புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
61 Posts - 80%
heezulia
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
397 Posts - 79%
heezulia
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
8 Posts - 2%
prajai
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_m10குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Oct 09, 2011 10:10 pm

குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?



பெரியார் திராவிடர் கழகம் - Periyar Mulakkam



2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர்குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியா விலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும் கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும்பார்ப்போம்.

பிரபல இந்தி நடிகையான ஷெர்லின் சாப்ரா என்பவர், குஜராத்தில் ஒருநிகழ்ச்சியில் பேசிய போது, நரேந்திர மோடியைத் தூக்கி வைத்துப்புகழ்ந்து, தான் அவரை சந்தித்ததே இல்லை என்றும், அவரிடம்உதவியாளராகப் பணியாற்றக் கூட தயாராக இருப்பதாகவும் பேசினார்.அவர் பேசிய இடம் குஜராத் தொழிலதிபர்கள் நடத்திய நிகழ்ச்சி.



அடுத்ததாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கி யுள்ள அன்னாஅசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி குஜராத்மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார்என்று. தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப்பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின்உள்நோக்கம். இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது,மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும்நடந்தது. அதுதான் சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள்அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முனவந்துஉச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு.குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரதுகுற்றச்சாட்டு.



கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக்கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்றுஉத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள்கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்துவிட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்தஅதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார்.வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அதுகடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீவைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒருகலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில்குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறைஅமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ்.பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்புபுலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டுவிசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர்அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை.சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்பட வில்லை.பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவேபதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள்பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சை யான விசாரணை மையம் பலஉண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.



இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில்ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம்தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்துகொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல்நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று - மோடிஉத்தரவிட்ட தாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர்கொலை செய்யப் பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மை களை மறைத்தகாவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக்நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவிஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி.இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ்ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்றுஅரசு தரப்பில் மறுக்கப்பட்டது. அப்போது உளவுத் துறையில் துணைஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவேஉயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படிவந்திருப்பார்? என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத்துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார்.எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர்பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின்கட்டுப்பாட் டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத்அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்டபிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போதுநேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையானசான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார்.இந்த அதிகாரியின் வாகனஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதைஉறுதிப்படுத்தியிருக் கிறார். பாதிக்கப் பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில்போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகையாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியானகுற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள்வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.



மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்றநேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவுசெய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன.உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள்பழிவாங்கப் பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டு களுக்குநீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவதுநியாயம் தானே! அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம்வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்புபுலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்றஅவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணைகளையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றிபெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரதுவெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில்தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது!

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்துவிட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில்வியப்பு எதும் இல்லை.



• ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம்அண்மையில் குஜராத்தில் சிறுபான்மை யினர் நிலை பற்றிய ஆய்வுஒன்றை மேற் கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை,வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயேஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாகபாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்தஆய்வு கூறுகிறது.

• குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதிஇந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ளமுஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன்வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.

• தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள்புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.

• 2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும்தற்காலிக முகாம் களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தரமுகாம்கள்கூட அமைக்கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளைஇழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000மட்டுமே.



• கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்புபோன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூகமேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள்பெருகி நிற்பது தான்.

• கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’;இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில்கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்படவேண்டும். தொழிலாளர் களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன்கூட்டியே ஒப்பந்தக்காரர் களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால்தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பலகுளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்குகாட்டப்பட்டுள்ளது. தொழிலாளர் களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி- பெரு மளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.



• 2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை.வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால்சுருட்டப்பட்டு விட்டது.

• 2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால்அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல்கள் நடந்தன.



• பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில்மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாககட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையைசெய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில்2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத்தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம்கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.



• இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங் களுக்கு அவர்கள்விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நலசட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள்,பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின்வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமேதலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட உத்தரவிட்டுள்ளது. உடனே -மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்தபெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின்சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும்குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர்வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன.



• பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள்அதிகரிக்க வில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வுவழியாக அம்பலப்படுத்தி யுள்ளார்.

• குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்குஎதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பிவாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காகஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக்கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கஅனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன்,மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்துபோராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.



• சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்றவிலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும்,குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில்நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்தமார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.



• உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வுநிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்க ளினால் 5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேகாலகட்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.



• “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டுவரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை.ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாகஇருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்றஎழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.



• மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது.சட்டமன்றங்கள் அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே செயல்படுகின்றன.

• தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது.தலித் மாணவர் களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமரவைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாகஇடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின்பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில்அச்சத்தின் பிடியில் மைனாரிட்டி களும் தலித் மக்களும் வாடும்நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டுநிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில்நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம்? கருவுற்றதாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின்எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாகஇருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டமக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கேஇருக்கிறதா? என்ற கேள்விக்கு, இவர்களிடமிருந்து பதில் இல்லை.இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா?



தகவல்கள்: ‘பிரன்ட்லைன்’ மே 20, 2011

http://periyardk.org

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 09, 2011 10:41 pm

இன்று பெரியார் பெயரை சொல்லி அரசியல் மட்டும் தான் பண்ணுகிறார்கள், மற்றபடி அவர்கள் மிகவும் நல்ல கடவுள் பக்தர்கள்...

நான் மோடி பற்றி - கட்டுரைக்கு பின்னூட்டமிடமல், பெரியார் DK . ORG பற்றி சொல்கிறேன் என்று விவரம் இல்லாமல் அப்பாவியாக இருபவர்களுக்கு - இவர்களே ஒரு பொய்யர்கள், இவர்கள் சொல்வதெல்லாம் பெரியதாக விவரமானவர்கள் எடுத்து கொள்ள மாட்டார்கள்....

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Oct 09, 2011 11:14 pm

பிரசன்னா wrote:இன்று பெரியார் பெயரை சொல்லி அரசியல் மட்டும் தான் பண்ணுகிறார்கள், மற்றபடி அவர்கள் மிகவும் நல்ல கடவுள் பக்தர்கள்...

நான் மோடி பற்றி - கட்டுரைக்கு பின்னூட்டமிடமல், பெரியார் DK . ORG பற்றி சொல்கிறேன் என்று விவரம் இல்லாமல் அப்பாவியாக இருபவர்களுக்கு - இவர்களே ஒரு பொய்யர்கள், இவர்கள் சொல்வதெல்லாம் பெரியதாக விவரமானவர்கள் எடுத்து கொள்ள மாட்டார்கள்....

உன்மை தான்...நம்ம ஊர்ரில் மதத்தின் பெயரால் ,தலைவர்களின் பெய்ரால் அரசியலும்,தீவிரவாதமும்,பிரிவினைகளும் நடக்கத் தான் செய்கிறது..எது உன்மை,எது பொய் என்பது சம்பந்தவட்டர்களுக்கும்,கடவுளுக்கும் மட்டுமே தெரிந்த உன்மை..ஒரே செய்தியை நம்ம ஊடகங்கள் அவரவர்களுக்கு சாதகமாகத் தானே சொல்லிக் கொண்டிருக்கின்றன,

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 09, 2011 11:19 pm

அரசியல் நாடகத்தில இது எல்லாம் சகஜம் அப்பா

இதுல பாவம் ஏழைகள் தான் அவர்கள் தான் பலிகடா சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 10, 2011 8:03 am

மூன்றே நாட்களில்குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 பேர் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டனர்
சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? 1357389குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? 59010615குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Images3ijfகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 10, 2011 11:44 am

பிரசன்னா wrote:இன்று பெரியார் பெயரை சொல்லி அரசியல் மட்டும் தான் பண்ணுகிறார்கள், மற்றபடி அவர்கள் மிகவும் நல்ல கடவுள் பக்தர்கள்...
நான் மோடி பற்றி - கட்டுரைக்கு பின்னூட்டமிடமல், பெரியார் DK . ORG பற்றி சொல்கிறேன் என்று விவரம் இல்லாமல் அப்பாவியாக இருபவர்களுக்கு - இவர்களே ஒரு பொய்யர்கள், இவர்கள் சொல்வதெல்லாம் பெரியதாக விவரமானவர்கள் எடுத்து கொள்ள மாட்டார்கள்....
இந்த கட்டுரைக்கு மிகச்சரியான பின்னூட்டம் பிரசன்னா , மேற்கொண்டு எதுவும் சொல்லுவதற்கில்லை

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:54 am

பிரசன்னா wrote:இன்று பெரியார் பெயரை சொல்லி அரசியல் மட்டும் தான் பண்ணுகிறார்கள், மற்றபடி அவர்கள் மிகவும் நல்ல கடவுள் பக்தர்கள்...

நான் மோடி பற்றி - கட்டுரைக்கு பின்னூட்டமிடமல், பெரியார் DK . ORG பற்றி சொல்கிறேன் என்று விவரம் இல்லாமல் அப்பாவியாக இருபவர்களுக்கு - இவர்களே ஒரு பொய்யர்கள், இவர்கள் சொல்வதெல்லாம் பெரியதாக விவரமானவர்கள் எடுத்து கொள்ள மாட்டார்கள்....

திருடனும் திருடனும் மோதிக்கொள்கிறார்கள்! வீணாய் நாம் தீது கொள்கிறோம் !



குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா? Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக