புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%
prajai
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 12:31 am

(முனைவர்) நீதியரசர் பி.வேணுகோபால் (ஓய்வு)

எனது தலைமையிலான மண்டைகாடு கலவரங்கள் குறித்த விசாரணை குழு மதமாற்றங்களை தடைசெய்யும் ஒரு சட்டத்தினை 1983 இலேயே பரிந்துரை செய்தது. அண்மையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்து (பின்னர் அரசியல் நிர்பந்தங்களால் நீக்கிவிட்ட) கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தினை சரியான கோணத்தில் அறிந்துகொள்ள (அன்றைய) விசாரணைக்குழு மதமாற்றத் தடைச்சட்டத்தினை பரிந்துரை செய்யுமாறு தூண்டிய பின்புலத்தையும் சூழலையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஒரு சிறுபான்மை சமுதாயம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பெரும்பான்மை ஆகும் போது அது ஆக்கிரமிப்புத்தன்மையுடனும் வன்மைத்தன்மையுடனும் (millitant), இறுமாப்புடனும் இயங்க ஆரம்பிக்கிறது. அது தனது ஆற்றலை மாநாடுகள் மூலமும் பேரணிகள் மூலமும் காட்ட முனைகிறது. கிறிஸ்தவர்கள் கன்னியாகுமரி 'கன்னி மேரி ' எனவும், நாகர்கோவில் 'நாதர் காயல் ' எனவும் பெயர் மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். இது பெரும்பான்மை சமுதாயத்திற்கு வருத்தத்தையும், நம்பிக்கையின்மையையும், ஐயப்பாட்டையும் உண்டாக்கிற்று இதன் விளைவாக வகுப்புவாத சூழல் உருவாயிற்று. இது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. இவ்விசயத்தை ஒவ்வோர் பிரச்சனையாக அணுகலாம்.

அ) அரசியல் நிர்ணய சட்டத்தின் 25 ஆவது பிரிவு வழங்கும் ஒருவருக்கு தமது மதத்தினை பரப்பும் உரிமை என்பது கிறிஸ்தவ மிசினரிகளால், ஹிந்து மதத்தினையும் அதன் தேவதேவியரையும் வன்முறைத்தனமாக சிறுமைப்படுத்துவதற்கும், ஹிந்து மதத்தினை தவறாக சித்தரிப்பதற்கும் என்பதான மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வழக்கமாக தொடங்கப்பட்டு, சீரழிக்கப்பட்டது (degenerated). இது அதே அளவு மோசமான எதிர்வினைகளை -கிறிஸ்தவ மதத்தின் மீதாக படுமோசமான தாக்குதல் பிரச்சாரத்தை- ஹிந்துக்களிடமிருந்து உருவாக்கியது. இது தொடர்ந்து ஒருவர் மற்றவரது வழிபாட்டு தலங்களை தாக்கவும், அழிக்கவும், அவமானப்படுத்தவும் செய்வதாக வெளியிட்ட மிரட்டல்களைத் தொடர்ந்து வெளிப்படையான தாக்குதல்களாகவும் சவால்களாகவும் ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உருமாறியது. இதனைத் தொடர்ந்து வெளிப்படையாக தம் மதத்தினரை வன்முறை கலவரங்களுக்குத் தூண்டும், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் இரு மதத்தினரிடையேயும் புழங்கலாயின. மிக மோசமான வார்த்தைகளால் மாற்று மதத்தினரைத் திட்டும் சுவரொட்டிகள் கன்னியாகுமரியில் ஆரம்பித்து இரு சமுதாயத்தினராலும் கட்டுக்கடங்காத ஆவேசத்துடன் தடுப்பாரற்று ஒட்டப்பட்டுவந்தன. இது கடந்த இருவருடங்களாகவே நடைபெற்று வந்து இறுதியில் மிகமோசமான வகுப்புவாத கலவரமாக பெருமளவு வன்முறையுடனும் சூறையாடலுடனும் வெடித்தது.

ஆ. அதன் பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் நடந்தது என்பது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அறியப்படாத ஒரு நிகழ்ச்சியாகும். சொத்துக்கள் (வீடுகள், கடைகள், துணிக்கடைகள், தென்னந்தோப்புகள், வாழைத்தோட்டங்கள்) மிகக்கடுமையாக சூறையாடப்பட்டன. கல்வி நிறுவனங்கள், கான்வெண்ட்கள், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள், ஹிந்து ஆலயங்கள் ஆகியவை வன்முறையின் இலக்குகளாயின. கல்லறைத் தோட்டங்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை. வன்முறைக்கெல்லாம் உச்சகட்டமாக மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். இதெல்லாம் மதத்தின் பெயரால் நடந்ததென்பதுதான் கொடுமையான விசயம். சில கிராமங்களில் கிணறுகள் பெட்ரோல், டாசல், மோசமான இரசாயனம் ஊற்றப்பட்டு அதன் நீர் பயன்படுத்தப்பட முடியாமல் ஆனது. பல கிராமங்களில் மக்கள் வசிக்க தலையின் மீதோரு கூரையும் இல்லாத பரிதாபநிலையில் இருந்தனர். வெட்டவெளியில் பொங்கித்தின்றவாறு இருந்த மக்களை பார்க்கவே கொடுமையாக இருந்தது. இக்கொடுமையின் தீவிரத்தன்மையும் வீச்சும் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். கிறிஸ்தவர்கள் தங்கள் இழப்புகளை ஒரு கோடி எனக் கணக்கிட்டிருந்தனர். பள்ளந்துறை கிராமத்தில் மட்டுமே கிறிஸ்தவர்கள் ஒன்றரை - இரண்டு கோடி ரூபாய் இழப்பினை சந்தித்திருக்கலாம். மாவட்ட ஆட்சியர் எடுத்த மறுவாழ்வு சீரமைப்பு முயற்சிகளின் மொத்த செலவு பத்து இலட்சம் ரூபாய் ஆகும். கிறிஸ்தவர்கள் தரப்பில் உயிரிழப்பு பத்து ஆகும். ஹிந்துக்கள் தரப்பில் பதினொன்று ஆகும். இரு பக்கங்களிலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் பெரியதாகும். கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஹிந்துக்கள். அவர்கள் திரும்பவே இல்லை. இருமுறை போலிஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும் மக்கள் உயிரிழந்தனர்.

இ. விசாரணைக் குழு 161 சாட்சியங்களையும், பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட 323 காட்சிப்பொருட்களையும், ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய தரப்பினரால் 16 வழக்கறிஞர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட பல வாதங்களையும் ஆராய்ந்த பின்னர் மிகத்தெளிவாக கன்னியாகுமரி மாவட்ட கலவரங்களுக்கு மூலவேர் காரணமாக ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றியமையும் அதற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளுமே காரணம் என தெளிவாக கண்டுரைத்தது. சட்ட ஒழுங்கினைக் கட்டிக்காப்பது மாநில அரசின் பொறுப்பாகும். அரசாங்கம் ஒரு மானுட சோக நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் போது கைகட்டி அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாகாது. வருங்காலத்தில் இத்தகைய விரும்பத்தகாத வன்முறைச்சம்பவங்கள் நடக்காமலிருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பரிந்துரை செய்ய விசாரணைக் குழு கேட்கப்பட்டபோது, அக்கேள்வி விசாரணைக் குழுவினால் கீழ்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது:

பாகிஸ்தான், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகியவை கிறிஸ்தவ மிசினரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த சட்டங்கள் இயற்றியுள்ளன. இஸ்ரேல் மதமாற்றத்தினை தடைசெய்துள்ளது. சுவிட்சர்லாந்து ஏசுசபையினரை தடைசெய்துள்ளது. கொலம்பியாவில் கத்தோலிக்கர்களை கத்தோலிக்கரல்லாதவர்கள் மதமாற்றம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. கத்தோலிக்கர் பெரும்பான்மையாக உள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சமுதாய அமைதியையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் குலைப்பதாக காரணம் காட்டி மிசினரிகளின் மதமாற்ற வேலைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. வெனிசூலா அரசாங்கம் மெதாடிஸ்ட் கிறிஸ்தவ சபையினை தடை செய்து மிசினரிகளை வெளியேற்றியுள்ளது. ஸயர் (Zaire) அரசாங்கம் ஆப்பிரிக்க தனித்தன்மையை காப்பாற்ற மிசினரி செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தோனேசியாவில் மதத்தினை பரப்பும் உரிமை அளிக்கப்பட்டு அது வகுப்பு ஒற்றுமைக்கு இடராக இருந்த காரணத்தால், இந்தோனேசிய அரசாங்கம் மதமாற்றங்களைத் தடை செய்து மிசினரி நடவடிக்கைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உலகமெங்கும் இத்தகைய போக்கு காணப்படும் போது இந்த நாட்டில் எவாஞ்சலிக்கல் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த முடியாவிட்டாலும் கூட குறைந்தபட்சமாக நாம் செய்யக்கூடியது பெருத்த மதமாற்றங்களையும் (mass conversions), மோசடி முயற்சிகள் மூலமும் சட்டவிரோத செயல்பாடுகள் மூலமும் நடக்கும் மதமாற்றங்களை தடைசெய்யலாம்.

திரு. பாலகிருஷ்ணன், ஹிந்துக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர், தாம் எழுத்துருவாக சமர்ப்பித்த அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் தொகை பெருக்கம் மதமாற்றம் மூலம் நிகழ்வதாகவும் அது மதமாற்றத் தடைச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விசாரணைக் குழுவின் முன்னால் பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை கிறிஸ்தவ மிசினரிகள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள செயல்பாடுகளைக் காட்டுகின்றன. 'கிறிஸ்தவ மிசினரிகளின் செயல்பாடுகள் குறித்த விசாரணைக் குழு அறிக்கை: மத்திய பிரதேசம் ', 'கிறிஸ்தவம்: ஒரு அரசியல் பிரச்சினை ' (மேஜர் வேதாந்தம்), விவேகானந்த கேந்திர பிரகாஷனால் வெளியிடப்பட்ட 'கிறிஸ்தவம் ஒரு விமர்சனப் பார்வை ' ஆகியவை இதனை தெளிவாக்குகின்றன. இவை எல்லாம் இந்த நாட்டிலே நடக்கும் மதமாற்றங்கள் நம்பிக்கை, உறுதிப்பாடு, மனமாற்றம், இறை அனுபவம் ஆகியவற்றாலெல்லாம் ஏற்படுகிற மாற்றங்கள் அல்ல என்பதை தெளிவாக்குகின்றன. மாறாக, ஹரிஜனங்கள் மற்றும் வனவாசிகளின் பெருமளவு மதமாற்றம் என்பது தூண்டுதல், கட்டாயப்படுத்தல், பொருளாதார ஆசைகாட்டல், வசதி வாய்ப்புகளால் ஆசைகாட்டல் ஆகியவை மூலம் நடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே இலஞ்சத்திற்கே நிகரானவை.

தனி நபரின் மதமாற்றம் என்பது ஒரு விதிவிலக்கே அன்றி வழக்கமல்ல. கடந்த காலங்களில் நடந்த மதமாற்றங்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜனநாயக் சூழலில் மக்கள் மதமாற்றங்களைக் குறித்து விழிப்படைந்துவிட்டார்கள். ஹிந்துக்களை மற்ற மதங்களுக்கு மாற்ற முயற்சிப்பது சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கே வழிவகுக்கும்.

ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில் ஹிந்துக்களை கிறிஸ்தவத்திற்கோ இஸ்லாத்திற்கோ மாற்ற முயற்சிப்பது வட்டார பாரம்பரியங்களையும், நம்பிக்கையையும், அமைப்புகளையும் குலைக்கும். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் ஆளுமைகளை இழக்கிறார்கள். அது பாரம்பரியத்தில் பிடிப்பில்லாததோர் பிளவினை சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. அது சமுதாய அமைப்பினை சிதைத்து கலாச்சார மோதல்களையும், சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளையும், நிலவிவரும் வகுப்பு சமரசத்தையும் குலைக்கிறது. மதமாற்றங்கள் விரிசல்களையும், ஆத்திரத்தையும் உருவாக்கி நியாயமாகவோ அநியாயமாகவோ வகுப்பு-விரோத உணர்ச்சிகளை வளர்க்க வழி கோலுகிறது. இத்தகைய மதமாற்றங்கள் பெருமளவில் நடக்கும் போது கிறிஸ்தவ ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என ஹிந்துக்கள் அஞ்சுகின்றனர்.

எனவேதான் தேசப்பிதா காந்திஜி 'மதமாற்றம் அது நடக்கும் இடங்களில் ஒரு ஆன்மிகத்தன்மையுடன் நடைபெறவில்லை. அவை வசதிகளுக்காக நடைபெறுகின்றன ' என கூறினார். ஒருமுறை அவர் கூறினார், 'எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் மதமாற்ற முயற்சிகள் அனைத்தையும் தடை செய்வேன். '.

ஹிந்து குடும்பங்களில் ஒரு மிசினரி வருவதென்பது குடும்ப வாழ்க்கையில் கலகத்தையும், ஆடைகள் நடை உடை பாவனைகள் உணவு வழக்கங்கள் ஆகிய அனைத்திலும் ஒரு குழப்பத்தையும் உருவாக்குவதாகும்.

மகாத்மாவின் மதமாற்றங்களை தடுக்கும் கனவு மத்தியபிரதேச அரசினால் நனவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரிசாவும் அதனை பின்பற்றியுள்ளது. இந்த மதமாற்றத் தடைச்சட்டங்களின் சட்டரீதியில் செல்லுமா என்பது உச்ச நீதி மன்றத்தின் முன் வைக்கப்பட்டது (புனித ஸ்டெயின்ஸ் vs மத்திய பிரசேதம் AIR 1977 Supreme Court 908 at 911) உச்ச நீதி மன்றம் மதத்தினை பரப்பும் அதிகாரமானது மதமாற்றத்திற்கான அதிகாரம் இல்லை எனக்கூறி ஒரிசா மற்றும் மத்தியபிரதேச சட்டங்கள் சட்டரீதியாக செல்லுபடியாகும் எனக் கூறிவிட்டது.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஹிந்துக்களின் மீள்-மதமாற்ற முயற்சிகளால் பெரிதும் வருத்தமடைந்துள்ளனர். பெருமளவு மதமாற்றங்களே பெருமளவு மீள்-மதமாற்றங்களுக்கு வகை செய்துள்ளன. ஹிந்துக்கள் மீண்டும் மதமாற்றம் செய்வதில் கொண்டிருந்த மனத்தடையினை நீக்கிக் கொண்டுவிட்டு அம்முயற்சிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழலில் ஒரு மதமாற்றத்தடை சட்டத்தின் அவசியம் என்ன என்று கேள்வி எழலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தது மீண்டும் நடக்காது என்பதற்கு எவ்வித உறுதியும் கிடையாது. மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம் சுவரில் எழுதப்பட்ட எச்சரிக்கையாக இருப்பதை அரசாங்கம் கவனிக்காமல் இருக்கலாகாது. பிரச்சனையை தடுப்பதே பிரச்சனையை தீர்ப்பதைக்காட்டிலும் புத்திசாலித்தனமாகும். அரசாங்கம் முன்னெச்சரிக்கை கொடுக்கப்படவில்லை எனக் கூறமுடியாது. அது அனைத்து விளைவுகளையும் எதிர்பார்த்து மதமாற்றங்களை தடைசெய்ய ஒரு சட்டத்தினை கொண்டு வந்தே தீரவேண்டும்.

(Necessity and validity of an Act banning conversion,

by (Dr) Justice P. Venugopal (Retd.)

Organiser Nov.7.2004

தமிழ் மொழிபெயர்ப்பு: எஸ்.அரவிந்தன் நீலகண்டன்)

URL: http://www.organiser.org/dynamic/modules.php ?name=Content&pa=showpage&pid=49&page=39

மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 1:35 am

சகோதரரேஒரு உதவி, இதற்கு ஒரு கதை உண்டு. நானெழுதிய கதை தான். அது கலைமகளில் வந்து அமரர் ராமரத்தினம் முதல் பரிசை வென்றது. அதனுடைய ஸ்கேன் காப்பி என்னிடமுண்டு. ஈகரையில் அதை பதிய முடியுமா?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 3:40 am

சகோதரரே மேற்கூறிய தகவலை பற்றி அந்த குறுநாவலோடு உங்களுக்கு ஒரு ஈ-மெயில் செய்திருக்கிறேன், நேரம் கிடைக்கையில் பாருங்கள். நன்றி!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக