புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
55 Posts - 67%
heezulia
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
2 Posts - 2%
viyasan
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
234 Posts - 42%
heezulia
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
21 Posts - 4%
prajai
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூரணியின் தீபாவளி !! Poll_c10பூரணியின் தீபாவளி !! Poll_m10பூரணியின் தீபாவளி !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரணியின் தீபாவளி !!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 9 Oct 2011 - 18:27

பூரணி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிட்டை போன்ற சுறுசுறுப்பான பெண். அவளும் அவள் தாய் பார்வதியம்மா இருவர் மட்டும் தான் அவர்கள் வீட்டில், பார்வதியம்மாளின் கணவர் பூரணியின் சிறு வயதிலேயே இறந்து விட்டதால் குடும்பத்தை சுமக்க வேண்டிய கடமை பார்வதியம்மாளின் மேல் ஏறியது....

பார்வதியம்மாள் தன் வீட்டிருக்கு அருகில் இருந்த நூல் ஆலையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்......நாள் ஒன்றுக்கு நூறு ருபாய் கூலி...

பூரணிக்கு தீபாவளி விடுமுறை விட்டிருந்தனர்......பண்டிகையை புத்தாடை, அம்மா செய்த பலகாரங்கள் என மிக மகிழ்ச்சியாக கொண்டாடினாள்..

அன்று பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் தொடங்கியது....பூரணி வழக்கம் போல பள்ளிக்கு நேரத்திலேயே சென்று விட்டாள்......பார்வதியம்மாவும் வேலைக்கு கிழம்பி சென்று விட்டார்......

பள்ளி வகுப்புகள் தொடங்கி, மூன்றாவது பகுதி முடிந்து உணவு இடைவேளை விடும் நேரத்தில்........பள்ளி பியூன் பூரணியின் வகுப்பிற்கு வந்து..........யாரும்மா இங்க பூரணி.....நான் தான் ஐயா என்று பூரணி எழுந்திருக்கவும்.............உங்க மாமா உன்ன தேடிட்டு வந்திருக்காரு.....ஆபீஸ் ரூம் ல வெயிட் பண்ணிட்டு இருக்காரு போயி பாருமா........என்று கூறி சென்று விட்டார்....

பூரணி வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி பெற்றுவிட்டு...ஆபீஸ் ரூமிற்கு விரைந்தாள்........அவள் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்....மாமா எதுக்கு வந்திருப்பாரு, ஒரு வேல ஏதாவது மறந்து வச்சிட்டு வத்தத குடுக்க வந்திருப்பாரா......இல்லையே அப்படி இருந்தா அம்மா தான வருவாங்க.......இருந்தும் காரணம் எதுவென்று தெரியாத பூரணி கொஞ்சம் குழம்பி, பலக் கேள்விகளை முகத்தில் ஏந்தியவாறே.....ஆபீஸ் ரூமை அடைந்திருந்தாள்.........

மாமாவின் முகம் எப்பொழுதும் சந்தோசமாக இருந்தே பார்த்த பூரணிக்கு அன்று அவரின் முகத்தில் நிறைய மாற்றங்கள் இருந்ததை எளிதாக கண்டறிய முடிந்தது...........

மாமாவை பார்த்தமும்..........மாமா என்ன மாமா.....ஸ்கூல்கு வந்திருக்கீங்க...........அ..அது.....அதுவந்து ஒன்னு இல்ல மா......அம்மாக்கு ஒடம்பு சரியில்ல......வீட்டுல தனியா தான இருக்காங்க...அது தான் அம்மாக்கு துணையா இருக்க உன்ன கூப்பிட வந்தேன்.......சரி....நீ போயி சார் கிட்ட சொல்லிட்டு புத்தக கூடைய எடுத்துட்டு வா மா....... (அவரின் மனதிற்குள் இந்த குழந்தை கிட்ட எப்படி உண்மைய சொல்ல போறேனோ என்ற பயமும், பரிதாபமும் முழுதுமாய் சூழ்ந்திருந்தது....அந்த நேரத்தில் கடவுள் பற்று அவருக்கு இருந்தாலும் கடவுளை திட்டுவதை தவிர அவருக்கு ஆறுதல் வேறு எதுவும் இல்லை என்பதே உண்மை......)

ம்ம் சரிங்க மாமா........என்று கூறிச் சென்றாலும்.....அவளுக்குள் அவளை கேள்விக் கணைகள் தாக்கிய வண்ணம் இருந்தன........

பூரணி மீண்டும் வகுப்பிற்கு சென்று......வகுப்பு ஆசிரியரிடம்......சார்...எங்க அம்மாக்கு உடம்பு சரியில்லையாமா சார்......அதுனால அவங்களுக்கு ஒத்தாசையா இருக்க........என்ன எங்க மாமா கூப்பிட வந்திருக்காங்க......நா புக்ஸ் கூடைய எடுத்துட்டு போகவா சார்.....என்று பூரணி கேட்டதும்...

சரி மா...நீ போயிட்டு வா...என்று ஆசிரியர் கூற.....

புத்தகக் கூடையை எடுத்துக் கொண்டு பூரணி புறப்பட்டாள்........(பாவம் அப்பொழுது அவளுக்கு தெரியாது...இனி அவள் பள்ளிக்கே வர போவதில்லை என்று)

பள்ளியில் இருந்து பூரணியும் அவளது மாமாவும் கிழம்பி வீட்டிற்கு போயி சேர்ந்தனர்........அங்கே பூரணியின் அத்தை கண்களில் கண்ணீருடன் அமர்ந்து கொண்டிருப்பதை கண்ட......பூரணிக்கு பதற்றம் அதிகரித்து........புத்தகக் கூடையை ஓரத்தில் வைத்து விட்டு....உள்ளே சென்று பார்த்தால்......

பார்வதியம்மாள், முகம் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டும், இடது கையும் வலது காலும் கோணலாகவும் இருபதைக் கண்ட பூரணிக்கு என்ன ஆனதென்றே புரியவில்லை......

அம்மா.......அம்மா........என்ன ஆச்சு மா..........ஏன் மா இப்படி படுத்துட்டு இருக்க.......அத்த அம்மாக்கு என்ன ஆச்சு அத்த .........(என்று கேட்டதும் அவள் அத்தையின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது)

மாமா நீங்களாச்சும் சொல்லுங்க மாமா அம்மாக்கு என்ன ஆச்சு மாமா.......(பூரணியின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வடிந்தது..)

பூரணியின் மாமா பூரணியை தன் பக்கம் இழுத்து அனைத்துக் கொண்டே......அம்மாக்கு பக்க வாதம் வந்திருச்சுமா....அப்டினா என்ன மாமா????? (என்று பாவமாக கேட்ட பூரணியை பார்த்த மாமாவின் இதயம் நூறு துண்டங்களாய் போனது போல உணர்ந்தார்)

அப்டினா இனி மேல் அம்மாவால முன்ன மாதிரி ஓடி ஆடி வேலை செய்ய முடியாது மா.......கடவுள் அவங்க கையும் காலும் அதிகமா வேலை செஞ்சிருச்சுனு அத கட்டிப் போட்டுடாருமா.....(என்று சொல்ல மனதிற்குள் கடவுளை நொந்து கொண்டார் மாமா)

இதை கூறிக் கொண்டிருக்கும் போதே பார்வதியம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.........(அவர் மனதிற்குள் பூரணியை நினைத்து வேதனை பட்டதன் வெளிப்பாடே அந்த கண்ணீர்)

இனி நீ தாமா அம்மாவ பார்த்துக்கணும்.......(பூரணி அவள் அம்மா பட்ட கஷ்டங்களை நன்கு உணர்ந்தவள் அம்மா மீது அளவிலாத பாசம் வைத்தவள்)

அவள்(பூரணி) பார்வதியம்மாளின் அருகில் சென்று....கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு நீ கவலை படாதமா உன்ன நான் பார்த்துக்குறேன்.......

பூரணியின் மாமா.....பூரணியிடம் இனி உன் படிப்பு செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அம்மா செலவிற்கு மாதா மாதம் பணம் தருகிறேன் நீ பார்த்துக் கொள் என எப்படிக் கூறுவது என்று சங்கடப் பட்டுக் கொண்டிருந்தார் (காரணம் பூரணியை நன்கு அறிந்தவர் அவர், அவரால் பூரணியை படிக்க வைக்க முடியும் ஆனால் பூரணி அதை ஒத்துக் கொள்ள மாட்டாள், காரணம் பார்வதியம்மாள் பூரணியை அப்படி வளர்த்திருந்தார், எந்த சூழ் நிலையிலும் யாரிடமும், அவர் உறவினராக இருந்தாலும் பணவுதவி என்று கேட்கவோ பெறவோ கூடாது என்று பார்வதியம்மாள் அடிக்கடி அவளிடம் கூறி அவளை சிறந்தவளாக வளர்த்திருந்தார் இந்த சொற்கள் அனைத்தும் அவள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தன) இருந்தாலும் அவர்
பூரணியிடம........பூரணி நா உன்ன படிக்க வைக்கிறேன் மா....அம்மாகு மருத்துவ செலவுக்கு அப்பப்ப காசு தரேன் பார்த்துகிறியா என்று கேட்டார்......அதை ஏற்றுகொள்ள மறுத்து விட்டால் பூரணி.....

அதை தொடர்ந்து பேசிய மாமா.........அப்படி என்றால் இனி நீ தான் மா வேலைக்கு போயி உன் அம்மாவ காப்பாத்தனும்........அப்படி வேலைக்கு போனா........உன்னோட படிப்ப நிறுத்த வேண்டி வரும்மா என்று கூறினார்......


மாமா பரவால மாமா ஸ்கூல விட அம்மாவ பார்த்துக்கிறதுதான் முக்கியம்.......ஸ்கூல் போனா போகட்டும் மாமா...(என்று அந்த சிறு வயதிலேயே பொறுப்பாய் பேசிய பூரணியைக் கண்டு அவர் மெய்சிலிர்த்து தான் போனார்.....)

அடுத்தநாளே பூரணியை ஒரு துணிக் கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார் அவளின் மாமா.....மாதம் இரண்டாயிரத்து ஐநூறு ருபாய் சம்பளம்.....அம்மாவின் மருத்துவ செலவிற்கும் குடும்ப செலவிற்கும் முதல் மாத சம்பளத்தை மாமா முன்பணமாக பெற்று தந்தார் பூரணிக்கு.....

வேலையில் அமர்த்திவிட்டு இன்னைக்கு ஒரு நாள் அம்மாவ அத்தை கவனிச்சுப்பாங்க நீ மத்தியானம் வீட்டுக்கு போயி சாப்பிட்டுக்க......நாளைல இருந்து தினமும் மத்தியானம் அம்மாவ போயி பார்த்துக்கமா..... இனி நீ தான் மா அம்மாவையும் குடும்பத்தையும் பார்த்துக்கணும் நு சொல்லிட்டு.....மாமா கிழம்பிவிட்டார்...

மாமா போனதும் அங்கு நிறைய பேர் இருந்தும்.....ஒரு அனாதை போன்ற உணர்வும்.......மிகப்பெரிய வெற்றிடத்தையும் பூரணி உணர்ந்தாள்.......

அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள்...கொஞ்ச நேரம் பூரணியின் மீது அனுதாப அலைகளை வீசிவிட்டு..மீண்டும் தங்கள் வேலையை கவனிக்க துவங்கினர்............

பூரணி...அந்த நாள் முழுவதும்....எதோ யாரும் இல்லாத இடத்தில் தன்னந்தனியாக என்ன செய்கிறோம் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல்.....அந்த நாளைக் ஒரு வழியாக கழித்து விட்டு வீட்டிற்கு சென்றாள்........(அவளின் அம்மாவின் நிலை உணர்ந்ததால் கடை முதலாளி வேலை இரவு எட்டு மணி வரை இருந்தாலும் அவர் மாமாவின் வேண்டுகோள் படி பூரணிக்கு மட்டும் தினமும் ஆறு மணிக்கே செல்ல அனுமதித்து இருந்தார்....)

பூரணி வீட்டிற்கு சென்றதும்....அவர் அத்தை........ஏன் மா வேலைலாம் பரவாயில்லைலா.....முதலாளி நல்லா பாத்துக்கிறார்லமா .......

ம்ம் நல்லா பார்த்துக்குறாங்க அத்த........புது இடங்ரதால கொஞ்சம் கஷ்டமா இருக்கு அத்த மத்த படி எந்த பிரச்சினையும் இல்ல அத்த........

அத்தை...பூரணி வந்ததும்.....நல்லா பார்த்துக்கொமா.....மாமாக்கு இந்த மாசம் ட்றேன்ஷ்பார் அதுனாலா நாங்க வெளியூர் போயிருவோம்....அப்புறம் எங்களால அடிக்கடி வர முடியாது....ஏதாவது ஒன்னுனா இந்த நம்பர் கு கூப்பிடு என்று நம்பர் ஐ கொடுத்து விட்டு போனவர்கள்......மறுபடியும் ஊருக்கு கிழம்பிய அன்று வந்து பார்த்து பூரணியிடமும் பார்வதியம்மாவிடமும் கூறி விட்டுச் சென்றனர்.......

பூரணி தினமும் காலை ஐந்து மணிக்கே எழுந்து......சாப்பாடு செய்துவிட்டு.....அம்மாவிற்கு பல் துலக்கி விட்டு....காலைக் கடன்களை முடிக்க வைத்து.........கை கால் களுக்கு டாக்டர் பூசும்படி கூறி கொடுத்துச் சென்ற மருந்துகளை பூசிவிட்டு......தானும் குளித்து.........சாப்பிட்டு...அப்படியே அம்மாவிற்கும் ஊட்டி விட்டு தான் வேலைக்கு செல்வாள்......

அப்படி அவள் அம்மாவிற்கு ஊட்டிக் கொண்டிருந்த போது.........பார்வதியம்மாவிற்கு கண்களில் கண்ணீர் வடிந்தது.........இதைப் பார்த்த பூரணி.........அம்மா நீ வருத்தமே படாதம்மா.........கூடிய சீக்கிரம் நீ குணமாயிருவ.......மறுபடியும் ஓடி ஆடி வேலை செய்வ........உன் கையாள எனக்கு சமையல் செஞ்சு ஊட்டி விடுவ.......நீ கவலை படாதம்மா.......நீ தைரியமா இருக்குறது தான் எனக்கு தைரியத்த கொடுக்கும்.....சரியா.........என்று குழந்தைக்கு கூறுவதைப் போல் கூறி அம்மாவின் கண்களை துடைத்த பூரணியின் மனக்கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.....(எந்த பிள்ளைக்கு தான் தன் தாயை அப்படி ஒரு நிலையில் பார்க்க மனம் கலங்காமல் இருக்கும்......)

பூரணி நன்றாக படிக்கும் மாணவி என்பதால் அவளுக்கு உதவ சில உதவும் உள்ளங்கொண்ட அமைப்புகள் வந்து........பூரணியிடம்.......உன் படிப்பை நீ தொடருமா........உன் அம்மாவ நாங்க பார்த்துக்குறோம் என்று கூறினார்கள்.......ஆனால் பூரணி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை......தன் அம்மாவை என்னை விட வேறு யாராலும் சிறப்பாக பார்த்துக் கொள்ள முடியாது......என் அம்மா குணம் ஆகும் வரை அவர்களை நான் தான் பார்த்துக் கொள்வேன் என்று கூறி அதனை மறுத்து விட்டாள்..........

இப்படியே நாட்கள் பல சென்றது.....நாட்கள் மாதங்களானது......மாதங்கள் ஒரு வருடம் ஆனது..........பூரணி எல்லா வித கேளிக்கை நிகழ்ச்சிகள் பண்டிகைகள் அனைத்தையும் மறந்தே விட்டாள்....அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களுக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் என்பதுமே அவளின் கனவாகவும் லட்சியமாகவும் இருந்தது............

இவள் இப்படி அம்மா அம்மா என்று விடுப்பே எடுக்காமல் பணிக்கு வருவதை பார்த்த.....முதலாளி...அவளை கூப்பிட்டு............பூரணி......இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வர போகிறது.......(தீபாவளி என்று பேச்சை அவர் எடுத்ததுமே)...............ஐயா தயவு செய்து அந்த தீபாவளி என்ற சொல்லை மட்டும் ஞாபகப் படுத்தாதீர்கள்.........என் அம்மாவுடன் சந்தோசமாக இருந்த கடைசி நாள் அது தான்.......அதற்கு பின் என்ன நடந்தது என்று தங்களுக்கே தெரியும் ஐயா.......இனி தீபாவளி பற்றி பேசாதீர்கள் என்று மீண்டும் கூறிய பூரணியின் சொற்களில் உண்மை இருந்தாலும்........

முதலாளி எப்படியாவது அவளை விடுப்பெடுக்க வைத்து ஒரு நாளாவது சந்தோசமாக மகிழ்ச்சியாக இருக்க வைக்க வேண்டும் என்று விடாப் பிடியாய் இருந்தார்......காரணம் போன வருடம் தீபாவளி அன்றும் முதலாளி பூரணியை வற்புறுத்தினார் இருந்தும் பூரணி அப்படி செய்ய மறுத்து விட்டார்...

இல்லமா நான் என்ன சொல்றனா........உங்க அம்மா நீ இப்படி.....எந்த வித சந்தோசமும் இல்லாம......அவங்கள பாத்துக்கிறது......அப்புறம் வேலை வேலைன்னு இருக்குறத பார்த்து கஷ்டப் படுவாங்கள்ள......அவங்களால தான் நீ இப்படி கஷ்டப் படுரைன்னு நெனச்சு..வேதனை படுவாங்கள்ள...அதுனால தாமா சொல்றேன்....என்று முதலாளி கூறுவதில் ஞாயம் இருப்பதை உணர்ந்த பூரணி....சரிங்க ஐயா.....நீங்க சொல்ற படியே செய்யுறேன்.......ஆனா நான் என் அம்மா குணமாகாம எந்த பண்டிகையும் கொண்டாடுறது இல்லன்னு...எடுத்திருக்குற சபதம்......வீணாயிருமே என்று கேட்டதும்.......இந்த தீபாளிக்கே உங்க அம்மா குணமானாலும் ஆகலாம்.........என்று அப்பொழுது அவர் பூரணிக்கு ஆறுதலாகத் தான் சொன்னார்..........

பூரணி எப்பொழுதும் போல் தன் பணிகளை செய்து கொண்டிருந்தாள்....நாட்கள் நகர்ந்தன.......முதலாளி பூரணிக்கு போனஸ் கொடுத்து அம்மாக்கும் உனக்கும் இதுல துணிகள் இருக்கு........இத அம்மாக்கிட்ட போயி காட்டுமா என்று கூறியவரிடம் இந்த துணிகளுக்கு காசு எவ்ளோ ஆச்சு என்று கேட்டதும்.......அவருக்கு செல்லமாக கோவம் வந்து அடிப் போடி உன் சம்பளத்துல இருந்து காச இந்த துணிக்கு புடிச்சிட்டு தான் குடுக்குறேன்...போ போயி அம்மா கிட்ட காட்டு (முதலாளி சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொண்டார் என்றதும் தான் அந்த துணியை பெற்றுக் கொண்டாள்).........என்று முதலாளி கூற.....

வேலை முடிந்து பார்வதியம்மாளிடம்.....அந்த துணிகளை காண்பிக்க அவரின் முகம் கொஞ்சம் மலர்ந்தது....தன் குழந்தையின் மாற்றம் கண்டு....நெகிழ்ந்து போனார்.........அவரால் பேச முடியாவிட்டாலும்.....முயற்சி செய்தது........அவர் பேசியது உளறுவதை போன்று இருந்தாலும்....அதில் ஆயிரம் அர்த்தங்களும்......எண்ணிலடங்கா பாசப் புதையலும் இருந்தன...............

தீபாவளிக்கு முந்தைய நாள்.......வேலை மிகவும் கடினமாக இருக்கும்......மதியம் இடைவேளையில்......வழக்கம் போல ஓடி வந்து அம்மாவை பார்த்து உணவூட்டி விட்டு தானும் உண்டு மீண்டும் வேலைக்கு சென்றாள்........

பூரணி எப்பொழுதும் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு
வந்ததும் பார்வதியம்மாவின் கை கால்களுக்கு மருந்து தடவி
விடுவாள்......அதேபோல் அன்றும் மருந்தை எடுத்துக்கொண்டு வந்து அம்மா
அருகில் உட்கார்ந்தவள் அப்பொழுது தான் கவனித்தால்...பார்வதியம்மா சேலை அணிந்திருந்ததை.....காரணம் பார்வதியம்மாவிற்கு பக்க வாதம் வந்ததில் இருந்து அவர் சேலை அணியவில்லை நைட்டி தான் அணிந்திருந்தார்......


பூரணிக்கு ஒரே குழப்பம் யார் சேலை உடுத்தி விட்டிருப்பார்கள்....(ஒரு வேலை அத்தை மாமா ஊருல இருந்து
வந்திருபாங்கலோ......காரணம் மாமா வேலை காரணமாக வெளியூரில் குடிபெயர்ந்து விட்டதால்...போன தீபாவளிக்கு வந்திருந்தனர் அப்பொழுது பூரணி கொண்டாட மறுத்து விட்டதால்....அடுத்த .தீபாவளிக்கு வருவதாக கூறிச்சென்றிருந்தனர்...) பூரணி சுற்றும் முற்றும் பார்த்தால் யாரும் இல்லை......


திடீரென்று யாரோ தன்னை தழுவுவது போல் உணர்ந்த பூரணி
திரும்பி பார்த்தால்......அவள் தாய் பார்வதியம்மாள் பூரணியை அப்படியே தழுவி தன் மார்போடு அனைத்துக் கொண்டிருந்தாள்........


ஒரு நிமிடம் அப்படியே ஸ்தம்பித்தது போல் உணர்ந்த பூரணி........அம்.......அம்மா......உனக்கு இப்ப கை கால் வேலை செய்யுதுமா.....என்று சொன்னவள் முகத்தில்....... இரண்டு வருடமாக முடக்கி வைத்திருந்த சந்தோசம் எல்லாம் ஒட்டு மொத்தமாக சங்கமித்திருந்தது.............ஆனால் பார்வதியாம்மாவின் வாய் பகுதி மட்டும் சரியாகாமல் இருந்தது.........

அம்மா அம்மா எந்திருச்சு நடமா.....சீக்கிரம் சீக்கிரம் க்விக்.....எந்திரி எந்திரி எந்திரி........என்று மீட்டும் அவளின் சிட்டு போன்ற சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது........

அத்தனை நாள் ஒரே இடத்தில் கை கால் அசைக்காமல் இருந்த
பார்வதியம்மாவிற்கு எழுந்து நடக்க சிரமமாகத் தான் இருந்தது.......அப்படி இருந்தும் தன மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சிரமப்பட்டு சேலை உடுத்தி இருந்தார்........இப்பொழுது எழுந்து நிற்க தடுமாறிய அம்மாவிற்கு பூரணி தோள் கொடுக்க....பார்வதியம்மா நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தார் ............


ஊரார் அனைவரும் பார்வதியம்மாவை பார்த்ததும் ஆச்சர்யப்
பட்டனர்.......பார்வதி எந்திரிசிட்டியாமா எல்லா அந்த கடவுள் கருணை தான்மா........என்று சொல்ல..... சிலர், கடவுள் கருணையை விட....பூரணி அவங்க அம்மாவ பார்த்துக்கிட்டது தான் பார்வதிய மறுபடியும் எந்திரிச்சு நடக்க வச்சிருக்கு........என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொன்னாலும்........பூரணி கடவுளை மனதிற்குள்......போற்றிக் கொண்டிருந்தாள் அவளுடைய நன்றிகளால்.....

உடனே மாவாவிடம் கூற வேண்டுமே என்று எண்ணிய அவள்.....வாங்கி வைத்திருந்த தொலைபேசி என்னை எடுதுக்க் கொண்டு... ஓடிச் சென்று இந்த நல்ல விஷயத்தை மாமாவிடம் கூற....அவர்களுக்கு அலாதி மகிழ்ச்சி.....பூரணிக்கு இனி நல்லா காலம் பிறந்து விடும் என்பதால்.......அவர்கள் செய்தி கேட்டதும் உடனே புறப்பட்டனர்......

மறு நாள் தீபாவளி மாமா அத்தை இருவரும் வந்துவிட..... புத்தாடை உடுத்தி.....அம்மா செய்த இனிப்பு வகைகளை ஒரு கை பார்த்த பூரணி.......போய் பட்டாசைக் கொளுத்த அவள் இத்தனை நாள் கொண்டிருந்த துக்கம் அனைத்தும் அந்த பட்டாஷோடு கருக்கிப் போனது.......

மீண்டும் பள்ளியில் சேர்ந்த பூரணி........பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்து........அவளுடைய வாழ்கையை அவள் தாய் பார்வதியம்மாவுடன் தொடர்ந்தாள்.......


-முற்றும்-




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun 9 Oct 2011 - 18:56

வணக்கம் ராமன்.இந்தக் கதையைப் படிக்கும் போது,நான் அப்படியே அந்தக் கதையுடன் ஒன்றிப் போய்விட்டேன்.சில இடங்களில் என் கண்களின் ஓரம் கண்ணீர்த் துளி கூட எட்டிப் பார்த்தது.எங்கே கடைசில் வேறு விதமாக கவலைப் படும்படி இருக்குமோ என்று கொஞ்சம் படபடப்பில் படித்தேன்.சந்தோசம் பூரணிக்கு மட்டும் இல்லை எனக்கும் தான்.

நீங்கள் ஒரு சிறந்த கதாசிரியராக ஆவதற்கான சிறந்த தகுதிகள் இருப்பதாகவே உணருகிறேன்.
காரணம் வார்த்தைகள் அப்படி.

அருமையான கதை.வாழ்த்துகள் ராமன் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பூரணியின் தீபாவளி !! Image010ycm
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 9 Oct 2011 - 19:01


கண்கலங்க வைத்துவிட்டது பூரணியின் கதை சோகம்




பூரணியின் தீபாவளி !! Power-Star-Srinivasan
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 9 Oct 2011 - 19:27

kitcha wrote:வணக்கம் ராமன்.இந்தக் கதையைப் படிக்கும் போது,நான் அப்படியே அந்தக் கதையுடன் ஒன்றிப் போய்விட்டேன்.சில இடங்களில் என் கண்களின் ஓரம் கண்ணீர்த் துளி கூட எட்டிப் பார்த்தது.எங்கே கடைசில் வேறு விதமாக கவலைப் படும்படி இருக்குமோ என்று கொஞ்சம் படபடப்பில் படித்தேன்.சந்தோசம் பூரணிக்கு மட்டும் இல்லை எனக்கும் தான்.

நீங்கள் ஒரு சிறந்த கதாசிரியராக ஆவதற்கான சிறந்த தகுதிகள் இருப்பதாகவே உணருகிறேன்.
காரணம் வார்த்தைகள் அப்படி.

அருமையான கதை.வாழ்த்துகள் ராமன் பூரணியின் தீபாவளி !! 224747944 பூரணியின் தீபாவளி !! 2825183110 பூரணியின் தீபாவளி !! 677196 பூரணியின் தீபாவளி !! 678642


மிக்க நன்றிகள் கிச்சா.......... பூரணியின் தீபாவளி !! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 9 Oct 2011 - 19:28

பிளேடு பக்கிரி wrote:
கண்கலங்க வைத்துவிட்டது பூரணியின் கதை பூரணியின் தீபாவளி !! 440806


மிக்க நன்றிகள் நண்பா...அது தான் கடைசியில் எல்லாம் சரியாகி விட்டதே........சோகம் தவிருங்கள்.....நன்றிகள்...... பூரணியின் தீபாவளி !! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக