புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
5 Posts - 1%
i6appar
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_lcapஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_voting_barஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 I_vote_rcap 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 12:47 pm

சிலருக்கு மூளையில் இருக்கும் "செக்ஸ் சென்டர்" வேறுவிதமான மனப்பதிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. வித்தியாசமான செக்ஸ் தூண்டுதல்கள், தொட்டுப் பார்த்தல், சுவைத்துப் பார்த்தல் இவற்றின் மூலம் மட்டுமே காம இச்சைக்கு ஆட்பட வேண்டும் என்று புரிந்து வைத்திருக்கிறது. இதுதான் பாரபீலியா குணமாக வெளிப்படுகிறது. உதாரணமாக, "நெக்ரோபீலியா" எனும் குணாம்சம் கொண்டவர்களின் மூளையில் இருக்கும் செக்ஸ் சென்டரானது, "பிணத்தைப் பார்த்ததும் காம இச்சைக்கு ஆட்பட வேண்டும்" என்று புரிந்து வைத்திருக்கும். "ஜுபீலியா" குணாம்சக்காரர்களின் மூளையில் இருக்கும் "செக்ஸ் சென்டர்", விலங்குகளைப் பார்த்தவுடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என்று புரிந்து வைத்திருக்கும். இதன் காரணமாகத்தான் இப்படிப்பட்ட உடல் உறவுகள் நிகழ்கின்றன என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்த செரிபிரல் செக்ஸ் சென்டர் எப்படி இதனை புரிந்து வைத்திருக்கிறது என்கிற காரணம்தான் இன்றுவரை கண்டறிய முடியாத புதிராக இருக்கிறது.

பாரபீலியா செக்ஸ் நடவடிக்கைக்கு எதேனும் சிகிச்சை உண்டா? இதுவும் ஒரு சவாலான கேள்விதான். அப்படியே இருந்தாலும் இதுமாதிரியான நபர்கள் சிகிச்சை செய்துகொள்ள வருவார்களா என்ற துணைக் கேள்வியும் படிப்பவர்களுக்கு எழலாம். பாரபீலியா மனநிலைக்கு "இதுதான் காரணம்" என்று மருத்துவ, விஞ்ஞானரீதியில் கண்டறியப்படாததால் இதற்கு மருத்துவ உலகில் வெற்றிகரமான சிகிச்சைகள் ஏதும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னொரு விஷயம்... இதுபோன்ற குணாதிசயக்காரர்கள், மருத்துவர்களைத் தேடி வந்து, "எனக்கு இதுபோன்ற வித்தி யாசமான குணாதிசயம் உள்ளது, இதனைத் தீர்த்துவைக்க ஒரு வழி சொல் லுங்கள்" என்று சிகிச்சைக்கு வரவேமாட் டார்கள். காரணம், இந்த நிலையிலி ருந்து இவர்கள் மாறுவதற்கு துளியும் விரும்பமாட்டார்கள் என்பதுதான்.

மேலை நாடுகளில் பாரபீலியா மன நோயாளிகளுக்கான சிகிச்சைகளைப் பற்றி தீவிர ஆராய்ச்சி தொடர்ந்து செய்யப் பட்டும், எதுவும் வெற்றிகரமானதாக இது வரை அமையவில்லை. பாரபீலியா சிகிச்சைக்கென்று மூன்றுவித மான சிகிச்சை முறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிகேவி யரல் தெரபி, பார்மகோ தெரபி, சைக்கோ சர்ஜரி என்ற இந்த மூன்று சிகிச்சை முறைகளையும் தனித்தனியாகவோ, தேவைப் பட்டால் "மல்ட்டி மோடல்" எனும் முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சையை இணைத்தோ அளிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பிகேவியரல் தெரபி என்பது வித்தியாசமான நடவடிக் கையை மாற்ற தரப்படும் சிகிச்சை. இதில் ஒரு பிரிவு "அவெர் ஷன் டெக்னிக்." உதாரணமாக, விலங்குகளுடன் புணரும் விருப்பம் உடைய ஜுபீலியா வகையினரிடம், விலங்குகள் புணர்ச்சியில் ஈடுபடும் படங்களைப் போட்டுக் காட்டுவார்கள். அதனைப் பார்க்கிற அவர்களுக்கு செக்ஸ் உந்துதல் ஏற்படும். அந்த சமயத் தில் எலெக்ட்ரிக் ஷாக் தரப்படும்.

பார்மகோ தெரபியில், மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். சில மருந்துகள் மூலம் உடம்பில் இருக்கும் செக்ஸ் ஹார்மோன் அளவை குறைப்பார்கள். அவ்வாறு குறிப்பிட்ட ஹார்மோன் அளவு குறைந்தால், செக்ஸ் பற்றிய எண்ணம் எழாது. அதனால் பாரபீலியா குணாம்சமும் மறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
சைக்கோ சர்ஜரி எனப்படுவது& அறுவை சிகிச்சை முறையாகும். இதன் மூலம் மூளையின் சில குறிப்பிட்ட பகுதியினை சிதைத்து விடுவார்கள். இதனால் பாரபீலியா குணாம்சம் மாறிவிடும் என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

ஆனால், இந்த சிகிச்சை முறைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட வில்லை. காலம்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
சரி... "அப்நார்மல் செக்ஸ் பற்றியே சொல்லிக் கொண்டி ருக்கிறாரே டாக்டர்! எது நார்மல் செக்ஸ் என்று சொல்லவே மாட்டேன் கிறாரே" என்று நினைக்கிறீர்களா?!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:02 pm

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப் பத்தில் ‘தான் நார்மலாக இருக்கிறோமா... இல்லை தன்னிடம் ஏதும் குறை ஏற்பட்டிருக்கிறதா?’ என்கிற சந்தேகம் கட்டாயம் வந்திருக்கும். ஓர் உதாரணம் சொல்கிறேன்...

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எனது க்ளினிக்குக்கு ஆந்திராவிலிருந்து ஒருவர் வந்தார். ‘‘எனக்கு ஒரு குறை இருக்கு. நான் செக்ஸில் ரொம்பவும் வீக்காக இருக்கிறேன்’’ என்றார், கவலை தோய்ந்த குரலில்.

நான், ‘அவருக்கு விறைப்புத் தன்மை இல்லை போலிருக்கிறது’ என்று நினைத்து, ‘‘எப்போதிலிருந்து உங்களுக்கு விறைப்புத் தன்மை இல்லை?’’ என்று கேட்டேன்.
‘‘நான் அப்படி சொல்லலையே...’’ என்றார்.

‘‘அப்படியானால் வீக்னஸ் என்று சொன்னீர்களே?’’ என்று திரும்பவும் கேட்டேன். ‘‘எனக்குக் கல்யாணம் ஆகி பத்து மாசம் ஆவுது டாக்டர். ஆரம்பத்துலருந்தே நார்மலா இல்லை. முதல் எட்டு மாசம் சுமாரா இருந்தேன். ஆனா, கடந்த இரண்டு மாசமா ரொம்ப வீக் ஆயிட்டேன்!’’ என்றார் அவர். ‘‘நார்மல், சுமார், வீக்னஸ் என்கிறீர்கள்... சரியா சொல்லுங்க மிஸ்டர்!’’ என்றேன். ‘‘கல்யாணமான முதல் எட்டு மாதம், தினமும் இரண்டு முறை என் மனைவியுடன் உடல் உறவில் ஈடுபட்டு வந்தேன். கடந்த ரெண்டு மாசமா ஒரு நாளில் ஒரு தடவைதான் ஈடுபட முடியுது. அதுக்கும் சிரமப்பட வேண்டியதா இருக்கு சார்!’’ என்றார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘‘அப்பனே, நான் அந்தப் பக்கம் வந்துடறேன். நீ என் இடத்துல வந்து உட்கார்ந்துக்க. உன்கிட்டே நிறைய கத்துக்க வேண்டி இருக்கு!’’ என்றேன். ‘‘நான் சீரியஸா சொல்லிட்டிருக்கேன். நீங்க என்ன டாக்டர் தமாஷ் பண்றீங்க?!’’ அவர் கேள்வியில் கோபம் தெறித்தது. ‘‘பின்னே என்னப்பா... தினம் ஒரு தடவை ஈடுபட முடியுற உன்கிட்டே எங்களுக்குக் கத்துக்கொடுக்க நிறைய விஷயம் இருக்கு’’ என்று சொல்லிவிட்டு, அவரை உடல்ரீதியாகப் பரிசோதித்துப் பார்த்தேன். லேப் பரிசோதனையும் செய்துவரச் சொல்லிப் பரிசோதித்தேன். எல்லாம் நார்மலாக இருந்தது.

‘‘உடம்பில் எந்த குறையும் இல்லப்பா’’ என்றவுடன்,

‘‘அப்படினா ஏன் சார் டெய்லி என்னால உறவு கொள்ள முடியவில்லை?’’ என்று கேட்டார்.

‘‘நீ ஒரு வாரம் கழித்து மனைவியுடன் வா!’’ என்று அனுப்பி வைத்தேன்.

அதேபோல ஜோடியாக வந்தார். முதலில் மனைவியைக் கொஞ்சம் பேசவிட்டேன். ‘‘எனக்கு எந்த குறையுமில்லை. ஒரே பிரச்னை... என்னை எந்த வீட்டு வேலையும் செய்யவிடாம பொழுதன்னிக்கும் செக்ஸ் வெச்சுக்கக் கூப்பிட்டுக்கிட்டே இருக்காரு... ஏதாவது மருந்து கொடுத்து அவரோட காம வெறியைக் குறைக்கணும்’’ என்று வேண்டுகோள் வைத்தார் மனைவி.

திடுக்கிட்டுப்போன கணவர், ‘‘சார்... மேரேஜுக்கு முன்னாடியே உங்ககிட்ட ஆலோசனை கேட்க நான் வந்துருக்கணும். தினம் ரெண்டு மூணு தடவை செக்ஸில் ஈடுபடாவிட்டால், என் மனைவி என்னை ஆம்பளைனு ஒத்துக்க மாட்டாள்னு நினைச்சுதான் இப்படியெல்லாம் செஞ்சேன்!’’ என்றார் அப்பாவியாக.
‘‘அப்பனே! எது உன்னை அப்படி நினைக்க வெச்சது?’’ என்று கேட்ட அடுத்த நிமிடம் அவர்... பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினார். ‘பரத கண்டத்தில் பெண்களின் செக்ஸ் நடைமுறைகள்’ என்ற தலைப்பிலான தெலுங்குப் புத்தகம் அது. அதனைக் காட்டி, ‘‘சார், இந்தப் புத்தகத்துலதான் அப்படிப் போட்டிருந்தது’’ என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட பக்கத்தைப் புரட்டிக் காண்பித்தார். வாரணாசியைச் சேர்ந்த, டாக்டருக்குப் படிக்காத ஒரு நபரால் 1912ம் வருஷம் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கத்தைப் படித்ததும் எனக்குப் பெரும் அதிர்ச்சி!

‘பெண்கள் செக்ஸில் ரொம்பவும் ஆர்வம் மிக்கவர்கள். ஒரு நாள் மூன்று முறை உடல் உறவில் ஈடுபடவில்லை என்றால், அவர்கள் விரக்தி அடைந்து வேலி தாண்டுவார்கள். கணவனை விட்டுவிட்டுப் பிற ஆண்களிடம் சென்று விடுவார்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதை வேத வாக்காக... இதுதான் நார்மல் செக்ஸ் போலிருக்கிறது என்று அதை நடைமுறையில் செயல்படுத்த முடியாததால், ‘தான் நார்மல் இல்லை... தனக்கு செக்ஸ் பலவீனம் இருக்கிறது’ என்று அவர் மனமொடிந்துவிட்டது எனக்குப் புரிந்தது.‘எது நார்மல் செக்ஸ்? எது நார்மல் செக்ஸ் இல்லை?’ என்கிற சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளமுடியாத சூழலில் பலர் இருக்கக் காரணம் கூச்சம், பாலியல் கல்வியின்மை, வெளிப்படையாக செக்ஸைப் பற்றி பேசாமை போன்றவைதான்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:03 pm

இதைப் படிக்கிற வாசகர்கள், ‘டாக்டர் அடுத்து எது நார்மல் செக்ஸ் என்று சொல்லப் போகிறார்’ என்று ஆவலுடன் எதிர்பார்ப்பீர்கள். அவசரப்படாதீர்கள்... உங்கள் எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைதான் தரும்.

ஏனெனில், செக்ஸ் விஷயத்தில் யாராலும், ‘இதுதான் நார்மல் செக்ஸ், இது நார்மல் செக்ஸ் இல்லை’ என்று உறுதியாக அடித்துச் சொல்லவே முடியாது. காரணம், நார்மல் செக்ஸ் என்று ஒன்றைச் சொல்ல வந்தால், அதனை ஆறு கோணத்தில் பார்க்க வேண்டும்.

1. ஸ்டாடிஸ்டிக்கல் நார்மாலிட்டி: (Statistical normality) நூற்றுக்கு எத்தனை பேர், எந்த வகையில் அதிக அளவு செக்ஸ் இன்பம் அடைகிறார்கள் என்று கணக்கெடுத்து, அதனை நார்மல் செக்ஸ் என்று சொல்லலாம். ஆனால், இந்தக் கோணத்தில் பார்ப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, புள்ளிவிவரப்படி 95 சதவிகிதத்தினர் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோணத்தின்படி, எத்தனை பேர் சுய இன்பத்தை நார்மல் செக்ஸ் என்று ஒப்புக்கொள்வார்கள்?

2. ரிலிஜியஸ் அல்லது மாரல் நார்மாலிட்டி: (Religious/moral normality) ஒரு விஷயத்தை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்தாலும் சரி, அல்லது சமுதாயத்துக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டாலும் சரி... மதங்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணமாக, மருத்துவரீதியில் சுய இன்பம் தவறானது அல்ல என்று சொல்லப்பட்டாலும், எந்த மதமும் இதனை ஏற்றுக் கொள்வதே கிடையாது. ஆக, முதல் கோணப்படி சுய இன்பத்தை நார்மல் செக்ஸ் என்றால், இந்தக் கோணத்தின்படி அது தவறானதாக ஆகிவிடுகிறது.

3. சைக்காலஜிக்கல் சோஷியலாஜிக்கல் நார்மா லிட்டி: (Psychological/sociological normality) இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஒரு செயல்பாட்டினால் மற்ற மனிதருக்கோ சமுதாயத்துக்கோ பாதிப்பு வரும் என்றால், அது நார்மல் கிடையாது. உதாரணமாக, பாரபீலியாவில் ‘சேடிஸம்’ என்ற ஒன்றைப் பற்றி பார்த்தோம். மனைவியைத் துன்புறுத்தி இன்பம் அடையும் கணவனுக்கு, அதனை மனதால் ஏற்றுக் கொள்ளும் மனைவி அமைந்துவிட்டால், இதனால் மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. அவர்கள் விரும்பியே அதில் ஈடுபடுவதால் வெளியிலும் சொல்லப் போவதில்லை. ‘சேடிஸம்’ என்பது பொதுப்பார்வையில் அப்நார்மலாக இருந்தாலும், அந்தத் தம்பதிகள் பார்வையில் நார்மல் செக்ஸ் ஆகிவிடும்.

பெரியவர்கள் பார்த்து நடத்திவைக்கிற முறைப்படி யான திருமணம்தான் நார்மல் என்று சமுதாயம் நினைக்கிறது. பெற்றோர்கள் பார்வையில், காதல் திருமணங்கள் அப்நார்மலாகக் கருதப்படுகிறது. அரசாங்கம் காதல் திருமணங்களை அங்கீகரித்தாலும், பெற்றோர்கள் அங்கீகரிக்கப்பதில்லை!

4. லீகல் நார்மாலிட்டி: (Legal normality) கணவன்மனைவி இருவரும் விருப்பப்பட்டு வாய்மூலம் புணர்ச்சி (oral sex) வைத்துக்கொள்வதை மருத்துவ உலகம் தவறாகக் கூறுவதில்லை. சமுதாயத்திலும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், சட்டரீதியில் இது குற்றமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ‘குழந்தை பிறப்புக்கு வாய்ப்பு இல்லாத எந்தவித செக்ஸ் நடவடிக்கையும் தவறானதே’ என்று சட்டம் கருதுவதால்தான்! தம்பதிகள் பார்வையில் வாய்மூலம் புணர்ச்சி செய்வது நார்மல் செக்ஸ். ஆனால் அதனை சட்டமோ, அப்நார்மல் செக்ஸாகக் கருதுகின்றது. ஹோமோ செக்ஸில் இரண்டு பேர் விருப்பப்பட்டு ஈடுபட்டால், அதனை நார்மல் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால், சட்டரீதியில் நம் நாட்டில் அது குற்றமாகக் கருதப்படுகிறது.

5.ஃபைலோ ஜெனடிக் நார்மாலிட்டி (Phylogenetic Normality): பாலூட்டிகளில் மனிதர்களைத் தவிர மற்ற பாலூட்டிகள் எல்லாம் பெற்றோர், பிள்ளைகள் என்று பார்க்காமல் உடலுறவு கொள்ளும். விலங்குகள் மத்தியில் நார்மலாக இருப்பது, மனிதனின் பார்வையில் நார்மல் அற்றதாகப் போய்விடுகிறது.

6.பயோ மெடிக்கல் நார்மாலிட்டி (Bio-medical normality) மருத்துவரீதியில் மனித உடம்பு எப்படியிருக்க வேண்டும், எப்படியிருக்கக் கூடாது என்று சொல்லப் படுவதைப்போல, செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்க்கும் கோணம் இது. மனிதர்களின் உயரங்களும் அவர்களின் பிறப்புறுப்புகளின் அளவுகளும் வெவ்வேறு அளவுகளில் இருக்கும். இந்த அளவுகளை வைத்து, இது மாதிரியான செக்ஸ் நடவடிக்கைதான் நார்மல் செக்ஸ் என்று எப்படி சொல்லமுடியும்?

50 ஆண்டுகளுக்கு முன்பு தவறு என்று சொல்லப்பட்ட ஹோமோசெக்ஸ், இன்று வெளிநாடுகளில் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், ஹோமோசெக்ஸ் திருமணங்கள்கூட நடைபெறுகின்றன! அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு நார்மல் என்று ஏற்கப்படாதது, இன்று நார்மல்! ஆனால், இந்தியாவில் ஹோமோசெக்ஸ் என்பது நார்மல் செக்ஸ் கிடையாது. சட்டத்துக்கும் புறம்பானது.

தமிழ்நாட்டில் பஸ், ரயில், தியேட்டர்களில் ஆண் களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனி இருக்கைகள் உண்டு. ஆனால், மும்பையில் தனித்தனி இருக்கைகள் கிடையாது. இதில் மும்பையில் உள்ளது நார்மலா? தமிழ்நாட்டில் உள்ளது நார்மலா? சொல்லுங்கள்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:03 pm

கோயிலுக்குக் குடிக்காமல் போகவேண்டும் என்பது கண்டிப்பான வரைமுறை. ஆனால், நம்மூரில் பல கிராம தெய்வங்களுக்கு சாராயம், விஸ்கி, பீர் என்று படைக்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது! உஜ்ஜயினி நகரத்தில், மகாகாலன் என்று ஒரு கோயில் உண்டு. அந்த சாமிக்குப் படைக்கப்படும் பொருள் என்ன தெரியுமா? சாராயம்! கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சாராயம்தான் பிரசாதமாகத் தரப்படுகிறது. இப்போது சொல்லுங்கள்... உஜ்ஜயினியில் உள்ளது நார்மலா? அல்லது பெரும்பாலான கோயில்களில் உள்ளது நார்மலா?

ஆக, அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்படுகிறது, ராக்கெட் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று சுலபமாகப் பதில் தந்துவிடலாம். ஆனால் ‘இதுதான் நார்மல் செக்ஸ்’ என்று சுலபமாக வரையறுத்துவிட முடியாது.

எனது கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், எது நார்மல் செக்ஸ், எது நார்மல் செக்ஸ் இல்லை என்று தலையைப் பிய்த்துக்கொள்ளாமல் நாம் ஈடுபடக்கூடிய செயல்பாட்டினால் நமக்கோ, நமது பார்ட்னருக்கோ, எந்தவிதமான பாதிப்பும் கெடுதலும் ஏற்படாமல் இருந்தால், அதுதான் நார்மல். இதுதான் விஞ்ஞானப்பூர்வமான, மருத்துவ ரீதியான கருத்தும்கூட!

‘திருமணமான ஜோடிக்கெல்லாம் குழந்தை பிறக்கவேண்டும். அதுதான் நார்மல்’ என்று சமுதாயத்தில் பரவலாக நினைக்கப்படுகிறது. ஆனால், குழந்தை பிறக்காமல் போனால் அப்நார்மல் என்று சொல்லிவிட முடியுமா? ஒருவருக்குக் குழந்தை பிறக்காமலிருக்க பல காரணங்கள் இருக்கலாம்...

இயற்கையின் சிருஷ்டியில் மிகமிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலேயே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர்... தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து... பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப் பின் வெளியுலகுக்கு வருவதை நாம் அறிவோம். ஆனால், மக்கள் எண்ணத்தில் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை ‘எப்படி உயிர் உருவாகிறது?’ என்ற சுவாரஸ்யமான தேடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சட்டென்று பத்து பேரை நிறுத்தி, ‘எப்படி உயிர் உருவாகிறது?’ என்று கேளுங்கள். ஒருவர் இரண்டு கையையும் மேலே உயர்த்திக் காட்டி, ‘எல்லாம் அவன் செயல்’ என்பார். இன்னொருவர், ‘ஆண்பெண் சங்கமத்தின் வெளிப்பாடு’ என்பார். மற்றொருவர், ‘அன்பான தாம்பத்யத்துக்குக் கிடைக்கிற கைத்தட்டல்’ என்பார். இன்னும் சிலர் விஞ்ஞான விளக்கம் தருகிறேன் பேர்வழி என்று ஏதேதோ சொல்வார்கள்.

கவியரசு கண்ணதாசனோ, ‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட... அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட!’ என்கிறார்.

ஆதிகால மனிதர்கள் ‘குழந்தை எப்படி உருவாகிறது?’ என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, குழந்தை எப்படி உருவாகிறது என்பது தெளிவாகத் தெரிந்தால், இன்னும் இன்னும் நிறைய குழந்தைகளை உருவாக்கலாமே என்பதால்தான்.

இன்றைய மனிதர்கள் ‘குழந்தை எப்படி உருவாகிறது?’ என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. குழந்தையை உருவாக்குவதற்காக மட்டுமின்றி, தேவையற்ற குழந்தையைப் பிறக்காமல் தடுப்பதற்காகவும் இந்தக் கால மனிதர்கள், உயிர் எப்படி உருவாகிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப் படுகிறார்கள்! அந்தக் காலத்தில், விஞ்ஞான வளர்ச்சி இல்லாத தினால் ஒரு பெண்ணின் உடம்புக்குள் நிகழ்வதை வெளியிலிருந்து தெரிந்துகொள்ள இயலாத நிலை இருந்த தால், ‘கரு எப்படி உருவாகிறது’ என்பது தெரியாமல் இருந்தது. விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகளாக ‘ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந்தித்துக் கரு உருவாகிறது’ என்பது தெரியாமலே இருந்தது என்பதே உண்மை! இதனாலேயே அந்தக் காலத்தில் உயிர் உருவாவதைப் பற்றிய ஏகப்பட்ட யூகங்களும், தத்துப்பித்துகற்பனைகளும், தவறான கருத்துகளும், பொய்யான நம்பிக்கைகளும் உலா வந்துகொண்டு இருந்தன. இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், விஞ்ஞானம் முன்னேறி நிலவில் காலடி எடுத்துவைத்த இந்த நவீன யுகத்திலும் கூட... மக்களில் பலரிடம் இந்தப் பொய்யான நம்பிக்கைகளும், தவறான கருத்துகளும் குடிகொண்டு இருப்பதுதான்! அந்தக்கால புகழ்பெற்ற தத்துவ ஞானிகள் ஹோமர், அரிஸ்டாட்டில் போன்றவர்கள்கூட ‘ஒரு பெண் குதிரை கருவுற வேண்டுமானால், ஆண் குதிரையுடன் சேர வேண்டியதில்லை. வீசுகின்ற காற்று ஆண் குதிரை மீது பட்டு, அந்தக் காற்று பெண் குதிரை மீது பட்டால், பெண் குதிரை கருவுற்று விடும்’ என்று நம்பிக் கொண்டிருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! ஓர் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாலே குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பி னார்கள் ஆதிகால மக்கள். ஆணும் பெண்ணும் ஓரிடத்தில் படுத்துத் தூங்கினாலே குழந்தை உண்டாகி விடும் என்கிற தவறான கற்பனையும் அப்போதைய மக்களிடம் இருந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக ஒரு ஆணின் விந்தில் உயிரணு என்ற ஒன்று உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. யார் கண்டு பிடித்தது என்கிற விவரம் எதுவும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், உயிர் அணு எப்படி இருக்கும் என்கிற கோட்டு ஓவியம் முதன்முதலாக 1679ம் ஆண்டில் வரையப்பட்டிருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தக் கண்டு பிடிப்பும், வரைபடமும் புதிதாகவும், அறிவியல் பூர்வமாகவும் இருந்தாலும்கூட அது வேறு ஒரு புதுக் குழப்பத்தை உண்டாக்கியிருந்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:04 pm

அதாவது ஆணின் விந்தில் உள்ள உயிரணுவின் தலையிலேயே மொத்தக் கருவும் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கருதினார்கள் என்பதுதான் அந்தக் குழப்பம். இன்னும் சில
விஞ்ஞானிகள் ‘பெண்ணின் கர்ப்பப் பையில் ஏற்கெனவே ரெடியாக கரு இருக்கும். இந்த உயிரணு போய் அதனைத் தூண்டி விடுவதால், அது பெரிதாக மேற்கொண்டு வளரும்’ என்று கருத்துத் தெரிவித்தார்கள். இத்துடன் இந்த ஆராய்ச்சி நிற்கவில்லை. இன்னும் சில விஞ்ஞானிகள் ‘மாதவிடாயின்போது வெளிவரும் ரத்தத்துடன் உயிரணு சேர்வதால்தான் கரு உண்டாகிறது’ என்றும், ‘அப்படி கரு உருவாகும்போது, முதலில் கருவில் ரத்தம் உண்டாகும். அடுத்தடுத்து எலும்பும் சதையும் உருவாகிக் கடைசியாக சருமம் உருவாகும்’ என்றார்கள்.

இது மட்டுமின்றி கர்ப்பப் பையைப் பற்றிய தவறான நம்பிக்கைகளும் அப்போது இருந்தன. உதாரணமாக பிளாட்டோ என்கிற தத்துவ ஞானி, ‘கருவுறும் காலத்தில் பெண்ணின் கர்ப்பப் பை பெண்ணின் உடம்பின் எல்லா உறுப்புகளையும் சுற்றிவரும்’ என்றும், ‘அப்படி சுற்றி வரும்போது சம்பந்தப்பட்ட பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்தது போன்ற நிலை உண்டாகும்’ என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் என்றால், பாமரர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை!

இன்று "ஹிஸ்டீரியா" (Hysteria) என்று ஒருவகை மனநோயைக் குறிப்பிடுகிறோம் அல்லவா? இப்பெயர் பிளாட்டோ சொன்ன கருத்துருவாக்கத்தில் இருந்து உருவானதாகும். "ஹிஸ்டீரஸ்" என்றால் கிரேக்க மொழியில் ‘கர்ப்பப் பை’ என்று அர்த்தம். ‘கருவுறும் கட்டத்தில் பெண்ணின் கர்ப்பப்பை உடம்பு முழுவதும் சுற்றி வரும்போது பைத்தியம் மாதிரியான நிலை ஏற்படும்’ என்று பிளாட்டோ சொன்னதிலிருந்து உருவானதுதான் ஹிஸ்டீரியா என்கிற பெயராகும்.

பிளாட்டோவின் கருத்தை நம்பியவர்கள், இதற்கு ஒரு தவறான தீர்வினையும் கண்டு பிடித்து நடைமுறைப்படுத்தினார்கள். அதாவது கெட்ட வாசனையை வைத்தால் கர்ப்பப் பை தூரப் போகும் என்றும், நல்ல வாசனையை வைத்தால் கர்ப்பப் பை அருகில் வரும் என்றும் நம்பி மூக்கருகில் கெட்ட வாசனையையும், பிறப்புறுப்புக்கு அருகில் நல்ல வாசனையையும் வைக்கும் சிகிச்சை ஒன்றை அப்போது கடைப்பிடித்தார்கள்.

17ம் நூற்றாண்டுக்குப் பிறகு மருத்துவ உலகம் முன்னேற ஆரம்பித்து (அறுவை சிகிச்சைகள் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம்) கர்ப்பப் பையை பற்றி ஓரளவுக்கு உண்மைகள் தெரிய ஆரம்பித்தன.

இதெல்லாம் பழைய கதை என்றால் விஞ்ஞானம் முன்னேறிய இக்காலக் கட்டத்தில் என்ன நிலைமை என்பதற்கு ஓர் உண்மை நிகழ்ச்சியை சொல்கிறேன்.
ஓர் இளம் பெண்ணை என்னிடம் அவளின் பெற்றோர்கள் அழைத்து வந்தனர். "இவளின் கணவன் ஆறு மாதம் கெடு விதித்திருக்கிறான். அதற்குள் இவள் தாயாக விட்டால் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறான்’ என்றார்கள். அந்தப் பெற்றோர், என்னென்னவோ வைத்தியம், போலி மருத்துவர்களிடம் எல்லாம் பார்த்திருக்கிறார்கள். யாரோ சொன்னார்கள் என்று வேறு ஒரு பெண்ணின் பிரசவத்தின்போது வரும் நஞ்சுக்கொடி எடுத்து அதன் சாற்றை இந்தப் பெண்ணின் வாயில், அவள் மறுக்க மறுக்க ஊற்றியிருக்கிறார்கள். இந்தத் தொல்லைகளைத் தாங்கமுடியாத அப்பெண் தற்கொலை வரை போன பின்னர்தான், என்னிடம் அழைத்து வந்திருந்தனர்.

அந்தப் பெண்ணைப் பரிசோதித்துப் பார்த்து விசாரித்துபோது, கணவன் முறையான செக்ஸில் ஈடுபடவே இல்லை என்பது தெரியவந்தது. கணவனை வரவழைத்து, இதுவே குழந்தை பிறக்காததற்குக் காரணம் என்பதை உரிய வகையில் விளக்கி அனுப்பி வைத்தேன்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:04 pm


இன்னொரு உண்மை நிகழ்வு...


அவனுக்குத் திருமணமாகி குழந்தை இல்லாததால் இரண்டாம் தாரமாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அந்தப் பெண்ணுக்கும் குழந்தை பிறக்கவில்லை. கோயிலில் அங்கப்பிரதட்சணம், மரத்தில் தொட்டில் கட்டுவது அதுஇதுவென்று நிறைய நேர்த்திக்கடன் செய்தும்... ம்ஹ¨ம், எதுவும் பயன் தரவில்லை. எனவே அவன் ஜோதிடரிடம் போயிருக்கிறான். ‘உன் ஜாதகப்படி மூன்றாவது சம்சாரத்துக்குதான் குழந்தை பாக்கியம் உள்ளது’ என்று ஜோதிடர் சொல்ல, மூன்றாவதாக ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அந்த மனைவிக்கும் குழந்தை பிறக்கவில்லை.

மூன்றாவது மனைவி ப்ளஸ் டூ வரை படித்த பெண். தனக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட, பெண் டாக்டரிடம் போய் காட்டியிருக்கிறாள். அந்த டாக்டர் அவளை பரிசோதித்து விட்டு, ‘‘உனக்கு எல்லாம் சரியாக இருக்கிறது. நீ போய் உன் கணவனை அழைத்து வா’’ என்று சொல்ல, அவளும் வெள்ளந்தியாக, கணவனை டாக்டரிடம் கூப்பிட்டிருக்கிறாள். உடனே வீட்டில் ஒரே களேபரம் உண்டாகி விட்டதாம்.

"நீதான் மலட்டு சிறுக்கி! என் பையன் பத்தரை மாத்துத் தங்கம்! அவன்கிட்டே எந்த குறையும் இல்லை’ என்று வீடு மொத்தமும் அந்தப் பெண்ணை உலுக்கி எடுத்து விட்டதாம். ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி மூன்றாவது மனைவியை அறுத்துவிட திட்டம் போட்டதை அறிந்த அந்தப் பெண், தனக்குத் தெரிந்த பெண் மருத்துவரிடம் தஞ்சம் புக, அந்த டாக்டர் பஞ்சாயத்தாரிடம் பேசி அந்தப் பெண்ணையும், அவள் கணவனையும் என்னிடம் அனுப்பி வைத்தார்.

நான் அந்தக் கணவனை பரிசோதித்துப் பார்த்த போது, ஓர் உண்மை தெரியவந்தது. ஆம்... கணவனின் விந்துவில் ஒரு சதவிகிதம்கூட உயிரணு இல்லாதது தெரியவந்தது. அறியாமை... மூன்று பெண்களின் வாழ்க்கையை பலி கொண்டுவிட்டது. இந்த அறிவியல் யுகத்திலும் இப்படியானவர்கள் பல பேர் இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் மேற்கண்ட இரண்டு உண்மை சம்பவங்களையும் எடுத்துச் சொன்னேன்.

பெண்ணின் பிறப்புறுப்பு, கர்ப்பப் பை, பிரசவம் போன்றவற்றைப் பற்றி தவறான கருத்துக்கள், பொய்யான நம்பிக்கைகளை போலவே ஆணின் விதை, ஜனன உறுப்புகள், விந்து பற்றியும் பல தவறான கருத்துக்கள் பல ஆயிரம் வருஷங்களாக மக்களிடம் மட்டுமல்ல மருத்துவர்களிடமும் இருக்கிறது!

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..."

இயற்கையின் அற்புத படைப்பில் உயிர் உருவாவதை இப்படி கவித்துவமாக சொல்கிறது, ஒரு சினிமாப் பாடல். எத்தனை எத்தனையோ கண்டுபிடிப்புகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன,பிரமிக்க வைக்கப்போகின்றன. ஆனால்,கோடிக்கணக்கான ஆண்டுகளாகவும், கணக்கிட முடியாத ஆண்டுகளுக்கு பிறகும் மாறாத அதிசயமாக இருப்பது உயிரின் ஜனனம்தான். அதிலும் மனித உயிர்... அதிசயத்திலும் அதிசயம்!

ஒரு புது உயிர் பெண்ணின் கருவறையில் உருவாக வேண்டும் என்றால் ஆணின் பிறப்புறுப்புகள் சரியாக இருப்பதுடன், அதன் செயல்பாடுகளும் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போதுமான விந்து வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பில் சேரவேண்டும். இதற்கு பெண்ணின் பிறப்புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல்பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலிருந்து வெளியேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:04 pm

ஆணின் பிறப்புறுப்பு இரண்டுவிதமாக அமைந்துள்ளது. கண்ணுக்குப் புலப் படுவது மாதிரியான அமைப்பு. கண்ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அமைந்திருக்கும் உறுப்புகள்.
ஆண்குறி, விதைப்பை ஆகியவைக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள். கண்ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அமைந்திருப்பவற்றில், விதைகள் உட்பட பல உறுப்புகள் உள்ளன. கருவை உருவாக்க ஆணின் விந்தில் உள்ள உயிரணுவால் (Sperm) மட்டுமே முடியும். இந்த உயிரணு உள்ள விந்து, பெண்ணின் பிறுப்புறுப்புக்குள் செல்லப் பயன்படுவதுதான் ஆண் குறி. சமீப காலம்வரை, செக்ஸில் ஈடுபட்டால் மட்டும்தான் கரு உருவாக முடியும் என்ற நிலைமை இருந்தது. அதனால்தான் ஆண் குறிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆண் குறியைப் பெண் குறிக்குள் செலுத்துவதற்காகவே இயற்கை, ஒரு விஷயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதுதான் செக்ஸ் இன்பம். ஆனால், இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறிவிட்டது. ஆண் குறியைப் பயன்படுத்தாமல்... செக்ஸில் ஈடுபடாமல் அவனுடைய உயிரணு உள்ள விந்தை மட்டும் பயன்படுத்திக் கரு உருவாக்க பல வழிமுறைகள் வந்துவிட்டன. பெண்ணின் கருப்பையிலிருந்து கருமுட்டை வெளிவரும் சமயத்தில், ஆணின் விந்தை எடுத்து அதற்குள் செலுத்தி விடுவது ஒரு வழி. இதற்கு ‘இன்ட்ரா யுடிரியன் இன்செமினேஷன்’ (Intra-Uterine Insemination) என்று பெயர்.
இன்னொரு வழிமுறை, சோதனைக் குழாய் குழந்தை (Test Tube baby). இதில் ஆணின் உயிரணு, பெண்ணின் கருமுட்டை இரண்டையும் தனியாக வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்துக் கருவை உருவாக்கி விடுகிறார்கள்.

கரு உருவாக்கத்தில் தற்போது இப்படியெல்லாம் முன்னேற்றம் வந்து விட்டதால், ஆண் குறி முக்கியத்துவம் இழந்து விட்டது என்று நான் சொல்லவில்லை. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள ஆச்சர்யமான முன்னேற்றத்தைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறேன்.

குழந்தை உருவாக முக்கிய காரணமான ஆண் குறியை, ஆதி நாட்களில் பூஜைக்குரிய ஒன்றாகக் கருதி, அதை ஆதி மனிதர்கள் வழிபட்டனர். பண்டைய ரோமாபுரியில் ஆண் குறிக்கென்று ப்ரியபஸ் என ஒரு கடவுளே இருந்தார்! அப்ரோடைட் டைனிசஸ் என்ற இரண்டு கடவுளுக்குப் பிறந்தவர்தான் ப்ரியபஸ். இவருக்கு உடம்பைவிட ஆண் குறி உயரமாக இருந்ததாம். கரு உருவாவதற்கான கடவுளாக மட்டுமல்லாமல், பூங்காக்களைக் காக்கும் கடவுளாகவும் காவற்காரராகவும் இந்த ப்ரியபஸ் கருதப்பட்டு வந்திருக்கிறார்.

மேலை நாடுகளை விட்டுத் தள்ளுங்கள்... நம் நாட்டிலேயே ஜனன உறுப்பு வழிபாடு காலகாலமாக இருக்கிறது. நீங்கள் சிவலிங்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா... வட்டவடிவ ஆவுடையாரின் நடுவே, நீண்டதாக நின்றிருக்கும் லிங்கம். இந்த லிங்கம்தான் ஆண் குறி. அதைச் சுற்றியிருக்கும் ஆவுடையார்தான் பெண் குறி. சமஸ்கிருதத்தில் லிங்கம் என்றால், ஆணுறுப்பு என்று அர்த்தம். இந்திய புராணத்திலும், காளிதாசரின் ஒப்பற்ற இலக்கியமான ‘குமாரசம்பவ’த்திலும் ஆணுறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அற்புதமாக லிங்கத்தை வர்ணித்து உள்ளார்கள்.

இப்படி அதீத முக்கியத்துவம் கொடுத்த காரணத் தினால் ஆண் குறியைப் பற்றிய தவறான நம்பிக்கைகளும், பொய்யான கருத்துக்களும் அதிகமாகி விட்டன.

‘ஆண் உறுப்பு நீளமாக இருந்தால்தான் குழந்தையை உண்டாக்க முடியும், மனைவியை நன்றாகத் திருப்திப் படுத்த முடியும். சிறிதாக இருந்தால் அவனால் குழந்தை உருவாக்க முடியாததுடன் மனைவியையும் திருப்திபடுத்த முடியாது’ என்பதுபோன்ற தவறான கருத்துக்கள் இன்றும் இருக்கின்றன.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:05 pm

பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின்னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லாதபோது) நீளமாக இருப்பதுடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதாரண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும்போது 7 அங்குலம் வரை நீளும். சுற்றளவு ஒன்றரை அங்குலமாகப் பெருக்கும். எல்லோருக்கும் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இதுவொரு சராசரி அளவு.
விதவிதமான உயரம், அதற்கேற்ப விதவிதமான எடைகளில் ஆண்கள் இருப்பதை போல அவர்களின் ஆண் குறியும் சிறிதாகவும் பெரிதாகவும் அமைந்திருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், சாதாரண நிலையில் ஆண் குறி எந்த அளவில் இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கும்போது எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு வந்துவிடும். அதேபோல, ஆண் குறி விறைத்த நிலையில் பெண் குறியின் கடைசிவரை உள்ளே போனால்தான் கரு உருவாகும் என்று கருத வேண்டாம். ஆண் குறியின் முனை சிறிதளவு உள்ளே போனால்கூட போதும்.

ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் 2 அங்குலம் அல்லது 5 செ.மீ. இருந்தாலே போதுமானது. ஏனெனில், பெண்ணின் பிறப்புறுப்பின் வெளிப்புற முன்பக்கத்தில் இரண்டு அங்குலத்தில் மட்டும்தான் உணர்ச்சி நரம்புகள் அமைந்துள்ளன. எனவே ஆண் குறி விறைப்பு நிலையில் இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமானது. அதற்கு மேல் அதிகமாக இருப்பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவதில்லை.

பொதுவாக இயற்கை எல்லா ஆண் களையுமே போதுமான அளவுள்ள ஆண் குறியுடன்தான் படைத்திருக்கிறது. ஆனால், பத்து லட்சத்தில் ஒருவருக்கு விதிவசமாக மிகமிக சிறிய அளவிலான ஆண் குறி, பிறவிக் குறைபாடாக அமைந்துவிடலாம். இதற்கு "மைக்ரோ பீனிஸ்" (Micro Penis) என்று பெயர். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

அடுத்து, விதைப்பையைப் பற்றி பார்ப்போம். ஆண் குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதை வடிவில் சாதாரண நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த விதைப்பை, உணர்ச்சிவசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி சிறிது சுருங்கி விடும். இதற்குள் இரண்டு விதைகள் உள்ளன.

விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரியுமா? பொதுவாக நமது உடம்பின் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும். விதைப் பைக்குள் இருக்கும் விதை நன்கு வேலை செய்ய வேண்டும் என்றால், உடம்பின் வெப்ப நிலையைவிட 3 முதல் 4 டிகிரி ஃபாரன்ஹீட் குறைவாக இருக்க வேண்டும். எனவேதான், உடம்புக்கு வெளியே பை போன்ற உறுப்பை படைத்து, அதற்குள் உடம்பின் பொது வெப்ப அளவைவிட குறைவான வெப்ப நிலையைப் படைத்து, அதில் விதைகளை வைத்திருக்கிறது இயற்கை... என்ன அற்புதமான சிருஷ்டி!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:55 am

விதைப் பைக்குப் போதுமான காற்று கிடைக்காமல் போகும் என்பதாலும், விதைப் பையின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதாலும்தான், வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் இறுக்கமான ஆடைகளைக் அணியக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. அப்படியில்லாமல் இறுக்கமான உடைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், விதைப்பையின் வெப்ப நிலை உயர்ந்து உயிரணுக்களின் தரமும், செயல்பாடும் பாதிக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதனால்தான் மருத்துவர்கள் 24 மணி நேரமும் உள்ளாடைகளை அணியக்கூடாது என்றும், பருத்தி உடைகளும், தளர்வான உடைகளும்தான் உகந்தது என்றும் சொல்கிறார்கள்.
விதைப்பையில் இரண்டு விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதையும் ஒன்றரை அங்குல நீளம் ஒரு அங்குல அகலத்தில் நீள்கோள வடிவில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றின் எடையும் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) இருக்கும்.

இது பருவமடைந்த ஆண்களுக்கு! எல்லோருக்கும் இடது பக்கத்தில் உள்ள விதை எடை சிறிது கூடுதலாகவும், சிறிது கீழிறங்கியும் இருக்கும். இது ஏன் என்பதற்கான காரணத்தை மருத்துவ உலகம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் யூகமாக, "நடக்கும்போது இரண்டு விதையும் இடிபடாமல் இருப்பதற்காகவும், அடிபட்டால் கசங்கி விடாமல் இருப்பதற்காகவும் இப்படி அமைக்கப்பட்டுள்ளது" என்று சொல்லப்படுகிறது.

இந்த விதைகள், கரு உருவாக்கக்கூடிய உயிரணுக்களைத் தயார் செய்வது, ஆண் ஹார்மோன் எனப்படும் "டெஸ்டாஸ்டொரான்" (Testosterone) தயாரிப்பது என இரு வேலைகளைச் செய்கிறது. கம்பீரமான குரல், மீசை, தாடி, அழகான தோற்றம், தசைகளின் வளர்ச்சி, செக்ஸ் எண்ணங்கள் அதற்கான தூண்டுதல்கள் போன்றவை இந்த ஆண் ஹார்மோனின் பரிசுதான்!

ஒவ்வொரு ஆணின் உடம்புக்குள்ளும் அடிவயிற்றில் இரண்டு சுரப்பிகள், பை மாதிரி அமைந்திருக்கும். "செமினல் வெஸிக்கிள்ஸ்" எனப்படும் சுரப்பி, சர்க்கரை நீரைப் போன்ற ஒரு திரவத்தைத் தயார் செய்கிறது. இந்தத் திரவம் விந்தின் ஒரு பகுதியாகும். அடுத்து, "ப்ராஸ்டேட் கிலாண்ட்" என்பது சிறுநீர் பைக்குக் கீழ் அமைந்துள்ளது. இது "ப்ராஸ்டேட் ஃப்ளூய்டு" எனும் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இதுவும் விந்தின் ஒரு பகுதியாக மாறும்.

சரி... சிந்தும் வெண்மணியின்... அதாவது விந்தின் முக்கியத்துவம் என்ன?

ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில் உருவாகும் விந்துக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. எல்லா நாட்டு மக்களிடமும் இந்த மனோநிலை இருந்தது. ஒரு குழந்தையை உருவாக்க மட்டுமே விந்து தேவைப்படும், மற்றபடி செக்ஸ் இன்பத்துக்கோ, செக்ஸ் செயல்பாட்டுக்கோ விந்து துளிகூட தேவையில்லை என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்த பிறகுதான் விந்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.

ஒரு மனிதன், விந்து வெளியேறாமல்அல்லது அதை வெளியேற்றாமலேகூட செக்ஸ்இன்பத்தை அடையலாம். இதுபோல எந்தவித செக்ஸ் சுகத்தையும் அனுபவிக்காமல்கூட விந்துவெளியேறவும் செய்யலாம்.

அதனால்தான் 1989ம் ஆண்டு வரைக்கும், துரிதஸ்கலிதம் எனும் செக்ஸ் பிரச்னைக்கு ஆங்கிலத்தில் Premature ejaculation என்று பெயர் இருந்தது. இப்பிரச்னையில் விந்து முன்கூட்டியே துரிதகதியில் வெளியேறிவிடும். இருந்தாலும், ஆணுக்கு இதனால் செக்ஸ் இன்பத்தில் (Orgasm) எந்த குறையும் இருக்காது. ஆனால், பெண்ணுக்கு உடல் உறவில் அதிருப்தி உண்டாகும்.

1989ல் முதன்முதலில் ஸ்கலிதத்துக்கும், செக்ஸ் இன்பத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உலகத்துக்கு எடுத்து சொன்ன பெருமை, நம் நாட்டின் (மும்பை) பிரபல தலைமை செக்ஸாலஜிஸ்டான டாக்டர் பிரகாஷ் கோத்தாரிக்கே சாரும். இவர் எழுதிய "Orgasm: New Dimensions" என்ற புத்தகத்தில், துரிதஸ்கலிதத்தை "Early Orgasmic Response" என்று குறிப்பிட்டார்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:55 am

செக்ஸ் இன்பத்துக்கும், விந்துக்கும் தொடர்பில்லை என்பது நிரூபணமாகிவிட்ட நிலையில், மருத்துவ விஞ்ஞானம் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குப் போய்விட்டது. விந்தின் உதவியில்லாமல்... பெண்ணின் கருமுட்டை இல்லாமல், "க்ளோனிங்" மூலம் ஒரு புது உயிரை உருவாக்கும் அதிசயத்தை மருத்துவ உலகம் சாதித்திருக்கிறது.
ஒரு ஆணின் உடலில் உள்ள விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக்கும் நீர்களின் கலவைதான் விந்து. இந்த விந்துவை உற்பத்தி செய்வதில் விதையின் பங்கு 1 சதவிகிதம், செமினல் வெஸிக்கில்ஸின் பங்கு 60 சதவிகிதம், பிராஸ்டேட்டின் பங்கு 39 சதவிகிதம்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி ஏழலாம்... அதாவது, உயிரணுவை உண்டாக்கும் தகுதிபெற்ற விதையைப் படைத்த இயற்கை, ஏன் எக்ஸ்ட்ராவாக செமினல் வெஸிக்கில்ஸையும், பிராஸ்டேட் சுரப்பியையும் படைத்துள்ளது? இந்த உலகில், இயற்கை காரணமில்லாமல் எதையும் உருவாக்கவில்லை. கருமுட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயிரணு பெற்றிருந்தாலும், அந்த உயிரணுவுக்கு சக்தி கொடுத்து, ஆரோக்கியம் அளிப்பது செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல விதையில் உருவாகும் உயிரணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பிலும் பயணம் செய்து கருப்பையை அடைய வேண்டும். அப்படி ஜம்மென்று உயிரணு பயணிக்க அதற்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தருவது செமினல் வெஸிக்கில்ஸ் திரவத்தின் பணி. இதில் பிரக்டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இருப்பதால், கிட்டத்தட்ட 6 கலோரி அளவு சக்தியை இது உயிரணுவுக்குத் தருகிறது.

அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக்கும். வெளியிலிருந்து கிருமிகள் அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போது வாயிற்காவலாளி போல இந்த அமிலங்கள் அக்கிருமிகளை அரித்துவிடும். பெண்ணின் கருப் பையையும், கருமுட்டையையும் பாதுகாக்க இயற்கை ஏற்படுத்திய எல்லைப் பாதுகாப்பு இது. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணு வையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங்களால் சிதைக்கப்படாமல், பெண்ணின் உறுப்புக்குள் போவதற்காக இயற்கை, பிராஸ்டேட் சுரப்பியைப் படைத்துள்ளது. அதாவது, அமிலத்தன்மைக்கு எதிரான காரத்தன்மை கொண்டதாக இந்தத் திரவம் இருக்கும். இதனால் அமிலத்தன்மை உள்ள பாதையில் உயிரணு எந்த சேதமுமின்றி பயணிக்கும்.

இயற்கை, நமது உடம்புக்குள் எப்பேர்பட்ட ஏற்பாடுகளை எல்லாம் செய்து வைத்திருக்கிறது பாருங்கள்! ஆனால், நாம்தான் இதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.

விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் மூன்றின் பணிகளையும் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆண் பருவ வயதுக்கு வந்த நாள் தொடங்கி ஆயுளின் அந்தி வரைக்கும்... ஒரு நொடிகூட ஓய்வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கும். இவை இப்படி பணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் ஏழு கோடியே இருபது லட்சம் உயிரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

இந்த மூன்று சுரப்பிகளும் தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கினால், அதன் வேலைத்திறன் பாதிக்காதா என்ற நியாயமான கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், மூன்று நிலைமையில்தான் உயிரணு விந்து தயாரிப்பு பணி பாதிக்கப்படும். பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில் தொற்று நோய்கள், பிறப்புறுப்பில் அடிபட்டு காயம் ஏற்படுவது இந்த மூன்று நிலையில் மட்டும்தான் பணி பாதிக்கப்படலாம்.

இது புரியாமல் இருப்பதால்தான், சுயஇன்பத்தில் விந்து வெளிவந்தாலும், தூக்கத்தில் விந்து வெளியேறினாலும், "அதிக" முறை செக்ஸில் ஈடுபட்டாலும் விந்து எல்லாம் செலவாகி கடைசியில் விந்து பையே காலியாகி விடும் என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இந்தத் தவறான நம்பிக்கையால்தான், பிரம்மச்சர்யம் உயர்ந்தது, அது ஆரோக்கியம் கொடுக்கும் என்று நம்புகிறார்கள். இதுபோல பல்வேறு தவறான எண்ணங்கள் மக்களிடம் இருக்கின்றன.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக