ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

+8
Manik
உமா
இளமாறன்
சதாசிவம்
பிளேடு பக்கிரி
கோவிந்தராஜ்
kitcha
rameshnaga
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by rameshnaga Sun Oct 09, 2011 4:30 pm

First topic message reminder :

இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.

அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.

குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.

அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.

அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.

பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?

இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.

அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.

பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by பூஜிதா Mon Oct 10, 2011 2:52 pm

இப்போ இப்படிதான் நடக்கிறது, கவிதை அருமை அருமையிருக்கு

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by ayyamperumal Mon Oct 10, 2011 2:59 pm

rameshnaga wrote:

பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?

பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?

நான் முதலில் படித்துவிட்டேன் ரமேஷ் நாகா ! மற்ற கவிதையிலிருந்து இந்த நடை சற்று மாறியிருக்கிறது .. என்பதாலேயே இதில் வரும் பின்னூட்டங்களை கவனித்தேன் ..........

இதை வசன கவிதை என்று நீங்கள் கூறினால் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா ? ஆரம்பத்தில் வசனமாய் ஆரமித்து போக போக அதில் நவிலும் கவிநயங்கள் வசன அடுக்கு என்கிற மதீப்பீட்டை மீறிவிட்டது. இது கவிதை தான் வசன கவிதை அல்ல !

மற்றபடி கவிதையில் கவினயத்தைதான் தேட வேண்டும் என்று நீங்கள் தொடங்கியிருக்கும் புதிய பயணத்திர்க்கு என் வாழ்த்துக்கள் ! தொடர்க !

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by சதாசிவம் Mon Oct 10, 2011 3:22 pm

ரமேஷ், உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன், ஒரு சில கருத்தை எடுத்துவைக்க முயல்கிறேன். தவறாக என்ன வேண்டாம்.

ஒரு கவிதையோ, பாடலோ பல அம்சங்களை உடையது, குறிப்பாக இலக்கணப்படி அமையாவிட்டாலும் எதுகை, மோனை, ஓசை நயம், மொழிவளம், உவமை, கருத்துச் செறிவு ஆகிய பல அம்சங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். இவற்றில் கருத்தை மட்டுமே நோக்கி எழுதப்படும் கவிதைகள் அறுசுவை உணவு பரிமாறுதலுக்கும், சாதாரண உணவு பரிமாறுதலுக்கும் இருக்கும் இடைவெளி போல் நான் உணர்கிறேன். பல கவிதை எழுதுபவர்களும் மொழி வளம் இல்லாமல் வெறும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளை எழுதும் போது ஒரு மொழியின் சிறப்பு எப்படி வெளிப்படும்? இப்படி எழுதுவது சரி என்ற எண்ணம் வளரும் கவிஞசனுக்கு வந்து விட்டால் அவன் எப்படி தன் மொழிவளத்தை பெருக்க முடியும். இன்றைக்கு கவிதை எழுதும் பலரும் சங்கப்பாடல்களை வெகுவாக அறிவதில்லை, ஆனால் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் பாடல்களின் சங்கப்பாடல்களின் சாயல் இருக்கிறது.

கவிதை மொழியின் ஒரு கூறு, ஒரு கவிஞர் தன் கருத்தை கூறுகிறார் என்றாலும், ஒரு மொழியின் சிறப்பை பயன்படுத்தாமல் எழுதும் கவிதைகள் காலம் கடந்து நிற்குமா என்பது என் கேள்வி?, கருத்து மட்டும் உள்ள கவிதைகள் ஒரு சிக்கி முக்கி கல்லில் வெளிப்படும் ஒளி போல், அல்லது மின்னலில் வரும் ஒளி போல் படிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது உண்மை ஆனால் இந்த இரண்டு ஒளியின் ஆயுள் ஒரு சில வினாடி தான், அது போல் இந்த கவிதைகள் இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது , புரட்சி கவிதை எழுதினும் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் வரிகள் ஓசை நயம் மிக்கவை, சுலபமாக பாட்டீல் ஏற்றலாம், பாரதி தான் எழுதிய கவிதைகளை இன்ன இன்ன ராகத்தில் பாடலாம் என்று குறிப்பு கூட கொடுத்து இருக்கிறார்.

உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?

இதில் உங்கள் பார்வை என்ன?

சதாசிவம்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by ayyamperumal Mon Oct 10, 2011 3:32 pm

சதாசிவம் wrote: இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது ,

உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?
இதில் உங்கள் பார்வை என்ன?

நல்ல திறனாய்வு நோக்கில் எழுதப்பட்ட கட்டுரை சதா ! எப்பொழுது படித்தாலும் எத்தனை முறை படித்தாலும் சுவை நிறைந்த எழுத்துகளை எழுத பழகவேண்டும் என்பது வரவேர்ப்புக்கு உரியது.

அதே சமயத்தில் இலக்கணம் என்பது ......... கவிதையில் கவிநயத்தை கலந்திருப்பதுதானே புதுக்கவிதையில் இலக்கணம் என்பார் ராஜா மார்த்தாண்டன். நன்றி ! வேறு யாரும் கருத்து கூறியிருந்தால் தெரிவிக்கவும். நன்றி !

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by rameshnaga Mon Oct 10, 2011 3:33 pm

ரொம்பவும் நன்றி! மாணிக்., பூஜிதா., அய்யம்பெருமாள்., சதாசிவம்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by rameshnaga Mon Oct 10, 2011 3:51 pm

சதாசிவம் wrote:ரமேஷ், உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன், ஒரு சில கருத்தை எடுத்துவைக்க முயல்கிறேன். தவறாக என்ன வேண்டாம்.

ஒரு கவிதையோ, பாடலோ பல அம்சங்களை உடையது, குறிப்பாக இலக்கணப்படி அமையாவிட்டாலும் எதுகை, மோனை, ஓசை நயம், மொழிவளம், உவமை, கருத்துச் செறிவு ஆகிய பல அம்சங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். இவற்றில் கருத்தை மட்டுமே நோக்கி எழுதப்படும் கவிதைகள் அறுசுவை உணவு பரிமாறுதலுக்கும், சாதாரண உணவு பரிமாறுதலுக்கும் இருக்கும் இடைவெளி போல் நான் உணர்கிறேன். பல கவிதை எழுதுபவர்களும் மொழி வளம் இல்லாமல் வெறும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளை எழுதும் போது ஒரு மொழியின் சிறப்பு எப்படி வெளிப்படும்? இப்படி எழுதுவது சரி என்ற எண்ணம் வளரும் கவிஞசனுக்கு வந்து விட்டால் அவன் எப்படி தன் மொழிவளத்தை பெருக்க முடியும். இன்றைக்கு கவிதை எழுதும் பலரும் சங்கப்பாடல்களை வெகுவாக அறிவதில்லை, ஆனால் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் பாடல்களின் சங்கப்பாடல்களின் சாயல் இருக்கிறது.

கவிதை மொழியின் ஒரு கூறு, ஒரு கவிஞர் தன் கருத்தை கூறுகிறார் என்றாலும், ஒரு மொழியின் சிறப்பை பயன்படுத்தாமல் எழுதும் கவிதைகள் காலம் கடந்து நிற்குமா என்பது என் கேள்வி?, கருத்து மட்டும் உள்ள கவிதைகள் ஒரு சிக்கி முக்கி கல்லில் வெளிப்படும் ஒளி போல், அல்லது மின்னலில் வரும் ஒளி போல் படிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது உண்மை ஆனால் இந்த இரண்டு ஒளியின் ஆயுள் ஒரு சில வினாடி தான், அது போல் இந்த கவிதைகள் இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது , புரட்சி கவிதை எழுதினும் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் வரிகள் ஓசை நயம் மிக்கவை, சுலபமாக பாட்டீல் ஏற்றலாம், பாரதி தான் எழுதிய கவிதைகளை இன்ன இன்ன ராகத்தில் பாடலாம் என்று குறிப்பு கூட கொடுத்து இருக்கிறார்.

உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?

இதில் உங்கள் பார்வை என்ன?

உங்களுடைய கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கமுடியாது சதாசிவம்.
இந்த உரை நடைக் கவிதைகள் மொழிக்கு வளம் சேர்க்கமுடியாது என்பதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். இருந்தாலும்..நான் முன்னமேயே குறிப்பிட்ட படி..
எழுத ஆசைப் படுபவர்களுக்கும்...கவிதை குறித்தான மாயையில் தயங்கி நிற்பவர்களையும்...வெளியே கொண்டு வரும் முயற்சிதான் இது. ஒரு சின்ன திருப்பத்தோடு...கவிதையை நோக்கிய ஒரு பாதையில் எழுத முயற்சிக்கும் ஒருவரைக் கொண்டு வந்துவிட்டால்...கவிதை குறித்தான தயக்கங்கள் ஏதுமின்றி..அவரது பார்வை விரிவடையும் என நம்புகிறேன். இது ஒரு குழந்தையின் கையைப் பிடித்து உட்கார்த்திவைத்து "அ" எழுதவைக்கும் முயற்சியாகத்தான் இதைக் கருதுகிறேன். எழுதுவது எளிது என்ற எண்ணத்தை ஏற்படுத்தவே முயற்சி செய்கிறேன். இரண்டு, மூன்று...கவிதைகள் எழுதியவுடன்...
கவிதையின் மேல் ஈர்ப்பு அதிகமாகும் போது..வெகு நிச்சயம் அவர்களே சரியான கவிதையை எழுதுவார்கள் என்பதும் என் எதிர்பார்ப்பு.

உங்களின் வெகு நியாயமான, கவிதையின் மேல் உள்ள மிகுந்த ஈடுபாட்டுடன்
அமைந்த பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்..சதாசிவம்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by சதாசிவம் Mon Oct 10, 2011 4:17 pm

உங்கள் கருத்தை ஏற்கிறேன் தோழரே, ஆரம்ப நிலையில் கவிதை எழுத வருபவருக்கு இந்த அணுமுறை உற்சாகத்தை அளிக்கும், ஆனால் இது ஒன்றே கவிதை எழுதும் முறை என்ற தவறான எண்ணத்தில் அவர்கள் கவிதைகளை தொடரக் கூடாது. மேலும் தனக்கு கிடைக்கும் பாராட்டை விட விமர்சனத்தில் தான் அதிக உண்மை இருப்பதை உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் என் அவா.

தங்கள் பதிலுக்கு நன்றி

சதாசிவம்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by rameshnaga Mon Oct 10, 2011 6:09 pm

சதாசிவம் wrote:உங்கள் கருத்தை ஏற்கிறேன் தோழரே, ஆரம்ப நிலையில் கவிதை எழுத வருபவருக்கு இந்த அணுமுறை உற்சாகத்தை அளிக்கும், ஆனால் இது ஒன்றே கவிதை எழுதும் முறை என்ற தவறான எண்ணத்தில் அவர்கள் கவிதைகளை தொடரக் கூடாது. மேலும் தனக்கு கிடைக்கும் பாராட்டை விட விமர்சனத்தில் தான் அதிக உண்மை இருப்பதை உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் என் அவா.

தங்கள் பதிலுக்கு நன்றி

ரொம்பவும் நன்றி! சதாசிவம்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by கே. பாலா Mon Oct 10, 2011 10:35 pm

ரமேஷ் நாகவின் ஆசையும் - சதாசிவம் அவர்களின் அச்சமும் நியாயமானதே

"மஹாகவி " என்று சொல்லப்பட்ட பிரமிள் கூட இப்படித்தான் எழுதினார் இன்றும் உச்சி மீது வைத்து கொண்டாடப்படுகிறார் ...பல புகழ்பெற்ற இலக்கிய பத்திரிக்கையில் இப்படித்தான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் யாரும் அவர்களுடைய கவிதையை "கட்டுரை" என்று சொல்லி இழிவுபடுத்தவில்லை ...

சதாசிவம் சொல்கிற "ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமன்றோ "
உண்மைதான் ஒத்துக்கொள்கிறேன்

எனக்கு சக்கரை தூக்கலா ஒண்ணு !..லைட் டா ஒண்ணு.....மீடியம்மா ... ஒண்ணு ....என்று ....கேட்கவேண்டுமா ???? கவிஞனிடம் ..

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by rameshnaga Mon Oct 10, 2011 11:19 pm

கே. பாலா wrote:ரமேஷ் நாகவின் ஆசையும் - சதாசிவம் அவர்களின் அச்சமும் நியாயமானதே

"மஹாகவி " என்று சொல்லப்பட்ட பிரமிள் கூட இப்படித்தான் எழுதினார் இன்றும் உச்சி மீது வைத்து கொண்டாடப்படுகிறார் ...பல புகழ்பெற்ற இலக்கிய பத்திரிக்கையில் இப்படித்தான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் யாரும் அவர்களுடைய கவிதையை "கட்டுரை" என்று சொல்லி இழிவுபடுத்தவில்லை ...

சதாசிவம் சொல்கிற "ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமன்றோ "
உண்மைதான் ஒத்துக்கொள்கிறேன்

எனக்கு சக்கரை தூக்கலா ஒண்ணு !..லைட் டா ஒண்ணு.....மீடியம்மா ... ஒண்ணு ....என்று ....கேட்கவேண்டுமா ???? கவிஞனிடம் ..

ரொம்பவும் நன்றி! கே.பாலா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Empty Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum