ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 
heezulia
தவற விடுபவை... Poll_c10தவற விடுபவை... Poll_m10தவற விடுபவை... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவற விடுபவை...

Go down

தவற விடுபவை... Empty தவற விடுபவை...

Post by முஹைதீன் Wed Oct 05, 2011 7:03 pm

தவற விடுபவை...

நம் வாழ்வில், நம் காலம் முழுக்க, வழி நெடுக்க - பிள்ளை பிராயம் முதல்
நிறைய விஷயங்களை தவற விட்டு கொண்டே போகிறோம். தொலைப்பதல்ல... தவற விடுவது. தொலைப்பது வேறு, தவற விடுவது வேறு. தவற விடுவதும் - பொருட்களை அல்ல... நிறைய உன்னத அம்சங்களை தவற விடுகிறோம்... பொருட்களை தவற விட்டால் கூட - கணாடெடுத்து விடலாம் அல்லது தேடி பிடித்து, வேறு கூட வாங்கி விடலாம். இவை, எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத, விலை மதிப்பற்றவை. தேடினாலும் இதே மாதிரி ஒன்றை கண்டெடுக்க முடியாது.

குழந்தை பருவத்தில், குழந்தை பருவத்தை தவற விட்டு வாழுவது எத்தனை கொடுமையான அம்சம். எத்தனை பணம் கொடுத்தாலும், மீண்டும் ஒரு குழந்தையாகி, மீண்டும் ஒரு குழந்தை பருவத்தை சுவாசிக்க முடியுமா? அவன் இன்று வாலிபன் தான். ஆனால் குழந்தை பிராயத்தில் - இயல்பாய் அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்தை - அவனால் அனுபவிக்க இயலாது, தவற விட்டு விட வேண்டியதாயிற்று. விளைவு, இன்று வரை வாழ்வில் அனேக விஷயங்களை தவற விட்டு கொண்டே இருக்கிறான்.

நம் வாழ்வில் - நிறைய விஷயங்கள் - சங்கிலி தொடரை போல் ஒன்றை
ஒன்று கவ்வி தொடர்ந்து வருவது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே- அந்த மாதிரி. அவனது பிள்ளை பிராயம்- பிள்ளை பிராயமாகவே இருந்ததில்லை. அவன் அப்பா மிக கண்டிப்பானவர் மற்றும் மிக மிக கோபக்காரர். அதன் விளைவு- அந்த சிறுவன் நிறைய விஷயங்களை தவற விட்டான். அவன் அப்பா, அவனை குழந்தைகளோடு விளையாட அனுமதிக்க மாட்டார். கெட்டு போய் விடுவானாம்.

வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பார். ஜன்னல் கம்பிகளின் வழியே உலகத்தை
பார்ப்பான். ஸ்கூல்- ஸ்கூல்லை விட்டால் வீடு... வீட்டை விட்டால்
ஸ்கூல்... இந்த அளவே அவனது சுதந்திரம் இருந்தது... அதனால் அவனது மொத்த பிள்ளை பிராயத்து குதூகலமும் தவறியே போனது. "சடங்கான பிள்ள மாதிரி" வீட்டுக்குள்ளேயே இருக்கான்டா என்று- மற்ற பையன்கள் கேலி பேசியதில்- அவன் தனது சந்தோஷங்களை தவற விட்டான்.

கொஞ்சம் வளர, வளர - அவனுக்கு சிறிதளவு சுதந்திரம் தரப்பட்டாலும், அதை
அனுபவிக்க முடியவில்லை. வீட்டுக்குள் கிடப்பதையே சுகமாக கருதியதில்,
மேலும் சில ஆனந்தத்தை தவறவிட்டான். எதற்குமே அச்சப்பட்டு வாழும் மனநிலையை பெற்றான். தன்னம்பிக்கையையும் தவற விட்டான். ஒரளவுக்கு படிக்கக்கூடிய பையனாக இருந்தமையால், மற்ற குறைபாடுகளை - இது பேலன்ஸ் பண்ணியது. யாரோடும் சேராமல் இருப்பதையே விரும்பியதால்- நட்பு வட்டத்தை தவற விட்டான். அதனால் - நட்பு வட்டம் மூலம் கிடைக்கும் நல்ல விஷயங்களும் தவறி போனது.

யாரிடமும் எது கேட்கவும் தயங்கினான். "பையன் நல்ல ஒழுக்கமுள்ளவனா வரணும்" என்கிற காரணத்தால், பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பிள்ளை, தன் வாழ்வில் தேவையான அனைத்து நல்ல விஷயங்களை தவற விட்டு கொண்டே வந்தது. என்றோ, எப்போதோ - சரியாக இருக்கும் என்று நினைத்து செய்த சில விஷயங்கள், முற்று பெறாமல்- அவன் மொத்த வாழ்வையும் அலைக்கழித்த வண்ணமே இருந்தது. விளைவு, ஏதாவதொன்றை எப்போதும் தவற விட்ட வண்ணமே இருந்தான்.

கல்லூரியில் சேர்ந்தான். அவன் வாங்கிய மார்க்க்கு, அவன் தந்தை எடுக்க சொன்ன பாடத்திற்கு, உள்ளுர் காலேஜில் இடம் கிடைக்காததால் ஹாஸ்டலில் சேர்ந்தான். ஆனால் ஹாஸ்டலில் அவனால் இருக்க முடியவில்லை. இரண்டொரு தினங்களிலேயே "ஹோம் சிக்". வீட்டு
ஞாபகங்கள் வருத்த- அவனை அலைகழிக்க - வீட்டுக்கு ஓடி வந்து. அம்மா மடியில் படுத்து கொண்டு, "ஹாஸ்டலுக்கு போக மாட்டேன்" என்று அழுது இருக்கிறான். "நாற்பதாயிரம் பீஸ் கட்டி இருக்கு. போடா" என்று அவன் அப்பா விரட்ட, மிக பெரிய களோபரம் நடந்தது - வீட்டில். "வெட்கம்மா இல்ல. இவ்வளவு பெரிய மாடா இருந்துட்டு பயமா இருக்குங்கிற. உன்கூட படிக்கிறவங்க எப்படி இருக்காங்க". என்று அவன் அப்பா சொல்ல -கடைசியாக அவன் சொன்னான். "நீ ஹாஸ்டலுக்கு போக சொன்னா தற்கொலை பண்ணிக்குவேன்" என்று. பிறகு அவன் அம்மா தலையிட்டு, அவனை
ஹாஸ்டலுக்கு அனுப்ப வில்லை. "பிள்ளைய பலி கொடுக்க முடியாது" என்றாள்.

தற்கொலை அளவுக்கு போகும் மாணவர்களில் பெரும் பகுதியினர்- பொத்தி பொத்தி வளர்க்கப்படும் சூழலில் இருந்தவர்களே. பிறகு, மறு வருடம் தான், அவன் வேறு காலேஜில் சேர்ந்தான். அவன் வளர வளர - அவன் எவ்வளவோ நல்ல விஷயங்களை தவற விட்ட வண்ணம் தான் இருந்தான். தவற விடுவது தெரிந்தாலும், அவனால் தவற விடாமல் இருக்க முடியவில்லை.

முதுகலை படித்து கொண்டிருந்த போது, அவன் ஒரு பெண்ணை விரும்பினான். ஆனால், அவனால் அதை - அவளிடம் தெரியப் படுத்தவே
முடியவில்லை. காரணம். பயம். ஆண்களோடு பேசவே அச்சப்பட கூடிய ஒருவன், பெண்களிடம் எப்படி பயமின்றி பேசுவான். தைரியமாக தன் காதலை எப்படி சொல்வான். விளைவு. தன் காதலை சொல்லாமலே போனான். தான் வளர்க்கப்பட்ட விதத்தால் தன் காதலை தவற விட்டான்.

பின்னாளில் வேலைக்கு போனான். எந்த இடத்திலும் அவனால் உருப்படியாக இருக்க முடியவில்லை. "ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணு சொல்றான்" என்று குறைப்பட்டு கொண்டான். இந்த உலகில் அனுசரித்து போகும் குணம் இருந்தால் மாத்திரமே ஜெயிக்க முடியும் என்கிற சிந்தனையை தவற
விட்டான். வழி நெடுக தவற விட்டவையாக நிறைய உள்ளன. இன்று, அவன் அப்பா நினைத்ததற்கு மாறாகவே வளர்ந்துள்ளான். எல்லா கெட்ட பழக்கமும் உண்டு.இயல்பாக வளர விட்டிருந்தால் கூட, சரியான பாதையில் சென்று இருக்கக் கூடும்.

இன்று எல்லாவற்றையும் தவற விட்டப்படி நிற்கிறான். இது ஒரு உண்மை
சம்பவம். பதினைந்து வருஷங்கள் முன் நடந்தது. குழந்தை வளர்ப்பில் இன்று
யாரும் - இப்படி இருப்பதில்லை என்று நம்புகிறேன். ஆனால் ஒரு காலத்தில்
இப்படி இருந்தது என்பது உண்மை.

http://tamiluthayam.blogspot.com/2010/04/blog-post.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum