ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
heezulia
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
E KUMARAN
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 
mohamed nizamudeen
சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_m10சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

4 posters

Go down

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Empty சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

Post by ayyamperumal Tue Oct 04, 2011 11:02 am


பேராசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். துளசியும் மாதவனும் அருகருகே நின்றிருந்தார்கள்.
இதை பார்த்தவுடன் வானம் குமுறியதை போலவே அவரது மனமும் குமுறியது. அதேவேளையில் துளசியின் மனதில் கூட இடி இடித்து கொண்டுதான் இருந்தது. இவனின் அருகிலேயே நிற்பதா ? இல்லை விலகி ஒடுவதா என்று .. ஓடினால் இன்னும் தவறாய் நினைப்பரே ? என யோசித்து கொண்டிருந்தாள்...

இங்க கேட்ட கரைச்சலுக்கு வகுப்பே நிரம்பியிருக்கும் என வந்தேன் 4, 5 பேருதான்
இருக்கீங்க .. சரி பரவாயில்லை சிட் டௌன் என்றார். இந்த ஆசிரிய இனமே இப்படித்தான். மாணவர்கள் மத்தியில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடுவர்கள் ஆனால் கண்டுகொள்ள மாட்டார்கள். இவரும் அதை மெய்ப்பிக்கும் வண்ணம் தன் பேச்சை மாற்றினார்.

எங்க உங்க சகாக்களை யாரும் காணவில்லை. எல்லாரும் ஒரேதா கட்டடுச்சுட்டு எங்க போயிருக்காங்க? என்றார்.

அய்யா, இன்று விளங்காம போன விஜய் படம் ரிலீஸ் ஆயிருக்கு. எல்லாரும் அங்க
போயிட்டாங்க என்றான் ஒரு மாணவன். அப்படியா ? நீங்க யாருக்கு ரசிகரு ?

நான் தலைங்க அய்யா.. நீ தறுதலை என்பது எல்லாருக்கு தெரியுமே. உன்ன மாதிரி ஆளுகதான் அவனுக்கு ரசிகரா இருப்பாங்க என்றார்... வகுப்பே சிரித்தது. ஆனால் துளசி மட்டும் சிரிக்கவில்லை. தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள்.

என்ன எல்லோரும் சிரிக்கிறார்கள். ஆனால் இவள்மட்டும் சிரிக்கவில்லை. என் முகத்தில் விழிக்க வெட்கபடுகிற அளவிற்கு என்ன செய்தாள் என யோசித்தார்......
அப்போது " நீ ஏன் மகளை போன்றவள். நீ அவளை போன்றே படபடப்பாய் திரிகிறாய். உன்னை பார்க்கும் போதெல்லாம் என் மகள் இறக்கவில்லை என நினைத்துகொள்கிறேன் " என முன்னர் ஒருமுறை பேராசிரியர் கூறியது துளசியின் மனதில் ஓடியது......

நானும் மறக்கவில்லை துளசி. உன்னிடம் இதை எப்படி பேசுவது என்று தெரியாமல் தவிக்கிறேன்
என்றவர் .. தன் மகளின் நினைவு வந்தவுடன் தானாக வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைக்க கண்ணாடியை கழற்றினர். உடனே பேச்சையும் மாற்றினார்... டேய் , படம் நல்லாயிருக்குமா? என்றார்

சார், கவலையே படாதீங்க .. நம்ம மாணவர்கள் எல்லாரும் இன்னும் 1 நிமிசத்தில
வகுப்புக்கு வந்துருவாங்க . ஏனா.. அந்த படத்த பார்க்குறதுக்கு உங்க கிளாஸே பெட்டராம் என்று அதே பழைய குரல் ஒலித்தது. ஆசிரியரும் சிரித்தார் பொய்யாக ...

நேரம் முடிந்ததும் அவரும் சென்றார். அதுவரையில் துளசி நிமிரவே இல்லை. ஒரே வகுப்பறை, ஒரே மாணவர்கள் , ஒரே இடம் ஆனால் பேராசிரியர்களின் குணத்திற்கு ஏற்ப சூழல் மாறிப்போனது .. வாழ்க்கையும் இப்படித்தான் மன என்னத்திற்கு ஏற்ப மாறும் என்று புரிந்துகொள்ளத்தான் கல்லூரி படிப்பா ?

கல்லூரி முடிந்ததும் எல்லோரும் சென்றார்கள். துளசிக்கு மட்டும் அந்த பேராசிரியரிடம்
இருந்து அழைப்பு வந்தது. அவரின் வெற்றிக்கு சென்றாள். வா துளசி ,, இந்த இதை படி என்று ஒரு பழிய டைரியை நீட்டினார்.. அதில்

அப்பா ,
சூரிய ஒளியின் ஆனால் எவ்வளவு சூடாக இருந்தாலும் , அதை தாங்கிக் கொள்கிறோம்.
ஆனால் அந்த வெப்பத்தை உள்வாங்கி வெளிப்படுத்துகிற மணலின் சூட்டில் நம்மால் நிற்கமுடிவதில்லை. துடிதுடித்து போகிறோம். அதே போன்றுதான் அப்பா நானும் துடித்தேன். என்னை பற்றி இந்த உறவினர்கள் ஆயிரம் குறை கூறினார்கள். நான் அதை கண்டுகொள்ளவில்லை. ஒரு சமயத்தில் நீங்களும் அதை உள்வாங்கி என்னை சுடு சொல்லால் சுட்டு விட்டீர்கள் . அதனால் தான் நான் தற்கொலை முடிவிற்கு ........என நீண்டது.

ஆம் துளசி, என் மகளை நான் குறை கூறியதால் தான் அவள் இறந்தாள். இப்போது நம்
கல்லூரியில் சில பேராசிரியர்கள், நீ மாதவனுடன் அதிகம் பழகுவதை குறை கூறுகிறார்கள். இன்று முழுவதும் நீ தலை குனிந்து அமர்ந்ததை போலத்தான் , நானும் அவர்களிடம் தலை குனிந்து பேசினேன். என்னைவிடு ,, உன் குடும்பத்தையும் இது போன்று செய்ய வைத்துவிடாதே .............என கூறி முடிப்பதற்குள் ......

.
அம்மா, அக்கா இன்னும் எழுந்திரிக்கல ... இங்க வா என கத்தினாள் துளசியின் தங்கை..
. இந்த சத்தத்தில் விருட்டென எழுந்த துளசி ... ப்பு .. ச்சீ .. கனவா ..... என ஒரு படபடப்புடனும் ... அப்படா தப்பிச்சேன் சாமி என்கிற ... பதற்றத்துடன் கூடிய சந்தோசத்துடனும் இருந்தாள். தன் கனவை யாருக்கும் வெளிக்கட்டிக்காமல் ... அம்மா காபி என்றாள்.

எழுந்திட்டயாடா.. என் கையில் காபி எல்லாம் இல்லடா . நேத்து புதுசா வாங்கின
விளக்கமாறுதான் இருக்கு என்றார்...
ஐயோ , காபிக்கே விளக்கமாறு என்றால்,, இந்த கனவிற்கு .. வேணாம்டா சாமி ,, நாராயணா இந்த கருமம் கனவாவே போகட்டும் என எழுந்து வெளியே வந்தாள். அங்கே . அக்கா வா உனக்கு பிடிச்ச பாட்டு படிக்குது என்றாள் துளசியின் தங்கை.


பனித்துளிதான் என்ன செய்யுமோ ?
மூங்கில் கட்டில் தீ விழும் போது
மூங்கில் காடென்று ஆகினள் மாது..
கண்ணாளனே........
எனது கண்ணை நேற்றோடு காணவில்லை ..
ஏன் கண்களை பறித்து கொண்டும் ஏன் இன்னும் பேசவில்லை ....
.

என ஒலித்தது. என்ன நினைத்தாளோ தெரியவில்லை ..

துளசி தன் தங்கையின் பிடரியில் ,, மெதுவாக ஒரு தட்டு தட்டி ,, எப்ப பாரு. ஒரே காதல் பாட்டா
கேக்க வேண்டியது .. போயி ஒழுக்கமா படிக்கிற வேலையை பாரு என்றாள் .. ஏய் என்னடி அவ கூட சண்டை என துளசியை திட்ட நாவெடுத்த அம்மா ,, அவளின் வார்த்தையை கேட்டவுடன் .... துளசி முகம் துடைத்துவிட்டாயா ? இதோ காபி போடுகிறேன் என்றாள்...


முதலில் விளக்கமாறு கையில் இருக்கிறது என்றவள் , இப்போது காபி தருகிறேன் என்றதும்
.. அந்த மாற்றத்திற்கான புரிதல் துளசியின் முகத்தில் புன்னகையாய் மலர்ந்தது. உடனே அவள் படிப்பு கூட ரெண்டாவதுதான்,, முதலில் அம்மாவை காதலிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டே .. துள்ளி வீழும் அருவி போல் அடுக்களைக்குள் அம்மா என பாய்ந்தாள்.[right]



Last edited by அய்யம் பெருமாள் .நா on Tue Oct 04, 2011 4:20 pm; edited 1 time in total


சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Empty Re: சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

Post by ரேவதி Tue Oct 04, 2011 11:19 am

இதை ஏன் தனியாக பதிந்துள்ளீர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Empty Re: சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

Post by ரேவதி Tue Oct 04, 2011 11:34 am

இதை நீங்கள் முன்பே எழுதிய கதையில் தொடர்ச்சியாக பதிந்து இருந்தால் படிக்க வசதியாக இருந்திருக்கும்.......சில எழுத்து பிழைகள் இருந்தன அதை மாற்றிவிட்டேன் மற்றபடி நல்ல கதை...... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Empty Re: சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

Post by ayyamperumal Tue Oct 04, 2011 4:21 pm

ரேவதி wrote:இதை நீங்கள் முன்பே எழுதிய கதையில் தொடர்ச்சியாக பதிந்து இருந்தால் படிக்க வசதியாக இருந்திருக்கும்.......சில எழுத்து பிழைகள் இருந்தன அதை மாற்றிவிட்டேன் மற்றபடி நல்ல கதை...... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி ! வாய்ப்பிருந்தால் நீங்களே மாற்றிவிடுங்கள் !


சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Empty Re: சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

Post by பிஜிராமன் Tue Oct 04, 2011 4:47 pm

அண்ணா அடுக்கலைக்குள் என்றால் அடுப்பங்கரைக்குள் என்று அர்த்தமா.......

நல்ல இருக்கு அண்ணா......

கனவில் கண்ட அனைத்தும்
நிகழ்வில் நடந்தால் - கால்வாசி
நாட்கள் சந்தோஷமாகவும் எச்சம்
துக்கமுமாகவே செல்லும்......

நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Empty Re: சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

Post by ayyamperumal Tue Oct 04, 2011 4:50 pm

பிஜிராமன் wrote: அண்ணா அடுக்கலைக்குள் என்றால் அடுப்பங்கரைக்குள் என்று அர்த்தமா....
நல்ல இருக்கு அண்ணா......
கனவில் கண்ட அனைத்தும்
நிகழ்வில் நடந்தால் - கால்வாசி
நாட்கள் சந்தோஷமாகவும் எச்சம்
துக்கமுமாகவே செல்லும்......நன்றிகள்

உங்கள் கேள்விக்கான பதில் ...ஆம் தம்பி !
உங்கள் கவிதை என் கதைக்கான அணிந்துரை என்று எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி !!


சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Empty Re: சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

Post by vasanthe2590 Tue Oct 04, 2011 6:31 pm

இது கதை தானா அல்லது யார்க்காவது நடந்த உண்மை சம்பவமா sir


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Empty Re: சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

Post by ayyamperumal Wed Oct 05, 2011 12:38 pm

vasanthe2590 wrote:இது கதை தானா அல்லது யார்க்காவது நடந்த உண்மை சம்பவமா sir

உண்மை சம்பவம் தான் தங்காய் !
நம்ம ஈகரையில் நட்புடன் என்பவர் இருக்கிறார். அவரது வாழ்வில் நடந்த சம்பவம் தான். நன்றி !


சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2) Empty Re: சூரிய அனலா? சுடும் மணலா ? ( கதை -2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum