ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm

» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm

» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm

» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm

» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm

» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm

» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm

» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm

» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm

» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm

» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm

» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm

» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm

» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm

» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm

» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm

» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm

» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm

» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm

» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm

» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm

» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm

» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am

» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am

» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am

» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am

» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am

» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am

» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm

» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm

» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm

» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am

» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am

» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm

» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm

» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm

» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm

Admins Online

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?


Last edited by சிவா on Thu Sep 24, 2009 1:50 am; edited 1 time in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 6:22 am

அடுத்ததாக இன்னொரு விஷயம் கிளம்பியது. இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டை ஹிட்லரின் ஜெர்மன் படை ஆக்கிர மித்து இருந்தது. அந்த சமயத்தில் போலந்து மக்கள் கடும் சித்ரவதைக்கு ஆளானார்கள். இந்த சித்ரவதை படையில் இருந்த ஜெர்மன் தளபதி ஒருவர், கிட்டத்தட்ட 800 போலந்து சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தார். கின்ஸியின் ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர், தனது அனுபவங்களை எழுதி அனுப்பி வைத்தார். அதைப் படித்த கின்ஸி அவருக்கு, ‘உங்கள் அனுபவக் குறிப்புகள் என் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தன. அவற்றைப் படித்து மகிழ்ச்சி அடைந்தேன்’ என பதில் எழுதியதாக அடுத்தக் குற்றச்சாட்டு. ‘சிறுவர்கள் செக்ஸ் சித்ரவதைக்கு ஆளானதைப் படித்து மகிழ்ச்சி அடையும் ஒரே ஆள் இந்த உலகத்தில் கின்ஸியாகத்தான் இருக்க முடியும்’ என்றனர் எதிர்ப் பாளர்கள்.

கின்ஸி நிலையம், அந்தத் தளபதிக்கு கின்ஸி எழுதிய கடிதத்தின் பிரதியை வெளியிட்டது. ‘உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றது’ என வெறும் ஒப்புகை வாசகம் மட்டுமே அதில் எழுதியிருந்தார் கின்ஸி. அதோடு இந்தக் குற்றச்சாட்டு பிசுபிசுத்தது.

கடைசியாக இன்னொரு விஷயமும் சொல்லப்பட்டது. ‘கின்ஸி இன்டர்வியூ செய்ததில் 25 சதவிகிதம் குற்றவாளிகள், ஐந்து சதவிகிதம் செக்ஸ் தொழிலாளிகள். இப்படி சமூகத்தில் ஒழுக்கக்கேடானவர்களை விசாரித்து, அவர்கள் சொல்வதை வைத்து ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் பழக்கம் இதுதான் என்று எப்படி வரையறுக்க முடியும்? அவர் சந்தித்த நபர்களில் கிராமத்து மக்கள், படிக்காதவர்கள் என யாருமே இல்லை. சமூகவிரோதிகள் செய்யும் தவறுகளை அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த பழக்கமாக அவர் காட்டிவிட்டார்’ என்றார்கள் அவரை எதிர்ப்பவர்கள்.

இதற்காக கின்ஸியின் ஆராய்ச்சிப் படிவங்களை ‘சுத்தம் செய்யும்’ வேலையில் இறங்கினார், கின்ஸி நிலைய இயக்குநரான பால் கெப்பார்ட். 1979ம் ஆண்டு இப்படி திருத்தப்பட்ட கின்ஸியின் ஆராய்ச்சி அறிக்கை வெளியானது. சிறைக்கைதிகள் கொடுத்த வாக்குமூலங்களை அகற்றிவிட்டு, மற்றவர்களின் தகவல்களை மட்டும் வைத்துப் புள்ளிவிவரங்களைத் தொகுத்தபோது ஆச்சர்யம்தான். கின்ஸி ஏற்கெனவே சொல்லியிருந்த புள்ளிவிவரங்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே இப்போது வித்தியாசம் வந்தது. அதாவது, சிறைக்கைதிகளாக இருக்கட்டும் அல்லது அமெரிக்க மக்களாக இருக்கட்டும்... செக்ஸ் மனோபாவம் என்பது ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை பால் கெப்பர்ட் உறுதிப்படுத்தினார்.

கின்ஸியின் வாழ்க்கை, நாவலாக வந்தது. கடந்த 2004ம் ஆண்டு ‘கின்ஸி’ என்ற பெயரிலேயே ஹாலிவுட் படமாகவும் வெளியானது. அப்போது இதே பழைய சர்ச்சைகள் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்தன. தங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதோ, அட்வைஸ் செய்வதோ யாருக்குமே பிடிக்காது. அந்த வகையில் அமெரிக்கர்களுக்கு கின்ஸியைப் பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமில்லை.

ஆனால், இன்றைக்கு... ‘அறியாமை’ என்ற எதிரியை வீழ்த்த அறிவு ஆயுதத்தோடு போராடிய போராளியாக அவர் உலகெங்கும் செக்ஸாலஜி நிபுணர்களால் கருதப்படுகிறார்.

கின்ஸி சந்தித்த தாக்குதல்களே பரவாயில்லை என்கிற அளவுக்கு அவருக்கு முன்னதாக சித்ரவதைகளை அனுபவித்தார், இன்னொரு ஆராய்ச்சியாளரான மாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட். ஹிட்லரின் எதிரியாக ஒருவர் கருதப்பட்டால், அவருக்கு என்னென்ன சித்ரவதைகள் நேரும் என்பதற்கு ஆராய்ச்சியாளர் பட்ட வேதனைகள்தான் உலக உதாரணம்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 6:25 am

ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட பாப்புலராக ஒருவர் ஜெர்மனியில் இருக்க முடியுமா? அப்படி இருந்தவர்தான் மாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட். தற்போதைய போலந்து நாட்டின் கோல்பெர்க் நகரம் அப்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்தது. அங்கு 1868&ல் பிறந்தவர் ஹர்ஷ்ஃபீல்ட்.

அவர் அடிப்படையில் ஒரு டாக்டர். முறுக்கு மீசையோடு தோற்றம் தந்தாலும், பெண்மைத்தன்மை மிகுந்த ஆணாக அவர் இருந்தார். ‘டிரான்ஸ்வெஸ்டிசம்’ எனப்படும் கோளாறு அவருக்கு இருந்தது. அதோடு அவர் ஹோமோ செக்ஸ் பிரியராக வேறு இருந்தார். (ஆண்களுக்கு பெண்களின் உடைகளை அணிய வேண்டும் என ஆசை வருவது... இதேபோல பெண்களுக்கு ஆண்கள் உடைகளின் மீது நாட்டம் வருவது... இந்த செக்ஸ் கோளாறுக்குதான் ‘டிரான்ஸ்வெஸ்டிசம்’ என்று பெயர். ‘Transvestism என்ற இந்த வார்த்தையை அறிமுகம் செய்தவரே ஹர்ஷ்ஃபீல்ட்தான். அதற்கு முன்புவரை இப்படி உடை மாற்றி அணிபவர்களை அலிகள் எனப்படும் அரவாணிகளாகவே பலரும் கருதி வந்தனர். ஆனால், ‘அரவாணிகளுக்கு ஹார்மோன் பிரச்னைகளும் சேர்ந்து இருக்கிறது. டிரான்ஸ்வெஸ்டிசக் கோளாறு வெறுமனே மனதளவில் இருக்கும் பிரச்னைதான். இதை யும் அதையும் சேர்க்கக் கூடாது’ என்று விளக்கினார் ஹர்ஷ்ஃபீல்ட். அதோடு ஹோமோசெக்ஸ் உணர்வுள்ளவர் களையும் இந்த வகையில் சேர்த்து பலர் குழப்பிக் கொண்டி ருந்தார்கள். அதுவும் தப்பு என்பது ஹர்ஷ்ஃபீல்டின் வாதம்! மூன்றுமே தனித்தனியான குறைபாடுகள்... ஒருவருக்கே இதில் இரண்டு குறைபாடுகள் சேர்ந்து வரலாம் என்பது அவர் கட்சி!).

‘எனக்கு ஏன் இப்படிப்பட்ட உணர்வுகள் தோன்றுகின்றன? மற்ற ஆண்கள் எல்லோரும் மிடுக்காக கோட் சூட் அணிய, எனக்கு ஏன் பெண்களின் ஆடைகளை அணிய வேண்டும் என ஆசை வருகிறது? பெண்களைப் பார்த்தால் எந்த உணர்வும் ஏற்படாமல், ஆண் களைப் பார்த்தால் பரவசம் ஏற்படுகிறது?’ என அவருக்குள் எழுந்த அடுக்கடுக்கான கேள்விகள்தான் அவரை செக்ஸ் ஆராய்ச்சி பக்கம் திருப்பிவிட்டது. அப்போது ஜெர்மனி, ரஷ்யப் பேரரசின் அங்கமாக இருந்தது. உலகின் மற்ற முன்னேறிய நாடுகளை விட ஜெர்மனியில்தான் அந்த சமயத்தில் செக்ஸ் ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் உலகம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த டாக்டர்கள்கூட ஜெர்மனியை உன்னிப்பாகக் கவனித்தனர்.

இதில் முதல் பரபரப்பு சிக்மண்ட் ஃபிராய்டு. அடிப்படையில் நரம்பியல் நிபுணரான ஃபிராய்டு, உளவியல் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருபவராக சீக்கிரமே மாறினார். வியன்னா நகரில் இருந்தபடி அவர் தந்த சிகிச்சைகளும், அவர் சொன்ன தத்துவங்களும் பலத்த சர்ச்சைக்கு ஆளாகின. கனவுகளின் அர்த்தங்கள், ஆழ்மனதின் வேட்கைகள் என பல விஷயங்களைச் சொன்ன ஃபிராய்டு, செக்ஸ் பற்றியும் அதிர வைக்கும் கருத்துகளைச் சொன்னார்.

‘‘குழந்தைப் பருவத்திலிருந்தே செக்ஸ் உணர்வுகள் தலைதூக்கி விடுகின்றன. தாயின் மார்பில் பால்குடிக்கும் குழந்தைக்கு செக்ஸ் உணர்வு இருக்கிறது. வளரவளர பெற்றோர் மீது குழந்தை காட்டும் அன்பும் இந்த திசையில்தான் போகிறது. பெண் குழந்தை அப்பா மீதும், ஆண் குழந்தை அம்மா மீதும் பாசம் காட்டும். இப்படி எதிர்ப்பாலை நாடி பாசம் காட்ட அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். நான் குழந்தையிலிருந்தே என் அம்மா மீது பாசத்தோடும், அப்பா மீது வெறுப்பு காட்டியும்தான் வளர்ந்தேன். உலகம் முழுக்க இப்படித்தான் நடக்கிறது என்பது என் ஆய்வில் தெரியவந்தது’’ என்றார் ஃபிராய்டு.

‘என்ன இது? பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றி அவர் இப்படி சொல்கிறாரே’ என சமூக அமைப்புகள் பல கொந்தளித்தன. ஃபிராய்டை ஒரு தலைசிறந்த டாக்டராக ஏற்றுக் கொண்டவர்கள்கூட அவரது இந்தக் கருத்துகளைக் கேட்டு முகம் சுளித்தனர். ஆனால், அவர் பழங்கால வரலாறுகளில் இப்படி நடந்த சம்பவங்களை ஆதாரமாகச் சொல்லி, தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அதோடு, ‘‘சிறு வயதில் ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்துதான் ஒருவர் இயல்பான செக்ஸ் பழக்கம் கொண்டவராகவோ அல்லது ஹோமோசெக்ஸில் நாட்டமுள்ள நபராகவோ ஆகிறார். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எந்த ஆμம் ஹோமோசெக்ஸ் பழக்கத்தில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது’’ என்று வேறு சொல்லி எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தார் அவர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 6:26 am

ஃபிராய்டு கிளப்பிய பரபரப்புக்கு மத்தியில் ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் என்ற பிரிட்டன் டாக்டர் ‘செக்ஸ் உளவியல்’ என்ற தலைப்பில் ஏழு பாகங் களைக் கொண்ட ஒரு புத்த கம் வெளியிட்டார். அந்த சமயத்தில் டாக்டர்கள் செக்ஸைப் பற்றி தெரிந்து கொள்ள உதவிய ஒரே உருப்படியான புத்தகமாக இது இருந்தது. ‘‘வாழ்க்கையின் ஆணிவேரே செக்ஸ் தான். அதுபற்றி சரியான புரிதல் இல்லாத எவரும் முழுமை பெற்ற மனிதர்கள் ஆவதில்லை’’ என்றார் அவர்.

ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுய இன்பம் அனுபவித்தல் போன்ற பல விஷயங்கள் மோசமான செக்ஸ் பிரச்னைகளாகக் கருதப்பட்ட காலம் அது! அவற்றுக்கு உளவியல் நிபுணர்கள் சீரியஸான சிகிச்சை தந்து கொண்டிருந்தனர். சில நாடுகள் இந்தப் பழக்கங்களை சட்டவிரோதமாகக் கருதி தண்டனைகளும் தந்து வந்தன. அந்த சமயத்தில் எல்லிஸ், ‘‘இதெல்லாம் செக்ஸ் பிரச்னைகளே கிடையாது. அவர்களின் செக்ஸ் பழக்கங்கள் வழக் கத்துக்கு விரோதமானதாக இருக்கிறது... அவ்வளவுதான்! இதை பெரிய விஷயமாக நினைக்கக் கூடாது. இதெல்லாம் நோயும் கிடையாது. சட்டவிரோதமும் கிடையாது’’ என்று அதிரடியாக சொன்னார்.

‘‘குற்றவியல், செக்ஸ் அறிவு ஆகிய இரண்டையும் அறிவியலின் ஒரு அங்க மாக ஆக்கி, பல்கலைக்கழகங்களில் கற்றுத் தர வேண்டும். செக்ஸ் சிரிக்கக்கூடிய விஷ யமோ, ஆபாசமோ, அருவருப்பானதோ இல்லை. அது அறிவியல்’’ என்றார் அவர். ‘குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை போதிக்க வேண்டும். அப்போதுதான் வருங்கால சமுதாயம் நன்றாக இருக்கும்’ என்று சொன்ன முதல் ஆராய்ச்சியாளரும் அவர்தான்.

இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லி வந்ததால் அவரை பிரிட்டன் அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லை. அவரது புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் ஜெர்மனியில் உள்ள நண்பர்களோடு தொடர்புகொண்டு தன் புத்தகங்களை அங்கு அனுப்பினார். ஜெர்மனியில் அவை அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்தன. இதனால் அவர் பிரிட்டனைவிட ஜெர்மனியில்தான் பாப்புலர். அவரது புத்தகங்கள் பிரிட்டனுக்குக் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டன. அங்கு அவற்றை விற்ற கடைக்காரர்கள், வாங்கியவர்கள் என எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 6:32 am

செக்ஸ் மனநோயாளிகள் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. தன் உடம்பை கண்ணாடியில் பார்த்து ரசித்தால்தான் அவர்களுக்கு செக்ஸ் உணர்வு கிளர்ந்து எழும். இந்த மனநோய்க்கு ‘நார்ஸிசிஸம்’ என பெயர் வைத்தவர் எல்லிஸ்தான். சிறுவயதிலிருந்து ஒருவர் வளரும் குடும்பச் சூழல்தான் இந்த மனநோய் வருவதற்கு காரணமாக அமைகிறது என்றார் அவர்.

நார்சிஸஸ் என்பவன் கிரேக்க காவியங்களில் வரும் ஒரு ஹீரோ. எக்கோ என்ற தேவதை அவனைக் காதலித்தாள். ஆனால், நார்சிஸஸ் அவளிடம் நாட்டம் காட்டவில்லை. இதனால் அவனை சபித்துவிட்டாள் எக்கோ. நீர் நிலைகளில் தன்னுடைய நிர்வாண பிம்பத்தை தானே ரசிக்கும் மனநோயாளியாக அவன் மாறிப்போனான். இதுதான் சாபம். பின்னாளில் நார்சிஸஸ் ஒரு அழகிய மலராக உருவெடுத்தான் (இன்றைக்கும்கூட இந்த நார்சிஸஸ் மலர் இருக்கிறது). அவன் பெயரிலிருந்தே தன் உடலைத் தானே ரசிக்கும் நோய்க்கு பெயரைச் சூட்டினார் எல்லிஸ்.

வில்ஹெம் ரீக், ஆல்பர்ட் மால் என பல நிபுணர்கள் அடுத்தடுத்து ஆராய்ச்சி புத்தகங்களை எழுதிக் குவித்தனர். கருத்தரங்குகள், விவாதக் கூட்டங்கள் என செக்ஸ் பற்றிய வெளிப்படையான பேச்சுகள் சகஜமான விஷயங்கள் ஆயின. அதேபோல அவர்களுக்கு எதிர்ப்புகளும் வளர்ந்தன.

இவர்கள் எல்லோரையும்விட ஹர்ஷ்ஃபீல்டை அதிகம் கவர்ந்தவர், ரிச்சர்டு வான் கிராஃப்ட் எபிங் என்பவர்தான். ஜெர்மனியின் புகழ்பெற்ற உளவியல் நிபுணரான இவர் சிக்மண்ட் ஃபிராய்டின் ஆசிரியர். இவர் எழுதிய பல மருத்துவ புத்தகங்களில் ‘செக்ஸ் மனநோய்’ (லத்தீன் மொழியில் எழுதப்பட்ட அதன் பெயர் ’Psychopathia sexualis’) என்ற புத்தகம் இன்றைக்கும் மதிக்கப்படும் ஒன்று.

ஹோமோசெக்ஸ் பழக்கம் கொண்ட பல ஆண்களை யும், லெஸ்பியன் உறவில் ஈடுபடும் பெண்களையும் இன்டர்வியூ செய்த அவர் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். ‘‘ஓரினச் சேர்க்கைப் பிரியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்ட செக்ஸ் நோயாளிகள் இல்லை... அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளும் இல்லை. அது உடல்ரீதியான ஒரு குறைபாடு. அவர்கள் கருவில் உருவாகும் போதே தீர்மானிக்கப்படும் விஷயம் அது. மூளையில் செக்ஸ் உணர்வுகளைத் தீர்மானிக்கும் பகுதியில் ஏற்படும் குறைபாடுதான் அவர்களை இப்படி ஆக்கிவிடுகிறது.

அவர்களையும் மற்ற மனிதர்களைப் போல நார்மலான ஆசாமிகளாகவே கருத வேண்டும். உடல்ரீதியாக ஏற்பட்ட ஒரு குறைபாட்டுக்கு பாவம்... அவர்கள் என்ன செய்வார்கள்? அதை ஒரு வகை ஊனமாகத்தான் கருத வேண்டும். ஊனமுற்றவர்கள் மீது கருணை காட்டுவது போல இவர்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும்’’ என்றார் அவர்.

ஆனால், சட்டங்கள் வேறுவிதமாக இருந்தன.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் எல்லோரும் வக்ரமான மனசு படைத்த ஆசாமிகள் என காலம்காலமாக இருந்துவந்த நினைப்பை அடியோடு நிராகரித்த எபிங்கின் கருத்து, ஹர்ஷ்ஃபீல்டுக்குப் பிடித்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக அப்போது ஆசிரியர் எபிங்கைவிட அவருடைய மாணவர் ஃபிராய்டுதான் செக்ஸ் விஷயங்களில் ஜாம்பவானாக இருந்தார். ‘ஓரினச் சேர்க்கைக்கு மனசுதான் காரணம்’ என ஃபிராய்டு சொன்னதுதான் பாப்புலராக இருந்தது. எபிங் சொன்னதை எல்லோரும் மறந்துவிட்டார்கள். ஹோமோசெக்ஸ் பிரச்னைக்கு மருத்துவரீதியான தீர்வு தேடும் முயற்சியில் இறங்கும் நாம், எபிங் போட்டுக்கொடுத்த பாதையில்தான் போக வேண்டும் என முடிவெடுத்தார் ஹர்ஷ்ஃபீல்ட். 1908ல் உலகிலேயே முதன்முதலாக செக்ஸ் அறிவியலுக்காக மாத இதழ் ஒன்றை ஆரம்பித்தவர் ஹர்ஷ்ஃபீல்ட். புகழ்பெற்ற பல நிபுணர்களைத் தேடி வெளிநாடுகளுக்குக் கூடச் சென்று அவர்களின் கட்டுரைகளை வாங்கி அதில் பிரசுரம் செய்தார். ஆனால் ஒரே ஆண்டில் அதை மாக்ஸ் மார்க்யூஸ் என்பவரிடம் கொடுத்துவிட்டு ஹோமோ செக்ஸுவல்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார் அவர். அப்போதைய ஜெர்மனியின் சூழல் மிக இறுக்கமானதாக இருந்தது. 1871ல் வில்ஹெம் மன்னர் ஜெர்மன் கிரிமினல் சட்டத்தைப் புதுப்பித்தார். இதன்படி ஹோமோசெக்ஸ், இயற்கைக்கு விரோதமான கிரிமினல் செயலாகக் கருதப்பட்டது. அந்த சட்டத்தின் 175ம் பாரா இதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. குற்றத்தில் ஈடுபடும் நபரின் பின்னணிக்கு ஏற்ப சிறைத் தண்டனை ஒரு நாள் என்ற குறைந்த அளவிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை விதிக்கப்படலாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 6:32 am

ஒரு அறைக்குள் தாழிடப்பட்ட கதவுக்குப் பின்னே இரண்டு ஆண்கள் மேற்கொள்ளும் உறவை போலீஸ் எப்படி மோப்பம் பிடிக்கும் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தாலும்கூட, ஹோட்டல்கள், நடன அரங்குகளில் நிறைய பேர் கையும்களவுமாக சிக்கினார்கள். தங்களுக்குப் பிடிக்காத இளைஞர்கள் பற்றி அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் துப்பு கொடுத்தார்கள். பெர்லின் நகரில் மட்டும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக ஐந்நூறு பேர் இப்படி கைதானார்கள். அதைவிட பெரிய கொடூரம்... பலர் தற்கொலை செய்து கொண்டது. பிரபலங்கள் பலரது ஹோமோசெக்ஸ் பழக்கத்தை எப்படியோ தெரிந்துகொண்ட கிரிமினல்களும், போலீஸாரும் அவர்களை அடிக்கடி பிளாக்மெயில் செய்து பணம் பறித்தார்கள். இதனால் சஞ்சலப்பட்டு அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

‘நான் ஹோமோசெக்ஸ் பழக்கம் உள்ளவன்தான். நான் இரவில் படுக்கையில் பெண்களோடு படுக்காமல் ஆண் தோழர்களோடுதான் படுக்கிறேன்’ என வெளிப்படையாக ஒருவர்

அறிவித்துக் கொள்வது என்பது, ஏதோ பல்லவன் பஸ்ஸில் பர்ஸ் அடித்தவன் குற்றத்தை ஒப்புக்கொண்டு தர்மஅடி வாங்குவது போன்ற விஷயமாக இருந்தது.
ஹோமோ பிரியரான ஹர்ஷ்ஃபீல்ட், இதைப் பார்த்துக் கொதித்தார். ஹோமோவுக்கு எதிரான கெடுபிடிகளை எதிர்த்து முதலில் புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தார். ரேமியன் என்ற புனைப்பெயரில் அவர் 1896ல் வெளியிட்ட சில துண்டுப் பிரசுரங்கள் உணர்ச்சிகரமானவை. பழங்கால கிரேக்க பெண் கவிஞரான சாஃபோ (பிளாட்டோவின் ஆசிரியராக இருந்தவர்), தத்துவமேதை சாக்ரடீஸ் போன்ற பிரபலங்கள் ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் காதல் பற்றி எழுதிய கவிதைகள், கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துத் துண்டுப் பிரசுரங்கள் ஆக்கினார் ஹர்ஷ்ஃபீல்ட்.

இவை, பரபரப்பான ஒரு அடித்தளத்தைப் போட்டுக் கொடுக்க, அடுத்த ஆண்டே ஹோமோசெக்ஸ் ஆண்களை தண்டனையிலிருந்து பாதுகாக்க, ‘விஞ்ஞான மனிதாபிமானிகள் சங்கம்’ (Scientific Humanitarian Society) என்ற அமைப்பை ஆரம்பித்தார் அவர்.

‘‘எப்படி பெரும்பாலான வலதுகை பழக்கமுள்ள மனிதர்களுக்கு மத்தியில் சிலர் இடதுகை பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ, அப்படி பல இயல்பான செக்ஸ் விரும்பிகளுக்கு மத்தியில் சிலர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். இது அவர்களின் தவறு இல்லை. அவர்கள் வக்ரமான உணர்வு கொண்ட செக்ஸ் வெறியர்களும் இல்லை. இது பிறவிக் கோளாறு. அவர்களது உணர்வுகளுக்கும், பழக்கங்களுக்கும் உடல்ரீதியான மாறுபாடுகள்தான் காரணம். இதை அறிவியல்ரீதியாக அμக வேண்டும். அதைவிட்டு அவர்களை கிரிமினல்கள் மாதிரி நடத்தக் கூடாது. அறிவியல்தான் அவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்’’ என அந்த கமிட்டி சார்பாக முழக்கமிட்டார் அவர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 6:44 am

அதோடு மட்டுமில்லை... ஆண்கள், பெண்கள் என இரண்டு இனமாக மனித குலத்தை பிரிக்கக் கூடாது. இவற்றைப் போலவே ஓரினச் சேர்க்கை உணர்வு கொண்டவர்களை மூன்றாவது இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

ஜெர்மனியை அதிரவைத்த அமைப்பு அது. வெறும் எழுபது பேர்தான் அதில் உறுப்பினர்கள். ஆனால், ஆயிரக்கணக்கான பிரபலங்களின் அனுதாபத்தைத் தங்கள் பக்கம் திரட்டி, சட்டத்தையே மாற்ற அவர் முயற்சித்தார். அதோடு செக்ஸ் ஆராய்ச்சியையும் அவர் விட்டுவைக்கவில்லை. அதுதான் ‘செக்ஸ் அறிவியலின் ஐன்ஸ்டீன்’ என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது. அதேசமயம், ஹோமோசெக்ஸுக்கு ஆதரவான அவரது போராட்டத்துக்கு அடி, உதைதான் பரிசாகக் கிடைத்தது. ஹர்ஷ்ஃபீல்ட் உதை வாங்கியது பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அப்போதைய ஜெர்மன் சூழலைப் புரிந்து கொள்வது முக்கியம்.

தொழிற்புரட்சி அப்போதுதான் துவங்கியிருந்தது. கிராமங்களைப் புறக்கணித்துவிட்டு மக்கள் சாரிசாரியாக நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தார்கள். ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் அப்போது லண்டனுக்கு இணையான பெருநகரமாக வளர்ந்தது... 1895-வாக்கில் பெர்லின் நகர மக்கள் தொகை இருபத்தைந்து லட்சம்.

இப்படி நிகழ்ந்த மக்கள் தொகைப் பெருக்கம் செக்ஸ் விஷயத்திலும் எதிரொலித்தது. கிராமங்களில் தனிமையில் இருந்த ஹோமோசெக்ஸ் நபர்கள் புதிய தோழர்களைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்தது. ஹர்ஷ்ஃபீல்ட் ஆரம்பித்த பிரசாரத்தின் விளைவாக இவர்களுக்கு நெருக்கடி தருவதையும் போலீஸ் நிறுத்திக் கொண்டது. பெர்லினில் மட்டும் ஹோமோசெக்ஸ் ஆண்களுக்காக என்று நாற்பது பார்கள் இருந்தன. இதுதவிர இரண்டாயிரம் ரகசிய சந்திப்பு இடங்கள் இருந்ததாக ஒரு கணக்கு சொல்கிறது. ஹோட்டல்கள், நாடக அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நடன அரங்குகள்... என பலவிதமான இடங்கள்! ஆண்களும், ஆண்களும் ஜோடியாகக் கட்டித் தழுவியபடி ஆடும் நடன அரங்குகளும் அங்கு உண்டு.

ஹர்ஷ்ஃபீல்ட் தலைசிறந்த பேச்சாளர். ‘‘என் பேச்சை ஒரு தடவை கேட்கும் ஜெர்மன் மக்கள், ஹோமோசெக்ஸ் குற்றம் இல்லை என்பதை உணர்வார்கள். அவர்கள் மீது பரிதாபம் காட்ட ஆரம்பிப்பார்கள். இதற்கு தண்டனை தரலாமா என பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால், அவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் என் கருத்தை ஆதரிப்பார்கள்’’ என நம்பிக்கையோடு அவர் சொல்வார். அது ஒருவகையில் உண்மையும்கூட. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர் பேசிய அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தங்கள் செக்ஸ் பிரச்னைகளை அவரிடம் சொல்லித் தீர்வு தேட பலர் க்யூவில் நின்றார்கள். தங்கள் வீட்டு விழாக்கள், பார்ட்டிகளில் அவர் கலந்துகொள்வதை ஜெர்மனியின் கனவான்கள் பெரிய கௌரவமாக நினைத்தார்கள்.

ஜெர்மனியின் பல அரசியல் கட்சிகள் அப்போது ஹோமோசெக்ஸுக்குத் தண்டனை தருவதை எதிர்த்தன.

‘குற்றவியல் சட்டத்தையே திருத்தினால் என்ன?’ என்கிறரீதியில் பல வீடுகளிலேயே விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

இதற்காக பேசுவதோடு மட்டுமில்லாமல், ஒரே ஆண்டில் சுமார் முந்நூறு புத்தகங்களை வெளியிட்டது, அவரது ‘விஞ்ஞான மனிதாபிமானிகள் சங்கம்.’ அந்த சங்கத்தின் சார்பாக ஒரு பத்திரிகையும் வெளிவந்தது. ஹோமோசெக்ஸ் ஆண்களின் மருத்துவ மற்றும் சட்டப் பிரச்னைகளைப் பற்றிய கட்டுரைகளுக்கு இது முக்கியத்துவம் கொடுத்தது. இந்தவகையில் முதல் பத்திரிகை, உலகிலேயே இதுதான்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 6:57 am

இப்படி ஒருபுறம் ஹோமோசெக்ஸ் நபர்களுக்காகப் போராடினாலும், விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுவதையே பெரிய அங்கீகாரமாக அவர் நினைத்தார். செக்ஸ் பிரச்னைகளுக்காக அவரிடம் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமின்றி, எல்லோரும் வந்தனர். தன்னிடம் இப்படி ஆலோசனைக்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் முப்பதாயிரம் பேரிடம் 130 கேள்விகள் அடங்கிய ஒரு படிவத்தைக் கொடுத்து அவர் சர்வே நடத்தினார். ‘செக்ஸ் விஷயத்தில் தம்பதிகள் ஒளிவுமறைவில்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தது’ என்பது அவர் இந்த சர்வே மூலம் கண்டுபிடித்துச் சொன்ன கருத்து.

இந்த ஆராய்ச்சிகளை வைத்து அவர் எழுதிய ‘செக்ஸ் நோயறிவியல்’ என்ற மூன்று பாகங்கள் கொண்ட புத்தகம், இன்றளவும் பலரைப் பிரமிக்க வைக்கும் ஒன்று. இதேபோல ‘செக்ஸ் அறிவு’ என்ற ஐந்து பாகங்கள் கொண்ட இன்னொரு புத்தகத்தையும் அவர் எழுதினார்.

இந்த இரண்டுமே சாதாரண வாசகர்கள் படித்துக் கிளர்ச்சி அடைவதற்காகப் படைக்கப்பட்ட ஆபாச இலக்கியங்கள் இல்லை. டாக்டர்கள் செக்ஸ் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு தங்களிடம் வரும் நோயாளிகளுக்குத் தீர்வு தர வேண்டும் என்ற அக்கறையில் எழுதப்பட்ட பாட புத்தகங்கள். ஆனால், வெறும் புத்தகங்களைப் படித்து டாக்டர்கள் சிகிச்சை தருவது கஷ்டம் என அவர் நினைத்தார். எனவே டாக்டர்கள் பிராக்டிக்கலாக பயிற்சி பெற ஒரு ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பிக்க விரும்பினார். அவரது அந்தக் கனவு, 1919-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி நிஜமானது. பெர்லினில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மாளிகையை அந்த நிலையத்துக்காகக் கொடுத்தார். ‘Institut e of Sexual Science’ என்ற பெயரோடு துவக்கப்பட்ட இது, உலகின் முதல் செக்ஸ் ஆராய்ச்சி மையமாக அமைந்தது.

‘‘வெறுத்து ஒதுக்க வேண்டிய அருவருப்பான பொருளாகவோ, மூடி மறைக்க வேண்டிய ரகசியமாகவோ செக்ஸை இனியும் கருத வேண்டாம். அதை அறிவியலின் ஒரு அங்கமாக்கி ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்போம். செக்ஸ் பிரச்னைகளை மூடிமறைத்து இனி எந்த குடும்பமும் சிதைந்துவிடக் கூடாது’’ என்றார் அவர்.

ஆனால், இந்த ஆராய்ச்சி நிலையம்தான் அவரது உயிருக்கு எமனாக அமைந்தது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 7:01 am

ஹர்ஷ்ஃ பீல்டின் ஆராய்ச்சி நிலையம் செக்ஸ் தொடர்பான எல்லா விஷயங் களையும் டீல் பண்ணியது. செக்ஸ் உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவது, செக்ஸ் மன நோயாளிகளுக்கு சிகிச்சை, திருமணத்துக்கு முன்பே கவுன்சிலிங் கொடுத்து-- செக்ஸ் உறவு பற்றிய சந்தேகங்களைக் களைவது, முதலிரவு பற்றிய பயத்தைத் தெளியவைப்பது (இப்படி கவுன்சிலிங் தருவதை ஹர்ஷ்ஃபீல்ட்தான் ஐரோப்பாவில் முதலில் ஆரம்பித்து வைத்தார்.), பாலியல் நோய்களுக்கான சிகிச்சை, செக்ஸ் ஆராய்ச்சி... என எல்லாம் அங்கு நடந்தது.

அந்த நிலையத்தின் ஒருபகுதியில்தான் உலகின் முதல் ‘செக்ஸ் நூலகம்’ ஆரம்பிக்கப்பட்டது. செக்ஸ் தொடர்பாகப் பல மொழிகளில் எழுதப்பட்ட இருபதாயிரம் அரிய புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டன. இது தவிர 35,000 புகைப்படங்கள், பிரபலமான ஓவியர்கள் வரைந்த செக்ஸ் ஓவியங் கள், சிலைகள் என எல்லாம் அங்கு இருந்தன. தங்கள் செக்ஸ் பழக்கங் களை விலாவாரியாக விவரித்துப் பலர் எழுதிய உணர்ச்சிகரமான கடிதங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன.

இங்கு வரும் ஒருவர் உலகத்தின் ஒவ்வொரு நாட்டு மக்களும் செக்ஸ் பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருந்தார்கள், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு கட்டத்தில் மக்கள் என்னவிதமான செக்ஸ் உறவுகளில் நாட்டம் காட்டி னார்கள் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளலாம். இங்கு ஆராய்ச்சி செய்ய பல நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள் வந்தார்கள். உலகிலேயே புதுமையான முயற்சி என்பதால் சும்மா பார்த்துவிட்டுப் போகவே பல நாடுகளிலிருந்து பிரபலமான நபர்கள் வந்தார்கள்.
அமெரிக்காவில் போய் வெள்ளை மாளிகைக்கு அட்ரஸ் கேட்க வேண்டியதில்லை என்பார்கள். அப்படி பெர்லினில் மிகப் பிரபலமான இடமாக இருந்தது இந்த நிலையம்! இதன் பெருமையை உணர்ந்து, அரசே இந்த நிலையத்தைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டது. அது மட்டுமில்லை... இந்த நிலையத்துக்கு ‘மாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட் அறக்கட்டளை’ என பெயர் வைத்தது.

இது வெற்றிகரமாக செயல்படும் திருப்தியில் மீண்டும் ஹோமோசெக்ஸ் பக்கம் கவனத்தைத் திருப்பினார் ஹர்ஷ்ஃபீல்ட். பிரபல டைரக்டர் ரிச்சர்ட் ஆஸ்வால்ட் இயக்கத்தில் "டிஃபரென்ட் ஃப்ரம் அதர்ஸ்" (Different from others) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். ‘மற்றவர்களிலிருந்து வேறுபட்டது’ என்ற பொருள் கொண்ட இந்தப் படம் பரபரப்பாக வெளியானது. ‘ஹோமோசெக்ஸ் பழக்க முள்ள ஒரு

பியானோ இசைக்கலை ஞன்... அவன் இப்படி உறவு கொள்வ தைப் பார்த்துவிட்டு பிளாக்மெயில் செய்கிறது ஒரு கும்பல். அதனால் மன நிம்மதி இழந்து அவன் தற்கொலை செய்து கொள்வதை’க் கதையாகச் சித்திரித்து இருந்தது அந்தப் படம். ஹோமோசெக்ஸை மையக் கருத்தாக வைத்து வெளியான முதல் திரைப்படம் அதுதான்! அந்தப் படம் ஐரோப் பிய நாடுகள் பலவற்றிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. துரதிர்ஷ்டவசமாக அதுதான் ஹர்ஷ்ஃபீல்டுக்கு பெரும் பிரச்னை யாக அமைந்தது. இந்த மாபெரும் வெற்றி ஹிட்லரின் கவனத்துக்குப் போகவே பல்வேறு பிரச்னைகளை சந்தித்தார் ஹர்ஷ்ஃபீல்டு.

ஹிட்லருக்கு இரண்டு கும்பல் களை சுத்தமாகப் பிடிக்காது. ஒன்று யூதர்கள்... இன்னொன்று ஹோமோசெக்ஸ் ஆண்கள். சோதனையாக அந்த சமயத்தில் ஜெர்மனியில் செக்ஸ் ஆராய்ச்சியில் பிரபலமாக இருந்த பலரும் யூதர்கள். ஹிட்லரின் எதிர்ப்பைத் தாங்கமுடியாமல் ஃபிராய்டு உட்பட அவர்களில் பலர் ஜெர்மனியை விட்டே ஓடினார்கள்.
ஹர்ஷ்ஃபீல்டு யூதராக மட்டுமில் லாமல், ஹோமோசெக்ஸு வலாகவும் இருந்தார். அதனால் தவிர்க்க முடியாமல் ஹிட்லரின் முக்கிய இலக்காகிவிட்டார்.

ஹிட்லரின் நாஜி இளைஞர் கும்பல், இந்தப் படம் ஓடிய தியேட்டர்களில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டது. கல் எறிவார்கள்... புகை கக்கி பயமுறுத்தும் நாட்டு வெடிகுண்டுகளை வீசுவார்கள். வியன்னாவில் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைக் கண்மண் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டனர். யாரும் சாகவில்லை என்றாலும், நிறையபேருக்குப் பலத்த காயம். படம் பார்க்கப் போவதே உயிருக்கு ஆபத்தான விஷயம் என்றால், யார் தியேட்டருக்கு வருவார்கள்? ஒருவழியாகப் படம் பெட்டியில் சுருண்டது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 7:03 am

அடுத்தகட்டமாக, ஹர்ஷ்ஃபீல்ட் பேசும் கருத்தரங்குகளைக் குறிவைத்தனர். மியூனிச் நகரில் 1920-ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். அவ ரது உதடுகளைக் குதறி எடுத்து விட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்... ‘இனி ஹோமோ செக்ஸில் ஈடுபடும்போது தனது சீடர்கள் யாரையும் இவர் முத்தமிட முடியாது’.

சளைக்காமல், சில மாதங்கள் கழித்து வாய் சரியானதும் அதே மியூனிச்சில் பேசப் போனார் அவர். இம்முறை அவரைக் கூட்ட அரங்கிலிருந்து வெளியே
இழுத்துவந்து தடிகளால் தாக்கினர். அடித்த அடியில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. எப்படியும் செத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரை பிளாட்பாரத்தில் போட்டு விட்டு அவர்கள் போனார் கள். உறைபனியில் பேச்சு மூச்சற்றுக் கிடந்த அவரை யாரோ காப்பாற்றினார்கள்.

‘இனியும் ஜெர்மனியில் இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து’ என்பது அவருக் குப் புரிந்தது. செக்ஸ் தொடர்பான கருத்தரங்கு களில் பேச அவர் உலகச் சுற்றுப்பயணம் கிளம்பி னார். அந்த சமயத்தில் ஹிட்லர் விஸ்வரூபம் எடுத்தார்.

உலகத்தில் வேறெங் கும் இல்லாத அரிய படைப்புகளைக் கொண்ட ஹர்ஷ்ஃபீல் டின் ஆராய்ச்சி நிலையமும், நூலகமும் ஜெர்மனிக்கே அவமானம் தேடித் தருவதாக ஹிட்லர் நினைக்க, செக்ஸ் ஆராய்ச்சிக்கு எதிரான முதல் நெருப்பு அங்கே பற்ற வைக்கப் பட்டது.

இதற்காக அவர் குறித்த நாள், 1933-ம் ஆண்டு மே 6-ம் தேதி.

அன்று நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நிருபர் ஒருவரின் நேரடி வர்ணனை இதோ...

‘‘ஜெர்மானியர்களின் உணர்வுகளுக்கு எதிரான நூலகங் களை அழித்து நாட்டை ‘சுத்தப்படுத்தும்’ பணியைச் செய்யு மாறு அன்று காலை நாஜி இளைஞர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். இந்த தகவல் ஹர்ஷ்ஃபீல்டின் உதவியாளர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர்கள் அங்கிருந்த அரிய புத்தகங்கள் சிலவற்றையாவது வெளியே எடுத்துச் சென்று பாதுகாக்க முயன்றனர். ஆனால், முதல்நாள் இரவிலிருந்தே நூலக வாசலில் போலீஸ் காவல் இருந்தது.

புத்தகங்களை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற நூலக ஊழியர்களைத் திருட்டுக் குற்றம் சாட்டி கைது செய்த போலீஸ், அந்தப் புத்தகங்களை பழையபடி நூலகத்தில் ‘பத்திரமாக’ வைத்தது.

காலை ஒன்பதரை மணி. பெர்லின் ஜிம்னாஸ் டிக்ஸ் அகாடமியிலிருந்து நூறு இளைஞர்கள் லாரிகளில் ஏறிவந்து, நூலகத்தின் முன்னால் இறங்கினர். ஏதோ ராμவ அணிவகுப்பு போல அவர்கள் நூலகத்தின் வாசலில் அணிவகுத்தனர். அவர்களுடனே வந்திருந்த ஒரு பேண்டு இசைக்குழு, வாசலில் நின்று நாராசமான இசையை எழுப்பியபடி இருக்க, அந்த இளைஞர்கள் கதவை உடைத்துக் கொண்டு எல்லா அறைகளுக்கும் சென்றனர். சுவர்களில் மாட்டியிருந்த ஓவியங்கள், புகைப்படங்கள், வரைபடங்களை சிலர் பிடுங்கி ஜன்னல் வழியாகத் தூக்கி ரோட்டில் எறிந்தனர். எல்லாம் கந்தரகோலமாயின.

இன்னொரு குழுவினரிடம், ‘எந்தெந்த புத்தகங்கள் மிகவும் ஆபாசமானவை’ என்ற கறுப்புப் பட்டியல் இருந்தது. அதை வைத்து சில நூறு புத்தகங்களை அவர்கள் பறிமுதல் செய்து ஜன்னல் வழியே தூக்கி எறிந்தனர். அவை அவர்கள் வந்த லாரிக்குள் பத்திரமாக அடைக்கலமாயின.

உடலில் எங்கெல்லாம் ஹார்மோன் சுரப்பிகள் இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கு விளக்க உதவும் ஆளுயர மாடல் பொம்மை ஒன்று ஹாலில் இருந்தது. வெள்ளைக் களிமண்ணால் ஆன அந்தப் பொம்மை, ஆடைகள் எதையும் அணிந்திருக்கவில்லை. ‘ஆபாசமான’ அந்தப் பொம்மையை மாடியிலிருந்து தூக்கி எறிய... அது சிதறி தூள்தூளானது. அதைப் பார்த்து அவர்கள் வெற்றிக் களிப்பில் சிரித்தார்கள்.

ஹர்ஷ்ஃபீல்டின் மார்பளவு வெண்கலச் சிலை ஒன்று அங்கே இருந்தது. அதைக் கையோடு எடுத்துக் கொண்டார்கள். அதுதவிர, விதம்விதமான செக்ஸ் உறவுக் காட்சிகளை விளக்கும்விதமாக அங்கிருந்த சிலைகள் பலவற்றையும் அந்தக் கும்பல் பறிமுதல் செய்தது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்க்க, மதியம் பன்னிரண்டு மணிவாக்கில் இந்த ‘சுத்தப்படுத்தும்’ பணி முடிந்தது. அவர்கள் கிளம்பினார்கள்.

இன்னமும் புத்தகங்கள் மிச்சமிருந்தன. ‘இதையாவது விட்டார்களே’ என நூலக ஊழியர்கள் பெருமூச்சு விட்டனர். ஆனால், மதியம் மூன்று மணிவாக்கில் ஏழெட்டு லாரிகளில் ஆட்கள் வந்து இறங்கினர். இம்முறை அவர்களோடு போலீஸ் அதிகாரிகளும் வந்தனர்...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 7:53 am

‘‘காலையில் வந்தவர்களுக்கு நேரம் போதாததால் சரியாக ‘சுத்தம்’ செய்ய முடியவில்லை. நாங்கள் நிதான மாக செய்கிறோம்’’ என்றபடி அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். நூலகத்தில் இருந்த எல்லா புத்தகங்களையும் எடுத்து லாரிகளில் ஏற்றினர். இரண்டு லாரிகள் நிரம்பின.

நூலகம் காலியான பிறகு அந்தக் கும்பலின் தலைவன் அங்கிருந்த ஊழியர்களிடம், ‘‘ஹர்ஷ் ஃபீல்ட் எங்கே போயிருக்கிறார்... எப்போது வருவார்?’’ என அதட்டலாகக் கேட்டான்.

‘‘அவருக்கு மலேரியா காய்ச்சல். சிகிச்சைக்காக வெளிநாடு போயிருக்கிறார்’’ என சன்னமான குரலில் சொன்னார் ஓர் ஊழியர்.

‘‘அவரைத் தூக்கிலிட்டோ, கல்லால் அடித்தோ சாகடிக்க நாங்கள் ஆசைப்பட்டோம். எங்கள் உதவி இல்லாமலே அவர் செத்து விடுவார் போலிருக்கிறதே!’’ என்றபடி அவன் சிரிக்க, கூட வந்தவர்கள் எல்லோரும் அந்த சிரிப்பில் கலந்தபடி கிளம்பிப் போனார்கள்.

மறுநாள், நூலகத்துக்கு நேர்ந்த கதி சர்வதேச பத்திரிகைகளில் வெளியாக, பல நாடுகள் கவலை அடைந்தன. ‘செக்ஸ் சீர்திருத்தத்துக்கான உலக கமிட்டி’& ஜெர்மன் கல்வி அமைச்சகத்துக்கு அவசரமாக ஒரு தந்தி கொடுத்தது. ‘அந்தப் புத்தகங்களில் பலவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவை. அவற்றை எரித்து விடாதீர்கள்’ என்று கேட்டுக் கொண்டது.

ஆனால், மே பத்தாம் தேதி மாலை... கையில் தீப்பந்தம் ஏந்திய ஓர் இளைஞர் கும்பல், ஊர்வலமாக ஓபரா சதுக்கத்தை நோக்கி சென்றது. அந்த ஊர்வலத்தில் முன்னால் சென்றவனின் கையில் ஹர்ஷ்ஃபீல்டின் வெண்கலச் சிலை இருந்தது. நூலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட எல்லாப் புத்தகங்களும் லாரிகளில் வந்தன. அவற்றை எரித்த அந்தக் கும்பல், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் ஹர்ஷ்ஃபீல்டின் சிலையைத் தூக்கிப் போட்டது.

‘விஷத்தைப் பரப்பி வந்த யூதர் ஹர்ஷ்ஃபீல்டின் ஆபாச நூலகம் சுத்தம் செய்யப்பட்டது’ என மறுநாள் நாஜி அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது.
இதற்குப் பிறகு ஹர்ஷ்ஃபீல்ட், ஜெர்மன் திரும்பவில்லை. ஃபிரான்ஸில் தஞ்சம் புகுந்தார்.

தங்கள் அரசின் சாதனைகளை செய்திப் படங்களாகத் தயாரித்து இருந்தார் ஹிட்லர். அவை நாஜி அடக்குமுறையின் வேதனையான அடையாளமாக பல ஐரோப்பிய நாடுகளில் திரையிடப்பட்டன. ஹர்ஷ்ஃபீல்டின் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எரியும் காட்சிகளும் இப்படி செய்திப் படமானது. தான் சிரமப்பட்டு சேகரித்த

நூல்கள் எரிக்கப்படும் காட்சியை பாரீஸில் ஒரு தியேட்டரில் பார்த்தார் ஹர்ஷ்ஃபீல்ட். அந்த வேதனையோடு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்தார். பெர்லினில் இருந்ததைப் போலவே ஃபிரான்ஸில் ஓர் ஆராய்ச்சி நிலையமும், நூலகமும் ஆரம்பிக்க வேண்டும் என்ற அவரது கனவும் நிராசையானது (பெர்லினில் ஹிட்லர் ஆட்களின் ரெய்டுக்குப் பிறகு மூடியிருந்த அந்த ஆராய்ச்சி நிலையக் கட்டடம், இரண்டாம் உலகப் போரின்போது குண்டுவீச்சில் சேதமடைந்தது. பாழடைந்து புல் முளைத்திருக்கும் அந்தக் கட்டடத்தை சீரமைத்து, ஹர்ஷ்ஃபீல்ட் பெயரில் அங்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணியில் இப்போது சிலர் ஈடுபட்டுள்ளனர்).

ஹர்ஷ்ஃபீல்டின் ஆராய்ச்சி நிலையத்தையும், நூலகத்தையும் ஹிட்லர் திட்டமிட்டுக் காலி செய்ததற்கு இன்னொரு காரணமும் சொல்லப் பட்டது. ‘நாஜி தலைவர்கள் பலரே ஹோமோசெக்ஸ் நபர்கள். அவர்கள் ஹர்ஷ்ஃபீல்டிடம் சிகிச்சை பெற்றவர்கள். அவர்களைப் பற்றிய ஆவணங்கள் அந்த நூலகத்தில் இருந்தன. அவை ஆட்சிக்கே ஆபத்து விளைவிக்கும் அபாயம் இருந்ததால் அவற்றைக் குறி வைத்துதான் ஹிட்லர் தாக்குதல் தொடுத்தார்’ என்றும் சொல்லப்படுகிறது.

ஹோமோசெக்ஸை அடியோடு வெறுத்த ஹிட்லர், தனது அமைப்பினரை எப்படி அந்தப் பழக்கத்தில் ஈடுபட அனுமதித்தார்? அதற்கு காரணம் எர்னஸ்ட் ரோம். ஹிட்லரின் கலகப் படையின் தலைவராக இருந்தவர் இந்த ரோம். ‘பழுப்புச் சட்டைராணுவம்’ எனப்படும் இந்த அமைப்புதான் ஹிட்லரின் வலதுகரமாக இருந்தது. நகர்ப்புற சேரிகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட ஆட்களைக் கொண்ட குண்டர்படை இது. அரசியல் எதிரிகள், யூதர்கள், தன்னை விமர்சனம் செய்பவர்கள் என பலரைத் தீர்த்துக்கட்ட வும், கலகங்கள் செய்யவும் இந்த அமைப்பைத் தான் பயன்படுத்தினார் ஹிட்லர். படிப்பறிவில் லாத, முரடர்கள் நிறைந்த இந்தப் படையில் பலர் ஹோமோ செக்ஸ் பார்ட்டிகள். ரோம்கூட இந்தப் பழக்கத்துக்கு அடிமை!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 7:54 am

இதெல்லாம் ஹிட்ல ருக்குத் தெரியும். ஆனால், ரோமின் படையில் ஒரு லட்சம் பேர் இருந்தார்கள். ஹிட்லரின் அதிகார நாற்காலியின் நான்கு கால்களாகவும் அவர்கள்தான் இருந்த னர். ரோமைச் சீண்டி னால் அத்தனை பேரும் தனக்கு எதிரிகள் ஆவார் கள் என்பதால் அவர் அமைதிகாத்தார்.

ரோமின் படைபலம் 1932வாக்கில் ஐந்து லட்ச மாக உயர்ந்தபோதுதான் ஹிட்லருக்குப் பயம் வந்தது. ஒரு தளபதியின் கட்டுப்பாட்டில் இவ்வளவு பேர் இருப்பது, தன் ஆட்சிக்கே ஆபத்து என்பது ஹிட்லருக்குப் புரிந் தது. இதையடுத்து, கலகப் படையில் இருக்கும் ஹேமோசெக்ஸ் பார்ட்டிகள் மீது அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வளர ஆரம்பித்தது. அது பெரிதாக வளர்ந்து, 1934&ம் ஆண்டு ஜூன் 30&ம் தேதி மாபெரும் படுகொலையில் முடிந்தது. ரோம் உட்பட அந்த கலகப் படையில் இருக்கும் ஹோமோசெக்ஸுவல்கள் இருநூறு பேரும் ஒரு இடத்தில் தங்கள் படுக்கைத் தோழர்களோடு மெய்மறந்த நிலையில் இருந்தபோது, ஹிட்லரின் விசுவாசப் படையால் சத்தமில்லாமல் சாகடிக்கப் பட்டனர்.

இந்தக் களையெடுப்பு வெளியில் தெரிந்தால், ராணுவத்தின் எல்லா மட்டங்களிலும் இருக்கும் ஹோமோசெக்ஸ் வீரர்கள் தனக்கு எதிராகக் கலகம் செய்வார்கள் என பயந்தார் ஹிட்லர். அதனால் சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

ஹிட்லரின் கட்சி ஹோமோசெக்ஸுக்கு எதிராக வெளியிட்ட பிரகடனத்தில் இப்படி சொல்லியிருந்தது. ‘நீங்களும், நாங்களும் சேர்ந்து வாழவேண்டும் என்பது தேவையில்லை. ஜெர்மன் மக்கள்தான் வாழ வேண்டும். உங்களது பழக்கம் அசிங்கமானது. அசிங்கத்துக்கு எதிராகப் போராடினால்தான் ஜெர்மனியர்கள் வாழ முடியும். போராட்டம்தான் வாழ்க்கை. ஆண்மைத்தனம் இருந்தால்தான் போராட முடியும். செக்ஸ் விஷயத்தில் ஒழுக்கம் இருந்தால்தான் ஆண்மைத்தனம் கிடைக்கும். ஒழுக்கமற்ற, இயற்கைக்கு முரணான செக்ஸை நாங்கள் வெறுக்கிறோம். அப்படி இருக்கும் யாரும் ஜெர்மன் மக்களுக்கு எதிரிகள். அவர்களை வேரறுப்பது எங்கள் கடமை.’

செக்ஸுக்கு அறிவியல் முகம் கொடுத்து, அது தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு தேட முயன்ற எத்தனையோ ஆராய்ச்சியாளர்களுக்கு, ஹர்ஷ்ஃபீல்டுக்கு நேர்ந்த அதேபோன்ற அவலமான முடிவு வந்தது. இதற்கு மாறாக, தவறான விஞ்ஞானிகள் கையில் அதிகாரம் கிடைத்து அவர்கள் விபரீத செக்ஸ் பரிசோதனைகளில் இறங்கி, நூற்றுக்கணக்கானவர்களை கொன்றுதீர்த்த பரிதாபங்களும் வரலாற்றுப் பக்கங்களில் நிறைய உண்டு. ஹிட்லரின் ஆட்சியில் ஜெர்மனியில் நடந்த சம்பவங்களே இதற்கு சாம்பிள்...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 7:57 am

கார்ல் கிளாபெர்க், ஜெர்மனியின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர். கீல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து பல டாக்டர்களை உருவாக்கியவர். ஆனால், ஹிட்லருக்குப் பிடித்த அதே தேசிய வெறி இவருக்கும் பிடித்தது. நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் கடவுள் என்ற அந்தஸ்தில் இருந்தவர், அப்படியே தடம் மாறி கொலைகாரராக அவதாரம் எடுத்தார்!

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆயிரக்கணக்கான யூதர்களையும், நாடோடி இன மக்களையும் சித்ரவதை முகாம்களில் அடைத்து வைத்திருந்தது, ஹிட்லரின் நாஜி ராணுவம். அப்படிப் பிடித்து வைத்திருந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஹிட்லர் அறிவித்ததும், பல டாக்டர்கள் அந்த முகாம்களுக்கு ஓடினார்கள். தங்கள் இதயங்களைக் கழற்றிப் போட்டுவிட்டு இப்படி ஓடிய டாக்டர்களில் கார்லும் ஒருவர்.

மனிதகுலத்தை அச்சுறுத்தி வந்த பல நோய்களுக்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நேரம் அது! புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்கள் அவற்றைக் குரங்குகள், எலிகள், முயல்கள் என பல விலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்து பார்த்தனர். ‘மருந்தை சாப்பிட்டு எதுவும் சாகவில்லை’ என்பது உறுதியானபிறகு, ரகசியமாக சில ஆசாமிகளுக்கும் கொடுத்து சோதித்துப் பார்ப்பார்கள். இப்படி இருந்த நிபுணர்களைக் கூப்பிட்டு, ‘‘இந்த ஆளுங்களை உன் கஸ்டடியில் எடுத்துக்கோ. எந்த மருந்தை வேண்டுமானாலும் கொடுத்து சோதனை செய்துக்கோ. இவர்கள் செத்தாலும் பரவாயில்லை’’ என்று கொடுத்தது நாஜி ராணுவம். ஈவு இரக்கமற்ற டாக்டர்கள் பலர் இப்படி சோதனைகளை செய்தார்கள்.

யூதர்கள், நாடோடிகள், நீக்ரோக்கள் ஆகியோரை ஹிட்லருக்கு சுத்தமாகப் பிடிக்காது. அந்த இனங்களையே ஒட்டுமொத்தமாக வேரறுத்துவிட்டு, உலகம் முழுக்க ஜெர்மானியர்களால் நிரம்பி இருக்க வேண்டும் என்பது ஹிட்லரின் பேராசை. இந்த மூன்று இனத்தவர்களையும் ஆயிரக்கணக்கில் கைது செய்து சித்ரவதைக்கு உட்படுத்திக் கொன்றாலும், அந்தப் பேராசை அடங்கவில்லை.

‘அந்த இனத்தவர்களை வேறு ஏதாவது செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு ஆளாக்கி விட்டால் என்ன?’ என்ற கேள்வியோடு, ஹிட்லர் கூப்பிட்டு வரச் சொன்னது கார்லை.

ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த யூத மற்றும் நாடோடிப் பெண்கள் மீது தன் பரிசோதனையை ஆரம்பித்தார் கார்ல். முதல் சோதனை, அவர்களுக்கு ஊசி மூலம் ஆரம்பித்தது. பல ரசாயனங்களை ஒன்றுகலந்து நேரடியாக அவர்களது கருப்பைக்குள் செலுத்தினார் கார்ல். அவர்களது கருப்பையில் இதன்மூலம் மாற்றங்கள் நிகழ்ந்து, கருவை உருவாக்கும் சக்தியிழந்து போனது. அதோடு மட்டுமில்லை... நிறைய பேருக்கு வயிறு வீங்கியது. சிலருக்கு ஏராளமான ரத்தக்கசிவு ஏற்பட்டது. எல்லோருமே வலியால் துடித்தனர். கடைசியில் ஜுரம் வந்து பலர் செத்துப் போனார்கள்.

ஆனால், சிலர் வெறும் வலியோடு பிழைத்தனர். ‘அவர்களது கருப்பையில் இந்த ரசாயனங்களை தாங்கும் சக்தி என்னவோ இருக்கிறது... அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்’ என முடிவு செய்த கார்ல், அதன்பின் செய்ததுதான் கொடூரம். உயிர்பிழைத்த அத்தனை பேரின் கருப்பைகளையும் வெட்டி எடுத்துவரச் சொல்லி, அவற்றைப் பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆய்வு செய்தார். முறையான ஆபரேஷனாக இல்லாமல் சகட்டுமேனிக்கு கருப்பையை வெட்டி எடுத்ததால், பலர் செத்துப் போனார்கள்.
தனது ஆய்வு முடிவுகள் வெளியில் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார் கார்ல். அதனால் பரிசோதனை முடிந்ததும், எலிகளாக பயன்பட்ட எல்லாப் பெண்களையும் கேஸ் சேம்பருக்கு அனுப்பி விட்டார் அவர். அங்கு விஷவாயு செலுத்தப் பட்டு அவர்கள் செத்துப் போனார்கள்.

அடுத்தது எக்ஸ்ரே பரிசோதனை. இதில் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினர் மீதும் சோதனை நடந்தது. ஓர் அறையில் இரண்டு எக்ஸ்ரே மெஷின்கள் இருக்கும். அந்த அறைக்குள் இழுத்துச் செல்லப்படும் கைதியின் பிறப்பு உறுப்பில் எக்ஸ்ரே கதிர் பாய்ச்சப்படும். இப்படி தொடர்ச்சியாக சில நாட்கள் செய்தால், கதிரியக்கத்தின் பாதிப்பால் அந்த இடத்தில் கட்டி வரும். அது ஆறாத புண்ணாக மாறும். அதன்பிறகு அவரால் செக்ஸில் ஈடுபட முடியாது. அப்படியே புண் ஆறி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டாலும் குழந்தை பிறக்காது என நினைத்தார் கார்ல்.

ஆனால், அவருடைய உதவியாளர்கள் சிலர், 'குழந்தை பிறந்தாலும் பிறக்கும்' என்று சந்தேகம் கிளப்பினர். இதனால் கார்ல் குழப்பமானதில் கைதிகள் பாடுதான் திண்டாட்டமானது. புண் ஆறும் நிலையில் இருந்த பல கைதிகளின் பிறப்பு உறுப்புகளையும் அடி வயிற்றுப் பகுதியையும் வெட்டி எடுத்துச் சென்று ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு செய்தார் கார்ல். இப்படி வெட்டியதிலேயே பலர் செத்துப் போக, சாகாமல் மிச்ச மிருந்தவர்களை வழக்கம்போல விஷவாயு செலுத்தி கொல்ல வைத்தார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 8:04 am

கார்ல் கிளாபெர்க்கின் பரிசோதனைக் கூடம்...

இவ்வளவு செய்தும் ஒரு ‘சுலபமான’ கருத்தடை வழியை அவரால் கண்டுபிடிக்க முடிய வில்லை. அதற்குள்ளாகவே ஹிட்லரின் அடுத்த ஆணையை ஏற்று, வேறொரு பரிசோதனையில் இறங்கினார் அவர். அது செயற்கைக் கருவூட்டல் முறை. இப்போது கால்நடைகளுக்கு விந்தணுவை ஊசி மூலம் செலுத்தி கருத்தரிக்க வைக்கிறார்களே, அதேபோன்ற ஒரு பரிசோதனையைத்தான் அவர் செய்தார்.

உலகமே ஜெர்மானியர்களால் நிரம்பியிருக்க வேண்டும் என்பது ஹிட்லரின் கனவு. ஆனால், அப்போது ஜெர்மன் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில் சோம்பேறியாக இருந்தார்கள். ஏதாவது செயற்கைக் கருவூட்டல் முறையைக் கண்டுபிடிக்கலாம் என்பது ஹிட்லர் கண்டுபிடித்த கனவுத் திட்டம். பண்ணைகளில் கோழிகளை உற்பத்தி செய்கிற மாதிரி வெள்ளைத் தோலும், செம்பட்டை முடியும், பச்சைக் கண்களும் கொண்ட அசல் ஜெர்மானியர்களை உருவாக்க எடுத்த முடிவு அது!

இதற்கான சோதனைக்கும் யூதப் பெண்களும், நாடோடிப் பெண்களும் பயன்படுத்தப்பட்டார்கள். அவர்களது கருப்பைக்குள் ஊசி மூலமாக விந்தணுவைச் செலுத்திய கார்ல், ‘‘இப்போ உங்களுக்கு போட்டிருக்கிறது பாதுகாக்கப்பட்ட விந்தணு. இது எல்லாமே விலங்குகளிலிருந்து எடுக்கப்பட்டது. எந்த விலங்கோட விந்தணுவை யாருக்கு செலுத்தினேன்ங்கறது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். உங்க யாரோட வயித்துல என்ன விலங்கு பிறக்கப் போகுதோ தெரியலை’’ என்று சொல்லி அவர்களைப் பயமுறுத்தி இருக்கிறார். பீதியில் அவர்கள், ‘இந்த வயிற்றுக்குள் என்ன மிருகமோ’ என பெரிதாகும் வயிற்றைத் தடவியபடியே இருக்க, கர்ப்பம் கொஞ்சம் வளர்ந்ததும், அவர்களது கருப்பையை அறுத்து எடுத்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வு அரைகுறையாக இருக்கும்போதுதான், ஹிட்லர் உலக நாடுகளிடம் தோற்றுப்போனார். கார்ல் கைது செய்யப்பட்டு விட்டார். ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து அப்படியே செத்துப் போனார். கார்லைப் போலவே பல விஞ்ஞானிகள் செய்த பரிசோதனைகள் வெளியில் வராமலே போய்விட்டது.

இது தவிர ‘செக்ஸ் சுகாதாரம்’ பற்றி ஹிட்லருக்குத் தனிப்பட்ட கருத்துகள் இருந்தன. மியூனிச் பல்கலைக் கழகப் பேராசிரியரான மேக்ஸ்வான் குரூபெர் என்பவர் தான் நாஜிக்களால் அங்கீகரிக்கப்பட்ட செக்ஸ் போதகராக இருந்தார். அவர் எழுதிய ‘செக்ஸ் சுகாதாரம்’ என்ற புத்தகம்தான் நாஜிக்களின் வேத புத்தகம் ஆனது. மலிவுவிலைப் பதிப்பாக சுமார் மூன்றேகால் லட்சம் பிரதிகள் அச்சிட்டு, இது ஜெர்மன் முழுக்க விநியோகிக்கப்பட்டது.

‘செக்ஸ் உறவு என்பது திருமண பந்தத்துக்குள்தான் நிகழ வேண்டும். மற்ற எந்த வகை செக்ஸ் உறவும் மன்னிக்க முடியாத குற்றம். அவற்றை சமுதாயமும், அரசும் ஏற்றுக் கொள்ளாது. திருமணம் செய்துகொள்வதே குழந்தை பெற்றுக்கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும்தான். ஜெர்மனியின் தேசிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தம்பதியும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தினார் அவர்.

பெண்கள் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள அரசு வற்புறுத்தியது. ‘திருமணக் கடன்’ என்ற பெயரில் பெண்களுக்குக் கல்யாணம் செய்துகொள்ள கடன் தரப்பட்டது. அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் கடனில் இருபத்தைந்து சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டது. நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்கள், வாங்கிய கடனைத் திருப்பித் தரத் தேவையில்லை.

லட்சக்கணக்கான பெண்கள் இப்படி கடன் வாங்கித் திருமணம் செய்து கொண்டனர். ‘நவீனகால வரலாற்றில் எந்த அரசும் இவ்வளவு மோசமாகக் குடும்பங்களுக்குள் ஊடுருவி செக்ஸ் பற்றி அட்வைஸ் செய்ததில்லை’ என்று சொல்கிற அளவுக்கு இருந்தது ஹிட்லரின் ஆட்சி.

ஆனால், மேற்கத்திய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அரசாங்கமும், மதமும் செக்ஸ் உறவுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து மக்களை அடக்கி வைத்திருந்தது புரியும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 8:06 am

முதலிரவுக்காக பயத்தோடு காத்திருப்பாள் அந்த இளம்பெண். பீதியில் அவளுக்கு அழுகையே வந்துவிடும். ‘முன்பின் தெரியாத ஒரு ஆளுடன் அந்த அறைக்குத் தனியாக அனுப்புகிறார்களே... அங்கே என்ன நடக்கும்... அந்த ஆள் என்ன செய்வாரோ’ என்றுதான் பயம்! அந்த அளவுக்கு செக்ஸ் பற்றிய உணர்வு இல்லாமல் பெண்கள் வளர்க்கப்பட்டனர்.

அம்மாதான் ஆறுதலாக அட்வைஸ் செய்து அனுப்பு வாள். ‘‘பயப்படாதே! என்ன செய்யணும்னு உன் புருஷனுக்கு நல்லா தெரியும். நீ உள்ளே போனதும் கட்டிலில் படுத்துக் கண்ணை மூடிக்கிட்டு இங்கிலாந்து நாட்டோட எதிர்காலத்தைப் பற்றி நினைச்சிக்கணும். உன் புருஷன் என்ன செய்தாலும் தடுக்கக் கூடாது. உன் கவனத்தை வேறே எதிலும் திருப்பக் கூடாது. வலிச்சாலும், பரவசமான உணர்வு வந்தாலும் அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கக் கூடாது!’

சுமார் நூறு வருஷங்களுக்கு முன்புவரை இங்கிலாந்திலும், பெரும்பாலான ஐரோப் பிய நாடுகளிலும் பெண்கள் இப்படித்தான் நடத்தப்பட் டார்கள். இதற்கு காரணம் புரிய, காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

காட்டுமிராண்டிகளாகத் திரிந்த மனிதர்கள் நாகரிகம் அடைந்து குடியேற்றங்களை நிர்மாணித்தபோதுதான் அரசாங்கம் உருவானது. காலப்போக்கில் அரசு மக்களை அடிமைத்தளையில் வைத்திருக்க ஆசைப்பட்டது. ‘எல்லையில்லா சுதந்திரம்

தந்தால் மனிதர்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட மாட்டார்கள்’ என அரசர்கள் நினைத்தார்கள். கடுமையான சட்டங்களைப் போட்டு மக்கள் மனதில் பயம், குழப்பம், பீதி போன்ற உணர்வுகள் எப்போதுமே இருக்கிற மாதிரி பார்த்துக் கொண்டார்கள். மக்கள் இந்த உணர்வுகளின் சுழலில் சிக்கியிருந்ததால், அரசர்கள் கவலை இல்லாமல் வாழ்ந்தார்கள். மதங்களின் ஆதிக்கம் வலுத்த பிறகு அரசாங்கத்தின் மீது மதகுருக்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்து அறிஞர்கள், ‘செக்ஸைக் குறைவாக வைத்துக் கொள்வது நல்லது’ என்றே அட்வைஸ் செய்தார்கள். ஆனால், அப்போது செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மேல்தட்டு ஆண்கள் எல்லை இல்லாத சுதந்திரத்தில் திளைத்தார்கள். ஏராளமான மனைவிகள், வேலைக்காரிகள், அடிமைகள், அடிமைகளின் மனைவிகள், போரில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வரப்பட்ட அந்நியப் பெண்கள்... என எல்லா வகைப் பெண்களையும் தங்கள் படுக்கை அறைக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். பெண்களின் சம்மதத்தை யாரும் கேட்பதில்லை. அரச குடும்பத்து ஆண்கள் எந்த அழகான பெண்ணை விரும்பினாலும், தங்கள் அந்தப்புரத்துக்குக் கொண்டு வந்து விடலாம். ஆணும் பெண்ணும் சந்தித்து, காதல் புரிந்து, தடைகளைத் தாண்டி திருமணம் செய்து கொள்வது போன்ற பரவசக் காட்சிகள் எல்லாம் அப்போது அதிகம் இல்லை.

திருமணம் என்பது பெரும்பாலும் சொத்து பரிவர்த்தனைக்காக நடந்தது. ஒரு பகுதியை ஆளும் பிரபு, தனக்கு அச்சுறுத்தலாகக் கருதும் எதிரி நாட்டை ஆள்பவனுக்கு தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து பகையைத் தவிர்ப்பதும் வழக்கமாக இருந்தது. வேண்டாவெறுப்பாக பலர் திருமண பந்தத்தில் சிக்கினர். இதனால் திருமண உறவுக்கு வெளியே ஆண்கள் சுகம் தேட ஆரம்பித்தனர். பிரபுக்கள் குடியில் பிறந்த பலர் தங்களுக்கு சுகம் தர, ஊர் முழுக்க நூற்றுக்கணக்கில் வைப்பாட்டிகளை வைத்திருந்தது சகஜமாக இருந்தது. திருமணம் ஆகாத இளைஞர்கள் பலரும்கூட இப்படி பெண்களைப் பிடித்து வைத்திருந்தனர்.

அமைப்புரீதியாக வளர்ந்த யூதர்களின் மதம்தான் செக்ஸ் விஷயத்தில் முதலில் கட்டுப்பாடுகளை புகுத்தியது. ‘செக்ஸ் என்பது திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். திருமணம் என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும் மட்டுமே உருவான உறவுமுறை’ என்பது அவர்களின் போதனை. திருமணத்தைத் தவிர்த்துவிட்டு பிரம்மச்சாரிகளாக வாழ்கிறவர்கள், திருமணம் செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆகியோரை ஏதோ ஊனமுற்ற நபர்களைப் போல அன்றைய யூத சமுதாயம் பார்த்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் தழைக்க ஆரம்பித்த பிறகு, செக்ஸ் பற்றிய கட்டுப்பாடுகளும் வந்து சேர்ந்தது. ரோமப் பேரரசில் மக்கள் சமூக ஒழுங்கு எதுவுமின்றி வாழ்வதாக புனித பால் நினைத்தார். கிறிஸ்தவ மதத்தை ஆழமாக வேரூன்ற வைத்த அவர், அப்பட்டமாக பொது இடங்களில் செக்ஸில் ஈடுபட்ட ரோமானியர்களைக் கண்டித்தார். செக்ஸுக்கான விதிகளை அவர்தான் வகுத்தார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by சிவா Wed Sep 23, 2009 8:09 am

‘இல்லற சுகத்தை நிராகரித்து துறவற வாழ்க்கையில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதே மேலான வாழ்க்கை’ என்றார் பால். ஆனால், ‘எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. கண்ட பெண்களுடன் உறவு வைத்து நரகத்துக்குப் போவதை விட, கல்யாணம் செய்துகொண்டு மனைவியிடம் மட்டும் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் பாவம் குறையும்’ என அட்வைஸ் செய்தார் அவர். அதன்பிறகு நான்காம் நூற்றாண்டில் புனித அகஸ்டின் இந்த விதிமுறைகளை இன்னும் கடுமை ஆக்கினார். அகஸ்டின் திருமணமாகி ஓர் ஆண் குழந்தையையும் பெற்றவர். அதன்பிறகு துறவறம் பூண்டு மதகுரு ஆனார். அதனால் செக்ஸ் உறவு பற்றி அறிந்தவர் என்ற முறையில் தெளிவாக இவர் கட்டுப்பாடுகள் போட்டார்.

‘செக்ஸ் பற்றிய மோசமான நினைப்பை மனதில் கொண்டிருப்பதுகூட பாவம்’ என்ற இவர்தான், எப்படி கணவன்& மனைவி உறவு கொள்ள வேண்டும் என்ற பொசிஷனையும் தீர்மானித்தார். ‘பெண் கீழே படுக்க வேண்டும்... ஆண் அவள் மீது கவிழ்ந்து படர வேண்டும்... இருவரின் செக்ஸ் உறுப்பு களும் சந்திக்க வேண்டும்... இதுதான் பொருத்தமான உறவு முறை’ என்றார் அவர் (பல்வேறு நாடுகளில் மக்கள் சந்தோஷத்துக்காக விதம்விதமான புணர்ச்சி முறைகளை வைத்திருந்தாலும்கூட, மதப் பிரசாரத்துக்காகப் போன பாதிரியார்கள் இந்த செக்ஸ் உறவுமுறைதான் நாகரிகமானது என்று சொல்லித் தந்தனர். இதனால், இதற்கு ‘மிஷனரி பொசிஷன்’ என்று பெயர்கூட உண்டு. இப்போது உலகம் முழுக்க எழுபத்தைந்து சதவிகித மக்கள் இந்த முறையில்தான் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர்!).

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இந்த விதிகள் புழக்கத்தில் இருந்து, மக்களைக் கட்டுக்குள் வைத்திருந்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் புனித தாமஸ் அக்யூனாஸ் இவற்றை இன்னும் கடுமை ஆக்கினார். ‘திருமண உறவுக்கு வெளியே வேற்று நபர்களுடன் செக்ஸில் ஈடுபடுவது குற்றம். செக்ஸ் உறவை குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே செய்ய வேண்டும். கருவுறுதலில் முடியாத செக்ஸ் உறவு பாவம்’ என்றார் அவர். ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுய இன்பம் அனுபவிப்பது என எல்லாமே மன்னிக்க முடியாத குற்றம் என்ற அவர் சொன்ன இன்னொரு விஷயம் அதிர்ச்சி தருவது... ‘சுய இன்பம் அனுபவிப்பது, கற்பழிப்பைவிட மோச மான குற்றம். கற்பழிப்பிலாவது குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது. சுய இன்பத்தில் அது இல்லை’ என்பதுதான் அது!

காலம்காலமாக இப்படி சொல்லப் பட்டு வந்த கருத்துகளை முதலில் எதிர்த்தவர் மார்ட்டின் லூதர். இவர் புராட்டஸ்டண்ட் பிரிவின் ஸ்தாபகர். துறவறம் பூண்டு மதச்சேவைக்கு வந்த பிறகும் செக்ஸ் உணர்வுகளால் அவதிப்பட்ட லூதர், திடீரென ஒரு கன்னியாஸ்திரியை மணந்து கொண்டார். ஆறு குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. ‘துறவறம் என்பது இயற்கைக்கு எதிரான விஷயம்’ என கலகக் குரல் எழுப்பிய அவர், ‘‘பெண்ணுடன் இணைய வேண் டும் என்பதற்காகவே கடவுள் ஆண்களைப் படைத்திருக்கிறார். என் அப்பாவும், அம்மாவும் காதல் புரிந்ததால்தான் நான் பிறந்தேன். அப்புறம் நான் எப்படி ‘துறவறம்தான் சிறந்தது’ என போதிக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இப்படி பலர் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி எழுப்பினாலும்கூட, செக்ஸ் விதிகளை இன்னும் கடுமையாக்கிய பலர் உண்டு. உதாரணமாக, அமெரிக்காவில் பிரபலமாக இருந்த மத போதகர் சில்வஸ்டர் கிரஹாம், ‘‘ஆண்கள் முப்பது வயதுக்கு மேல்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் குழந்தை பெறும் தகுதியை அடைகிறார்கள். திருமணமான தம்பதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண் டும்’’ என போதித்தார்.

இப்படி மதம் மக்களுக்குப் போதித்த நற்செய்திகளில் கால்வாசி, செக்ஸைப் பற்றியதாகவே இருந்தது. அறிவியல்ரீதியான ஆராய்ச்சிகள் தலைதூக்கும் வரை இப்படி கட்டுப்பாடுகள் நீடித்தன. மேற்கத்திய நாகரிகம் ஆரம்ப காலத்தில் செக்ஸை பாவம் என எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்த தால்தான் இவ்வளவு குழப்பமும்!
ஆனால், இந்தியாவில் இந்தப் பிரச்னை இல்லை. நம் முன்னோர்கள் செக்ஸைப் பாவமாகக் கருதி ஒதுக்கவும் இல்லை. புனிதமாகக் கருதித் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடவும் இல்லை. அதை வாழ்க்கையின் ஓர் அங்கமாக நினைத்தார்கள். செக்ஸைப் பற்றிய நமது பாரம்பரிய அறிவு கடவுள் கொடுத்தது என்பது இந்தியர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Empty Re: உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum