புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_m10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_m10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_m10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_m10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_m10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_m10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_m10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_m10மாணவர்களின் பாராளுமன்றம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களின் பாராளுமன்றம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 11:20 am

மாணவர்களின் பாராளுமன்றம்! Mdu1

புதுடெல்லியின் முக்கிய பகுதி... அரங்கு நிறைய கூட்டம்... ஆனால் ஒரே கூச்சல், குழப்பம்... பல மொழிகள், சைகைகள், மேஜை, நாற்காலியை தட்டும் சத்தம்... அமைதி, அமைதி என்று ஒரேயொரு குரல் மட்டும் கூச்சலுக்கு இடையே மெலிதாக ஒலிக்கிறது. ஆனால் யாரும் கேட்கத் தயாரில்லை.

திடீரென அனைவரும் கலைந்து செல்கின்றனர். இது ஏதோ பொது நிகழ்ச்சியில் நடக்கும் சலசலப்பு இல்லை. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் குரல்தான் அது. ஒலித்த இடம் பாராளுமன்றம்.

இந்த ஒரிஜினல் பாராளுமன்றத்திற்கு நேர்மாறாக அமைதியான பாராளுமன்ற கூட்டம் மதுரையில் நடந்தது. இது மாதிரி பாராளுமன்றம்.

அங்கே மக்களின் கோரிக்கைகள் மட்டுமே பேசப்பட்டன. பேசியவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. நாளைய பிரதமர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆக வரப்போகும் இளைஞர்கள்.

ஆம்... பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடத்திய மாதிரி இளைஞர் பாராளுமன்றத்தில் தான் இந்தக் காட்சியை காண முடிந்தது.

மாதிரி பிரதமராக ஜித்தின், சபாநாயகராக அர்ஷா, மார்ஷலாக கிறிஸ்டி, செகரெட்டரி ஜெனராக அடிலின் மற்றும் எதிர்கட்சி தலைவராக தஸ்னிம் ஆகியோர் பங்கேற்றனர்.

சபாநாயகர் வருகை குறித்த அறிவிப்பு செய்வது முதல், பாராளுமன்றம் முடியும் வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளும் மிக நேர்த்தியாக நிஜ பாராளுமன்றத்தில் நடப்பது போலவே அழகாக நடத்தப்பட்டன.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மீனவர்கள் பிரச்சினை, குடிசை வாழ் மக்கள் பிரச்சினை, நாட்டையே உலுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நதி நீர் ஒருங்கிணைப்பு, கருப்பு பண விவகாரம் ஆகியவை விவாதத்தில் முக்கிய இடம் பெற்றன.

கல்விக்கடன் குறித்த வங்கி நடவடிக்கைகள் குறித்த ஒத்திவைப்பு தீர்மானம், இயற்கை பேரழிவு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம், ஊழல் ஒழிப்பு மசோதா, பெண்கள் பாதுகாப்பு சட்டம் போன்ற பல்வேறு முக்கிய விவாதங்களும் அரங்கேறின.

பாராளுமன்றம் தொடங்கியவுடன் முதலாவதாக முன்னாள் ஜனாதிபதி ஆர்.கே.ராகவாச்சாரிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் புதிய அமைச்சர்களை, சபாநாயகர் முன்னிலையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதில் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சராக சங்கீதாவும், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக விஷ்ணுப்பிரியாவும் முறைப்படி உறுதிமொழி எடுத்து பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகர் முன்னிலையில் அவரவர் விருப்ப மொழியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கேள்வி நேரத்தில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கற்பழிப்பு சம்பவங்கள் ஆகியன முக்கிய இடம் பிடித்தன. மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், புனாவில் கால்சென்டரில் வேலை பார்த்த பெண் ஊழியர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவாவில் வெளிநாட்டு பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை குறித்து எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்ப... அவை முழுவதும் காரசாரமான விவாதம் மற்றும் விமர்சனத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது பற்றி துணை கேள்விகள் கேட்டும் அசத்தினர். இவர்களின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் பதில் சொல்ல முடியாத அளவுக்கு திணறியதையும் காண முடிந்தது.

குடிசைகள் இல்லாத இந்தியா என்ற பெயரில் ஏழைகளின் குடியிருப்புகளை அகற்றும் திட்டம் குறித்தும் காரசாரமான விவாதம் நடந்தது. அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்திற்காக குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்ற பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து அவையில் சலசலப்பு ஓய்ந்தது.

`பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன' என்று கேள்வியும் அவையில் எழுப்பப்பட்டது.

இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜோசபின் பதிலளிக்கையில், "கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கும் போது மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இவ்வாறு எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை பிடித்தால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது'' என்று பதிலளித்தார்.

இதற்கு தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. "மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாலும் அவர்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாகும். எனவே வெளியுறவுத்துறை அமைச்சர் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் தான் கைது செய்யப்படுகின்றனர் என்று கூறியதை வாபஸ் பெற வேண்டும்'' என்று குரல் கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு முக்கிய இடம் பிடித்தது. அடிக்கடி டீசல் விலை உயர காரணம் குறித்தும், இதனால் நடுத்தர மக்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

"பற்றாக்குறையே டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் கச்சா எண்ணை பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ரெயில்வே மின் மயமாக்கப்படுவதால் கச்சா எண்ணை பற்றாக்குறையை சமாளிக்க முடியும். அரசு வாகனங்களில் இயற்கை எரிவாயு மற்றும் கியாஸ் மூலம் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. சூரியசக்தி மற்றும் மின்சார பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்று அதற்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் பதிலளித்தார்.

கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு மாநிலங்களின் நதிநீர் பிரச்சினை குறித்தும் அவையில் பேசப்படாமல் இல்லை. இந்த பிரச்சினை குறித்து கேள்வி கேட்ட அனைத்து மாதிரி எம்.பி.க்களும், நீர்வளத்துறை அமைச்சரை கேள்விக்கணைகளால் விளாசித்தள்ளி விட்டனர்.

நதி நீர் ஒருங்கிணைப்புத்திட்டம் தேசிய நீர்வழித்திட்டத்தில் இணைக்கப்பட்டு இருப்பதாகவும், 10 ஆண்டுகளுக்குள் தெற்கு, மத்திய, இமாலய நீர் வழி ஒன்றிணைக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தேசிய நீர்வழித்திட்டம் `சீனாவின் துயரமாக' இருந்த மஞ்சள் ஆற்றில் எப்படி 100 சதவீதம் சாத்தியமானதோ அதைவிட இருமடங்காக 200 சதவீதம் சாத்தியமாகக்கூடிய திட்டமாகும் என்றும் விளக்கப்பட்டது.

பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஊழல் ஒழிப்பு சட்ட மசோதாவும் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. விவாதங்கள் முடிவடைந்த நிலையில், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக சட்டம் நிறைவேறியது. இந்த சட்டத்திற்கு வெகு சிலரை தவிர அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

கடைசியாக, `பெண்கள் உரிமை பாதுகாப்பு சட்டம்-2011' குறித்த காரசாரமான விவாதம் நடந்தது. இன்று வரை நாடாளுமன்றத்தில் நடந்துவரும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா இழுபறியில் இருப்பது போல, இளைஞர் பாராளுமன்றத்திலும் பெண்கள் உரிமை பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்திலும் இழுபறி நீடித்தது. சட்டத்தின் நிறை குறைகள் முழுமையாக அலசப்பட்டன. பிரதமர், சமூகநீதி துறை அமைச்சர் ஆகியோரின் விளக்கங்களுக்கு பிறகு கடைசியாக இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மாணவர்களின் கல்விக்கடன் விவகாரத்தில் வங்கிகள் கடுமையாக நடந்து கொள்வதை வலியுறுத்தி கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. சபாநாயகர், பரீசீலனைக்கு பிறகு அதனை அனுமதிப்பதாக பதிலளித்தார்.

ஆக, நடந்து முடிந்தது மாதிரி பாராளுமன்றம் தான் என்றாலும், இவர்கள் வருங்காலத் தூண்கள் மட்டுமல்ல; நிகழ்கால மக்கள் பிரதிநிதிகளுக்கு வழிகாட்டிகளாகவும் இருக்கத் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து விட்டனர்.

தினதந்தி



மாணவர்களின் பாராளுமன்றம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Oct 01, 2011 8:43 pm

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மாணவர்களின் பாராளுமன்றம்! Scaled.php?server=706&filename=purple11
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 02, 2011 7:50 am

அப்படியே பெண்களுக்கு 5% இடஒதுக்கீட்டை கொண்டுவருவதற்கு மசோதாவை நிறைவேற்றிஇருக்கலாமல்லோ!!!!!



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மாணவர்களின் பாராளுமன்றம்! 1357389மாணவர்களின் பாராளுமன்றம்! 59010615மாணவர்களின் பாராளுமன்றம்! Images3ijfமாணவர்களின் பாராளுமன்றம்! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக