ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

+8
Manik
jesudoss
முகம்மது ஃபரீத்
பூஜிதா
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
மாணிக்கம் நடேசன்
முஹைதீன்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by முஹைதீன் Sun Oct 09, 2011 6:21 pm

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? கொஞ்சம் இத படிங்க!


சூடாக காப்பி, டீ குடிப்பவரா? சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!

“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”

இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.

சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.

தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.

காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகை யையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.

“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.

ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.

அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:

* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.

* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.

* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.

* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.

* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.

* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.

* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.

* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.

* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.

இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

அதிக சூடாக டீ குடித்தால் தான் கேன்சர் வரும்; அதிக சூடாக காபி குடித்தால்…? இப்படி காபி குடிப்பவர் களுக்கு கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர்.

ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங் கல்ல

kalvikalanjiam


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by மாணிக்கம் நடேசன் Mon Oct 10, 2011 4:11 am

ஐயோ, இனி காப்பியே தொட மாட்டேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by கேசவன் Mon Oct 10, 2011 7:50 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? 1357389காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? 59010615காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Images3ijfகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 10, 2011 8:58 am

நான் எப்போதும் மிதமான சூட்டில்தான் காப்பி குடிப்பேன். ஆகவே எனக்கு ஒன்றும் பயமில்லை மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by பூஜிதா Mon Oct 10, 2011 12:14 pm

தகவலுக்கு நன்றி
நான் காஃபி ஆரியபிறகுதான் சாப்பிடுவேன்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by முகம்மது ஃபரீத் Mon Oct 10, 2011 12:18 pm

அதுசெரி அப்ப இனிமேல் மிதமான சூட்டில் தான் குடிச்சு பழகனும்... சோகம் நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by jesudoss Mon Oct 10, 2011 5:25 pm

ஐ ஐ யோ நான் சூடாகதான் டீ குடிப்பேன்................காப்பீ சுத்தமாக பிடிக்காது...காபீ இல் கேபசீனுதான் குடிப்பேன்..........அது எப்படி உடம்புக்கு கெடுதலா....

எண்ணங்கபா பீதிய கிலபி உடுறீங்க ....... இனிமேல் டீ குடிக்கும்போதெலாம் முகைடீனோட பதிவுதானே நினைவுக்கு வரும்

அதிர்ச்சி அதிர்ச்சி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? 154550 காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? 154550 காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by Manik Mon Oct 10, 2011 5:28 pm

ரொம்ப சரியா சொல்லிட்டீங்க அண்ணா எனக்கு சூடா குடிக்கிறதே பிடிக்காது என்னமோ நெருப்ப அள்ளி வாயில போட்ட மாதிரி குடிக்கனும் அதனால இளஞ்சூடா இருக்கும் போது குடிச்சாதான் டேஸ்டே தெரியும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by ஜாஹீதாபானு Mon Oct 10, 2011 5:58 pm

Manik wrote:ரொம்ப சரியா சொல்லிட்டீங்க அண்ணா எனக்கு சூடா குடிக்கிறதே பிடிக்காது என்னமோ நெருப்ப அள்ளி வாயில போட்ட மாதிரி குடிக்கனும் அதனால இளஞ்சூடா இருக்கும் போது குடிச்சாதான் டேஸ்டே தெரியும்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by அசுரன் Mon Oct 10, 2011 10:14 pm

அதிக சூடு ஆபத்துன்னு சொல்லிட்டீங்க... சரி விடுங்க இனி குடிக்கல புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? Empty Re: காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum