புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
25 Posts - 39%
heezulia
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
7 Posts - 2%
prajai
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_m10உலக மூத்த குடிமக்கள் தினம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மூத்த குடிமக்கள் தினம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 03, 2011 6:42 pm

உலக மூத்த குடிமக்கள் தினம்


இந்தியா: அதிகரிக்கும் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை-60 வயதை கடந்தோர் 9.84 கோடி பேர்

டெல்லி: 2011ம் ஆண்டில் இந்தியாவில் 60 வயதைக் கட்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 9.84 கோடியாக அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 7.7 கோடியாக இருந்தது. இதில் ஆண்கள் 3.8 கோடி, பெண்கள் 3.9 கோடி பேர்.

மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்கள் 7.5 சதவீதம் உள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹரியானா, ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் தேசிய சராசரியைவிட மூத்த குடி மக்கள் அதிக அளவில் உள்ளனர்.

2006ம் ஆண்டில் 8.36 கோடியாக (7.5 சதவீதம்) இருந்த மூத்த குடிமக்கள் எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 9.84 கோடியாக அதிகரிக்கும்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 8.3 சதவீதமாக இருக்கும்.

2016, 2021, 2026 ஆகிய ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை 11.81 கோடி (9.3 சதவீதம்), 14.32 கோடி (10.7 சதவீதம்), 17.32 கோடி (12.4 சதவீதம்) என அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பெருகி வரும் மருத்துவ வசதிகள் இதற்கான காரணங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது








முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்






சென்னை : சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் சமூகப் பணி துறை சார்பில், உலக முதியோர் தினம் மற்றும் முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினவிழா நேற்று நடந்தது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “மூத்த குடிமக்கள் நல பாதுகாப்பு’’ குறித்த புத்தகத்தை வெளியிட்டு விருதுகள் வழங்கி பேசியதாவது:

முதியோர்களை இளைய தலைமுறையினர் கவுரவப்படுத்த வேண்டும். வயதானோரும் இளைய தலைமுறையினரின் வாழ்க்கைக்கு ஏற்ப, தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற விழாக்கள் பள்ளி, கல்லூரிகளில் அடிக்கடி நடத்தினால் இளைய தலைமுறையினருக்கு முதியோர்களின் முக்கியத்துவம் தெரியும்.முதியோர்களுக்கு மத்திய அரசே மருத்துவ உதவிகளை இலவசமாக வழங்கலாம். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

பிரபல முதியோர் இயல் மருத்துவ நிபுணர் நடராஜன், முன்னாள் டிஜிபி தேவாரம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அம்புரோஸ், முன்னாள் மத்திய அரசு செயலர் வெங்கடேஷ், திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலை இயக்குனர் ராமமூர்த்தி, டாக்டர் காமாட்சி சுந்தரராம், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி முத்துலட்சுமி, மூத்த குடி மக்கள் நல அமைப்பு தலைவர் சிங்கராஜா, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சமூகப் பணி துறை தலைவர் சாண்ட்ரா ஜோசப் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.


அரசு மருத்துவமனையில் தனி மருத்துவ அறைகள் : மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் கோரிக்கை
புதுச்சேரி : அரசு மருத்துவமனையில் மூத்த குடி மக்களுக்கென தனியாக இலவச படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ அறைகள் ஒதுக்கி தர வேண்டும் என மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் எஸ்.வி.அய்யர் தலைமையில், துணை தலைவர் உதய பாஸ்கரன், செயலாளர்கள் நடராஜன் உள்ளிட்டோர் முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு: புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்கத்திற்கு பொருத்தமான இடத்தை அரசு ஒதுக்கி தர வேண்டும். மூத்த குடி மக்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போது, அரசு பஸ்களில் 25 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கும் நடைமுறை ஒரு சில மாநிலங்களில் உள்ளது. பற்றாக்குறை வருமானம் பெறும் எங்களுக்கும் கட்டணச் சலுகை தர வேண்டும். அரசு மருத்துவ மனையில் மூத்த குடி மக்களுக்கென தனியாக இலவச படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ அறைகள் ஒதுக்கி தர வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள், ராஜவேலு, கல்யாணசுந்தரம் ஆகியோரிடமும் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களே! -ஆபத்தான வியாதிகள்


மனிதனுக்கு குழந்தை பருவம், சிறுவர் பருவம், வாலிப பருவம், நடுவயது பருவம் (40 -59), முதியவர் பருவம் 60 வயதுக்கு மேல் என்று பிரிக்கலாம். ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றாற் போல வியாதிகள் பல வருவதுண்டு. உதாரணமாக நாற்பது, ஐம்பது வரை உயிருக்கு ஆபத்தான வியாதிகள் வருவதில்லை. வியாதிகள் வருவதெல்லாம் 60 வயதுக்குமேல். முதியவர்களுக்கு வரும் வியாதிகள், பல உள்ளன. இந்த வியாதிகளோடு தான் அவர்கள் வாழ வேண்டிய நிலை, இந்த வியாதிகளை கண்காணித்து வாழ வேண்டிய சூழ்நிலை.

உடலிலுள்ள உறுப்புகள், முடி நரைத்தல், தோல் சுருங்குதல் தோலிலுள்ள நீர் குறைந்து உலர்ந்து அரிப்பு, ஒவ்வாமை என்ற அலர்ஜி, கண்பார்வை மங்குதல், கேட்ராக்ட். சிலருக்கு ஆஸ்துமாவினால் கார்புல்மினேல் (corpulminale) சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு இவைகளால் சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோயால் ஏற்படும் இதய நோய்கள், ரத்தக் கொதிப்பால் ஏற்படும் இதய நோய்கள். மூத்த குடிமக்களுக்கே உரித்தான மூட்டு தேய்மான நோய்கள், ஆர்த்தரைட்டீஸ், எலும்பிலுள்ள சுண்ணாம்பு சத்து குறைந்து ஆஸ்டியோ பொராசிஸ் என்ற வியாதிகள். இதனால் எலும்பு முறிவுகள் அதிகமாகிறது.

இரண்டு வியாதியாவது: மூத்த குடிமக்கள், இந்த வியாதிகளில் ஏதாவது இரண்டு மூன்று வியாதிகள் இல்லாமல் வாழ்வு இல்லை. அப்படி கூறினால், நீங்கள் நம்பாதீர்கள். எம்.பி.பி.எஸ்., எம்.டி., (பொது மருத்துவம்), டி.எம்., (இதய நோய்) முதலிய உயர் பட்டப்படிப்பு படித்த காலத்திலும் உதவி பேராசிரியர், பேராசிரியர் என்ற பதவி வகித்த காலத்திலும், மேல் நாட்டில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காலத்திலும், இந்த வியாதிகள் முதியோரைத் தாக்கியதைப் பார்த்து, வைத்தியம் பார்த்துள்ளேன். ஆனால், இன்றோ பல அரிய டையக்னாஸ்டிக் கருவிகள், மருந்துகள், அறுவை சிகிச்சைகள் வந்துள்ளன. இதனால், எவ்வளவு முதியோர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ள முன் காலத்தை போல கைத்தடிகள் இல்லாமல், மூட்டு மாற்று சிகிச்சை மூலம் நடந்து படியேறிப் போகின்றனர். இதற்கு என்ன விலை கொடுக்க வேண்டும்?

மூட்டு மாற்று சிகிச்சையால், சில லட்சங்கள் செலவாகிறது. முதியோர் கீழே விழுந்து எலும்பு ஒடிந்தால் பிளேட் வைத்து அறுவைச் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு, இதற்கு ஆகும் மாத்திரை மருந்துகள் செலவு, வாழ்நாள் முழுவதும் செலவு என்பது தெரியுமா?

முப்பது வயதினரும்: இன்று சர்க்கரை நோய் என்ற டயபட்டீஸ் நோய் 30, 40, 50 வயதுள்ளவர்களுக்கு வந்து மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். 60 வயதுக்கு மேல் இந்த வியாதி பல விளைவுகளை தாக்கி விடுகின்றது. இந்த சர்க்கரை வியாதியை மைக்ரோ வாஸ்குலர் என்ற சிறு கண்ணுக்கு தெரியாத வியாதிகளை தாக்கி விடுகின்றது. இந்த நோய் ரத்தக்குழாயின் என்டேதிலியம் என்ற உட்சுவரினை பாதித்து அடைத்து விடுகிறது. சிறிய ரத்தக்குழாய் அடைப்பால் விளைவு பெரிது. நோயாளிகள் எந்த குறையும் கூறமாட்டார்கள்.

சாதாரணமாக பொது பரிசோதனைக்கு போகும் போது, கண்டுபிடிப்பர். அதற்குள் கண்புரை, ரெட்டினா வியாதி, இதய சர்க்கரை நோய்கள், சிறுநீரக கோளாறுகளான கிட்னி பெய்லியர் என்று பலவாகிறது. சர்க்கரை நோயால்,சிறு ரத்தக் குழாய்கள் பாதிப்பால், கால்களில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு கால் விரல் கள் அழுகி விடுகின் றன. இதனால், சில நேரங்களில் கால் களை, விரல்களை எடுக்க வேண்டிய நிலை. இதனால், மூத்த குடிமக்கள் வாழும் துயரம் மிகுந்த வாழ்க்கைக்கு தினம், தினம் ஆகும் செலவு.

எட்டு ஆண்டுகளுக்கு முன்: சென்னையை சேர்ந்த செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதான அம்மையார், என்னிடம் ரத்த அழுத்தத்திற்கு வைத்தியம் பார்க்க வந்தார். வந்தவருக்கு சர்க்கரை நோய், அதே நேரத்தில் சிறுநீரக கோளாறும் கண்டுப்பிடிக்கப்பட்டு, யூரியா 48 மில்லி கிராம் கிரியாட்டின், 1.8 மி.கி., என்று அறியப்பட்டது. மூன்று மாதம் ஒருமுறை பரிசோதனைக்கும் ஆலோசனைக்கும் வருவார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிரியாட்டின் 2 மி.கி., ஆகிறது. இதை அப்படியே கிரியாட்டின் 2.5 மி.கி., மேல் ஆகாமல், பத்து ஆண்டுகள் வைத்தியம் பார்த்தேன். பத்து ஆண்டுகள் கழித்து கிரியாட்டின் 3 மி.கி., ஆயிற்று பிறகு 4 மி.கி., ஆகியது.

இப்படி சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து, டயாலிசிஸ் செய்ய வேண்டியதாயிற்று. இதற்கிடையில், பல தடவை மூச்சிரைப்பு, படபடப்பென்று உயர் ரத்த அழுத்தம் இவைகளுக்கு மருத்துவமனையில் அனுமதித்து வைத்தியம் பார்க்க வேண்டியதாயிற்று. ஒவ்வொரு தடவை மருத்துவமனை அனுமதி வைத்தியத்திற்கு பல ஆயிரம் செலவு. வீட்டிலிருந்து வைத்தியத்தால் மருந்துக்கும், ஊசிக்கும் என்று மாதம் சில ஆயிரம். 75 வயதான அந்த பெண்ணுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய முடிவானது.

அப்போது டாக்டர் இதய நோய்க்கு முதலில் சிகிச்சைப் பெற்று பைபாஸ் செய்து, தகுதி சர்ட்டிபிகேட் கேட்டனர். பழுதடைந்த சிறுநீரகத்தை சரி செய்து அதாவது முதலில் சிறுநீரகத்தை மாற்றிய பிறகு பைபாஸ் செய்யலாம் என்று கூறி, நோயாளி வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்து பிறகு தினம் என்று மாறி இறுதியில் நோயாளி மரணமடைந்தார்.

எப்படி செலவு செய்ய முடியும்? மாற்று சிறுநீரகம் பொருத்திய பிறகு அந்த சிறுநீரகம் பழுதடையாமல் காக்க மருந்தும், முன்கூட்டியே உடம்பிலுள்ள ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், மற்றும் பரிசோதனை செலவு என்று மாதம் பல ஆயிரம் செலவாகிறது. வருடத்திற்கு லட்சங்களை தாண்டும் வருமானமில்லாத வயதான மூத்த குடிமக்கள் காலத்தில் எப்படி பணம் செலவு செய்ய முடியும்?

உயர் ரத்த அழுத்தம் உள்ள மூத்த குடிமக்களுக்கு ரத்த அழுத்தத்தால் ஏற்படும் டி.ஐ.ஏ., (TIA) என்ற உடலில் ஒரு பாதி வலுவையிழந்து தற்காலிகமாக ஸ்டிரோக் ஏற்பட்டு மருத்துவமனை மருத்துவம், எம்.ஆர்.ஐ., (MRI) போன்ற உயர் பரிசோதனைகள். அதன் பிறகு மருந்து, மாத்திரை செலவுகள்.

இருபது ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக இருந்த போது, இராம கிருஷ்ண வித்யாலயத்தில் இலவச மருத்துவ கேம்ப் நடத்திய போது, அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர், எனக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் வைக்கப் பட்டுள்ளது. நான் ஓய்வுப் பெற்ற பின் (பென்ஷன்) பெற்ற பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டேன். இப்போது மருந்து வாங்க பணமில்லை. எப்படி நான் ஓய்வூதியத்தில் சாப்பிடுவதா? மருந்துக்கு செலவு செய்வதா? என்று புலம்பினார். இதுபோல எத்தனைப் பேர்?

சில ஆண்டுகளுக்கு முன், மூத்த பெண்மணிக்கு இதய நோய்க்கு டாக்டர் ஆஞ்சியோ கிராம் செய்து, ஐந்து அடைப்புள்ளது, மூன்று அல்லது நான்கு அடைப்பை ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்கலாம் என்று நான்கு லட்சங்கள் செலவில் ஸ்டென்ட்களை வைத்து சிகிச்சை செய்து விட்டார். இதற்கு அவர் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டார். பிறகு இரண்டு மாதங்களில் நோயாளிக்கு மீண்டும் நெஞ்சுவலி, மூச்சிரைப்பு வந்துவிட்டது. முன் சிகிச்சை அளித்த டாக்டர், “அடைப்பு எப்படியுள்ளது, ஸ்டென்ட் வேலை செய்கிறதா’ என்று பார்ப்போம் என்று கூறினார். அதற்கு நோயாளியின் கணவர் ஒத்துக் கொண்டார்.

மறு ஆஞ்சியோ கிராம் செய்ததில் இரண்டு ஸ்டென்ட்கள் மூடிவிட்டது தெரிந்தது. இதனால், உடனடியாக பைபாஸ் செய்ய வேண்டுமென்று கூறிவிட்டார். கையில் பணமில்லை, கடன் வாங்கியாவது தனது மனைவிக்கு பைபாஸ் செய்துவிட வேண்டுமென்று, வீட்டின் மேல் கடன் வாங்கி பைபாஸ் செய்துவிட்டார் கணவர். பிறகு ஆறு மாதங்கள் கழித்து நோயாளிக்கு அந்த பைபாஸ் கிராப்ட்டும் மூடிவிட்டது. இவ்வளவு செய்து கடன்பட்டு, மூலதனத்தையெல்லாம் இழந்த விரக்தியில், அவரும் நோயாளியும் தற்கொலை செய்து கொண்டுவிட்டனர். இதற்கு காரணம் யார்?

நவம்பர், டிசம்பர் (மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள்) காலங்களில் ஏற்படும் குளிர், மழையால் மூத்த குடிமக்கள் அடிக்கடி இருமல் சளி போன்ற தொந்தரவுக்கு ஆளாவர். இவர்களுக்கு முன்பே இருந்த மவுனமான இதய நோயான ஸ்மிக் இதயம் சில நேரங்களில் இதய நோய் பெய்லியர் ஆகிவிடும். ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறைந்துவிடும். இதனாலும் மூச்சிரைப்பு அதிகமாகி, இது 90 சதவீதத்திற்குள் குறைந்தால் மூச்சு நின்றுவிடும். இதனால், வென்டிலேட்டரை வைத்து செயற்கையாக வென்டிலேட்டரில் மாட்டிவிட்டு, நுரையீரல், இதயத்திற்கு சிகிச்சை அளிப்பர். இதற்கு தினமும் 5,000 முதல் 10,000 வரை செலவாகலாம். இவற்றோடு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதய நோய் என்று பல நோய்கள் இருந்தால் என்ன செலவு ஆகும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

60 வயது கடந்தவரா: இந்த வயதில் உடலில் ஏதாவது சர்க்கரை, பி.பி., மூட்டு வலி, மவுனமாக மறைந்து இருக்கும் இதய நோயான மார்புவலி, மாரடைப்பு, சர்க்கரை நோய் வரும் தன்மையுள்ளவர்கள், இதன் விளைவாக வரும் பல வியாதிகளான ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரி, பேஸ்மேக்கர் இவைகளுக்கு ஆகும் செலவை வராமல் தடுப்பது.

சிறுநீரகத்தால் கிட்னி பெய்லியர், கிட்னி டிரான்ஸ் பிளான்ட் மற்றும் ஸ்டிரோக் (கூஐஅ) எம்.ஆர்.ஐ., போன்ற செலவு. மூட்டினால் ஏற்படும் வலி, மூட்டு மாற்றுச் சிகிச்சை போன்றவற்றிற்கு, லட்சங்களில் ஏற்படும் செலவுகளை தவிர்க்க, நல்ல ஆரோக்கியமாக வாழ, உடலிலுள்ள இதயம், நுரையீரல் கிட்னி, மூளை முதலிய உறுப்புகளை காக்க, மூலதனத்தை (வீடு, நகை, நிலம்) காக்க நல்ல மருத்துவ ஆலோசனைபடி வாழ்வை துவக்குங்கள். வாழ்க, வளமுடன் என்றும்.

பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம்.,

மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக