ்ந்து விட்டு, இன்று நெடுஞ்சாண் கிடையாக சாய்ந்து இருக்கும் இந்த கம்பீரமான் கட்டைக்கு இறுதிச்சடங்குக்கு ஒரு இது கூடக் கிடைக்கலயா!! என்று தோன்றிய துக்கத்தையும் சேர்த்து மனத்தில் புதைத்துக் கொண்டு மெளனமாக அம்மா. . கணவனைப் பரிகொடுத்தவள் அதிகம் பேசக்கூடாதாமே!!! அதனால்.

எல்லார் முகத்திலும் எதோ இது இல்லாவிட்டால் இறுதிச்சடங்கே நடக்காது என்பது போன்ற சோகம். இத்தனையையும் கேட்டுக் கொண்டு நடுக்கூடத்தில் ஃப்ரீஸர் பொட்டியில் நீங்க்ல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று கேட்பது போல ஒரு நம்ட்டுச் சிரிப்புடன் இதில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாத என் தி க அப்பா.

எங்கள் ஊரில் ஒரு பெண்மனி. யாராவது கொஞ்சம் அழகாக அவர் முன்னால் சென்று விட்டால் போதும், அவருக்கு என்ன ஆகுமோ தெரியாது. “அழக மட்டும் என்ன சந்தனக்கட்டையப் போட்டா எரிக்கப் போறாங்க”.. என்று திட்டுவதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். ஏன் இப்படித் திட்டுகிறார்கள் என்று நீண்ட நாள் எண்ணியதுண்டு. அவர்கள் அத்தனை அழகு!!! ம்ம்ம்... அப்பறம் எப்படி பொறுக்கும் மற்றவர்கள் அழகா இருந்தா??!!! அதனால்தான் என்று நினைத்துக் கொள்வேன்.. அவர் அப்படி அடிக்கடி சொன்னதின் உண்மை இப்போதுதான் புரிந்தது..

இந்தக் குழப்பததைத் தீர்ப்பது போல போன் மணி அலறியது. நான் தான் குறுக்கும் நெடுக்குமா அமர்ந்திருந்தவர்கள் மீது கால் பட்டுவிடாதபடி, கோடு போட்டு தாண்டித் தாண்டி சின்ன வயசுல கல்லாங்காய் விளையாடுவோமே, அது போல நொண்டி அடித்துச் சென்று ஃபோனை எடுத்தேன்.. எதிர்முனையில் ஏதோ சொல்லி மூச்சை வாங்கினார் என் நோஞ்சான் மாமா. ரிஸீவரில் வெறும் காற்றுதான் வந்தது. ஏற்கனவே அவர் பேசும் போது கிண்ற்றுக்குள் இருந்து வருவது போல இருக்கும் அவர் குரல்...

இப்போது இங்கு கூட்டம். அழுகை இல்லை. ஆனால் அங்கலாய்ப்பு. ஒப்பாரி இல்லை. ஆனால் ஒருவித மன உளைச்சல். 85 ஆண்டு சரித்திரம் ஒன்று படுத்து விட்டதே. ”என்ன, பேத்தி கல்யாணத்தைப் பார்த்துட்டுப் போயிருக்கலாம்” முன்னாடியே சொல்லி இருந்தா கடைசியா ரெண்டு வார்த்தைப் பேசி இருக்கலாம்” ”எப்படி கம்பீரமா இருந்த மனுஷ்ன் கடைசி கடைசியா ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாரு”. அவருக்குப் பேரன் ஹரீஷ் பூணலைப் பாத்துட்டுப் போகனும்னு ரொம்ப “ஆசை. வரவு செலவு, பிளாட்ஸ் மெயிண்டனென்ஸ் இதே நினைப்புதான் எப்போதும்” என்றெல்லாம் வார்த்தைகள் நீட்டி முழக்கியபடி கூடத்தில் பல குரல்கள் அங்கங்கு ஒரு நான்கு பேர் கூடியபடி ஐந்து கூட்டம். அப்பாவைச் சுற்றி.

இந்தக் குரலுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படுக்கை அறைகள் இரண்டிலும் மும்மூன்று கூட்டமாய் ஆறு கூட்டம். குஞ்சு குழுவான்கள் தாத்தாவைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாட்டு. ஓடியதில் தம்பி மகள் மூத்தவள் வாலு மட்டும் இல்லாத ஒரு பெண் ---- குட்டி. குழந்தைகளை வேறு பெயர் வைத்து சொல்வது எனக்குச் சற்றும் பிடிக்காது. அதனால் நாகரிகமாக் இப்படிச்சொல்லலாம். கீழே விழுந்து ஃப்ரீஸர் பெட்டியின் மூலை நெற்றியில் பட்டு இரத்தம். என்ன அவளாக விழுந்ததால் அழுகாமல் அதற்குப் பதிலாகச் சிரித்துக் கொள்கிறாள். கண்களில் கண்ணீருடன். பத்தாததற்கு அவள் அம்மாவிடம் இரண்டு அடியும் போனஸாகப் பெற்றுக்கொண்டு.

”அதே கீழ விழுந்து இருக்கு ஏண்டி இப்படி போட்டு அடிக்கிற” என்ற தன் அம்மாவின் திட்டைக் காதிலும் போட்டுக் கொள்ளாது குழந்தையின் தலையில் லேசாக வடியும் இரத்தத்தை கண்ணிலும் பார்க்காத தம்பி மனைவி.

”இவ்வளவு சின்ன குழ்ந்தைகளுக்கு எவ்வளவு சாமர்த்தியம் பாரேன், கீழே விழுந்து இரத்தம் வந்தும் அழலையே. தன் த்ப்புன்னு தெரிஞ்சிகிட்டு சிரிக்கிறாளே” என்று ஊரிலிருந்து வந்திருந்த அப்பாவின் சித்தி..

வாசலில் பக்கத்து வீட்டில் இருந்து அப்போதுதான் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு..”சூடா இருக்கு. கப்புல ஊற்றும் போது ஜாக்கரதை.. இது போதலன்னா கேளுங்க” என்று பக்கத்து வீட்டு அம்மா..

போதும் போதும். இதுவே ஜாஸ்தி. உங்களுக்குத்தான் ரொம்ப சிரமம். இது அந்த கிருஹத்தின் மூத்த மருமகள். அண்ணனின் சகதர்மினி . என் அண்ணி...
“அப்பாவுக்கு இது கூட செய்யாம என்ன?” என்று அப்பாவிடம் உண்மையிலேயே பாசம் கொண்ட, கண்களில் நீர் தளும்ப தளதள குரலில் அந்த அம்மா.

.”அப்பாடா நல்ல வேளை காபி வந்துடுச்சு. ரொம்ப தலைவலிக்குது.. கொஞ்சம் எனக்குச் சூடா முதலில் கொடுத்துடு” இது அப்பாவின் அக்கா மகன். அந்த வீட்டின் இரண்டாவது மாப்பிள்ளை. என் அன்புக் கணவர்.

ஒரு காதை மூடிக்கொண்டு ஒரு காதில் ரிசீவரை வைத்துக்கொண்டு எல்லோரையும் சற்று அமைதிப் படுத்தி விட்டு ’மாமா கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.. காதுல விழுகல்’ என்றேன். என்ன சொன்னாரோ புரியவில்லை. கடைசி வார்த்தை மட்டும் லேசாகப் புரிந்தது. ‘கெடச்சிடுச்சு’ என்று மெலிதாகக் கேட்டது. மீண்டும் அவரை என்ன கெடச்சிடுச்சு? என்று கேட்டேன். அவரால் கத்த முடியவில்லையோ இல்லை எனக்குத்தான் காது மந்தமோ தெரியவில்லை. ஒன்றும் பலிக்காமல் போக நானும் அண்ணனிடம் ’கெடச்சிடுச்சாம்’ என்றேன். அண்ணனும் பெரிய குரலில் கெடச்சிடுச்சாம் என்றார்.. கெடச்சிடுச்சாம் என்று நானும் அண்ணனும் கூறியவுடன் கெடச்சிடுச்சாம்... கெடச்சிடுச்சாம்.... என்னும் எதிரொலிகள் நாலா பக்கமும் கேட்டன. அனைவரது முகத்திலும் ஒரு வித நிம்மதி....

பத்தே நிமிடத்தில் மாமா வந்தார் கையில் ஒரு சுள்ளியைப் பிடித்துக் கொண்டு.. அன்று ஞாயிற்றுக்கிழமை. கடைகள் எல்லாம் விடுமுறை. அலைந்து திரிந்து எங்கும் கிடைக்க வில்லை. இறுதியாக மூடியிருந்த ஒரு கடையைத் திறக்கச்சொல்லி ஒரு ஜான் அளவே உள்ள அந்தச் சுள்ளியை ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கி வந்திருந்தார் மாமா. அப்போதைக்கு அந்த வீட்டின் வீரப்பன் அவர்தான். மகிழ்ச்சி. அவருக்கு அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போதே..

ஆகட்டும்... ஆகட்டும்.... அப்பரம் குளிகை வந்துடும் என்று சாஸ்திரி கொஞ்சம் சுதியோடு அவசரப்படுத்தினார். ஃப்ரீஸரில் உரைந்து போயிருந்த அப்பா வீதிக்கு வந்து விட்டார்.. வீட்டில் போட்ட சாப்பாடு போதவில்லை என்று அனைவரும் வாசலில் சென்று வாயில் அரிசியை நிரப்பினர்.

நீ கஞ்சி ஊத்தினதாலதான் நான் சீக்கிரம் கிளம்பிட்டேன். இன்னும் அரிசி வேற போட வந்திருக்கியா என்று அப்பா என்னை ஏக்கமாகப் பார்ப்பது போல இருந்தது. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாரோ... நாம்தான் கஞ்சியை ஊற்றி அனுப்பி வைத்து விட்டோமோ என்று எனக்குள் ஒரு குற்ற உணர்வு. அந்த அரிசியைப் போடவும் மனமில்லாமல் போடாமல் இருக்கவும் முடியாமல் கை நடுங்க போட்டு வந்தேன். அப்பாவை ஊர்தியில் ஏற்றினர். வீதி வரை சென்று அப்பாவை வழியனுப்பி வைத்தோம், கைகளால் டாடா மட்டும் காண்பிக்காமல் கண்களில் நீரைக் காண்பித்து.

.இரண்டே மணி நேரம் ஒரு சிறு சட்டியில் சாம்பலுடன் அண்ணன், தம்பி இருவரும் உறவுகள் புடை சூழ வந்தனர். “அதுக்குள்ளயா முடிஞ்சுடுச்சு?” என்று வியப்புடன் வீட்டில் இருந்த பெண்கள் அனைவர் குரலும்.....

”அப்பாவோட நெஞ்சுல கொஞ்சம் நாங்க சட்டியில் கொண்டு போன நெருப்பு, அப்பறம் அந்த சந்தனக்கட்ட இரண்டையும் வைச்சு மிஷினுக்குள் விட்டாங்க.. ஐஞ்சே நிமிஷத்துல அப்பா சாம்பலா வெளியில வந்துட்டாரு என்றான் அண்ணன் ஆச்சரியத்துடனும் வருத்தத்துடனும் ஒரு நீண்ட பெருமூச்சுடனும்.... எங்க அப்பாவைச் சந்தனக்கட்டையில் எரிச்சிருக்கோம்..... எங்க அப்பா ரொம்ப அழகு.......
சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



ஆதிரா.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by ஜாஹீதாபானு Fri Oct 14, 2011 6:07 pm

ரொம்ப வருத்தமா இருக்கு படித்ததும் சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by Aathira Fri Oct 14, 2011 7:27 pm

இளமாறன் wrote:ரொம்ப சொகமா இருக்கே

அறிவியல் வளர்ச்சி யில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உறவுகளின் இணைப்பும் மாறி வருகிறது சோகம் அழிந்து வருகிறது

ஆம் இளா. படித்துக் கருத்து சொன்னதற்கு நன்றி அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by அப்துல்லாஹ் Fri Oct 14, 2011 7:30 pm

அலங்காரமான வார்த்தைகள் எதையும் சொல்லத் தடுக்கும் அளவில் மனதில் ஒரு சோக சித்திரமே விவரிக்கப்பட்டதாயிற்று....

விலைமதிக்கமுடியாத விருட்சமே விதையாய் விதைக்கப்பட்ட ஒரு கால யந்திரத்தின் கட்டாய நிகழ்வு....

காலம் கடந்த அந்த சோகமான நிகழ்வின் நினைவில் மனம் வாடும் சகோதரிக்கு எனது ஆறுதலும் அன்பான மறுமொழியும்....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Aஎங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Bஎங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Dஎங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Uஎங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Lஎங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Lஎங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Aஎங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by vasanthe2590 Fri Oct 14, 2011 9:06 pm

நீ கஞ்சி ஊத்தினதாலதான் நான் சீக்கிரம்
கிளம்பிட்டேன். இன்னும் அரிசி வேற போட வந்திருக்கியா என்று அப்பா என்னை
ஏக்கமாகப் பார்ப்பது போல இருந்தது
இத படிக்கும் போது கஷ்டமா இருக்கு....


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by Aathira Fri Oct 14, 2011 9:30 pm

dsudhanandan wrote:
Aathira wrote:
dsudhanandan wrote:மனதை கனக்க வைக்கிறது உங்கள் நினைவலைகள்...
உங்களையும் துன்பச்சுமையைச் சுமக்க வைத்ததற்கு வருந்துகிறேன் சுதானந்தன். மன்னிக்கவும். நன்றியுடன்.. அன்பு மலர்

மன்னிப்பெல்லாம் வேண்டாம் அக்கா... படிக்கும்போது என் அப்பா அம்மா நினைவுகளும் வந்தது... அதான்...

என்ன சொல்கிறீர்கள் சுதானந்தன்? அப்பா அம்மா??????
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by dsudhanandan Fri Oct 14, 2011 10:41 pm

Aathira wrote:
என்ன சொல்கிறீர்கள் சுதானந்தன்? அப்பா அம்மா??????

அப்பா - 16 ஆண்டுகள் , அம்மா 6 ஆண்டுகள் ஆயிற்று அக்கா...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by கே. பாலா Fri Oct 14, 2011 10:44 pm

dsudhanandan wrote:
Aathira wrote:
என்ன சொல்கிறீர்கள் சுதானந்தன்? அப்பா அம்மா??????

அப்பா - 16 ஆண்டுகள் , அம்மா 6 ஆண்டுகள் ஆயிற்று அக்கா...
சோகம் சோகம் சோகம் சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by Aathira Fri Oct 14, 2011 11:06 pm

dsudhanandan wrote:
Aathira wrote:
என்ன சொல்கிறீர்கள் சுதானந்தன்? அப்பா அம்மா??????

அப்பா - 16 ஆண்டுகள் , அம்மா 6 ஆண்டுகள் ஆயிற்று அக்கா...
வருந்துகிறேன் சுதானந்தன். தாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இவ்வேளையில் தங்களைச் சங்கடப் படுத்திய இந்தப் பதிவு இட்டதை எண்ணும் போது வருத்தமாக உள்ளது.

சரி இன்னொரு தாய் வரப்போகிறாளே.... 🐰 🐰 அவள் ஈடு செய்வாள் எல்லாவற்றையும்..... ஜாலியா சிரிங்க சுதானந்தன். சிரி சிரி சிரி சிரி நான் இப்போது உலாப்பேசியில் அழைக்கிறேன்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by dsudhanandan Fri Oct 14, 2011 11:20 pm

Aathira wrote:
dsudhanandan wrote:
Aathira wrote:
என்ன சொல்கிறீர்கள் சுதானந்தன்? அப்பா அம்மா??????

அப்பா - 16 ஆண்டுகள் , அம்மா 6 ஆண்டுகள் ஆயிற்று அக்கா...
வருந்துகிறேன் சுதானந்தன். தாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இவ்வேளையில் தங்களைச் சங்கடப் படுத்திய இந்தப் பதிவு இட்டதை எண்ணும் போது வருத்தமாக உள்ளது.

சரி இன்னொரு தாய் வரப்போகிறாளே.... 🐰 🐰 அவள் ஈடு செய்வாள் எல்லாவற்றையும்..... ஜாலியா சிரிங்க சுதானந்தன். சிரி சிரி சிரி சிரி நான் இப்போது உலாப்பேசியில் அழைக்கிறேன்.

அதெல்லாம் மனதின் ஒரு மூலையிலிருந்தது.... உங்கள் அப்பாவைப் பற்றிய பதிவை படித்ததும் என் அப்பா, அம்மா நினைவுகளும் வந்தது.... வேறொன்றும் இல்லை ... உங்கள் ஆறுதலுக்கு நன்றி அக்கா.... நான் இப்ப O K அக்கா புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by Aathira Sat Oct 15, 2011 6:40 pm

உமா wrote:
அப்பாவின் உடலை ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு ஆம்புலன்ஸில் எடுத்து வந்த நேரம், அனைவருக்கும் ஃபோன் பண்ணி இறப்புச் செய்தியைச் சொன்ன நேரம் தொட்டுத் தொட்டு அழுதுட்டு இருந்த அம்மாவை விலக்கிட்டு அப்பாவைப் ப்ரீஸர் பாக்ஸில் படுக்க வைத்த நேரம், உறவுக்காரங்க எல்லாரும் ஒவ்வொருவரா வந்து பிலாக்கணம் பாடி அழுது கதறின நேரம், இப்படி எந்த நேரத்திலும் இல்லாத் ஒரு பரபரப்பு இப்போது. எல்லார் முகத்திலும் கவலை ரேகை கட்டை விரல் அகலத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் குரல் வளத்தில் ஆனால் கம்மிய குரலில் சோகப் பாவனையில் ”கிடைக்கலப்பா” என்று வருத்தத்தோடு சொன்னார்கள்.. அங்கே கேட்டுப் பாரேன். இங்கே கேட்டுப் பாரேன் என்று அவரவர் அவரவருக்குத் தெரிந்த இடத்தைச் சொன்னார்கள்.

அக்கா இதை மட்டும் தான் படித்தேன், என் அப்பாவின் இறப்பிலும் இப்படிதான் நேர்ந்தது...அதே சூழ்நிலை...
முழுவதும் படித்தால் நான் அழுதே விடுவேன் அக்கா...
இப்போதே மனது வலிக்கிறது .... சோகம்

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எங்க அப்பா ரொம்ப அழகு..... - Page 2 Empty Re: எங்க அப்பா ரொம்ப அழகு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum