ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாறாதே... ஏமாற்றாதே...

Go down

ஏமாறாதே... ஏமாற்றாதே... Empty ஏமாறாதே... ஏமாற்றாதே...

Post by முஹைதீன் Wed Oct 05, 2011 7:21 pm

ஏமாறாதே... ஏமாற்றாதே...

உலகம் தோன்றிய நாளிலிருந்தே ஏமாறுதலும், ஏமாற்றுதலும் உருவாகி விட்டஒன்று தான். முட்டாள்கள் தான் ஏமாறுகிறார்கள். புத்தியுள்ள ப்ராடுகள் தான் ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் சரிதானா... ஏமாற முட்டாள்களாகவும், ஏமாற்ற புத்திஜீவிகளாககவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதர்களாக இருந்தால் மட்டும் போதுமானது.

ஒரு வியாபாரி இன்னொரு வியாபாரியிடம் ஏமாந்து போனார்.
ஏமாந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை, இன்னொரு நபரை ஏமாற்றி அவரால் ஈடுகட்டி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, "என்னை ஒருவன் ஏமாற்றினான் என்பதற்காக, இன்னொருவனை நான் ஏமாற்ற விரும்பவில்லை. நான் கவனமாக இருந்து இருந்தால், நான் ஏமாறாமல் இருந்து இருக்கக்கூடும். இந்த சம்பவத்தை நான் பாடமாக எடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய ,அதை விடுத்து, இன்னொருவனை ஏமாற்ற நினைப்பது மிகப்பெரிய அயோக்கியதனம். அது ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையையும், ஏமாறுபவர்களின் எண்ணிக்கையையும் தானே அதிகரிக்க வழியமைக்குமே ஒழிய வேறொரு நன்மையும் ஏற்படாது" என்றார். சத்தியமான வார்த்தைகள்.

சிலர் சொல்வார்கள், "ஏமாத்துறவனைவிட ஏமாறுறவனுக்கு தான் தண்டனை தரணும்" என்று. அது நம் ஜாக்கிரதை உணர்வுக்காக சொல்லப்படும் விஷயம். உலகம் ஏமாற்றக்கூடிய சக்திகளால் நிரம்பி வழிகிறது. நிச்சயம் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். சாலையில் நடக்கும் போது, ஒரு கல் குத்தி விடுகிறது. நாம் என்ன சொல்வோம், "நான் கல்லை இடிச்சிட்டேன்" என்றா சொல்வோம். மாறாக "கல்லு இடிச்சிடுச்சு" என்று தான் சொல்வோம். அது தான் மனித மனோபாவம்.

நாமாக தேடி போய் ஒருவனிடம் பணத்தை போட்டு ஏமாந்து விட்டு, அவன் நம்மை ஏமாற்றி விட்டதாக சொல்வோம். ஏமாந்து விட்டோம் என்று சொல்வது அவமான கரமான சொல். ஏமாத்திட்டான் என்று சொல்வது, சற்றே கௌரவமான சொல்லாக கருதுகிறோமோ... ஏமாறுவதே சிலருக்கு வாடிக்கை. ஏமாற்றுவதே சிலருக்கு வேலை.
இன்னும் சிலருக்கோ ஏமாறுவதும், ஏமாற்றுவதும் சரிசமமாக... இன்னும் சிலரோ ஏமாறுவதும் இல்லை... ஏமாற்றுவதும் இல்லை...

அரசியல்வாதி ஏமாற்றினால் அது ராஜதந்திரம்... வியாபாரி ஏமாற்றினால் அது தொழில் ரகசியம்... மனிதன் சக மனிதனை ஏமாற்றினால் அதற்கும் ஒரு பெயர் உள்ளது. இப்படி தத்தம் ஏமாற்றுதலுக்கு நியாயம் கற்பிக்க, அழகாக வேறு பெயர் வைத்துள்ளோம். சில இடத்தில், சில ஏமாற்று வேலைகள் நம்பிக்கை துரோகமாகிறது.

கண் முடித்தனமான நம்பிக்கை கூட, பிறர் நம்மை ஏமாற்ற, நாமே தரும் ஒரு அனுமதி சீட்டு தான். நம்பி ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள். நம்பாமல் ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள்.. அப்படி எனில் நம்புவதா, வேண்டாம்மா... சூழல் தான் ஏமாற்ற வைக்கிறது- சில நேரம். ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, எந்த ஒரு காரியத்தையும் வெகு சிலர்
செய்வதில்லை. ஆனால் ஏமாற்றும் படியான சூழ்நிலை வந்து விடுகிறது.

நமது அதிகப்படியான ஆசைகளே. சில நேரம் எதிராளிக்கு "இவன் நல்லா ஏமாறுவான்டா" என்று ஏமாற்றும் ஆசையை தூண்டி விடும். இப்போது ஒரு நிதி நிறுவனம் இப்படி ஆசை காட்டுகிறது. நீங்கள் பத்தாயிரம் ரூபாய் போட்டால், மாதம் ஆயிரம் ரூபாய் என்று முப்பத்தி ஆறு மாதம் தருகிறது. இது எப்படி சாத்தியப் படும் என்று யோசிக்காமலே மக்கள், கூட்ட கூட்டமாய் பணத்தை கொட்டுகிறார்கள். ஒரு லட்ச ரூபாய் போட்டால் மாசம் பத்தாயிரம் ரூபாய் தருகிறார்கள் என்று பணத்தை போட்டு
விட்டு, வேலைக்கே போகாமல் இருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த நிதி நிறுவனத்துக்கும் ஏஜண்ட்கள் இருக்கிறார்கள். ஒரு ஏஜண்டை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. "இந்த பணத்தை கொண்டு போய் எங்க முதலீடு பண்றாங்க" என்று கேட்டதற்கு, "தெரியல" என்றார். எந்த கேள்வி கேட்டாலும் "தெரியல, தெரியல " என்பது தான் பதிலாக இருந்தது. எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை.

காரணம், அவர் கீழ்க்கண்ட விபரம் சொல்லி தான் சேர்க்கிறார். "பணத்துக்கு கேரண்டி கிடையாது. மாச மாசம் உங்களுக்கு செக்
வந்துடும். எப்ப வேணாலும் ஓடி போயிட வாய்ப்பு இருக்கு. அது தெரிஞ்சே
நானும் பத்தாயிரம் போட்டு இருக்கேன்" இவ்வளவுக்கும் பிறகும் மக்கள், "ஏமாற நா ரெடி... ஏமாத்த நீ ரெடியா" என்பது போல் நடந்து கொண்டால், யாரை குற்றம் சொல்வது.

ஒரு செய்தியை அடிக்கடி தினசரிகளில் பார்க்கலாம். "ஆசை வார்த்தை காட்டி, கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய காதலன் கைது"... இங்கே எவ்வளவு சுலபமாக ஏமாறவும், ஏமாற்றவும் முடிகிறது. இயற்கை, இயல்பாகவே மனிதனுக்கு ஒரு சக்தியை கொடுத்துள்ளது. அது உள்ளுணர்வு. அந்த
உள்ளுணர்வை நாம் அறிய வேண்டும்... உணர வேண்டும்...

நாம் ஒரு விஷயத்தை தயங்கி தயங்கி, வேண்டா வெறுப்பாக அல்லது அச்சப்பட்டு செய்கிறோம் என்பதே உள்ளுணர்வு அடிக்கும் விழிப்புணர்வு மணியே அது. காதலன் ஆசை வார்த்தை காட்டுகிறான். அடுத்து என்ன... நாளை இவன் ஏமாற்றவும் செய்யலாம்... ஏமாற்றாதவனாகவும் இருக்கலாம். ஆனால் மனம் முழுமையாக நம்பாமல், இரு வேறாக பிரிந்து பட்டிமன்றம் நடத்த துவங்கினால், நம்மை காத்து கொள்ளக்கூடிய
முடிவை, நாம் ஏமாந்து போகாத, நமக்கு சார்பான நிலையை எடுப்பதே உசிதம்.

அனுபவக் குறைவாய் இருக்கும் ப்ராயத்தில் நாம் ஏமாறலாம்... ஏமாற்றப்படலாம்... அது ஒன்றும் குற்றமில்லை. பட்டு தெளிந்தப்பின்னும் ஏமாந்தால் அது தவறு. ஏமாற்றங்களும், அனுபவங்களும் இரண்டு வித பாடங்களை கற்று தருகிறது. ஏமாறாமல் இருக்க கற்று கொண்ட பாடமே, எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதையும் இலவச இணைப்பாய் அறிய தருகிறது ... அதெல்லாம் நமக்கு வேண்டாமே.

நாம் ஏமாறவும் வேண்டாம்... ஏமாற்றவும் வேண்டாம்...

http://tamiluthayam.blogspot.com/2010/01/blog-post_20.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum